Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துட்டர்களைக் கண்டால் தூர ஓடிப் போய் விடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துட்டர்களைக் கண்டால் தூர ஓடிப் போய் விடுங்கள்.

விச ஜந்துக்கள் என்றவுடன் பாம்புகள், புலிமுக சிலந்திகள் தான் நினைவு வருகிறதா? மனிதரை கடித்து தின்னும் என்றவுடன் முதலை, முழுசாக என்றால் மலைப்பாம்பா ?

இதோ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில:

1. ஆரஞ்சு, கறுப்பு கலந்த இந்த பறவை, உலகிலே விசத்தினை இறக்கையில் கொண்டுள்ளது.

ஆங்கிலத்த்தில் Pitohui என அழைக்கப் படும் இப்பறவையின் தோலும், இறக்கைகளும் விசம் கொண்டவை. அப்பாவிதமான தோன்றும் இதை தொட்டு விடாதீர்கள்.
 
hooded-pitohui-1_14909864360144.jpg

2. முலையூட்டிகளில் இந்த Duck-Billed Platypus என்னும் வீடுகளில் வளர்க்கக் கூடியது போல் காணப்படும் இந்த பிராணியின் விசம், இந்த வாத்து போன்ற சொண்டின் கீழ் உதடுகளில் உள்ளது. கொடிய விசமில்லாவிடினும், ஆளை வைத்தியசாலையில் பல நாட்கள் வைத்திருக்கும். எனினும் வேறு மிருகங்களை முடித்து விடும்.

Duckbilled_platypus_14909860156939.jpg

3. நெருப்பு எறும்பு - Fire Ant

வருடத்துக்கு குறைந்தது 50 பேரைக் காலி செய்தாலும், கிராமப் புறங்களில் இது அதிகமாக நடப்பதால் இதன் உண்மையான மரண விகிதம் தெரிவதில்லை. கடியெண்டால், கடி... விசம் நரம்பு மண்டலத்தினை பாதிக்கும். ஆள் விரைவில் அவுட்.

120711fireant_s_14909034910599.jpg

4. இலங்கையின் சிறுத்தை புலி. - Sir Lankan Leopard

ஆச்சரியமாக இந்த லிஸ்டில் நம்மூர் காரர்.

இது பூனையிலும் சிறிது தான் பெரியதாக இருப்பதால் யால வனப்பகுதியில் விடுமுறைக்குச் செல்பவர்களால் பொருட்டாக கருதப் படாமல் அருகில் செல்கின்றனர்.

பார்த்தால், நில்லாமல் ஓடி விடுங்கள். கடுகு சிறிதாக இருந்தாலும், அதன் கால் நகத்தில் தான் விசயமே.

leopard-015_14909031454529.jpg

5. 

பிரேசில் சிலந்தி

இது கடித்தால் மணிநேரத்தில் பரலோக விசா கிடைத்து விடும். 

இதன் முக்கியமான பிரச்சனையே, வாழை பழங்களுக்கு இதேயே ஒளிந்து, நம் வீடுகளிடையே புகுந்தால், நாள் ரீதியில் பல்கி பருகி விடும். பிறகு நமக்கு விசயம் தெரியாமல், வாடா ராஜா என்று விளையாடப் போனால் காலி. வாழைப்பழத்தினை குலையில் இருந்து  வெட்டி தண்ணீரில் போட்டு, இவர்கள் வெளியால வந்த பின்னர் தான் பொதி செய்கிறார்கள். இருந்தாலும் ஒன்று, இரண்டு தப்பி வந்து சேர்ந்த கதைகளும் உண்டு.

amazing-brazilian-wandering-spider-facts-for-kids_14909038429847.jpg

5. கல் மீன் - Stone Fish

கடலின் அடியில் தவமிருக்கும் முனிவர் போல், கல் நிறத்தில் இருக்கும். கல் என்று நினைத்து அருகில் வரும் சிறு மீன்களை, அதி வேகமாக நாக்கை வெளியே எறிந்து (0.015 செகண்ட்) விழுங்கி விடும்.

இதன் பற்களில் அல்ல, வெளிப்புறத்தில் பாசி முட்கள் போல், காணப்படும் பகுதிகளே விசத்தன்மை கொண்டவை. கால் வைத்தால், அம்புட்டு தான்.

 most_dangerous_species_frank151_5.gif

6.  Bullet Ant

தோட்டா எறும்பு.

