Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்ததி

Featured Replies

வீடு புதிதாகக் கட்டுப்படுகையில், குடிபூரல் நிகழுமுன்னர் அதற்குள் தச்சுப்பேய் இருக்கும் என்பது முடிந்த முடிபாக ஊரிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தச்சுப் பேயைப் பார்த்தவர்கள் சாட்சியம் கூற இருந்ததனால் நம்பிக்கைத் தன்மையில் சந்தேகம் ஒட்டவில்லை. விதிகளிற்கு ஏற்ப வாழும் கிராமம் பேயை உரச விரும்பவில்லை — ஒரு சிறுவனையும் அவன் தம்பியையும் தவிர. அவ்விரு சிறுவர்களிற்கும் பேயைப் பார்த்துப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தாங்க முடியவில்லை. அப்போது அவர்களில் மூத்தவனிற்கு ஒன்பது வயதும் இளையவனிற்கு ஏழு வயதும் ஆகியிருந்தது. ஒரு இரவினைத் தங்கள் நடவடிக்கைக்குக் தேர்ந்தெடுத்தார்கள். மூத்தவன் ஒரு இரும்புக் கம்பியினை எடுத்துக் கொண்டான். இரண்டாமவன் குசினியில் இருந்து காய்கறி நறுக்கும் கத்தியினை எடுத்துக் கொண்டான். அன்றிரவு, நான்கு காணிகள் தாண்டிப் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டிற்குள் தமது வீட்டாரிற்குத் தெரியாது சென்று தச்சுப் பேயினைப் பார்த்து வருவதே அவர்களின் திட்டம். 

காலை இப்போது தான் வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. இருவரும் கட்டிலில் கிடந்தபடி ஒருவரை ஒருவர் சலிப்போடு பார்த்துக்கொண்டனர். எத்தனை சிரமப்பட்டு அவர்கள் முந்தைய இரவில் தமது நடவடிக்கையினைப் பிசிறின்றி நடத்தி முடித்திருந்தும் பேட்டி கிடைக்கவில்லை. பேய் அங்கு இருக்கவில்லை. 

யாரோ கேற்றில் நின்று சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் ஆளையாள் தள்ளி விழுத்தியபடி எழுந்து ஓடினார்கள். சித்தியின் மாமனார் வந்திருந்தார். 

எழுபது வயதிருக்கும். உயர்ந்த இறுகிய தேகம். வெள்ளைக்காரனிற்குச் சற்றுக் குறைவான நிறம். வெள்ளை நிறத்தில் தலை நிறைய முடி. வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் போட்டிருந்தார். அவரது உருவம் எப்போதும் அவரை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்தவராகவே சிறுவர்கள் மனதில் பதித்து வைத்திருந்தது. அன்று சனிக்கிழமை என்பதனால் பள்ளியில்லை. கிழவர் என்ன கதைத்தாலும் கதைசொல்வது போலிருக்கும் என்பதால் அண்ணனும் தம்பியும் தமது அறைக் கதவருகில் அமர்ந்துகொண்டார்கள். அம்மா தேனீர் கொண்டு வந்தார். கிழவர் நேற்றைய இரவில் தனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தோடு சம்பாசனையினை ஆரம்பித்தார்.

         "விடியப்பறம் ரெண்டு மணியிருக்கும். கிணத்தில இருந்து தண்ணியெடுத்துக்கொண்டு, மற்றக் கையில ரோச் லைற்ரோட லற்றுக்குப் போனன். ஒரு குட்டி வெள்ளையாடு துள்ளி ஓடி வந்திச்சு.        எங்கிளட்டையோ அயலிலையோ இப்பிடி ஆடு ஒண்டும் இல்லையே எண்டு நான் நினைச்சுக்கொண்டு நிக்க, ஆட்டுக்குட்டி முன்னால நிண்டு ரெண்டு தரம் துள்ளிப்போட்டு என்னக் கூப்பிடுமாப்போல ரெண்டடி  முன்னால போய் நிண்டு பேந்தும் ரெண்டு தரம் என்னைப் பாத்துத் துள்ளிச்சு. எனக்குவேற அவசரமாப் போகவேண்டி இருந்ததால, நானும் போனன். ஆட்டுக்குட்டி கொஞ்சம் நடந்திச்சு பிறகு கொஞ்சம் ஓடி  ஒரு பத்தடி தூரம் போனோண்ண திடீரெண்டு ஒரு கிழவியா மாறிச் சிரிச்சுப்போட்டு மறைஞ்சிற்று.

