Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது போக இடம் இல்லாது???????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மக்களின் தீர்ப்பு குறித்து எம்மவர்கள் ஆளமாக பதட்டப்படுவதும்

அமெரிக்க மக்களை ஏதோ வேற்று கிரகவாசிகள் போன்று தள்ளி நிற்பதும் தெரிகிறது.

அமெரிக்க மக்களின் அரசியல்வாதிகள் மீதான விசவாசத்தின் கடைசி பின்னகர்தல்

கறுப்பு இனத்தவரை இருமுறை ஐனாதிபதியாக்கியது என்பதை அரசியல்வாதிகள் உணராததன் வெடிப்பே இது.

இது அடுத்த வருடம் பிரான்சிலும் எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது சுற்றுக்கே தேவையேற்படாமலும் போகலாம்.

எம்மவரின் பதட்டம் புரிந்து கொள்ளக்கூடியதே.

அடுத்தவரின் நிழலில் வாழத்தலைப்படும் இனத்தின் தளம்பல்நிலை இது.

தனக்கென்று ஒரு நிலமில்லாத இனத்தில்

10 வீதம் மக்களே ஒரு இனத்தின் விடுதலைக்கு பங்காளிகளாக வரக்கூடிய ஒரு இனத்தில்

இதைவிட வேறு எதை எதிர்பார்க்கமுடியும்???

உண்மையில் இதன் தாக்கத்தை எம்மவர் புரிந்து கொள்ளத்தலைப்படுவார்களாயின்

இன்றிலிருந்தாவது ஏதாவது ஒரு அமைப்பில்

ஆகக்குறைந்தது ஒரு சங்கத்திலாவது தன்னை அங்கத்தவராக இணைத்துக்கொள்வார்.

தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பார்.

எந்த ஒரு மண் விடுதலையும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறது. 
செயற்படத்தயாரா?

அல்லது கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் போது போக இடம் இல்லாது???????

  • கருத்துக்கள உறவுகள்

என்று அரசியல் வாதிகள் 'உயிர் பாதுகாப்பு' குறித்து பேசுகிறார்களோ அன்று அவர் வெல்கிறார்.

முஸ்லிம் பற்றிய பயமே, பாஜக, மோடியை பிரதமராக்கியது. 

துருக்கி, ஐ.ஒ வில் இணையப்போகிறது, முழு ஜிகாடிகளும் வந்து இறங்கி நாசமறுக்கப் போகிறார்கள் என்ற பொய்யில், பிரித்தானியா, வெளியேற வாக்குகள் விழுந்தது.

ட்ரம்ப், முஸ்லிம் வர தடை என்ற பேச்சு அவருக்கு வாக்குகளைக் குவித்தது.

நாளை இதுவே பிரான்சில், பெல்ஜியத்தில் நடக்கும்.

கோத்தா இந்த நூலைப் பிடித்தாலும்... புலிப்பயம் இல்லை என்பதால் அவருக்கு போனியாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு  டெனால்ட் ரம் தூங்கிக் கொண்டிருந்த இனவாதிகளை தட்டி எழுப்பியே வாங்குகளை வாங்கியிருக்கிறார்.
 
முதல் முதல் தெரிவு செய்யப்பட்ட  அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 15 மாநிலங்களுக்கு மேல்  டொனால்ட் ரம் எமது ஜனாதிபதி இல்லை என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விசுகு  டெனால்ட் ரம் தூங்கிக் கொண்டிருந்த இனவாதிகளை தட்டி எழுப்பியே வாங்குகளை வாங்கியிருக்கிறார்.
 
முதல் முதல் தெரிவு செய்யப்பட்ட  அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 15 மாநிலங்களுக்கு மேல்  டொனால்ட் ரம் எமது ஜனாதிபதி இல்லை என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவ்வளவு கொலைகள் செய்த பின்னும், இன்னும் எனது நாட்டில் முஸ்லீம் மக்கள் வாழ முடிகிறதே என்பது பிரித்தானிய, பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன்  அமெரிக்க, பிரெஞ்சு போன்ற ஜிகாதிகளினால் பாதிக்கப் படட மக்கள் மனக் கொதிப்பு.

