Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது.

இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன.

இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம்.

ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை.

அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்கள் இருக்கின்றன.

ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததைப் பாராட்டி "சர்வதேசம்" விருது வழங்கும்; தமிழீழத்தை அங்கீகரிக்கும்; எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற கனவோடு ஏராளம் பேர் உலாவுகிறார்கள்.

ஒன்றில் நடப்பவற்றைக் கொண்டு ஊகிக்க வேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து பாடம்படிக்க முற்பட வேண்டும்.

இவை எதுவுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளையும் புரட்டுக்களையும், நம்பிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருப்பது சரியில்லை.

ஐந்தாண்டுகள் வரை பொறுமை காக்கவேண்டுமென்ற கடப்பாடோ விருப்பமோ புலிகளுக்கில்லை. அப்படி பொறுமை காப்பதில் எந்த அனுகூலமுமில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். மட்டமாக ஒரு காலத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஒரே வசதி, எதிர்காலத்தில் "நாங்கள் ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். (இவ்வருட மாவீரர் தின உரையில் முக்கிய இடம்பிடிக்கப்போகும் வசனமிது) அந்தவசனம் சொல்லத்தான் காலம் கடத்தினார்கள் என்பதற்கு, அப்படிச் சொல்வதால் என்ன கிடைக்குமென்று யோசிக்க வேண்டும்.

இவ்வளவுகாலம் நீடித்தது, காலத்தின் கட்டாயமேயன்றி ஐந்தாண்டு கணக்கிற்காக அன்று.

2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தைத் தீவிரப்படுத்த எண்ணியிருந்ததாகவும் 2004 மார்கழி கடற்கோள் அனர்த்தத்தால் அது சாத்தியப்படவில்லையென்றும் 2005 மாவீரர்நாள் உரையிலேயே சொல்லப்பட்டாயிற்று.

அப்படி ஏதாவது நடந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" மூன்றாண்டுக் கணக்குச் சொல்லித் திரிந்திருப்பார்கள்.

2006 இலேயே போர் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. புலிகள் நினைத்தபடி எதிரணி அரசியலில் எல்லாம் நடந்துகொண்டிருக்க, களத்தில் ஏற்பட்ட ஒரு பிசகால் நிலைமை தமிழர் தரப்புக்குப் பாதகமாக மாறியது. காலம் இழுபட்டது. அதற்குப்பின்னும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.

எல்லாம் சரிவந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" நான்காண்டு கணக்குச் சொல்லியிருப்பார்கள்.

'சர்வதேசம்' எங்கள் பக்கம் திரும்பும், எங்களை அங்கீகரிக்கும் என்று இப்போது நம்பிக்கை கொள்வது வீண்வேலை. அதுவும் களத்தில் பின்னடைவுளைச் சந்தித்துள்ளதாக தோற்றப்பாடுள்ள இன்றைய நிலையில் அறவே சாத்தியமில்லை.

எங்களை அங்கீகரிக்கவும், ஆதரவளிக்கவும் எந்தக்கடப்பாடும் அவர்களுக்கில்லை. கடப்பாடுள்ள விடயத்திலேயே அவர்கள் சரியாக நடக்கவில்லை.

இன்று இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் நோர்வேக்கு உள்ள கடப்பாடு என்ன? அவர்கள் அதன்படி நடக்கிறார்களா? என்று பார்த்து, அதன்வழி 'சர்வதேச'த்தையும் பொருத்திப் பார்க்கலாம்.

பலவற்றுக்குப் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுள்ள நோர்வே சத்தம்போடாமல் தானுண்டு, தன் பாடுண்டு என்று இருக்கிறது. யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் கதையைக் கேட்கவே வேண்டாம்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசதரப்பால் தொடர்ந்து நடத்தப்பட்ட மீறல்கள் குறி்த்து அவர்களுக்கு எக்கவலையுமில்லை. விலகுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து தன் படைகளைவிலக்கி மக்களை இயல்புக்குத் திருப்புவதைச் செய்யாத அரசுமேல் அவர்கள் எக்குற்றச்சாட்டையும் வைக்கமாட்டார்கள். மக்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பார்கள். (இவை ரணில் காலத்திலேயே நடந்துவிட்டன). அரசு மக்கள்மேல் எறிகணை மழை பொழிந்து கொத்துக் கொத்தாகப் பலிகொண்டபோது, நோர்வே (சர்வதேசமும்) சொன்ன தீர்வு, மக்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ?#8220;டிப்போகச் சொன்னதுதான். கொல்லப்பட்டடவர்கள் மக்கள் தான் என்பதையும் அவர்களது எண்ணிக்கையையும் சொல்வதைத்தாண்டி இந்தப் படுகொலைகள் தொடர்பில் நோர்வே (சர்வதேசமும்) செய்தது வேறொன்றுமில்லை.

ஒவ்வொருமுறை படுகொலை நடக்கும்போதும் சம்பந்தமேயில்லாமல் புலிகளையும் அதற்குள் இழுத்து ?#8220;ர் அறிக்கை விடுவதன்மூலம் பயங்கரவாத அரசுக்கு மேலும்மேலும் ஊக்கமளித்ததுதான் இந்த நோர்வே உட்பட்ட சர்வதேசம் செய்தது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகப் பார்த்தால், அதிலும் இவர்கள் செய்தது படுகயமைத்தனம்தான்.

மூதூர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் சில மணித்துளிகளில் நோர்வே அறிக்கை விடுகிறது, "உடனடியாக பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும்" என்று. அதற்குமுன்பே அரசபடைகள் மாவிலாறு மீது படையெடுத்திருந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அதன்பின் அரசபடைகள் சம்பூர் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று சம்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது நோர்வேயிடமிருந்து அறிக்கை வரவில்லை. படையினர் பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று, சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்த அறிவித்தலும் வரவில்லை.

வாகரையும் அப்படியே; கஞ்சிக்குடிச்சாறு்ம அப்படியே.

சமாதான முயற்சிகள் நடப்பதாக, பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் காட்டிக்கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த கரிசனையுமில்லை.

அப்பட்டமான நில ஆக்கிரமிப்புகள் நடந்து, பல்லாயிரம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உணவுகள்கூட மறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபடி திறந்திருக்கவேண்டிய A-9 பாதை மூடபட்டிருந்த நேரத்திலும் - எதுவுமே நடக்காதது போல் அடுத்த சுற்றுப்பேச்சுக்கு ஒழுங்கு பண்ணுவதில் மட்டும் குறியாயிருந்த - அப்படி இருதரப்பையும் மேசையில் கொண்டுவந்து இருத்திவிட்டால் எல்லாம் முடிந்தது என்று சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்ட நோர்வே (உட்பட்ட சர்வதேசம்) பற்றி நாமின்னும் அறியவில்லையா?

