Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலகுவான வீட்டுத் தோட்டம் - hugelkultur

Featured Replies

விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். 

விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம்.

  • இயற்கை, இயற்கை, … இலவசம்.
  • குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்கலாம்
  • மேலதிக பசளை எதுவும் பல வருடங்களுக்குத் தேவையில்லை
  • நிலப் பராமரிப்பு கிடையாது. 
  • வறட்சியான, உவர்ப்பான, பசளையற்ற, களித்தன்மையான எந்த நிலத்திற்கும் ஏற்றது
  • நீர் சிறிதளவு போதுமானது
  • ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. மழை காலங்களில் முற்றாக நீர்ப்பாசனத்தை நிறுத்தலாம்.
  • களைகள் அதிகம் வளராது. 
  • இன்னும் பல

இப் பயிற்செய்கை முறையினால் குறுகிய இடத்தில் குறைந்த நீருடன் இலவசப் பசளையுடன் குறைந்த பராமரிப்புடன் இயற்கையான பரக்கறிகளை உற்பத்தி செய்யலாமே தவிர அமோகமான விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். 

செய்முறை 

  1. நிலத்தில் 1.2 மீற்றர் அகலமாகவும் உங்கள் வசதிக்கேற்ப நீளமானதுமான நீள்சதுரத்தைத் தெரிவு செய்யவும். சூரியனின் பாதையில், அதாவது கிழக்கு மேற்காக நீளப் பகுதி இருப்பது சிறந்தது. இப் பகுதியை 30 சென்ரிமீற்றர் அளவில் தோண்டவும். தோண்டிய மண் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக இருந்தால் அம் மண்ணை நீள்சதுரத்தின் அருகிலேயே விடவும்.
     
  2. இதன் அடிப் பகுதியில் இயற்கையான சிறு கற்கள் இருந்தால் பரவி விடலாம், இல்லாவிட்டால் பரவாயில்லை. அடுத்ததாக 5 - 10 சென்ரிமீற்றர் உயரத்துக்கு நன்கு உக்கிய சருகு, சாணி போன்ற சிறு பொருட்களால் நிரப்பிக் கொள்ளவும்.
     
  3. இதன்மேல் உபயோகப் படாத காய்ந்த பெரிய மரக் மரக் கட்டைகள் , தென்னங் குற்றிகள் போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும். பச்சை மரத்தைத் தவிர்க்க வேண்டும்.  மரம் அதிக தடிப்பாக இருப்பது இன்னும் நல்லது. 
     
  4. அடுத்ததாகப் பயன்படாத சிறிய காய்ந்த மரக் கிளைகள், குச்சுகள் தென்னை மட்டை, பாளை போன்றவற்றைக் கிடையாக அடுக்கவும்.
     
  5. மரக் குச்சுகளின் இடைவெளிகளில் சாணி, ஆட்டுப் புழுக்கை, உக்கிய சருகு, உமி போன்ற சிறு இயற்கைப் பசளைகளால் நிரப்பவும்.
     
  6. இதன்மேல் தோண்டி வைத்திருக்கும் மண்ணால் அல்லது தோட்ட மண்ணால் மூட வேண்டும். இப்போது இது கூரான வரம்பு போல் காட்சியளிக்கும்.
     
  7. இறுதியாக வைக்கோல் துண்டுகள், ஓலைத் துண்டுகளால் முற்றாக மூடவும். இந்த வரம்பின் குறுக்கு வெட்டைப் பார்த்தோமானால் இவ்வாறு இருக்கும்.

    hugel.jpg
     
  8. வரம்பின் உச்சியில் ஓட்டையுள்ள சிரட்டைகளை, ஓட்டைகள் கீழ்ப்புறமாக இருக்குமாறு நில மட்டத்திற்கு அமிழ்த்தி விடவும். இதற்குள்தான் நீர் பாசனம் செய்யவேண்டும். மறக்காமல் சில மண்புழுக்களையும் பிடித்து வரம்பிற்குள் விடுங்கள்.

hugelkultur வரம்பு தயார். மேலுள்ள வைக்கோல் படையைச் சிறிதாக விலக்கிவிட்டுப் பயிர்களை நட்டு மீண்டும் வைக்கோலால் மூடி விடவும். 