இறுக்கமான சடட ஒழுங்கு போலீஸ் நடவடிக்கைகளினால் எதுவுமே செய்ய முடியா நிலை.

அந்த பயத்தினை வைத்து வோட்டு கேட்க்கும் போது, மக்கள் வேறு நல்ல காரணங்களை மறந்து, அந்த ஒரு காரணத்துக்காக கோபாவேசமாக வாக்கு போடுவார்கள்.

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழண்டு கொண்ட அதே காரணமே இன்று டொனால்ட் வெற்றிக்கு காரணம் .

இதே நிலை தான் பிரஞ்சு தேர்தலிலும் வரப்போகிறது. :224_monkey:

4 hours ago, Nathamuni said:

என்று அரசியல் வாதிகள் 'உயிர் பாதுகாப்பு' குறித்து பேசுகிறார்களோ அன்று அவர் வெல்கிறார்.

முஸ்லிம் பற்றிய பயமே, பாஜக, மோடியை பிரதமராக்கியது. 

துருக்கி, ஐ.ஒ வில் இணையப்போகிறது, முழு ஜிகாடிகளும் வந்து இறங்கி நாசமறுக்கப் போகிறார்கள் என்ற பொய்யில், பிரித்தானியா, வெளியேற வாக்குகள் விழுந்தது.

ட்ரம்ப், முஸ்லிம் வர தடை என்ற பேச்சு அவருக்கு வாக்குகளைக் குவித்தது.

நாளை இதுவே பிரான்சில், பெல்ஜியத்தில் நடக்கும்.

கோத்தா இந்த நூலைப் பிடித்தாலும்... புலிப்பயம் இல்லை என்பதால் அவருக்கு போனியாகாது.

ட்ரம்ப் அமெரிக்காவில் வென்றதற்கும் மோடி இந்தியாவில் வென்றதற்கும் வெறுமனே பயம் மட்டும் காரணமில்லை. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது அடிப்படைவாத மற்றும் தீவிர மத/ இனப்பற்றாளர்களுக்கு இருக்கும் அளவு சாமானிய மனிதர்களுக்கு இருப்பது இல்லை. ட்ரம்ப் வெற்றி அடைந்தமைக்கான பல காரணங்களில் ஒன்றாக வேணும் என்றால் முஸ்லிம்கள் மீதான பயம் / வெறுப்பு அமையலாம். 

மோடியின் வெற்றிக்கு முக்கியமான காராணம் ஊழலில் கொடி கட்டிப் பறந்த காங்கிரசின் நடவடிக்கைகளும், அவர்களின் முதுகெழுமபற்ற செயல் திறன் அற்ற நிர்வாக நடவடிக்கைகளும் ஆகும்.  தேர்தல் காலங்களில் பிஜேபி தன்னை இல் இருந்து அன்னியப்படுத்திக் காட்ட பல  நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.

9 minutes ago, Nathamuni said:

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழண்டு கொண்ட அதே காரணமே இன்று டொனால்ட் வெற்றிக்கு காரணம் .

இதே நிலை தான் பிரஞ்சு தேர்தலிலும் வரப்போகிறது. :224_monkey:

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்தமைக்கான முக்கிய காரணம் குடியேற்றவாசிகளின் - அதிலும் முக்கியமாக மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து வாழும் குடியேறிகள் மீதான வெறுப்பே.

மற்றப்படி நீங்கள் சொல்வதைப் போன்று, நாளாந்த வாழ்க்கை ஜிகாதிகளினால் பாதிக்கப்படும் அளவுக்கு முஸ்லிம்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் பிரித்தானியாவில் இடம்பெறவும் இல்லை பிரித்தானியர்கள் அந்தளவுக்கு முஸ்லிகளை வெறுக்கவும் இல்லை. அப்படி இருந்திருக்குமாயின் லண்டனின் மேயராக ஒரு முஸ்லிம் வந்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களிடம் ஒரு இயலாமை மனப்பான்மை தோன்றியுள்ளது!

ஆயுத பலத்தினால் அடக்கப்படா விட்டாலும் வேறோ ஒரு விதத்தில் அவர்கள் அடக்கப்பட்டதாக உணர்கின்றார்கள்!

