Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த சிங்களவர்களை நெளிய வைக்கிறதா, சிவா சேனா ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சிங்களவர்களை நெளிய வைக்கிறதா, சிவா சேனா ஆதரவு.

வவுனியாவில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால், (இலங்கை)  சிவ சேனை என்னும் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டு இருந்தது.

இது தொடர்பாக அறவிப்பு வந்தபோது இலங்கையில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் மும்பாயினை தலைமையிடமாக கொண்ட  மத்திய அரசின் பிஜேபி கட்சியின் சக்தி மிக்க, இந்திய சிவ் சேனா அதற்கு ஆதரவு தெரிவித்தவுடன், சிறிது அதிர்வு அலைகள் உண்டாகி உள்ளது போல தெரிகிறது.

இலங்கை சிவா சேனை, தீவின் முதன்மை மதமான பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்து மதத்தினை காக்க போராடக் போவதாக அறிவித்து உள்ளதால், 'உலகெங்கும் உள்ள இந்துக்களின் நலனை பாதுகாக்க நாம் முனைப்புடன் உள்ளதால், சிவ சேனைக்கு, எமது ஆதரவு இருக்கும் என்று சிவ் சேனா தலைவர் சஞ்சய் ராவட் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசின் உதவியுடன் பெரும் பௌத்த குடியேற்ற வாதம் நடைபெறுவது மட்டுமின்றி, முஸ்லீம், கிறிஸ்தவ அமைப்புகள் கூட வெளிநாட்டுப் பணம் கொண்டு தமது மதங்களைத் இந்துக்கள் மீது திணிக்கின்றன என்ற ஆதங்கத்தினை  இலங்கை சிவ சேனை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. சகல மதங்களும் சேர்ந்து இந்து மதத்தினை நசுக்க முனைவதால்,  இலங்கை சிவ சேனை அமைப்பு இந்து மதத்தினை காக்க தொடஙக்கப் பட்டுள்ள நிலையில், இந்திய சிவ் சேனா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஆளும் இரு முக்கிய கட்சி தலைமைகள் மட்டுமின்றி, தமிழர் கூட்டமைப்பின் தலைமை கூட இந்த புதிய அமைப்பு குறித்து உன்னிப்பாக கவனிக்கிறார்களாம்.

 பின் குறிப்பு: இந்த மறவன்புலவு சச்சிதானந்தன் இந்தியாவில் குடி பெயர்ந்து வாழ்ந்து, அண்மையில் திரும்பியவர் என்ற வகையில்..... அவரது அமைப்பு.... சிலருக்கு குடைச்சலை தருவதில் வியப்பில்லை... ((அப்படிப் போடணும் அரிவாளை))

http://www.dailymirror.lk/article/Shiv-Sena-in-India-to-support-Sri-Lankan-Siva-Senai-117441.html

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனவுக்கு வேலை வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

மறவன் புலவு சச்சிதானந்தனின்..... இனப் பற்றும், மொழிப்பற்றும் .... என்றும் எம்மால், போற்றப்பட வேண்டியது. சந்தேகமில்லை... நல்ல மனிதர்.
ஆனால்.... இந்திய சிவசேனாவின் ஆதரவை இவர் பெறுவது சரியல்ல. ஆபத்தானதும் கூட.
ஏனென்றால்.... புலிகள் போராட்டத்தில் ஆரம்பத்தில்  முன்நிலை வகித்த காலத்தில், 
சிவா சேனாவின் அப்போதைய தலைவர், காலம் சென்ற  பால் தாக்கரே அவர்கள்... புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்... வந்த சிவசேனாவின், தலைவர்கள் புலிகளுக்கோ... ஈழத்தில் இந்துக் கோவில்களை அழிக்கும் போதோ.... 
அந்த மக்கள், சிங்கள இராணுவத்தால்... கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போதோ... 
ஒரு அனுதாபமும் தெரிவிக்காமல்,  வேடிக்கை பார்த்த அமைப்பு அது.

அது இப்ப... வந்து, தெரிவிக்கும் ஆதரவு.... மத முறையில், எம்மை மேலும் பாதிக்கும். என்பதே என் அபிப்பிராயம்.
அன்றும், இன்றும்  கூட... இந்தியாவில் (தமிழ்நாட்டில்) உள்ள... இந்து முன்னணியின் தலைவர் இராம கோபால கிருஷ்ணன் போன்றவர்கள், ஈழத்து தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையே... வைத்து, சிங்களவருக்கு ஆதரவாக உள்ளார்கள். 
என்னைப் பொறுத்தவரையில்... இவர்களுக்கு நாம், இராவண  அசுரர்கள்.... அவர்கள் இராம  தேவர்கள் என்ற நினைப்பு.:mellow:  

இதனை... கூத்தமைப்பின் தலைமை, உன்னிப்பாக அவதானிக்குது என்றது தான்... பகிடியின் உச்ச(சா)க்    கட்டம். :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

எனது பின்குறிப்பின் உள்கருத்தை பார்க்கவில்லையோ?

