Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிக்குடித்தனம்... தயாராகிறதா பிரிட்டன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
ராஜ்சிவா

இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன.

முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை.

இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிடும். அதனால், பிரிவினை என்பதற்கான முடிவை எடுப்பது பெரிய சிக்கலாகவே பிரிட்டன் அரசுக்கு இருந்தது.

ஆனால் இப்போது, 2017-ம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிட வேண்டுமென்று பெரும்பாலான பிரிட்டன் மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பிரிவதற்குக் காரணங்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் அனைத்தும் தங்களுக்கான எல்லைகளை ஏனைய நாடுகளுக்காகத் திறந்துவிட்டுள்ளன.

ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டுக்குச் செல்ல எந்தவிதமான பாஸ்போர்ட் அனுமதியும் தேவையில்லை.

ஒருநாட்டில் வாழ்பவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று தொழில் செய்யவும், கல்வியைத் தொடரவும், வாழவும் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுதான் பிரிட்டனின் பிரிவுக்கான முதல் பிரச்னையாகக் கருதப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வேலைகள் தேடியும், வளமான வாழ்வைத் தேடியும் மக்கள் செழுமையான நாடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக, இந்தப் பிரச்சினை ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து போன்ற நாடுகளுக்குமான பொதுப் பிரச்சினைதான்.

ஆனாலும் பிரிட்டனின் பெரும்பான்மையான மக்கள் இதை வெறுக்கிறார்கள்.

பிரிட்டனை நோக்கிப் படையெடுக்கும் மக்கள், அங்கு வேலைவாய்ப்புகளை மட்டும் பெற்றுக்கொள்வதில்லை. வேலை கிடைக்கும் வரை குடும்பமாக அரசின் உதவிப் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தைகளுக்கான உதவித் தொகையும் இதில் அடங்குகிறது. உதவித் தொகையைத் தங்கள் சொந்த நாடுகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

இதனால் பிரிட்டனின் பெருந்தொகையான பணம் வெளியே செல்கிறது என்ற எண்ணம் மக்களிடையே வளர்ந்துவிட்டது.

பிரிட்டன் என்பது இரண்டரை லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்ட பெரிய நாடு. ஆனால், அங்கு வரும் மக்கள் அனைவரும் பிரிட்டனின் தலைநகரமான லண்டன் நகரை நோக்கியே படையெடுக்கிறார்கள். இதுவும் மிகப் பெரும் பிரச்னையாக மாறிப்போய் இருக்கிறது.

லண்டன் மாநகரத்தைப் பழைமை வாய்ந்த கட்டமைப்புடன் பேணிக் காக்கவே பிரிட்டன் விரும்புகிறது. அதற்கு இந்த மக்கள் தொகைப் பெருக்கம் பெரும் இடையூறாக இருக்கிறது.

இவையெல்லாம் மேலோட்டமான காரணங்களாகத் தெரிந்தாலும், உண்மையான சில காரணங்களும் இருக்கின்றன.

அடிப்படையில், பிரிட்டன் கிறீஸ்துவ மக்களைக் கொண்ட நாடு. அந்த நாட்டில் படிப்படியாகப் பல மதங்களைக் கொண்ட மக்கள் ஏற்கெனவே குடியேறி இருந்தாலும், இஸ்லாமிய மக்களின் குடியேற்றம் சமீப காலங்களாக அங்கு மிகவும் அதிகரித்துள்ளன.

இதை அங்குள்ள மக்கள் பெரிதும் ரசிக்கவில்லை. அண்மையில் அதிகரித்திருக்கும் சிரிய நாட்டு மக்களின் பெருந்தொகைப் படையெடுப்பு, மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கள் அமைதியான வாழ்க்கையை இவர்களால் இழந்துவிடப் போகிறோம் என்ற தேவையற்ற பயம் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

இதே நேரத்தில், தவிர்க்க முடியாமல் குடியேறிய சிலரால் நடத்தப்படும் சமூக விரோதச் செயல்கள், மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு, வெறுப்பு உணர்வை விதைத்து விட்டிருக்கிறது.

இந்தக் காரணங்களால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நினைக்கிறது பிரிட்டன்.