நாளை ஒரு 'உலக யுத்தம் ' ஏற்பட்டால் ...அவர்கள் அனைத்தையும் அடிப்படையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்!

அவர்களது வயல்களும், பண்ணைகளும், தோட்டங்களும் கூடச் சீன வர்த்தகர்களாலும், அரேபிய பணக்காரர்களினாலும் வாங்கப்படுகின்றன!

தங்கள் தோடம் பழங்களையும், கார்களையும் கூட விற்க முடியானால்..வயல் நிலங்களையும்.. தொழில் நிறுவனங்களையும் மூடி வருகின்றார்கள்!

நாளை ஒரு உலக யுத்தம் ஏற்படுமாயின்...மீனிலிருந்து.. பால் வரை  சீனாவிலிருந்தே வர வேண்டும் என்ற நிலை!

போதாக்குறைக்கு...அவர்களது வீடுகளையும் அறா விலைக்குச் சீனர்களும், அரபிகளும், இந்தியர்களும் வாங்கிக் குவிக்கின்றார்கள்!

பயங்கரவாதம் ஒரு பக்கம்...வாழ்வைப்பற்றிய பயம் மறுபக்கம்....தொழிலில்லாமை இன்னொரு பக்கம்!

எல்லாரும் ஒரு விதமான பய நிலையில் உள்ளார்கள்!

அதற்காக ஒரு மாற்றித் தேடுகின்றார்கள்!

இந்த மாற்றத்தைத் தேடுபவர்கள்...சாதாரணமான மக்களே!

'சமநிலை' என்பது இயற்கையின் நியதிகளில் ஒன்று!

அதற்கான முன்னெடுப்புக்கள் தான் இப்போது நடை பெறுகின்றன!

இது தொடரும் என்பது தான் எனது நம்பிக்கை! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் லாபம் பெறுவதற்காகவும் வாக்குவேட்டைக்காகவும் திறனற்ற அரசியல்வாதிகள் இனவாதம் மதவாதம் பேசிக்கொண்டு தங்கள் நாடு சனநாயக நாடு என பறைதட்டுகின்றார்கள்.

இன்று சர்வதேசம் வர்த்தகமயமாக்கப்பட்டு விட்டது. இதை மாற்றியமைக்க முயற்சித்தால் நட்டம் அமெரிக்காவுக்கு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ட்ரம்ப் அமெரிக்காவில் வென்றதற்கும் மோடி இந்தியாவில் வென்றதற்கும் வெறுமனே பயம் மட்டும் காரணமில்லை. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது அடிப்படைவாத மற்றும் தீவிர மத/ இனப்பற்றாளர்களுக்கு இருக்கும் அளவு சாமானிய மனிதர்களுக்கு இருப்பது இல்லை. ட்ரம்ப் வெற்றி அடைந்தமைக்கான பல காரணங்களில் ஒன்றாக வேணும் என்றால் முஸ்லிம்கள் மீதான பயம் / வெறுப்பு அமையலாம். 

மோடியின் வெற்றிக்கு முக்கியமான காராணம் ஊழலில் கொடி கட்டிப் பறந்த காங்கிரசின் நடவடிக்கைகளும், அவர்களின் முதுகெழுமபற்ற செயல் திறன் அற்ற நிர்வாக நடவடிக்கைகளும் ஆகும்.  தேர்தல் காலங்களில் பிஜேபி தன்னை இல் இருந்து அன்னியப்படுத்திக் காட்ட பல  நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்தமைக்கான முக்கிய காரணம் குடியேற்றவாசிகளின் - அதிலும் முக்கியமாக மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து வாழும் குடியேறிகள் மீதான வெறுப்பே.

மற்றப்படி நீங்கள் சொல்வதைப் போன்று, நாளாந்த வாழ்க்கை ஜிகாதிகளினால் பாதிக்கப்படும் அளவுக்கு முஸ்லிம்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் பிரித்தானியாவில் இடம்பெறவும் இல்லை பிரித்தானியர்கள் அந்தளவுக்கு முஸ்லிகளை வெறுக்கவும் இல்லை. அப்படி இருந்திருக்குமாயின் லண்டனின் மேயராக ஒரு முஸ்லிம் வந்திருக்க முடியாது.