தான் பதில் சொல்லவேண்டிய கடப்பாடுள்ள விடங்களுக்கே எந்தவித சலனமுற்று, சாந்தமாக இருக்கிறது நோர்வே.

இந்நிலையில் எந்தச் சம்பந்தமுமில்லாத, எந்தக் கடப்பாடுமில்லாத 'சர்வதேசம்' என்று நாம் சொல்லும் சக்தி என்ன கிழிக்கப்போகிறது?

இன்று தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கெதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத சர்வதேசம் எமது உரிமைப்போராட்டத்தை "இப்போது" அங்கீகரிக்குமென்பது - அதுவும் ஐந்துவருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததென்ற ஒரே காரணத்துக்காக அங்கீகரிக்குமென்பது சுத்த மடத்தனமல்லவா?

ஐந்து வருடங்கள் ஒருதரப்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் அவர்களின் நிலம் அவர்களுக்கே என்று பட்டா எழுதும் சட்டமேதும் சர்வதேசம் என்ற சக்தி இயற்றி வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோட்பாட்டுக்குட்பட்டதைக் கூட அவர்கள் செய்யவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் பாடமாகப் படிக்க வேண்டாமா?

சுயநிர்ணயம் தொடர்பில் தனியாகப் பிரிந்து செல்லும் அதிகாரம், இடைக்கால நிர்வாகம், பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு என்று 'சர்வதேசம்' ஏற்படுத்திவைத்த - பல இடங்களில் செயற்படுத்திய நடைமுறையைக் கூட ஈழத்தவர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? ஏன்?

இவர்களுக்குப்பிடித்தால் நாட்டைப் பிரிப்பார்கள்; இல்லையென்றால் ஒட்டுவார்கள்.

சர்வதேச மனிதாபிமானத்துக்கு பல எடுத்துக்காட்டு்க்கள் இருக்கின்றன.

மிக அண்மையில் நடந்த லெபனான் பிரச்சினையிலிருந்து கூடவா நாங்கள் பாடம் படிக்கவில்லை? ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு வருவதைவிட பலநூறு மடங்கு உத்வேகத்துடன் லெபனானில் நடப்பவை உலகுக்கு வெளிவந்தன. அந்தப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. அப்படியிருந்தும் அம்மக்களை யார் காப்பாற்றினார்?

முடிவாக - ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம் என்ற காரணத்துக்காக சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும்; ஆதரவு தரும்; சர்வதேசத்தில் எமக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்பது சுத்த முட்டாள்தனமான பிதற்றல்.

ஆதரவு, அங்கீகாரம் போன்ற பம்மாத்துத் தோற்றமொன்று வருவதானாற்கூட அதைத்தீர்மானிக்கும் காரணி வேறுதான்; ஐந்தாண்டு நிறைவன்று.

______________________________

இங்கே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளையோ நிகழ்வுகளையோ கூட்டத் தொடர்களையோ நான் தவறென்று சொன்னதாக யாரும் கருதத்தேவையில்லை. அவை கட்டாயம் தேவைதான். அரசதலைவர்களை விடவும் வேற்றின மக்களிடத்தில் எமது நியாயங்களைச் சொல்வது முக்கியம். தொடர்ச்சியான கவன ஈர்ப்பைச் செய்துகொண்டிருப்பது முக்கியம். புலத்திலிருக்கும் எல்லோரும் ஒரேயணியில் திரள்வதற்கும், இளையோரிடத்தில் ஒன்றிப்பும் பங்கேற்றலும் அதிகரித்தலுக்கும்கூட இவை முக்கியம்.

ஒரு நோக்கத்துடனான செய்பாடு வேறு; அது நிறைவேறும் முன்பே அதீத நம்பிக்கை கொண்டு பகற்கனவு காண்பது வேறு.

இந்தியா எமது பக்கமென்று புழுகித்திரியும் வேளையிலேயே அது நசுக்கிடாமல் தனது வழமையான பணியைச் செய்துகொண்டிருக்கிறது.

அதற்காக, 'இந்தியா இனிச்சரிவராது' என்று பேசாமல் இருந்துவிட முடியாது. அரசியல் சந்திப்புக்கள், முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கட்டும். ஆனால் அதன் தற்போதைய நிலைப்பாட்டை, செயற்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டு, கனவுகள் காணாமல் இருப்பதும் முக்கியம்.

_____________________________

ஐந்தாண்டு நிறைவின்பின் பெரியதொரு தாக்குதல் புலிகளால் நடத்தப்படுமென்ற கதை பரவலாக உள்ளது.

அது சரிதான். ஆனால் இந்த ஐந்தாண்டு நிறைவுக்காகத்தான் தாக்குதலை ஒத்திப்போட்டுள்ளார்கள்; நிறைவுநாள் வந்ததும் பாயப்போகிறார்கள் என்ற தோற்றத்தை பலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இப்போதுள்ள தோற்றப்படி ஐந்தாண்டு நிறைவுக்கு அடுத்தநாள் புலிகள் கட்டாயம் தாக்குதல் தொடங்கப்போகிறார்கள் என்ற நினைப்புடன்தான் பலர் திரிகிறார்கள். அன்றிரவு நித்திரை கொள்ளாமல் செய்திக்காகக் காத்திருக்கப் போகிறவர்கள் எத்தனைபேரோ தெரியாது. அது நடக்காத பட்சத்தில் மக்கள் சலிப்பூட்டப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் இக்கதையைக் கட்டிவிட்டவர்கள்தாம் காரணமாக இருப்பார்கள்.

இனி, இராணுவ ரீதியில் பலமானதொரு தாக்குதல்தான் அடுத்த நடவடிக்கை என்ற முடிவுக்கு தமிழர்தரப்பு வந்தாயிற்று. அதை நிகழ்த்த ஐந்தாண்டு நிறைவென்பது ஒரு காரணமேயன்று. ஆட்பலத்திரட்டல் உட்பட பலவேலைத்திட்டங்களின் பின்தான் அது நிகழ்த்தப்படும். ஏற்கனவே நடந்த சில தவறுகள், இழப்புக்களைச் சீர்செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் இடங்களேதும் கைப்பற்றாமல், மாறாக இழக்கப்பட்டு, எண்ணூற்றுச் சொச்சம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தவறுகள் களையப்பட்டு, எல்லாம் சீர் செய்யப்பட்டு, மிகுந்த ஆயத்தத்தோடும் எச்சரிக்கையோடும்தான் தாக்குதல் முயற்சியில் இறங்குவார்கள்.

