Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உண்டாகியுள்ளது.

ஆளுமையோ, தலைமைத்துவ கம்பீரமோ இல்லாத, கூழைக் கும்பிடு போட்டவாறே ஊழலில் திளைத்த பன்னீர் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கப் போவதில்லை.

ஏற்கனவே முதல் கல், செங்கோட்டையனால் வீசப்பட்டு விட்டது. விரைவிலேயே, சசிகலா, செங்கோட்டையன், பன்னீர் என்று மக்கள் மத்தியில் ஜனரஞ்சக புகழ் இல்லாதோரின் உள்வீட்டூ சண்டைகள் ஒருபுறமும் மறுபுறம் பதவி ஆசை காட்டி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், திமுகவின் பழுத்த நரி கருணாநிதியும் குடும்பம் நடாத்தப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ஒருபுறமும், மோடியின் பாஜக, இலட்டு மாதிரி 39 பாராளுமன்ற அப்படியே அமத்த என்று இன்னுமொரு பக்கமாக காய் நகர்த்த, அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்கள் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றனர்.

அதிமுகவிற்கு வெளியில் இருந்து தலைமையை கொண்டுவர முடியாது. ஆனால் கட்சிக்குள்ளும் ஜனரஞ்சகம் மிக்க தலைமை இல்லை.

ஜனரஞ்ச தலைமை இல்லாவிடில் அதிமுக மெல்ல தலை சாயும். இந்த ஜனரஞ்சகமே தலைமை ஏற்க எம்ஜியார் பின் ஜெயலலிதாவிற்கு வழிசமைத்தது. இந்த மக்கள் அறிமுகமே பிரபலமான நடிகர்களை அரசியலுக்கு இழுக்கிறது.

இன்று அம்மாவின் மறைவால் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ரஜனி, விஜய், ஏற்கனவே உள்ள விஜயகாந்த், சரத், ராதிகா, குஸ்பு, நமீசா போன்ற பல நடிகர்கள், நடிகைகள் முன் தள்ளப் படலாம் அல்லது முன் வரலாம்.

அதேவேளை தன்னை சிறப்பாக, சரியாக நிலைப்படுத்தினால் (strategic positioning) வைக்கோ எனும் மக்கள் அறிமுகம் உள்ள ஒரு தலைவர் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணி, தன்னையே நகைப்புக்கு உள்ளாக்கிவிட்ட விஜயகாந்த் போன்றவர்களுக்கு முன்னே வைக்கோ என்னும் தூய்மையான தலைவர் நிற்கின்றார்.

கடந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்வராக முன்னிருத்தியது, எதிர்கால அரசியலுக்காக வைக்கோவின், தந்திர மூலோபாயம் என்று சொல்லிக்கொண்டே கோதாவில் பாய முடியும்.

நிகழப் போகும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் போட்டியை விடுத்து, அதிமுக என்னும் பேரியக்கத்தினை தாங்கி நின்ற, அடுத்து என்ன, என்ற அங்கலாய்ப்பில் இருக்கும் இலட்சோப இலட்சம் தொண்டர்களை அவர் இலக்கு வைக்க வேண்டும்.

அதே வேளை வைக்கோ இதை உதாசீனப் படுத்தினால், சீமானுக்கும் வழிகள் பிறக்கும்.

** யாழுக்காக நாதமுனி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உண்டாகியுள்ளது.

ஆளுமையோ, தலைமைத்துவ கம்பீரமோ இல்லாத, கூழைக் கும்பிடு போட்டவாறே ஊழலில் திளைத்த பன்னீர் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கப் போவதில்லை.

ஏற்கனவே முதல் கல், செங்கோட்டையனால் வீசப்பட்டு விட்டது. விரைவிலேயே, சசிகலா, செங்கோட்டையன், பன்னீர் என்று மக்கள் மத்தியில் ஜனரஞ்சக புகழ் இல்லாதோரின் உள்வீட்டூ சண்டைகள் ஒருபுறமும் மறுபுறம் பதவி ஆசை காட்டி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், திமுகவின் பழுத்த நரி கருணாநிதியும் குடும்பம் நடாத்தப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நாடகம் ஒருபுறமும், மோடியின் பாஜக, இலட்டு மாதிரி 39 பாராளுமன்ற அப்படியே அமத்த என்று இன்னுமொரு பக்கமாக காய் நகர்த்த, அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்கள் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றனர்.