அவர் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அம்பு. எய்தவர் அல்லது எய்தது யாரோ....?  

அதுவே சிங்களவர் கரிசனைச்கான காரணம்.

இராவணன் போயாச்சு. நாம ராமன் விட்டுப் போன மிச்ச ஆக்கள். சிவசேனா!! :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

எனது பின்குறிப்பின் உள்கருத்தை பார்க்கவில்லையோ?

அவர் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அம்பு. எய்தவர் அல்லது எய்தது யாரோ....?  

அதுவே சிங்களவர் கரிசனைச்கான காரணம்.

பார்த்தேன்.... நாதமுனியர்,
சபை நாகரிகம் கருதி, அந்த சம்பந்தப் படாத தலைவரின் பெயரை எழுதவில்லை.
2016´ம்  ஆண்டு  முடிவதற்குள்...   அவரின் பெயர், தமிழ் உலகம்... அகில உலகம், அண்ட.... ஆகாச உலகம்  எல்லாம்.... 
தெரிய வரும், அந்த வாழ் நாள் சாதனையாளரின் பெயரை நீங்கள் அறிவீர்கள்.

அவர், சிங்கிளாக நின்று,,, சிங்கக் கொடியை காட்டி,  சமாதானத்துக்கான,
முதல்.... முத்தல் விதையை,  ஊன்றியமைக்காக... 2017´ம் ஆண்டு நோ(பல்) பரிசும் கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது.

Edited by தமிழ் சிறி

இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கியதில் உடன்பாடில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி

இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
தொல்.திருமாவளவன்
Image caption
தொல்.திருமாவளவன்
இன்று பிபிசி தமிழோசைக்கு வந்து பேஸ்புக் நேரலை வாயிலாக பேட்டி அளித்த திருமாவளவன்,  இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.
''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை  முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.
1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்
தமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.
முன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை
மேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தோழமை தழைத்தோங்குகிறது
இறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவனின் பேஸ்புக் நேரலை காணொளியை முழுமையாக பார்க்க

http://www.bbc.com/tamil/india-37657214

6 hours ago, தமிழ் சிறி said:

மறவன் புலவு சச்சிதானந்தனின்..... இனப் பற்றும், மொழிப்பற்றும் .... என்றும் எம்மால், போற்றப்பட வேண்டியது. சந்தேகமில்லை... நல்ல மனிதர்.

இவர் ஒரு மதவாதி, இனவாதி இல்லை. இவரை ஆன்மீகவாதி, இனப்பற்றாளன் என்று சொல்லலாம்.

சச்சிதானந்தன் கதைத்து, அறிக்கைகள் விட்டு காலத்தை கடத்திய மனிதர் அல்ல. சச்சிதானந்தன் தனக்கென்று ஒருவழியை தானே உருவாக்கி தமிழுக்கும், அவரது சமயத்துக்கும் ஒப்பற்ற சேவையை செய்துவருபவர். சாதனை வீரர்.

இப்படியான ஒரு சாதனையாளர் புதிதாக ஒரு அமைப்பை ஆரம்பித்த போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாமல் குறைசொல்லும் கேவலமான புத்தியில் இருந்து, கேவலமான மனநிலையிலிருந்து தமிழர் மீள வேண்டும். (உங்களை சொல்லவில்லை தமிழ்சிறி).   

6 hours ago, தமிழ் சிறி said:

புலிகள் போராட்டத்தில் ஆரம்பத்தில்  முன்நிலை வகித்த காலத்தில், 
சிவா சேனாவின் அப்போதைய தலைவர், காலம் சென்ற  பால் தாக்கரே அவர்கள்... புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்... வந்த சிவசேனாவின், தலைவர்கள் புலிகளுக்கோ... ஈழத்தில் இந்துக் கோவில்களை அழிக்கும் போதோ.... 
அந்த மக்கள், சிங்கள இராணுவத்தால்... கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போதோ... 
ஒரு அனுதாபமும் தெரிவிக்காமல்,  வேடிக்கை பார்த்த அமைப்பு அது.

மிகவும் யதார்த்தமான உண்மைகளை கூறியுள்ளீர்கள்.

மகாராஷ்டிராவில் எல்லை மீறிய முஸ்லிம்களின் அராஜகங்களுக்கு எதிராக சைவர்களின் உரிமைகளை காக்க உருவான அமைப்பே சிவசேனை. அது காலத்தின் கட்டாயமாக கூட இருந்திருந்தது.

