Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

இப்பொ யாழ் நல்லா வேலை செய்யுது. நன்றிகள் நிர்வாகம்

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
:unsure: துயர் பகிர்வோம் பகுதிக்குள் போட்ட ஒரு பதிவை (குட்டிக்கண்ணனின் வீரச்சாவு) காணல்லை என்னாச்சு :(

:unsure: துயர் பகிர்வோம் பகுதிக்குள் போட்ட ஒரு பதிவை (குட்டிக்கண்ணனின் வீரச்சாவு) காணல்லை என்னாச்சு :(

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=405489

நீங்கள் இணைத்த புதினத்தின் செய்தி, ஏற்கனவே தானியங்கி மூலம் ஊர்ப்புதினத்தில் பதியப்பட்ட செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=405489

நீங்கள் இணைத்த புதினத்தின் செய்தி, ஏற்கனவே தானியங்கி மூலம் ஊர்ப்புதினத்தில் பதியப்பட்ட செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வணக்கம் இணையவன் அண்ணா..குட்டி கண்ணணின் வீரசாவு ஒரு துன்பியல் நிகழ்வு.. :) (துன்பியல் நிகழ்வுகளுக்கு)..அஞ்சலி மற்றும் வீரவணக்கத்தை செலுத்த தானே "துயர் பகிர்வோம்" என்ற பகுதி யாழில் இருக்கிறது.. :unsure:

ம்ம்..நீங்கள் சொல்வது போல புதினத்தில் வந்து தானியங்கி மூலம் ஊர்புதினதில் பதியபட்டு இருப்பது சரி..(ஒரு புதினம் என்ற வகையில் மற்றும் செய்தி என்ற வகையில் :( )....அங்கு சென்று கண்ணீர் அஞ்சலிகள் மற்றும் வீரவணக்கத்தை செலுத்துவதையும் விட யாழில் அதற்காக ஒரு பகுதி இருக்கிறது அதில் செய்வது தான் சிறப்பு என்று நினைக்கிறன் :wub: ..இதை பற்றிய உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=405489

நீங்கள் இணைத்த புதினத்தின் செய்தி, ஏற்கனவே தானியங்கி மூலம் ஊர்ப்புதினத்தில் பதியப்பட்ட செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

:( அப்போ உதை ஏன் "கருத்துக்கள மாற்றங்களில்" பதியவில்லை.

ஜம்மு சொல்வது போல அது ஒரு துயர் பகிர்வு நிகழ்வு தானே. :unsure:

:unsure: அப்போ உதை ஏன் "கருத்துக்கள மாற்றங்களில்" பதியவில்லை.

ஜம்மு சொல்வது போல அது ஒரு துயர் பகிர்வு நிகழ்வு தானே. :unsure:

நீங்களுமா...?? :unsure:

:unsure: அப்போ உதை ஏன் "கருத்துக்கள மாற்றங்களில்" பதியவில்லை.

ஜம்மு சொல்வது போல அது ஒரு துயர் பகிர்வு நிகழ்வு தானே. :unsure:

குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தலைப்பு உரிய பகுதிக்கு நகர்த்தப்படும். தேவை கருதியே ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தலைப்பு உரிய பகுதிக்கு நகர்த்தப்படும். தேவை கருதியே ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

:unsure::unsure: இதை "கருத்துக்கள மாற்றங்களில் சொல்லி இருக்கலாமே. நான் பேசாமல் இருந்திருப்பேனே :unsure::lol:

:unsure::unsure: இதை "கருத்துக்கள மாற்றங்களில் சொல்லி இருக்கலாமே. நான் பேசாமல் இருந்திருப்பேனே :unsure::lol:

அவைக்கு எவ்வளவு வேலை இருக்கும்...? உங்களை என்னை மாதிரி வேலை வெட்டி இல்லாத ஆக்கள் எண்டே அவையை நினைச்சீங்கள்...! காரணம் செயல்பாடு எல்லாம் எப்பவும் சொல்லி கொள்ள....!!