அதிமுகவிற்கு வெளியில் இருந்து தலைமையை கொண்டுவர முடியாது. ஆனால் கட்சிக்குள்ளும் ஜனரஞ்சகம் மிக்க தலைமை இல்லை.

ஜனரஞ்ச தலைமை இல்லாவிடில் அதிமுக மெல்ல தலை சாயும். இந்த ஜனரஞ்சகமே தலைமை ஏற்க எம்ஜியார் பின் ஜெயலலிதாவிற்கு வழிசமைத்தது. இந்த மக்கள் அறிமுகமே பிரபலமான நடிகர்களை அரசியலுக்கு இழுக்கிறது.

இன்று அம்மாவின் மறைவால் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ரஜனி, விஜய், ஏற்கனவே உள்ள விஜயகாந்த், சரத், ராதிகா, குஸ்பு, நமீசா போன்ற பல நடிகர்கள், நடிகைகள் முன் தள்ளப் படலாம் அல்லது முன் வரலாம்.

அதேவேளை தன்னை சிறப்பாக, சரியாக நிலைப்படுத்தினால் (strategic positioning) வைக்கோ எனும் மக்கள் அறிமுகம் உள்ள ஒரு தலைவர் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணி, தன்னையே நகைப்புக்கு உள்ளாக்கிவிட்ட விஜயகாந்த் போன்றவர்களுக்கு முன்னே வைக்கோ என்னும் தூய்மையான தலைவர் நிற்கின்றார்.

கடந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்வராக முன்னிருத்தியது, எதிர்கால அரசியலுக்காக வைக்கோவின், தந்திர மூலோபாயம் என்று சொல்லிக்கொண்டே கோதாவில் பாய முடியும்.

நிகழப் போகும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் போட்டியை விடுத்து, அதிமுக என்னும் பேரியக்கத்தினை தாங்கி நின்ற, அடுத்து என்ன, என்ற அங்கலாய்ப்பில் இருக்கும் இலட்சோப இலட்சம் தொண்டர்களை அவர் இலக்கு வைக்க வேண்டும்.

அதே வேளை வைக்கோ இதை உதாசீனப் படுத்தினால், சீமானுக்கும் வழிகள் பிறக்கும்.

** யாழுக்காக நாதமுனி

???????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நல்ல தண்ணிப்பாட்டி போல இருக்கு, நாதம்ஸ்:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

இரவு நல்ல தண்ணிப்பாட்டி போல இருக்கு, நாதம்ஸ்:grin:

வரலாறு முக்கியம் அமைச்சரே,

MGR கட்சி தொடங்கும் போதும், ஜெயலலிதா தலைமை தாங்க வந்த போதும் இதையே தானே சொன்னார்கள்.

துணிந்தவனுக்கே வெற்றி என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, முதலில் துணிபவனுக்கு மட்டுமே வெற்றி.

அது வைகோவாக இருக்கட்டும், சீமானாக இருக்கட்டும்.

இப்போது தலைமையைத் தேடும் நேரம். தன்னை துணிவாக வெளிக்காட்டினால் தலைமைப் பதவி கிடைக்கும். அதை கோடடை விடட பின் மீண்டும் காத்திருக்க வேண்டுமே.

சினிமா எழுத்தாளராக இருந்த கருணாநிதி அண்ணா மரணத்துக்கு பின்னர் எப்படி முதல்வரானார்? நடிகையாக இருந்த அம்மா, எம் ஜி ஆர் மரணத்துக்கு பின்னர் எப்படி தலைமை பதவி கிடைத்தது?

இந்த சந்தர்ப்பம் எப்போதும் வராதே.  மறு பக்கம் தி மு கவில் தெளிவான வாரிசை கலைஞர் அறிமுகப் படுத்தி விடடார்.

ஜெயாவும் வெறுமனே நடிகையாக மட்டும் இருக்கவில்லை. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து,  பின் எம் ஜி ஆரால் அது பறிக்கப்பட்டு பின் மீண்டும் அவராலேயே கொள்கை பரப்புச் செயலாளராக மட்டுமன்றி தனது அரசியல் வாரிசு என்று (எம் ஜி ஆராலேயே) அறிவிக்கப்பட்டவர்.