பால்தாக்கரே தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தந்த ஒரு உன்னத மனிதர். இவர் இதனால் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆனால் தமது சமயத்தின் உரிமைகளை காக்க உருவான சிவசேனை அமைப்பையும் தலிபான் அமைப்பையும் ஒப்பிடும் சம்பந்தன் மனநிலையிலுள்ள மூடர்களின் கருத்து மேலாதிக்கத்தால் தமிழர் தரப்பு அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணவில்லை. இது நாளடைவில் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

பால்தாக்கரேயின் மரணத்தின் பின்னர் அவரின் வாரிசான உத்தம தாக்கரேயை வளைத்துப் போட்ட தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள், உத்தமதாக்கரேக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திவிட்டனர். உத்தமதாக்கரே 2010களின் ஆரம்பத்தில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் பல உல்லாசப் பயணங்களை மேற்கொண்டவர் என்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்.

தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள் அத்துடன் நிக்கவில்லை திருமாவளவன், கனிமொழி உட்பட சபல மனநிலை உடைய பலரையும் வளைத்துப் போட்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் உல்லாசப் பயணங்களை ஏற்படுத்தியிருந்ததையும் தமிழினப் பற்றாளர்கள் மறந்திருக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.... போல்.
எனக்கு... அரசியல் கொஞ்சம், கொஞ்சம்  தெரிந்தாலும், அதில்  கனக்க எழுத விரும்புவதில்லை.
முன்பு  நடந்த... பிழைகள், மீண்டும்.... நடக்கப் படாது என்பதற்காகவே   ஆரம்பத்தில் உள்ள பதிவை எழுதினேன்,

6 hours ago, தமிழ் சிறி said:

ஆனால்.... இந்திய சிவசேனாவின் ஆதரவை இவர் பெறுவது சரியல்ல. ஆபத்தானதும் கூட.

சச்சிதானந்தன் அவர்கள் RSS, VHP போன்ற அமைப்புகளை மிக நீண்ட காலமாக நன்கு அறிந்து வைத்துள்ளவர். சிலருடன் தொடர்பிலும் உள்ளவர். 2000 ஆண்டில் இவரை சந்தித்தபோதே அந்த அமைப்புக்களின் நோக்கங்களை, அவர்களின் தமிழின விரோத மனநிலைகளை, சிங்கள-பௌத்த சார்பு மனநிலைகளை தெளிவாக கூறியவர்.

சச்சிதானந்தன் அவர்களை கடந்த சிலவருடங்களாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் அவரை 1980 களின் இறுதியில் இருந்து பலதடவைகள் சந்தித்து நீண்ட நேரம் கதைத்துள்ளேன்.

எனவே அவர் நிச்சயம் அவர்கள் ஆதரவுடன் இந்த அமைப்பை தொடங்கியிருக்கமாட்டார் என நம்பலாம். மும்பை சிவசேனை அமைப்பு தாமாகவே ஆதரவை வழங்குவது அவர்கள் நல்லெண்ணமாக இருக்கலாம். ஒரு அமைப்பு தாமே ஆதரவு வழங்கும் போது அதை புறக்கணிப்பது நல்லதல்ல. ஆதரவு என்பது பலம்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் காலதாமதமாகும் போது, தமிழர்கள் சந்தித்த அழிவுகளுக்கு நீதி - நியாயம் - நிவாரணம் காலதாமதமாகும் போது, தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கள் நீங்காத போது, இது போன்ற பல அமைப்புகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை கிலி கொண்ட அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாளடைவில் சீனா ஆதரவு அமைப்புகளும் தமிழர் பகுதிகளில் உருவாகும் சாத்தியம் அதிகமாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட வருடங்களின் பின், தாயகம் திரும்பியுள்ள ... ஐயா அவர்களைப் பற்ரி,
நாம் பொது   வெளியில், விவாதிப்பது அழகல்ல.
எதற்கும்...  அவரின், இலங்கை   வருகை.... காலத்தின்  தேவையானது.

பா. ஜா. க. வின்  செக் மேட்  போர்,  நம்ம   எ.க. தலைவர்.  55.gif164.gif55.gif

Edited by தமிழ் சிறி

11 hours ago, தமிழ் சிறி said:

மறவன் புலவு சச்சிதானந்தனின்..... இனப் பற்றும், மொழிப்பற்றும் .... என்றும் எம்மால், போற்றப்பட வேண்டியது. சந்தேகமில்லை... நல்ல மனிதர்.
ஆனால்.... இந்திய சிவசேனாவின் ஆதரவை இவர் பெறுவது சரியல்ல. ஆபத்தானதும் கூட.
ஏனென்றால்.... புலிகள் போராட்டத்தில் ஆரம்பத்தில்  முன்நிலை வகித்த காலத்தில், 
சிவா சேனாவின் அப்போதைய தலைவர், காலம் சென்ற  பால் தாக்கரே அவர்கள்... புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்... வந்த சிவசேனாவின், தலைவர்கள் புலிகளுக்கோ... ஈழத்தில் இந்துக் கோவில்களை அழிக்கும் போதோ.... 
அந்த மக்கள், சிங்கள இராணுவத்தால்... கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போதோ... 
ஒரு அனுதாபமும் தெரிவிக்காமல்,  வேடிக்கை பார்த்த அமைப்பு அது.

