Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

Featured Replies

'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

 

 

என்ன நடக்கிறது அதிமுகவில்?


அதிமுகவில் அடுத்த பொது செயலாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீங்கி, பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தும் பணி அதி விரைவாக நடந்து வருகிறது.சீனியர் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தான் பொது செயலாளராக வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

sasi_car_21449.jpg


இன்று காலை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓபிஎஸ்,சசிகலா, அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அங்கிருந்து கிளம்பி தலைமை செயலகம் சென்றனர். இன்று கூடிய அமைச்சரவையிலும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.


தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக  தகவல்கள் வெளியாகின. கடந்த 28 ஆண்டுகளாக, அஇஅதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை  , பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.


 ஆட்சி... கட்சி... அதிகாரம்?

OPS_jaya_21360.jpg


தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல், மத்திய அரசின் விருப்படியும் இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா.முதல்வரின் பதவிகள் பங்கீடு செய்யப்பட வேண்டும் என பேச்சு வந்த போது, ஆளுநர் வித்யாசாகர் ராவின் சாய்ஸாக இருந்தவர் பன்னீர் செல்வம் தான்.முதல்வர் இருந்து இருந்தாலும், அவரின் சாய்ஸும் ஓபிஎஸ்ஸாகத்தான் இருக்கும் என்பதால், அந்த முடிவில் தீர்மானமாக இருந்தாராம் சசிகலா. அதனையொட்டித்தான் மத்திய அரசின் விருப்பப் பட்டியலில் இருந்த  ஓ பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் தமிழக முதல்வர் பதவி வழங்கப்பட்டதாம். ஆனால், இதை மற்ற மன்னார்குடி குடும்பத்தினர் ரசிக்கவில்லை என்கிறார்கள். கட்சி அதிகாரத்திலும், தம்பிதுரையை முன்னிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டதாம் மத்திய அரசு. அதே போல், மன்னார்குடி குடும்ப ஆதிக்கத்தால், தனது செல்வாக்கை பெருமளவு இழந்த செங்கோட்டையனும், சசிகலாவுக்கு எதிராக இருந்ததாக செய்திகள் வெளியாகின. இவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறாராம் சசிகலா. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இதன்மூலம் சுற்றிவந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் செங்கோட்டையன்


அதே போல் மத்திய அரசிடம் இணக்க போக்கை கடைப்பிடிக்கவே பறக்கும் சாலை திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றிற்கு பரஸ்பர ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், மத்திய அரசிடம் சுமூகமான அணுகுமுறையே தொடர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் சசிகலா.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், சசிகலாவை முன்மொழிய தொடங்கி இருக்கிறார்கள். மக்களிடம் இருக்கும் சில அதிருப்தியை போக்க, நேற்று அமைச்சர்களுடன், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலை, போயஸ் கார்டன் வந்தவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் சசிகலா. 

sasi_people_21460.jpg


அதற்குப்பின்னர் அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு சேர, கட்சியை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் நிழலாக இத்தனை ஆண்டுகள் இருந்த சசிகலா கட்சியின் பொது செயலாளராகி, கட்சியையும் தங்களையும் வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டர. கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள், அதிமுக பொது செயலாளராக சசிகலா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார் அதிமுகவின் சீனியர் நிர்வாகி ஒருவர். 


ஜெயலலிதா மறைவு சோகம் ஒரு புறம் இருந்தாலும், கட்சி தன் அடுத்த கட்ட பணிகளில் வேகமாக சுழன்று கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/74643-sasikala-to-be-the-new-general-secretary-of-admk.art

அ.தி.மு.க வினருக்கு தற்போது தலைவரோ பொதுச்செயலாளரோ தேவையில்லை. அவர்களுககு உடனடித்தேவை அம்மாவை நினைதது காலில் விழுந்து கூழை கும்பிடு போட ஒருவரே. காலாகாலமாக கும்பிடு போட்டு குனிந்த அவர்களின் இடுப்பு நேராக நிற்க மிகவும் கஷ்ரபபடுகிறது.

  • தொடங்கியவர்

 

 

51 minutes ago, tulpen said:

அ.தி.மு.க வினருக்கு தற்போது தலைவரோ பொதுச்செயலாளரோ தேவையில்லை. அவர்களுககு உடனடித்தேவை அம்மாவை நினைதது காலில் விழுந்து கூழை கும்பிடு போட ஒருவரே. காலாகாலமாக கும்பிடு போட்டு குனிந்த அவர்களின் இடுப்பு நேராக நிற்க மிகவும் கஷ்ரபபடுகிறது.

அவர்கள் தொடங்கிவிட்டார்கள்...:grin: இது இன்று நடந்தது.

