Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

Featured Replies

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

( எம்.மின்ஹாஜ்)

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

Untitled-1.jpg

அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 

மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டிரன்புல்லை சந்தித்து பேசிய பின்னர் நடந்த இரு நாட்டு தலைவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16662

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர்

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழரை என வாசித்து விட்டேன்...

  • தொடங்கியவர்

இலங்கைக்கு வருமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

arae.jpg

அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். 

C4r3PJcWMAI-hRQ.jpg

1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை பிரதமர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயமாக அமைந்துள்ளது.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 19 மரியாதை வேட்டுக்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16660

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, நவீனன் said:

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

பிறகென்ன....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன....

வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள்

அதுக்குத்தான்  கூட்டமைப்பு அந்த பக்கமே போகவில்லை

போனால் தெரியும் என்று சொல்லவேண்டிவருமே.

அப்புக்காத்தா கொக்கா....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறகென்ன....

நீங்களும் வாரது உங்களுக்கென்ன பிரச்சினை   

வாங்கோ வாங்கோ என்று சனம் வராதுங்க கு.சா  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்களும் வாரது உங்களுக்கென்ன பிரச்சினை   

வாங்கோ வாங்கோ என்று சனம் வராதுங்க கு.சா  

முனிவர் ஜீ! இது நீங்களோ நானோ சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. அல்லது புலம்பெயர் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையுமல்ல. இதுவொரு ஈழத்தமிழர் பிரச்சனை. தமிழன் எங்கிருந்தாலும் அவனின் உணர்வுப்பிரச்சனை. சொந்த மண் பிரச்சனை. 

அது சரி ரணிலும் அணிலும் புலம்பெயர் தமிழர்களில் ஏன் இவ்வளவு அக்கறை எடுக்கின்றார்கள்.
அவர்களும் இலங்கையில் தானே வசிக்கின்றார்கள். ஏன்  கேப்பாபுலவு மற்றும் வடக்கில் உள்ள இராணுவ குடியேற்றங்கள் பற்றிய பிரச்சனைகளை தீர்க்காமல்.....புலம்பெயர் தமிழர்களில் இவ்வளவு அக்கறை!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கோப்பாபிலவு மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இது போன்ற உறுதிகள் அதிகம் வழங்கப்பட்டாலும் அரசாங்கத்தால்  திடிரென நிலங்களை வழங்க முடியாது காரணம் அதை வைத்து அரசியல் செய்ய சிங்கள கட்சியினர்  ஆனால் மக்கள சனத்தொகை கூடுதலாக இருக்கும் போது அவர்களை குடியேற்ற நிலங்களை சொடுக்க தூண்டலாம் அல்லாவா சாமியார் 

இந்தியாவில் உள்ள அகதிகளை சொல்லலாம் அகதியென்ற வார்த்தையை வார்த்தையில் கூட அனுபவிக்க கூடாது மக்கள் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, முனிவர் ஜீ said:

கோப்பாபிலவு மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இது போன்ற உறுதிகள் அதிகம் வழங்கப்பட்டாலும் அரசாங்கத்தால்  திடிரென நிலங்களை வழங்க முடியாது காரணம் அதை வைத்து அரசியல் செய்ய சிங்கள கட்சியினர்  ஆனால் மக்கள சனத்தொகை கூடுதலாக இருக்கும் போது அவர்களை குடியேற்ற நிலங்களை சொடுக்க தூண்டலாம் அல்லாவா சாமியார் 

இந்தியாவில் உள்ள அகதிகளை சொல்லலாம் அகதியென்ற வார்த்தையை வார்த்தையில் கூட அனுபவிக்க கூடாது மக்கள் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் 

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உலகயுத்தங்களை சந்தித்தவர்கள். பல காள்புணர்ச்சிகளுக்குள் உள்ளடக்கப்பட்டார்கள். ஆனால் இன்று ஏதோ ஒருவகையில் மிண்டு மக்கள் நலம் பற்றி சிந்திக்கின்றார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் ஏதோ ஒருவகையில் போராடவேண்டிய நிலையிலேயே தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உலகயுத்தங்களை சந்தித்தவர்கள். பல காள்புணர்ச்சிகளுக்குள் உள்ளடக்கப்பட்டார்கள். ஆனால் இன்று ஏதோ ஒருவகையில் மிண்டு மக்கள் நலம் பற்றி சிந்திக்கின்றார்கள்.
ஆனால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் ஏதோ ஒருவகையில் போராடவேண்டிய நிலையிலேயே தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள்.