கடிக்கக் கூடிய எறும்பு வகை பூச்சி இனங்களில் இது தான் ஒரு அங்குலம் வரை வளரக் கூடிய பெரிய வகையானது. அதுமட்டுமல்ல பெரு வலி தருவதும் இதன் கடி தான்.

கடித்தால், துப்பாக்கி தோட்டா, நுழைந்தால் உண்டாக்கும் வலி போன்றது என்பதால் இந்தப் பெயர். சதையில், பெரும் துளை போட்டு விடுவதால் இரத்தம் இழக்கும் நிலை.

ஒரு கடி வேண்டும் என்கிறீர்களா? ஓடோடி விடுங்கள்.. கண்டால்.

BIG6787_14909033690983.jpg

7. பூபர் மீன் - Puffer Fish

இந்த அப்பாவி, முகத்தினைக் கண்டு ஏமாறாதீர்கள். கடி ஒன்று விழுந்தால், சுவாசப்பை செயல்பாடுகள் பாதிப்படைந்து, மூச்சில்லாமல் காலி.

ஆயினும், ஜப்பானியர்களின் விருப்பத்துக்குரிய உணவு இது.

 most_dangerous_species_frank151_14.gif

8. Box Jellyfish

பெட்டி ஜெலி மீன் 

கடலில், (அல்லது தண்ணீரில்)  காணப்படும் மிக மோசமான விச ஐந்து இது தான்.

சுறா, முதலை, கல் மீன்களினால் உண்டாகும் உயிர் இறப்பிலும் பார்க்க இதனால் உண்டாகும் இழப்பு அதிகம். 

பெரும்பாலும், இதனால் தாக்கப் படுபவர்கள், நீரில் மூழ்கி இறந்து விடுபவர்களா தவறாக எண்ணப் படுவதே அதிகம். (அண்மையில் கூட அமைதியான கடலில் இரு லண்டன் தமிழ் இளைஞர்கள் மூழ்கி மாண்டார்கள், யாருக்கு தெரியும் இதுதான் தாக்கியதோ என)

most_dangerous_species_frank151_11.gif

9. ஆழக்கடல் நீல  இறுகண்ட்ஜி  ஜெல்லிபிஷ் - Deep Blue Irukandji Jellyfish

கடலில் உள்ள மிக விசம் கூடிய ஐந்து. ஆள் சிறிது, ஆனால் விசமோ பெரியது.

ஆழ்கடலில் காணப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு. இருந்தாலும் கடி ஒன்று வாங்கினால் கதை காலி.. ஹி. ஹீ.

jel-3_14902219414603.jpg

10.Black Mamba - கறுப்பு மாம்பா 

சில வாத்திமாரை, போலீஸ்க்காரரை சொல்வார்கள், போனவுடன் முதல் சாத்து... பிறகு தான் என்ன விசயமா வந்தாய் என்று விசாரணை.

இது அதே வகை தான். கண்டால் முதலில் கொத்து தான். அதன் பிறகு தான் யாரு, எவர் என்ன பார்வை. மிகவும் வேகமானதால், நாம் பார்த்துவிடடால், அடுத்த நகர்வு எடுக்கும் முன்னே, வெடி, சா... கடி தான்.

தந்த பக்கமே போகாதீர்கள் - ஆப்பிரிக்காவில் அதிகம்.

தாங்கள் கறுப்பு எண்ட படியால் இதுக்கும் அப்படியே பெயர் வைத்து உள்ளார்கள் போல.

most_dangerous_species_frank151_7.gif

11. Cape Buffalo ஆபிரிக்க எருமைகள்.

அப்பாவி பசுக்கள், எருமைகள் போல என்று நினைத்து அருகில் போய் இறந்து போனவர்கள், வேறு எந்த மிருகங்களினால் இறந்தவர்களில் அதிகம். ஆப்பிரிக்காவில், Widow maker என்ற செல்லப் பெயர் இதற்கு உண்டு.

most_dangerous_species_frank151_8.gif

12. பனிக்கரடி Polor Bear

உணவே தென்படாத பனிப்பிரதேசத்தில் இதனிடம்அகப்படும் எது என்றாலும் தீனி தான்.

மனிதன் என்றாலும் கதை அதேதான்.

ஓட்டமாய் ஓடிவிடுங்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், பனியில் உங்களிலும் பார்க்க வேகமா ஓடும். 

