Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசனைத் திரவியங்களின் பயன்கள்

Featured Replies

அளப்பரிய பலன்களை தரும் மிளகு

மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கிறது.

 

1467629777-6901.jpg

 


திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது.
 
* கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.
 
* மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.
 
* மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் 
 
உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. * சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தா மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்
 
* தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும். 
 
* மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும். 
 
* ஜலதோஷத்தால் வந்த இருமல் மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும். உடல் சூட்டினால் வரும் இருமல் தீரும். 
 
* தலையில் புழுவெட்டினால் முடி இல்லாமல் இருக்கும் அதனி சரிசெய்ய, அந்த இடத்தில் மிளகை அரைத்து பூசிவர முடி முளைக்கும்.
 
* தினமும் பல் தேய்க்கும்போது மிளகுடன் உப்பு சேர்த்து தேய்சத்து வந்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் நீங்கி பல் வெண்மையாகும்.
 
* வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும். மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
 

 

  • தொடங்கியவர்

உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு

வைட்டமின் சி, பி6, மாங்கனீஷ் நிறைந்துள்ளன. அணுக்களின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. பூண்டில் உள்ள சல்பர் கிருமிகளை அளிக்க வல்லது. இது இரண்டு வகையான ஆண்டி பயாடிக்சைஸ உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 வகையான பாக்டீரியாக்களை அழித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.


  1474613931-6883.jpg
 
* இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். பூண்டில் உள்ள விட்டமின் பி மற்றும் கே உடலுக்கு தேவையான சக்தியை சீராக செம்மை படுத்தி பலம்பெற செய்கிறது.
 
* காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
 
* இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் ஓட்டம் சீராக இருக்க ஏதுவாகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
 
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டில் உள்ள சல்பர்,மற்றும்  குளோரின்  நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது.
 
* எலும்புகளை உறுதி செய்யும். பல் வலியைக் குறைக்கும். மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். பூண்டில் உள்ள சல்பர் மற்றும் ஆண்டி  ஆக்ஸ்டன்ஸ் கருப்பையை வலுவாகி மாதவிடாய்க் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது.
 
* உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். மலச்சிக்கல் உண்டாகி வாய்வு உண்டாகி அஜீரணக்கோளாறு புளிப்பு வயிற்று பொறுமல் வயிற்று எரிச்சல் போன்றவை உண்டாகி பாடாய் படுத்தும் தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் இவை அனைத்தையும் தடுத்து குடலில் உள்ள புழுக்களை அகற்றி பசியைத் தூண்டும்.

http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/garlic-is-rich-in-nutrients-in-the-body-of-accumulated-toxins-out-116092300027_1.html

  • கருத்துக்கள உறவுகள்

பன்டைய காலங்களில்... தமிழ்நாட்டிலிருந்து பெரும் தொகை பணம் கொடுத்து....
ஐரோப்பியர்,  மிளகை வாங்கும் போதே.... பல காலமாக மிளகின் பயனை நம் முன்னோர் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.9.2016 at 5:25 PM, தமிழ் சிறி said:

பன்டைய காலங்களில்... தமிழ்நாட்டிலிருந்து பெரும் தொகை பணம் கொடுத்து....
ஐரோப்பியர்,  மிளகை வாங்கும் போதே.... பல காலமாக மிளகின் பயனை நம் முன்னோர் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிகின்றது.

சிறித்தம்பி! ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் எல்லாரும் கருவா பட்டைக்காகத்தான் சிலோனை பிடிச்சவையாம்.....:grin:

  • தொடங்கியவர்

சரும பாதுகாப்பிற்கு சிறந்த மஞ்சளின் மருத்துவ குணங்கள்

தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

1474006072-6299.jpg
 
* மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.
 
* பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
 
* எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
 
* பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
 
* சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
* தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.
 
* மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.

http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/skin-protection-best-medicinal-properties-of-turmeric-116091600031_1.html

 

  • தொடங்கியவர்


இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைத்து நலம் தரும் நல்லெண்ணெய்

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.


  1473405447-5775.jpg
 
1. நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
 
2. இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
 
3. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும்  நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு,  சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
 
4. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக  செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. 
 
5. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம்,  எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும்  போக்குகிறது.

http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/reduce-blood-cholesterol-and-beneficial-oil-116090900027_1.html

 

  • தொடங்கியவர்

வெந்தயத்தின் குணங்களைக் கூறும் சித்த வைத்திய முறைகள்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.


  1462429556-6043.jpg
 
வெந்தயத்தின் நன்மைகள்:
 
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
 
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
 
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.
 
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
 
இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும். 
 
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.
 
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/qualities-of-methi-say-siddha-medical-treatment-116081200014_1.html

  • தொடங்கியவர்

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்களை தெரிந்து கொள்வோம்...

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். அதற்கு ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
 
1474263153-4068.jpg
 
வயிறுப் பொருமல் நீங்க
 
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
புகைச்சல் இருமல் நீங்க
 
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
 
மந்தம்
 
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
 
பசியைத் தூண்ட
 
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
 
இடுப்பு வலி நீங்க
 
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

 

http://tamil.webdunia.com/article/home-remedies/let-us-know-the-benefits-of-medicinal-properties-carom-seeds-116091900014_1.html

  • கருத்துக்கள உறவுகள்

வாசனைத் திரவியங்கள் மட்டுமல்ல, மூலிகைத் திரவியங்களும் கூட ....!

பகிர்வுக்கு நன்றி ஆதவன் ....! :11_blush:

  • தொடங்கியவர்

கிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள்

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
 
1471237602-6752.jpg
 
 
* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
 
* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
 
* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
 
* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
 
* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
 
* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
 
* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
 
* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
 
* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
 
*  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
 
* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
 
* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
 
* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

http://tamil.webdunia.com/article/home-remedies/the-various-medicinal-properties-of-clove-116081500006_1.html

  • தொடங்கியவர்

கொத்தமல்லிக் தழையின் மருத்துவக் குணங்கள்

கொத்தமல்லி உணவு அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை ஆகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் என்றே கூறலாம்.
 
1470468024-893.jpg
 
 
* கொத்தமல்லியை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.
 
* கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கும்.
 
* கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
 
* இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
 
* இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
 
* பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.
 
* கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.
 
கொத்தமல்லி கஷாயம்
 
கொத்தமல்லி(அல்லது) தனியா, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை மற்றும் சதகுப்பை இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு 600 கிராம் கற்கண்டை பொடியுடன் கலந்து வைத்து கொள்ளவும். இவற்றை கஷாயம் செய்து சாப்பிடலாம்.
 
பயன்கள்: இந்த கஷாயத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
 
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும்.

http://tamil.webdunia.com/article/home-remedies/coriander-leaves-medicinal-properties-116080600020_1.html

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தமல்லியின் பெருமைகளை சுனில் பெரேரா அழகாக கூறுகின்றார்.

:11_blush:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள இணைப்பு...தொடருக்கள் ஆதவன்...இணைப்பிற்கு நன்றி

  • தொடங்கியவர்

கசக்கிறதா கறிவேப்பிலை!

நாம் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். அதற்கென பல்வேறு உணவுப்பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஒரு பெரிய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இணை உணவினையோ, அல்லது உடலுக்கு போஷாக்கு மற்றும் சக்தி தரக்கூடிய விலை உயர்ந்த உணவுப்பொருட்களையோ அன்றாடம் பயன்படுத்துகிறோம்.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கண்களுக்கு இதமான பழங்களில் மட்டுமே சத்துக்கள் நிறைந்துள்ளன எனக்கருதி அவற்றை உண்ண ஆவல் கொள்கிறோம். நாம் தினந்தோறும் நம் உணவில் காணும் பொருள் கறிவேப்பிலையில் எத்தனை வித உயிச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என உங்களுக்கு தொரியுமா...? எத்தனை போர் கறிவேப்பிலையைத் தட்டின் ஓரம் எடுத்துவைக்காமல் உண்டிருப்போம்.