பிரிட்டனின் பிரதமரான டேவிட் கேமரோன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டிய அவசியத்தைப் பலவிதங்களில் புரிய வைத்தாலும், அவரது கட்சியிலேயே, பாராளுமன்றப் பிரதிநிதிகள் பலரும், மந்திரிகள் சிலரும் பிரிட்டன் விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க் கட்சிகளோ இந்த விஷயத்தில் முழுமூச்சுடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றன.

பிரிட்டனின் கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் அரசிடம் மட்டுமே இருக்கவேண்டும், வியாபார ஒப்பந்தங்களில் சுதந்திரம் வேண்டும், எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு கட்டுப்பாடுள்ள வரவுகள் இருக்கவேண்டும், ஸ்டெர்லிங் பவுண்டு, தொடர்ந்து பிரிட்டனின் பணமாக இருக்க வேண்டும் என்னும் நிலைப்பாடுகளில், பிரிவினை என்ற குரல் பரவலாக எழ ஆரம்பித்துவிட்டது.

இதனால், பிரிட்டனின் தேர்தல் கமிஷன், டேவிட் கேமரோனிடம் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் பிரிட்டன் மக்கள்.

http://www.tamilwin.com/politics/01/106593

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலகினால் கொஞ்ச பொழிப்பு பாக்கலாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

விலகினால் கொஞ்ச பொழிப்பு பாக்கலாம் :grin:

இங்க இருக்கிற உங்கண்ட ஊர் ஆக்கள், முக்கியமா மெசப்பத்தோமிய சுமேரியர்  எல்லோரும், அங்க வந்திருவினமே... :rolleyes:

Edited by Nathamuni

போகிற போக்கில் விலகிவிடுவார்கள் என்று தான் தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் ஒரு பக்கம். ஐரோப்பியர்கள், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பியர்கள்ஒருபக்கம் ....

பள்ளிக்கூடத்தில்  இடமில்லை, நெருக்கடி.  வீடு வாங்க முடியவில்லை. கைக்கடக்கமான வாடகைக்கும் எடுக்க முடியவில்லை. 

மருத்துவ சேவையில் சுமை. வேலை எடுக்கும் வகையில் நிலைமை இல்லை. முன்னர் வருபவர்கள் நேராக லண்டனுக்கே வந்தார்கள். இப்பொது நாட்டின் சகல பகுதிகளுக்கும் நேரே போகின்றனர்.

இங்கே இரண்டு வருடம் வேலை. பின்னர் இந்த நாட்டில் உள்ள குழந்தைகள் சமூக கொடுபனவு, EU சட்டத்தின் படி, கட்டிய வரியிலும் பார்க்க கூடுதலாக, அங்குள்ள பிள்ளைகளுக்கு அனுப்ப வைப்பது. இது வேலை செய்யும் ஏனையோரினையும் பாதிக்கின்றது.

இது தொடர்பில் போலிஷ் பிரதமருடன், பிரிட்டிஷ் பிரதமர் பேசியும் பலன் இல்லை.

போரில் தோற்கடிக்கப் பட்ட ஜெர்மனின் தலைமையில் ஆடும், EU வின்  கீழ் இருப்பதை  பல பெரிசுகள் விரும்பவில்லை.

துருக்கி வேற இணைய முனைகிறது. ஏற்கனவே இஸ்லாமியர் மீதான பயம். 

எல்லாம் சேர்த்து நோ பக்கம் தான் புல்லடி போல கிடக்குது.

நான் யாருக்கு போடுறது என்று இன்னும் முடிவில்லை. சுமோ அக்காவுக் காண்டி... எஸ் எண்டு போடலாம் என்று யோசனை.


 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட வோட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்பது தான் ஆனால் பிரியாது என்று தான் நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே பிரிந்து செல்லவேண்டும் என்று தான் இருக்கிறது. பிரிந்தாலும் சேர்ந்தாலும் என்னை அனுப்பமாட்டினம் கண்டியளோ நாதமுனி.