நோகாம கடி பனிக்கரடியே என்று சொல்லி ஓரமா ஒக்கார வேண்டியது தான்.

most_dangerous_species_frank151_10.gif

13.  Eurasian Wolf

ஈரோ-ஏசியன் ஓநாய்

வருடம் 7600 பேரை கடித்து தின்னும் இந்த ஓநாய்கள் உங்களை உசிர் போகும் முன்னரே அரைவாசி உடலைத் தின்று முடித்து விடும்.

ஒரு கடி வேண்டும் என்கிறீர்களா? ஓட்டமாய் ஓடி விடுங்கள் - தலை தெறிக்க.

wolfdog-720x479_14902219417799.jpg

14. போர்துகீஸ் மான் - ஓ - வார் Portuguese man o’ war

மிதக்கும் பிளாஸ்டிக் பொருள் கடல் கரையில் யாரோ விட்டு விட்டு சென்று விட்டார்கள் என்று நினைப்பீர்களோ? அல்லது நீல சங்கு ?

தொட்டால்.... அப்புறம் என்ன சங்குதான்? ஜெலி பிஷ் வகை. 

portuguese-man-o-war-720x471_14902219418640.jpg

15 கொமோடோ டிராகன் - Komodo Dragon

பனிக்கரடி போல அகப்படும் எல்லாம் உள்ளுக்கு தான்.

இரை அருகில் வரும் வரை மறைந்து, இருந்து, கழுத்து நோக்கி பாய்ந்து, கடித்து, இரத்தம் ஓடி இரை இறக்கும் வரை காத்திருந்து உண்ணும்.

அன்புடன் அருகில் போகலாமா?

most_dangerous_species_frank151_16.gif

16. நச்சு அம்புத் தவளை - Poison Dart Frogs

மத்திய அமெரிக்காவில் காணப்படும் இந்த வகைத் தவளைகளின் உள்ள நச்சு 10 வளர்ந்த மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவுக்கு போதுமானது.

இந்த நச்சில் இருந்தே, அமேசான் காட்டு வாசிகள் தமது விச அம்புகளுக்கான நச்சுக்களை பெறுகின்றனர்.

இதில் விசேசம் என்னெவெனில், பாம்புகள், சிலந்திகள் போல் விசம் இதன் உடலில் உருவாவதில்லை. மாறாக இது உண்ணும் சில வகை காட்டு தாவர இலைகளில் இருந்து சில இரசாயன மாறுதலுக்கு உள்ளாகி விசம் உருவாகிறது.

poison-dart-frog_14909031867844.jpg

17. பிரவுன் தவசி சிலந்தி - Brown Recluse

இதுவும், பிளாக் விடோவ் என்னும் இன்னுமொரு வகை சிலந்தியும் அமெரிக்காவில் கொலை காரா சிலந்திகள்.

மறைவிடம் தேடி தெரியும் இவை, மனிதர் காலனிகளில் பதுங்கி மறைந்து, உள்ளே வரும் பாதம் தாக்கும் போது, கடித்து விஷத்தினை தரும்.

காலணியினை கழட்டி விட நேர்ந்தால், உதறி, அணியுங்கள்.

BrownRecluse_14909039776755.jpg

18. Blue Poison Arrow Frog நீல அம்புத் தவளை 

அழகான தவளை தான் அதுக்கேத்த கலரு தான் என்று தொடப் போனீர்களோ, சங்குதான்.

தோல் முழுக்க விஷம் தான். 20,000 எறுப்புப் படையினை கொல்லக் கூடிய அளவு.

அதில் 3 மில்லி லிட்டர் போதும் மனிதர் இதயம் நின்று போக.

most_dangerous_species_frank151_9.gif

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

//பிரேசில் சிலந்தி

இது கடித்தால் மணிநேரத்தில் பரலோக விசா கிடைத்து விடும். //

சிலகாலங்களுக்கு முன்பு... அருகில் உள்ள உணவுப் பொருட்கள் வாங்கும் கடையில்.... 
வாழைப் பழ  பெட்டிக்குள் இருந்து வாழைப்பழத்தை ஒரு பெண்மணி எடுக்கும் போது, அந்தப் பெட்டிக்குள் மறைந்திருந்த சிலந்தி ஒன்று அந்தப் பெண்மணியின் கையை கடித்து விட்டது. உடனடியாக அவர்... மருத்துவ  அவசர சிகிச்சை வாகனம் வரவவழைக்கப் பட்டு.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

அதன் பின்... வாழைப் பழ பெட்டிக்குள் மிக அவதானமாக பார்த்த பின் தான்... கையை  விட்டு வாழைப்பழத்தை எடுப்பது.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நாதம்ஸ்....!  tw_blush:

5 hours ago, Nathamuni said:

ஓட்டமாய் ஓடிவிடுங்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், பனியில் உங்களிலும் பார்க்க வேகமா ஓடும். 