பயிர்களின் வேர்கள் மண் படையைத் தாண்டி அடியிலுள்ள மரங்களைத் தொடப் போகின்றது. இந்த மரக் கட்டைகள் சிறிது சிறிதாக உக்கியபடி பயிருக்குத் தேவையான அத்தனை பசளைகளையும் கொடுக்கும். அத்துடன் நீரையும் உறிஞ்சி வைத்து படிப்படியாகப் பயிருக்கு வழங்குவதுடன் மண்ணுக்கு வேண்டிய காற்றோட்டத்தையும் வழங்குகிறது. முதல் வருடத்தில் மரம் உக்கத் தொடங்குவதால் அதிக விளைச்சல் இராது. 

மரக் கட்டைகளின் தன்மையைப் பொறுத்து சுமார் 20 வருடங்கள் வரை பயிச்செய்கை செய்யலாம். அதுவரை நிலத்தைக் கொத்திப் புரட்டவோ வேறு பசளைகள் சேர்க்கவோ தேவையில்லை. மேற்புறத்தில் உள்ள வைக்கோல் உக்கி மறைந்து விட்டால் மீண்டும் வைக்கோல் சேர்க்க வேண்டும்.

மேற்புறத்தில் அமிழ்த்திய சிரட்டைகளுக்குள் நீர் விட்டால் போதுமானது. சிரட்டைகளிலுள்ள நீர் வரம்பினுள் பரவ, மரக் கட்டைகள் அதனை உறிஞ்சிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் நீர் விடத் தேவையில்லை. வைக்கோல் படை நீர் ஆவியாகாமல் தடுப்பதுடன் களைகள் முளைப்பதையும் தடுக்கும். அத்துடன் நத்தை மற்றும் சில பயிரின் இலைகளை உண்ணும் புழுக்கள் வராமல் தடுக்கும். 

வெவ்வேறு விதமான பயிர்களைக் கலந்து நடலாம். இடையிடையே சீல காஞ்சோண்டி, செவ்வந்திச் செடிகளையும் நட்டு விடுங்கள். இவை சில நோய்களையும் பூச்சிகளையும் நெருங்க விடாதாம்.

நீங்களும் சிறிய வரம்பு ஒன்றை உங்கள் தோட்டத்தில் ஒரு ஓரமாக அமைத்துப் பாருங்கள். அக்கம் பக்கத்தில் பட்ட மரம் இருந்தால் அதனை சேகரித்து வையுங்கள். தயார் செய்வதுதான் ஓரளவு சிரமம். பராமரிப்பு பெரிதாகத் தேவையில்லை அதுவும் வரம்பு உயரமாக இருப்பதால் நின்றபடியே களை பிடுங்கவும் பயிர் நடவும் முடியும். 

இனி hugelkultur முறையில் வேறு விதமான எனது அனுபவத்தையும் உங்களுடன் பகிர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் இணையவன் எனக்கும்  தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் ஊரிலும் சரி இங்கும் சரி எனக்கு தோட்டம் செய்ய விரும்பி செய்வேன்.இங்கு ஆரம்பத்தில் நன்றாக வந்தன.இப்போ வங்கி பணம் போல் முன்னேற்றமே இல்லை.

உங்கள் தகவல் பயனுள்ளது போல் தெரிகிறது.ஆனால் இத்தனையும் செய்ய உடம்பு இடம் கொடுக்குதோ பார்க்கலாம்.

பழைய இணைப்புகளில் இருந்து எமது வீட்டுத் தோட்டம்.கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய படங்கள் பார்க்க முடியாமல் உள்ளது.யாராவது உதவி செய்யுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத் தோட் டம் என்பது மனதிற்கு இனிமையானதும், 
அப்படி செய்பவர்கள் பலர் ஆரோக்கியமாக... வாழ்வதையும் அவதானித்துள்ளேன்.
அதிலும்.... ஒருவர் தனது அனுபவங்களை, பகிரும் போது ....
எமக்கு ஏற்படும் சந்தேகங்களையும் உடனடியாக நிவர்த்தி செய்யக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதால்,
இணையவனின்  பதிவை, ஆவலுடன் வாசிக்க காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமதூரில் புகையிலை நடுவோர் மேலே வைக்கோலைப் பரப்பித்தான் நடுவது. இப்ப தான் விளங்குகிறது. 

