Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் மகிந்த (மேலதிக இணைப்பு).

Featured Replies

வாகரையில் மகிந்த (மேலதிக இணைப்பு).

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை காலை மேற்கொண்டிருந்தார்.

மகிந்தவுடன் படைத்தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சா ஆகியோரும் சென்றிருந்தார்கள். மகிந்தாவும் அவரது தளபதிகளும் விமானப்படை உலங்குவானூர்தி மூலம் வாகரையை அடைவதற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.

தென்னிலங்கையில் நாளை நடைபெற உள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் மகிந்த வாகரைக்கு விஜயம் மேற்கொண்டது தனது இராணுவ வெற்றியை தெற்கில் காண்பிப்பதற்கே என தெரிவிக்கப்படுகின்றது.

வாகரைக்கு சென்ற மகிந்த அங்கு சில மீற்றர்களுக்கு ஒரு இராணுவ வீரர்கள் இயந்திரத்துப்பாக்கியுடன் அணிவகுத்து காவல் காக்க துருப்புக்காவி கவசவாகனத்திலும் பயணம் செய்தார். அதன்பின்னர் அவர் தன்னுடன் கூட்டிச்சென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது:

விடுதலைப்புலிகள் பேச்சுக்களுக்கு வருவார்களானால் நான் அரசியல் தீர்வை வழங்குவேன் ஆனால் விடுதலைப்புலிகள் அதற்கு மறுத்தால் அவர்களை தோற்கடிப்பேன். நான் இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை ஆனால் எனது நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் திருமலை கடற்படைத்தளத்திற்கு விஜயம் செய்த மகிந்த அங்கு நாட்டின் பாதுகாப்புச் சபையை கூட்டியதுடன், அவரது இரண்டாவது மகனின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு விளம்பரம் செய்திருந்தார்.

எனினும் கடற்படையில் இணைந்த அவரது மகன் ஜோசித ராஜபக்சா இரு வார பயிற்சியுடன் புலைமைப்பரிசில் பெற்று லண்டன் சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

rajapakse_vaharai_01.jpg

rajapakse_vaharai_05.jpg

வாகரைக்கு போக முன்னம் புத்த விகாரைக்கு போய் பாதுகாப்பாய் திரும்பி வரவேணும் எண்டு நேத்தி வைக்கேக்கை எடுத்த படம் ஒண்டும் கிடைக்க இல்லையே..??

தங்கள் வீரர்களுடன் மகிந்த ராஜபஹ்ஷ

post-2276-1170536036_thumb.jpg

வாகரையில் கருணாகுழு ஒட்டுண்ணிகளின் மத்தியில் மகிந்த ராஜபஹ்ஷ

post-2276-1170535887_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கன்ரை பாணியிலை உந்தமனுசன் என்ன சோபனை காட்டுறாரோ? B)

புண்பட்ட உள்ளங்கள் தேத்திக் கொள்ள...

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=020207

யாழ்பாணம் மீட்டால் பனங்கொட்டையழுக்கு தமிழீழம் கிடைச்ச மாதிரித்தானே. பொப்கோனுகளை வேண்டி தமிழீழம் கிடைக்கிறதை கொண்டாட தயார் ஆகுங்கோ.