நோகாம கடி பனிக்கரடியே என்று சொல்லி ஓரமா ஒக்கார வேண்டியது தான்.

அடபாவி // இப்படியா மனுசருக்கு அட்வைஸ் பண்ணுறது :grin:

5 hours ago, தமிழ் சிறி said:

மிக அவதானமாக பார்த்த பின் தான்... கையை  விட்டு வாழைப்பழத்தை எடுப்பது.  

ரொம்ப முக்கியம் அமைச்சரே. கவனம் :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மிக அவதானமாக பார்த்த பின் தான்... கையை  விட்டு வாழைப்பழத்தை எடுப்பது.  

6 minutes ago, ஜீவன் சிவா said:

6 minutes ago, ஜீவன் சிவா said:

ரொம்ப முக்கியம் அமைச்சரே. கவனம் :grin::grin:

இவையின்ர குசும்பிற்கு அளவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றைக் கண்டால் ஓடிவிடலாம். ஆனால் நல்லவர்போல் நடித்துக்கொண்டே பல மனித விடங்கள் எம்முடனேயே இருக்கின்றனவே. அவற்றை எப்படி இனங்காண்பது நாதமுனி.

அவர்கள் விடம் என்று தெரிந்தும் அடிக்கவோ உதைக்கவோ முடியவில்லையே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19. ஆபிரிக்க சிங்கம்  - African Lion

most_dangerous_species_frank151_12.gif

நீங்கள், இந்த காட்டு ராஜா விருப்பமான உணவு லிஸ்டில் இல்லைதான். இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் டேஸ்ட் பண்ணி பார்ப்பார்.

1898 ல் கென்யாவில் ரயில் பாதை அமைத்துக் கொண்டிருந்த இந்தியர்களில் 28 பேரை, 9 மாதக் காலப் பகுதியில், இரவில், அடர் காடுகள்  மத்தியில் கூடாரங்களுக்கு வந்து லபக்கி கொண்டு போய் விட்டது.

19. காட்டுப் பன்றி - Wild Boar

காட்டு விலங்குகளில், புத்திக்கூர்மை உள்ள விலங்குகளில் நாலாம் இடத்தில் இருக்கும் இவரை, வேட்டை ஆடுவது, மிகவும் ஆபத்து நிறைந்தது. மிகவும் கூர்மை மிக்க தந்தம், மனிதரை கிழித்து கொன்றுவிடும். மிக வேகமாக வந்து மோதி எதிராளியை மடக்குவதே இதன் தந்திரம்.

இன்னும் காட்டுப்பன்றி இறைச்சி வேணும் என்கிறீர்கள்? அட போங்க... வித்தா, வாங்கிச் சாப்பிடுங்கோ. வேட்டைக்கு போகாதீங்கப்பூ.

wild-boar-720x470_14902219412751.jpg

20. குட்டிச் சாத்தான் ஜெலி மீன்  - Devil Jellyfish

ஒரு சென்றி மீட்டரிலும் குறைவான அளவு.

ஆனால் 100 நாக பாம்புகளின் விசம் வீரியம் கொண்ட விசம் இது பாச்சி விடும்.

கடலில் மூழ்கி சிறந்த நீச்சல் வீரர் மரணம் என்று செய்தி வந்தால், எப்பூடி என்று மலைக்காதீர்கள். இதுவும் காரணமாக இருக்கலாம். கடித்தால், நிமிடங்கள் மரணம்.
 
DeadlyCreatures_07.638x0_q80_crop-smart.jpg_14909136848166.jpg 

21. 

சிட்னி பெய்குழல் வடிவ சிலந்தி. Sydney Funnel Web Spider

நம்ம புங்கையர் ஊர் பக்கம் போறீயளோ?