லண்டன் மேயராக முஸ்லிம் வந்ததற்கு காரணம், வாக்களிக்கப் போகாத சிறுபான்மை வெள்ளைகளும், வாக்களித்த பெரும் பான்மை ஆசிய, கறுப்பர்களும்.

மோடி, குஜராத்திலேயே முஸ்லிம்களை ஒரு கை பார்த்தவர். இவர் தான் நாடு முழுக்க அவர்களை ஒடுக்க சரியானவர் என்ற மனநிலை இருக்கவில்லை என்கிறீர்களா?

பிரித்தானியாவின், ஐரோப்பிய ஒன்றிய வெளியேறல், துருக்கி குறித்த பயம். கிழக்கைரோப்பியர் மட்டுமல்ல, சீனர், கொரியர், இந்தியர், நம்மவர் என பலர் இங்குள்ளோம். அப்படி பயம் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் பிரான்ஸ் தாக்குதல்கள் கிலி பிடிக்க வைத்துள்ளன. ஆக துருக்கி துரும்பு வேலை செய்தது.

மேலும், பிரித்தானிய உளவுத்துறையினர், இணையவெளியில் ஜிகாதிகளுக்கு வகுப்பெடுக்கும், அப்பாடக்கர் ஜிகாதிகளாக இருப்பதே தாக்குதல் தடைக்கு காரணம். ஆனால் சாதாரண மக்கள் கிலி கொள்வது அரசியல்வாதிகள் கைங்கரியம்.

Edited by Nathamuni

1 hour ago, Nathamuni said:

லண்டன் மேயராக முஸ்லிம் வந்ததற்கு காரணம், வாக்களிக்கப் போகாத சிறுபான்மை வெள்ளைகளும், வாக்களித்த பெரும் பான்மை ஆசிய, கறுப்பர்களும்.

மோடி, குஜராத்திலேயே முஸ்லிம்களை ஒரு கை பார்த்தவர். இவர் தான் நாடு முழுக்க அவர்களை ஒடுக்க சரியானவர் என்ற மனநிலை இருக்கவில்லை என்கிறீர்களா?

லண்டனில் மேயராக முஸ்லிம் ஒருவர் வந்ததுக்கு வாக்களித்த பெரும்பான்மை ஆசிய கறுப்பர்களும் முஸ்லிம்கள் பற்றி பயப்படவில்லை, அதனால் தான் வாக்களித்தார்கள் என்றா சொல்ல வருகின்றீர்கள் (இந்த மேயர் ஏற்கனவே பல பதவிகளை வகித்து இருக்கின்றார்)

மோடியின் தெரிவு கண்டிப்பாக அவர் முஸ்லிம்களை ஒரு கை பார்த்ததால் வந்தது அல்ல. அத்துடன் நாடு முழுக்க முஸ்லிம்கள ஒடுக்கும் அளவுக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் / ஜிகாத்திகளின் பிரச்சனை என்று ஒன்று இல்லை, மோசமான மும்பை தாக்குதல் (2008) இன் பின்னரும் கூட 2009 இல் இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது.

Quote

பிரித்தானியாவின், ஐரோப்பிய ஒன்றிய வெளியேறல், துருக்கி குறித்த பயம். கிழக்கைரோப்பியர் மட்டுமல்ல, சீனர், கொரியர், இந்தியர், நம்மவர் என பலர் இங்குள்ளோம். அப்படி பயம் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் பிரான்ஸ் தாக்குதல்கள் கிலி பிடிக்க வைத்துள்ளன. ஆக துருக்கி துரும்பு வேலை செய்தது.

நாதமுனி,

 BrExit தொடர்பாக இணையத்தில் மிகவும் தரமான பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. எழுந்தமானமாக எழுதாமல் அவற்றையும் கொஞ்சம் பார்வையிடுவது நல்லது. பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் அல்ல. குடியேற்றவாசிகளின் பிரச்சனை, பொருளாதார நிலை மற்றும் வலது சாரி கொள்கைகள் மீதான இளையவர்களின் ஆர்வம் போன்றனவே முக்கிய காரணங்கள்.