  • தொடங்கியவர்

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

 

On 21 mars 2017 at 6:35 PM, suvy said:

பகிருங்கள் இணையவன் எனக்கும்  தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு......!  tw_blush:

சுவி அண்ணா, நான் பிரான்ஸ் வந்த புதிதில் அடுக்கு மாடிக் கட்டட பல்கனியில் பிளாஸ்டிக் வாளிகளில் மிளகாயும் தக்காளியும் வளர்த்தோம். 

இன்று நச்சுப் பொருட்கள் அற்ற உணவு அரிதாக உள்ளது. வீட்டுத் தோட்டம் மூலம் மட்டுமே ஓரளவு நம்பிக்கையுடன் பயிர்செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தோட்ட முறையைத் தெரிவு செய்யலாம். 

On 21 mars 2017 at 8:06 PM, ஈழப்பிரியன் said:

இணையவன் ஊரிலும் சரி இங்கும் சரி எனக்கு தோட்டம் செய்ய விரும்பி செய்வேன்.இங்கு ஆரம்பத்தில் நன்றாக வந்தன.இப்போ வங்கி பணம் போல் முன்னேற்றமே இல்லை.

உங்கள் தகவல் பயனுள்ளது போல் தெரிகிறது.ஆனால் இத்தனையும் செய்ய உடம்பு இடம் கொடுக்குதோ பார்க்கலாம்.

பழைய இணைப்புகளில் இருந்து எமது வீட்டுத் தோட்டம்.கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

 

ஈழப்பிரியன், hugelkultur முறையை முயன்று பாருங்கள். தயார் படுத்துவது தான் சிரமமே தவிர பராமரிப்பு சுலபம்.

 

On 21 mars 2017 at 8:30 PM, ஈழப்பிரியன் said:

பழைய படங்கள் பார்க்க முடியாமல் உள்ளது.யாராவது உதவி செய்யுங்கப்பா.

உங்கள் படங்களைக் குறிப்பிட்ட இணையத் தளம் நடத்துபவர்கள் அழித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் பணம் செலுத்திய அங்கத்தவர் படங்களைக் கூட அழித்து விட்டதாக அறிந்தேன். 

 

On 22 mars 2017 at 5:01 AM, தமிழ் சிறி said:

வீட்டுத் தோட் டம் என்பது மனதிற்கு இனிமையானதும், 
அப்படி செய்பவர்கள் பலர் ஆரோக்கியமாக... வாழ்வதையும் அவதானித்துள்ளேன்.
அதிலும்.... ஒருவர் தனது அனுபவங்களை, பகிரும் போது ....
எமக்கு ஏற்படும் சந்தேகங்களையும் உடனடியாக நிவர்த்தி செய்யக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதால்,
இணையவனின்  பதிவை, ஆவலுடன் வாசிக்க காத்திருக்கின்றோம்.

நன்றி தமிழ்சிறி. தோட்டத் துறை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்கிறேன். 

On 22 mars 2017 at 8:27 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமதூரில் புகையிலை நடுவோர் மேலே வைக்கோலைப் பரப்பித்தான் நடுவது. இப்ப தான் விளங்குகிறது. 