இதன் கடியில் செலுத்தப்படும் neruotoxin நரம்பு மண்டலத்தினை நிமிடங்களில் பாதித்து, அவுட் ஆக்கி விடும்.

 sydney-funnel-web-720x531_14902219411295.jpg

22. சாவு கிராக்கி (சாத் தேள்) - Death Stalker

வட ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், தேள் கடி இறப்பில் 75% இதன் கணக்கில் தான். மிக கடுமையான விஷம் கொண்டது. மரணம் நிச்சயம் என்பதால் அந்தப் பெயர்.

 most_dangerous_species_frank151_1.jpg

23. டீஸ் டீஸ் பூச்சி Tropical Tse Tse Fly

இரத்தம் குடிக்கும் இப்பூச்சி, sleeping sickness வியாதிக்கு காரணமாக இருந்து, 250,000 வரையான வருடாந்த மரணங்களுக்கு வெப்ப வலைய நாடுகளில் (நம்மூரு தான்) காரணமாகின்றது.

most_dangerous_species_frank151_17.gif

Stomach_14909031451592.jpg

24. புலிமுகச்சிலந்தி - Tarantula Hawk

இரையினை மயக்கி, மயங்கிய நிலையிலேயே தின்று முடிக்க பாவிக்கும் neurotoxin தன்னை தாக்க வருவதாக நினைத்து, நமக்கும் ஊசி அடித்து பாய்ச்சி விடும் போது, ஹீ.. ஹீ... மிச்சமும் சொல்லணுமோ?

3662090294_a55d88ba4b_z_14909033870809.jpg

25. நீல வளைய ஆக்டோபஸ் - Blue Ringed Octopus

மாற்று மருந்து கிடையாத இதன் விசம் உள்ளே சென்றால், பரம பதம் நிச்சயம்.

அழகு ஆபத்தானது. கோல்ப் பந்து அளவில் உள்ள இந்த ஐந்தின் உடலில் உள்ள விசம், 25 வளர்ந்த மனிதர்களை போட்டுத் தள்ள போதுமானது...

 most_dangerous_species_frank151_21.gif

26. நாடாப் புழு - Tapeworms

நன்கு சமைக்காத இறைச்சி உணவுகள் மூலம் உள்ளே புகுந்து கொள்ளும் இந்த புழு, நினைக்க முடியாத நீளமளவு வளர்ந்து,  பெரிய இடம் தேடி ஈரல், சுவாசப்பை என்று துளைத்துக் கொண்டு போகும் போது, மரணம் விசயம்.

அழுக்குகளை தின்னும் பன்றி இறைச்சியில் இருந்து வரலாம். (மேல் நாடுகளில் பண்ணைகளில் வளப்பதால் பிரச்னை இல்லை)

Tapeworm_14909031457503.jpg

27. நியூ கினியா தீக்கோழி Cassowary

மயில்... மீ...கு..ம்

மரம்கொத்தி பறவை வேகமாக மரத்தினை கொத்துவது போல, இரையை, மனிதர்களைக் கூட, மிக மிக வேகமாக கொத்தி நிலை குலைய வைத்து மரணத்தினை கொடுக்கும்.

southern-cassowary-720x510_14902219419553.jpg

28. இறுதியாக மனிதன் - Humans

மேலே பார்த்து பலவும், இன்னும் நான் போடாத பலவும், வயித்துப் பசிக்காகவும், தம்மைக் காத்துக் கொள்ளவுமே விசம் வைத்துக் கொண்டுள்ளன.

இந்த ஐந்துவோ எதுக்கு சண்டையைப் பிடிக்கிறான், எதுக்கு அடுத்த மனிதனைக் கொல்கிறான் என பார்த்தால், மதமே முக்கிய காரணமாக உள்ளது. 

ம்..ம் கடவுளின் பெயரில், ஒருவனை ஒருவன், கடவுளிடம் அனுப்புகிறான்.

இந்த உயிரினம் கருவிகள் செய்து தன்னையும், உலகத்திலுள்ள அணைத்து உயிர்களையும் கொல்லக் கூடிய மகா பயங்கரமான ஒரு விலங்கு. மிகக் கவனமாக இருந்து கொள்ளுங்கோ, மக்களே.

 Niger-delta-militants_14909040881469.jpg

Edited by Nathamuni

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவற்றைக் கண்டால் ஓடிவிடலாம். ஆனால் நல்லவர்போல் நடித்துக்கொண்டே பல மனித விடங்கள் எம்முடனேயே இருக்கின்றனவே. அவற்றை எப்படி இனங்காண்பது நாதமுனி.

