Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சப்பாத்து அணிந்து வராத மாணவா்களின் காலணிகளை தீ வைத்த ஆசிரியர் கிளிநொச்சி மீண்டுமொரு சம்பவம்

Featured Replies

 

clipers

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின்  காலணிகள்  பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான  ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை   பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் 84 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றாா்கள்,இதில் 24 மாணவா்கள் குறித்த தினத்தன்று பாடசாலைக்கு சப்பாத்து அணியாது செருப்பு, சாண்டில்ஸ், உள்ளிட்ட காலணிகளை அணிந்து சென்றுள்ளனா்.

இதனை அவதானித்த பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் குறிப்பிட்ட 24 மாணவா்களினதும் காலணிகளும்  கழற்றப்பட்டு  ஒரு பையினுள் இட்டு பாடசாலைக்கு பின்புறமாக தீ வைத்து எரியூட்டியூட்டப்பட்டுள்ளது. இதன் போது சில மாணவா்கள்  அழுதபடி  தொலைவில் நின்று பாா்த்த போது குறித்த ஆசிரியா்  அந்த மாணவா்களை அருகில் வந்து எரிவதனை நன்றாக பாா்க்கும்படியும் கூறியுள்ளாா்.

இந்தச் சம்பவம் வரும்மாதம் க.பொ.த சாதாரணம் தரம் பரீட்சை எழுதவுள்ள மாணவா்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது  என பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

குறித்த சம்பவம் தொடா்பில் பாடசாலையின் அதிபரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு வினவிய போது

மாணவா்களிடம் இருந்து  அவா்கள் அணிந்து வந்த காலணிகளை குறித்த ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியா் பெற்றுக்கொண்டமை உண்மை எனவும் அவற்றை எரியூட்டப் போவதாக கூறியே அவா் பெற்றுக்கொண்டாா்  எனவும் ஆனால் எரியூட்டவில்லை எனவும்  அதனை நாம் திருப்பி நாளைய தினமே வழங்கப் போகின்றோம் என கடந்த திங்கள் கிழமை  தெரிவித்தாா் . ஆனால்  புதன் கிழமை வரை அவ்வாறு எந்த காலணிகளும் மாணவா்களிடம் திருப்பி வழங்க்கப்படவில்லை.

இது தொடா்பில் பெற்றோா்கள் கருத்து தெரிவிக்கும் போது

தங்களுடைய கிராமம் பின்தங்கிய கிராமம் நாங்கள் கூலித்  தொழில் செய்தே எங்கள் பிள்ளைகளின் கல்வித் தேவைகளை பூா்த்தி செய்து வருகின்றோம். இந்த நிலையில்  குறித்த ஆசிரியரின் இந்தச் செயற்பாடு மிகுந்த கவலையை அளிக்கிறது. அத்தோடு எங்கள் கிராமத்தில் வீதிகள் மிக மோசமாக காணப்படுகிறது பல வாய்க்கால்களை  கடந்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லவேண்டும்.

எனவே குறிக்கப்பட்ட காலத்தில்  மழையும் பெய்திருந்தது  எனத் தெரிவித்த  அவா்கள்  பிள்ளைகள் செருப்புகளுடன்  பாடசாலைக்கு சென்றமையினை நாம் நியாயப்படுத்தவில்லை ஆனால் எமது நிலைமைகளை கவனத்தில் எடுக்காது  ஆசிரியா் இவ்வாறு நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்தனா்.

கடந்த மாதம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சப்பாத்து அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத மாணவா்களின் காலணிகள் கழறப்பட்டு பிரதான வீதியில் குவிக்கப்பட்ட சம்பவம் பல தரப்புக்கள்   மத்தியில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவமும் பலரிடமும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://globaltamilnews.net/archives/6577

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அந்த ஆசிரியருக்கு ஒழுக்கம் பற்றி படிபிக்கணும் 

ஒழுங்கான படிபறிவில்லாததுகள் இடையால ஆசிரியராக வந்துள்ளதன் செய்தியே இது .