 அங்கால நிண்ட அந்த வேம்பைத் தறிக்கோணும் எண்டு நெடுக நினைக்கிறது பிறகு விட்டிடுறது, ஆனால் இனி விடேலாது. அதில தான் உவையின்ர இருப்பு. அது தான் தறிக்கிறதுக்கு ஆள் ஒழுங்கு பண்ண  வெள்ளணவா வந்தாப்போல இதால உங்களையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தனான்"

சிறுவர்கள் அம்மாவின் முகத்தைப் பார்த்தார்கள். அம்மா மரியாதைக்காக முறுவலிப்பது போலிருந்ததே அன்றிக் கதையினை அவர் நம்பியதாகவோ கதையில் ஈடுபாடுகாட்டியதாகவோ சிறுவர்களிற்குத் தோன்றவில்லை. கிழவர் சிறுவர்களை அப்போது தான் பார்த்தவராக, தம்பியவை எழும்பீற்றியளே, ஓடிப்போங்கோ போய் முகத்தைக் கழுவுங்கோ என்றார்.

——

நகரத்தில் ஒரு தேனீர்க்கடை. வெள்ளைப் ஜீன்சும் வெள்ளைச் சேட்டும் போட்ட ஒரு ஒரு உயர்தர மாணவன் தேனீர்க்கடைக்குள் இருந்து தேனீர்பருகுகிறான். அடர்ந்த கேசம். கருத்த நிறம். உயர்ந்த தேகம். கூர்மையான விழிகள். கிளி மூக்கு. வசீகரமான புன்னகை. அவன் நினைத்தால் எந்த மாணவியையும் காதலியாக்கக் கூடிய தோற்றம். தேனீர் பருகிவிட்டு வெளியே வருகிறான். சைக்கிளை ஸ்ராண்டில் இருந்து எடுத்துத் தன்னில் சாய்த்து வைத்தபடி, லேஞ்சியினை எடுத்து முகத்தை அழுத்தித் துடைக்கிறான். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டு விட்டு பையினைச் சைக்கிள் ஹான்டிலில் கொழுவிவிட்டுப் பையின் zipப்பைத் திறந்து விடுகிறான். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே நின்றபடி எதிர்த் திசையில் இருந்த பேருந்துத் தரிப்பிடத்தைப் பார்த்தபடி நிற்கிறான். பின் எதையோ கண்டவனாக, அவதானமாக ரோட்டைக் கடந்து ரோட்டின் மறுபக்க்ததில் கடையெதிரே இருந்த பேருந்து தரிப்பிடத்திற்குச் சைக்கிளை உருட்டியபடி செல்கிறான். 

தரிப்பில் ஒரு நடுத்தர வயது மனிதர் நிற்கிறார். மண்ணிற பான்ற்ரும் மஞ்சள் சேட்டும் அணிந்திருக்கிறார். கையில் கறுத்த பை வைத்திருக்கிறார். சைக்கிளை உருட்டியபடி அவரருகில் வந்த மாணவன் நிதானமாக ஒரு கணம் நிற்கிறான். பின் தனது சைக்கிளின் ஹான்டிலில் கொழுவியிருந்த பையிற்குள் இருந்து ஒரு துப்பாக்கியினை எடுத்து அவரைச் சுடுகிறான். அவர் கண்கள் திறந்தபடியே விழுந்து இறந்து போகிறார். இளைஞன் மறுபடி தனது லேஞ்சியினை எடுத்துத் தனது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொள்கிறான். பின் நிதானமாக சைக்கிளில் ஏறி அகன்று செல்கிறான்.