பழந்தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் மகத்துவம் உணர்ந்து, அதனை தங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சகலத்துக்கும் நன்மை பயக்கும் கறிவேப்பிலை நமக்கு கிட்டிய வரப்பிரசாதம்.கறிவேப்பிலை வரலாறு பாரசீகத்திலிருந்து வந்த ஆரியர்களின் வருகைக்குப் பின், தென்னகத்தில் திராவிடர்களுக்கு, கறிவேப்பிலை அறிமுகமானது என வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

உலகெங்கும் பரவலாக வளரும் தாவரமாக உள்ள கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முராயாகோனிகி. curry leaves என ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பெயர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது வழக்கில் வந்தது.இந்திய நறுமணப் பொருள் கழகத்தின் தகவல்படி, 100 கிராம் கறிவேப்பிலை சராசரியாக 6 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 4 கிராம் தாதுக்கள், 7 கிராம் நார்ச்சத்து, 19 கிராம் கார்போஹைட்ரேட், 830 மில்லி கிராம் கால்சியம், 57 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.930 மில்லி கிராம் இரும்புச்சத்தும் கொண்டது. பீட்டா கரோட்டின், தயாமின், ரைபோபிளேவின், தயாசின், போலிக் அமிலம், விட்டமின் ஏ.பி.சி. மற்றும் இ, மாங்கனீசு, குரோமியம் போன்ற தாதுச்சத்துக்களும், கறிவேப்பிலையில் அடக்கம்காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையைப் பச்சையாக உண்ணும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் அளப்பரியவை. 

பலதரப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலக்கூறுகளைக் கொண்ட கறிவேப்பிலை வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண், அல்சர், இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகளைக் கரைத்து சமநிலையில் பராமரித்தல் மற்றும் உடலில் தோன்றும் கட்டிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இந்த அற்புத மூலிகைக்கு உண்டு.இயற்கை மருத்துவம்நம் தமிழ் இயற்கை மருத்துவத்தில், மனித உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் மகத்தான பணியினைக் கறிவேப்பிலை செய்கிறது என்பதனை சித்தர்களின் குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம்.

சிறிது கறிவேப்பிலைச்சாறுடன், எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்துக் காலை நேரத்தில் பருகுவது, நம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் வைக்கும் என்பதை இயற்கை மருத்துவம் குறிப்பிடுகிறது.

காடுகளில் வாழ்ந்த நம் தமிழ் யோகிகள் இவ்வாறான மூலிகைகள் பற்றிய உண்மைகளை அறிந்து போற்றினர். அவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்திருந்தனர். காலப் போக்கில் இவற்றையெல்லாம் நாம் மறந்திருக்கிறோம் என்பதும், போற்றிக் கொண்டாட வேண்டிய இயற்கை மருத்துவத்தை கேப்சூல்களாக மாற்றி, வெளிநாட்டுக் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும் கண்கூடு.பாதுகாக்கும் அரண் பலவிதமான நம் உடல் குறைபாடுகளிலிருந்து கறிவேப்பிலை நம்மைக் காக்கிறது. புற்றுநோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்னை, உடல் பருமன் பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. உடலில் உள்ள குளுகோசின் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. விட்டமின்கள் இருப்பதால் கண்கள், கேசம், தோல் பகுதிகளுக்கு நிறைந்த பலனையும், பலவித தோல் ஒவ்வாமையிலிருந்தும் காக்கும். ரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது. 

கறிவேப்பிலையின் கனி, இலை, வேர், பட்டை என அனைத்தும் உயிர் சத்துக்கள் நிறைந்தவை. மூல நோய்க்கான மருத்துவத்தில் இதன் கனி முதன்மையானது.தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்ற கறிவேப்பிலையை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை துாக்கி எறிந்து விடும் பொருளல்ல. அது நம் உடலைக் காக்கும் அரண். இலை வடிவினில் உடல் நலம் பேணும் இனிய அறம்.- ரோஸ்லின்,ஆசிரியை, மதுரை,99521 77592

http://www.dinamalar.com/news_detail.asp?id=1267895

1450165281-6569.jpg

கறிவேப்பிலை-கொசுறு அல்ல..மருந்துக் கொழுந்து!