தங்கள் வீரர்களுடன் மகிந்த ராஜபஹ்ஷ

post-2276-1170536036_thumb.jpg

வாகரையில் கருணாகுழு ஒட்டுண்ணிகளின் மத்தியில் மகிந்த ராஜபஹ்ஷ

post-2276-1170535887_thumb.jpg

இவர்களைப் பார்க்கும் போது உண்மையான வீரர்கள் போல் தோன்றவில்லை. பார்ப்பதற்கு ஏதோ தமிழ் சினிமாப்படத்தில் வரும் வில்லன் கோஸ்டி போல் உள்ளது. முதலில் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் உண்மையானவையா அல்லது விளையாட்டுத் துப்பாக்கிகளா என்று விளங்கவில்லை. தலையில் கறுப்புத் துணியைக்கட்டி விட்டால் எல்லோரும் ரம்போ ஆகி விடமுடியாது. இந்தப் படத்தில் நிற்கும் குரங்குகளில் ஒன்றுதான் ஐயா மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், மாமனிதர் ரவிராஜ்ஜையும் மற்றும் பல அப்பாவிப் பொது சனங்களையும் கொன்று குவித்திருக்குங்கள் என நினைக்கின்றேன். உங்கள் வீட்டு கைவிளக்குமாறுகளால் இந்தக் குரங்குகளின் படத்துக்கு ஆரார்த்தி எடுத்து, விரைவில் நாசமாகப் போக எனச் சபித்து கடவுளை பிரார்த்தியுங்கள்.

புண்பட்ட உள்ளங்கள் தேத்திக் கொள்ள...

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=020207

யாழ்பாணம் மீட்டால் பனங்கொட்டையழுக்கு தமிழீழம் கிடைச்ச மாதிரித்தானே. பொப்கோனுகளை வேண்டி தமிழீழம் கிடைக்கிறதை கொண்டாட தயார் ஆகுங்கோ.

அடிக்கடி பொப்கோனை உச்சரிக்கின்றீர்கள். பொப்கோன் என்றால் தங்களுக்கு ரொம்ப இஸ்டமோ? தமிழீழத்திற்கும் பொப்கோனிற்கும் உள்ள தொடர்பை சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புண்பட்ட உள்ளங்கள் தேத்திக் கொள்ள...

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=020207

யாழ்பாணம் மீட்டால் பனங்கொட்டையழுக்கு தமிழீழம் கிடைச்ச மாதிரித்தானே. பொப்கோனுகளை வேண்டி தமிழீழம் கிடைக்கிறதை கொண்டாட தயார் ஆகுங்கோ.

ஆறு வயதுப்பிள்ளை போல பொப் cஒர்ன் சாப்பிட்டுக்கொண்டு தமிழ் ஈழம் காணலாம் என்றெல்லாம் யாழ் தளத்தில் உமக்கு எழுதுவதுக்கு என்ன அருக்கதை உண்டு. உம் போல ஆட்கள் ஒரு டொலருக்கும் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கத்தயங்க மாட்டீர்கள். யார் நீங்கள்? குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்புகள். ஒன்று மட்டும் நிச்சயம் காகம் திட்டி மாடு சாகப் போவதில்லை.

யாழ்பாணம் மீட்டால் பனங்கொட்டையழுக்கு தமிழீழம் கிடைச்ச மாதிரித்தானே. பொப்கோனுகளை வேண்டி தமிழீழம் கிடைக்கிறதை கொண்டாட தயார் ஆகுங்கோ.

இதோ பார்றா குறுக்காலைபோன மாங்கொட்டையனை.

கிட்டத்தட்ட 300 விடுதலைப்புலிகள் நின்று சண்டை பிடித்த வாகரையை இராணுவம் கைப்பற்றியதற்கே (விடுதலைப்புலிகள் தமது உயிரிழப்பை தவிர்த்து பின்வாங்கியது வேறு விஷயம்) இலங்கை அரசும் அதன் இராணுவமும் இந்த மாங்கொட்டையை போன்றதுகளும் கொக்கரிக்கும் போது இலங்கை இராணுவத்தின் ஆளணி வலுவிலும் ஆயுத வலுவிலும் 1/3(மூன்றிலொரு)பகுதியிலும் கூடுதலான பலத்தை யாழில் குவித்து பெரும் இராணுவ கோட்டையை அமைத்து தமிழ் மக்களை இன அழிப்பு செய்து வரும் இராணுவத்திடமிருந்து யாழ்ப்பாணத்தை புலிகள் மீட்டால் அதற்கு தமிழ் மக்கள் சந்தோஷப்படக்கூடாது என்று இந்த குறுக்காலைபோன மாங்கொட்டை சொல்லுது

இவனுகளுக்கெல்லாம் தமிழ் இனம் கனவில் கூட சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது.

