Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம்

Featured Replies

பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம்
 
 

article_1475995165-6.jpg

இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

http://www.tamilmirror.lk/183530/ப-ரபல-அரச-யல-வ-த-மகன-ன-அட-டக-சம-

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின்ற பெடி, டகம்...:224_monkey:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரியின்ரை பொடியன் கண்டியிலை 3நாள் சுவிமிங் பூல் பார்ட்டி நடத்தினதாய் ஒரு கதை காத்துவாக்கிலை விழுந்திச்சுது....உண்மை பொய் தெரியாது.,:cool:

  • தொடங்கியவர்
களியாட்டவிடுதி தாக்குதல் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
 
களியாட்டவிடுதி தாக்குதல் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை அடித்து நொருக்கியுள்ள சம்பவம் தொடர்பில் விசார ணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தர விட்டுள்ளார்.
 
தாய்லாந்தில் இருந்தே இந்த உத்தரவை இன்று ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
 
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உயர் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும் போது,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாம், இரவு நேர களி யாட்ட விடுதி சம்பவத்தின் போது அங்கு இருக்கவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான ரோஹித்தவே அவருடைய நண்ப ர்களுடன் வருகை தந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதியின் மகனான தாஹாம் சிறிசேனவே ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் குறி த்த களியாட்ட விடுதிக்கு சென்று அடித்து நொருக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள தோடு, நேற்றைய கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் விமல் வீரவன்ச தாஹாம் சிறிசேன   இதை செய்துள்ளார் என்று கூறினார்.
 
இதன் மூலம் ஜனாதிபதியின் மகனே இந்த குற்றத்தை செய்துள்ளதாக பரவலான செய்திகள் வெளிவந்துள்ளன. இதை அறிந்த ஜனாதிபதி தனது மகனாக இருந்தாலும் உண்மைகள் மறை க்கப்படக் கூடாது என்பதற்கு ஏற்ப தாய்லாந்திலிருந்து உண்மையை கண்டறியுமாறு பொலி ஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை களை தீவிரமாக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/18736

  • தொடங்கியவர்

இரவு விடுதியில் அதிரடி தாக்குதல்

 

 

கொழும்பு நகர மண்டப பகுதியில் அமைந்துள்ள  இரவு விடுதி  ஒன்றினுள் நேற்று இரவு புகுந்த ஒரு குழுவினர், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர்.

அத்தோடு குறித்த விடுதிக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர்களின் தாக்குதல் காரணமாக இரவு நேர விடுதியின் பாதுகாப்பாளர் தற்போது வரை அவசர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

ஜீவன் பிரேமதாஸ என்ற நபரே இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரவு நேர விடுதியிற்கு வருகை தந்த குழுவினரில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவருடன் வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Dhama-sirisena-night-club-attack-.jpg

Dhama-sirisena-night-club-attack-1-1-768

Dhama-sirisena-night-club-attack-1-2-768

Dhama-sirisena-night-club-attack-1-3.jpg

http://www.virakesari.lk/article/12237

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள். மைத்திரியை பார்க்க அப்படி தெரியவில்லை ஆனால் மகன் தந்தைக்கு ஆப்பு அடிப்பான் போல கிடக்கு.

https://www.colombotelegraph.com/index.php/exclusive-cctv-video-footage-of-daham-sirisena-led-mob-attack-on-clique-night-club/

  • தொடங்கியவர்
‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’
 
 

article_1476079595-wimal-weerawansa.jpgகொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள பிரபல்யமான இரவு கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற அட்டாகசம் தொடர்பில், ஊடகங்கள் மௌனமாகவே இருக்கின்றன. இதுவா ஊடக சுதந்திரம் எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, சிறிசேனவின் மகனே இந்தத்தாக்குதலை மேற்கொண்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.  

முன்னாள் ஜனாதிபதியின் மகன்மார், இரவு விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும், எனினும் அவர்கள், ஒவ்வொருநாளும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊடக சுதந்திரம் இருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. அந்த கேளிக்கை விடுதிக்கு அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவுடன் சென்றே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

சம்பவத்தில் காயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின், விபத்துச் சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு அதிமுக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தோர் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில், சனிக்கிழமை நடத்திய, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/183624/-ச-ற-ச-னவ-ன-மகன-த-க-க-ன-ர-

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவம்ச உண்மையைச் சொன்னாலும் நம்ப முடியாது. :(

  • தொடங்கியவர்

கொழும்பு நகரமண்டபத்தில் உண்மையில் நடந்ததது என்ன ? வெளியானது புது தகவல்

 

 

கொழும்பு நகரமண்டப பகுதியில் அமைந்திருக்கும் பிரபல இரவு களியாட்ட விடுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து இணையத்தளங்களில் பரவி வருகின்ற செய்திகள்  உண்மைக்கு புரம்பானவை என அவ் இரவு களியாட்ட விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது முக்கிய அரசியல்வாதி  ஒருவரின் மகன் வருகை தந்திருந்ததாக பரவி வருகின்ற செய்திகள் பொய்யானவை என்றும் இவ்வாறான செய்திகளினால் தங்களின் நிறுவனத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றவேளையில் தானும் கடமையில் இருந்ததாகவும் அச்சமயத்தில் பிரபல அரசியல்வாதியி ஒருவரின் மகன் வரவில்லை என்று உறுதியாக கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

hhh.jpg

2016-10-10_at_13-39-22.png

http://www.virakesari.lk/article/12258

  • கருத்துக்கள உறவுகள்

 எதையும் நம்ப முடியவில்லை. தனது மக்கள் படும் அலைச்சல் தாங்காது, மைத்திரியின் மகனை வஞ்சசகமாக மாட்டியிருக்கலாம். அல்லது அதிகாரம் இவரையும் ஆட வைத்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். 

001.png

என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த வீடியோ மட்டும் பழசு போல இருக்குது - திகதிகளைப் பாக்க.
27ம் திகதி ஜனவரி 2010இல எடுத்தது போலிருக்கே.

யாம் அறியோம் பராபரமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.