 

சமீபத்தில் ஒரு பெரும் மருத்துவமனை ஒன்றில் கூட்டம் ஒன்றிற்காக சென்ற போது அதில் பேசிய மூத்த மருத்துவர் ஒருவர் சொன்னது ரொம்பவே வலித்தது. “இன்றைய நிலையில் இருதய கோளாறுகள் ஏராளமாய்ப் பெருகி வருகிறது. பணமிருந்தால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். அல்லது செத்துப்போக வேண்டியதுதான். ஏழைகளால் எட்ட முடியாத அளவிற்கு சிகிச்சை செலவு கூடுகிறது. அதனால் மாரடைப்பை தவிர்க்க வழி தேட வேண்டும்;” என்று தொடர்ந்தது அவர்தம் பேச்சு. உண்மை நிலவரம் அதுதான். 40 களிலேயே அதிக பெருகும் மாரடைப்பிற்கு ஸ்டெண்ட் வைத்தோ; CABG எனும் பைபாஸ் சிகிச்சை செய்ய 1.5 முதல் 4 லட்சம் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம். அதனால் மரணத்தை, வரும் போது பார்க்கலாம் என ஏற்றுக் கொள்ளும் ஏழைகளை இந்த நவீன உலகம் ஏராளமாய் வேகமாய்ப் படைத்து வருகிறது. ஏன் பெருகி வருகிறது இது போன்ற நோய்கள்? உணவு மாற்றம் ஒரு உறுதியான காரணம்.


மணம் அன்றைய அடுப்பங்கரையின் அலங்காரம். இன்று நவீன மாடுலார் கிச்சனில் புகையுடன் விரைந்து வெளியேறும் ’மணம்’கண்டு பலநேரம் மனம் வலிக்கும். அதற்காக விறகடுப்பில் வெந்நீர் சுடுவது சுகாதாரம் என முட்டாள் பழமை பேச வரவில்லை. சுவையும் அழகும் வேண்டும் என்பதற்காக மட்டும் இரசாயனங்களைக் கொட்டிச் சமைப்பதை நிறுத்த வேண்டும். அன்று, “இட்லி மிளகாய்ப் பொடி இடிச்சியா பாட்டி?”  “இன்றைக்கு மணத்தக்காளி போட்டு வத்தக்குழம்பா?,” என்ற எங்கள் கேள்விகள், வாசம் பார்த்தே நேசமும் வளர்த்தன.  ‘உங்க தாத்தா பேர் வைக்கும் போதே தெரியும்! அவுகளப்போலவே உனக்கு மூக்கு நீளம்-னு’ எனும் அங்கீகாரத்துடன் பாட்டி சமைத்த உணவுகள் உடல் மட்டும் வளர்க்கவில்லை; உயிர் வளர்த்தன; நலம் நட்டன. மணமூட்டிச் செய்த அந்த மருந்தாகும் விருந்தின் அடையாளங்கள் வேகமாக தொலைந்து வருவதில் பெருகியது புதுப்புது நோய்க் கூட்டம் மட்டுமே!

வேகமாய் விளையும் அரிசி, பருமனாய் பப்பாளி, பளபளப்பாய் இனிஷியல் கத்தரிக்காய், பாலிஷ் போட்ட ஆப்பிள், சாயம் தெளித்த பருப்புகள், சட்டை கழட்டி வெளுப்பாக்கிய தானியங்கள் என பெருகும் உணவுகள் எல்லாம் வசதியாய் குளிரூட்டப்பட்ட கடைகளில் அலங்காரமாய் அடுக்கி வைக்கப்பட்டதில், மருத்துவக் காப்பீடுகளுக்குள்ளும் மருத்துவ நட்சத்திர விடுதிகளுக்குள்ளும் நாம் நடைப்பிணமாக அடைபட்டு வருகிறோம். முழுதாய் தொலைவதற்குள் மறந்து வரும் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தையும் உணவூட்டும் மரபையும் வேகமாக மீட்டெடுப்பது போர்க்கால அவசரமும் அவசியமும் கூட.

கறிவேப்பிலை.

ஒருமுறை காய்கறி அங்காடியில் எல்லாக் காயும் வாங்கி பில்லுக்கு பணம் செலுத்தியதும் சிப்பந்தி, “இந்தாங்க சார் என கறிவேப்பிலையை கொஞ்சம் தந்ததும், கூட வந்த குழந்தை, இது ஏன் ஃப்ரீயா தாராங்க..ரொம்ப சீப்பா?”, என கேட்க எனக்கு கொஞ்சம் வலியும் கோபமும் வந்தது. எத்தனை நல்ல பொருள். இதனைத் தேடி அல்லவா வாங்க வேண்டும்? கடையில் கடைசியில் இலவசமாய்த் தருவதைப் போல பலர் உணவில் கடைசியில் ஓரமாக ஒதுக்கி வைப்பதும் எத்தனை அலட்சியம் என தோன்றும். கறிவேப்பிலை எப்போதும் உப்புக்கு சப்பாணி அல்ல.மணமூட்டி மருந்து.