சும்மா வெளியிலிருந்து கொண்டு 'ஏன் இன்னும் அடிக்கேல?', 'அஞ்சு வருசம் முடிஞ்சு தானே?' என்ற புலம்பல்களுக்காக அங்கே தாக்குதல் செய்ய முடியாது.

களத்திலிருக்கும் மக்களும் களத்தை நடத்துபவர்களும் (மட்டும்)தான் அதைப்பற்றித் தீர்மானிக்க முடியும்.

அவர்கள் எப்போது செய்வார்களோ அப்போது செய்துகொள்ளட்டும்.

புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி.

____________________________

நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 60 வருசமா தேடுற ஈழம் இன்னும் 7 நாளில கிடைக்கப் போகுதாம். எல்லோரும் முழிச்சிடுங்க தூங்கினது காணும்..! :rolleyes::rolleyes:

கிட்டத்தட்ட 60 வருசமா தேடுற ஈழம் இன்னும் 7 நாளில கிடைக்கப் போகுதாம். எல்லோரும் முழிச்சிடுங்க தூங்கினது காணும்..! :rolleyes::rolleyes:

இப்படி தான் நானும் நேற்று தென்மராட்சியில் செல் விழுதாம் என்றவுடன் கனவு காண தொடங்கினேன், அப்புறமா.காலையில் லேற்றா எழும்பி அறக்க பறக்க யுனிக்கு ஓடினது..ஏமாத்தி போடங்கப்பா, நம்ம அண்ணாமார்!

5 ஆண்டுக்கதை சுத்த பொய் புலிகள் சுனாமிக்கு முந்திய காலத்திலேயே தாக்குதலுக்கு தயாரானதாகவும் சுனாமி மக்களுக்கு இன்னலை கொடுத்ததால் திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டதாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் 2005 மாவீரர் தின உரையில் சொல்லி இருகிறார்.5வருடத்தில் அமைதியாக இருந்து ஈழம் கிடக்கும் என்டால் அப்படி ஒரு இலகுவான வழி இருந்தும் புலிகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க மாட்டார்கள் அப்படி ஒரு சரத்தும் ஜநா விதிகளில் இல்லவவே இல்லை

புலிகளின் மவுனம் கலையும் போதே காரணம் வெளிவரும்.போராட்டத்துக்கு எந்த விதத்திலும் அதாவது முழு நேர வேலையாளராக புலத்திலோ அல்லது போராளியாகவோ இல்லாத ஒருவருக்கும் போர் ஏன் தொடங்கவில்லை என கேட்க எந்த தகுதியும் இல்லை

நெருப்பில்லாமல் புகைக்காது. இன்னும் 1 கிழமையில ஒண்டும் நடக்காது என்று மக்களை சோர்வடை பண்ணுறவை குரோசியா வின் சுதந்தரத்தை (1991-92) பற்றி கொஞ்சம் அறிந்தால் நல்லம். அதிலும் முக்கியமாக இறுதிக் கட்டங்களில் யேர்மனியின் எதிர்பாராத பங்கு என்ன என்பதை அறிந்தால் பல விடையங்கள் வெளிக்கும். முக்கியமாக யேர்மனி ஜரோப்பிய ஒன்றிய நாடாக இருந்தும் கூட குரோசியா விடையத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டிற்கு மாறுபட்டதான நகர்வுகளை அதிரடியாக எதிர்பாராத விதத்தில் இறுதி நேரத்தில் மேற் கொண்டிருந்தது. இது ஜரோப்பிய ஒன்றியத்தைக் கூட பெரும் சங்கடத்திற்கு உட்படுத்தியிருந்தது. ஆனால் இந்த முறை யேர்மனி தான் ஜரோப்பிய ஒன்றியத்தின் தலமைப்பீடத்தை கொண்டிருக்கிறது.

அதற்கும் மேலாக சுதந்திர பிரகடனத்திற்கும் அங்கீகாரத்திற்கும் பொதுவான விதிகளாகப் பார்க்கப்படுவன:

International law has traditionally required that four separate criteria be satisfied before the recognition of an entity as an independent sovereign state can be considered:

-1- The entity must exercise effective and independent governmental control.

-2- The entity must possess a defined territory over which it exercises such control.

-3- The entity must have the capacity to freely engage in foreign relations.

-4- There must be effective and independent governmental control over a permanent population.

இதில் 5 ஆவதாக 5 வருடத்தை சேர்க்க வேண்டிய நிலை மிக விரைவில் வரும். இன்னமும் 1 கிழமை தான் உள்ள நிலையின் பிரித்தானிய மந்திரி ஒருவர் ஏன் இலங்கைக்கு விழுந்து கட்டி வந்திருக்கிறார்? வந்தவர் ஏன் அம்பாறைக்கு போனார்? அவர் புலிகளோடு பேசுவதற்கு பிரித்தானியா தயார் என்று கூறியதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?

யேர்மனியா பிரித்தானியாவா என்று போட்டி போடும் நிலையில் நாம் இன்று இருக்கிறோம். ஏன் கடந்த மாதம் தலைமன்னாரை மன்னாருடன் இணைக்கும் புதிய பாலத்திற்கு யப்பான் உதவ முன்வந்தது?

இயற்கை வளங்களிற்காக ஆபிரிக்காவிற்கு பில்லியன் டொலர்கள் அளவில் உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் சீனாவிற்கு எமது இல்மனைற் பற்றித் தெரிந்திருக்க வாய்பில்லையா? மன்னார் கடற்படுக்கையில் உள்ள எண்ணை வழங்கள் பற்றிய தகவல்கள் கசிந்திருக்காதா? காலித் தாக்குதலில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் களஞ்சியத்திலேயே அழித்தொழிக்கப்பட்டும் சீனா அமைதியாக இருப்பது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக திருகோணமலையில் உள்ள இயற்கைத் துறைமுகத்தை பயன் படுத்த விருப்பமில்லாதவர் யாராக இருக்க முடியும்? யப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பகமை என்ன என்பதை வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் பல விடையங்கள் புரியும்.