அதிமுக என்பது கருணாநிதி எதிர்ப்பால் வளர்க்கப்பட்ட கட்சி. எம் ஜி ஆரும் சரி, ஜெயாவும் சரி கருணாநிதி எதிர்ப்பால் கட்சியை கொண்டு சென்றவர்கள் (இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியில் எந்த வேறுபாடும் இல்லை).

அதிமுக இனி இரண்டாக அல்லது பலதாக உடையும். மக்கள் முன் அரசியல் செய்யாத மன்னார் குடி நபர்களும் சசிகலாவும் ஒரு போதும் மக்கள் முன் எடுபடப் போவதில்லை

வைகோ அரசியலில் செல்லாக் காசாகி விட்டார்.அது மட்டுமன்ற்றி அரசியல் கோமாளி மற்றும் அரசியல் தரகர் என்று பெயர்கள் வாங்கி தன் அரசியலை சூனியமாக்கி விட்டார். இனி எக்காலத்திலும் அவராலும் ஒரு சில தொகுதிகளை கூட வெல்ல முடியாது. அவ்வளவு ஏன் தேர்தலில் மூன்றாவதாகக் கூட அவர் இனி தமிழகத்தில் வர முடியாது. சீமான்...ஹஹஹா

இனி வரும் காலம் திமுக வின் காலம். இடையில் தேசியக் கட்சியான பா.ஜ.க வும் முக்கிய கட்சியாக தமிழகத்தில் வளரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆகா... நிழலி...

அசாத்தியத்தில் இருந்து சாத்தியத்தை உருவாக்குவதே அரசியல்.

திமுக விற்கு எதிரான எதிர்கால அரசியலின் தலைமை குறித்து தான் பேசுகிறோம்.

வைக்கோவின் அரசியல் செல்லாக்காசு ஆனதற்கு காரணம் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் இதுவரை இருந்ததில்லை.

இப்போது உருவாகி விட்டது.

அதற்கு யார் இலக்கு வைக்கப் போகின்றனர் என்பதே முன்னாலுள்ள கேள்வி. இந்த அத்தி பூத்தது போல் வரும் சந்தர்ப்பத்தை வைக்கோ பயன்படுத்துவாரா என்பதே கேள்வி.

மகிந்த ராஜபக்ச வெல்ல மாட்டார் என்றே சந்திரிக்கா நினைத்தார். ஆனால் அசாத்தியத்தில் இருந்தே சாத்தியத்தை வன்னியில் டீலைப் போட்டு உருவாக்கி வென்று வந்தாரே. 

அதேவேளை அவரையும் கவிழ்க்க, சாத்திரியார் சுமணவையும் பயன் படுதினார்கள்.

எல்லோருக்கும் கோமாளியாகத் தெரிந்த டொனால்ட் டிரம்ப் எப்படி சாத்தியமாக்கினார்?

பிரிட்டனில் அகதியாக வந்து குடியேறிய யூதரான, முன்னரே பல முறை தோல்வி அடைந்திருந்த பெஞ்சமின் டிஸரேலி, நிறவெறி கடுமையாக இருந்த ஒரு காலத்தில், விக்டோரியா மகாராணியாரின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தார். இதுவும் தலைமைத்துவ வெற்றிட இடைவெளியில் அசாத்தியதில்  இருந்து சாத்தியமாகிய கதை.

ஆகவே, காலம் சந்தர்ப்பத்தினை தந்திருக்கிறது. அதை பயன்படுத்துபவர் யார்? வைக்கோவாகவும் இருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், வைகோ தனக்கான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் தவறவிட்ட ஒரு கோமாளியாகவே இப்போது இருக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நந்தன் said:

நாதம்ஸ், வைகோ தனக்கான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் தவறவிட்ட ஒரு கோமாளியாகவே இப்போது இருக்கிறார். 

ல்லோருக்கும் கோமாளியாகத் தெரிந்த டொனால்ட் டிரம்ப் எப்படி சாத்தியமாக்கினார்?

சந்தர்ப்பங்கள் மீண்டும் ஒருமுறை... எடுத்துக் கொள்வாரா?

கோமாளிகளாகத் தெரிந்தவர், சுத்தமானவராக இருந்தால், அவருக்கு ஆதரவு அளிப்பது நல்லது. இல்லாவிடில் ரஜனி, விஜய் இல்லாவிடில் குஸ்பு என்று முழுக் கோமாளிகளை கொண்டு வந்து துளைத்து விடுவார்கள்.