உன்மைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிங்களவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

முதலில் சிங்களவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட வில்லை  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட வில்லை  tw_blush:

உண்மை, ஆனால் அங்கு உள்ள நம்மவர்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் திரும்பி வருவதால் எப்பபடி பறிபோன நிலங்கள் திரும்பவும் கிடைக்கும்? 

11 hours ago, நவீனன் said:

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார்.

ரணிலின் இந்தக் கூற்றினை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அறிக்கையினை வெளியிடவேண்டும், அண்மையில் பொலிசாரினாலேயே கொல்லப்ப்ட்ட பல்கலைகழக மாணவர்கள், குற்ற மற்றவர்களென விடுவிக்கப் பட்ட ரவிராஜ் கொலையாளிகள் .... போன்றவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்

13237663_1723122127959512_9025983470959803651_n

13241226_1723122364626155_3472200352734532510_n

13226887_1723122307959494_7232599054491013575_n

my3-1-300x199.jpg

தமக்கு குடை பிடிப்பதற்கே கையாள் வத்திருக்கும் இந்த மிருகங்களிடம் , அழிவைத் தந்தவனேயே வீட்டிற்கு அழைத்து பி.நாள் கொண்டாடும் மந்திகளிடம் நாம் இவற்றை எதிர்பார்க்க இயலாது 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழர்களை கெளரவமாக வாழவிடுங்கள்.புலம் பெயர்ந்தவர்கள் தாமாகவே வந்து சேர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

உண்மை, ஆனால் அங்கு உள்ள நம்மவர்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் திரும்பி வருவதால் எப்பபடி பறிபோன நிலங்கள் திரும்பவும் கிடைக்கும்? 

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் மீரா காங்கேசன் துறையில் விடுவிக்கப்பட்ட நிலத்தை பெற்று கொள்ள் அங்கு வாழ்ந்த மக்கள்  யாரும் இல்லை இருந்திருந்தால் ராணுவம் அதை கொடுக்கும் என அந்த இடத்தில் உள்ள ராணுவம் சொன்னது சரியான உறுதி பத்திரங்களை சமர்பிக்கும் போது 
ஆனால் நீங்கள் கேட்கலாம்  கோப்பாபிலவு மக்களுக்கு தமது காணிகளை  கொடுக்கவில்லை ஏன் என்று  கோப்பாபிலவில் எத்தனை ஆயிரம்குடும்பங்கள் இருந்தது என்று தெரியாது அந்த போராட்டத்தில் இருந்தது சில பேர்தான் என நினைக்கிறேன் அதுவே ஆயீரக்கணக்கில் மக்கள் இருந்திருந்தால்  நிலம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை அர்சுக்கு எப்போதே ஏற்பட்டிருக்கும்  என்ற நினைப்பு தான் எனக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முனிவர் ஜீ said:

எனக்கு தெரிந்து காங்கேசன்துறையை சேர்ந்த எத்தனையோ பேர் இன்னமும் யாழில் உள்ளனர் ஜீவன் உட்பட. விடுபட்ட காணிகளில் சில காணிக்கு உரியவர்கள் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் திரும்பிவாருங்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எப்போதுமே போராட்டம் என்றால் தமிழர்கள் பங்குபற்றுவது குறைவு தானே, ஆனால் விடுப்பு பார்க்க ஆயிரக்கணக்கில் போவார்கள்.

கோப்பாபிலவு மக்களுக்கு(சில) இருந்த துணிவு வலிவடக்கு மக்களுக்கு இன்னமும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

எனக்கு தெரிந்து காங்கேசன்துறையை சேர்ந்த எத்தனையோ பேர் இன்னமும் யாழில் உள்ளனர் ஜீவன் உட்பட. விடுபட்ட காணிகளில் சில காணிக்கு உரியவர்கள் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் திரும்பிவாருங்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எப்போதுமே போராட்டம் என்றால் தமிழர்கள் பங்குபற்றுவது குறைவு தானே, ஆனால் விடுப்பு பார்க்க ஆயிரக்கணக்கில் போவார்கள்.

கோப்பாபிலவு மக்களுக்கு(சில) இருந்த துணிவு வலிவடக்கு மக்களுக்கு இன்னமும் வரவில்லை.

ஏற்றுக்கொள்கிறேன் 

22 hours ago, நவீனன் said:

அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் 

தமிழின படுகொலைகளை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும்  சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவன் ரணிலின் அறிவிப்பானது வெளிநாட்டு அகதி முகாம்களில் / அகதி அந்தஸ்துகளுடன் வாழும் பெரும்பாலான பொருளாதார அகதித் தமிழர் அந்தநாட்டு பாஸ்போர்ட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற அவர்களின் இலட்சியக் கனவுகளுடன் இருப்பார்களே தவிர இலங்கை திரும்பமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.