5 வருடங்கள் என்பது இராமர் வனவாசம் போனமாதிரி. இராமர் வனவாசம் போனதற்கு குறித்த வருடங்களை ஏன் தெரிவு செய்தார்கள் என்ற விளக்கம் ஆரம்பத்திலேயே குடுக்கப்பட்டதா? அது சம்பந்தப்பட்டவர்கள் செய்த பாவ புண்ணியங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் எல்லோரும் சிறுவயதிலேயே பாடசாலைகளில் தவறாது படித்திருக்கிறோம். அதன் படி சுனாமி அழிவுகள் போராட்டத்தைப் பின்ன போட்டது மாத்திரமல்ல அதில் வந்த இழப்புகள் எமது வனவாசத்தின் அளவையும் குறைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இராமர் வனவாசம் முடிந்து வந்து அரசாளவில்லையா? தமிழர்கள் இதுவரை காலமும் செய்த வழிபாடுகள் அருச்சனைகள் அபிசேகங்களிற்கு பலன் கிடைக்கும் நாள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்று சர்வதேசத்திற்கு இருக்கும் பெரும் தலையிடி பாச்சலின் வீச்சை எவ்வாறு இலங்கைத் தீவுக்குள் மட்டுப்படுத்துவது என்பதே. அம்பாந்தோட்டை போன்ற இடங்களே கை விடப்பட்ட நிலையில் மாலை தீவுகளிற்கு பரவாமல் இருப்பது தான் இன்றய கவனமாக இருக்கிறது. ஏ9 திறப்பதற்கு இது ஒரு நிபந்தனையாக பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று கனவு காண்பது என்பது ஒரு கொடை திறமை வரப்பிரசாதம். கனவுகள் நம்பிக்கையை கட்டி எழுப்புவது போன்று நிறைந்த திருப்த்தியை தரும். அது நம்பிக்கையோடு காலத்தை ஓட்டுவதாக பொழுது போக்க உதவும். ஆனாலும் ஆண்ட இனம் மீண்டும் ஆழ வெகு நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. அதிஸ்டம் வரும் பொழுது கூரையை பித்துக் கொண்டு கூட வரும் என்பதை உணர நேரம் இருக்குமா என்பது தான் இன்று கவலைக்குரிய விடையம்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக ஒன்று, இரண்டு பேரைத் தான் கடிப்பீர். இதில் பார்த்தால் ஒருத்தரையும் விடவில்லை போலக் கிடக்கே! :lol:

முற்று முழுக்க நக்கல் அல்ல. 2 சபேசன் கள் மற்றும் பூராயம் சரியான நேரத்தில் எழுதி பறந்து கொண்டிருந்த சனத்தின்ரை ஒரு பகுதியைத் தானும் ஒருமாதிரி மீண்டு நடக்க வைத்திருக்கினம் என்று நம்பலாம்.

ஆனாலும் குரோசியாவின் விடையத்தை உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் அதைவைத்து சிங்களவனை நாங்கள் ஒரளவேனும் குழப்பியிருக்கலாம். இல்லாட்டி சிங்களவன் எங்களை இன்னும் திறமையாக குழப்பி பின்னர் ஏமாற வைத்திருக்கலாம். அதற்கு அங்கீகாரம் அற்ற நடை முறை அரசாக (defacto state) உள்ளதற்கான பொது விதிகளாக பார்க்கப்படுவது என்ன போன்றவையும் உதவும் ஆபத்தான எழுத்தாளர்களின் கைகளில். ஆனால் இந்த விடையத்தில் சிங்களவனிடம் தான் ஆரம்பத்தில் இருந்தே iniciative இருந்தது. அவங்கள் 5 வருடத்தின் முடிவில் ஏதோ நடக்கப்போகுது அதற்கு விடக் கூடாது என்ற தோரணையில் தான் குழப்பினவன்.

அதை தூக்கிப்பிடிச்ச எங்கடையள் அது என்னவாக இருக்கும் ஏன்ன அடிப்படையில் இருக்கும் வரலாற்று உதாரணங்கள் என்ன என்று விலாவாரியாக சிந்தித்து தேடல் செய்து எழுதுவில்லை. ஏன் எப்படி என்ன அடிப்படையில் என்ற விளக்கங்கள் இல்லாது (வாசிப்பவர்கள் மந்தைகள் என்று தெரியுமாக்கும்) அங்கீகாரம் கிடைக்கும் அடிவிழும் பாச்சல் நடக்கும் என்று முனகிப் போட்டு விட்டுட்டினம். இன்னும் 6-7 நாட்கள் உள்ள நிலையில் மேல்மாடியில (களிமண்) இல்லாத சிங்களவனே மேல்மாடியில அது நிறய இருக்கிறதுகளை நோக்கி ஒரு தேவை கருதி மேற் கூறிய குரோசியா மற்றும் defacto state பற்றிய பார்வையை வைத்து எங்காவது ஒருவரும் அறியாத இணையத் தளத்திலோ பத்திரிகையிலோ 3 பந்தி எழுதினால் போதும். எங்கடையள் அதை வைச்சு இரவு பகலா தங்கடை ஆய்வுகளை திருப்பி எழுதி நடந்த சனத்தை எல்லாம் திருப்பி பறக்க வைச்சுப் போடுகள்.

பிறகு Su37 போன்ற அதி நவீனய இயந்திரப் பறவைகளில போனாலும் பிடிச்சுக் கொண்டுவரேலாது. எங்கடை பாரம்பரிய புட்பக விமானங்கள் தான் தேவை பறக்கிற மந்தைகளை பிடிக்க. ஆனா அதிலையும் ஒரு ஆதாயம் இருக்கிறது. எங்கடை பாரம்பரிய புட்பக விமானங்களின் தொழில்நுட்பத்தைக் கண்டு சர்வதேசம் 22 ஆம் திகதிக்கு முன்னரே எங்கடை பக்கம் சாயலாம். அதை நானே எழுதிவிட்டா பிறகு குறுக்காலபோவான் எழுதினதும் கிட்டமுட்ட உப்பிடித்தானே எண்டு சனத்துக்கு நம்பிக்கை வராது என்று தான் எழுதினான். :lol:

Edited by kurukaalapoovan

வழமையாக ஒன்று, இரண்டு பேரைத் தான் கடிப்பீர். இதில் பார்த்தால் ஒருத்தரையும் விடவில்லை போலக் கிடக்கே! :D

அதுக்காக தான் கட்டி இருந்த கோவணம் களவு போனது கூட தெரியாம ஆய்வா? :D:D

எதாவது கடையில ஆர்டர் கொடுத்து இருக்காங்களா

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக தான் கட்டி இருந்த கோவணம் களவு போனது கூட தெரியாம ஆய்வா? :D:D

