Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக 42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நீதன் சான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக
42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற
நீதன் சான்

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு வாழ்த்தை சொல்லிவிடுவம் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நீதன் ...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

இவரைப:பற்றி  ஒரு அறிமுகம் தரலாமே  கனடிய  உறவுகளே..

17 minutes ago, விசுகு said:

வாழ்த்துக்கள் 

இவரைப:பற்றி  ஒரு அறிமுகம் தரலாமே  கனடிய  உறவுகளே..

Neethan Shan (born December 24, 1978 in Jaffna, Sri Lanka)[1] is a Canadian politician, who was elected to Toronto City Council in a by-election on February 13, 2017.[2] He will be the first Tamil Canadian to serve on Toronto's city council.[2]

Prior to his election to council, he served as a trustee on York Region District School Board from 2006 to 2010,[1] and on Toronto District School Board from 2016 to 2017.[3] He was previously an Ontario New Democratic Party candidate in Scarborough—Guildwood in the provincial election of 2007, and in Scarborough—Rouge River in the provincial elections of 2011 and 2014 and a by-election in 2016.[1] He also served as president of the Ontario NDP from 2012 to 2014.[1]

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக...தேர்ந்தெடுக்கப்பட்ட  நீதனுக்கு வாழ்த்துக்கள்.

தேர்தலில் வெற்றி பெற்ற நீதனுக்கு வாழ்த்துக்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவராலே தமிழர்களுக்கு எதாவது ஆதாயம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இவராலே தமிழர்களுக்கு எதாவது ஆதாயம் உண்டா?

கொஞ்ச பேருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பாரோ ரதி :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

கொஞ்ச பேருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பாரோ ரதி :rolleyes::unsure:

அகதி அந்தஸ்துக்கும்

மாநகரசபை உறுப்பினருக்கும் என்ன சம்பந்தம் ராசா??

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அகதி அந்தஸ்துக்கும்

மாநகரசபை உறுப்பினருக்கும் என்ன சம்பந்தம் ராசா??

ரதி கேட்டதற்க்காக சும்மா பகிடிக்கு அண்ண 

மாந்கர சபை உறுப்பினரால் தமிழருக்கு என்ன பலன் என்று கேட்டதற்கு கிடைப்பதை பெற்றுகொள்ள வேண்டும் பேந்து அது எதற்க்காவது உதவலாம் அல்லவா   அடுதத கட்ட ந்கர்வுக்கு உதவலாம் அவரது ரசியல் வாழ்வுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

  அடுதத கட்ட ந்கர்வுக்கு உதவலாம் அவரது ரசியல் வாழ்வுக்கு 

சரியாகச் சொன்னீர்கள் tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16729359_193546397792629_295150779498351

ரொரன்ரோ- ரூச்றிவர் சிற்றி கவுன்சிலர் 42ம் வட்டாரத்தின் இடைத்தேர்தலில் 13-02-2017ல் வெற்றி பெற்ற நீதன் சாண் அவர்கள் இன்று காலை 15-02-2017ல் ரொரன்ரோ சிற்றி ஹோலில் பதவியேற்று உரையாற்றினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதனின் வெற்றி : 25,000 இருந்து 112,000 வரையா ?

ரொரன்ரோ நகர சபைக்கு முதலாவது தமிழ் நகர சபை உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான நீதன் சான் அவர்களே ரொரன்ரோ நகர சபைக்கு தெரிவான முதலாவது தமிழர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.

 

25 ஆண்டுகளாக ரொரன்ரோ நகரசபையில் 42ம் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ரேமண்ட் சோ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ரொரன்ரோ மாநகர சபை உறுப்பினரை தெரிவு செய்வதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Scarborough-Rouge River தொகுதியின் 42 ஆவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினரை தெரிவு செய்வதற்கான இந்த இடைத்தேர்தல் கடந்த 13ம் திகதி நடைபெற்றது. மூன்று தமிழர்கள் உட்டபட மொத்தம் 29 வேட்டபாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.4765 வாக்குகளை பெற்று நீதன் சான் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45 வீதமான வாக்குகள் நீதன் சானுக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் யோர்க் பிராந்திய கல்விச் சபை உறுப்பினராகி தனது அரசியல் பயணத்தை நீதன் வெற்றிகரமாக ஆரம்பித்தார்