அது இப்ப... வந்து, தெரிவிக்கும் ஆதரவு.... மத முறையில், எம்மை மேலும் பாதிக்கும். என்பதே என் அபிப்பிராயம்.
அன்றும், இன்றும்  கூட... இந்தியாவில் (தமிழ்நாட்டில்) உள்ள... இந்து முன்னணியின் தலைவர் இராம கோபால கிருஷ்ணன் போன்றவர்கள், ஈழத்து தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையே... வைத்து, சிங்களவருக்கு ஆதரவாக உள்ளார்கள். 
என்னைப் பொறுத்தவரையில்... இவர்களுக்கு நாம், இராவண  அசுரர்கள்.... அவர்கள் இராம  தேவர்கள் என்ற நினைப்பு.:mellow:  

இதனை... கூத்தமைப்பின் தலைமை, உன்னிப்பாக அவதானிக்குது என்றது தான்... பகிடியின் உச்ச(சா)க்    கட்டம். :grin:

எமது வரலாற்றில் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் என வேறுபாடில்லை, ஆனால் ஐயா அதை உருவாக்க முயல்கிரர் அது தவறு. இவருடைய முழு முயற்சியும் வடக்கு மாகாணத்தில் நடக்கும் இஸ்லாமிய மயமாக்ககுக்கு எதிராகவே இருக்க வேண்டும்.

இவர் முதலில் செய்ய வேண்டுவது தமிழ் மக்கள் அனைவரையும் இன்றுதிரட்டி  முஸ்லீம் வியாபாரங்களை புறக்கணிக்க சொல்ல வேண்டும்

அடாத்தாக கள்ள காணி புடித்த முஸ்லீம் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கீழ்த்தரமான தமிழ் சமூகமொன்றை உருவாக்க இந்திய அரசாங்கத்தின் மறைமுகத் திட்டம்!

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சிவசேனாக் கட்சி அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இந்திய அரசாங்கத்தினால் மறைமுகமாக இந்து தத்துவத்தைத் திணித்து மக்களுக்குள் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பலரும் தமது கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் இனவிடுதலைக்காக போராடும் மக்களுக்கு சாதி வெறியைத் தூண்டி தங்களுக்குள் தாங்களே மோதிக்கொள்ளும் கீழ்த்தரமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கே இந்திய அரசாங்கம் மறைமுகமாக இதனைச் செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் கருத்துத் தெரிவிக்கும்போது,

இதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் அடையாத்தை வைத்தே போராட்டத்தை நடாத்தினார். இந்து தத்துவக் கொள்கையை வைத்து அவர் போராட்டம் நடாத்தவில்லை.

இந்த இந்து தத்துவக் கொள்கையால் தமிழ் நாட்டில் மாத்திரம் 1700 வன் கொடுமைகள் நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=44726

2 hours ago, Dash said:

எமது வரலாற்றில் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் என வேறுபாடில்லை, ஆனால் ஐயா அதை உருவாக்க முயல்கிரர் அது தவறு. இவருடைய முழு முயற்சியும் வடக்கு மாகாணத்தில் நடக்கும் இஸ்லாமிய மயமாக்ககுக்கு எதிராகவே இருக்க வேண்டும்.

இவர் முதலில் செய்ய வேண்டுவது தமிழ் மக்கள் அனைவரையும் இன்றுதிரட்டி  முஸ்லீம் வியாபாரங்களை புறக்கணிக்க சொல்ல வேண்டும்

அடாத்தாக கள்ள காணி புடித்த முஸ்லீம் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

உங்கள் பங்குக்கு அதை நீங்களே செய்யுங்கள். கடைசிக்காலத்தில் விலாசம் பெற அவரும்  தன்  பங்குக்கு யாருக்காகவோ ஏதோ  செய்கிறார். அவர் உங்கள் சொல்லை கேட்டு செய்யப்போவதில்லை. மாறி மாறி ஒவ்வொரு இனமும் இன்னொன்றிற்கு எதிராக கோழிச்சண்டை பிடிக்கட்டும். அதிகாரத்தை உள்ளவர் உங்களை இயக்கியபடி தங்கள் அதிகாரங்களை மேலும் மேலும் வலுப்படுத்தட்டும். இவற்றிக்கு எதிராக மானுட விடுதலைக்காக போரிடுபவர்கள் என்றோ ஒருநாள் வெற்றிகொள்வதும் உறுதி. 