எமது முன்னோர்கள் அனுபவ நீதியாகச் செய்த சில காரியங்களை அறிவு ரீதியாக ஆராயாமல் உதறித் தள்ளிவிட்டோம். இரசாயனப் பயிற்செய்கை தோற்க ஆரம்பித்துள்ளது. இயற்கைப் பயிற்செய்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

  • தொடங்கியவர்

இப் பயிற்செய்கை முறை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் யேர்மானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு அவுஸ்திரேலியா அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளின் மீண்டும் உயிர்பெற்றது. மேலே குறிப்பிட்ட முறையானது Philip Forrer என்ற பிரெஞ்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. இவர் hugelkultur பயிற்செய்கை முறை எதிர்காலத்தில் பாரிய அளவில் கடைப்பிடிக்கப்படும் என்று நம்புகிறார். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பூமி வெப்பமடைவதால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நீரற்ற காலநிலை என்று கருதப்படுகிறது. hugelkultur முறையானது வறட்சி, அதிக மழை ஆகிய இரண்டையும் தாங்கக் கூடியது.

hugelkultur பல வடிவங்களில் பயன்படுத்தப் படலாம் என்பதை எனது அனுபவம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எனது தெரிவிற்கான காரணங்கள்
- வீடு இருக்கும் காணி சிறியது
- மண் வளம் குறைந்தது. ஏராளமான கற் துகள்கள் காணிகுள் புதைக்கப்பட்டுள்ளன.
- உயரமான மரங்கள், மதில் சுவர், அயல் வீடுகள் என்பவற்றால் சரியான சூரிய ஒளி படக்கூடிய இடம் இல்லை.
- இயற்கைக் கழிவுகள் தாராளமாக உள்ளது.
- மழைநீரைச் சேகரிக்கும் வசதி இல்லாமையால் குழாய் நீரையே தோட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை

தெரிவு
உயரமான தொட்டி ஒன்றினைப் பலகையால் அமைத்து அதனுள் hugelkultur முறை மூலம் பயிர்செய்தல்.

சூரிய ஒளியும் கிடைக்கும். அத்துடன் தேவையானபோது வேறு இடத்திற்கு நகர்த்தவும் முடியும்.  குளிர் காலத்தில் பொலித்தீனால் மூடி குளிர் காலத்தில் வளரும் பயிர்களையும் நடலாம்.

தொட்டி
பலகைத் தொட்டி செய்வதற்கு அவரவர் வசதிப்படி நீள அகலங்களில் எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். உயரம் மட்டும் ஏறத்தாள 60 சென்னிமீற்றருக்கு இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால் பயிரின் வேர்கள் அடியிலுள்ள மரக் கட்டைகளைத் தொடாது. உறுதியாக இருக்க வேண்டும். பலகையைத் தெரிவு செய்யும்போது வீடு கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் பலகைகளைப் பாவிக்கக் கூடாது. இவை நச்சுத் தன்மையான இரசாயனக் கலவையில் ஊற வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவன. மஞ்சள் நிறமாக இருக்கும். இரசாயனம் சேர்க்கப் படாத பலகைகள் விலையும் குறைவு. எனது தொட்டியின் கால்கள் மட்டுமே இரசாயனம் கலந்தது. கால்கள் தொடியில் இருக்கும் மண்ணுடன் சேராது. பலகைகளை இணைத்துப் பூட்டுவதற்குத் துருப் பிடிக்காத நச்சுத் தன்மையற்ற inox புரி ஆணிகள் பயன்படுத்தப் பட்டன.

hugelkulture-bac1.jpg

2 மிற்றர் நீளமாகவும் 1 மீற்றர் அகலமாகவும் 60 சென்னிமீற்றர் உயரமாகவும் எனது தொட்டி அமைகிறது.

அடுத்து, தொடியின் எல்லாப் பகுதிகளிலும் ஒருவித எண்ணையால் பூச வேண்டும். இந்த எண்ணையை பிரான்சில் huile de lin என்கிறார்கள். கூகிள் இதனை linseed oil என்று மொழி பெயற்கிறது. இது தாவர இயற்கையான எண்ணை. பூச்சி கறையான் பலகையை அரிக்காமலும் நீர் அதிகம் பலகைக்குள் நுளைந்து உக்கி விடாமல் பலகையைப் பாதுகாக்கும். மண்ணிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சாதாரண கடைகளில் கிடைக்கும். உணவுக்குப் பயன்படுத்துவதில்லை.

