Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert

Featured Replies

இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert

எலும்பு தேய்மானம்

40 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்னை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை ஊட்டச்சத்து நிபுணர், தாரிணி கிருஷ்ணன் விளக்குகிறார்.

Dharani_krishnan_15230.jpgஎலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, குழந்தைகளைத் தூக்கி விளையாடுவது, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பது, எங்கு போனாலும் நடந்துசெல்வது... என கை, கால்களுக்கு உழைப்பு இருந்தது.

ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

 

skeleton-anatomy_1048-1821_DC_15168.jpg

எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து டி.வி சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.


bone_15116.jpg

எலும்பு தேய்மானத்துக்கு சில காரணங்கள்...
உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது. காபி, டீ போன்ற பானங்களை அதிகமாகக் குடிப்பதால், உடலில் உள்ள கால்சியம் குறையும். குளிர்பானங்கள், கால்சியம் சத்தை அழிக்கும் தன்மைகொண்டவை.

பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் துரித உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனி ஆகியவை எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகின்றன.

உணவுகள்
பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்துக்கு உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், உணவிலும் கவனம் செலுத்தவேண்டும். எலும்பை வலுப்படுத்த, கால்சியத்தோடு புரதச்சத்தும் தேவைப்படுகிறது. அதனால் புரதம், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பாலாடைக் கட்டி, பால் பொருட்கள், கீரை வகைகள், காய்கறிகள், மீன், முட்டை, கோழி, ராகி, கேழ்வரகு, கொள்ளு, பருப்பு வகைகள், பாதாம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகியவற்றில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைவாக உள்ளன. இவற்றில் ஏதேனும் சிலவற்றையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

shutterstock_145891655_DC_16221.jpg

இதேபோல குழந்தைகளும் படிக்கும் வயதில் நன்றாக ஓடி, ஆடி விளையாட வேண்டும். அப்படி விளையாடாமல், செல்போன், டி.வி., வீடியோகேம்ஸ் என இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே, சிறு வயதில் இருந்தே கால்சியம் மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

பெண்களுக்கு 40 வயது தாண்டியதும் மெனோபாஸ் வந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மூட்டுவலி, முதுகுவலிப் பிரச்னைகள் வருகின்றன. அந்தச் சமயத்தில், கால்சியம் அதிகம் உள்ள நாட்டுக்கோழி, மீன், இறால், முட்டை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுகளைச் சேர்த்துகொள்ள வேண்டும்.

உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்!

http://www.vikatan.com/news/health/74562-tips-to-prevent-arthritis.art

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, குழந்தைகளைத் தூக்கி விளையாடுவது, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பது, எங்கு போனாலும் நடந்துசெல்வது... என கை, கால்களுக்கு உழைப்பு இருந்தது.

இப்ப எங்கங்க வேலை செய்றாங்க சொன்னால் கூட நீ செய்தால் கொறைஞ்சா போயுடுவ என்ற கேள்வி வேறtw_confused:tw_confused: 

ஆனாலும் குடும்பத்திற்க்காக தேய்வது பெண்களே  பாராட்ட வேண்டும் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புதிதாக ஏறபட்டுள்ள பிரச்சனை இது.நான்காவது கிழமையாகவும் வலி நிவாரணியோடும் கால் வலியோடும் ஒரு நீண்ட போராட்டம்..இப்படி ஒரு வலியை தாங்குவதை விட இறப்பு வலி குறைவானது என்று நினைக்கிறன்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

படுத்து கிடக்கிறவங்களுக்கு தான் இந்த நோய் வரும் என்று இல்லை.சிறு வயது முதல் விளையாட்டு கூடுதல் உடல் உழைப்பு இவற்றாலும் வரலாம்.நானும் இந்த நோயால் மிகவும் அவதிப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

எனக்கு புதிதாக ஏறபட்டுள்ள பிரச்சனை இது.நான்காவது கிழமையாகவும் வலி நிவாரணியோடும் கால் வலியோடும் ஒரு நீண்ட போராட்டம்..இப்படி ஒரு வலியை தாங்குவதை விட இறப்பு வலி குறைவானது என்று நினைக்கிறன்.

 

நீங்கள் மனதை தளர விடாதீர்கள்  உங்கள் மனதே சிறந்த மருந்தும் கூட 

4 minutes ago, ஈழப்பிரியன் said:

படுத்து கிடக்கிறவங்களுக்கு தான் இந்த நோய் வரும் என்று இல்லை.சிறு வயது முதல் விளையாட்டு கூடுதல் உடல் உழைப்பு இவற்றாலும் வரலாம்.நானும் இந்த நோயால் மிகவும் அவதிப்படுகிறேன்.

