Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமலாபால் - விஜய் விவாகரத்து

Featured Replies

அமலாபால் - விஜய் விவாகரத்து

 

 

 

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

22-1421897547-director-vijay-amala-paul2

கேரளாவைச் நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

 

அவர் தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்ளிட்ட பல தமிழ் தரைப்படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, 'மதராச பட்டினம்,' 'தலைவா,' 'தாண்டவம்,' 'சைவம்,' 'இது என்ன மாயம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் விஜய்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் இயக்கிய 'தலைவா,' 'தெய்வ திருமகள்' ஆகிய திரைப்படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். 

அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. 

அதையடுத்து ஜூன்  மாதம் 12 ஆம் திகதி சென்னையில் திருமணம் இடம்பெற்றது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

 

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை இயக்குனர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய் - அமலாபால் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் சுமுகமாகப்பேசி பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

 

அதன்படி, அமலாபால், இயக்குனர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். 

இயக்குனர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9445

  • கருத்துக்கள உறவுகள்

என் நெ.....ஞ்சில பால் வார்த்த செய்தி   :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே சொன்னனான்.. அம்மு இது உனக்கு சரிவராதுன்னு.

எனி எங்கட நிழலியானந்தா காட்டில் மழை தான். சாமி போட்ட சாபமோ என்னமோ.. அம்முக்கு இப்படி ஆயிடிச்சு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

நான் அப்பவே சொன்னனான்.. அம்மு இது உனக்கு சரிவராதுன்னு.

எனி எங்கட நிழலியானந்தா காட்டில் மழை தான். சாமி போட்ட சாபமோ என்னமோ.. அம்முக்கு இப்படி ஆயிடிச்சு. tw_blush:

நிழலியானந்தா மீது எனக்கும் இந்த சந்தேகமுண்டு..

செய்திருப்பார்..

பாவி

எங்களுக்கும் இந்த மந்திரங்களை சொல்லித்தரலாம் தானே...?:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, colomban said:

என் நெ.....ஞ்சில பால் வார்த்த செய்தி   :grin:

கிரெடிட் காட் ரெடியாய் இருக்கா?  grin emoticon

  • கருத்துக்கள உறவுகள்

breking-news.jpg

A.-L.-Vijay.jpg

இயக்குனர்  விஜய்,  வழக்கு தாக்கல்.

தனது குடும்பத்தை பிரிக்க.... கனடாவில் வசிக்கும்..... "நிழலி"  என்பவர் சதி செய்து விட்டதாகவும்,  அதனால் அமலாபாலின் திருமணம் முறிந்து விட்டது என்றும் தன்னை மீண்டும்.... அமலா பாலுடன், சேர்த்து வைக்கும்   படியும்...   சென்னை உயர் நீதிமன்றத்தில்,  இன்று காலை 9 மணிக்கு, இயக்குனர்  விஜய்  வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  

இவருக்காக வாதாட இருக்கும்... வக்கீல் பெரிய கருப்பன் அவர்கள் கூறும் கூறும் போது......  இயக்குனர்  விஜய்க்கு,   மன  உளைச்சலை ஏற்படுத்தியற்காக.... கனடாவில் வசிக்கும் குறிப்பிட்ட  நபரிடமிருந்து, பத்து  லட்சம் (10 000 00)  கனடிய டாலர்களை மான நஷ்ட மாக அறவிட இருப்பதாகவும் வரும் அந்தப் பணத்தை வைத்து, மீண்டும் அமலாபாலை, இயக்குனர் விஜயுடன் சேர்த்து திருமணம் செய்து வைப்பேன் என்று உறுதி படக் கூறினார்.

வக்கீல் பெரிய கருப்பன்.... இப்படியான வழக்குகளில் வாதாடினால், வெற்றி பெறுவது  நிச்சயம் என்று, நீதிமன்ற வட்டாரத்தில் கூறியதை அறிய முடிந்தது.

நன்றி: ரியூப் லைட் செய்திகள்.