அவர்கள் விடம் என்று தெரிந்தும் அடிக்கவோ உதைக்கவோ முடியவில்லையே

That's Why I Want You To
              Know

I'm Starting With The Man In
          The Mirror

I'm Asking Him To Change
          His Ways
And No Message Could Have
       Been Any Clearer
If You Wanna Make The World
      A Better Place
Take A Look At Yourself, And
   Then Make A Change
 
இதுதான் நான் இந்த பாடல் மூலம் சொல்லவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

துட்டர்களைக் கண்டால் தூர ஓடிப் போய் விடுங்கள்.

3. நெருப்பு எறும்பு - Fire Ant

வருடத்துக்கு குறைந்தது 50 பேரைக் காலி செய்தாலும், கிராமப் புறங்களில் இது அதிகமாக நடப்பதால் இதன் உண்மையான மரண விகிதம் தெரிவதில்லை. கடியெண்டால், கடி... விசம் நரம்பு மண்டலத்தினை பாதிக்கும். ஆள் விரைவில் அவுட்.

5. 

பிரேசில் சிலந்தி

இது கடித்தால் மணிநேரத்தில் பரலோக விசா கிடைத்து விடும். 

இதன் முக்கியமான பிரச்சனையே, வாழை பழங்களுக்கு இதேயே ஒளிந்து, நம் வீடுகளிடையே புகுந்தால், நாள் ரீதியில் பல்கி பருகி விடும். பிறகு நமக்கு விசயம் தெரியாமல், வாடா ராஜா என்று விளையாடப் போனால் காலி. வாழைப்பழத்தினை குலையில் இருந்து  வெட்டி தண்ணீரில் போட்டு, இவர்கள் வெளியால வந்த பின்னர் தான் பொதி செய்கிறார்கள். இருந்தாலும் ஒன்று, இரண்டு தப்பி வந்து சேர்ந்த கதைகளும் உண்டு.

amazing-brazilian-wandering-spider-facts-for-kids_14909038429847.jpg

5. கல் மீன் - Stone Fish

கடலின் அடியில் தவமிருக்கும் முனிவர் போல், கல் நிறத்தில் இருக்கும். கல் என்று நினைத்து அருகில் வரும் சிறு மீன்களை, அதி வேகமாக நாக்கை வெளியே எறிந்து (0.015 செகண்ட்) விழுங்கி விடும்.

இதன் பற்களில் அல்ல, வெளிப்புறத்தில் பாசி முட்கள் போல், காணப்படும் பகுதிகளே விசத்தன்மை கொண்டவை. கால் வைத்தால், அம்புட்டு தான்.

 most_dangerous_species_frank151_5.gif

6.  Bullet Ant

தோட்டா எறும்பு.

கடிக்கக் கூடிய எறும்பு வகை பூச்சி இனங்களில் இது தான் ஒரு அங்குலம் வரை வளரக் கூடிய பெரிய வகையானது. அதுமட்டுமல்ல பெரு வலி தருவதும் இதன் கடி தான்.

கடித்தால், துப்பாக்கி தோட்டா, நுழைந்தால் உண்டாக்கும் வலி போன்றது என்பதால் இந்தப் பெயர். சதையில், பெரும் துளை போட்டு விடுவதால் இரத்தம் இழக்கும் நிலை.

ஒரு கடி வேண்டும் என்கிறீர்களா? ஓடோடி விடுங்கள்.. கண்டால்.

BIG6787_14909033690983.jpg

7. பூபர் மீன் - Puffer Fish

இந்த அப்பாவி, முகத்தினைக் கண்டு ஏமாறாதீர்கள். கடி ஒன்று விழுந்தால், சுவாசப்பை செயல்பாடுகள் பாதிப்படைந்து, மூச்சில்லாமல் காலி.

ஆயினும், ஜப்பானியர்களின் விருப்பத்துக்குரிய உணவு இது.

 most_dangerous_species_frank151_14.gif

8. Box Jellyfish

பெட்டி ஜெலி மீன் 

கடலில், (அல்லது தண்ணீரில்)  காணப்படும் மிக மோசமான விச ஐந்து இது தான்.

சுறா, முதலை, கல் மீன்களினால் உண்டாகும் உயிர் இறப்பிலும் பார்க்க இதனால் உண்டாகும் இழப்பு அதிகம். 