1950-கள் வரை கறிவேப்பிலையை வெறும் மணமூட்டியாக மட்டும் தான் மேற்கத்திய உலகம் நினைத்திருந்தது. அமெரிக்க  நாட்டின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அப்போது நடைபெற்ற ஒரு பெரும் ஆய்வில கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை 42% மும் இரத்த கொலஸ்டிராலை 30% குறைக்கிறது என்ற விபரத்தை சொன்னதும் தான் உலகம் கறிவேப்பிலையை உற்றுப்பார்க்க துவங்கியது. ஆனால் நம்மவர்கள், தமிழ் மருத்துவச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப்பாடியது 2000 வருடங்களுக்கு முன்னதாகவே. அசீரணம், பசியின்மை, பித்த நோய்கள் பேதி என பல நோய்களுக்கு அதன் பயனை சித்த மருத்துவம் பாடி இருக்கிறது. இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து உடன் சிறிது கல்லுப்பு, சீரகம் சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து சுடுசோறில் சாப்பிட பசியின்மை போகும் என்றது சித்த மருத்துவம். சர்க்கரை நோயாளிகளுக்கும் அது நல்லது.


அசீரணம், அடிக்கடி வாயுத் தொல்லை உள்ளவர்களும் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இந்துப்பு சமபங்கு எடுத்து பொடி செய்து அதனை ½ ஸ்பூன் அளவு மோரில் சாப்பிட நோய் தீரும். குடற்புண்கள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின்கள் நிறைந்து உள்ளதால் கண்களுக்கு நல்லது. ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த இலைகளீல் கறிவேப்பிலைக்கு முதலிடம் உண்டு. அதில் நிறைந்துள்ள கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் தாம் கறிவேப்பிலையை சர்க்கரை நோய், மாரடைப்பு நோய்களில் மருந்தாக பயன்பட வைக்கிறது. உடலில் உள்ள நல்ல கொலஸ்டிராலான HDL- HIGH DENSITY LIPO PROTIEN –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். அதற்கான மருந்துகளும் விலை அதிகம். கறிவேப்பிலை அப்பணியைச் செய்வதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் பெருங்குடல் புற்று நோய் முதலான பல புற்று நோய்களில் கறிவேப்பிலை கட்டி வலர்ச்சியைக் குறைப்பதினையும் கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் பயனளிப்பதைக் கண்டறிந்துள்ளனர். வயோதிகத்தில் வரும் ஞாபக மறதியை குறைப்பதற்கும் கறிவேப்பிலை பயன் தருகிறது என்பதால், அமெரிக்காவில் பிரபலமான வயோதிக நோயான அல்ஸிமர்  நோயில் இதன் பயனை முழிவீச்சில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

முடி கொட்டுவதை தடுக்க, அமீபையாஸிஸ் எனும் வயிற்றுப்போக்கு  நோயில், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே புறப்படும் போதும் சாப்பிட்டவுடனும் மலம் கழித்து விட்டு போகலாம் என எண்ணம் வரும் இரிடபிள் பவல் சிண்ட்ரோம் எனும் பேதி நோயில் கறிவேப்பிலை பயனளிக்கும.


இலவசமாக கிடைக்கிறதென்பதால் இனி கறிவேப்பிலையை இலையில் ஒரம் கட்ட வேண்டாம். கடுகும் கறிவேப்பிலையும் காதலித்து மணமாய் வரும் உணவில் இனி அதனை ஒதுக்கிடவும் வேண்டாம். உங்களை அது பல நோயில் இருந்து காப்பாற்றும்! 

http://siddhavaithiyan.blogspot.ch/

 

 
  • கருத்துக்கள உறவுகள்

கருவேப்பிலை  மரம் ஒன்று, நான் பிறந்த  ஊரில்.... 150 வருடங்களுக்கு மேலாக, இன்றும் வாழ்கின்றது என்று அறிந்து, 
மிகவும் மகிழ்ச்சி  அடைந்தேன். அந்த மரத்தில்....  கிளை விட்ட இலையை, ஆய்ந்து தான், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, எல்லோரும்... சாப்பிட்டு இருப்பார்கள். அந்த மரம்... உயிருடன், இருக்கும் போதே....  எனது பிள்ளைகளுடன், அந்த  மரத்தில், ஆய்ந்த கருவேப்பிலை போட்ட  கறியுடன், சோறு சாப்பிட ஆசை.

