Jump to content

தொடரும்.......


sathiri

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் யாழ்உறவுகளிற்கு நீண்ட நாளின் பின்னர் மீண்டும் ஓர் தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதுவும் வழைமை போல உண்மை சம்பவமே நான் 2003 ம் ஆண்டு தமிழ் நாட்டில் சந்தித்த ஒரு ஈழ தமிழ் தாயின் கதை அதை எனதுநடையி்ல் எழுததொடங்குகிறேன் கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்ததில் தொடரும்.....என்றே வைத்தேன் காரணம் கதையின் இறுதியில் புரிந்து கொள்வீர்கள் நன்றி

பாகம் 1

தொடரும்.......

2003ம் ஆண்டு நான் இந்தியா போயிருந்தேன் இங்கு பிரான்சில் வேலை பழு நேரமின்மையென்று ஏதோ பசிக்காக இரண்டு தடைவை சில நேரம் இரவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ள நான் இந்தியா போகும் போதெல்லாம் அங்கு காலை மதியம் இரவு என்று வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிடுவது வழைமை. அப்போது எனது வயிறும் கொஞ்சம் வெளியே தள்ள தொடங்கும் அதனால் அதை குறைக்க மாலை நேரத்தில் ஓடுவது வழக்கம்.

அது போலத்தான் தமிழ் நாடு அண்ணா நகர் மேற்கில் நான் தங்கியிருந்த நான் அன்றும் மாலை கொஞ்சம் ஓடலாம் எண்று நினைத்து வெளியே வந்தேன் பிரதான் வீதியால் ஒடுவது சிரமம் மாலை நேரம் சென்னை பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வாகனங்களின் புகை புழுதி வேறு எனவே உள்பக்கமாக சிறிய குறுக்கு வீதியால் ஒடலாம் என்று முடிவு செய்து ஒட தொடங்கினேன் மெதுவாக ஒரு அரை மணித்தியாலம் ஓடியிருப்பேன் சிறிது மூச்சு வாங்கியது ஒரு பெரிய வெளிப்பகுதியை அடுத்த ஒரு சிறிய கடை தெரிந்தது அதில் தண்ணீர் வாங்கலாம் என நினைத்து கடைக்கு பொய் ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி அருகில் இருந்த ஒரு கல்லில் இருந்து கொஞ்சம் இளைப்பாறியபடி தண்ணீரை குடித்து கொண்டிருந்தேன்.

எனக்கு கொஞ்ச தூரத்தில் அந்த வெளியில் குப்பை கூழங்கள் மலையாக குமிக்க பட்டிருந்தது.அந்த குப்பை மேட்டில் சில சிறுவர் சிறுமியர்கள் பெரியவர்கள் என்று அதில் இருந்த கடதாசிகள் போத்தல்கள் வேறு பொருட்கள் என்பனவற்றை பொறுக்கி கொண்டிருந்தனர்.இந்த காட்சிகள் ஒண்றும் எனக்கு புதியது அல்ல என்றாலும் அந்த குப்பையில் இருந்து வந்த கெட்டவானையால் அங்கு அதிக நேரம் இருக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு புறப்பட நினைத்த போதுதான்

" எடியே பிள்ளை விழையாடாமல் கடதாசியை பொறுக்கு" என்று ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி அங்கு குப்பை பொறுக்கி கொண்டு நின்றவர்களை பார்த்தேன். காரணம் அந்த கதை ஒரு ஈழ தமிழரின் தமிழ் அதுதான் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.அங்கே ஒரு பதினொரு வயதையொத்த ஒரு சிறுமி கையில் எதையோ வைத்து விழையாடி கொண்டு நின்றாள். அவளைதான் அவளது தாயார் அதட்டிகொண்டிருந்தாள்.

