Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சரியா தப்பா?

Featured Replies

உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?

காதல் சரியாத்தான் இருக்கு. செய்யுற மனிசர்தான் சரியில்லாமல் இருக்கினம். :lol::rolleyes:

காதல் சரியாத்தான் இருக்கு. செய்யுற மனிசர்தான் சரியில்லாமல் இருக்கினம். :lol::rolleyes:

இச்ச விளக்கு பிடிச்சவர் சொல்லுறார் கேளுங்கோ :P

  • கருத்துக்கள உறவுகள்

இச்ச விளக்கு பிடிச்சவர் சொல்லுறார் கேளுங்கோ :P

விளக்கு இல்லையடாம்பி விலக்குப் பிடிச்சது என்று சொல்லுங்கோ..! :rolleyes:

விளக்கு இல்லையடாம்பி விலக்குப் பிடிச்சது என்று சொல்லுங்கோ..! :rolleyes:

ஆகா பெண்கள் போல எனக்கும் தமிழுக்கும் பிரச்சனை போல் இருந்தாலும் நன்றி

சரியாக் சொல்லி தந்ததுக்கு :P

நல்ல விலக்கு பிடிச்ச அனுபவ்ம் போல?

காதல் சரியாத்தான் இருக்கு. செய்யுற மனிசர்தான் சரியில்லாமல் இருக்கினம். :lol::rolleyes:

காதல் புனிதமானது என்று சொல்லி சொல்லியே, அதை அழிப்பது இவர்கள் தான் :lol:

இச்ச விளக்கு பிடிச்சவர் சொல்லுறார் கேளுங்கோ :P

விளக்கு இல்லையடாம்பி விலக்குப் பிடிச்சது என்று சொல்லுங்கோ..! :rolleyes:

விளக்கு அல்லது விலக்கு பிடிப்பது என்பது என்ன? :lol:

விளக்கு அல்லது விலக்கு பிடிப்பது என்பது என்ன? :rolleyes:

நெடுக்கால போனவரிடம் கேளுன்கோ சொல்லுவார்........

எத்தினையாவது காதல் பற்றிக் கதைக்கிறீர்கள்??

எத்தினையாவது காதல் பற்றிக் கதைக்கிறீர்கள்??

வழமையாக எல்லோருக்கும் முதலாவது காதல். உங்களுக்கு உங்களது பத்தாவது காதல் என்று வைத்துக்கொள்ளுங்கள். :rolleyes::lol::lol:

விளக்கு அல்லது விலக்கு பிடிப்பது என்பது என்ன? :rolleyes:

இரண்டுக்குமே அர்த்தம் உண்டு.

விளக்குப் பிடிப்பது என்பது காதலர்கள் இணைவதற்கு தூதுபோய் ஒரு ஒளி விளக்குப் போல நின்று சேர்த்து வைப்பது.

விலக்கு பிடிப்பது என்பது இருவரும் ஊடலில் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது விலத்தி விடுவது.

ஆனா இந்த இரண்டையும் விட காதலிப்பதுதான் இலகுவானது. அனுபவபட்டவருக்குத்தான் அது தெரியும்.

Edited by saanakiyan

இரண்டுக்குமே அர்த்தம் உண்டு.

விளக்குப் பிடிப்பது என்பது காதலர்கள் இணைவதற்கு தூதுபோய் ஒரு ஒளி விளக்குப் போல நின்று சேர்த்து வைப்பது.

விலக்கு பிடிப்பது என்பது இருவரும் ஊடலில் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது விலத்தி விடுவது.

ஆனா இந்த இரண்டையும் விட காதலிப்பதுதான் இலகுவானது. அனுபவபட்டவருக்குத்தான் அது தெரியும்.

காதல் என்றால் என்ன?

February 18th, 2007 at 4:09 pm (காதல்) · Edit

காதல் என்றால் என்ன?

இருமனங்கள் ஒரிடத்தில் சங்கமிக்கும் நேரமது..!

tamil4u.wordpress.com

இருஇதயங்கள் ஒன்றாக துடித்திடும் வேளையது..!

கண்கள் நான்கும் காணுகின்ற ஒரு கனவு..!

ஒரே சுவாசத்தில் வாழ்ந்திடும் உயிர்களிரண்டு..!

மனக்கடலின் போராட்டம் திடமனதையும் கவிழ்த்துவிடும்..!

ஆழம் தெரியாத ஆழியது ஆழ்ந்திடினும் தெரிந்திடாது..!

அன்பின் ஆழத்திலே சிக்க வைக்கும் சுழியது..!

நேசத்தின் தேசத்திலே தத்தளிக்க வைத்துவிடும்..!

தேக்கி வைத்த நினைவுகள் சுமந்து வரும் கனவுகளும் சுகமான சுமையாக தொடர்ந்திடும் காத்திருப்புக்களும்!

நாள் முழுக்கப் பேசினாலும் நாள் தோறும் பார்த்தலும் கண நேரப் பிரிவு கொன்று விடும் உள்ளத்தை!

உறங்கிடும் வேளையிலும் உறங்கிடாத நினைவுகளில் தொடர்ந்து வரும் இனிமையான ஞாபகங்கள்!

