Jump to content

கனடா கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் நடிகை ரம்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

floppy

உண்மை தான்... தனியன் யானைக்கு, மதம் பிடித்தால்.... ஊரையே துவம்சம் பண்ணி விடும். tw_dizzy: :grin:

சரியா

நம்ம முனிவர் மாதிரியே இருக்கே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, MEERA said:

நெடுக்கர் தயாரான முனிவரையும் குழப்பிவிடுவார் போல் உள்ளது.

ம்ம் வயது போகுது ஏதாவது வயல் ஒன்றை எடுத்து உழவி பயிரை விதைப்போம் என்று பார்த்தால் உதுகள் விடாதுகள் போல்

அதில் சிறியருக்கும், விசுகருக்கும் என்ன சந்தோசம் பாருங்கள் 

9 hours ago, விசுகு said:

சரியா

நம்ம முனிவர் மாதிரியே இருக்கே...:grin:

யோவ் இது குட்டி யானை நான் கொம்பன் யானையாக்கும்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • 4 weeks later...
Posted

கணவரை சேர்த்து வைக்கக்கோரிய நடிகை ரம்பா வழக்கு ஒத்திவைப்பு

ramba-_husband_11209.jpg

கணவர் இந்திரகுமாருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பிரபல நடிகையான ரம்பா, இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனிடையே, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/cinema/74045-kollywood-actress-rambhas-divorce-petition-adjourned.art

ரம்பா அல்வா கேட்டவர் நோட் திஸ் நியூஸ்...:grin:

Posted
On 10/25/2016 at 4:03 PM, Nathamuni said:

ஆடின பாதமும், பாடிய வாயும் சும்மா இராது என்று சும்மாவா சொன்னாங்க 

:rolleyes:

இலங்கைத்தமிழரில் திரை உலகக் காதல் கொண்டவர்களில்...

வித்யா நடிகர் விஜய்... இந்தக் காதல், விஜய் நடிக்க ஆரம்பிக்கு முன்னர் ஆரம்பித்ததால்... தப்பிப்பிழைக்கிறது.

மாதுரி என்னும் நடிகையினை, லண்டனில் இருந்து போன அரவிந்தன் கலியாணம் செய்தார். விசா கிடைக்கவில்லை.. பிரிந்து விட்டனர். அந்த நடிகையும் பின்னர் விபசார வழக்கில் சிக்கினார்.

லண்டனை சேர்ந்த முரளி என்பவர் நடிகை பானுப்பிரியாவுடன் வாழ்ந்து விலகினார்

முதல் மரியாதைக்கு படத்தில் நடித்த ரஞ்சனி என்னும் (மலேசிய ) நடிகையினை கேதீஸ் என்பவர் கட்டி, இருவருமாக வாழ்தம்ஸ்டோவ் பகுதில் ட்ராவல் agency நடத்தி... சரி வரவில்லை... பிரிந்தனர்.

நடிகை ரம்பா.... இந்திரன் இப்போது...

தகவல்களை விரல் நுனியில் வச்சிருக்கிறது எண்டால் இதுவா, சார்?! :D:

  • 1 month later...
Posted

விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு கோர்ட்டு கண்டனம்

விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.

 
 
201701211339513464_Court-Condemned-ramba
 
நடிகர் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி.

இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்து விட்டார்.

இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தன் இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ. 1. லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்’ என் றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசா ரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என் னுடைய கணவர் என் னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட் டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறி விக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்? கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை. இப்போதும் அவர் வரவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/01/21133951/1063393/Court-Condemned-ramba-in-the-case-of-divorce.vpf

  • 1 month later...
Posted

நடிகை ரம்பாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ramba-_husband_12086.jpg

கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசி தீர்க்க ரம்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரைக் கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை இன்று மாலை 6 மணிக்குள் சமரச மையத்தில் பேசி தீர்க்க ரம்யாவுக்கும், அவரது கணவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84103-actress-rambha-seeks-courts-help-to-save-marriage.html

  • 3 weeks later...
Posted

நடிகை ரம்பாவின் கணவர், உயர்நீதிமன்றத்தில் முக்கிய தகவல்

Actress Ramba

கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ரம்பா. அதில், இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, இந்திரன், ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரியிருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது.

இந்நிலையில், வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/85505-case-between-actress-ramba-and-her-husband-has-come-to-end.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பெரும் பிரச்சினையா இருக்குதே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு என்னமோ ரம்பா கனடா சிட்டிசன் எடுக்க 
கலியாணம் கட்டின மாதிரிதான் தெரியுது .......

இனி கள்ள காசை வெள்ள காசு ஆக்கலாம் 
வெள்ளையை கறுப்பாக்கலாம் ...

ரம்பாவின் வலையில் மாப்பிளை விழுந்த மாதிரிதான் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

இது பெரும் பிரச்சினையா இருக்குதே 

சீ

அப்படி இருக்காது..:grin:

Posted

கணவருடன் சேர்ந்த ரம்பா குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் - வீடியோ இணைப்பு

கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்பா, தனது குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

 
201704111148088527_Ramba-dharshan-in-Tir
 
நடிகை ரம்பாவுக்கு, கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தனது கணவரை பிரிய முடிவு செய்தார் ரம்பா.

பின்னர், மனம் மாறி தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்திடம் முறையிட, அவர்களுக்கு நீதிமன்ற நல்ல தீர்ப்பை வழங்கி சேர்த்தும் வைத்தது. இந்நிலையில், கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்யா முதல் வேலையாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

201704111148088527_ramba1-X._L_styvpf.gi

ரம்பா தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இருப்பினும், தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காட்சி
 
 
 
 

 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/04/11114804/1079326/Ramba-dharshan-in-Tirupathi-Temple-with-family.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣
    • இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு  உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
    • சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 
    • பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதனையோ, சமூக உயர் நிலையினை அடைவதனையோ என்றும் அனுமதிக்க போவதில்லை (இது உயர் சாதியினர் என கூறிக்கொள்பவர்கள் மற்ற மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு எமது சமூகத்தில் பயன்படுத்தும் உத்தி), அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த மதுபான நிலையங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட தமிழர்கள் வாழும் அபுக்தியில் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளே மதுபான உரிமைகள் வாங்கி பினாமிகளின் பெயர்களில் செயல்படுகின்ற தலைமைகளை தமிழர்கள் கொண்டிருக்கும் நிலை, அவ்வாறானவர்களையே மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போது சிறுபான்மை மக்களிற்கு வழமையான எதிரியுடன் கூடவே அவர்களாலாலேயே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் எதிரிகளாக உள்ளனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களின் நோக்கம் வெறும் பணம் சேர்ப்பதாகவே உள்ளது, இவர்கள் தயவு செய்து பதவி விலகி, புதிய மக்கள் சிந்தனை மட்டும் கொண்ட இளம் சமூகத்திற்கு வழி விட வேண்டும். அங்குள்ள பத்திரிகைகள் மக்களை நல்வழிப்படுத்தும் பாரிய கடமை உண்டு, அதனை அவர்கள் சரிவர செய்ய வேண்டும். இலங்கை அரசை பொறுத்தவரை அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் எனும் உண்மைநிலையினை மக்களிடம் எடுத்து செல்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல, அதற்காகவே இலங்கை அரசுகள் பயங்கரவாத தடை சட்டம் எனும் போர்வையில் (பயங்கரவாத தடை சட்டத்தினை என்றும் நீக்க போவதில்லை) உண்மைகளின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டுள்ளார்கள். யூரியூபர்களும் இந்த உண்மைகளை தம்மளவில் பாதிப்பில்லா வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
    • அழகான  பறவைகள்  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.