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு வேலை செய்யும் வெள்ளைகள் ஆப்பிரிக்கர்கள் பலரும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களிக்கப் போவதாகச் சொலகிறார்கள்.ஆனால் தமிழர்களும் ,இந்தியர்களும் ஏதோ தங்கள் பணம் வெளியே போவதுமாதிரி பிரிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.இவர்களே இங்கு பிழைக்க வந்து விட்டு மற்றவர்கள் வருவதால் குறிப்பாக கிழக்கு ஐரோப்பியர்களின் வருகையால் தங்களுக்கு ஏதோ பெரிய இழப்பு என்று சொல்கிறார்கள். இதில் தாங்கள் தகுதிவாய்ந்த குடியேறிகள் என்றும் தாங்கள் வரலாம் என்றும் கதை வேறு. ஆனால் உண்மையில் பல இந்தியர்கள் பல திருகுதாளங்களை விட்டே இங்கு வாழும் உரிமைகளைப் பெற்று இருக்கிறார்கள்.அதற்கு பல முதலாளிமாரும் உடநதையாக இருக்கிறார்கள். இவர்களை வைத்து குறைந்த சம்பளத்தில் வேலை வாங்குவதற்காக முதலாளிமாரும்  இதை விரும்புகிறார்கள். இவர்களில் பலர் தங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களைப்பற்றி அக்கறைப்படுவது கிடையாது. தமிழர் நலனில் இருந்து பார்க்கும் பொழுது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து வாழ்வதே நல்லது. ஏனெனினில் தமிழர்கள் பல ஐரோப்பிய நாடுகளில் பரந்து வாழகிறார்கள். அவர்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் கொண்டாட்டங்கள் திருமண பந்தங்கள்.மரணநிகழ்வுகள் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை மேலும் இறுக்கமாக்கிக் கொள்வதற்கு கட்டுப்பாடற்ற போக்குவரத்து விதிமுறைகள் இருப்பது நல்லது.(வியாபாரம்,கல்வி,கொடுக்கல், வாங்கல் போன்ற விடயங்கள் இதில் அடங்கும்.)ஆகவே தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழர்கள் வாக்களிப்பதே நல்லது. ஒவ்வொரு நாடும் தங்கள் நலனை முன்னிறுத்தும் பொழுது தமிழர்கள் தங்கள் நலனை முன்னிறுத்துவது தவறல்ல.ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழர்கள்  பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்த பின்னரே இங்கு பரவலாக தமிழ்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் பிரிடடன் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இன்னுமொரு விடயம் பிரிட்டன் பிரிவதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் ஏனைய செல்வந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இருக்கின்றன.அவர்கள் துணிவாக அதற்கு முகம் கொடுக்க துணிகிற பொழுது பிரிட்டனுக்கு (அதுவும் நாணயம் ,குடிவரவு,குடிஅகலவு சோதனைகள்விடயத்தில் விட்டுக்கொடுக்காத நிலயிலிருக்கும்)ஏன் அந்தத் துணிவு வரவில்லை? உலகின் மூலை முடுக்கெல்லாம் குடியேறிய பிரிட்டனுக்கு அங்குள்ள வளங்களை அடாத்தாக அனுபவித்த பிரிட்டனுக்கு ஏனைய குடியேறிகளை வரவேற்க தார்மீகக்கடமை உள்ளது.மேலும் பிரிந்தாலும் ஏற்கனவே இங்கு குடியேறிவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்பது உண்மை அல்ல. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த காலம் வரைக்கும் அதற்குரிய சட்டங்களை நிறைவேற்றும் கடப்பாடு உள்ளது..பிரிட்டன் பிரதமர் சேர்ந்திருக்க வேண்டும் என்கிறார். பிரிட்டனின் எதிர்க்கட்சித் தவைர் சேர்ந்திருக்க வேண்டும் என்கிறார். பல முண்ணணி தொழில்நிறுவனங்கள்சேர்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.ஏன் பிரிட்டனின் முக்கியமான பங்காளியான அமெரிக்க அதிபர் ஒபாமா சேர்ந்திருக்க வேண்டும் என்கிறார். இப்பவே ரஸ்சிய விமானங்கள்  பிரிட்டனின் கடல் எல்லைக்குள் அத்து மீறிப்பறந்து வந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.முஸ்லிம் வேண்டாம்,கறுப்பர்கள் வேண்டாம்,ஆசியர்கள் வேண்டாம்.என்கிற தொனியுடனுடனான குரல்களுடன் ஐரோப்பியர்களும் வேண்டாம் என்று பிரிட்டன் முடிவெடுத்தால் அதை என்ன பெயர் கொண்டு அழைப்பது.?ஆனால் அங்கு உற்பத்தியாகும் எண்ணைய்வளம,தங்கம், கார்கள் , வைன் போன்ற குடிவகைகள் எல்லாம் வேண்டும். ஐரோப்பா வேண்டாமா?இதை சேர்வதற்கு முதலே யோசித்திருக்க வேண்டும். சேரும்பொழுது இருந்த நாடுகள் எல்லாம் வளமான நாடுகள். இப்பொழுது வறிய நாடுகளைச் சேர்ததிருப்பதால் வேண்டாம் என்றால் அது அப்பட்டமான சுயநலம்தானே.பிரிட்டன் மக்கள் நல்ல முடிவெடுப்பார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது பிரிட்டனில் இருந்து வேறு ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் பிரிட்டிஸ் மக்களும்தான் என்பதை மனதில் வைத்து பிரிட்டன் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், சீமான் தமிழ் நாட்டில கத்தி தோத்தமாதிரி,  உங்கயும், விலத்து கோஸ்டியள் தோக்கும். காரணம் பிரிட்டிஸ் காரர்களின் சோம்பல் தனம். 