நான் இந்த கட்டுரையை எழுதும் போது இதனைப் பார்க்கவில்லை. இப்போது தான் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/why-admk-cadres-believe-vaiko/slider-pf216212-269295.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு அரசியல் நாகரீகங்களை போட்டு குளப்புகின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

இரு வேறு அரசியல் நாகரீகங்களை போட்டு குளப்புகின்றீர்கள்

இல்லை, இது தமிழ் நாட்டு கூழ் முட் டை  அரசியல் என்று தெரிகிறது... :rolleyes:

வைக்கோ தொடர்பில் எனது தனிப்படட மதிப்பீடு, உங்களது மதிப்பீட்டில் இருந்து வேறு பட வில்லை. 

ஆனால் வைக்கோ முன்னுள்ள சந்தர்ப்பம் இது. முயன்று பார்க்கலாம். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக ஒரு சிறு வலதுசாரி சார்பு கட்சி.. அவர்களது ஆதரவாளர்களில் பலர் ஏழை பாமர மக்கள். திமுக சிறிது இடது சாரி தன்மை கொண்ட கட்சி. சிறிது படித்தவர்கள் ஆதரிக்கும் கட்சி. இவை கட்சிகளின் அடிப்படை ஆதரவாளர்களைக் குறித்து சொன்னவை. கட்சி சார்பற்ற மக்கள் வேறு.

அந்த வகையில் வைகோவின் அரசியல் என்பது திமுகவுக்கு மாற்றீடாகுமே தவிர அதிமுக ஏற்படுத்திய வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது. திமுக தலைமையில் வெற்றிடம் ஏற்படும்பட்சத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு வர இருந்தது. ஆனால் ஸ்டாலினை அங்கே வலுவாக கட்டமைத்துவிட்டார்கள்.

வலதுசாரி வெற்றிடம் என்று வரும்போது பாஜகவுக்கே வாய்ப்பு. ஆனால் அவர்கள் ஏழை மக்களை பிரதிநிதிப்படுத்தவில்லை. பணக்காரர்களின் கட்சி என்கிற முத்திரை உள்ளது. நாம் தமிழர் கட்சி விசுவாசிகளுக்கும் அதிமுகவிசுவாசிகளுக்கும் இடையில் ஒரு மறைமுக காதல் உண்டு. ஆனால் வாக்கு அரசியல் அளவுக்கு இன்னும் நாம் தமிழர் கட்சி வளர்ந்துவிடவில்லை. அதற்கு இன்னும் காலங்கள் எடுக்கும்.

ஆகவே இப்போதுள்ள நிலையில், அதிமுக உடைந்தாலும் இருக்கும் 40% ஆதரவை அவர்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இசைக்கலைஞன் said:

அது.. 

அரசியலை, அலசும் இயல், இசை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அது.. 

அரசியலை, அலசும் இயல், இசை.

நன்றி நாதம்ஸ்.. ஏதோ நம்மால முடிஞ்சது.. tw_blush: 

இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமைகளும் மாறும்போது வேறு தலைவர்கள் முன்னுக்கு வரவே செய்வார்கள். இக்கட்சிகள் உடைந்தால் பிரிந்த அணிகளுடன் கூட்டணி வைப்பதற்கு வைகோ, திருமா, பாஜக கூட்டணி வைக்க முயற்சிப்பார்கள். அதிக தொகுதிகளை பேரம் பேச அவர்களுக்கு வழி கிடைக்கும். அதன் மூலம் அவரது ஆதரவுத்தளத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தேமுதிக மற்றும் பாமகவுக்கு சிறிது சிக்கலாகிவிட்டது. தேமுதிக தனக்கு இருந்த ஆதரவுத் தளத்தையும் இழந்துவிட்ட கட்சி. எந்த திராவிட சிதறலுடன் போனாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். பாமக தாங்கள்தான் உண்மையான மாற்று என்று சொன்னவர்கள். கூட்டணி செல்வது அவர்களை தலைமையாக கொண்டுதான். அதற்கு வாய்ப்பு குறைவு. U-turn அடித்தால் அவரது கட்சி இளைஞர்களே சோர்ந்துவிடுவார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒரு வலதுசாரி கொள்கை கொண்ட கட்சி. அவர்களும் கூட்டணியை எதிர்ப்பவர்கள். திராவிடக் கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் இக்கட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. இந்த நிர்வாகிகளில் பலரும் கறை பட்டவர்களாக இருப்பார்கள். இந்த கறை படிந்தவர்களே அடிமட்டத்தில் கட்சியை கொண்டுசெல்லக்கூடியவர்கள். ஆனால் அவர்களால் நாம் தமிழர் கட்சி சூழலில் பணியாற்றுவது கடினம். ஆகவே இக்கட்சி இப்படியே தனிமையில் பயணிப்பதுதான் அக்கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, எழுதிய....    "வைகோவிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்" என்ற தலைப்பின்... 
உடன் பாடும், ஆசையும்.... எனக்கு இருந்தது.
வைகோ... அப்பழுக்கில்லாத,   தமிழ் இனத்தை நேசிக்கும் நல்ல  மனிதன்.
ஆனால்... அவருக்கு அப்போது  இருந்த, ஆதரவு இப்போது இல்லை என்பதும் உண்மை.