——

நடு நிசி. இரு இளைஞர்கள் ஒரு முள்ளுக்கம்பி வேலியினை அறுத்து ஒரு காணிக்குள் கைகளால் தவண்டு செல்லுகிறார்கள். அது ஒரு பெரிய இராணுவ முகாம். அன்றைய பொழுதில் அந்த முகாம் எந்த ஆபத்தையும் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. சென்றிகள் நிற்கிறார்கள். பல்வேறுபட்ட வெளிச்சங்கள் காணிக்குள் அவ்பவ்போது தோன்றி மறைகின்றன. முள்ளுக் கம்பி வேலியறுத்து உள்வந்த இளைஞர்கள் தவழ்ந்தபடியே வந்து சமையலறைக்குள் நுழைகிறார்கள். பின் சில நாட்கள் கழிகின்றன. உட்சென்ற இளைஞர்கள் இராணுவத்தில் ஒருவராக, அவர்களுடனேயே உணவருந்தி எழும்பித் திரிகிறார்கள். பின் ஒரு இரவு. மீண்டும் தவழ்ந்தபடி முள்ளுக்கம்பி வேலி தாண்டி வெளியேறிச் செல்கிறார்கள்.

சில நாட்களில் அந்த இராணு முகாம் வெற்றிகரமாக அழித்தொழிக்கப்படுகிறது.

புலம்பெயர் தேசத்தின் தொழிற்சாலை ஒன்று. தமிழர்கள் வேலை செய்கிறார்கள். திடீரென்று பரபரப்பு. ஒரு தமிழ் தொழிலாளியின் கை இயந்திரத்தால் துண்டாடப்படுகிறது. 

ஒருவயது நிரம்பிய குழந்தை தத்தி நடந்து வந்து தூக்கச் சொல்கிறது. அவன் கண்களில் நீர் வழிகிறது. மனைவியை இரைந்து கத்திவிட்டு அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்கிறான். சில மணிநேரம் ஓடுகிறது. துண்டிக்கப்பட்ட கையில் எஞ்சியிருந்தபகுதியில் ஒரு பை தொங்க, அதற்குள் இரு போத்தல்கள் உரசும் ஒலியுடன் அவன் வீடு மீள்கிறான். ஒரு மணிநேரத்தில் மொத்தமும் காலியாக, கோடையின் சௌகரியத்தில் தொடர்மாடி பல்கனியில் நிறைபோதையில் முனகியபடி விழுந்து கிடக்கிறான்.

ஓராண்டு செல்கிறது. வைத்தியசாலையில் விருந்தினர் பகுதியில் காத்திருந்த உறவினரிடம் வைத்தியர் பக்குவமாக எடுத்துக் கூறுகிறார்: "சில நிமிடங்கள் முன்னர் அவர் உயிர் சிரமமின்றிப் பிரிந்துபோனது".

கனேடிய பல்கலைக்கழகமொன்றின் உணவுப் பகுதி. குழுக்குழுவாய் மாணவர்கள் உணவருந்தியபடி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உணவு மண்டபத்தில் நான்கு முதலாம் ஆண்டு தமிழ் மாணவிகள் தங்கள் குழுக்களோடு சகஜமாக உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உரையாடலில் இளமையின் சாதாரண விடயங்கள் மட்டுமே இப்போதைக்கு வந்துபோய்க்கொண்டிருகின்றன...

பஸ் தரிப்பில் இறந்த மனிதர், சுட்ட இளைஞன், சிறுவனாய் வீரமாய்த் தச்சுப் பேய் தேடிப் பின் கையிழந்ததால் போதையின் கையில் சிக்கி மாண்டு போன மனிதன், காய்கறி நறுக்கும் கத்தியோடு முன் தச்சுப் பேய் தேடிப் பின் வேவுப்புலியாகப் பேய்வீடு சென்றுவந்து முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனவன் கதைகள் அம்மண்டபத்தின்  நான்கு மாணவிகளிற்குள் தனித்தனியாக அவரவர் பிரதியாகப் பதிந்தே கிடக்கின்றன.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

சந்ததியை முதன்முறை வாசித்தேன். சித்திரக் கண்காட்சியில் 'மொடேண் றோயிங்' ...... பலர் ஆகா ஓகோ என்று ரசிக்க...! வர்ணக்கிறுக்கல் புரியாமல் குழம்பினாலும்....! பரிகசிப்பார்களே என்று ஆகா ஓகோ சொல்லியது ஞாபகம் வந்தது.:(

மறுமுறை கடைசிப் பந்தியை வாசித்துவிட்டு முதலிலிருந்து தொடங்கினேன். சந்ததி புரிந்தது! ரசித்தேன். :)

  • தொடங்கியவர்

நன்றி பான்ச்.

டஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'டீமன்ஸ்' என்ற நாவலைச் (1872ம் வருடம் பிரசுரிக்கப்பட்டது) சென்ற வாரம் வாசித்து முடித்தபோது, எமது முப்பது வருட காலத்திற்கும் அந்தக் கதைக்களத்திற்கும் இடையே ஏகப்பட்ட சமாந்தரங்களளைப் பார்த்தபோது முதலில் மலைப்பாக இருந்தது. பின்னர் புரிந்தது. அதனால் எனக்குள் கிழறப்பட்டவற்றை வைத்து குறியீடுகளாக எமது களத்தில் இந்தக்கதை.

இருமுறை வாசித்துப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. பொதுவாகப் புரியாத விடயங்களை ஒதுக்கிவிட்டு நகரும் வழமையில் புரிந்தே தீருவேன் என்ற உங்கள் முனைப்பு மிகவும் புத்துணர்ச்சி தருகிறது—நானும் உங்கள் வகை வாசகன் தான். நீங்கள் இதைச் சொன்னபோது வேறொன்று ஞாபகம் வருகிறது.

நோபல் பரிசு பெற்ற மாறியோ வார்கஸ் (பெரு நாட்டு எழுத்தாளர்) 'Conversation in the Cathedral' என்றொரு நாவல் 1969ல் பிரசுரித்திருந்தார். 800 பக்கங்களிற்கு மேற்பட்ட இந்நாவலில் ஒவ்வொரு வரியும் (அதாவது ஒரு பந்தியில் 7 வரி இருக்கிறது என்றால் அந்த ஏழு வரிகளும்) வேறுவேறு காலப்பகுதியில் நிகழ்ந்த விடயங்களைப் பேசும். வேறுவேறு பாத்திரங்கள் பேசும். ஒரு அரை மணிநேரம் தலை சுத்தும். எவன் என்னத்தைச் சொல்லுகிறான் என்பதே குழப்பமாக இருக்கும். ஆனால் அந்தக் குழப்பத்தை வென்று மனதைக் குவியப்படுத்தி ஒரு சில மணிநேரம் வாசித்துக் கொண்டுபோகையில் புரிவது மட்டுமன்றி சுரவாரசியமாக இருக்கும். எண்ணூறு பக்க நாவலின் ஒவ்வொரு வரியும் வௌ;வேறு காலகட்டத்தின் வௌ;வேறு பாத்திரங்களிற்குரியனவாய் ஆனால் அவை அமைந்த பந்திகளிற்கு முற்றிலும் பொருத்தமானவையாக அந்நாவலில் இருப்பது பல அடுக்கடுக்கான பரிமாணங்களை அந்நாவலிற்கு வழங்கும். 

நேர்கோட்டு வர்ணனைக் கதைகளாயினும் கோணல்மாணலான குறியீட்டுக் கதைகளாயினும் எழுதுபரைக் காட்டிலும் வாசிப்பவரின் திறமையிலேயே வாசிப்பனுபவம் நிர்ணயிக்கப்படுகிறது. நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்குள்ளும் பல கதைப் பிரதிகள் ஒளிந்திருக்கின்றன. சுவாரசியமான எழுத்து. மீளவும் படிக்க வைத்தது. 

பிடித்த புத்தகங்களை ஆழமாகப் படிக்க எனக்கு நேரம் எடுக்கும். சில நேரம் வரிகளை மீளவும் படிப்பேன். சிலநேரம் பந்திகளையே மீளவும் படிக்கவேண்டிவரும்!

  • தொடங்கியவர்

நன்றி கிருபன். 
குவிந்து கிடக்கும் பொழுதுபோக்கம்சங்கள் வாசிப்பை உலகளாவிய ரீதியில் குறைத்தே வருகின்றன. எனினும் அனுபவித்தவர்களிற்கு இலகுவில் விலகிச்செல்லத் தோன்றாது என்றே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாய் சொல்றன் கதை எனக்குப் புரியவே இல்லை...இன்னொரு தடவை வாசிக்கப் பொறுமையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2016 at 1:23 AM, ரதி said:

சத்தியமாய் சொல்றன் கதை எனக்குப் புரியவே இல்லை...இன்னொரு தடவை வாசிக்கப் பொறுமையும் இல்லை.