முன்பு இலண்டன் மேயராயிருந்த கென் லிவிங்ஸ்டன் சொன்னார், 'உள்ளூர்காரர்கள் குயில்றால வெளிய வரேக்க, இலண்டணில் வேலைக்கு போன கிழக்கு ஜரோப்பியர்கள் அரைநாள் வேலை முடித்து இருப்பார்கள்'.

ஒவ்வொருவருக்கும் தனிய தெரியும், தமக்கான பென்சன், பிள்ளைகள் பள்ளிக் கூடம், சமூக கொடுப்பனவு போன்ற விடயங்கள் தொடர, உள்ளூர் சோம்பேறிகள் உதவ மாட்டார்கள் என.

ஆகவே பிரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Nathamuni said:

போரில் தோற்கடிக்கப் பட்ட ஜெர்மனின் தலைமையில் ஆடும், EU வின்  கீழ் இருப்பதை  பல பெரிசுகள் விரும்பவில்லை.

இதுதான் முக்கிய காரணமெண்டு நான் நினைக்கிறன். அரசபரம்பரை....ஆண்டபரம்பரை எண்ட குட்டித்தலைக்கனம் பிரிட்டிஷ்  ஆக்களுக்கு அங்கினேக்கை கொஞ்சம் கொஞ்சம் இருக்கு.:rolleyes:
அதுசரி......

எபிசிடி தெரியாமல் வந்த எங்கடை பிரிட்டிஷ் ரமிலருக்கே உந்த ரோயல் தலைக்கனம் இருக்கேக்கை....வெள்ளைக்காரனுக்கு திமிர் இருக்கிறதிலை என்ன தப்பு?:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை விலகிவிட அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன ஏன் மற்றய euநாடுகளை விட பிரிட்டனுக்கு புலப்பெயர்வு அதிகளவில் உள்ளது என்று சிந்தித்தால் விடைவரும் 
இங்கு உள்ள போலிஸ் மென் போக்கு மற்றைய eu நாடுகளில் கிடையவே கிடையாது  அங்கு பிடிச்சு லாடம் கட்டி விடுவார்கள் அதேபோல் இலகுவான தொடர்பாடல் உதாரணமாய் உள்ளூர் கவுன்சிலுக்கு போனால் 
அவர்கள் மொழியிலேயே கதைக்க மொழி பெயர்ப்பாளர் இந்த கதை ஜெர்மனிலோ அல்லது பிரான்சிலோ நடக்குமா ?
இதெல்லாத்தைவிட இலவச மருத்துவ சேவை இப்படி பல பல காரணம்கள் இப்ப உள்ளுர்க்காரர் போர்வையில் இருந்து வெள்ளனவே எழும்பி போய் பிரிவதுக்கு உரிய வோட்டை போட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் காரணம் எங்கும் அதிக காத்திருப்பு  நெருக்கடி. 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பியத் தமிழர்கள்,ஜரோப்பாவில் வீடு,வளவு வாங்கி அது வாடகைக்கு குடுத்துப் போட்டு,அங்கே அரசாங்க காசு எடுத்துக் கொண்டு வந்து இங்கேயும் வீடுகள் வாங்கிக் குவிச்சுப் போட்டு இங்கேயும் பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ளமாக வேலையும் செய்து கொண்டு செய்யும் அட்டகாசம் சொல்லி மாளது.இதனால் பாதிக்கப்படுவது நேரடியாக லண்டனுக்கு வந்த தமிழர் தான்.