இனமான துடிப்பான.......  வைகோ,  சீமான்...... போன்றவர்களை,  30 வருடமாக....
ஈழப் போர் நடக்கும், காலங்களிலாவது....  தேர்ந்து எடுக்கத் தவறிய.. தமிழக மக்களும் குற்றவாளிகளே.  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி, எழுதிய....    "வைகோவிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்" என்ற தலைப்பின்... 
உடன் பாடும், ஆசையும்.... எனக்கு இருந்தது.
வைகோ... அப்பழுக்கில்லாத,   தமிழ் இனத்தை நேசிக்கும் நல்ல  மனிதன்.
ஆனால்... அவருக்கு அப்போது  இருந்த, ஆதரவு இப்போது இல்லை என்பதும் உண்மை.

இனமான துடிப்பான.......  வைகோ,  சீமான்...... போன்றவர்களை,  30 வருடமாக....
ஈழப் போர் நடக்கும், காலங்களிலாவது....  தேர்ந்து எடுக்கத் தவறிய.. தமிழக மக்களும் குற்றவாளிகளே.  

நான் எமுதியது, என்னுடன் வேலை செய்த, செய்யும் தமிழ் நாட்டு நண்பர்களுடன் விவாதித்து, நாலு நாயம் பொளந்து எழுதியது. 

சரியாகப் பார்த்தால் மோடி தீர்க்கமாக, இந்தியாவின் மோசமான ஊழல் வழக்கங்களுக்கும், வரி ஏய்ப்புக்கும் காரணமான காசுப் பரிவர்த்தனையை, இங்குள்ள காட் பரிவர்த்தனைக்கு மாற்றுகிறார்.

ஆரம்பத்தில், அரை வேக்காடு திட்டம் என்றவர்கள் கூட இன்று முழுசுகிறார்கள்.

நேற்று 90 கோடி கறுப்புப்பணம், அதிமுக கறுப்புப் பண காசாளர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்டுள்ளது. ரெட்டி ஓடிவிட்டார்.

அதில் 70 கோடி, புதிய 2000 ரூபா நோட்டுக்கள். மக்கள் கால் கடுக்க 4000 ரூபா மாத்த வெளியே நிற்க, இந்தப் கறுப்புப் பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொடுத்த வங்கியாளர்கள் யார் என்று மத்திய உளவுத் துறை ஆராய்வதால், வங்கித்துறை அரண்டு போய் உள்ளது. 

வங்கி நிர்வாகமே, தவறு செய்த சில ஊழியர்களை கட்டாய லீவில் அனுப்பிவிட்டது.

மோடிக்கு எதிராக, ஊர்வலம் நடாத்த முயன்ற எதிர்கட்சிகள் முயற்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

மோடியின் இந்த முயற்சிக்கு ஆரம்பம் முதல் வைக்கோ பேராதரவு தருகிறார். காரணம் அவர் முதுகில் காயம் இல்லை.

அம்மாவிற்கு பின் பதவிக்கு வர முயன்ற ஊழல் சசி கூட்டம் மத்திய அரசு எச்சரிக்கையை தொடர்ந்து பின்வாங்கியுள்ளது.

நத்தம் விஸ்வநாதன், தயாநிதி மாறன், அன்புமணி போன்றவர்கள் மட்டுமல்ல, கருணாநிதி குடும்பமே இறுகும் மோடி வலை குறித்து கவலை கொள்கின்றனர்.

