Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

1532722663719?e=2147483647&v=beta&t=QECK

50 திருமணமான ஆண்களின் கூட்டத்தில்...
"மனைவியிடம் அடி வாங்கியவர்கள் எல்லாம் கை தூக்குங்கள்"
என்று கேட்கப் பட்டது....
 
ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் கைகளை  உயர்த்தினார்கள்.  
கை உயர்த்தாத அந்தக் கணவரை அழைத்து 
"பரவாயில்லையே... உங்கள் மனைவி மிகவும் அனுசரணையானவர் போல", 
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என புகழ்ந்தனர்.
 
அதற்கு அவர் சொன்னார்... அட "போங்கப்பா, நீங்க சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு...
நேற்று வாங்கின அடியிலை... கையை தூக்கவே, முடியலேப்பா... என்றார்.
 😂  🤣

சிறியர் ..இது உங்கடை அனுபவமோ...சுப்பர்

  • 2 months later...
  • Replies 313
  • Views 62.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகான குட்டிக் கதை . ..........!   👍

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார்.

அவருக்கு ஒரு மகன்.

வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன்.

அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை.

கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை.

பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார்.

ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான்.

அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார்.

ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார்.

புறப்படு போகலாம் என்றார்.

இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை.

முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான்.

இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது.

போய்க் கொண்டே இருந்தார்கள்.

ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது.

ஒட்டகத்தை நிறுத்தினார்.

பையன் இறங்கினான்.

அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான்.

உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார்.

உள்ளே அந்த பையன்.

இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார்.

அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன.

அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன.

அலகால் கொத்தின.

உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன.

அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன.

கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய்.

உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார்.

அவன் போட ஆரம்பித்தான்.

முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான்.

நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார்.

நான்கு சாக்கும் நிரம்பியது.

சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி.

முதலாளி என்று கத்தினான் அவன்.

முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள்.

ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான்.

கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான்.

கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது.

இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான்.

அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார்.

இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார்.

எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார்.

உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும்.

அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார்.

அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான்.

கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன.

மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார்.

கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க.

ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான்.

அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான்.

சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார்.

முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான்.

வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான்.

முதலாளி கத்தினார்.

தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார்.

உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

469531017_507573568992708_27769230468455

தினம் ஒரு சிறுகதை :--
🐀எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது...
வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த 🐀எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை
எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்..
🐀எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன்
வந்துவிட்டான், எலியை🐀 ஷூட் செய்ய..
எலி🐀 அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள்🐁🐀🐀🐁 ஒன்று கூடிவிட்டன..
அந்த நூற்றுக்கணக்கான 🐁🐁🐁🐁🐀🐀🐀 எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த🐁 எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out..
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை
எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான்.
"ஆமா...! அந்த எலி🐀 மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே
இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?"
அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
"இப்படித்தான்.. பலபேர் திடீர்ப்
பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே..
ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது."
உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை
செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....👨‍👨‍👧‍👧
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹......!
  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-a00e592aaffe238f2fc21b77cb58a769

 

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..

அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,

அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.

இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.

அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.

மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.

மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.

என்ன நடக்கும்.?

மான் பிழைக்குமா?

மகவை ஈயுமா?

மகவும் பிழைக்குமா?

இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?

வேடனின் அம்புக்கு இரையாகுமா?

புலியின் பசிக்கு புசியாகுமா?

மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..

மான் என்ன செய்யும்?

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள்.......

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.

எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.

தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..

அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.

நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..

சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..

நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..

அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..

எதில் என் கவனம்?

எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?

வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..

அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.

இறைவன் தூங்குவதும் இல்லை..

துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..

மற்றவை நடந்தே தீரும்!