அதன் பின்னர் கனடாவின் பிரதான அரிசயல் கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ மாகாண பிரிவின் தவிசாளர் என்ற உயர் நிலையை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். கனடா முழுவதிலும் தமிழ் மரபுரிமை மாதாமாக தை மாதம் அங்கீகரிக்கப்படுவதற்கு காரணமான தமிழ் மரபுரிமைத் திங்கள் என்ற முன்னெடுப்பின் பிரதான பாத்திரம் நீதன் சான் என்பதும் மிக முக்கியமானது.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கனடாவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் நீதனின் பங்கும் ஈடுபாடும் தமிழ் இளையவர்கள் பலரை அவர் பக்கம் ஈர்த்திருக்கின்றது.

தொடர் தேர்தல்களில் பங்கெடுத்தாலும் அவரை அங்கீகரித்து அவருக்காக தன்னார்வத் தொண்டர்களாக செயல்பட பலர் முன்வந்திருந்தமையும் அவருடை தேர்தல் நிதி சேகரிப்பிற்கு தமது பங்களிப்பை தமிழ் சமூகம் வழங்கியிருந்தமையும் இந்த தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமானது.

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நீதன் சான் இப்போது நகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ளதன் மூலம் கல்விச் சபையில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மீண்டும் ஒரு இடைத் தேர்தலை ரொரன்ரோ கல்விச் சபை நடத்த வேண்டும் அல்லது கல்விச் சபை உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்களில் போட்டியிடுவது ஒருவரின் தனிப்பட்ட நிலைப்பாடு சார்ந்த ஒன்று என்ற போதிலும் கனடாவின் தேர்தல் முறையில் ஒருவர் தனது சொந்தப் பணத்தை தேர்தல் செலவீனங்களுக்கு பயனப்டுத்த முடியாது என்ற விதி பொதுமக்களின் நிதிப்பங்களிப்பை ஒவ்வொரு தேர்தலிலும் வேண்டி நிற்கின்றது.

கனடாவில் உள்ள பல்வேறு தொழில் முனைவோரும் வர்த்தக நிறுவனங்களும் நலன் விரும்பிகள் ஆதரவாளர்களும் தமது விருப்பத்திற்குரிய வேட்பளாருக்கான நிதிப்பங்களிப்பை வழங்கி வருகின்றார்;கள்.
ஆனால் பெரும் பணச் செலவீனத்தோடு நடத்தி முடிக்கப்படும் தேர்தல் ஒன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் வேறு தேர்தல்லகளில் ஈடுபடுவது அவருக்கு வாக்களித்த மக்களை விரக்கதியடைச் செய்யும் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்விச் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நீதன் சான் மாகண சபை உறுப்பினருக்கான தேர்தல்களிலும் தற்போது மாநகர சபை உறுப்பினருக்கான தேர்தலிலும் கலந்து கொண்டுள்ளார்.

இது நீதன் சான் தொடர்பில் தவறான தோற்றப்பாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும் அபாயத்தை கொண்ட ஒரு விடயம்.
இந்த தேர்தல் வெற்றியை தனது நடவடிக்கைகளுக்கான நியாயம் கற்பித்தலாக நீதன் சான் கருதக் கூடாது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஓன்ராறியோவில் நடைபெறும் தேர்தல்கள் எல்லாவற்றிலும் போட்டியிடும் ஒருவர் என்ற பெயர் நிச்சயம் பெருமைக்குரியதல்ல.
இந்த கருத்துரைப்புகளுக்கு காரணம் 2018ம் ஆண்டு ஒன்ராறியோக மாகணத்தில் தேர்தல் ஆண்டாக அமையவிருக்கின்றது.
ஓன்ராறியோ மகாண சபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் 2018 ஆண்டு ரொரன்ரோ நகர சபை மற்றும் கல்விச் சபைகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.
கல்விச் சபை உறுப்பினர் பதவி உன்பது பகுதி நேரமானது என்றும் ஒரு கல்விச் சபை உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு 25000 டொலர்கள் பொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் நகர சபை உறுப்பினர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு 112,000 டொலர்களை பெறுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை பல தடவைகள் மாகாண சபை உறுப்பினராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நீதன் சான் அடுத்த ஆண்டை எவ்வாறு எதிர் கொள்வார் என்ற கேள்வி தன்னிச்சையாகவே எழுகின்றது.