  • தொடங்கியவர்

அகத்தை சுத்தமாக்கும் சீரகம்

 

“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்

கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்

விட்டுப்போகுமே

விடாவிடில் நான் தேரனும் அல்லவே " என்பது சித்தர் பாடல்.

இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் பெரும் பங்காற்றுகிறது. இதனாலேயே இது சீர்+அகம்=சீரகம் என்று பெயர் பெற்றுள்ளது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட சீரகம், இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக சமையலில் சேர்க்கப்படுகிறது.

வேதிப்பொருட்கள்

சீரகத்தில் 2.5 சதவிகிதம் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து ஆல்டிஹைடுகள், பைனினி, ஆல்பா டெர்பினியோல், குயிமினின் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க:

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது, சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்ற மருந்து

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்" தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு ளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக நீரை சேர்த்துக் கொடுக்கலாம். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.

ரத்த அழுத்த நோய் குணமாகும்

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சிறிதளவு சீரகத்துடன் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

http://tamil.boldsky.com/health/food/2011/14-herbal-apiaceae-medicine-spices-aid0091.html

 

  • தொடங்கியவர்

சீரகக் குடிநீர்

 

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து..

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.

http://shortcutsamayal.blogspot.ch/2015/10/blog-post.html

  • தொடங்கியவர்

சீரக குடிநீர் மிகவும் பயனுள்ளதாகவே நினைக்கிறேன், இவை தான் இங்கு (சுவிஸ், ஜேர்மனியில்) "Fenchel tee "ஆக கடைகளில் விற்க்ப்படுகின்றன... சிறு கைக்குழந்தைகள் தொடக்கம் பெரியோர்வரை அணைவராலும் அருந்தப்படுகிறது.

கனடா  போன்ற சில நாடுகளில் Fenchel tee இலையென நினைக்கிறேன் இங்கு வருபவர்கள் இவற்றை வாங்கிச் செல்வதை கண்டு இருக்கிறேன்.

Hipp - Fenchel-Tee

 

Meßmer Fenchel Tee

நாங்களும் வீட்டில் எல்லாரும் அருந்துவோம். எனது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் , அவரும் அருந்துவா, மருத்துவரும் மனைவிக்கு Fenchel tee குடிக்கும் படி கூறியிருந்தார்.

 

 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

இயற்கையாக கிடைக்க கூடிய சுக்கின் மருத்துவப் பயன்கள்!!

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சவுபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது.
 
1478236512-7329.jpg
 
சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.
 
குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.
 
பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. சுக்கை மேல் தோல் நீக்கியே, மருந்து தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். பல் வலிக்கு - சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.
 
இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.
 
சுக்கைத் தட்டி போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்கத் தலையில் நீர்க்கோர்வை தலைவலி தீரும். ஜலதோஷத்துக்கு நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. 
 
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. 
 
இஞ்சி சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும், உடல் இளைக்கும்.ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்தவேண்டாம்.

 

http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medicinal-uses-of-available-natural-dried-ginger-116110400006_1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓமம் என்டால் என்ன? பெருஞ்சீரகமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 13.10.2016 at 11:47 PM, Athavan CH said:

சீரக குடிநீர் மிகவும் பயனுள்ளதாகவே நினைக்கிறேன், இவை தான் இங்கு (சுவிஸ், ஜேர்மனியில்) "Fenchel tee "ஆக கடைகளில் விற்க்ப்படுகின்றன... சிறு கைக்குழந்தைகள் தொடக்கம் பெரியோர்வரை அணைவராலும் அருந்தப்படுகிறது.

கனடா  போன்ற சில நாடுகளில் Fenchel tee இலையென நினைக்கிறேன் இங்கு வருபவர்கள் இவற்றை வாங்கிச் செல்வதை கண்டு இருக்கிறேன்.