  • தொடங்கியவர்

சசிகலா பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

  •  

அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரின் தோழியான வி.கே. சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

சசிகலா
 

அவர் இன்று விடுத்திருக்கும் ஒரு அறிக்கையில், ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டு, அவருடைய சிந்தனையை உள்வாங்கியிருப்பவர் என பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப் போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழியென பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அதற்கு மாற்றுக் கருத்து அ.தி.மு.கவில் இல்லை என்றும் அப்படி மாற்றுக்கருத்துக் கொண்டிருப்பவர்கள் அ.தி.முகவினர் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.கவை அழித்திட வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்புவதாகவும் ஒரு புறம் ஜெயலலிதாவைப் பாராட்டி, இரங்கல் தெரிவித்துவிட்டு மறுபுறம் கட்சி சார்ந்த கோமாளிகளின் மூலம் வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறியிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india-38274726

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நவீனன் said:

 

 

அவர்கள் தொடங்கிவிட்டார்கள்...:grin: இது இன்று நடந்தது.

அட கறுமம்பிடிப்பாரே, இவங்களை யாராலும் காப்பாற்ற முடியாது, உலகம் அழிந்தாலொளிய

  • தொடங்கியவர்

கட்சித் தலைமையைக் கைப்பற்றுகிறாரா சசிகலா?

  •  

ஜெயலலிதா மறைந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் அவரது தோழியான சசிகலா
 

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார். அவர் கடந்த 5ஆம் தேதி காலமான நிலையில், புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சிப் பதவி காலியாகவே இருந்துவந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடனேயே இருந்துவரும் அவரது தோழி வி.கே. சசிகலா கட்சியின் தலைமைப் பதவிக்கு குறிவைக்கக்கூடும் என்ற பேச்சுகள் உலவிவந்தன. ஆனால், அது குறித்து கட்சியிலிருந்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், நேற்று மாலை சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற படம் எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி 

இந்த நிலையில், இன்று காலையில் வெளிவந்த தமிழ் காலை நாளிதழ் ஒன்றில் வெளியான முழுப்பக்க விளம்பரத்தில், "புரட்சித் தலைவி அம்மாவிற்கு காலன் தன்னை வென்றிடுவான் என்று தெரிந்திருந்தால் தனக்குப் பிறகு எல்லாமே சின்ன அம்மாதான் என்று சொல்லி இறைவனடி சேர்ந்திருப்பார்" என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அளித்தவர் பெயர் ஏதும் இல்லாமல், "விசுவாசத் தொண்டனின் மனசாட்சி" என்ற பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

பதினொரு மணியளவில் ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பொன்னையன்,புதிய தலைமைத் தேர்வுசெய்ய எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவின் ஆத்மா வழிகாட்டும்" என்று கூறினார்.

   

அதே நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் முதலில் ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். அதற்குப் பிறகே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது போயஸ் தோட்ட இல்லத்தைப் பார்ப்பதற்கு வந்த தொண்டர்களை வீட்டு வாயிலில் நின்ற சசிகலா சந்தித்தார். தொண்டர்கள் அவரிடம் அழுதபடி துக்கம் விசாரித்தனர். இந்தக் காட்சிகள், அ.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன. அந்தப் புகைப்படமும் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

திடீரென, அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்றபோது, சசிகலாவைச் சந்தித்து அவரைக் கட்சித் தலைமையேற்கவருமாறு அழைத்தனர் என்ற செய்தியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை நகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சசிகலாவிடம் பேசுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன.

அதிமுக கட்சி தொண்டர் வெளியிட்ட விளம்பரம்

 

"சசிகலாவை மூத்த தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுப்பது போன்ற செய்திகளை ஜெயா தொலைக்காட்சியே வெளியிடுவது போன்றவை தொண்டர்களின் உணர்வை அறிய நடத்தப்படும் முன்னோட்டமாக இருக்கலாம். இன்னும் நான்கரை ஆண்டுகால ஆட்சி இருக்கும் நிலையில், அதை இழந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சசிகலாவின் பின் ஒன்றுதிரளக்கூடும். தவிர, கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாகவே கட்சியின் நிர்வாகத்தில் சசிகலாவுக்குப் பங்கு இருந்திருக்கிறது. அதனால், கட்சி நிர்வாகிகளைக் கையாளுவது அவருக்கு சிரமாக இருக்காது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா.

இதற்குப் பிறகு செய்தித் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "கட்சியை முன்னெடுத்துச்செல்ல அவரே சரியானவர். அதனால், அவர் தலைமையேற்க வேண்டும் என்று கோரினோம்" என்றார்.

அதற்குப் பிறகு, அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளும் சசிகலாவே கட்சியை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்ட பகுதியில் கூடிய அ.தி.மு.க. தொண்டர்கள் சசிகலா கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

ஆனால், மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியருமான விஜய் ஷங்கர், தொண்டர்களை எளிதில் சமாதானப்படுத்திவிட முடியும் என்கிறார்.