கீழே உள்ள கட்டுரை ட்ரம்ப் இன் வெற்றிக்கான காரணங்களே பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியமைக்கு என்ற ரீதியில் அலசுகின்றது.

The reasons for Trump were also the reasons for Brexit

BrExit பற்றி......

Brexit was fueled by irrational xenophobia, not real economic grievances

The ultimate causes of Brexit: history, culture, and geography

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

லண்டனில் மேயராக முஸ்லிம் ஒருவர் வந்ததுக்கு வாக்களித்த பெரும்பான்மை ஆசிய கறுப்பர்களும் முஸ்லிம்கள் பற்றி பயப்படவில்லை, அதனால் தான் வாக்களித்தார்கள் என்றா சொல்ல வருகின்றீர்கள் (இந்த மேயர் ஏற்கனவே பல பதவிகளை வகித்து இருக்கின்றார்)

மோடியின் தெரிவு கண்டிப்பாக அவர் முஸ்லிம்களை ஒரு கை பார்த்ததால் வந்தது அல்ல. அத்துடன் நாடு முழுக்க முஸ்லிம்கள ஒடுக்கும் அளவுக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் / ஜிகாத்திகளின் பிரச்சனை என்று ஒன்று இல்லை, மோசமான மும்பை தாக்குதல் (2008) இன் பின்னரும் கூட 2009 இல் இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது.

நாதமுனி,

 BrExit தொடர்பாக இணையத்தில் மிகவும் தரமான பல ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. எழுந்தமானமாக எழுதாமல் அவற்றையும் கொஞ்சம் பார்வையிடுவது நல்லது. பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் அல்ல. குடியேற்றவாசிகளின் பிரச்சனை, பொருளாதார நிலை மற்றும் வலது சாரி கொள்கைகள் மீதான இளையவர்களின் ஆர்வம் போன்றனவே முக்கிய காரணங்கள்.

கீழே உள்ள கட்டுரை ட்ரம்ப் இன் வெற்றிக்கான காரணங்களே பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியமைக்கு என்ற ரீதியில் அலசுகின்றது.

The reasons for Trump were also the reasons for Brexit

BrExit பற்றி......

Brexit was fueled by irrational xenophobia, not real economic grievances

The ultimate causes of Brexit: history, culture, and geography

ஆங்கிலத்தில் உள்ளது என்பதற்காக ஒவ்வொருவரின் அலம்பல்களை வாசிக்க முனையாதீர்கள்.

தமிழ் பத்திரிகையாளர்களும் பார்க்க அறுவை கோஷ்ட்டிகள் இங்கு தாராளம்.

கிழக்கு ஐரோப்பியர்கள் இங்கு, ஆங்கிலேயர்கள் விரும்பாத வேலைகளையே செய்கின்றனர். லண்டன் ஹரோவ், சரவணபவன் சைவ ஹோட்டலில், கிழக்கு ஐரோப்பியர்கள், மேசை துடைக்கிறார்கள்.

அவர்களை யாரும் போட்டியாக கருதவில்லை. காரணம் வயதானவர்கள் நீண்டகாலம் உயிருடன் இருப்பதால், அவர்களை பராமரிக்க பணம் இந்த 'வரி செலுத்தும்' குடியேறிகள் கவனிக்கிறார்கள் என்ற புரிதல் உண்டு.

அமெரிக்காவில் 43% வாக்களிக்க வில்லை என்பது டிரம்ப் வெல்லக் காரணம் எனில், பிரித்தானியாவில் BrExit வெல்லக் காரணம் அதிகமாக துருக்கி இணைவு குறித்து பயந்தவர்கள் கிளம்பி வாக்களிக்கப் போனது தான்.... நானும் கூட.

ஆனால் மீண்டுமொரு தேர்தல் வந்தால் பிரெக்ஸிட் வெல்ல முடியாது.

காரணம்... வாக்களிக்காமல், தோல்வி வந்தது குறித்து புலம்பிக் கொண்டிருப்பவர்கள், வாக்களிக்க கிளம்புவார்கள்.