7 hours ago, போல் said:

மிகவும் யதார்த்தமான உண்மைகளை கூறியுள்ளீர்கள்.

மகாராஷ்டிராவில் எல்லை மீறிய முஸ்லிம்களின் அராஜகங்களுக்கு எதிராக சைவர்களின் உரிமைகளை காக்க உருவான அமைப்பே சிவசேனை. அது காலத்தின் கட்டாயமாக கூட இருந்திருந்தது.

பால்தாக்கரே தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தந்த ஒரு உன்னத மனிதர். இவர் இதனால் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆனால் தமது சமயத்தின் உரிமைகளை காக்க உருவான சிவசேனை அமைப்பையும் தலிபான் அமைப்பையும் ஒப்பிடும் சம்பந்தன் மனநிலையிலுள்ள மூடர்களின் கருத்து மேலாதிக்கத்தால் தமிழர் தரப்பு அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணவில்லை. இது நாளடைவில் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

பால்தாக்கரேயின் மரணத்தின் பின்னர் அவரின் வாரிசான உத்தம தாக்கரேயை வளைத்துப் போட்ட தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள், உத்தமதாக்கரேக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திவிட்டனர். உத்தமதாக்கரே 2010களின் ஆரம்பத்தில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் பல உல்லாசப் பயணங்களை மேற்கொண்டவர் என்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்.

தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள் அத்துடன் நிக்கவில்லை திருமாவளவன், கனிமொழி உட்பட சபல மனநிலை உடைய பலரையும் வளைத்துப் போட்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் உல்லாசப் பயணங்களை ஏற்படுத்தியிருந்ததையும் தமிழினப் பற்றாளர்கள் மறந்திருக்க முடியாது.  

இலங்கை தமிழ்  இந்துக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது கிடையாது. அவர்கள் புத்த மதத்துக்கும் மாறுவது கிடையாது. ஆனால் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்படுகிறார்கள். மதம் மாறிய புலம்பெயர்ந்த தமிழ் இந்துக்கள் சென்ற வருடம் யாழ்ப்பாண கிராமமொன்றில் பெரிய அளவில் நத்தார் கொண்டாட்டங்களை ஏற்பாடுசெய்ய அதை வெளியூரிலிருந்து காவிஉடையில் வந்த RSS அமைப்பு குழப்பியடித்தது. அவர்களின் கருத்துப்படி கிறித்தவம் தான் முதல் எதிரி. இப்போது உருவான சிவசேனாவின் நிலைப்பாடும் அதுதான் என்பதை விரைவில் காண்பீர்கள்.  
அப்போது உங்கள் கருத்து என்ன.
இந்தியாவில் சிவசேனா முலீம்களுக்கு எதிரானது என்று புளகாங்கிதம் அடையும் நீங்கள் அவர்கள் தலித்துகளுக்கும் எதிரானவர்கள் என்பதையும் பெருமையுடன் ஏற்றுகொள்கிறீர்களா. இலங்கையில் உள்ள இந்து தலித்துகள் தான் வெள்ளையர் ஆடசியில் கத்தோலிக்கர் ஆனவர்கள். எனவே தலித்துகளை எதிர்ப்பதும் கத்தோலிக்கரை எதிர்ப்பது ஒன்றுதான். உங்களை சிவசேனா ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் திருட்டுத்தனமாக மீண்டும் இந்துவாக மாறினால் ஒழிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னென்பா உது....

கிண்ணியா, கொக்கிளாய், நாகீதீப ஆகும் நயினாதீவு, இரணைமடு, முறிகண்டி, கிழக்கில் பல என தீவிர பெளத்தமயமாக்கல் நடக்கிறது.

இங்க எழுதுபவர்கள் எல்லாம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று ஏதோதோ சொல்கிறார்கள். கிறிஸ்தவமும், இஸ்லாமும் மதம் மட்டுமே.

பெளத்தம்... சிங்களத்துடன் வரும் பேராபத்து. நீர்கொழும்பு, புத்தளம் என மேற்குக் கரையோரங்களில் செறிந்து வாழ்ந்த தமிழர்கள் இந்த பேராபத்தால், சிங்களவராகி விட்டனர்.

நாளை இந்துக்க்களூம், இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் சிங்கள பெளத்தராக மாறினால், சிங்களத்துக்கு தலைவலியே இல்லை.

அதற்கான வேலைத்திட்டமே நடக்கிறது.