அவைக்கு எவ்வளவு வேலை இருக்கும்...? உங்களை என்னை மாதிரி வேலை வெட்டி இல்லாத ஆக்கள் எண்டே அவையை நினைச்சீங்கள்...! காரணம் செயல்பாடு எல்லாம் எப்பவும் சொல்லி கொள்ள....!!

:unsure: அப்போ வெண்ணி வேலை வெட்டி இல்லாதவள் நு நினைச்சிட்டியள உது நன்னாவே இல்லை. இப்போ இதற்குள் இருந்த 2 கருத்தை நீக்கி இருக்கிறார்கள் அதாவது மூன்று பெண்களை மணந்தால் சொர்க்கம் என்ற தலைப்பையும் அதை நீக்கியது ஏன் என்று கேட்ட நெடுக் அண்ணாவின் கருத்தையும் நீக்கி இருக்கிறார்கள். அதை கருத்துக்கள மாற்றத்தில் அறிவித்திருக்கிறாஅர்கள் தானே. அப்போ ஏன் வெண்ணிலாக்கு மட்டும் :unsure:

நெடுக் தாத்தாவுக்கு பயமோ :unsure::unsure:

:unsure::unsure::unsure: ஏன் இப்படி வருது. ஒருநாளும் இல்லாமல் இப்ப தான் இபப்டி வருது. உதை எப்படி சுவிச் ஓவ் பண்ணுறது? :unsure:

94582948hj4.jpg

:unsure::unsure: இதை "கருத்துக்கள மாற்றங்களில் சொல்லி இருக்கலாமே. நான் பேசாமல் இருந்திருப்பேனே :unsure::unsure:

வெண்ணிலா,

தினமும் ஒரே மாதிரியான பல செய்திகள் தனித் தலைப்பில் இணைக்கப்படுகின்றன. அவற்றை உடனுக்குடன் ஒன்றாக இணைப்பது அல்லது நீக்குவது வழக்கம். குறிப்பாக ஊர்ப்புதினம் உலக நடப்பு பகுதிகளில் இவ்வாறு இணைக்கப்படும் செய்திகளை ஒன்றாக்கும்போது 'கருத்துக்களில் மாற்றங்களில்' அறிவிப்பதில்லை. செய்திகளை இணைக்கும்போது அது தொடர்பான தலைப்பு ஏற்கனவே உள்ளதா என்று கவனிப்பது நல்லது.

ஏன் இப்படி வருது. ஒருநாளும் இல்லாமல் இப்ப தான் இபப்டி வருது. உதை எப்படி சுவிச் ஓவ் பண்ணுறது?

தலைப்பின் வலது பக்கத்திலுள்ள 'Options' இல் 'Switch to: Standard' ற்கு அல்லது 'Linear+' ற்கு மாற்றி விடுங்கள்.

http://img410.imageshack.us/img410/497/image1bm9.jpg

வெண்ணிலா,

தினமும் ஒரே மாதிரியான பல செய்திகள் தனித் தலைப்பில் இணைக்கப்படுகின்றன. அவற்றை உடனுக்குடன் ஒன்றாக இணைப்பது அல்லது நீக்குவது வழக்கம். குறிப்பாக ஊர்ப்புதினம் உலக நடப்பு பகுதிகளில் இவ்வாறு இணைக்கப்படும் செய்திகளை ஒன்றாக்கும்போது 'கருத்துக்களில் மாற்றங்களில்' அறிவிப்பதில்லை. செய்திகளை இணைக்கும்போது அது தொடர்பான தலைப்பு ஏற்கனவே உள்ளதா என்று கவனிப்பது நல்லது.