நான் அந்த சிறுமியை பார்த்து என்னிடம் வரும்படி கையசைத்தேன் அவள் என்னிடம் வராமல் தாயாரை பார்த்து அம்மா ஆரோ கூப்பிடினம். என்றாள் சந்தேகமேயில்லை இவர்கள் ஈழதமிழர்கள் தான் என்று உறுதி செய்து கொண்டேன். என்னை உற்று பாத்த அந்த தாய் கடதாசிகள் நிரம்பிய ஒரு சாக்கையும் இழுத்து கொண்டு என்னைநோக்கி வர பின்னால் அந்த பெண்ணும் தொர்ந்து வந்தாள். அருகில் வந்த அந்த பெண்ணிடம் அம்மா நீங்கள் இலங்கையோ ???என்றேன். ஓம் தம்பி நாங்கள் கிளிநொச்சி என்றார்.

தொடரும்....... :icon_idea:

Posted

இன்னொரு அவலமான கதைபோல.வாசிக்கிற ஆக்களை ஒருவழி பண்ணாம விடப்போறதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதை தொடக்கமே நல்லா இருக்கு....ஆனால் இந்த தொடரும் போடுறதுதான் எனக்கு பிடிக்கிறேலை....:icon_idea:

Posted

ஐயா சாத்திரி,

தமிழ் நாட்டுக்கு போய் அசட்டுத்தனமான வேலையெல்லாம் செய்து இருக்கிறீங்கள். போனோமா, ரெண்டு கோயிலைப் பார்த்தோமா, சாப்பிட்டோமா என்று அனுபவித்துவிட்டு திரும்பிவிடவேணும். உப்படி ரோட்டில் ஓட்டப் பயிற்சிகள் எடுப்பது ஆபத்தானது. நல்ல காலம் உம்மை சந்தேகத்தின் பேரில் கைது செய்து குண்டர் சட்டத்தில் பிடித்து உள்ளே தள்ளவில்லை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஸ்டப்படுகின்றவர்களை கண்டால் தூர விலகி நிற்கும் மனிதாபிமானிகளில் நீங்களும் ஒருவராக இருந்திருக்கமாட்டீர்கள் என்பதை உங்கள் தொடர்கள் சொல்லும் என்றும் நம்புகின்றோம்.

Posted

நான் நினைக்கிறன் அந்த பிள்ளை எடத்தது ஏதேன் வெடிகண்டா இருக்குமோ...?

இந்தியனிட்ட மாட்டின சொல்லவே வேணும்...

கெதிய போடுமய்யா அடுத்தத படிக்க....

அனால் உண்மைய மனசு விட்டு தங்களை பாரட்டுறன் ஏனெண்டு கேளுங்கோவன்...

சமகால..அல்லது நமது தாயக மக்கள் படுற இன்னல்களை கதைகளாய்..கொண்டுவாறியல்

பார்த்தியளே அதுக்கு தான் மெச்ச பாராட்டுறன்..அசத்துங்கோ நான் படிப்பன்...

அடுத்தத விரைவாய் தாங்க ஆனால் சின்ன திரை மாதிரி கதையை திசை திருப்பி போடதயும் கண்டீரோ

பின்னாடி எனக்க கோபம் வந்திரும்...

சரியே..

அப்ப நான் பிறகு வாரன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தொடரும்... தொடர்ந்து வரட்டும், பல தொடர்களை தொடர்ந்து தரும் சாத்திரிக்கு நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் தொடர்கள்...

Posted

\\தொடரும்... தொடர்ந்து வரட்டும், பல தொடர்களை தொடர்ந்து தரும் சாத்திரிக்கு நன்றிகள்...

தொடரட்டும் உங்கள் தொடர்கள்...

--------------------

நேசமுடன் நிதர்சன்

\\

இப்பத்தானே விளங்குது ஏனின்டைக்கு இவ்வளவு ஸ்னோ கொட்டுதெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி எழுதத் தொடங்கிவிட்டார். நல்ல கதை ஒன்றினை வாசித்த திருப்தியினை அடைவது உறுதி. தொடருங்கள் சாத்திரி

Posted

சாத்திரி தாத்தா உங்கள் தொடர் என்றும் தனித்துவமானது தொடருங்கள் உங்கள் தொடரும் தொடரை ஆனால் எங்களுக்கு பொறுமையில்லை அடுத்த பாகத்தை வெகுவிரைவில் எதிர் பார்க்கின்றோம்.

