Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனியில் ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்

Featured Replies

ஜெர்மனியில் ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்

 

3665779800000578-3696410-image-a-34_1468

ஜேர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையிலான மின்சார புகையிரத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

36654D4900000578-3696410-image-a-25_1468
குறித்த புகையிரதம் ஓச்ஸென்பர்ட் புகையிரத நிலையத்தை நெருங்கியபோது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக தாக்கியதில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். இதில் மூவரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது.

 

3665122500000578-3696410-image-a-1_14688
ஓச்ஸென்பர்ட்  புகையிரத நிலையத்தில் புகையிரதம் நின்றதும் தப்பி செல்ல முயன்றவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

36653C1D00000578-3696410-image-a-29_1468

 

3665202600000578-3696410-image-a-18_1468

3665124100000578-3696410-image-m-12_1468

3665459200000578-3696410-image-a-30_1468

3665168D00000578-3696410-image-a-23_1468

3665167E00000578-3696410-image-a-24_1468

3665566A00000578-3696410-image-a-32_1468

http://www.virakesari.lk/article/9150

  • தொடங்கியவர்

ஜெர்மன் பிரஜைகளைத் தாக்கிய ஆப்கன் குடியேறி சுட்டுக்கொலை

 

ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

160719010443_germany_train_attack_afghan
 ஜெர்மனியில் தாக்குதல் நடந்த இடத்தில் அவசரச் சேவை வாகனங்கள்

இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும் ஒரு கத்தியால் பயணிகளைத் தாக்கியதாகவும், அவரால் தாக்கப்பட்டவர்களில் நால்வர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

பவேரியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோயாச்சிம் ஹெர்மன் இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று இது வரை தெரியவில்லை என்றார்.

பிரான்ஸில் நடந்ததைப் போல இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்று கணிசமான பயங்கள் ஜெர்மனியில் நிலவுவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160719_germanafghan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையானதும், ஆபத்துமான செய்தி.
இஸ்லாமிய பயங்கரவாதத்தால்...... சாதாரண மக்களின் அன்றாட  வாழ்க்கை கேள்விக் குறியாக மாறியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் அகதியெனும் பெயரில் வந்த முஸ்லீம்பயங்கரவாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

இனி  ஒவ்வொரு யேர்மனியரும்

வெளிநாட்டவர் இருக்கும்

பயணிக்கும்  இடங்களை தவிர்க்கத்தொடங்கினால்...??:(

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இனி  ஒவ்வொரு யேர்மனியரும்

வெளிநாட்டவர் இருக்கும்

பயணிக்கும்  இடங்களை தவிர்க்கத்தொடங்கினால்...??:(

இனி ஜெர்மனில் பதுங்கியிருக்கும்

ஒவ்வொரு ஐ எஸ் தீவிரவாதியும்
ஜெர்மனியில் வாழும் மக்களைத்

தாக்கத் தொடங்கினால் ...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எவ்வ‌ளவோ பரவாயில்லை

  • தொடங்கியவர்

ஜேர்மனி புகையிரதத்தில் கோடரி வெட்டு சம்பவம் ;ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு

 

ஜேர்மனி நாட்டில் ஓடும் புகையிரதத்தில் 17 வயது இளைஞன் மேற்கொண்ட கோடரி வெட்டு சம்பவத்திற்கு ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது.

CntwzL6WYAAtWAy.jpg

ஜேர்மனியின் தெற்கு நகரான வூர்ஸ்பர்கில் பயணிகள் புகையிரதத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி சிறுவன் கோடாரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளான். 

தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற அகதி சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறுவன் ஜேர்மனிக்கு ஆதரவற்ற நிலையிலே வந்துஉள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

PAY-Alleged-axe-attack-on-train-in-north

புகையிரத்தில் தாக்குதல் நடத்திய அச்சிறுவன் ”அல்லா அக்பர்,” என்று சத்தம் எழுப்பியதாக பவாரியா மாகாண உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரான்ஸில் நடந்ததைப் போல தாக்குதல்கள் ஜேர்மனியிலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிஸார் சிறுவன் தங்கியிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்ட வேளையில்,கையால் தீட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9167

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, colomban said:

சிங்களவன் எவ்வ‌ளவோ பரவாயில்லை

ஓமோம் சிங்களவன் ஒவ்வொரு இனக்கலவரத்திலையும் தமிழர்களுக்கு பூ தூவித்தான் வழியனுப்பி வைச்சவன். 
சிங்களவனை நல்லவனாய் சித்தரிக்காட்டில் ஒரு சிலசனத்துக்கு நித்திரையே வராது போலை கிடக்கு.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

சிங்களவன் எவ்வ‌ளவோ பரவாயில்லை

உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை

அங்கு தலைவிரித்தாடுவது அரசபயங்கரவாதம்

சிங்களவன் பரவாயில்லை ஆக இருந்திருந்தால் கூட

நான் புலம் பெயர்ந்து இருக்கமாட்டேன்..

எத்தனையோ லட்சம் மக்களின் உயிர்கள்

அவலங்கள்

எத்தனையோ கோடி சொத்துக்கள்

புலம் பெயர் அவலங்கள்..

இதையெல்லாம் ஐரோப்பாவில் நடக்கும் எதிலும் ஒப்பிடவே முடியாது

கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை

அங்கு தலைவிரித்தாடுவது அரசபயங்கரவாதம்

சிங்களவன் பரவாயில்லை ஆக இருந்திருந்தால் கூட

நான் புலம் பெயர்ந்து இருக்கமாட்டேன்..

எத்தனையோ லட்சம் மக்களின் உயிர்கள்

அவலங்கள்

எத்தனையோ கோடி சொத்துக்கள்

புலம் பெயர் அவலங்கள்..

இதையெல்லாம் ஐரோப்பாவில் நடக்கும் எதிலும் ஒப்பிடவே முடியாது

கூடாது.

இப்ப பல்கலை மோதலில் நடந்த்தையே...சனம் எப்படி மாத்தி எழுதுகிரது என்றால்....நமக்காக வீர விழுது ஆகியவர்கள்.பாவம் அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஜேர்மன் காரர்கள் உஷாரு தமிழ் ??

5 hours ago, colomban said:

சிங்களவன் எவ்வ‌ளவோ பரவாயில்லை

இவன் வேறு எரியிறதுக்குள்ள இறுங்கை அள்ளி போட்டுகிட்டு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.