இப்பவும் கோவணம் தானோ அது தான் அவரால இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்ண முடிகிறது

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு Su37 போன்ற அதி நவீனய இயந்திரப் பறவைகளில போனாலும் பிடிச்சுக் கொண்டுவரேலாது. எங்கடை பாரம்பரிய புட்பக விமானங்கள் தான் தேவை பறக்கிற மந்தைகளை பிடிக்க. ஆனா அதிலையும் ஒரு ஆதாயம் இருக்கிறது. எங்கடை பாரம்பரிய புட்பக விமானங்களின் தொழில்நுட்பத்தைக் கண்டு சர்வதேசம் 22 ஆம் திகதிக்கு முன்னரே எங்கடை பக்கம் சாயலாம். அதை நானே எழுதிவிட்டா பிறகு குறுக்காலபோவான் எழுதினதும் கிட்டமுட்ட உப்பிடித்தானே எண்டு சனத்துக்கு நம்பிக்கை வராது என்று தான் எழுதினான்.

புஸ்பகவிமானம் குறித்து அமெரிக்கா, அதிக கவனத்தில் இருக்கின்றதாம். தனது செயற்கைக் கோள்கள் எல்லாவற்றையும் அங்கே திருப்பி வைத்திருக்கின்றார்கள். 22ம் திகதி, அனைவருக்கும் சங்கு தான். ஆனால் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம். எந்தச் செயற்கைக்கோளாலும், எறும்பு ஓடுவதைக் கண்டு பிடித்தாலும், புஸ்பகவிமானங்களின் பறப்பினைக் கண்டு பிடிக்க முடியாது. அப்படி ஒரு தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

22ம் திகதிக்கப் பிறகு பத்திரிகைகளில் ஸ்றோர், எழுதவும், விக்கட் கைப்பற்றியதையும் பற்றி எழுத எங்கள் ஊடகவியளார்களுக்கு குறைவிருக்காது.

22ம் திகதிக்கப் பிறகு பத்திரிகைகளில் ஸ்றோர், எழுதவும், விக்கட் கைப்பற்றியதையும் பற்றி எழுத எங்கள் ஊடகவியளார்களுக்கு குறைவிருக்காது.

இந்த கதையை தமிழர்கள் நம்பவைக்க சொல்லப்பட்டது என்பதை விட சிங்கள மக்களை நோக்கி சொல்லப்பட்ட விடயம் என்பதையும் சொன்னவர்கள் சிங்களவர்கள் என்பதையும் விளங்கிக்கொள்ளுங்கள். அப்படியானால் ஒரு கேள்வி வரும். ஏன் அப்படியான செய்கைகள்.? பதில் இதுதான் நடந்து கொண்டு இருக்கும் போரில் இலங்கை வெற்றி பெறலாம் அல்லது வெற்றி கிட்டாமல் விடலாம் அதில் சிங்களதரப்பு சோர்ந்து போய்விடக்கூடாது என்பதுக்காக. சிங்கள அரசு தோற்று போகாது ஏன் எண்றால் அவர்கள் முயண்று கொண்டு இருக்கிறார்கள். வெற்றி கிட்டுமா என்பதுதான் கேள்வி.? போன தடவை இங்கிலாந்தின் MP ஜோர்ச் கலாவே அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னார் ஒடுக்க பட்டவர்கள் போராடவேணும் போராடினால் ஒண்றில் வெற்றி பெறுவார்கள் அல்லது தோல்வியை பெறுவார்கள். ஆனால் போராடாமல் இருப்பவர்கள் தோல்வியை மட்டும்தான் பெறுவார்கள்.

இப்படியான ஒருகட்டதில் போரை தாங்களாக தொடுத்த சிங்கள அரசு வெற்றியோ தோல்வியோ தன் மக்களை போர்மீது நம்பிக்கை வைக்க சொல்லப்பட்ட புனை கதைகள் பல.. காரணம் போர் வேண்டாம் சமாதானம் எண்ற ரணிலுக்கு வாக்களித்த மக்கள் தொகை போர் வேணும் எண்று சொன்ன மக்களின் தொகைக்கு கிட்டத்தட்ட சமன்.. அவர்களின் எதிர்ப்பை சிங்கள அரசு எதிர் கொள்வதுக்கான ஒரு பிரச்சாரம்.

ஒரு விடயத்தை கவனியுங்கள் ஊடகங்களை குறைகூறிக்கொள்ளும் இங்குள்ளவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்ன எண்றால் யாழ்களைத்தை தவிர வேறு எவரும் இது சம்பந்தமாக நம்பிக்கை ஏற்படுத்தவில்லை...

எங்களவர் ஏன் சண்டை பிடிக்கவில்லை எண்று கேள்வி கேட்பவர்கள் ஒவ்வொரு முறையும் சிங்களவர் வெற்றி வெற்றி எண்று சண்டை முடிந்தபின்னர் போட்ட இரைச்சலை தாண்டி, ஒரு நடை வன்னிவரை போய் வந்த சமாதானத்தூதுவர்களும். .. அவர்களோடு புலிகளின் தொனிமாற்றம் ஏதாவது தென்படுகிறதா எனவும், எப்பிடி எல்லாம் கவுக்கலாம், என திட்டம் போட வசதியாக இருக்க போய்வரும் உளவியல் மேதைகளும் தெரிந்து கொண்ட உண்மைகள் ஒரு காரணமாக இருக்கலாம். எவ்வளவுகாலம் எண்டாலும் சலிப்பு இல்லாமல் வந்து போங்கோ எண்று எங்களவர் தலைமை சொல்கிறது வந்து போகலாம்தானே, அவர்களுக்கு சலிப்புவரும் போது ஒருவேளை நிலமை மாறலாம் இல்லையா.?

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

____________________________

நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.

அட!

அப்பிடி ஒரு நப்பாசை எல்லாருக்கும் இருக்குது போல :D :D :o :o :o

  • கருத்துக்கள உறவுகள்

தல!

ஊடகவியாளரை மட்டும் சுட்டிக் காட்டியது தவறு தான். பொதுவாக அனைவரும் நம்பும் விடயமாக மாறி விட்டது. உண்மையில் நான்(கள்) கவலைப்படுவது என்னவென்றால், இந்த 22ம் திகதிக்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை என்றால், அதன் விளைவை, எதிர்பார்ப்பை மக்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

அதிகபட்ச எதிர்பார்பை உருவாக்கி, அது நடக்கவில்லை என்றால் திட்டச் செய்வார்கள். அவ்வாறன நிலமை வேண்டாம் என்றே சொல்ல விரும்புகின்றேன். சமீபத்தில் நடந்த சமரில் உருவாக்கப்பட்ட செய்கைகள் அதன் விளைவைத் தான் கொடுத்தன. ஆனால் ஜயசுக்கிறு முறியடிப்பாகட்டும், ஆனையிறவு மீட்பாகட்டும், எந்த சமரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டுச் செய்த சமரல்ல.