தலைப்பின் வலது பக்கத்திலுள்ள 'Options' இல் 'Switch to: Standard' ற்கு அல்லது 'Linear+' ற்கு மாற்றி விடுங்கள்.

http://img410.imageshack.us/img410/497/image1bm9.jpg

:unsure: சரி இணையவன். இனிமேல் அவ்வாறான தவறை நான் விடமாட்டேன். ஆனாலும் அதை நான் ஒரு துயர் பகிர்வு என்றதால் தான் அப்பகுதிக்குள் இணைத்தேன். குட்டிக்கண்ணன் கூடுதலாக எல்லோர் மனதிலும் இடம்கொண்ட ஒரு குட்டிப்பாடகன் என்பதால் துயர் பகிர் பகுதிக்குள் போட்டேன். தவறுக்கு வருந்துகின்றேன்.

அப்புறம் உந்த படத்தோடை தந்த உதவிக்கு நன்றியுங்கோ. இப்போதான் நிம்மதியாக இருக்கு :unsure:

ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!! தலைப்பு மூடப்பட்டுள்ளது.

ம்ம்..நன்னா செய்திருக்கிறியள் பாருங்கோ..(உதில ஒரு வசனத்தில நீங்க போட நான் பந்தி பந்தியா எழுதவில்லை பாருங்கோ) :D ..ஆகவே ஏன் பூட்டபட்டது என்பதிற்கான காரணத்தை இங்கையோ அல்லது உங்க பக்கதிலையோ பதிந்தா இன்னும் நன்னா இருக்கும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

யாழில என்னமோ நடக்கிது. ஒண்டுமா விளங்க இல்ல. ரெண்டு மூண்டு நாட்களா யாழுக்கு வரமுடியவில்ல. இண்டைக்கு வந்துபார்த்தால் என்னமோ எல்லாம் விதிமுறைகள் எண்டுற பெயரில சொல்லப்பட்டு இருக்கிது.

இண்டைக்கு யாழுக்கு இருநூறு விருந்தினர்கள் வருகின்றார்கள் என்று மேற்கூறிய விதிமுறைகளை கொண்டு வாறீங்கள் என்றால் நாளைக்கு யாழுக்கு 5000 விருந்தினர்கள் வந்தால் ஒருவேளை கருத்துக்களம் எண்டுற ஒண்டு அகற்றபட்டுள்ளது என்று நீங்கள் சொன்னாலும் நாங்கள் ஒணும் செய்ய ஏலாது.

ஒரு விசயம் மட்டும் நினைவில வச்சு இருங்கோ... இண்டைக்கு யாழுக்கு இருநூறுபேர் வாறீனம் எண்டால் அதற்கு காரணாம் இஞ்ச ஆக்கள் வந்து எழுதுறபடியால்தான் என்பதையும் நினைச்சுக்கொள்ளுங்கோ.

நெடுக்காலபோவான் இனி யாழில எழுதமுடியாதபடி வேற என்னமோ செய்யப்பட்டு இருக்கிது. ஏதோ உங்கட இணையம்... உங்களுக்கு விருப்பமான மாதிரி செய்யுங்கோ. நாங்கள் என்ன உங்களுக்கு மாமனோ மச்சானோ... தெருவில போய்க்கொண்டு இருக்கிற யாரோ தானே? எண்டபடியால்.. இதுகள் பற்றி வேறொன்றும் சொல்ல விரும்ப இல்ல.

வணக்கம்,

இன்று மீண்டும் ஒரு தடவை வலைஞன் கொளுத்திய பட்டாசுகளை வடிவாகப் பார்த்தேன்.

அறிவித்தல்

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

அதாவது எதிர்காலத்தில் யாழ் இணையத்தில் உறுப்புரிமை பெறுவதற்கு மெடிக்கல் சேர்டிபிகேட் (இத தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு நீங்களே ஒருக்கால் சொல்லுங்கோ) கேட்கப்போறீங்கள் எண்டு சொல்லுங்கோ வலைஞன்.