"அ.தி.மு.கவைப் பொறுத்தவரை ஆட்சியின் பலன்கள், அனைவருக்கும் சென்று சேரும்படி, கட்சியின் கடைக்கோடி வரை சென்று சேரும்படி பார்த்துக்கொள்ளும் ஒரு கட்சி. இன்னும் நான்கரை ஆண்டுகால ஆட்சி மீதமிருக்கும்போது, கட்சித் தொண்டர்களைச் சமாளித்துவிட சசிகலாவால் முடியும். ஆனால், பொதுமக்கள் சசிகலாவை ஏற்பார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் விஜய ஷங்கர்.

தவிர, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த விவகாரத்தை எப்படி பார்க்கும் என்பதும் முக்கியம் என்கிறார் அவர்.

கட்சித் தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா வெற்றிபெற்றாலும்கூட, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவைதான் சசிகலாவின் முன்னிற்கும் உண்மையான சவாலாக இருக்கும்.

போஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு சசிகலா தலைமையில் அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் 

ஆனால் கட்சியின் பொதுக்குழுதான் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு என்ற வகையில், புதிய தலைமையைத் தேர்வு செய்வதில், பொதுக் குழு உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும். பொதுக்குழுவின் இந்தக் கூட்டம் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, 1987ல் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இறந்தபோது , அவருக்குப் பின் தலைமைப்பதவிக்கு போட்டியிட, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனை ஒரு கோஷ்டியும், ஜெயலலிதாவை மற்றொரு கோஷ்டியும் முன்னிறுத்தி கட்சிப் பிளவுக்கு வழி வகுத்தது போன்ற நிலை இது வரை இப்போது நிலவுவதாகத் தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/india-38274724

  • தொடங்கியவர்

தொடருது காலில் விழும் கலாச்சாரம்: சசிகலாவுக்கும் அதே மரியாதை

 

Tamil_News_large_166634420161210223055_318_219.jpg

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது காலில் விழும் கலாச்சாரத்தை தற்போதைய அமைச்சர்களும் கடைபிடித்து அதனை துவக்கிவிட்டனர்.
இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அங்கு சசிகலாவும் வந்திருந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ., உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் சிலர் அருகே நின்றிருந்த சசிகலா காலில் திடீரென விழுந்து வணங்கினர். இதன் காட்சி டி.வி.,களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது அந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய அரசியலில், வயது வித்தியாசம் இன்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், கட்சி நிர்வாகிகள் ஜெ.,காலில் விழுவதை கலாச்சாரமாக வைத்திருந்தனர். அதே கலாச்சாரம் இன்று அரங்கேறியது.
தற்போது ஜெ.,மறைந்ததையடுத்து அவரது இடத்திற்கு வர துடிக்கும் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி உட்பட பல அமைச்சர்கள் ஜெ.,படத்திற்கு மலர் தூவி , சசிகலா காலில் விழுந்து வணங்கி சென்ற காட்சி வீடியோக பதிவாகியுள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1666344

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆச்சரியம்.. இதில கிடக்கு. எம் ஜி ஆருக்கு வால் பிடிச்ச ஜெயலலிதா தமிழகத்துக்கு அம்மாவானார். ஜெயலலிதாவுக்கு வால்பிடிச்ச சசிகலா.. தமிழத்துக்கு ஆத்தாவாவது ஒன்னும்.. ஆச்சரியமே இல்லை. தமிழக மக்களின் மூளைக்குள் கிடக்கும் களிமண்ணை அகற்றாமல்.. உது முடிவுக்கு வராது. அதிமுக என்றால் என்ன திமுக என்றால்.. என்ன. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார், காமராசர், அண்ணா,எம்ஜிஆர் போன்றவர்களின் படத்தை வைத்து காலத்தை ஓட்டியது போல் ஜெயலலிதாவின் படத்தை வைத்து இன்னும் ஒரு பத்து வருடத்தை கடத்தி விடலாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மத்திக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் 

தேவையான நேரம் வாங்கிறது விக்கிறதுக்கு சரியான கழுதை 
நாடு முக்கியம் ...... தமிழ் முக்கியம் அது இது என்று மத்தியை 
தொந்தரவு செய்யாது 
மத்தி போடும் இலை குழையை சப்பிவிட்டு படுத்திடும் ! 

  • கருத்துக்கள உறவுகள்

 

[Organizational science/Organizational design/Organizational psychology]

காலில் விழுவது ஏன்?

http://www.hotstar.com/tv/neeya-naana/1584/special-tribute-to-jayalalithaa/1000160228

 

Edited by Knowthyself

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.