இவ்வாறு எமக்குள்ள தூண்டுகின்ற செய்தி செவி வழியாக எதிரியையும் சேர இடமுண்டு. அதனால் அவனும் கண்ணில் எண்ணை வைத்துக் காத்திருப்பான். அந்த நிலைமையில் நடத்தப்படுகின்ற போரில் வெற்றி கிடைத்தாலும் அதிக இழப்புக்கள் கூட வரக்கூடும்.

போரில் இழப்புக் குறைந்த வெற்றி என்பது, எதரியைச் சோர்வடைய வைக்கின்ற போதிலும், எதிரி எதிர்பார்க்காத நிலையிலும் நடத்தும்போது தான். இன்றைக்கு யாழ்பாணம் பிடிபடும் என்று பெருமையடிக்கின்ற விடயத்தைப் பாருங்கள். இதனால் சின்ன அசைவு நடந்தாலே, எதிரி ஊசாராகின்றான். கடைசியாக நடந்த கடற்சமரில் நாகர்கோவிலில் நிற்கும்போதே, எதிரி உணர்ந்து கப்பலைக் காங்கேசந்துறைக்கு அனுப்பி வைத்தான்.

பெப்பரவரி 22 கதையும் அப்படித் தான். அதற்குப் பிற்பட்ட சில காலங்களுக்கு எதிரி ஊசாராகவே இருக்கப் போகின்றான். அந்த விளைவை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்பரவரி 22 கதையும் அப்படித் தான். அதற்குப் பிற்பட்ட சில காலங்களுக்கு எதிரி ஊசாராகவே இருக்கப் போகின்றான். அந்த விளைவை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

ஆனால், இதுவரை நடந்த அலசல்களின் படி (இந்தக் கட்டுரை உட்பட), 5 வருடம் என்பது வெறும் புனை கதை. எதிரியால் மக்களை ஏமாற்ற சோடிக்கப்பட்டது. எனவே

1) அவன் ஏன் பெப் 22 இல் உசாராக இருக்க வேண்டும்?

2) எதிரியால் சோடிக்கப்பட்ட ஒரு கதைக்கு புலிகள் ஏன் செயல் வாடிவம் கொடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் சொல்ல வேண்டும் பண்டிதர்.

பலர் 22ம் திகதி ஏதோ நடக்கும்போலச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதை எதிரியும் நம்பினால், அவன் அதற்குப் பிற்பட்ட காலமும் உசாராகவே இருந்தால், படை நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் தமிழர் தரப்புக்கு எடுக்க கூடும் என்பது தான் என் கருத்து

போரில் இழப்புக் குறைந்த வெற்றி என்பது, எதரியைச் சோர்வடைய வைக்கின்ற போதிலும், எதிரி எதிர்பார்க்காத நிலையிலும் நடத்தும்போது தான். இன்றைக்கு யாழ்பாணம் பிடிபடும் என்று பெருமையடிக்கின்ற விடயத்தைப் பாருங்கள். இதனால் சின்ன அசைவு நடந்தாலே, எதிரி ஊசாராகின்றான். கடைசியாக நடந்த கடற்சமரில் நாகர்கோவிலில் நிற்கும்போதே, எதிரி உணர்ந்து கப்பலைக் காங்கேசந்துறைக்கு அனுப்பி வைத்தான்.

பெப்பரவரி 22 கதையும் அப்படித் தான். அதற்குப் பிற்பட்ட சில காலங்களுக்கு எதிரி ஊசாராகவே இருக்கப் போகின்றான். அந்த விளைவை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

வன்னி பெருநிலத்தை சுற்றி மன்னார், வவுனியா, மணலாறு, எண்டும் நீங்கள் சொல்லுற முகமாலை நாகர் கோயில் எண்டும். இராணுவத்தின் பாதுகாக்க வேண்டிய பகுதிகள் அண்ணளவாய் 250 கிலோ மீர்றருக்கும் அதிகமான பங்கு. இதில் மன்னார் என்பது ஒரு பக்கம் கடல் விரிந்து கிடக்கிறது. அங்கேயும் பாதுகாக்க வேண்டும்... மணலாறு எனபதின் பெருண்பாண்மையாகது சிறு சிறு முகாம்களை கொண்டது. இதில் எங்கு தாக்குதல் நிகழும் என்பதை கணிக்க முடியும் என்கிறீர்களா.? கடற்புலிகளின் வளர்ச்சியில் தீவகம் என்பதும் ஈரூடக படையணி என்பதை புலிகள் வெளியிலும் காட்டிய பிறகு பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.....!

இதில் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என இரவு முழுவதும் 40மீற்றர் தூரத்துக்கு ஒரு காவலரன் அமைத்து( எல்லா காவலரினிலும் இராணுவத்தினர் இருக்க முடியாது) 3பேர் வீதம் காவல் காப்பதும், காலை வேளைகளில் காவலரனுக்கு முன்னால் தடைகளை சரி செய்வதும் எண்று காவல் கடமைகளில் காலத்தை களிக்கும் இராணுவ வீரனுக்கும், காவலுக்கு பின்னால் இருக்கும் இளநிலை அதிகாரிக்கும் இருக்கும் படபடப்பு என்பது உருவாக்க படுவதில் என்ன பிரச்சினை வந்திடப்போகுது.

தமிழர் தரப்புக்கு வேண்டிய புறச்சூழல் தானாகவே உருவாக்கி குடுத்துக்கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. இந்த தருணத்தில் புலிகள் சண்டையை இப்போதைக்கு தாங்களாகவே தொடங்குவார்கள் எண்று நினைக்கவே வேண்டாம்.

ஆனாலும் நாங்கள் பலமாக இருக்கின்றோம், எங்களை பலவீனப்படுத்தி விட முடியாது, எங்களால் இடங்களை கைப்பற்றும் திறன், ஆயுத பலம் எல்லாம் இருக்கின்றது, எனும் செய்தி சர்வதேசம், சிங்கள மக்களுக்கு எல்லாம் போய் சேர வேண்டும்.... இந்த உண்மையான செய்தி மட்டும்தான் சிங்கள படைகளின் செயல்களுக்கும், நடவடிக்கைக்கும் ஆதரவு குடுக்கும் அவர்களை சோர்வடைய செய்யலாம். நீங்கள் எல்லாரும் விரும்பாதது போல இந்த செய்தி தமிழ் மக்களுக்கும் போய் சேரும் என்பதுதான் உங்களை வெறுப்போத்த கூடியது.