 

main-qimg-a00e592aaffe238f2fc21b77cb58a769
  • கருத்துக்கள உறவுகள்
 
ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ
வடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம்
பார்க்கொ ணாதே. (77)
 
ஒரு மனிதன் துயரின் எல்லைக்கே சென்ற ஒரு நிலையில் இருந்தாலும் கொண்ட கொள்கையில் நிலை தடுமாறாமல் இருப்பான்  எனில்  வெற்றி அவன்பக்கம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

470209192_576999424941951_65263961746978

இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார்.
"எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.
உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் "
இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.
"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .."
நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர்.
"Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
" டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார்.
" நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
" அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்..
"Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க"
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்..
" எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார்.
" Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர்
"இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர்.
" Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் "
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்...
படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரேபிய ஷேக் லண்டன் சென்று இருந்தார்!

 

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல டாக்சியில் ஏறினார்!

நல்ல ஆங்கில பாடல் ஒலித்து கொண்டு இருக்க! நம்ம ஷேக் ட்ரைவர் கிட்ட அப்பா கொஞ்சம் அந்த பாட்டை நிப்பாட்டு! என்று கேட்க அதற்கு அவர் இல்லப்பா எங்க இறை தூதர் வாழ்ந்த காலத்தில் இந்த மாதிரி ரேடியோ , மற்றும் மனதை மயக்கும் இசைகள் இல்லை எங்களுக்கு அனுமதியும் இல்லை என்று சொல்ல!

ஆங்கில டாக்சி டிரைவருக்கு கோபம் வர அதை வெளியில் காட்டாமல், பாய் சொல்றேன் என்று கோவித்து கொள்ளாதீர்கள் இறை தூதர் இருந்த காலத்தில் கார் கூட இல்லை ! மேலும் அதிக விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் நீங்க கீழே இறங்கி காத்திருங்கள் ஒட்டகம் வரும் என்று சொல்லி அவரை கீழே இறக்கி விட்டு போய் விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
*நண்பன்*
*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*
*ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*
*அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*
*SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*
நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.
*தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*
35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01.
*நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..*
அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்..
*அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர்.
*இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது.
*மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..*
*தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..*
*கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..*
*நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..*
முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின..
இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்..
*35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..*
*தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..*
*ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..*
*பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..*
*நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..*
*ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..*
*வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..*
*இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..*
அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது.
மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..?
* *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர்.
35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான்.
பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை.
மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி.
சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று.
அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
*நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான்.
*இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..*
*என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..*
*எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..*
அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான்.
இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்..
*என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும்.
முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
*உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..*
*உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..*
இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........
May be an image of 3 people and drink
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை . ........!  👍

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PERFECTHappy Birthday Party GIFs | Tenor

கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று 
சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி...

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. 
எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை...
“குட் ஈவினிங் குமார் சார்” - இது கேட்கீப்பர்.
உள்ளே வந்த மனைவி
 “அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?”
குமார் “சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.”
பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர் “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?”...
குமார் சார் மனைவியிடம்..
 “வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….”

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி “என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?” .

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. 
டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது “என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?...
😳😳😳😳

 

பின்குறிப்பு: 
குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....   😂 🤣

Paranji Sankar  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

90 Number Animated GIF Logo Designs

மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்.... 
"என்னால் மறக்க முடியாத ஒன்று, நீ ஒன்பதாவது படிக்கும் போது 
கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. 
ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."

"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"

"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... 
நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. 
என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? 
பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"

"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. 
நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."

" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன்  இல்லையே?'"

"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"

"அது எப்படி?

"நான் சேர்த்தது....  9ஐ.."          animiertes-gefuehl-smilies-bild-0091           animiertes-gefuehl-smilies-bild-0090

Paranji Sankar  

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

90 Number Animated GIF Logo Designs

மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்.... 
"என்னால் மறக்க முடியாத ஒன்று, நீ ஒன்பதாவது படிக்கும் போது 
கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. 
ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."

"அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?"

"இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... 
நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. 
என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? 
பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?"

"நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. 
நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.."

" ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன்  இல்லையே?'"

"சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி"

"அது எப்படி?

"நான் சேர்த்தது....  9ஐ.."          animiertes-gefuehl-smilies-bild-0091           animiertes-gefuehl-smilies-bild-0090

Paranji Sankar  

ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும்.

புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்?

கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0.

முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும்.

புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்?

கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0.

முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.

ஈழப்பிரியன்… அந்தப் பெடியன் வாங்கினது கோழி முட்டை.  (0)
சைவருக்கு முன் 9 போட்டால்…. 90 வரும்தானே. 🙂
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நீ ஒன்பதாவது படிக்கும் போது 
கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. 
ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாற்றினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..."

 

52 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்… அந்தப் பெடியன் வாங்கினது கோழி முட்டை.  (0)
சைவருக்கு முன் 9 போட்டால்…. 90 வரும்தானே. 🙂
 

மேலே கணக்குப் பரீட்சை என்றுவிட்டு

இப்போ கோழிமுட்டையை காட்டுகிறீர்களே சிறி.

மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்காதா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Driving GIFs | Tenor

ஒருவர் காரில் தன் மனைவி, அம்மாவுடன்  சென்று கொண்டிருந்தார். 
நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்து கொண்டிருந்தது. 
அவரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். 
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவரது காரை முந்திக் கொண்டு சென்று 
அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் அவரிடம் "குட் ஈவ்னிங் சார்.." என்றார். 

அவர்:   ''குட் ஈவ்னிங் 
ஏதாவது பிரச்சனையா..?" என்று கேட்டார். 

போலிஸ்:    ''நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணிநேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒருமைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். 

அவர்:   சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டுசொன்னார், 
''இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயமா எடுத்துடணும்''.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி '' சாரி சார் 
தப்பாக  நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டினாலே 
இப்படித்தான் எல்லோரிடமும் உளறுகிறார்'' என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், ''நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்போ எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்".

படித்ததில் பிடித்தது. 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

480969407_2012788342553105_1902168307304

கோணல் புளியங்காய் .......!

ஒருநாள் ஒரு அரசன் வீதியால் கண்காணிப்பு செய்து கொண்டு போகும்போது அங்கே ஒரு இளம்பெண் கோணற்புளியங் காய் விற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கின்றான் ....... பின் அவளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அப்பெண்ணையும் தன் தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனை சென்று அவளை அந்தப்புரத்தில் சேர்த்து அரசிக்கு இணையாக அவளைப் பராமரித்து வாழ்ந்து வருங்காலையில் .......பல ஆண்டுகள் சென்றபின் ஒருநாள் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவ் வீதியால் வருகின்றான் ........ அப்போது அங்கு வேறு சிலர் கோணற் புளி விற்றுக் கொண்டிருப்பதை அந்தப் பெண் பார்த்து அரசனிடம் ...... அரசே அதோ அங்கே ஏழைப் பெண்கள் கோணல் கோணலாய் ஒரு காய் விற்றுக் கொண்டு இருக்கிறார்களே அது என்ன காய் என்று கேட்கிறாள் .......... உடனே அரசனும் "ஓ" உனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து விட்டன போல , நீ தேரில் இருந்து இறங்கிப் போய் அது என்ன வென்று விசாரித்து தெரிந்துகொள் என்று சொல்ல அவளும் இறங்கி அங்கு செல்லும்போது இனி நீ அங்கேயே இரு என்று சொல்லிக்கொண்டு அரசனும் அங்கிருந்து சென்று விட்டான் .........அவளும் தனது திமிர் பேச்சால், வந்த வளமான வாழ்வு தொலைந்து போச்சுதே என்று தூரத்தே செல்லும் தேரையே பார்த்து "ங்ஏ" என்று விழித்துக் கொண்டு நின்றாள் ........! 😂

பி . கு : எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் மிக மிகச் சிறிய வயதில் ஆச்சி சொன்ன இந்தக் கதை ஞாபகம் வந்தது கூடவே ஆச்சியும் ..........! 😇

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Ravindran Tharmalingam

Srtdopseon:,1u741h77laaa822 30210i373nul 3a1fc8lj50tafmfihm1  ·

தெருவில் பணக்காரன் நடக்கும் போது ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது. அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே நின்று விட்டான்.

தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான். அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான்.

“என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”.

“ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”.

பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான். ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான்.

“இது என்ன கறி. சுவை அற்புதம்..”

“ஐயா இது முயல் கறி”.

“முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன். ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது.

“ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன்.

“ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது” இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான்.

எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது.

“நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான்.

பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான். இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான்.

“வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ... எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா இரண்டு ஆப்பம் கிடைச்சது... தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான்.

கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது. வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது.

நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரிசமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான்.

பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான்.

அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான்.

எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது "என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு”

என்பதை படித்த உடன் இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

All credits goes to the author

Voir la traduction

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQd2TLhh3gIV_f36qd8wXE

திருவிழா கூட்டத்தில் இரண்டு நபர்கள் அவரவர் மனைவிகளை தொலைந்துவிட்டார்கள். அந்த இருவரும் அவர்களது மனைவிகளை தேடி அங்கும் இங்குமா தேடித் திரிந்தார்கள்.பிறகு....

அவர் : ஏங்க,உங்க மனைவியும் காணவில்லையா?

இவர் : ஆமாங்க.அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என் மணைவி இன்னும் கிடைக்கல.உங்க மனைவி கிடச்சுட்டாங்களா?

அவர் : அட இன்னும் கிடைக்கலங்க. நானும் தேடிட்டு தான் இருக்கேன். ஆமா உங்க மனைவி எப்படி இருப்பாங்க?

இவர் : என் மனைவி பாக்குறதுக்கு நயன்தாரா சாயல்ல இருப்பாங்க.அவ சிரிச்சா கண்ணத்துல அழகா குழி விழும்.அதுக்கு பக்கத்துலயே சின்ன மச்சம் ஒன்னு இருக்கும்.ரோஸ் கலர் சாரி கட்டியிருப்பா.பாக்குறதுக்கு சின்ன பொண்ணு மாதிரியே இருப்பாங்க. சரிங்க உங்க மணைவி எப்படி இருப்பாங்கனு சொல்லுங்க?

அவர் : அத விடுங்க. அவ கிடக்குறா கழுதை. வாங்க முதல்ல உங்க மனைவியே தேடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்...

மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.

படித்ததில் பகிர்ந்தது

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையில்லாத குடும்பம் எது ? ஆனால் குடும்ப கூடு மட்டும் கலையக் கூடாது .பெற்ற பிள்ளைகளுக்காக தியாகத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களேத் தனை பேர் சண்டை என்பது கருத்து வேறுபாடு சற்று நேர உணர்ச்சி கொந்தளிப்பு .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

518329099_3179087938921198_7994426171928

Khabar Hydhiri Hydhiri

onopsderStm0fhc998m9518h96899gc22413t5c92h6c006420922h4u2hi   ·

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில."

"நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

"வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

"டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க" என்றார்.

"நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

"அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

"வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க"

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.

"எனக்கு கண் பார்வை சரி இல்லை, மருந்து தாங்க டாக்டர்".

"சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய்" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர்.

"இது 500 ரூபாய் நோட்டாச்சே" என்று பதறினார் இவர்.

"வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்"

பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது... கிடிப்பாவது...

படித்ததில் பகிர்வது.

  • கருத்துக்கள உறவுகள்

519926766_1760680631246087_6133612894659


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ்  · prdsneoSot7f96246iamm81lt9uh3iic62lhu3l3132cgci0g g0h3h660t1  · 

ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார்.

ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்........ !

  • கருத்துக்கள உறவுகள்


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

Usha Ravikumar ·tneodoSprsl479305tg2740g a1g752tfui80i5uut784atcl85i21um1h2g ·

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார். "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது"

அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. "

"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,

பரமஹம்சர் சொன்னார் "எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.

மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".......!

522909299_1722458701724494_2054416980513

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.