யாழ் இணையத்தில் இனிய பொழுதை கழிப்பதற்கு வரும் எங்களிற்கு எப்படி உங்களால் இப்படி கூற முடிந்தது என்று எனக்கு தெரியவில்லை. யாழுக்கு வருபவர்கள் பலர் மனநோயாளிகள் எண்டு நீங்களே சொல்லிறமாதிரி இருக்கிது.

விதிமுறைகள் தவிர வேறு எந்த வகையால் யாழ் இணையத்தை சுமுகமான முறையில கொண்டு செல்ல முடியும் எண்டும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. விதிமுறைகளை மட்டும் அதிகரிப்பதால் மன உலைச்சல் உங்களுக்கும் கூடப்போகின்றது என்பதையும் நினைச்சுக் கொள்ளுங்கோ. எங்களுக்கு யாழுக்கு வாறதால மனநோய் வந்தால் எமக்கு மட்டும்தான் பாதிப்பு. உங்களுக்கு - நிருவாகத்துக்கு வந்தால் எல்லாம் அரோகரா. என்றபடியால் பட்டாசுகளை கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து கொளுத்துவது நல்லம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

விருப்பம் இல்லை என்றால் எழுதாது விடலாம் தான். நல்ல யோசனை. ஆனால் இப்போது யாழ் மூலம் ஏராளமான நண்பர்களை பெற்றுவிட்டேனே, இந்த உறவுகளை என்ன செய்வது?

எங்கோ ஒரு மூலையில் தனியாக வாழ்ந்த எனது வாழ்க்கையை மீண்டும் தமிழால் இணைத்த பெருமை யாழ் இணையத்திற்கே சாரும்.

ஆனால்..

ஒரு காலத்தில தமிழை என்னிடம் இருந்து பிரித்த பெருமையும் யாழ் இணையத்தையே சாரும் எண்டு சொல்ல வச்சுப் போடாதிங்கோ.

-----------------------------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

"அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது."

முரளி எங்களது நன்மை கருதி தான் அப்படியான கருத்தை வலைஞன் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஒருவரின் கருத்தினால் மற்றவர் மன உலைச்சல் அடையக்கூடாது என்ற நல் நோக்கத்துடன்.....

  • கருத்துக்கள உறவுகள்

என் தாய் மொழியை இவ்வளவு தான் என்னால் பேச முடியும் என முரண்டு பிடிப்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது எனப் புரியவில்லை.

மெடிக்கல் சேர்டிபிகேட் (இத தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு நீங்களே ஒருக்கால் சொல்லுங்கோ)

மருத்துவச் சான்றிதழ், மருத்துவ அறிக்கை, நோய்விபர அட்டை, என்று பலவிதத்தில் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்:

என் தாய் மொழியை இவ்வளவு தான் என்னால் பேச முடியும் என முரண்டு பிடிப்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது எனப் புரியவில்லை.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை சொன்னீர்கள் தூயவன். பழக்கத்திற்கு வந்துவிட்டால் அனைத்தும் இலகுவானதே.

ஒருவரது கருத்தினால் ஒருவர் மன உளைச்சல் படக்கூடாது என்ற நன்மை கருதிதான் வலைஞன் எழுதியதாக சொல்லுறீங்களே வல்வை அண்ணா.

அது தனிநபர் தாக்குதலால் வரும் உளைச்சல்கள். அபப்டியானவர்கள் விலகலாம் இல்லையேல் எதிர்த்து தாக்கலாம். அதை நிர்வாகம் பாத்துக்கொள்ளும்.

ஆனால் வலைஞன் அண்ணா சொல்லி இருப்பதை பார்த்தால் என்னமோ யாழில் இருப்பவர்கள் எல்லாரும் விசரர் பைத்தியக்காரர் என்றெல்லோ பொருள்படுது. :mellow::(

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

நிருவாகத்திடம் ஒரு வேண்டுகோள்:

இந்தப் பகுதி கலைஞன் எனும் பெயரில் நான் எழுதியபோது என்னால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நிருவாகம் சம்மந்தமாக உறவோசையில் ஒண்டும் கேட்க முடியாது எண்டு யாழ் முரசத்தில சொல்லி இருக்கிறீங்கள். மேலும் எதையாவது எழுதினாலும் தூக்கிறீங்கள். இந்தப் பகுதியை பூட்டுபோட்டு மூடிவிட முடியுமா? தொடர்ந்து ஒவ்வொருத்தரும் எதையாவது இங்கு எழுதி மனஸ்தாப படுவதைவிட இந்தப்பகுதியை மூடிவிட்டால் மேலதிக பிரச்சனை இருக்காது.