hugelkulture-bac2.jpg

தொட்டியின் உபுறத்தில் Geotextile எனப்படும் துணி போன்ற ஒன்றால் மூடி சிறிய ஆணியால் அல்லது stapler மூலம் பலகையுடன் இணைக்கப்பட்டது. Geo textile பயிருக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. உக்கிப் பழுதடையவும் மாட்டாது. மண்ணுக்கும் பலகைக்கும் இடையில் தடுப்பாக இருப்பதுடன் வேர்கள் பலகையைத் தொடுவதைத் தடுக்கும். மேலதிக நீர் மட்டுமே இதனூடாக வெளியேறும். 1 சதுர மீற்றர் 2 யூரோ அளவில் கிடைக்கும். இது இல்லாதவர்கள் கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கறுப்பு நிறமான பிளாஸ்டிக் படிவத்தைப் பயன்படுத்தலாம். 

உள்ளடக்கம்
மதிலைத் தாண்டியும் இரு மரங்களுக்கு இடையிலும் வெயில் படக் கூடியவாறு தொட்டி வைக்கப்பட்டது. நில மட்டத்தைச் சீர் செய்வதற்காக கால்களின் கீழ் கற்கள் வைக்கப்பட்டது.

தொட்டி என்றபடியால் முதலில் மரக் கட்டைகளை அடுக்க வேண்டும். என்னிடம் மொத்தமான மரக்கட்டைகள் இல்லாதபடியால் இரண்டு தட்டுகளாக மரக் கட்டைகள் அடுக்கப்பட்டது.

hugelkulture-bac3.jpg

அதன்மேல் சிறு கிளைகளும் அதன்மேல் சருகுகள் இயற்கைக் கழிவுகள் சாம்பல் போன்றவைகளால் 90 வீதமான தொட்டி நிரப்பப்பட்டது. எனது காணியில் சிறந்த மண் இல்லாததால் நண்பர் ஒருவரின் காணியிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மீதி 10 வீதமான தொட்டி நிரப்பப் பட்டது. நிலத்தில் செய்யப்பம் வரம்பு போலன்றி மேற்பரப்பு மட்டமாக நிரப்பப்பட்டது. இறுதியாகப் போட வேண்டிய வைக்கோல் இதில் அவசியமற்றதாகக் கருதியதால் போடவில்லை. தொட்டி உயரமாக இருந்ததாலும் வெயில் குறைவாகப் பிடிப்பதாலும் வைக்கோல் அநாவசியமாகத் தோன்றியது. 

hugelkulture-bac4.jpg

இதோ hugelkultur தொட்டி தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "terreau universel"

இதை வாங்கிப் போடலாமா.... விலையும் மலிவு, அல்டி மார்சேயில் வாங்கினால் 50 l  பைக்கட்  02, 50 ஈரோ தான் வரும். நான் இதுதான் வாங்கிறனான்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த போட்டாலும் ஊர் சாணிக்கு பிறகுதான் ம்கும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக்கலை எனக்கு மிகவும் பிடிக்கும் முன்பெல்லாம் வீட்டில் மரக்கறித் தோட்டம் போடுவேன் கடந்த இருவருடங்களாக ஒழுங்காக ஒரு மரமோ செடியோ நடவில்லை இம்முறை மீளவும் மரக்கறித்தோட்டம் வைப்பதான உத்தேசம். உங்கள் பதிவுகள் பயனுள்ளவையாக இருக்கின்றன இணையவன்.

  • தொடங்கியவர்
3 hours ago, suvy said:

இதை வாங்கிப் போடலாமா.... விலையும் மலிவு, அல்டி மார்சேயில் வாங்கினால் 50 l  பைக்கட்  02, 50 ஈரோ தான் வரும். நான் இதுதான் வாங்கிறனான்.....!  tw_blush:

தாராளமாகப் பாவியுங்கள். காணியுடன் வீடுள்ளவர்கள் இதனைத் தாங்களாகவே தயாரித்துக் கொள்ளலாம். இதைப் பற்றி இந்தத் திரியிலேயே எழுதுகிறேன்.

hugelkultur முறையுடன் ஒப்பிடும்போது அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் எமது நாட்டில் இது சரிவராது.