வாரம் £350 மில்லியன் பணம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு போகின்றது, துருக்கி இணைகிறது என்று கப்ஸா அடித்து தமது வாக்குகளை தவறாக போட வைத்து வென்று விட்டார்கள் என, முறைப்பாடு செய்யப்பட்டு, முடிக்குரிய வழக்கு தொடுநர் அதில் விசாரிக்கக் கூடிய உண்மை உள்ளது என்று அந்த முறைப்பாட்டினை வாங்கி உள்ளனர்.

பொய் சொல்லி வாக்கு பறித்தால், சிறை தண்டனை உள்ளது.

நாதமுனி.

லண்டன் டெலிகிராப் மற்றும்  லண்டன் அரசியல் மற்றும் பொருளாதார கற்கை கல்லூரி போன்றவற்றை மிகவும் தரமான ஊடகங்களாக அமைப்புகளாக கருதி வாசிக்கின்றேன். வாசிப்பவற்றில் எவை குப்பை எவை தரமானவை என்பதை பகுத்தறியும் அடிப்படை அறிவை என் வாசிப்புகள் எனக்கு ஏற்படுத்தி இருக்கு.

முஸ்லிம்கள் மீதான பயம் / அச்சமே  ட்றம்ப் வெற்றி, பிரித்தானியாவின் வெளியேற்றம், மோடி வெற்றி ஆகியவனவற்றுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்த காரணிகளையும் நான் காணவில்லை. குடியேற்றவாசிகளின் மீதான அதிகரித்து வரும் வெறுப்பு, போட்டி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பின்னடைவுகள், வலது சாரி கருத்துகளினை வலியுறுத்தும் கவர்ச்சிகரமான தலைவர்களின் ஆளுமை போன்றவற்றையே காரணங்களாக அறிகின்றேன்/உணர்கின்றேன். இக் காரணிகள் தான் எதிர்காலத்தில் மேற்கில் வாழப் போகும் எம் அடுத்த சந்ததிக்கு கடும் சவாலாக மாறவும் போகின்றது என்பதையும் நம்புகின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நிழலி,

உங்கள் பத்திரிகைள் தொடர்பான மதிப்பீட்டில் நான் தவறு காணவில்லை.

ஏறச்குறைய எழுதிய அணைவருமே, பிரிட்டன் வெளியேறாது, கிளிண்டன் வெல்லுவார் என்று நீட்டி முழக்கி விட்டு, இப்போது சப்பைக்கட்டு போடுகிறார்கள்.

அதனால் தான் அலம்பறைகள் என்றேன். பிரித்தானியாவின் 2010 தேர்தல், பிரவுன் தோற்று டவுணிங் தெருவில் இருந்து பக்கிங்காம் பலஸ் போகிறார்... அரச காரில் ராஜினாமா செய்ய..

தனிப்பட்ட காரில் அரண்மனை பயணிக்க, கமரோன் தனது இடத்தில் இருந்து புறப்படுகிறார்.

பார்... பிரவுன், அரச காரை விட்டுவிட்டு தனிப்பட்ட காரில் திரும்புவார். கமரோன் அந்த அரச காரில் கிளம்புவார் என்று பிபிசி வர்ணனை.

அப்படி நடக்கவில்லை என்றதும் விட்டது பாருங்கள்... சப்பைக்கட்டு.

அதனால் தான் சொல்கிறேன், இவர்களது போஸ்மோட்ட எமுத்துக்கள் வேலைக்காகாது.

அதே வேளை, முஸ்லிம் தாக்குதல் பயம்.... எமுத மாட்டார்கள், எழுதவும் கூடாது.

பத்திரிகையாளர்கள் தீர்க்க தரிசனத்துடன் தமது பார்வையினை  வலுவான வாதங்களுடன் சொல்ல வேண்டும்.

தவறாக சொல்லி, பின்னர் சப்பைக்கட்டு சொல்வது, அவர்களது நம்பிக்கைத் தன்மையினை குறைக்கும்.

ஆகவே அவர்களது சப்பைக்கட்டுகள் நமக்குத் தேவையில்லை.