22ம் திகதி கதையை வேண்டும் எண்றால் தள்ளி வையுங்கள். ஆனால் JVP, சிங்கள உறுமய என்பன சொல்லும் விடயம் கிழக்கு திமோர் பற்றியது 2002/05/20 அண்று முஸ்லீம் நாடான இந்தோநேசியாவில் இருந்து பிரிந்து சுதந்திரம் கண்ட கிறிஸ்தவ நாடு. இது பற்றி அவர்கள் சொன்னவை கிடப்பில் போட்டு விட கூடியது இல்லை.

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி பெருநிலத்தை சுற்றி மன்னார், வவுனியா, மணலாறு, எண்டும் நீங்கள் சொல்லுற முகமாலை நாகர் கோயில் எண்டும். இராணுவத்தின் பாதுகாக்க வேண்டிய பகுதிகள் அண்ணளவாய் 250 கிலோ மீர்றருக்கும் அதிகமான பங்கு.

250 கிலோமீற்றர்கள் என்பது அதிகம்.

வன்னியின் மன்னார், வவுனியா, மணலாறு ஊடான முன்னரங்க எல்லை வளைவுகளுடன் சேர்த்து 130 கிலோமீற்றர்கள்தாம்.

கிளாலியிலிருந்து நாகர்கோயில் வரையான வடபோர்முனை முன்னரங்க எல்லை பத்து கிலோமீற்றர்கள் மட்டுமே.

மொத்தமாகப் பார்த்தாலும் நூற்றைம்பதைத் தாண்டாது.

நிற்க, இதேயளவு முன்னரங்க எல்லைகளைக் கண்காணிக்கவும், அதனூடு வரும் எதிரிப்படைகளின் முன்னேற்றங்களைத் தடுக்கவும் வேண்டிய தேவை சிறிலங்காப் படையினருக்கு மட்டுமானதில்லை; புலிகளுக்கும் உள்ளது.

புலிகள் பெரியதொரு யுத்தத்துக்குத் தயார்ப்படுத்துவதைத் தடுக்க, ஏதாவது ஒரு பக்கத்தால், அல்லது சில பக்கங்களால் முன்னேற்றத்தை மேற்கொள்ள எதிரியும் எத்தனிக்கிறான். இடங்களைப் பிடிக்கிறோமோ இல்லையோ, எத்தனை பேர் சாகிறோமோ இல்லையோ புலிகளை தயார்ப்படுத்தலுக்கு விடக்கூடாது என்பதே சிங்கள அரசின் தற்போதைய குறிக்கோள்.

அவ்வாறான முன்னேற்ற முயற்சிகள் நடந்தால், ஏற்கனவே ஆட்பலப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் தமிழர்படைக்குப் பாதகம்தான்.

பிந்துபவர்கள் சிக்கலை எதிர்கொள்வார்கள்.

இன்னொரு விதத்தில் சொல்வதானால், புலிகளின் பெரிய தாக்குதலை விரைவுபடுத்தச் செய்வது சிங்களத் தரப்பேதான்.

இவர் என்ன நல்லவன் றெம்ப சின்னப் பிள்ளைத்தனமாக எழுதுறார்?

எமது பலத்தையும் எதிரியின் பலவீனத்தையும் சரியாக கணக்கிலெடுத்து ஆழமாக பார்த்தால் எதிரிக்கு 250 கிலோமீற்றருக்கு மேல இருக்கு முன்னரங்கப் பகுதிகள் என்றால் எங்களுக்கு ஒரு 50 கிலோமீற்றர் மட்டிலான வரும்;.

பலவீனமான எதிரி பாதுகாப்பு வேலியல இவ்வளவு தூரத்துக்கு ஒரு காவலரண்கள், ஒரு தொகுதி காவலரண்களிற்கு ஒரு இளநிலை அதிகாரி என்று வைத்து பேண வேணும். அதிலையும் பிறகு நாங்கள் செல் அடிச்சு காயப்பட்டா அவங்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற எரிபொருள் செலவு, வாகனங்களின் தேய்மான செலவு, வைத்தியசாலையில் பாவிக்கப்படுகிறது உபகரணங்களிற்காக செலவு மின்சார செலவு மருந்துகளிற்கான செலவு நிவாரணம் என்று பார்த்தால் சிறீலங்கா வெகு வேகமாக வங்குரோத்து ஆகிவிடும்.

ஆனா நாங்கள் அப்படி இல்லை. எல்லாம் remote control இல camera வாலை பாப்பம் பொத்தானுகளை அமத்துவம் அலுவல்கள் முடிச்சுடும். சத்தம் காதில கேக்க முதல் screen இல காட்டும் அந்த மாதிரி அடி எண்டு.

காயப்பட்டவையை நிவர்த்தி செய்ய புதிதாக இராணுவத்துக்கு சேர்த்தால் அதிலையும் பயிற்சி சீருடை சம்பளம் என்று ஏகப்பட்ட செலவுகள். நாங்கள் மரத்தில காசு புடுங்கி போராட்டம் நடத்திறம் ஆனா சிறீலங்கா கடன்பட்டு நடத்துது. ஆனபடியா சிறீலங்காவாலை தாக்குப்பிடிக்க முடியாது நீண்ட காலத்துக்கு.

உதுகள் கிடக்க நீரும் புhரயமும் புலிகள் பாரிய பாச்சலுக்கு தயாராகிறார்கள் என்று அடிக்க விடுறியள். உங்களுக்கும் மற்றவையின்ரை வயிற்றோட்டம் தொத்திவிட்டுதோ?

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்கும் என்று சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட போது ஏதாவது வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததா? அல்லது ஒப்பந்தத்திலுள்ள ஏதாவது சரத்து அவ்வாறு கூறுகின்றதா? எல்லாம் நாமாக முயற்சி செய்தால் தான் உண்டு!

நாம சாகிறதுக்கு முதல் கிடைத்தால் சரி தான்...

நாம சாகிறதுக்கு முதல் கிடைத்தால் சரி தான்...