பெரும்பாலும், இதனால் தாக்கப் படுபவர்கள், நீரில் மூழ்கி இறந்து விடுபவர்களா தவறாக எண்ணப் படுவதே அதிகம். (அண்மையில் கூட அமைதியான கடலில் இரு லண்டன் தமிழ் இளைஞர்கள் மூழ்கி மாண்டார்கள், யாருக்கு தெரியும் இதுதான் தாக்கியதோ என)

most_dangerous_species_frank151_11.gif

9. ஆழக்கடல் நீல  இறுகண்ட்ஜி  ஜெல்லிபிஷ் - Deep Blue Irukandji Jellyfish

கடலில் உள்ள மிக விசம் கூடிய ஐந்து. ஆள் சிறிது, ஆனால் விசமோ பெரியது.

ஆழ்கடலில் காணப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு. இருந்தாலும் கடி ஒன்று வாங்கினால் கதை காலி.. ஹி. ஹீ.

jel-3_14902219414603.jpg

10.Black Mamba - கறுப்பு மாம்பா 

சில வாத்திமாரை, போலீஸ்க்காரரை சொல்வார்கள், போனவுடன் முதல் சாத்து... பிறகு தான் என்ன விசயமா வந்தாய் என்று விசாரணை.

இது அதே வகை தான். கண்டால் முதலில் கொத்து தான். அதன் பிறகு தான் யாரு, எவர் என்ன பார்வை. மிகவும் வேகமானதால், நாம் பார்த்துவிடடால், அடுத்த நகர்வு எடுக்கும் முன்னே, வெடி, சா... கடி தான்.

தந்த பக்கமே போகாதீர்கள் - ஆப்பிரிக்காவில் அதிகம்.

தாங்கள் கறுப்பு எண்ட படியால் இதுக்கும் அப்படியே பெயர் வைத்து உள்ளார்கள் போல.

most_dangerous_species_frank151_7.gif

11. Cape Buffalo ஆபிரிக்க எருமைகள்.

அப்பாவி பசுக்கள், எருமைகள் போல என்று நினைத்து அருகில் போய் இறந்து போனவர்கள், வேறு எந்த மிருகங்களினால் இறந்தவர்களில் அதிகம். ஆப்பிரிக்காவில், Widow maker என்ற செல்லப் பெயர் இதற்கு உண்டு.

most_dangerous_species_frank151_8.gif

12. பனிக்கரடி Polor Bear

உணவே தென்படாத பனிப்பிரதேசத்தில் இதனிடம்அகப்படும் எது என்றாலும் தீனி தான்.

மனிதன் என்றாலும் கதை அதேதான்.

ஓட்டமாய் ஓடிவிடுங்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், பனியில் உங்களிலும் பார்க்க வேகமா ஓடும். 

நோகாம கடி பனிக்கரடியே என்று சொல்லி ஓரமா ஒக்கார வேண்டியது தான்.

most_dangerous_species_frank151_10.gif

13.  Eurasian Wolf

ஈரோ-ஏசியன் ஓநாய்

வருடம் 7600 பேரை கடித்து தின்னும் இந்த ஓநாய்கள் உங்களை உசிர் போகும் முன்னரே அரைவாசி உடலைத் தின்று முடித்து விடும்.

ஒரு கடி வேண்டும் என்கிறீர்களா? ஓட்டமாய் ஓடி விடுங்கள் - தலை தெறிக்க.

wolfdog-720x479_14902219417799.jpg

15 கொமோடோ டிராகன் - Komodo Dragon

பனிக்கரடி போல அகப்படும் எல்லாம் உள்ளுக்கு தான்.

இரை அருகில் வரும் வரை மறைந்து, இருந்து, கழுத்து நோக்கி பாய்ந்து, கடித்து, இரத்தம் ஓடி இரை இறக்கும் வரை காத்திருந்து உண்ணும்.

அன்புடன் அருகில் போகலாமா?

most_dangerous_species_frank151_16.gif

இவற்றை கண்டால் .........
அதுதான் காணும் கடைசி காட்சி 
என்று தெளிவா எழுதிவிட்டு .....

தூர விலகு என்றால் ....
எப்படி விலகுவது ?

நான் நினைக்கிறன் ...
எல்லோருக்கும் இவற்றை பார்க்கும் சந்தர்ப்பம் 
கிடைக்காது.