Posted

பாகம் 2

ஓ கிளிநொச்சியா நான் யாழ்ப்பாணம் மானிப்பாய் அம்மா. எப்பிடி இங்கை வந்து சேந்தனிங்கள் என்றேன் அவர் தம்பி கன காலத.துக்கு பிறகு இஞ்சை ஒரு ஊர் காரரை சந்திச்சது சந்தோசம் என்றவாறு தனது கதையை சொல்ல தொடங்கினார். தம்பி நாங்கள் கிளி நொச்சி பரந்தன் தான் எங்கடை ஊர்.

ஊரிலை தோட்டம் துறவு எண்டு வசதியா தான் தம்பி இருந்தனாங்கள் ஒரு காலம் எங்கடை வீட்டிலை நெல்லு மூட்டை மூட்டை இருந்தது. ஊர் பிரச்சனையாலை புருசன் பிள்ளை சொந்தம் எண்டு எல்லாத்தையும் இழந்து அகதியா வந்து இப்ப இஞ்சை கால் வயித்து கஞ்சிக்கே தெரு தெருவா அலைய வேண்டிகிடக்கு என்றபோதே அவரது கண்கள் கலங்கி தெண்டை அடைத்து வார்த்தைகள் வர மறுத்தன.

அவரிடம் அம்மா அழாதையுங்கோ நானும் உங்களை மாதிரித்தான். நான் உறவுகளை இழந்து பிரான்சிலை அகதி நீங்கள் இந்தியாவிலை அகதி நான் கொஞ்சம் வசதியா இருக்கிறன் அதுதான் வித்தியாசம். மற்றபடி இரண்டு பேரும் ஒண்டுதான். பொறுங்கோ கடையிலை சோடா வாங்கி கொண்டு வாறன் குடிச்சபடி கதைக்கலாம் என்றபடி கடையில் அவர்களுடன் போய் இரண்டு சோடா வாங்கவும் கடைக்காரன் என்னையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தபடி சோடாவை தந்தான் அதை அவர்களிற்கு கொடுக்க மறுக்காமல் அதை வாங்கி குடித்தவர்கள் தொடர்ந்தார்.

தம்பி என்ரை மனுசன் ஒரு விவசாய உத்தியோகத்தர்.எனக்கு மூத்தது ஒரு மகனும் இந்த மகளும் தான். பரந்தனிலை நாங்கள் கவலையெண்டா என்னவெண்டு தெரியாமல் சந்தோசமா இருந்தனாங்கள் எங்களுக்கு வேண்டிய தோட்டம் வீடு எண்டு எல்லாம் இருந்தது ஒரு குறையும் இல்லை அப்ப யாழ்ப்பாணத்தை ஆமி பிடிக்கேக்கை யாழ்ப்பாண சனம் எல்லாம் வெளிக்கிட்டு எங்கடை பக்கம் தான் கனக்க வந்து குடியிருந்தவை .

அப்பிடி வந்த சனத்திற்கு மனிசனும் மகனும் ஓடியோடி ஓடியோடி உதவியள் செய்தவை எங்கடை வீட்டிலையும் இரண்டு தெரிஞ்ச குடும்பங்கள் தங்கியிருந்தவை . அந்த நேரம் தான் பரந்தன் சந்தியிலை பிளேனிலை இருந்து போட்டகுண்டிலை செத்த ஆக்களிலை என்ரை மனிசனும் ஒருத்தர் . அது எங்கடை குடும்பத்திலை விழுந்த முதல் இடி . மனிசன் செத்ததும் நான் கொஞ்சம் இடிஞ்சுதான் போனன்.