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

 

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

9 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் மனதை தளர விடாதீர்கள்  உங்கள் மனதே சிறந்த மருந்தும் கூட 

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

முனி இதற்கு நல்ல இயக்கை மருத்து வல்லாரை, இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள் மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என் வீட்டில் இதை வழர்ந்து விருகின்றேன். இந்த கிழமை முழுக்க வல்லாரை சம்பல் & மூளை கீரையும் தான். எனக்கு முழங்கால் மூட்டு வலி வந்தால்
உடனே வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வல்லாரை சம்பலை அள்ளிப் போட்டு சாப்பிடுங்கள், எல்லா வலிகளும் விரைவில் போய்விடும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

என்னது இளந்தாரியோ வயது போட்டுது  ஆனால் இப்ப நோய் வயது பார்க்கிறதில்லை அண்ணே  ம்  வயது போனால் மிகவும் கஸ்ரமே

7 hours ago, வந்தியதேவன் said:

முனி இதற்கு நல்ல இயக்கை மருத்து வல்லாரை, இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள் மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என் வீட்டில் இதை வழர்ந்து விருகின்றேன். இந்த கிழமை முழுக்க வல்லாரை சம்பல் & மூளை கீரையும் தான். எனக்கு முழங்கால் மூட்டு வலி வந்தால்
உடனே வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வல்லாரை சம்பலை அள்ளிப் போட்டு சாப்பிடுங்கள், எல்லா வலிகளும் விரைவில் போய்விடும்

 

 

மிக்க நன்றி தகவலுக்கு எனக்கு பிடித்தது சம்பல் சேர்க்க வேண்டியதுதான்  வல்லாரை சம்பல் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வலி தொடங்கி 2 மாதம்...கால் ஒரு சின்ன நுல் இழையில் தொங்கிற மாதிரி ஒரு உணர்வு...இன்னும் 3 மாதம் பெட்றெஸ்ட் எடுத்துட்டு அதுக்கு பிறகும் நோவு இருந்தால் வா என்று குட் பாய் சொல்லி வீட்டுக்கு அனுப்பீட்டீனம்.. .பார்த்த வைத்தியரை நினைக்க கோவம்;கோவமா வருது... :(

Edited by யாயினி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்று நான்கு மாத கட்டாய ஒய்விலிருந்தால் ஓரளவுக்கேனும் எலும்பு தேய்மான நோயிலிருந்து விடு பட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா.முடிந்தவர்கள் பதில் தந்தால் நன்று.....காரணம் என்ன வேனில் கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இந்த நோய் தாக்கத்தினால் பெரும் அவதிப்பட்டு இருக்கிறேன்.. இன்னும் இதற்கு நிரந்தர தீர்வு என்று ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை..ஒரு வைத்திய சிகிச்சை நிபுணரை சந்தித்த போது அவர் சொல்லியது கிட்டத் தட்ட முன்று மாதங்களுக்கு மேல் ஓய்விலிருந்தால் தீர்வு கிடைக்கலாம் என்பது வெறும் ஊகம் மட்டுமே..தற்காலிக நிவாரணியாக மருந்தாவது தாருங்களன் என்று அந்த வைத்திய நிபுணரைக் கேட்ட போது/ நோ மருந்தும் தர மாட்டன் போய் விட்டு நான் சொன்ன காலப் பகுதிக்கு பின் வா என்றே பதில் தரப்பட்டது...


ஆனால் எனக்கு அந்தளவு காலம் மட்டும் ஓய்விலிருக்கவே முடியாத நிலை..ஒரு சில மணித்தியாலங்களே ஒய்வு எடுக்க முடியாதவள் எப்படி மாதக்கணக்கமாக ஓய்விலிருக்க முடியும்...ஒரு சின்ன நுhலில் தொங்குவது போலத் தான் என் கால் தொங்கிட்டு இருப்பது போண்ற உணர் அது தான் உண்மையும் கூட...ஒன்றாறியோவில் அண்மைய காலங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார வெட்டுக்களினால் உண்மையாக கொடுக்க வேண்டிய சேவைகளை கூட கொடுக்க மறுக்கிறார்கள்...அந்த நிலை தான் எனக்கும்...எல்லாவிதமாகவும் என் நிலையை எடுத்து விளக்கியும் சில விடையங்களை நம்ப மறுக்கும் வைத்திய வட்டாரங்களின் கவனக்குறைவு நடந்து கொண்டே இருக்கிறது..தயவு செய்து எவ்வளவுக்கு ரோஜ்வலிக்கு போவதை தவிர்க்க முடியுமோ அந்தளவுக்கு தவிர்த்துக் கொள்ளுங்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் அதிகம் சத்தான உணவுகளாகப் பார்த்து சாப்பிட வேண்டும்.பால்,கீரை,இறைச்சிவகை,பழங்கள் போன்றன...பெண்களுக்கு முதுகு வருத்தம் வாறாது சத்தான உணவு உண்ணாமை என்பது எனது கருத்து...யாராவது வைத்தியம் தெரிந்தவர்கள்,நெடுக்ஸ் போன்றவர்கள் யாயினிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2016 at 1:49 AM, ஈழப்பிரியன் said:

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

அறுவது தாண்டீற்றுதா ? அப்ப இனிப் பரவாயில்லை tw_blush:

 

 

 

யாயினி வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். - இது நான் சொல்லவில்லை. பாட்டிவைத்தியத்தில் இருந்து வெட்டி ஒட்டியது.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.

சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேற்கூறியவை இலகுவாகக் கிடைக்கும் பொருட்கள். இவற்றைக் கொண்டு முயன்று பார்க்கலாம்.

முக்கியமாக வைட்டமின் D குளிகையை ஒரு ஒருநாளுக்கு ஒன்று கட்டாயம் எடுங்கள். இது நாமே கடைகளில் வாங்க முடியும். இங்கு வைத்தியர்கள் எலும்புத் தேய்மானத்துக்கு இதனையே பரிந்துரைக்கின்றனர்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி மற்றும் சுமோ அக்கா.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட்டு வலிகள் வருபவர்கள் இப்படியான பாதுகாப்பு அல்லது நிவாரண அணிகளை அணிந்து பாருங்கள். சில வேளைகளில் நிவாரணம் தரலாம்.

tsm_rackenbandage_pro_rackengurt_3513.jpg

e90d2026af30b66b3e101ac598eca6d2_270x270.jpgEllenbogenbandage bei leichten Beschwerden, Fa. Bort Medicals-l300.jpg

 


உணவுவகைகளும் பல நோய் நொடிகளுக்கு காரணமாக இருந்தாலும்......

உலகளாவிய இன்றைய காலநிலைகளும்..... நாகரீக மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல வலிகளுக்கு நாகரீக உடைகளும் ஒரு காரணம்......
நிலத்தில் இருந்து சாப்பிட்ட காலம் போய் செற்றி சோபாவில் இருந்து சாப்பிடுகின்றோம்.
குந்தியிருந்து மலசலம் கழித்த காலம் போய் இன்று கதிரையில் அமர்ந்திருப்பது போல் காலைக்கடன்களை கழிக்கின்றோம்.

நிலத்தில் இருந்து சாப்பிட்டால் எல்லா அவயங்களுக்கும் பயிற்சி..


குந்தியிருந்து காலைக்கடன்களை கழிக்கும் போது பெருங்குடல் சிறுகுடல் தொடக்கம் சிறுநீரகம் வரைக்கும் புது நிவாரணம் கிடைக்கின்றதாம்..அழுத்தங்கள் மூலம் அனைத்தும் சுகம் பெறுமாம்.
 எம் மூதாதையருக்கு இல்லாத வருத்தங்கள் இன்றைய சமுதாயத்தினருக்கு வருகின்றது கொஞ்சம் சிந்திக்கலாம்.

மொடேர்ன் வாழ்க்கை மோட்டு வருத்தங்கள்.

மூட்டு வலிகளுக்கு பாத அணிகள் மிக மிக முக்கியம்.

வலிகள் உள்ளவர்கள் வைத்தியம் சம்பந்தப்பட்ட பாத அணிகள் விற்பவர்களிடம் கலந்தாலோசித்து வாங்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
விலைகள் அதிகம்.ஆனால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
 

  • தொடங்கியவர்

பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்! தடுப்பது எப்படி?

 

 
182657432-crop-56a6d9673df78cf772908b82

பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு.ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவது தான்.

Anaemia.jpg

எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்

இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயணிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர்.

சூரிய ஒளியினால் கிடைக்கக் கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்பு. கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி தேவைப்படுகிறது. இளம்வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும்.

அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்ஷியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருதுவதும் கால்ஷியம் குறைய காரணமாகின்றது.

கால்ஷியம் நிறைந்த உணவுகள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்ஷியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்ஷியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

13-Probiotic-Filled-Foods-05-sl.jpg

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்ஷியம் அபரிமிதமாக உள்ளது. அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்ஷியம் உள்ளது.

எள், கால்ஷியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்ஷியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விட அதிக கால்ஷியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்ஷியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி.

பெரியவர்கள் கஞ்சி கூழாக செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும்,வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்குஉண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்

எலும்புகள் உறுதியாக யோகா அல்லது உடற்பயிற்சி மிகவும் அவசியம். இத்தகைய பயிற்சிகள் செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்.

Dhanur_Asana.JPG

வலுவான தசைகள் எலும்புகளை பாதுகாக்கும். ஒல்லியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பலமாக உறுதியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம். பிற்காலத்திற்கான பயத்தை சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும்.

இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

ச. பாலகிருஷ்ணன், 
கோயம்பத்தூர்

http://www.dinamani.com/health/womens-health/2016/dec/20/பெண்களுக்கு-ஏற்படும்-எலும்புத்-தேய்மானம்-தடுப்பது-எப்படி-2618736.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.