Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்துவதற்கு மறுப்பு தெரிவித்தார் சீ.வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, முதல்வரை வரவேற்கும்முகமாக லண்டன் வாழ் தமிழர்களால் சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடுதலை புலிகளின் கொடி ஏந்துவதே குறித்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்துவதற்கான ஏற்பாடாக இது இருந்தால் இந்த சந்திப்பில் தான் உரையாற்றப் போவதில்லை என விக்னேஸ்வரன் குறித்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்த பின்னர், அவர்களின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் (ceylontoday) செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் தமிழ் உறவுகள் வடக்கில் முதலிடுவதற்கான ஒரு வாய்ப்பினையும் இந்த லண்டன் விஜயம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இரட்டை நகர் உடன்படிக்கை மூலம் புலம்பெயர் உறவுகளின் கணிசமான உதவிகளைப் பெற்று போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

BY Ananth Palakidnar


Chief Minister of the North C.V.Wigneswaran refused to hoist Liberation Tigers of Tamil Eelam (LTTE) flag at a meeting, organized by a group of pro-LTTE organizations, in London yesterday.


Wigneswaran was in London to sign a memorandum of understanding linking Britain's Royal Borough of Kingston City with Jaffna. The signing of that memorandum took place last Tuesday (18).


Meanwhile, a series of meetings were organized, by the Tamil expatriates in London, to welcome Chief Minister Wigneswaran. A key meeting was held in Rayners Lane yesterday where the organizers had even planned to hoist the LTTE flag, sources said.


However, Wigneswaran had told the Rayners Lane meeting organizers he would not hoist the LTTE flag and would not address the meeting if any arrangement was being made to hoist the flag. Following his refusal, the organizers dropped their plan to hoist the flag.


Meanwhile, Wigneswaran met the members of the Tamil Chamber of Commerce in London at a separate meeting a few days ago and had extensive discussion on the possibilities of launching business ventures in the Northern Province, sources said.


Nearly 100 British entrepreneurs of Lankan Tamil origin participated in the interactive programme with the Chief Minister.

www.ceylontoday.lk/

 

முட்டாள்கள் தான் இவ்வாறு சிந்திப்பது அல்லது விக்கிக்கு பிரச்சனையை உண்டுபன்னுவதுக்கு இந்த கொடி விவகாரம் இலங்கையரசால் திட்டமிட்டு  நடந்து இருக்கும் . கொடியை புலம்பெயர் தமிழர் தூக்கிபிடிப்பது வேறு விக்கி தூக்குவதும் வேறு என்பதை அறியாத முட்டாள்கள் இந்த வேலை செய்திருக்கலாம் .    

இப்படியான கூட்டங்கள் முதலில் இங்குள்ள நாடுகளில் புலிக்கு உள்ள தடையை எடுக்க முயற்ச்சி செய்ய மாட்டினம் இந்த அலப்பறை வேலைகள் மாத்திரம் செய்ய வெளிக்கிடுவினம் இப்படியானதுகளால் தான் எம்போராட்டம் சிதைக்கப்ட்டது .

26 minutes ago, spyder12uk said:

முட்டாள்கள் தான் இவ்வாறு சிந்திப்பது அல்லது விக்கிக்கு பிரச்சனையை உண்டுபன்னுவதுக்கு இந்த கொடி விவகாரம் இலங்கையரசால் திட்டமிட்டு  நடந்து இருக்கும் . கொடியை புலம்பெயர் தமிழர் தூக்கிபிடிப்பது வேறு விக்கி தூக்குவதும் வேறு என்பதை அறியாத முட்டாள்கள் இந்த வேலை செய்திருக்கலாம் .    

இப்படியான கூட்டங்கள் முதலில் இங்குள்ள நாடுகளில் புலிக்கு உள்ள தடையை எடுக்க முயற்ச்சி செய்ய மாட்டினம் இந்த அலப்பறை வேலைகள் மாத்திரம் செய்ய வெளிக்கிடுவினம் இப்படியானதுகளால் தான் எம்போராட்டம் சிதைக்கப்ட்டது .

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஏன் தவிர்த்தார் என்பது அவர்களுக்கும் தெரியும்.

தற்பொழுது புலிக்கொடி என்பது மனங்களில் வாழ்தலே தமிழர்களின் விதி.

அது ஒருநாள் பறக்கும்.

அன்று அது முதல்வரின் கைகளிலும் வீற்றிருக்கும்.

வீற்றிருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி வேசம் போடுபவர்களினாலும், போராட்டம் மௌனித்ததை  மறுத்து கனவுலகில்  வாழ்பவர்களினாலுமே  இத்தகைய  நிகழ்வு  நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, spyder12uk said:

இப்படியான கூட்டங்கள் முதலில் இங்குள்ள நாடுகளில் புலிக்கு உள்ள தடையை எடுக்க முயற்ச்சி செய்ய மாட்டினம் இந்த அலப்பறை வேலைகள் மாத்திரம் செய்ய வெளிக்கிடுவினம் இப்படியானதுகளால் தான் எம்போராட்டம் சிதைக்கப்ட்டது .

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி விவேகமான தலைவர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். அவரின் பதவிக்கு ஆப்புவைக்க நினைத்தவர்கள் ஆசைகாட்டி அவரை இங்கிலாந்துக்கு அழைத்து இதை செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறார்கள் போல தெரிகிறது. அவருக்கு உள்ளுர விருப்பம் இருந்திருந்தாலும் புலிக்கொடியை பிடிக்காமல் விட்டது அவரின் புத்திசாதுரியமான செயல்தான். இது போன்ற செயற்பாடுகள் விக்கியின் அரசியல் இருப்புக்கு கேடாகவே அமையும் என்பது ஒரு முட்டாளுக்கே புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரை பொறியில் விழுத்த போட்ட  திட்டமாகவே கருத வேண்டியுள்ளது. அவர், அவர்களின் அழைப்பை ஏற்று போகாமல் விட்டிருந்தால் வேறொரு பரப்புரை,  வியாக்கியானம் நடந்திருக்கும். சிலபேர் அவரை ஒரு அறிவு குறைந்தவராக, முட்டாளாக காட்ட முயற்சி செய்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது. திட்டம்  போட்ட அவர்களே  முட்டாள்கள் என்பதை முதல்வர்  தனது சாதுர்யத்தினால் வெளிப்படையாக சுட்டிக் காட்டிவிட்டார். இருந்தாலும் முதல்வர் புலிகளுக்கு எதிரானவர் என்றும் விவாதிக்க இடமுண்டு. எப்படியாவது முதல்வரை விழுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் அலையுது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.