ஏன் இப்ப உயிரோட இருந்து என்ன செய்யிறியள்? லண்டனில தானே இருக்கிறியள், உங்களுக்கு சண்டை நடந்தா என்ன நடக்காட்டி என்ன? கட்டையில போற வயசா உங்களுக்கு?

250 கிலோமீற்றர்கள் என்பது அதிகம்.

வன்னியின் மன்னார், வவுனியா, மணலாறு ஊடான முன்னரங்க எல்லை வளைவுகளுடன் சேர்த்து 130 கிலோமீற்றர்கள்தாம்.

கிளாலியிலிருந்து நாகர்கோயில் வரையான வடபோர்முனை முன்னரங்க எல்லை பத்து கிலோமீற்றர்கள் மட்டுமே.

மொத்தமாகப் பார்த்தாலும் நூற்றைம்பதைத் தாண்டாது.

நிற்க, இதேயளவு முன்னரங்க எல்லைகளைக் கண்காணிக்கவும், அதனூடு வரும் எதிரிப்படைகளின் முன்னேற்றங்களைத் தடுக்கவும் வேண்டிய தேவை சிறிலங்காப் படையினருக்கு மட்டுமானதில்லை; புலிகளுக்கும் உள்ளது.

புலிகள் பெரியதொரு யுத்தத்துக்குத் தயார்ப்படுத்துவதைத் தடுக்க, ஏதாவது ஒரு பக்கத்தால், அல்லது சில பக்கங்களால் முன்னேற்றத்தை மேற்கொள்ள எதிரியும் எத்தனிக்கிறான். இடங்களைப் பிடிக்கிறோமோ இல்லையோ, எத்தனை பேர் சாகிறோமோ இல்லையோ புலிகளை தயார்ப்படுத்தலுக்கு விடக்கூடாது என்பதே சிங்கள அரசின் தற்போதைய குறிக்கோள்.

அவ்வாறான முன்னேற்ற முயற்சிகள் நடந்தால், ஏற்கனவே ஆட்பலப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் தமிழர்படைக்குப் பாதகம்தான்.

பிந்துபவர்கள் சிக்கலை எதிர்கொள்வார்கள்.

இன்னொரு விதத்தில் சொல்வதானால், புலிகளின் பெரிய தாக்குதலை விரைவுபடுத்தச் செய்வது சிங்களத் தரப்பேதான்.

இது ஆய்வோ இல்லை புல(ம்)நாய்வோ?

நிற்க, இதேயளவு முன்னரங்க எல்லைகளைக் கண்காணிக்கவும், அதனூடு வரும் எதிரிப்படைகளின் முன்னேற்றங்களைத் தடுக்கவும் வேண்டிய தேவை சிறிலங்காப் படையினருக்கு மட்டுமானதில்லை; புலிகளுக்கும் உள்ளது

புலிகளுக்கும் அந்த தேவை இருக்கு ஆனால் இராணுவம் பாத்துக்காக்கும் மூறைக்கும் புலிகளின் கட்டவுட்டுக்கும் வித்தியாம் இருக்கு.

வீட்டில் இருந்து ஆய்வாளர்

டக்டர் வடிவேலு

Edited by வடிவேலு

இது நியாயமான கேள்வி...

ஏன் இப்ப உயிரோட இருந்து என்ன செய்யிறியள்? கட்டையில போற வயசா உங்களுக்கு?

ஆனால் இது,....

லண்டனில தானே இருக்கிறியள், உங்களுக்கு சண்டை நடந்தா என்ன நடக்காட்டி என்ன?

லண்டன் என்ன நிறம் நாரதர் அங்கிள்?

கட்டையில போற வயசா உங்களுக்கு?

நான் சொன்னதற்கான காரணம்,நாம் பிறக்கும் போது, எமது பெற்றொர்கள் நினைத்தார்களாம்,நாம் வளர்வதற்க்குள் இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்டு..ஆனால், என்னை தூக்கி வளர்த்த என் சகோதரன் துயிலும் இல்லம் தூங்க போய் பத்து வருடங்கள் ஆகிறது, எம் கண்ணீரும் முடிவில்லாமல் போய்விட்டது..அது தான் சொன்னேன்..நாம சாகிறத்துகுள்ளையாவது தமிழீழத்தை பார்த்துவிடுவோம் என்டு..

நான் புலத்தில் இல்லைங்கோ..என் அண்ணன் விதையான இடத்தில் தான் நான் வாழ்வேன்! :icon_idea:

250 கிலோமீற்றர்கள் என்பது அதிகம்.

வன்னியின் மன்னார், வவுனியா, மணலாறு ஊடான முன்னரங்க எல்லை வளைவுகளுடன் சேர்த்து 130 கிலோமீற்றர்கள்தாம்.

கிளாலியிலிருந்து நாகர்கோயில் வரையான வடபோர்முனை முன்னரங்க எல்லை பத்து கிலோமீற்றர்கள் மட்டுமே.மொத்தமாகப் பார்த்தாலும் நூற்றைம்பதைத் தாண்டாது.

கிளாலி முதல் நாகர்கோயில் வரையே நீங்க சொல்வது தவறு சரியாக 13 கிலோ மீற்றர்கள்.... யாழ்ப்பானத்துக்கான இராணுவ பாதுகாப்பு இவ்வளவு மட்டும் போதும் எண்டுறீரா....?????

கிளாலி முதல் சாவகச்சேரி கச்சாய் வரையும் கூட கடற் பகுதியால் பாதுகாக்க வேண்டிய எதிர் பிரதேசம், கச்சாய் முதல் நுணாவில்( எனது சொந்த இடம்) கைதடி நாவற்குழு வரையும் தரையால் பாதுகாக்க வேண்டிய இராணுவ காவலரன்கள்....! ( கேரதீவு , கோயிலாக்கண்டி முதல் நாவற்குழி வரை இப்படி.)

பின்னர் அரியாலை முனை முதல் பூம்புகார், கொழும்புத்துறை, பாசையூர், குருநகர் சங்கிலிப்பாலம் வரைக்கும் முன்னரங்குதான். காரணம் பூநகரி, விறகடி, கௌதாரி முனை, மண்ணித்தலை கல்முனை வரை இராணுவத்துக்கு எதிராக இருக்கிறது....! அப்படி பார்த்தால் மண்டைதீவு கூட இராணுவ முன்னரங்குதான்...! நாகர் கோயில் முதல் நேர் கோட்டில் இருக்கும் பருத்தி துறை 24 கிலோ மீற்றர் வரை இருக்கிறது.... அங்கு இராணுவத்துக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்கிறீரா....???

இப்படி மாவட்ட ரீதியில் பாரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.