3 hours ago, முனிவர் ஜீ said:

என்னத்த போட்டாலும் ஊர் சாணிக்கு பிறகுதான் ம்கும் :unsure:

எமது ஊர் மாட்டுச் சாணிக்கு நிகராக எதுவும் இல்லை. ஆனால் எல்லோரும் மாட்டுச் சாணியைக் கொண்டு விவசாயம் செய்வது சாத்தியப்படாது. போதுமான அளவு கிடைக்காது. 

வெளிநாடுகளில் மாட்டுச் சாணி பயன்படுத்தப் படுவது குறைவு. ஏனென்றால் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் அன்ரிபயோட்டிக் மற்றும் மருந்துகள் சாணி மூலமாகப் பயிருக்கும் போகும். இங்கு குதிரைச் சாணியே சிறந்ததாகக் கூறுகிறார்கள். அத்துடன் சாணி போட்டுச் செய்யும் விவசாயம் சாதாரணமான விவசாய முறை.

சென்ற வருடம் நான் வன்னி வந்திருந்தபோது அங்குள்ள விவசாயிகள் சொன்னது, 'அவங்கள் தாற பசளையையும் மருந்துகளையும் பாவிக்காவிட்டால் ஒன்றும் தோட்டத்தில் ஒன்றையும் விளைவிக்க முடியாது.' இவ்வாறு எமது விவசாயிகளும் இயற்கை விவசாயத்தைக் கைவிட்டு இரசாயனத்துக்கு அடிமையாகி விட்டனர்.

1 hour ago, வல்வை சகாறா said:

தோட்டக்கலை எனக்கு மிகவும் பிடிக்கும் முன்பெல்லாம் வீட்டில் மரக்கறித் தோட்டம் போடுவேன் கடந்த இருவருடங்களாக ஒழுங்காக ஒரு மரமோ செடியோ நடவில்லை இம்முறை மீளவும் மரக்கறித்தோட்டம் வைப்பதான உத்தேசம். உங்கள் பதிவுகள் பயனுள்ளவையாக இருக்கின்றன இணையவன்.

நன்றி சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

என்னத்த போட்டாலும் ஊர் சாணிக்கு பிறகுதான் ம்கும் :unsure:

Résultat de recherche d'images pour "terreau fumier de cheval"

இங்கும் இருக்குது முனிவர். பால்கனி தோட்டத்துக்கு அது சரிவராது. முதலாவது மணம் வீட்டுக்குள் வரும். மற்றது சாடிகளில் அதன் சூடு பயிர்களின் வேர்களைத் தாக்கும்.....! நிலத்துடன் உள்ள விட்டுத் தோட்டங்களுக்கு சரிவரும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

hugelkulture-bac4.jpg

இதோ hugelkultur தொட்டி தயார்.

எனக்குப் புரியவில்லை இணையவன்.இதை வைக்கும் இடம் கீழே சும்மாதானே இருக்கு. பெட்டி செய்யாது உயரமாகச் சடைத்து நிற்கும் மரங்களை வெட்டிவிட்டாலே  சூரிய ஒழி நன்றாக நிலத்தில் விழுமே. அத்துடன் இது தோட்டத்தின் அழகையும் கெடுக்கிறதே.

  • தொடங்கியவர்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் புரியவில்லை இணையவன்.இதை வைக்கும் இடம் கீழே சும்மாதானே இருக்கு. பெட்டி செய்யாது உயரமாகச் சடைத்து நிற்கும் மரங்களை வெட்டிவிட்டாலே  சூரிய ஒழி நன்றாக நிலத்தில் விழுமே. அத்துடன் இது தோட்டத்தின் அழகையும் கெடுக்கிறதே.

மரங்களை வெட்ட வேண்டாமாம். :11_blush: 

தொட்டி வைத்திருக்கும் இடத்துக்கு மிக அருகிலே வீடு உள்ளது. தொட்டிக்கு எதிரில் ஜன்னல்-கதவு உள்ளது.  தோட்டத்தின் அகலம் 3 மீற்றர்கள் தான் இருக்கும். இந்த இடம் தேவைப்படும்போது தொட்டியை வேறு இடத்தில் தூக்கி வைத்து விடுவோம். 

