Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

Featured Replies

யாழ்ப்பாணத்தின்  தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர்  பசில்  காலமானார். இவர் சென்றகிழமை வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார்.

இவரது மனையிவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து  மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர் நிலை வகிக்கும் பலரும்  புலம்பெயர் தேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பவர்களில்  பலரும் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இழப்பு  யாழ். கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

http://thuliyam.com/?p=44882

  • கருத்துக்கள உறவுகள்

14708335_1090069751028893_940473941430091887_n.jpg?oh=20042788f9f433b9aebce28b1dc7ac9f&oe=589D36B8

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தின் கொள்கை காரணமாக பறிபோன யாழின் புகழ்பூத்த வணிக ஆசானின் உயிர்!

இத்தனை தொழில்நுட்ப ,விஞ்ஞான வளர்ச்சிக்காலத்திலும் இப்படியானா மதம் சார்ந்த செயற்ப்பாடுகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஏன் தலை சாய்த்தது ,ஏன் உடந்தையாக இருந்தது என்ற கேள்விகள் எழுகின்றது ...

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 


மேலதிக சிகிச்சைக்காக பசில் ஆசிரியருக்கு குருதியேற்ற முற்பட்ட வேளை அங்கு நின்ற அவரின் மத காரர்களால் தமது மதத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு குருதி ஏற்ற விடாது தடுத்ததாக தெரியவருகிறது.


இதன்காரணமாக ஒரு சிறந்த ஆசிரியரின் உயிர் பறிபோய்விட்டது.
இவ்வாறான மதத்தின் மூடநம்பிக்கைகளால் இன்னும் பல உயிர்கள் இழக்கப்படலாம்.

இத்தனை தொழில்நுட்ப ,விஞ்ஞான வளர்ச்சிக்காலத்திலும் இப்படியானா மதம் சார்ந்த செயற்ப்பாடுகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஏன் தலை சாய்த்தது ,ஏன் உடந்தையாக இருந்தது என்ற கேள்விகள் எழுகின்றது .

மதம் மனிதனை நல்வழிப்படுத்துவதற்கே அன்றி  உயிரை எடுக்க அல்ல.இனியாவது திருந்துங்கள்.

http://tamilsguide.com/blog/srilanka-news/2039

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வலலாறில் பல பிரபல கல்வியாளர்கள், விபத்தில் மரணிக்கிறார்கள்.

எனது டாக்டர் அக்கா சொல்லுவார். தான் விலங்கியல் ஆர்வத்துடன் கற்க காரணமான Stephan எனும் பிரபல ரியூசன் மாஸ்டர் விபத்தில் மரணித்தார் என்று.

அதே போல் காரில் போய்க் கொண்டிருந்த பல்கலைக் கழக பேராசான், செல்வநாயகம், பக்கத்தில் கம்பிகளுடன் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிலின் முடிட்ச்சு அவிழ்ந்து, சரிந்து வந்த கம்பிகள் குத்தி மரணித்தார்.

வேறு சிலர் இயக்கங்களாலும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்....! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

4 hours ago, colomban said:

ஆசிரியருக்கு குருதியேற்ற முற்பட்ட வேளை அங்கு நின்ற அவரின் மத காரர்களால் தமது மதத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு குருதி ஏற்ற விடாது தடுத்ததாக தெரியவருகிறது.

அது எந்த மதம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.