கடந்த 14 ஆண்டுகளில் 11 தடவைகள் தேர்தல்களில் போட்டியிட்டவர் என நீதன் சான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் இந்த வெற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு தற்காலிக ஓய்வினை வழங்கியிருக்கும்.

கடந்த 13 மாதங்களில் அவர் எதிர் கொண்டமூன்றாவது தேர்தல் இது என்பதும் கவனிப்பிற்குரியது.

.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பற்றிக் பிரவுண் தலைமையிலான கொன்சவேற்றி கட்சி ஆட்சியமைக்கும் கனவுடன் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் தகுதி கொண்ட தமிழ் வேட்பாளர்களை ‘தெரிவு’ செய்வதில் தமிழ் கொன்சவேற்றிகள் கடுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஏற்கனவே மார்க்கம் நகர சபை உறுப்பினராக விளங்கும் முன்னாள் லிபரல் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான லோகன் கணபதியை கொன்சவேற்றிக் கட்சி தனது மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்துள்ள நிலையில் மற்றுமொரு நகர சபை உறுப்பினரையும் அவர்கள் வளைக்க முயற்சிக்கிறார்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் .

காரணம் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் நீதனின் பதாதைகளில் ஏற்பட்டிருந்த நிறமாற்றம் பலரையும் ஆச்சரியப்படவைத்திருந்து. தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து நீல நிறபதாதைகளில் நீதன் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே செம்மஞ்சள் நிற பதாதைகளில் இடம்பெற்றிருந்த நீதன் நீலநிறப் பின்னணியில் சிரிப்பது சில பல கேள்விகளை எழுப்பியது.
இந்த கேள்விகள் சமூக வலைத் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் செம்மஞ்சள் பின்னணியிலும் சிரிக்கத் தொடங்கினார்.
மாநாகர சபைத் தேர்தல் கட்சி சார்பற்ற தேர்தல் என்றாலும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான ஆள்பிடிக்கு உதவும் தேர்தலாகத் தான் பிரதான கட்சிகள் நோக்குகின்றன.

ஏற்கனவே 25 ஆண்டுகாலம் நகரசபை உறுப்பினரான இருந்த ரேமண்ட் சோவை தமது வேட்பாளராக நியமித்து வெற்றி பெற வைத்துள்ள கொன்சவேற்றிக் கட்சி அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்களில் புதிய ஜனநாயக் கட்சியின் தமிழ் முககமாக விளங்கும் நீதனை குறிவைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் கொன்சவேற்றிக்கள் நீதனின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் தம்மை அதிகமாக ஈடுபடுத்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
எனவே தான் ராதிகா சிற்சபையீசனை தொடர்ந்து புதிய ஜனநாயகக் கட்சியின் நீதன் சானும் கட்சி மாறக் கூடும் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்திருந்தன.

எனினும் ஆடுத்த ஆண்டு மீண்டும் தான் நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக நீதன் உறுதியளித்துள்ளார்.

நீதன் மீது இன்னமும் தமிழ் மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் இந்த தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்துள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் தொடர்வதும் அதனை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதும் அவரின் எதிர்கால அரசியில் நகர்வுகளில் பெரிதும் தங்கியுள்ளது.

ரொரன்ரோ நகர சபைக்கு தெரிவான முதலாவது தமிழர் நீதன் சான் என்ற பெருமையோடு கனடாவின் 150 ஆவது ஆண்டை கொண்hடுவோம்.

http://ekuruvi.com/nthanin-verri-2017/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.