ஏனைய காரணங்களை மேலே எழுதியுள்ளேன்.

Quote

- வீடு இருக்கும் காணி சிறியது
- மண் வளம் குறைந்தது. ஏராளமான கற் துகள்கள் காணிகுள் புதைக்கப்பட்டுள்ளன.
- உயரமான மரங்கள், மதில் சுவர், அயல் வீடுகள் என்பவற்றால் சரியான சூரிய ஒளி படக்கூடிய இடம் இல்லை.
- இயற்கைக் கழிவுகள் தாராளமாக உள்ளது.
- மழைநீரைச் சேகரிக்கும் வசதி இல்லாமையால் குழாய் நீரையே தோட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை

 

இந்தப் பதிவைப் பாருங்கள். பெரிய காணி வைத்திருப்பவரே பெரிய அளவில் தொட்டிகள் தயார்படுத்துகிறார்.

https://mon-potager-en-carre.fr/jardinage-debout-2/meilleure-methode-remplir-un-bac-sureleve-4528

Completer-le-niveau-de-terre1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இணையவன் said:

எமது ஊர் மாட்டுச் சாணிக்கு நிகராக எதுவும் இல்லை. ஆனால் எல்லோரும் மாட்டுச் சாணியைக் கொண்டு விவசாயம் செய்வது சாத்தியப்படாது. போதுமான அளவு கிடைக்காது. 

வெளிநாடுகளில் மாட்டுச் சாணி பயன்படுத்தப் படுவது குறைவு. ஏனென்றால் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் அன்ரிபயோட்டிக் மற்றும் மருந்துகள் சாணி மூலமாகப் பயிருக்கும் போகும். இங்கு குதிரைச் சாணியே சிறந்ததாகக் கூறுகிறார்கள். அத்துடன் சாணி போட்டுச் செய்யும் விவசாயம் சாதாரணமான விவசாய முறை.

சென்ற வருடம் நான் வன்னி வந்திருந்தபோது அங்குள்ள விவசாயிகள் சொன்னது, 'அவங்கள் தாற பசளையையும் மருந்துகளையும் பாவிக்காவிட்டால் ஒன்றும் தோட்டத்தில் ஒன்றையும் விளைவிக்க முடியாது.' இவ்வாறு எமது விவசாயிகளும் இயற்கை விவசாயத்தைக் கைவிட்டு இரசாயனத்துக்கு அடிமையாகி விட்டனர்.

ம் உன்மைதான் இணையவன் அண்ணை   பழங்கள் முதல், காய் கறிகள் வரைக்கும்  எல்லாம் மருந்துகள்

 

15 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "terreau fumier de cheval"

இங்கும் இருக்குது முனிவர். பால்கனி தோட்டத்துக்கு அது சரிவராது. முதலாவது மணம் வீட்டுக்குள் வரும். மற்றது சாடிகளில் அதன் சூடு பயிர்களின் வேர்களைத் தாக்கும்.....! நிலத்துடன் உள்ள விட்டுத் தோட்டங்களுக்கு சரிவரும்.....!

நீங்கள் சொல்வதும் சரிதான்  சாடிகளுக்கு சாணீ சரிவராது  ஆனால் ஊரில்  எனது முஸ்பாத்திக்கு பயிர் செய்தார்கள் சாணியை வைத்து அமோகமாக விளைந்தது   சானி போட்டி நிலத்தை ஒரு கிழமைக்கு மேலாக  அப்படியே  விட்டு கிண்டி கிளறி , அல்லது கொத்தி பிரட்ட வேண்டும் அதன் பின்பே பயிரை நட்டது நல்ல விளைச்சல் 

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன்...உங்கள் பதிவுகளைத் தொடர்ந்தும் வாசிக்கின்றேன்!

எனக்கும் வீட்டுத் தோட்டத்தில் மிகவும் ஆர்வம் உள்ளது!