இலங்கை சண்டே லீடர் பத்திரிகையின் இந்த கட்டுரையினை பாருங்கள். இவர் எனது மதிப்பில் உயர்கிறார்.

http://www.thesundayleader.lk/2016/10/30/only-immigration-trumps-trump-card-can-make-him-win/

இன்னுமோர் விடயம், நிழலி.... அரசியலில் தரமான கட்டுரை என்று எதுவுமே இல்லை என்பது எனது கருத்து. அண்மையில் பிரிஎக்சிற் தொடர்பில் வந்த நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ( நீதிபதிகளை, தீர்ப்பையல்ல)  விமர்சித்துசில பத்திரிகை தலைப்புச் செய்திகள், இங்குமா, எப்படி? என்று அதிர வைத்தது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் வென்டதிற்கு காரணம் என்று நான் நினைப்பது; அவரிடம் ஏற்கனவே இருந்த பணம்.எலெக்சன் செலவுக்கு கூட அவர் கட்சி பணத்தையோ,அரச பணத்தையோ செலவு செய்யவில்லை என்றும்,தேர்தலுக்காக சேர்த்த நிதியைக் கூட கட்சிக்கே கொடுத்து விட்டார் என்றும் எங்ஜே வாசித்தேன்...ஏற்கனவே பணம் இருப்பதால் ஊழல்களில் ஈடுபடமாட்டார் என மக்கள் நினைத்திருக்கலாம்.
அவருடைய வியாபாராம் இல்லாமல் போகப் போகுது என்ட நிலை வந்த போது கூட அதைக் கஸ்டப்பட்டு போராடி திரும்ப கட்டி எழுப்பியவர். அதே மாதிரி அமெரிக்காப் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புவார் என மக்கள் நினைத்திருக்கலாம்..
புட்டின்,ரஸ்யாவுடனான இவருடைய தொடர்பு.மக்கள் இன்னொரு யுத்தம்,போர் என்பனவற்றை விரும்பவில்லை.டிரம்ப் மற்றைய நாடுகளோடு நட்பைப் பேணுவார்.
சாதரண அமெரிக்க மக்களது வாழ்க்கை தரத்தை இவர் எப்படியாவது உயர்த்துவார் என்ட எதிர்பார்ப்பில் வோட்டு போட்டு இருக்கலாம்.
முஸ்லீம் மக்களை வர வேண்டாம் என்று சொல்லுதல்,தீவிரவாதத்தை தடை செய்தல, அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை என்பன் ஏற்றுக் கொள்ளக் கூடியனவையே.
எல்லாவற்றையும் விட மற்றைய அமெரிக்கா ஜனாதிபதிகளை போல டிரம்ப் மற்றைய நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கவோ மற்றைய நாட்டு உள் விவகாரங்களிலோ தலையிட மாட்டார். மாறாக அமெரிக்காவை அபிவிருத்தி செய்யப் பார்ப்பார் அல்லது துண்டு,துண்டாய் உடைக்கப் பார்ப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு எங்கடை சனம் களுத்தைப்பிடித்து தள்ளினாலும் தாயகத்திற்கு போக மாட்டம் என்று சொன்ன மக்களுக்கு இது எல்லாம் யுஜப்பி.

ட்ரம்ப் இன் வெற்றியின் சில நாட்களின் பின் ரொரடண்டோ வில் முளைத்த வெள்ளையினத்துக்கு சார்பான சுவரொட்டிகள்
(போலிசும் மாநகர சபையும் பின்னர் இவ் சுவரொட்டிகளை நீக்கின)

இது பற்றிய செய்தியிற்கு பின்னூட்டம் இட்டு இருந்த வெள்ளையின ஆதரவாளர்கள் பல்கலாச்சார சமூகம் (Multi culture) என்பது தோற்றுப் போன ஒரு கொள்கை என்றும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற தேசங்களில் குடியேற்றவாசிகளால் சமாந்தரமான கலாச்சார சமூகங்களே (Parallel culture) உருவாகியுள்ளன என்றும் குடியேற்றவாசிகள் எல்லாரும் இணைந்த ஒரு பொது கலாச்சாரத்தினை உருவாக்க முடியாமல் போய்விட்டதென்றும் முக்கியமாக குறிப்பிட்டு இருந்தனர்.  இது ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய விவாதிக்க வேண்டிய விடயம் என நினைக்கின்றேன்.

Toronto city staff are investigating after signs targeting white people 'sick of being blamed for all the world's problems' and urging them to 'join the alt-right' were spotted around the city on Monday morning.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.