Edited by தமிழ் சிறி

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே

எது நடக்க வேண்டுமோ அது நடக்கின்றது
எது நடந்திருக்க வேண்டுமோ அதுவே நடந்து இருக்கின்றது
இனி எது நடக்க இருக்க போகின்றதோ அதுவும் நடக்க போகின்றது

இதில் எதை நீ எதிர்பார்த்தாய்  அது நடக்காமல் போக
இதில் எதை நீ எதிர்பாக்காமல் விட்டாய் அது நடந்து போக

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் காதலைப் புரிந்து கொள்ளாத அமலா பால் இப்போது நிச்சயம் திருந்தியிருப்பார். :unsure: நிழலியானந்தாவை ஏற்றுக்கொள்வார். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நிழலி said:

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே

எது நடக்க வேண்டுமோ அது நடக்கின்றது
எது நடந்திருக்க வேண்டுமோ அதுவே நடந்து இருக்கின்றது
இனி எது நடக்க இருக்க போகின்றதோ அதுவும் நடக்க போகின்றது

இதில் எதை நீ எதிர்பார்த்தாய்  அது நடக்காமல் போக
இதில் எதை நீ எதிர்பாக்காமல் விட்டாய் அது நடந்து போக

 

amala-paul-unseen-hot-picjpg.jpg

கனடா வந்தால் இந்த வெறும் கழுத்துக்கு தங்கச்சங்கிலி போடுவீர்களா.......போடுவீர்களா.. flirty smile smiley

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அமலா பால் விவாகரத்துக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ்?

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் நடிகர் உதயா. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது அழகப்பன் மனைவியின் வழக்கம். அங்கே ஒரு பெண் தெய்வபக்தியோடு வழிபடுவதைப் பார்த்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் ‘நீ என் மகனை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்க அந்தப் பெண் வெட்கித்தலை குனிந்து, வீட்டில் பேசச் சொல்லிவிட்டார். அவர்தான் இப்போது உதயாவின் மனைவி, அழகப்பனின் மருமகள். இரண்டாவது மகன் ஏ.எல். விஜய் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை எடுத்து வந்தார். ஏ.எல். விஜய் இயக்கிய ‘மதராச பட்டணம்’ திரைப்படம் உலகளவில் ரசிக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வமகள்’ படத்தில் அமலாபால் நடித்தார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து ‘ தலைவா’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இருவருக்கும் காதல் தீவிரமானது. ஏ.எல். விஜய் வீட்டுக்கும், அமலாபால் வீட்டுக்கும் காதல் தெரியவந்தது. ‘நாலு பேருக்கு மெசேஜ் சொல்ற மாதிரி சினிமா எடுக்குற டைரக்டர் நீ. உன் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ. பின்னாடி வருத்தப்படுற மாதிரி முடிவு எடுக்காதே’ என்று விஜய் வீட்டில் சொல்லி விட்டனர்.

ஏ.எல்.விஜய்யின் சுபாவம் அமலாபால் பெற்றோரை கவர்ந்ததால் கல்யாணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். திருமணம் செய்வதற்கு முன்பே அமலாபாலிடம் ‘நீ கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது’ என்று விஜய் சொல்ல, அப்போது காதல் மோகத்தில் இருந்த அமலாபால் ஆனந்தமாக தலையாட்டினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் திருமணம் கோலாகலமாக நடந்தது. சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டல் அருகிலுள்ள போர்ட் கிளப் பகுதியில் தனி வீட்டில் ஏ.எல்.விஜய், அமலாபால் தனிக்குடித்தனம் செய்தனர்.

முதலில் ‘நடிக்க மாட்டேன்’ என்று கொடுத்த வாக்குறுதியை மீறத் துவங்கினார், அமலாபால். தனது தாய்பூமியான மலையாளப் படத்தில் நடிக்கப்போனார் அமலாபால். அப்போதே அதிருப்தி ஆரம்பமானது. அடுத்து ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோதும் தனது எதிர்ப்பை தெரிவித்தார், விஜய்.

தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்கச் சென்றபோது பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்பிறகு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர். அப்போது அமலாபாலின் பெற்றோர் ‘சினிமாவில் நடிச்சது போதும் நல்ல கணவர் கிடைச்சிருக்கார் மிஸ் பண்ணாதே’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சினிமாவில் நடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், அமலாபால்.

கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார். பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர். ஏ.எல். விஜய், அமலாபால் இரண்டு நாட்களுக்கும் முன்பு முக்கியமான நண்பர்கள் முன்பு ஆஜராயினர். ஒருவரை ஒருவர் குறைசொல்லி காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இனி அமலாபால் நடிப்பு தொடரும். விஜய்யின் கவனம் இயக்கத்தில் இருக்கும்.amalpal_vijay_amala_paul

 

http://www.jvpnews.com/

Edited by colomban

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.