Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! இரா.சம்பந்தன்!

Featured Replies

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பாரியளவு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பகிர்வதன் மூலமே மாகாண அமைச்சுக்கள் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட மக்களுக்கான சேவைகளை பூரணமாகச் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்பட இருக்கின்ற அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எல்லா இன மதத்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

எவரையும் எவரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை நாம் பெற முடியாது. சுருக்கமாகச் சொல்வதென்றால் எவரும் எவரையும் ஏமாற்றவில்லை. எவரும் எவரையும் ஏமாற்றுவதன் மூலமாக ஒரு திருப்திகரமான நியாயமான நிரந்தரமான நிதானமான அரசியல் தீர்வை நாம் அடைய முடியாது.

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்க வேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது என்றார்.

http://www.tamilwin.com/politics/01/118748?ref=home

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

இலங்கையில் தற்போது சர்வசனம் என்பது பெரும்பாலும் இனவாதிகளாக மாற்றப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களையே குறிக்கும். அவர்களின் முடிவே அமுலாக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்க வேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது என்றார்.

 இப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, ஒரு சூழலும் உருவாகுவதாகவோ, முடிவேதும் வருவதாகவோ தெரியவில்லை முதலமைச்சர் ஏதாவது சொன்னால், செய்தால் இந்தப் போதனையை  தூக்கிக்கொண்டு ஓடி வருவினம். பிற்பாடு ஒரு சத்தமும் இராது. . நல்லிணக்கம் என்கிற ஏமாற்று வசனத்துக்குள் எஜமானர்களுக்கு நன்றி என்ற பொருள் மறைந்திருக்கிறதோ. 

எனக்கு வேற வாயில வருது ....இந்த வயதிலயும்  உங்களுக்கு ......ஏழரை சனி ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.9.2016 at 8:51 AM, போல் said:

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

pogkoi_zpssad3matf.jpg

  • தொடங்கியவர்
On 25/9/2016 at 0:21 PM, போல் said:

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இப்படி சொல்வதன் மூலம் சம்பந்தன் தான் சிறைக் கைதிகளையும், காணி உரிமையாளர்களையும், இன்னமும் பலருக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியதை மறைக்க முடியாது.

குறிப்பாக 2016 க்குள் தமிழர் ஏற்றுக்கொள்ளும் தீர்வு கிடைக்கும் என்று ஏமாற்றியதை மறைக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

13895294_580971098758007_1134677550522412720_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! இரா.சம்பந்தன்!

எங்கெ நல்ல அடி

படாத இடத்தில விழுந்துவிட்டுது போல..

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது 

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! .. 

நான் இவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வரையில்... (சொல்லாமல் போனது...)

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு சாணக்கியன் இவர். 60 வருஷமாய் தோத்துப் போகாமல்   மேய்க்கிறார். லேசில ஏமாற்றிப்போடுவோமா? அல்லது அவர்தான் ஏமாந்து போவாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.