எனக்கும் தான் பகுதியாக பகுதியாக வேறு  பொருளை உணர்த்துவதால் சற்று விளங்கிகொள்ள முடியாமல் உள்ளது நண்பரே 

இன்னுமொருவன் இன்னமும் எழுதணும்.

இதே பாணியில் சில கிழமைகளில் முன்னர் ஒரு கதை படித்திருந்தேன் - அனுமதி கிடைத்தால் பதிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

இன்னுமொருவன் இன்னமும் எழுதணும்.

இதே பாணியில் சில கிழமைகளில் முன்னர் ஒரு கதை படித்திருந்தேன் - அனுமதி கிடைத்தால் பதிகின்றேன்.

யாருடைய அனுமதி..? மட்டுறுத்தினர்களின் அனுமதியா.?? அவையள் எல்லாம் நல்லூர் திருவிழாவுக்குப் போட்டினம். வரமுதல் பதியுங்கோ.:grin:

  • தொடங்கியவர்

நன்றி நிழலி, சுவைப்பிரியன், பகலவன், புங்கையூரான், நந்தன் மற்றும் ஜீவன்.
 ஜீவன் சிவா கட்டாயம் நீங்கள் குறிப்பிடும் கதையையும் பகிருங்கள்.


ரதி மற்றும் முனிவர். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஏற்கனவே கதை படித்துக் கடுப்பாக இருக்கிறீர்கள் போலுள்ளது அதற்குள் மேலும் பொழிப்புரை என எழுதி மேலும் கடுப்பேற்ற விரும்பவில்லை. குறிப்பாக ஏதேனும் கேள்வியிருப்பின் கேழுங்கள் கட்டாயம் பதிலிடுகிறேன். 

---

வேணுமாயின் ஒரு சிறு குறிப்பு:

கதை முழுவதும், ஒவ்வொரு பந்தியிலும் ஏதோ ஒரு பேய் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரங்கள் பேய் சார்ந்து எதிர்வினை ஆற்றுகின்றன. பார்வையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பார்வையாளனின் பார்வை கதைக்குள் ஒளிந்து பதிவாகியிருக்கிறது. கதை முழுவதும் கிடக்கின்ற குறியீடுகள், கதையின் காட்சிகள் சார்ந்து பார்வையாளனிற்குள் பிறந்த எதிர்வினையினைச் சுட்டி நிற்கின்றன.

பொதுவாக ஒரு பார்வையாளன் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அவனது பார்வை படத்தைப் பாதிப்பதில்லை. அதாவது, படம் ஒளிப்பேழையில் இருந்தபடியே இருக்கும். பார்வையாளன் தனது உணர்வுகளைச் சுமந்தபடி படம் முடிய எழுந்து வெளியே செல்வான்.

மாறாக இங்கு, கதையின் காட்சிகள் சார்ந்த ஒரு பார்வையாளனின் உணர்வுகள் கதையோடு ஒரு இழையாக, ஒரு படத்திற்கு எப்படி பின்னணி இசை 'மூட் செற்றிங்' செய்யுமோ அது போல் கதைக்கு ஒரு 'மூட் செற்றிங் 'செய்வது போலப் பின்னணியாக் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, கதை நிகழ்ந்தது, பார்வையாளன் பார்த்தான், பார்த்த காட்சிகள் சார்ந்து அவனிற்குள் உணர்வுகள் பிறந்தன, பிறந்த உணர்வுகளோடு சேர்த்துப் பார்வையாளன் படத்தை மீள் ஒளிப்பதிவு செய்கிறான், புதிய பிரதியில் பாhர்வையாளனின் உணர்வுகள் குறியீடுகளாகக் கதை சார்நத எதிர்வினையாகக் கதையோடு சேர்த்துப் பின்னப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ஆதங்கம் முடிவாக்கப்பட்டிருக்கிறது. 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பந்தியை எழுதாது விட்டிருந்தால் விளங்கியே இருக்காது.

On 02/09/2016 at 3:47 AM, Innumoruvan said:

ஜீவன் சிவா கட்டாயம் நீங்கள் குறிப்பிடும் கதையையும் பகிருங்கள்.

 

அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது - இங்கு பகிரப்பட்டுள்ளது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.