காலம் நேரம் எல்லாம் சரியாக இருப்பின் 
காட்சி தோன்றும் !
பார்த்துட்டு போகவேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

//கொமோடோ டிராகன் - Komodo Dragon

பனிக்கரடி போல அகப்படும் எல்லாம் உள்ளுக்கு தான்.

இரை அருகில் வரும் வரை மறைந்து, இருந்து, கழுத்து நோக்கி பாய்ந்து, கடித்து, இரத்தம் ஓடி இரை இறக்கும் வரை காத்திருந்து உண்ணும்.

அன்புடன் அருகில் போகலாமா?//

most_dangerous_species_frank151_16.gif

இதன்  எச்சிலில் பல பக்ரீரியாக்கள் உண்டு.
மான் போன்ற வேகமாக ஓடும் மிருகங்களை... மறைந்திருந்து  இது ஒரு கடி கடித்தால்  போதும்.
அந்த நேரம், மான் தப்பி ஓடி விடும். ஆனால்  சில நாட்களில்... கடிபட்ட இடத்திலிருந்து  பக்ரீரியா பரவி மான் இறந்து விடும். இதற்கு அழுகிய உணவுகளையே உண்ண  மிகவும் விருப்பம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களில இருக்கிற கன பேர் ...அவுஸ்திரேலியன் சிற்றிசன்ஸ் போல கிடக்குது !:113_tongue:

15 hours ago, தமிழ் சிறி said:

//பிரேசில் சிலந்தி

இது கடித்தால் மணிநேரத்தில் பரலோக விசா கிடைத்து விடும். //

சிலகாலங்களுக்கு முன்பு... அருகில் உள்ள உணவுப் பொருட்கள் வாங்கும் கடையில்.... 
வாழைப் பழ  பெட்டிக்குள் இருந்து வாழைப்பழத்தை ஒரு பெண்மணி எடுக்கும் போது, அந்தப் பெட்டிக்குள் மறைந்திருந்த சிலந்தி ஒன்று அந்தப் பெண்மணியின் கையை கடித்து விட்டது. உடனடியாக அவர்... மருத்துவ  அவசர சிகிச்சை வாகனம் வரவவழைக்கப் பட்டு.. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

அதன் பின்... வாழைப் பழ பெட்டிக்குள் மிக அவதானமாக பார்த்த பின் தான்... கையை  விட்டு வாழைப்பழத்தை எடுப்பது.  

நீங்கள் பரவாயில்ல...சிறியர்!

வாழைப்பழப் பெட்டி எப்பவாவது வாங்கிறது தானே!

நாங்கள்...சப்பாத்துப் போடைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

பாத் ரூமுக்குப் போகைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

குப்பை கூட்டி அள்ளிற நேரமும் செக் பண்ண வேணும்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

இந்தப் படங்களில இருக்கிற கன பேர் ...அவுஸ்திரேலியன் சிற்றிசன்ஸ் போல கிடக்குது !:113_tongue:

நீங்கள் பரவாயில்ல...சிறியர்!

வாழைப்பழப் பெட்டி எப்பவாவது வாங்கிறது தானே!

நாங்கள்...சப்பாத்துப் போடைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

பாத் ரூமுக்குப் போகைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

குப்பை கூட்டி அள்ளிற நேரமும் செக் பண்ண வேணும்! 

அவுஸ்திரேலியா, எமது கால நிலைக்கு ஏற்ற நல்ல நாடு....
வீட்டு வளவில்.... மா, பிலா, முருங்கை, எலுமிச்சை மரம் எல்லாம் வளர்த்து ஜாலியாக இருக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டேன்  புங்கையூரான். இந்த ஜீவராசிகளை... பார்த்த போது,  ஜேர்மனி குளிர் என்றாலும்... நல்ல நாடு போல் உள்ளது. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

இந்தப் படங்களில இருக்கிற கன பேர் ...அவுஸ்திரேலியன் சிற்றிசன்ஸ் போல கிடக்குது !:113_tongue:

நீங்கள் பரவாயில்ல...சிறியர்!

வாழைப்பழப் பெட்டி எப்பவாவது வாங்கிறது தானே!

நாங்கள்...சப்பாத்துப் போடைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

பாத் ரூமுக்குப் போகைக்குள்ளையும் செக் பண்ண வேணும்!

குப்பை கூட்டி அள்ளிற நேரமும் செக் பண்ண வேணும்! 

Number 21 பார்கலீயோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.