ஆனாலும் மகனின்ரை மற்றது அங்வந்திருந்த ஆக்களின்ரை உதவியோடை தோட்டங்களை தொடந்து செய்து சாப்பாட்டுக்கு பிரச்சனையில்லாமல் வாழ்க்கை ஒடிகொண்டிருந்தது.பிறகு உந்த நாசமா போன ஆமி காரர் திடீரெண்டு கிளிநொச்சியை பிடிக்கிறம் எண்டு சத்ஜய எண்டு ஒரு பேரோடை போரை தொடங்கினாங்கள்.எற்கனவே வீடு வாசல் இழந்து அகதியா யாழ்ப்பாணத்திலை இருந்து வந்த சனம் கொஞ்சம் இருந்து மூச்சு விடுறதுக்கிடையிலை திரும்பவும் ஒட தொடங்கிச்சுது. நாங்களும் ஒரு நாளிலை எல்லாத்தையும் விட்டிட்டு கையிலை இருந்த காசும் கொஞ்ச நகையளையும் மட்டும் எடுத்து கொண்டு ஒட வெளிக்கிட்டம்.

சனங்களும் எந்த பக்கம் ஓடறதெண்டு தெரியாமல் கொஞ்சம் முல்லைதீவு பக்கமும் கொஞ்சம் வவுனியா பக்கம் எண்டு ஓடிகொண்டிருந்ததுகள். எங்களுக்கு வவுனியாவிலை ஒரு சொந்த காரர் இருந்தபடியா நான் இவளையும் கொண்டு வவுனியாவுக்கு வந்திட்டன்.அங்கை கிளிநொச்சிக்கு வந்த ஆமியொடை எங்கடை பெடியள் சண்டை பிடிச்சுகொண்டிருந்தவங்கள் .அவங்களுக்கு உதவிசெய்ய மகன் ரக்கரர்(உழவுஇயந்திரம்) கொண்டு போனவன்.

அம்மா பயப்பிடாமல் போங்கோ நான் எப்பிடியும் வந்து சேருவன் எண்டிட்டு போனவன்தான்திரும்பி வரவேயில்லை.அவனும் செத்திட்டான் எண்ட செய்திதான் வந்திது.என்று நிறுத்தியவர் தம்பி அவன் இருந்திருந்தாலாவது எனக்கு இந்தகதி வந்திருக்காது படிப்பிலையும் நல்ல கெட்டிகாரன்.அதே நேரம் பள்ளிகூடத்தாலை வந்து தோட்டவேலையெண்டு சுறுசுறுப்பா ஒடிதிரிவான்.என்றபடி மீண்டும் கண்களை துடைத்து கொண்டார். சரியம்மா எப்பிடி இந்தியா வந்து செந்தனீங்கள்என்றேன்???????

தொடரும்.................

Posted

எனக்கு வரவேற்பளித்து கருத்து எழுதியவர்களிற்கு நன்றிகள் இந்த கதை எழுத வேண்டும் என்று பல காலமாகவே எண்ணியிருந்தேன் ஆனால் தொடராக எழுதவேண்டும் அதற்கான நேரம் இல்லாத காரணத்தால் எழுத தொடங்கவில்லை இப்பொழுது ஒரு வாரம் விடுமுறையில் வீட்டில் நிற்பதால் எழுத தொடங்கினேன். இந்த கதையை பத்திரிகைகளில் எழுதலாமா என்யோசித்த பொழுது தான் யாழிலேயே எழுதுவோம் என முடிவெடுத்தேன் காரணம் பத்திரிகையில் நான் எழுதி அனுப்பி விடுவதோடு எனது வேலை முடிந்து விடும் அதை மற்றவர்கள் படித்து என்ன நினைக்கிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் யாழில் மற்றவர்களுடைய கருத்துகளும் என்னை வந்தடையும் போது வேலை மிகுதிகளிடையேயும் உற்சாகமாக எழுத தூண்டும்.அதுவே எனக்கு போதும் நன்றிகள். <_<

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி சார் நீங்க நல்லா கதையெல்லாம் எழுதுறிங்க. :D

உங்க கதையை நானும் தொடரலாமா?