குறுக்கால போனவரே உமக்குத்தெரியுமா. ஒருவனின் கூடாத எண்ணங்கள் அவரவரின் இதய அழுக்குகளின் பிரதிபலிப்பே எண்டு. பல நேரங்களில் சிலர் பிடிபடுவது அவர்களின் கதையினில் இருந்து அதற்காகத்தான் அதிநவீன முறையில பொலீஸ் விசாரிக்கும் போது கையில இருதய அடிப்புகளினை பார்ப்பார்கள்.

இப்படி பார்க்கும் போது பொய் சொல்வவன் பிடிபட்டிடுவான். இப்ப நீரும் மாட்டுப்பட்டிட்டீர். உமக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. பார்த்துக்கொள்ளும் முற்றாம. :D

"இதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" என கிறிஸ்த்தவர்களின் வேதாகமத்தில் ஒரு வசனம் எழுதப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக்கனிபோல் புரிகிறது குறுக்காலபோவான் எனும் பேர்வழி மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவராகும். அவரின் புனைபெயரின் மிடுக்கைப்பார்க்கவே :D புரியவில்லையா?

மனிதன் என்ற ஆறறிவுபடைத்த மனிதர்கள்கள் என்று எம்மையே நாம் கூறும் போது அதற்கேற்றாற்போலும் சிந்திக்கவேன்டும். ஒரு விசயத்தை ஆராய்ந்து பார்க்க அறிவு வேண்டும். இல்லை இவனால முடியாது என்று சொல்ல மூளை என்று ஒண்டு தேவைஇல்லை.

அது சரி மனிதனில இரண்டு எல்லைகள் உண்டு. அதில் கீழ் வீச்சு, மேல் வீச்சு என்று இரண்டு உண்டு. பொசிடீவாக நினைபவன் அந்த எல்லையில் மேல் நோக்கி முயற்சியுடன், தன்நம்பிக்கையின் அடிப்படையில் எறுகிறான். அதில் அவன் சறுக்குவது இயல்பு அவன் அதனை பொசிடீவாக தோழ்வி என்றே நினக்கமாட்டான், அதனை அனுபவமாக எடுத்து மேலும் அதனை வைத்து முன்னேறுவான். மற்றயது தான் சோம்பேறிகளின் சறுக்கல் வாழ்க்கை. அவை வழுக்கி வழுக்கி உண்ராமற்போனால் தற்கொலை வரை போகவைக்கும். அந்த அனுபவத்தில் ஒரு கட்டத்தில் புத்தி வந்து ஒரு சிலர் மேல் நோக்கி மிக விரவாகவும் போக முடியும், அதே நேரம் உண்ராமற் போவோர்கள் மரணம் என்னும் துன்பத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே என் அருமை தமிழ் நண்பா மாற்றி விடு உன் சிந்தனைகல்ளை. புலிகள் முதலாவது வகைக்குள் வந்த படியால் தான் பின்னடைவுகள் என்று வந்த போதெல்லாம் இம்மாலய சாதனை செய்யும் மனோநிலைகளை பெற்று சாதனை படைத்திருகிறார்கள் வியப்பாய் பார்த்தோம் தானே. ஆகவே பொசிடீவாக இருப்போம்.

சரியான தத்துவப் பாடம் லக்ஸ்மன் அண்ணா. எங்கே புரிகிறதோ பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப் பார்க்கும் போது உண்மையான வீரர்கள் போல் தோன்றவில்லை. பார்ப்பதற்கு ஏதோ தமிழ் சினிமாப்படத்தில் வரும் வில்லன் கோஸ்டி போல் உள்ளது. முதலில் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் உண்மையானவையா அல்லது விளையாட்டுத் துப்பாக்கிகளா என்று விளங்கவில்லை.

புலிகளுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்பினை செயல் இழக்கச் செய்து விட்டில்லே வந்தவர். ஒட்டுப்படைகளுக்குள் ஆராவது புலிகள் ஊடுறிவி இருந்தால் என்ன செய்வது என்று சிலவேளை உந்த ஒட்டுப்படைகளுக்கு விளையாட்டுத் துப்பாக்கியினைக் குடுத்தாலும் குடுத்திருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.