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

--------------------------------------------------------------------

கருத்துக்களத்தில் விவாதத்துக்காக இணைக்கப்படுகிற கருத்து / ஆக்கம் முழுமையாக இணைக்கப்படவேண்டும். ஒரு பகுதியை இணைத்து மிகுதியை வேறு தளத்தில் சென்று படிக்குமாறு சொல்வது வரவேற்கத்தக்கதல்ல. அப்படிக் குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுப்பதென்றால், முழுமையாக இங்கு இணைக்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

அதே நேரத்தில், ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு விவாதத்துக்கான ஆவணங்களை இணைக்கும் போது, அவை வேறு தளத்தில் இருக்குமாயின் அவற்றின் சுருக்கத்தை இணைத்து அவற்றுக்கான இணைப்பைக் கொடுப்பதில் தவறில்லை.

நல்லது வலைஞன்... இந்த நடைமுறையை முதலில் புதினத்திற்கு நடைமுறைப்படுத்தலாமே? அது என்ன புதினம் எண்டால் ஒரு விதிமுறை... எங்கட இணையத்துக்கு எண்டால் இன்னொரு விதிமுறை? உங்கட வசதிக்கு ஏற்றமாதிரி சரத்து ஒன்றை உருவாக்கிவிட்டு... பிறகு உப சரத்துக்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு போறீங்கள்..

இவ்வளவு நாளும்... யாழில பலர் இரண்டு வரியில் ஒன்றைக் கூறிவிட்டு மிச்சம் படிக்க தங்கட இணையத்துக்கு வாங்கோ எண்டு சொல்லிறீனம். அது என்ன நான் அப்படிச் செய்தாப்பிறகு இப்ப வேற மாதிரிச் சொல்லிறீங்கள்.

நாங்களும் மேற்கூரிய விதிமுறையை தாராளாமா பின்பற்றுவம் எப்ப இருந்து எண்டால்... புதினதிற்கும், மற்றும் இதர கள உறவுகள் இணைக்கும் செய்திகளுக்கும் இதே நடைமுறை அமுல் செய்ப்பப்படுமாக இருந்தால்..

புதினம் சொன்னால் கடவுள் சொன்ன மாதிரி.. நாங்கள் ஏதாவது சொன்னால்... அரக்கர் சொன்னமாதிரியா?

நல்லா இருக்கிது உங்கட நிருவாக விதிமுறைகள்..

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை

ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொள்ளும் நோக்குடனும் இதை நான் தொடக்கி வைக்கிறேன்.

http://sinnakuddy.blogspot.com/2008/05/blog-post.html

இந்த நடைமுறை முரளிக்கு மட்டும் தானா.

சின்னக்குட்டி.. இப்படி கதை கதையாம் பகுதியில் இணைத்திருக்கிறாரே.

செய்திகளுக்கு விலக்களிக்கட்டும். அது பறுவாயில்லை. ஆனால் இப்படியான ஆக்கங்களுக்கு முரளி மட்டும் தான் இலக்காகனும் என்றில்லை.

கள விதியின் முன் சகலரும் சமனாக இருக்க வேண்டும்.. நடத்தப்பட வேண்டும்.

துரதிஸ்டவசமாக சின்னக்குட்டி உதாரணமாகிட்டார். ஆனால் அவரில குறை பிடிக்கனும் என்றதுக்காக இதைக் காட்டவில்லை. ஒருவேளை அவர் இந்த புதிய நடைமுறையை அறியவில்லையோ தெரியவில்லை..!