Posted

சாத்திரி சார் நீங்க நல்லா கதையெல்லாம் எழுதுறிங்க. :D

உங்க கதையை நானும் தொடரலாமா?

உண்மையாகவா நன்றி நன்றி அந்த சாரை எப்ப விட போறீங்க சார்??? :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையாகவா நன்றி நன்றி அந்த சாரை எப்ப விட போறீங்க சார்??? :P

நீங்க சொல்லிட்டிங்க விட்டு விடுறேனே

Posted

கதையின் ஆரம்பம் வாசிக்கத் தூண்டுகின்றது.

வார்த்தைகளை கோர்த்து கதையோடு ஒன்றி, பின்னிக்கொண்டு போகின்ற கதையின் லாவகம் எவரையும் கவரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் தொடருங்கள் சாத்திரி. வாழ்த்துக்களும்கூட...

Posted

அட..சாத்திரி நம்ம ஊரு ஆட்களை சந்திச்சிருக்கார்...ஜயா..பரந்த

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டின் பிரச்சனையினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறோம்.

இந்த கதையை பத்திரிகைகளில் எழுதலாமா என்யோசித்த பொழுது தான் யாழிலேயே எழுதுவோம் என முடிவெடுத்தேன் காரணம் பத்திரிகையில் நான் எழுதி அனுப்பி விடுவதோடு எனது வேலை முடிந்து விடும் அதை மற்றவர்கள் படித்து என்ன நினைக்கிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்கு தெரியாது.

யாழில் எழுதி முடிந்தபின்பு, பத்திரிகையிலும் எழுதுங்கோ. இணையத்தளம் பார்க்கமுடியாத ஈழத்து உறவுகளுக்கு உங்களின் கதைகள் போய்ச் சேரவேண்டும்

Posted

அட..சாத்திரி நம்ம ஊரு ஆட்களை சந்திச்சிருக்கார்...ஜயா..பரந்த

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையல்ல நிஜம் ......இப்படி எவ்வளவோ அவலங்கள் எம்மவர்களுக்கு.....சாத்திரியார

Posted

நீங்கள் எழுதுகிற விதம் விறு விறுப்பாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன்

Posted

பாகம் 3

வவுனியா வந்து சேந்த நாங்கள் கொஞ்ச நாள் அங்கை இருந்தம். நான் என்ரை மனுசன் இருக்கும் மட்டும் வீட்டையும் பிள்ளையளையும் பாத்ததை தவிர எனக்கு வேறை எந்த வேலையும் செய்ய தெரியாது தம்பி . அனால் மனுசனும் மகனும் போன பிறகு எனக்கு என்ரை மகளின்ரை எதிர் காலமும் என்ரை எதிர் காலமும் என்னசெய்யிறதெண்டு பெரிய குழப்பமா போச்சுது.

மகளும் நல்ல கெட்டிகாரி நல்லா படிப்பாள் அவளை எப்பிடியாவது கஸ்ரபட்டு படிப்பிச்சு விட்டா என்ரை கடைசி காலம் ஒரளவு நல்லா இருக்குமெண்டு நினைச்சன் . ஆனால் எனக்கு வேலையோ மகளை படிப்பிக்கிற அந்த வசதியோ வவுனியாவிலை இருக்கேல்லை அப்பதான் இந்தியா போனால் அங்கை மகளையும் படிப்பிக்கலாம் வாழுறதுக்கும் இந்திய அரசு உதவிகள் செய்வினம் எண்டு சிலர் சொல்லிச்சினம்.