7 hours ago, போல் said:

மிகவும் யதார்த்தமான உண்மைகளை கூறியுள்ளீர்கள்.

மகாராஷ்டிராவில் எல்லை மீறிய முஸ்லிம்களின் அராஜகங்களுக்கு எதிராக சைவர்களின் உரிமைகளை காக்க உருவான அமைப்பே சிவசேனை. அது காலத்தின் கட்டாயமாக கூட இருந்திருந்தது.

பால்தாக்கரே தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தந்த ஒரு உன்னத மனிதர். இவர் இதனால் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆனால் தமது சமயத்தின் உரிமைகளை காக்க உருவான சிவசேனை அமைப்பையும் தலிபான் அமைப்பையும் ஒப்பிடும் சம்பந்தன் மனநிலையிலுள்ள மூடர்களின் கருத்து மேலாதிக்கத்தால் தமிழர் தரப்பு அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணவில்லை. இது நாளடைவில் தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன ஹிந்திய பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

பால்தாக்கரேயின் மரணத்தின் பின்னர் அவரின் வாரிசான உத்தம தாக்கரேயை வளைத்துப் போட்ட தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள், உத்தமதாக்கரேக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திவிட்டனர். உத்தமதாக்கரே 2010களின் ஆரம்பத்தில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் பல உல்லாசப் பயணங்களை மேற்கொண்டவர் என்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்.

தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டிருக்கும் ஹிந்திய பயங்கரவாதிகள் அத்துடன் நிக்கவில்லை திருமாவளவன், கனிமொழி உட்பட சபல மனநிலை உடைய பலரையும் வளைத்துப் போட்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விருந்தினராக இலங்கையில் உல்லாசப் பயணங்களை ஏற்படுத்தியிருந்ததையும் தமிழினப் பற்றாளர்கள் மறந்திருக்க முடியாது.  

இன்னொரு விடயமும்சொல்லவேண்டும். முஸ்லீம்கள் இந்தியாவில் சிறுபான்மையினர். அவர்கள் என்ன பெரும்பான்மைக்கெதிராக என்ன அட்டொழியம் செய்து சிவசேனா உருவானது என்பதை விளக்குவீர்களா? வேறொன்றுமில்லை வர்த்தகத்தில் அவர்களுடன் போட்டி போடமுடியாதவர்கள் இந அடிப்படையில் சலுகை கேட்டு சிவசேனாவை உருவாக்கினார்கள். இதே காரணத்துக்காகத்தான் ஹிட்லர் யூதர்களை அழித்தான். அதே காரணத்தால்தான் தனது தலைநகரில் தமிழர்கள் பொருளாதார ஆதிக்கம் செலுத்துவதை சகிக்காமல்தான் சிங்கள இனவாதிகள் கொழும்பில் கலவரம் செய்தனர். இதெல்லாம் சரி என்றால் முஸ்லீம்கள் தமிழ் பகுதிகளை வியாபாரம் செய்வதை எதிர்ப்பதும் சரிதான். தொடருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவனை தமிழன் ஊர் பூரா புத்த கோவில் அமைக்கிறதை இன்னும் தீவிரப்படுத்தும். உந்த சிவசேனா கோமாளிங்க.. இவ்வளவு காலமும் ஈழத்தில் இந்து மக்கள் அழிக்கப்பட்ட போது கோவில்கள் அழிக்கப்பட்ட போது எங்க போய் பதுங்கிக் கிடந்தவை. அதுக்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கிய பாஜக வை.. காங்கிரஸை ஒரு கேள்வியும் கேட்டதில்லையே.

இது ஹிந்திய வல்லாதிக்கம்.. தமிழ் மக்களின் இருப்பை ஈழத்தீவில் இன்னும் இன்னும் சிதறடிக்க மேற்கொள்ளும்.. ஒரு தந்திரமாகும். பிரிவினை வாதத்தை ஊட்டி.. ஆயுதப் போராட்ட விருப்பை திணித்து.. தமிழ் மக்களை சிதறடித்து தன் நலனை பாதுகாத்துக் கொண்ட ஹிந்திய வல்லாதிக்கம்.. இப்போ அதற்கு மாற்றீடாக மதவாதத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.:rolleyes:

11 minutes ago, hasan said:

இன்னொரு விடயமும்சொல்லவேண்டும். முஸ்லீம்கள் இந்தியாவில் சிறுபான்மையினர். அவர்கள் என்ன பெரும்பான்மைக்கெதிராக என்ன அட்டொழியம் செய்து சிவசேனா உருவானது என்பதை விளக்குவீர்களா? வேறொன்றுமில்லை வர்த்தகத்தில் அவர்களுடன் போட்டி போடமுடியாதவர்கள் இந அடிப்படையில் சலுகை கேட்டு சிவசேனாவை உருவாக்கினார்கள். இதே காரணத்துக்காகத்தான் ஹிட்லர் யூதர்களை அழித்தான். அதே காரணத்தால்தான் தனது தலைநகரில் தமிழர்கள் பொருளாதார ஆதிக்கம் செலுத்துவதை சகிக்காமல்தான் சிங்கள இனவாதிகள் கொழும்பில் கலவரம் செய்தனர். இதெல்லாம் சரி என்றால் முஸ்லீம்கள் தமிழ் பகுதிகளை வியாபாரம் செய்வதை எதிர்ப்பதும் சரிதான். தொடருங்கள். 