ஆரம்பத்தில் எல்லோரையும் போலவே...தக்காளி, குடை மிளகாய், பிஞ்சு மிளகாய் ( டையினமைற்) போன்றவற்றை நட்டு....பசளை, மருந்து எண்டு சிலவழிச்சுப் போட்டு...தக்காளி காய்க்கிற நேரம்...கடையில ஒரு டொலர் விக்கும்! பயத்தங்காய் ஒரு டொலர் ஐம்பது சதம் விற்கும்! ( இங்கு பரிசை விடவும்நா அதிகம்ங்க சீனர்கள்ள் வசிக்கிறார்கள்வை! அவர்கள்க்கி வீட்டுக்கு வீடு பயத்தங்காய் நடுவார்கள்)  தக்காளியும், பூச்சி, ஓட்டை எல்லாம் கழிச்சுப் போட்டுப் பார்த்தால்....முக்கி..முக்கி ஒரு அரைக்கிலோ தான் காய்க்கும்!

இதன் பின்னர் ..வெண்டிக்காய், லெபனிஸ் கத்திரிக்காய் (நீட்டுக் கத்தரிக்காய் தான், எனினும் கொஞ்சம் சின்னதாக இருக்கும்), குக்கும்பர், பீன்ஸ்,மற்றும் கப்சிக்கம் தான் போடுவது!

இப்போது நான் உபயோகிப்பது...பின் வரும் படத்தில் உள்ள மாத்ரி வடிவமைக்கப் பட்டிருக்கும்! சீசன் முடிந்ததும், தேவையானால் கழட்டிப் பெட்டிக்குள் வைத்தும் விடலாம்! அல்லது வின்ரர் மரக்கறிகள் ( சினோ பீன்ஸ், கோவா,பீட்ரூட், கரட) வளர்க்க உபயோகிக்கலாம்!

birdies_raised_modular_garden_bed_620.jp

இவை பல வடிவங்களிலும், பல அளவுகளிலும்....அமைக்கக் கூடியவாறு 'கிற்' ஆகவும் வாங்க முடியும்!

நான் அனேகமாக மாட்டுச் சாணி, ஆட்டுப் புழுக்கை, செம்மறிப் புழுக்கை, கோழிப் பசளை' போன்றவையையே விரும்பி உபயோகிப்பேன்!

செயற்கை மருந்துகள்...உபயோகிக்க விரும்புவதில்லை!

உங்கள் பதிவைத் தொடருங்கள்..பல புதிய முறைகளை அறிந்து கொள்ளும் ஆவல் எப்போர்ஹும் உண்டு!

பி.கு: சில வேளைகளில் ஊர்க்கத்தரிக்காய், ஊர் வெண்டிக்காய் கண்டுகள் தமிழ்க்கடைகளில் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும்!

இரண்டு வெண்டிக் கண்டுகள்..ஒரு பூச் சாடிக்குள் வைத்திருப்பார்கள்! பத்து டொலர் தொடக்கம், பதினைஞ்சு டொலர் விலை போட்டிருப்பார்கள்! அதுக்குள்ளே பொட்டிங் மிக்ஸ் கூடப் போட்டிருக்க மாட்டினம்! அவையின்ர மண் தான் இருக்கும்!

நான் வாங்குவதில்லை...அந்த மண்ணோட என்னென்ன எல்லாம் வருமோ...எண்ட பயம் தான் காரணம்!

ஒரு முறை இப்படித்தான் வண்டிலில ஒருத்தன் சாணி கொண்டு வந்து வித்தான்! நான் வழமையாய் வாங்கிற இடத்திலும் பார்க்க விலை மலிவு!

விடுவமா நாங்கள்?

அதை வாங்கிப் போட...அதுக்குள்ள கிடந்த புல்லுக்கொட்டைகள் முளைக்கத் தொடங்க...நான் சீவியத்தில காணாத ஒரு வகைப் புல்லு! பாத்துக் கொண்டிருக்க வளரும்!  அதுக்குப் பிறகு...வலு...கவனம்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரத்திலும் இது சுகம் போல கிடக்குப் புங்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.