இதில் விடயம் என்னவெனில், இந்த கறுப்புப் பணத்தை, இவ்வளவு பாரிய தொகையை ஏற்றிப் பறிக்க, அந்தப் பண முதலைகளால் முடியாது. நிச்சயமாக நம்பிக்கையான வேலையாட்கள் இதற்கு தேவை.

மோடியின் தந்திரம் என்னவெனில், கறுப்புப் பண பதுக்கல் குறித்து தகவல் தருபவர்களுக்கு, அதில் ஒரு பங்கு அரசினால் உத்தியோக பூர்வமாக, ஆனால் இரகசியமாக வழங்கப்படும்.

இதுவே பல முதலைகள் மாட்ட வழி வகுத்து விட்டது. சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில், பங்குபற்றியவர்களில் 82% மோடி நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஆகவே அரசியல் தூய்மையானவர்கக்கே இனி பதவி தேடிவரும். வாக்குக்கு துட்டு, அம்மா, தாத்தாவுடன் முடிகிறது.

வைக்கோ தனது எதிர்கால அரசியலை இந்த சிறந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உறுதிப்படுத்துவாரா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ, சீமான் ஆதரவு தளங்கள் கூட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் , ஆனால் நிஜத்தில் அது சாத்தியமா? அதிமுக உடைந்தால், அதிலிருந்து வரும் வாக்குகளை அல்லது பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுக்கும் அரசியல் சுத்துமாத்து தெரியாதவர்கள் இந்த இருவரும். அதிலும் வைகோ பல முன்னிலை தலைவர்களை மற்றவர்களின் சூழ்ச்சிக்கு இழந்துள்ளார். ஆனால் திமுக, பாஜக என்பன வலை விரித்து காத்திருக்கின்றன, ஜெயலலிதா பிணத்தின் முன்பே பேரங்கள் பேசி இருந்தாலும் ஆச்சரியமில்லை. வைகோவின் பிளஸ் பாயிண்ட்  திமுகவை எதிர்ப்பது, இது அடி மடட தொண்டர்களுக்கு கரும்பாக  இனிக்கும், கரை வேட்டியோட கதிரையில் இருப்பவர்களுக்கு இதை விட அதிகம் தேவை பணமும், பதவி உத்தரவாதமும். மத்தியில் பாஜகவும், காங்கிரசும் அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க முயல்கின்றன, இதுதான் நடக்கப்போகிறது. கொஞ்சகாலம் இந்த ரெண்டில் ஒரு கட்சியில் சிக்கி அதிமுக வேட்டிகள் அவிழும். திமுக சில தலைகளை விலைக்கு வேண்டி விட்டு தன  பாதையில் பயணிக்கும்.

இரையை வேடடை யாடிய பெண் சிங்கம்  அதை புதருக்குள் ஒழித்து வைத்து தனது குட்டிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் வேளையில், ஆண் சிங்கம், பெண் சிங்கத்துடனும், குட்டிகளுடனும்  போராடி இரையை பறிக்க முயல்கையில், நரிகள் அதை இழுத்துக்கொண்டு சென்று விடும். என்னதான்  திறமை, பலம், பணம் இருந்தாலும் நரிக்குணம் இல்லாவிடடால் அரசியலில் அம்போதான்.

 வைகோ ஒரு சில நரிகளுடன் நரிக் குகைக்குள் சென்றால் , ஒரு வேளை அரசியல் என்ற இரையை மீட்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Ahasthiyan said:

மக்களை அறிவில்லாதவர்களாக வைத்துக் கொண்டே, தமது கருத்துக்களை திணித்து, மீடியா, அரசியல் தலைமைகளை திணித்தது முன்னர் நடந்தது.

இன்று சோசியல் மீடியா அனைத்தையும் தலைகீழாக புரட்டிப் போட, மீடியா முதலைகள், அரண்டு போய் இருக்கிறார்கள்.

சமீபத்தைய உதாரணம், டொனால்ட் டிரம்ப், பிரி எக்ஸிட் முடிவுகள்.

தமிழகத்தில், சசிகலா 'அம்மாவை', மீடியாக்கள் திணிக்க முனைந்தாலும், சோசியல் மீடியாக்கள், அதை தடுத்து விடும் போல தெரிகிறது.