முஸ்லிம்களின் அட்டூழியங்கள் உலகறிந்தது! இந்தியாவில் முஸ்லிம்களின் அட்டூழியங்களை சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விருப்பவில்லை. இது வியாபாரம் சம்பந்தமற்றது.

இலங்கையில் முஸ்லிமகளின் முக்கிய வியாபார யுக்தி கடத்தல், திருட்டு வியாபாரம்!
அதை அடக்க நினைத்தால் சில தினங்கள் போதும்.
சட்டரீதியாக சொத்துக்களையும் இலகுவில் பறிமுதல் செய்துவிடலாம்.

36 minutes ago, hasan said:

இலங்கை தமிழ்  இந்துக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது கிடையாது. அவர்கள் புத்த மதத்துக்கும் மாறுவது கிடையாது. ஆனால் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்படுகிறார்கள். மதம் மாறிய புலம்பெயர்ந்த தமிழ் இந்துக்கள் சென்ற வருடம் யாழ்ப்பாண கிராமமொன்றில் பெரிய அளவில் நத்தார் கொண்டாட்டங்களை ஏற்பாடுசெய்ய அதை வெளியூரிலிருந்து காவிஉடையில் வந்த RSS அமைப்பு குழப்பியடித்தது. அவர்களின் கருத்துப்படி கிறித்தவம் தான் முதல் எதிரி. இப்போது உருவான சிவசேனாவின் நிலைப்பாடும் அதுதான் என்பதை விரைவில் காண்பீர்கள்.  
அப்போது உங்கள் கருத்து என்ன.
இந்தியாவில் சிவசேனா முலீம்களுக்கு எதிரானது என்று புளகாங்கிதம் அடையும் நீங்கள் அவர்கள் தலித்துகளுக்கும் எதிரானவர்கள் என்பதையும் பெருமையுடன் ஏற்றுகொள்கிறீர்களா. இலங்கையில் உள்ள இந்து தலித்துகள் தான் வெள்ளையர் ஆடசியில் கத்தோலிக்கர் ஆனவர்கள். எனவே தலித்துகளை எதிர்ப்பதும் கத்தோலிக்கரை எதிர்ப்பது ஒன்றுதான். உங்களை சிவசேனா ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் திருட்டுத்தனமாக மீண்டும் இந்துவாக மாறினால் ஒழிய

இது உங்கள் தப்புக்கணக்கு!
இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை.

இலங்கை வவுனியாவில் சிவசேனை

- மாலன்

இலங்கை வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பு தோன்றியுள்ளது என இன்றைய நMalan-5ாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.இந்துக்களை மற்ற மதத்தினரிடமிருந்து பாதுகாக்கவும்,. மதமாற்றத் தடைச் சட்டம் கோரி இயக்கம் நடத்தப் போவதாகவும் அது அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இந்த்ராஃப் என்ற ஓர் அமைப்பு உருவானது. இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதற்கு எதிராக போராட அந்த அமைப்பு உருவான போது அறிவிக்கப்பட்டது.

அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது அங்கு இந்துக் கோயில்கள் பெருகி வருவதைக் குறித்துப் பே...சக் கேட்டேன். இளம் பெண்கள் முறை வைத்துக் கொண்டு நாயன்மார்கள் குறித்துக் கோயில்களில் உரை நிகழ்த்துவது பற்றியும் அறிந்தேன்

. இந்தச் செய்தி சில சிந்தனைகளை கிளறுகிறது.

1.தமிழகத்திற்கு அப்பால் இதுகாறும் தமிழைத் தங்கள் அடையாளமாகக் கருதி வந்த தமிழர்கள் இப்போது மதத்தைத் தங்கள் அடையாளமாக முன்னிறுத்த முற்படுகிறார்களா?

2. எல்லா இந்துக்களும் தமிழர்கள் அல்லர், எல்லாத் தமிழர்களும் இந்துக்கள் அல்லர் என்ற யதார்த்தத்தை இது எப்படி பாதிக்கும்?