எதுஎப்படியோ நீதி கேட்க வேண்டியது கடமை..! :rolleyes:

என்ன நெடுக்காலபோவான்,

நீங்களும் தவறாக விளங்கி இருக்கிறீங்கள்? அது என்ன செய்திகள் என்றால் ஒரு நடைமுறை மற்றைய பிரிவுகள் என்றால் இன்னொரு நடைமுறை.. செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளாது... ஒவ்வொன்றுக்கும் காரணம் கற்பிக்க வெளிக்கிட்டால்... கடைசியில் யாழ் இணையத்தில் உள்ள விதிமுறைகள் கனேடிய அரசாங்கத்தின் சட்டச் சரத்துக்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து விடும்.

நானும் எதிர்காலத்தில் எனது இணையத்தில் செய்திகளை பதியமுடியும். நான் அப்படிச் செய்யும் நிலையில் மீண்டும் இன்னொரு புதிய சரத்து இங்கு கொண்டு வரப்படுமா?

தவறுகள் ஏற்படுவது இயல்பு. முதலில் தவறு தவறு என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். நிருவாகத்தில் இருப்பவர்களிற்கு இந்த தகமை மிகவும் முக்கியமானது. நிருவாகத்தில் இருப்பவர்களே உணர்வுகளிற்கு கட்டுப்பட்டவர்களாகவும், கோபப்படுபவர்களாகவும், விமர்சனங்களை தாங்க முடியாதவர்களாகவும் இருக்கும் நிலையில்.. இங்கு உள்ள கள உறவுகள் மட்டும் விதிமுறைகளிற்கு கட்டுப்பட்டு கருத்து எழுதவேண்டும் என எதிர்பாப்பது வேடிக்கையானது.

நிருவாகத்தில் இருப்பவர்களிற்கு ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா? அவர்கள் தாமே தமது வசதிக்கு ஏற்றபடி விதிமுறைகளை உருவாக்கிக்கொள்கின்றார்கள்..

.

புதினம் செய்தியை யாழ் கருத்துக்கள செய்திச்சேவையினூடாக (உடனுக்குடன்) இணைப்பதால் சுருக்கத்தை இணைத்து மிகுதியை புதினம் தளத்துக்குச் சென்று வாசிக்குமாறு சொல்லப்படுகிறது. யாழ் இணையம் அவர்களின் செய்திச் சேவையை பயன்படுத்துவதால் மட்டுமே இந்த முறை கையாளப்படுகிறது. மாறாக, புதினம் செய்தித்தளம் தாமாகவே யாழ் கருத்துக்களத்தின் சேவையைப் பயன்படுத்தி தமது செய்திகளை பரப்ப/விளம்பரப்படுத்த/வெளிப்படுத்த நினைக்கிறபோது அவர்களுக்கும் இந்த விதிமுறை செல்லுபடியாகும்.

[தவிரவும், புதினம் தளத்தில் இருந்து செய்திகள் முன்னர் முழுமையாக இணைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் செய்திகளில் திருத்தங்கள், மாற்றங்கள் செய்த போது அது யாழிலும் புதுப்பிக்க வேண்டிய தேவை இருந்தது. அதுவும் ஒரு காரணம்.]

ஐசூர்யா என்கிற கருத்துக்கள உறுப்பினர் செய்திகளை குறையாக இணைத்து மிகுதியை தனது தளத்தில் படிக்குமாறு இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு முழுச்செய்தியையும் இணைக்கும்படி தனிமடலில் பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் உட்பட (முரளி) வேறு சில உறுப்பினர்களும் அதே முறையை பின்பற்றி ஆக்கங்களை/செய்திகளை இணைப்பதால், பொதுவான விதிமுறையாக அல்லது அறிவுறுத்தலாக இப்போது அறியத்தரப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.