Hipp - Fenchel-Tee

 

Meßmer Fenchel Tee

நாங்களும் வீட்டில் எல்லாரும் அருந்துவோம். எனது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் , அவரும் அருந்துவா, மருத்துவரும் மனைவிக்கு Fenchel tee குடிக்கும் படி கூறியிருந்தார்.

55397498897.jpg

உண்மைதான் ஆதவன்... இங்கு வருபவர்கள் பலரும்,  இதனை வாங்கிக் கொண்டு போவார்கள்.
சிறிய குழந்தைகள்... உணவு உண்ண ஆரம்பிக்கும் காலங்களில், 
கரட், உருளைக்கிழங்கு, போஞ்சி போன்றவற்றுடன்  பெருஞ் சீரக (Fenchel) மரத்தின்  அடிப்பாகத்தில் (படத்தில் வெள்ளையாக உள்ள பகுதியில்)  சிறிய துண்டு ஒன்றையும் போட்டு அவித்து, அரைத்துக் கொடுக்கும் படி மருத்துவர்கள் கூறுவார்கள். இது வயிற்றில் வாய்வு உருவாவதை தடுக்கும். 

7 hours ago, ரதி said:

ஓமம் என்டால் என்ன? பெருஞ்சீரகமா?

oommam.jpg   saunf.jpg

ஓமம்.... தோற்றத்தில் பெருஞ் சீரகம் போல் இருந்தாலும்,அது பெருஞ் சீரகம் அல்ல. 
ஓமம் சிறிதாக கடும் நிறத்தில்  இருக்கும். பெருஞ் சீரகம் நீள வடிவில் இள மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
முதலாவது படத்தில் உள்ளது ஓமம். இரண்டாவது படத்தில் உள்ளது பெருஞ் சீரகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி.

சீரகக் குடிநீரில் சொல்லப்படும் சீரகம் என்பது பெருஞ்சீரகமா?...பெருஞ்சீரகம்,சின்ன சீரகத்தை தவிர நற்சீரகம் என்று ஒன்று உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஓமப்பொடி. மிச்சர் செய்யும்போது ஓமத்தை வாசனைக்காகச் சேர்ப்பார்கள் ரதி. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டாலும் ஓமத்தைத்தான் அவித்துக் கொடுப்பது.

 

சின்னச் சீரகத்தைத்தான் நற்சீரகம் என்பது.

 

நல்லதொரு திரி.நன்றி ஆதவன். 

 

1450165281-6569.jpg

 

இது கறிவேப்பிலை இல்லை. இதைத்தான் கறிவேப்பிலை என்று இங்கு ஏமாற்றி அனுப்புகின்றனர்.கறிவேப்பிலை போன்று வாசனை இருக்கும். கறிவேப்பிலையின் இலையின் நுனி கூராக இருக்கும். கீழே உள்ளதுபோல். மேலே உள்ளது வேறு.

Image result for கறிவேப்பிலை

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
 
1468644181-2047.jpg
 
 
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது. சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது. பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
 
உபயோகங்கள்: 
 
இது ஒரு நல்ல வாய்வகற்றி. உணவுப் பொருள்களைச் ஜீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், நீக்குகிறது. 
 
சுவாச நோயிலும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
 
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை (பெருங்காயத்தை) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
 
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம். அல்லது சாதத்தின் உள்ளே வைத்து அப்படியே சாப்பிட பலன் கிடைக்கும்.
 
கோழி முட்டை மஞ்சள்கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

http://tamil.webdunia.com/article/diseases-and-treatments/medicinal-properties-of-asafoetida-116071600012_1.html

  • கருத்துக்கள உறவுகள்

பெருங்காயம்  இங்குள்ள கடைகளில் வாங்கும் போது, 
மிக அவதானமாக இருக்க  வேண்டும்.
ஒரிஜினல் பெருங்காயம் பெரிய விலை என்பதால்.....
கலப்படம் செய்கிறார்கள்.

ஊரில்... ஒரிஜினல்  பெருங்காயம் எங்கள் வீட்டு, குசினியில் இருந்தால்... எட்டு, வீ ட்டுக்கு  வாசம் வரும். 
இப்ப  அப்படியல்ல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.