அதை நம்பி என்ரை மகளின்ரை எதிர் கால கனவுகள் பலதோடை மன்னாருக்கு வந்து கையிலை மிச்சம் இருந்த நகைகளையும் வித்து படகோட்டியிட்டை குடுத்து ஒரு இரவு படகேறினம். மறுநாள் விடியேக்கை எங்கடை வாழ்க்கையிலையும் ஒரு விடிவு வரும் எண்டு நம்பி தெரிஞ்சவை ஆரும் இல்லாத ஒரு தெரியாத தேசத்துக்கு வந்து இறங்கினம்.இஞ்சை வந்து ராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமிலை பதிஞ்ச உடைனையே என்ரை கனவுகளிலை பாதி கனவு பகல் கனவா போச்சு எண்டு விழங்கிச்சுது. காரணம் அந்த முகாம் அப்பிடி சரி பிழைக்க வந்த இடத்திலை எல்லாம் பாக்க ஏலுமே எண்டு யொசிச்சு இருந்திட்டன்.

அங்கை சில நாள் வைச்சிருந்திட்டு ஒரு அதிகாரி வந்து சொன்னார்அந்த முகாமிலை இருந்து சிலபேரை வசதியான வேறை இடத்துக்கு மாத்த போறதா. அப்ப இழந்து போன நம்பிக்கை கொஞ்சம் திரும்பி வந்திது சில பேரை ஒரு பஸ்சிலை ஏத்தி ஒரு நாள் முளுக்க பஸ் ஓடிச்சிது பகல் முழுதும் சாப்பாடே இல்லை நல்ல வேளை கலனுகளுக்கை நாங்கள் தண்ணியை எடுத்து கொண்டு வந்ததாலை அதை குடிச்சு சமாளிச்சம்.

றைவர் இரண்பேர் மட்டும் இடைக்கிடை பஸ்சை நிப்பாட்டிட்டு போய் சாப்பிட்டிட்டு வந்திச்சினம் எங்களை பஸ்சை விட்டு இறங்கவேண்டாம் பொலிஸ் பிடிச்சா பிரச்சனைஎண்டிட்டினம்.நாங்கள

Posted

வன்னி மைந்தன் அந்த பெண் சொன்ன தகவல்படி அவரது கணவன் விவசாய பண்ணையில் வேலைசெய்ததாக சொன்னார் எனவே அவர்கள் அதற்கு அண்டிய பகுதிகளாக இருக்கலாம் எனக்கு அந்த பகுதிகள் அவ்வளவாக தெரியாது கிளிநொச்சி றோட்டாலை அந்த சந்தையை பிராக்கு பாத்தபடி முந்தி பஸ்சிலை போயிருக்கிறன் அவ்வளவுதான்.

நீங்களும் உங்கள் அனுபவங்களை கட்டாயம் எழுதுங்கள் காரணம் இந்த எழுத்துகள் தான் இங்கு இனி எமது எதிர் கால சந்ததியினருக்கு எமது போராட்ட காலங்களின் ஆவணங்கள்.எமது மக்கள் இவ்வளவு சிரமபட்டு போராடி கிடைக்க போகிற சுதந்திரத்தை எதிர் கால சந்ததியினர் சிறந்த முறையில் பேணி பாது காக்கவேண்டும் அதற்கு எம்மக்கள் அந்த சுதந்திரத்திற்காய் எவ்வளவு தன்பங்களை அனுபவித்தனர் என்கிற விடயங்களை ஆவணங்களாக எழுத்துகளாக பாது காக்க பட வேண்டும் என்பதும் எனது ஒரு விருப்பம்.

அட..நம்ம ஊரு இல்லாமலே

நம்ம ஊரு பிள்ளையின் கதை கேட்டு எழுதிறீங்க பாருங்க அதற்க்கு நம்ம

அணியினரின் விசேட நன்றிகள் சார்...

அசத்துங்க.. நம்ம பார்ப்போம்....

போராளிகளை பற்றியும் அவர்கள் போராட்ட வாழ்வு பற்றியும்..எழுதுங்க...

நான் கைதட்டுறன்...பாராட்டுறன்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழராகப் பிறந்ததினால் சோகங்கள் தொடருகின்றன... ஈழத்தில் உயிருக்கு பயம் என்றால் தமிழகத்தில் காவல்துறையினரின் கெடுபிடிகள். இந்த அம்மாவுக்கு தமிழகத்தில் என்ன கெடுபிடிகள் வந்ததோ?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.