5 hours ago, ரதி said:

ஜரோப்பியத் தமிழர்கள்,ஜரோப்பாவில் வீடு,வளவு வாங்கி அது வாடகைக்கு குடுத்துப் போட்டு,அங்கே அரசாங்க காசு எடுத்துக் கொண்டு வந்து இங்கேயும் வீடுகள் வாங்கிக் குவிச்சுப் போட்டு இங்கேயும் பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ளமாக வேலையும் செய்து கொண்டு செய்யும் அட்டகாசம் சொல்லி மாளது.இதனால் பாதிக்கப்படுவது நேரடியாக லண்டனுக்கு வந்த தமிழர் தான்.

அப்பிடியே அவர்களை வட கிழக்கு தாய் மண்ணிலும் வீடுகளை வாங்கிக் குவிக்கச் சொல்லுங்கள். புண்ணியமா போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக நேரடியாக இலண்டனுக்கு வந்து இறங்கின ஆட்களெல்லாரும் திறமென்று சொல்ல முடியாது.கள்ளமட்டை போடுறவை,காங் சண்டை போடுறவை எல்லாரையும் வசதியாக மறந்துவிட்டீர்கள்.இப்ப ரதிக்கு மற்றைய ஐரோப்பியர் வருவது பிரச்சனை இல்லை.டமிள்ஸ் வரக்கூடாது .ஏனெண்டா அவை அயனியின் பிள்ளைகள் டமிள் நல்லா பேசுவினம்.இலன்டன் பாடசாலைகளிலும் நல்ல பெறுபேறுகள் எடுக்கினம் அதுதான் எரிச்சல் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 20வருடங்களுக்குமுன் எனது லண்டன் உறவினர்களின்(நேரடி லண்டன் டச்) வீடுகளுக்கு போகும் போது தமிழ் வானொலி / தொலைக்காட்சி தடை. காரணம் பிள்ளைகள் தமிழ் பழகிவிடுவார்களாம். வீட்டில் மதர் ஃபாதர் எல்லாரும் ஒரே இங்கிலிசுதான் போங்க..... Aha

எனக்கு எனது  சொந்த  ரோயல் உறவுகளிடம் பிடித்த ஒரேவிடயம் அந்த வரட்டு கௌரவம் தான். Cool

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புலவர்,நீங்களும் ஜரோப்பாவில் இருந்து லண்டனில் வந்து குடியேறி உள்ளீர்களா? இப்படிக் கோபம் வருது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் பழைய காய்.உண்மைதான் ஜேர்மனியில் இருந்துதான் இலண்டனுக்கு வந்தேன்.இலண்டனில் வாழும் காலத்தை விட ஜேர்மனில் வாழ்ந்த காலம் கூட வந்த நேரத்தில் இலண்டன் உறவுகளின் வரவேற்பு அந்தமாதிரி.5 பவணுக்கு ரியுசனுக்கு விட்டாஇநதப்பிள்ளைகள் தேறாது .நாங்க 25 பவுண் குடுத்துத்தான் ரியுசனுக்கு விடுறம் எண்டு சொன்னாக்கள் கனபேர்.கடைசியல 5பவுணுக்கு படிச்சாக்கள்முன்னேற 25 பவுணுக்கு படிச்ச பிள்ளைகள் சொதப்பின ஆனுபவம் எல்லாம் சந்திச்சிருக்கிறம்.பிள்ளையள எங்கை ரியுசனுக்கு விடுறது எண்டெல்லாம் சொல்ல மாட்டினம்.வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தமாதிரி பாத்திச்சினம். எல்லாம் ஓரு 2 வருசம்தான். அதுக்குப்பிறகு  எல்லாம் கொங்சம் கொஞசம்கொஞ்சமாய் பழகினம்.ஆனால் ஒரு வறட்டுக் கௌரவம்.எல்லோரும் தமிழர்கள்தானே ஆக தமிழன் நலன்கருதி இதில் வாக்களிக்க வேண்டும் என்று பிரிட்டன் தமிழ் வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.