Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

Featured Replies

கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம்

 

 

வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

fsfa.JPG

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20115

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வெள்ளவத்தையில் அனர்த்தம்: 8 பேர் படு காயம்
 
 

article_1495086529-1.jpgகொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், எட்டு பேர் படுகாமயடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விழா மண்டபமாக காணப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/196858/வ-ள-ளவத-த-ய-ல-அனர-த-தம-ப-ர-பட-க-யம-#sthash.oKgTWd3E.dpuf

Update: வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயம்

 

 

வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

18486166_1376946669020690_90808658382433

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20115

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்.. சிறந்த கட்டடப் பொறியலாளர்களை உருவாக்கிய இலங்கை.. இன்று இந்தியா நிலைக்கு வந்திட்டுது. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 விடிஞ்ஞ மில்லியனியர் ஆகிவிடவேண்டும் என்ற நினைப்புத்தான் இந்த அவலங்களுக்கு காரணம்

  • தொடங்கியவர்
வெள்ளவத்தையில் அனர்த்தம்: 19 பேர் படுகாயம்
 
 

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர்களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே, இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. அக்கட்டடத்தின் மேலும் ஒரு பகுதி, இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்டட இடிபாடு காரணமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

article_1495087558-Building-collapses-in

- See more at: http://www.tamilmirror.lk/196858/வ-ள-ளவத-த-ய-ல-அனர-த-தம-ப-ர-பட-க-யம-#sthash.9BvSluSK.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Update: வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!

Published by RasmilaD on 2017-05-18 12:34:43

 

வெள்ளவத்தை - சாவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் இதுவரையில் 21 பேர் காயமடைந்துள்ளனர். 

DAFsDbTV0AAMzS5.jpg

கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DAFu7JeVwAAd5Cl.jpg

இந்நிலையில், காயமடைந்தவர்கள் 15 பேர் களுபோவில வைத்தியசாலையில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DAFuJ4TUwAIel9A.jpg

அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

DAFuJ4TUwAA9VQH.jpg

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

18486008_1330724287034994_67269360293758

 

 

Tags

http://www.virakesari.lk/article/20120

  • தொடங்கியவர்
வெள்ளவத்தை அனர்த்தத்தால் பாரிய போக்குவரத்து நெரிசல்
 
 

article_1495091390-traffic02.jpgகாலி வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தார்.

வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்று இடிந்து விழுந்தமையடுத்தே, இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 19 பேர் படுகாமயடைந்துள்ளனர்.

எனினும், கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

- See more at: http://www.tamilmirror.lk/196865/வ-ள-ளவத-த-அனர-த-தத-த-ல-ப-ர-ய-ப-க-க-வரத-த-ந-ர-சல-#sthash.eQNZDP3I.dpuf

 

 

10 அம்புலன்ஸ்கள் உஷார்
 
 

article_1495092044-Ambulance.jpgவெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடத்தின் ஒருபகுதி, இடிந்து விழுந்ததில், காயமடைந்த 21பேர், களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

இந்நிலையில், அந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

ஆகையால், சவோய் திரையரங்கை அண்மித்த பகுதியில் சுமார் 10 அம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்பு-காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மற்றும் அங்கு விரைந்த முச்சக்கரவண்டிகளின் ஊடாகவே வைத்தியசாலைகளுக்கு உடனடியாக எடுத்துசெல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/196866/-அம-ப-லன-ஸ-கள-உஷ-ர-#sthash.LH19ZyGB.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மழைக்கு மத்தியிலும் வௌ்ளவத்தையில் மீட்புப் பணிகள்
 
18-05-2017 06:05 PM
Comments - 0       Views - 10

article_1495111086-DSC_1777.jpg

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்துக்கு அருகிலுள்ள கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டிடமொன்று, இன்று (18) முற்பகல் 11 மணியளவில் சரிந்து விழுந்ததில், 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் பணிகளை  முப்படையினரும், பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கடும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவ அதிகாரிகள் 10 பேர், இராணுவ சிப்பாய்கள் 100 பேர், விமானப்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட விமானப்படையினர் 30 பேர் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

article_1495111099-DSC_1822.jpgarticle_1495111119-DSC_0007.jpg

- See more at: http://www.tamilmirror.lk/196892/மழ-க-க-மத-த-ய-ல-ம-வ-ளவத-த-ய-ல-ம-ட-ப-ப-பண-கள-#sthash.Mul3FZ8b.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை சவோய் சினிமா பக்கத்தில் புதிய வீடமைப்பு கட்டுமானம் சரிந்து விழுந்தது.

கட்டுமானப் பணியில் இருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். 9 பேர் வரை மீட்கப் பட்டு கொழும்பு தெற்கு வைத்தியசாலைக்கு அனுப்பட்டனர்.

மீட்ப்புப் பணியில் போலீசாரிடம், தீயணைக்கும் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

 

 

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்தது: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
 

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே இன்று காலை 10.30 மணியளவில் சரிந்து வீழ்ந்தது.

இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் இதன்போது சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையில் எவரும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்போரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

http://newsfirst.lk/tamil/2017/05/வெள்ளவத்தையில்-ஐந்து-மாட/

பாரியளவு உயிரழப்புகள் ஏற்படாதது நிம்மதியை தருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டிடம் தமிழருக்கு சொந்தமானதா:unsure: அல்லது இந்தியத் தமிழருக்கு சொந்தமானதோ<_<

  • தொடங்கியவர்

வெள்ளவத்தை கட்டடம் இடிந்து விழுந்த சிசிடிவி காணொளி : பதறி அடித்து ஓடிய இளைஞர்கள் : மனதை பதறவைக்கும் காணொளி

 

 

வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் சரிந்து விழும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில், இளைஞர்கள் வழமைப் போன்று பணியில் ஈடுபட்டிருப்பதும் திடீரென கட்டடம் இடிந்து விழுவதும், இளைஞர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள பதறியடித்து ஓடுவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

குறித்த ஐந்து மாடிக் கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் இருவர் காணாமல் போயுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அன்னலட்சுமி என்ற பெண் ஒருவரும் பத்தனையைச் சேர்ந்து 20 வயதுடை ராமர் நிரோஷன் என்பவருமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

 காய­ம­டைந்­த­வர்கள் களு­போ­வில - கொழும்பு தெற்கு போதன வைத்­தி­ய­சா­லையிலும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.  

நிலத்தின் கீழ் இரு மாடி­க­ளையும் நிலத்தின் மேல் ஐந்து மாடி­க­ளையும் கொண்ட உற்­சவ மண்­ட­பத்தின் பின்பகுதியே இவ்­வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. 

மண்­ட­பத்தின் நில மேல் மட்­டத்தில் அமைந்­துள்ள ஐந்து மாடி­களே இதன்போது இடி­பா­டு­க­ளுக்கு உள்­ளாகி சரிந்­துள்­ளன.  

மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/20161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.