  • கருத்துக்கள உறவுகள்

முறையாக ஆசு இரியத்தை பயின்ற ஒருவரெனில் இப்படி நடக்க வாய்ப்பில்லை. மிகவும் பின்தங்கிய பகுதிகளாகவுள்ள மக்களின் வாழ்வுச் சூழலை மதிப்பீடு செய்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து முடிவுகளை ஆசிரிய அதிபர்களோடு கலந்துரையாடி முடிவுகளை எடுத்தால் இதுபோன்ற தண்டனைகளைத் தவிர்த்து மாணவர்களுக்கு சந்தர்பத்தை வழங்குவதோடு, பெற்றோரை அழைத்து உரையாடுதல் போன்ற நடைமுறைகளைக் கூடப்பின்பற்றலாமே. ஏனிந்தத் தான்தோன்றித்தனமான எடுத்தான் கவுட்டான் செயற்பாடுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வெய்யில் அடிக்கிற எங்கன்ட ஊருக்கு சப்பாத்து உண்மையிலயே சரிபட்டு வராது.....7,8 எட்டு மணித்தியாலங்களுக்கு சப்பாத்தை காலில் மாட்டிகொண்டிருப்பது ரொம்ப கஸ்டம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

வெய்யில் அடிக்கிற எங்கன்ட ஊருக்கு சப்பாத்து உண்மையிலயே சரிபட்டு வராது.....7,8 எட்டு மணித்தியாலங்களுக்கு சப்பாத்தை காலில் மாட்டிகொண்டிருப்பது ரொம்ப கஸ்டம்....

அந்தந்த நாட்டின்... காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் அணியும் உடைகளோ, பாதணிகளோ இருக்க வேண்டும்.
இலங்கையில்.... பாடசாலைகளில்  சப்பாத்து தேவையற்றது. அதனை... ஏன் இந்த ஆசிரியர் தண்டிக்கின்றார் என்று புரியவில்லை.
சிலவேளை... இவரின் சொந்தக்காரர் யாரவது, அந்த ஊரில்... சப்பாத்துக் கடை நடத்துகிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

. இவரின் சொந்தக்காரர் யாரவது, அந்த ஊரில்... சப்பாத்துக் கடை நடத்துகிறார்களோ தெரியவில்லை.

இருக்கலாம்....போர போக்கை பார்த்தால் டை கட்டி கோர்ட் சூட் போட சொல்லுவினம் போலகிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பிறருடைய உடமைகளைச் சேதப்படுத்தியதை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளோ, காவல்துறையில் முறைப்பாடுகளோ மேற்கொண்டதாக இதுவரை செய்திகள் வராதிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஆசிரியரின் பின்புலம் அரசியல் சார்ந்ததோ?? :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த செய்தியை பார்த்தவுடன் மிகவும் கவலையாக இருந்தது. இந்த மாணவர்களை போலவே நான் ஒரு காலத்தில் செருப்பு போட்டுக்கொண்டுதான் பாடசாலக்கு போவேன். பாடசாலையில் இத்தகையா அனுபவங்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். மிகவும் அவமானமா இருக்கும்.

இது இந்த மாணவர்களை எந்த அளவுக்கு மனரீதியாக பாதிக்கும் என இந்த முட்டாள் ஆசிரியருக்கு தெரியாதா? ஓர் ஆசிரியராக இருந்து கொண்டு ஏன் இந்த மாதிரி வறிய மாணவர்களின் மனதை புரிந்து கொள்கின்றான் இல்லை. 

முடியுமானால் யாரவது இந்த மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களை தாருங்கள் ஒரு 10 பேருக்காவது நான் என்னுடைய செலவில் இவர்களுக்கு சப்பாத்து வாங்க பணம் அனுப்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, பெருமாள் said:

முதலில் அந்த ஆசிரியருக்கு ஒழுக்கம் பற்றி படிபிக்கணும் 

ஒழுங்கான படிபறிவில்லாததுகள் இடையால ஆசிரியராக வந்துள்ளதன் செய்தியே இது .