3. ஒரு கால கட்டம் வரை தமிழக திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு இலங்கைத் தமிழ்க் கடசிகளின் மீது படர்ந்திருந்தது உண்டு. இப்போது அந்தச் செல்வாக்கு மங்கிவிட்டது. அந்த இடத்தை இந்திய இந்துத்வ சக்திகள் நிரப்ப முற்படுகின்றனவா?

4. ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம், அதிலிருந்து பிரிந்த அமைப்புகள், விசிக, மதிமுக போன்ற அமைப்புக்கள் ஆதரவளித்து வந்துள்ளன. அவை இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கின்றன?

5.விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் இருந்த போது முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துன்பியல் சம்பவம் நடந்தது. மதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள் வடக்கு -கிழக்கு பிராந்தியங்களிடையே உறவு ஏற்பட குந்தகமாக அமையுமா?

6.யாழ்ப்பாண சமூகத்தில் நேரடியாக வாழ்ந்து அனுபவம் பெற்றதில்லை என்ற போதும், டேனியல், தளையசிங்கம், அகஸ்தியர் போன்றவர்களின் எழுத்தின் மூலமும், எஸ்.பொ. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் போன்ற இலங்கை எழுத்தாளர்களுடனான தனி உரையாடல்கள் வழியேயும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஜாதியத்தின் ஆதிக்கம் பற்றி அறிந்திருக்கிறேன். இந்து மதத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அம்சமாக ஜாதி இருக்கும் நிலையில், இந்த அரசியல் முன்னெடுப்பு யாழ்ப்பாணத்தை 83க்கு முற்பட்ட காலத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் வாய்ப்புண்டா?

நண்பர்கள் எனக்குத் தெளிவூட்டக் கேட்டுக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எதென்றாலும் பெரிய  தடி கிடைத்தால்...

அடிச்சு பார்ப்பதில் தமிழன் ஒன்றையும் இழந்துவிடப்போவதில்லை...

Edited by விசுகு

ஈழத்தில் தமிழர்களாக உள்ள சைவர்கள்/இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரித்து இலாபம் அடையலாம் என்று கனவு காண்பவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஆபத்தில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்து ஓரினமாகவே பயணித்துள்ளனர். சந்தர்ப்பரவாத சக்திகளால் சேனைகளைக் காட்டி இந்த உறவை பிரிக்க முடியாது. 

On ‎15‎/‎10‎/‎2016 at 8:11 AM, hasan said:

...இவற்றிக்கு எதிராக மானுட விடுதலைக்காக போரிடுபவர்கள் என்றோ ஒருநாள் வெற்றிகொள்வதும் உறுதி. 

சிரியாவில் மனித தலைகளை வெட்டிப் புனிதப் போர் செய்யும் இஸ்லாமியக் காட்டுமிராண்டிகளின் மானுட விடுதலை நிச்சயம் ஒரு நாள் வெல்லும்.

குரான்9:5

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

43 minutes ago, Alternative said:

மானுட விடுதலை என்பது இன மத பிரதேச தேச அடையாளங்களை விலங்குகளாக பயன்படுத்தி தங்கள் அதிகாரங்களை தக்கவைத்திருக்கும் சக்திகளுக்கெதிரான போராடமே. இன மத போராட்டங்கள் ஆளும் வர்க்கம் அப்பாவி மக்களில் அதிகாரம் செலுத்த உதவுமே தவிர அவர்களை விடுதலை செய்யாது. எல்லா மதங்களும் ஒருகாலத்தில் தேவையாக இருந்தபோதும் இன்று பிற்போக்கானதும் ஆளும் வர்க்கம் மக்களை மந்தைகளாக வைத்திருக்க தேவையான அற்புதமான கருவியாகவே பயன் படுத்தப்படுகிறது. 

மதங்களுக்காகவும் இனங்களுக்காகவும் சாதிகளுக்காகவும் ஏன் நாட்டுக்காகவும் போரிடுவது எங்களை நாங்களே அதிகார வர்க்கத்திடம் பலிகொடுக்கும் செயலே. மாறி மாறி மதங்களுக்கும் இனங்களுக்கும் எதிராக பேசி உங்கள் தலையில் மண்ணை வாரி இரைக்காதீர் 

32 minutes ago, hasan said:

உங்களது கருத்து முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. மதங்கள் மக்களை மந்தைகளாக வைத்திருக்க தேவையான அற்புதமான கருவியாகவே பயன் படுத்தப்படுகிறன என்று விட்டு பின் மதங்களுக்கு எதிராக பேசி உங்கள் தலையில் மண்ணை வாரி இரைக்காதீர் என்று முடித்திருக்கிறீர்கள்.

ஏதாவது எழுத வேண்டும் என்பற்காக எழுதினால் இப்படித் தான் முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.