அதே சோசியல் மீடியாக்கள், ஸ்டாலினையும் வறுத்து எடுக்கின்றன. எதற்கு எடுத்ததும், கலைனரிடமே ஓடுகிறார், சிறு பையன் போல. இவர் தேறுவாரா என்கின்றன.

வைக்கோ குறித்து நல்ல கருத்துக்கள் இல்லை எனினும், ஊழல் இல்லாத மனிதர் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைகள் உருவாகுவது அல்லது உருவாக்கப்படுவது தன்னியல்பாகத் தோன்றுவது எனப் பல்வேறு சூழல்களைக் கொண்டபோதிலும் தமிழகத்தின் இன்றைய நிலை சற்றுச் சிக்கலானது. சரியான தலைமையற்ற தமிழகமானது தமிழருக்குப் பாதிப்பை ஏற்படுத்தவல்லதென்பதைத் தமிழகத் தலைமைகள் புரிந்துகொண்டாலன்றி, இவர்களின் சொத்து தலைமை கட்சி போன்ற இழுபறிகள் வடவருக்கே வாய்ப்பை வழங்கும். தமிழகத்தினது தலைமைகள் சரியாகச் சிந்திக்காவிடின் பாரிய பின்னடைவை தமிழக மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.  ஆனால் நாதமுனியவர்களது எதிர்பார்ப்புச் சரியாக இருப்பினும், நிழலியவர்கள் சுட்டியுள்ளதும் யதார்தமானது. ஆனால் அரசியலில் நிரந்த எதிரியுமில்லை நண்பனுமில்லை என்ற நிலையில் எதுவேண்டுமானாலும் நிகழலாம். 

தமிழகத்திலே உறுதியான தலைமையின் தேவையென்பது தமிழீழ மக்களுக்கும் அவசியமானது. இந்திய அரசியல் சட்டமென்பது உதவாவிடினும்,  சட்டத்திற்கப்பால் குறைந்தபட்சம் குரல்கொடுக்கவாவது செய்வார்கள். பலவீனமான தமிழகமென்பது தமிழரை மேலும் படுகுளிக்குள் தள்ளிவிடும்.

தமிழகம் வலது இடது சாதீய தமிழ்த் தேசிய எனப்பல்வேறு திசைகாணும் அரசியல் கட்சிகளாக இழுபடுவதைவிட்டு இனியென்றாலும் தமிழன் தமிழகம் என்ற ஒருங்குநிலையை அடையாவிடில் வடவரது மொழித்திணிப்பு முதல் பொருண்மியச் சுரண்டல்வரை தவிர்க்கமுடியாததாகிவிடும். எதிர்காலத்தில் தமிழகம் தனித்துவமாகத் தனது அடையாளங்களையும் இருப்பையும் தக்கவைக்க வேண்டித் தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.ஆனால் கட்சிகளும் காட்சிகளும் பெட்டிகளாலும் அதிகாரவர்க்கத்தாலும்  தீர்மானிக்கப்படும் நிலையென்பது தெளிவாத் தெரியும் நிலையில், வை.கோ முன்னகர இன்னும் அதிகமாகவும் உறுதியாகவும் உழைக்கவேண்டிய சூழலே உள்ளது. அவரது கடந்தகால மக்கள் நலக்கூட்டணி போன்ற நிலையற்ற போக்கும் ஒரு நெருக்கடியே.   சீமானைப்பொறுத்தவரை நிறைய நகரவேண்டியுள்ளது. ஏனெனில் அவரது தீவிரமான சில நிலைப்பாடுகள் சார்ந்து இந்திய உளவுத்துறையினது செயற்பாடுகள் எப்படி மக்களைக் குழப்பும் நகர்த்தும் எனபவற்றை மதிப்பீடு செய்து நகரும் வேகம் என்பனவுமே தீர்மானிக்கும்.சடுதியாக அ.தி.மு.க சின்னம்மா என்ற கோசத்தோடு நகரமுற்பட்டுள்ள திடீர் சூழலானது தமிழகத்தை  எங்கு கொண்டு சென்றுவிடுமோ(?) என்ற ஐயமே மேலோங்கியுள்ளது. திரியை இழுத்துவந்த நாதமுனியவர்களுக்கு நன்றி.    
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு அகண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதை உண்மையான  ,தூய்மையான அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.