மாணவர்களை விட முதலில் உந்த  திமிர் பிடித்த வாத்திகளை திருத்தியெடுக்க வேண்டும்.
குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம் ஆசிரியராக இருந்தும் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய நல்லெண்ணம் பாரட்டப்படவேண்டிய ஒன்று .....ஆனாலும் ஒரு ஆசிரியரின் அதிகார மிறட்டலுக்காக ஒரு வகுப்புக்கு சாப்பாத்துவாங்கி கொடுப்பதால இந்த பிரச்சனை தீரப்போவதில்லை....பாடசாலைக்கு எந்த வகையான உடைகள்,காலனிகள் அணியவேண்டும் என்று அதிபர் அல்லது நிர்வாக அமைப்பு முடிவு செய்ய வேண்டும் அதைவிடுத்து தனிநபரின் மிறட்டலுக்கு அடிபணிய வேண்டிய அவ்சியமில்லை....

16 hours ago, colomban said:

எனக்கு இந்த செய்தியை பார்த்தவுடன் மிகவும் கவலையாக இருந்தது. இந்த மாணவர்களை போலவே நான் ஒரு காலத்தில் செருப்பு போட்டுக்கொண்டுதான் பாடசாலக்கு போவேன். பாடசாலையில் இத்தகையா அனுபவங்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். மிகவும் அவமானமா இருக்கும்.

இது இந்த மாணவர்களை எந்த அளவுக்கு மனரீதியாக பாதிக்கும் என இந்த முட்டாள் ஆசிரியருக்கு தெரியாதா? ஓர் ஆசிரியராக இருந்து கொண்டு ஏன் இந்த மாதிரி வறிய மாணவர்களின் மனதை புரிந்து கொள்கின்றான் இல்லை. 

முடியுமானால் யாரவது இந்த மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களை தாருங்கள் ஒரு 10 பேருக்காவது நான் என்னுடைய செலவில் இவர்களுக்கு சப்பாத்து வாங்க பணம் அனுப்புகின்றேன்.

உங்களுடைய நல்லெண்ணம் பாரட்டப்படவேண்டிய ஒன்று .....ஆனாலும் ஒரு ஆசிரியரின் அதிகார மிறட்டலுக்காக ஒரு வகுப்புக்கு சாப்பாத்துவாங்கி கொடுப்பதால இந்த பிரச்சனை தீரப்போவதில்லை....பாடசாலைக்கு எந்த வகையான உடைகள்,காலனிகள் அணியவேண்டும் என்று அதிபர் அல்லது நிர்வாக அமைப்பு முடிவு செய்ய வேண்டும் அதைவிடுத்து தனிநபரின் மிறட்டலுக்கு அடிபணிய வேண்டிய அவ்சியமில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

 90ம் ஆண்டு  காலப் பகுதி என நினைக்கிறேன், பல்கலைக் கழகத்துக்கு பலவித கனவுகளோடு சென்ற ஒரு மாணவன் செருப்புடன் சென்றதால் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டான்.   விளைவு அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டான். இன்னோரு மாணவன் சைக்கிளில் சென்றதால் சைக்கிள் ரயரை வெட்டிவிட்டார்கள். அந்த மாணவன் சவாலை சாணக்கியமாய் எதிர் கொண்டு மறுநாள் மாட்டுவண்டிலில பல்கலைக்கழகம் போய்க்காட்டினான். காலில செருப்பும் இல்லாமல், காலைல சாப்பிடாமலும்  படித்து முன்னேற பாடசாலை செல்லும் மாணவர்களும் உண்டு. ஆசிரியர் என்ற சொல்லுக்கே அருகதை அற்றவர் இந்த ஆசிரியர். நல்ல ஒரு ஆசிரியராக இருந்திருந்தால் தானே அவர்களுக்கு சப்பாத்து வாங்க உதவி இருக்கலாம், அதை விட்டு இருந்ததையும் கொழுத்திப் போட்டாரே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.