ஓரு கணமும் பிரிந்திடாது வாழ்ந்திட ஏங்கிடும் மனது!

நிலையில்லா பாரினிலே நீண்ட வாழ்க்கையின் தேடலது!

உள்ளத்தையும் உணர்வுகளையும் தத்தளிக்க வைத்துவிடும் எல்லாம் கலந்த கலவை காதலென்பது…..!

Comments

ஏற்கனவே ரசி அக்கா ஒரு பக்கத்தில காதல் பற்றித் தொடங்கிட்டா அதான் எத்தினை இடத்தில காதல் பற்றிக் கதைக்கிறீங்கிள் என்று கேக்க நினைச்சு இப்பிடிக் கேட்டிட்டன் இருந்தாலும் மாப்பிளைன்ர நக்கல் நல்லாயில்லை சொல்லிட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் உணர்வுகளின் மையமாக இருக்கும் வரை சரி!

உணர்ச்சிகளின் வடிகாலாக எப்போது மாறுகின்றதோ அப்போ தவறு! !!

இருவரும் புரிந்துணர்ந்தால் சரி!

ஒருவர் முரண்பட்டாலும் தவறு!

காதல் தோணியாய் இருக்க வேண்டும். ஏணியாய் இருக்க வேண்டும். கறிவேப்பிலையாய் மாறிவிடக்கூடாது!..

காதல் ! இதம்! இதயம் உள்ளவருக்கு மட்டுமே வாய்த்துவிட்டால்! அது மிக உன்னதம். !

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து கைவிடாமல் இருந்தால் காதல் சரி.

காதலித்து கைவிட்டால் காதல் தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்து கைவிடாமல் இருந்தால் காதல் சரி.<<<<<உண்மையாக காதலித்திருந்தால் கைவிட மாட்டார்கள் அக்கா!.

அதுதான் காதல்!

காதலித்து கைவிட்டால் காதல் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு அல்லது விலக்கு பிடிப்பது என்பது என்ன? :unsure:

இன்னா நைனா, மெகா பட்ஜெட்டில மெகா சிரியல் எடுக்க வெளிக்கிட்டீர், இப்ப போய் உமது இமேஜை கெடுக்கிறமாதிரி உமக்கு நீரே ஒரு சீனை வைச்சீட்டீர் போல? :( :( :o (அட நான் என்ன சொல்லவாறன் எண்டால் எல்லாம் தெரிஞ்ச மாதிரி கதைக்கனும், ஆனால் மற்றயவர்களுக்கு அது தெரியகூடாது, அப்ப அப்ப விலக்கு பிடிக்கனும், அப்ப அப்ப விளக்கும் பிடிக்கனும் ஒகெயா?புரிஞ்சுதா) :unsure: :P

காதல் புனிதம் - இல்லை அப்பிடினு குழப்பமா?

சுலபவழி இருக்குமே-

அதுக்கு- ஒண்ணு பண்ணனும் .......

நடுவில நாங்க இருக்கணும் - இரு கரையும் -அம்மா - அப்பா ......

அப்புறம் கண்ணாடிய - பார்க்கணுமாம்.......

எது எது - எப்பிடி இருந்தாலும்........... இப்பிடிதான் முடியும் .....

அதுக்கு - நாங்களே சாட்சியாய்! :(

நீட்டி முழக்கிட்டனா?

சரி தெளிவா-

எடுத்து விடுறனாம்!

நீ ஒரு பெண்ணை காதலித்தால் .......

காதல் புனிதம்! எதிர்காலத்தில் .......

உன் பொண்ணு - யாரையும் காதலித்தால் - காதல் அசிங்கம்! ;)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?

"காதல்' என்பது காதல் போன்றது அது அதுவாக தொடங்க வேண்டும்

அதற்காக நீ காதலை தொடங்காதே. காதல் காதலை காதலிக்கவேண்டும்

காதலை நீ காதலித்தால் அல்லது காதலிக்கும் வினாடிதான் தவறு தொடங்கும் வினாடி

அதற்காக தவறென்று எண்ணி தள்ளிவிடாதே பின்னாளில் தவறுகள்தான் காதலாக பூக்கும்

காதல் பூ பூக்கும்போது பறித்துவிடாதே காதல் கசங்கிவிடும் ஆதலால் தவறுழைக்க நேர்ந்துவிடும்

அதற்காக காதல் பூக்குமென்றெண்ணி மீண்டும் காத்திராதே. ஒரு வேளை உனக்கு வயதாகியிருக்கும் கண்ணாடியை பார்க்க வேண்டும். காதலும் தவறும் ஒரு நேர் கோடு போன்றது இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்க கூடாது. அதற்காக நீ காதலை சந்திக்காது இருந்து விடாதே. காதல் தானாக வந்து உன்னை சந்திப்பதென்பது மிக அரிது தவறு வந்து உன்னை சந்திப்பது எளிது. ஆனாலும் இரண்டும் அவ்வப்போது ஒன்றை ஒன்று நேரிடையாக இல்லை என்றாலும் அதை செய்பவர் ஊடாக ஒன்றை ஒன்று அவ்வப்போது சந்திக்கின்றன. இந்த நேரம் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போது காதல் பூக்க வாய்புண்டு காதல் பூத்தால்??? ........ ஆம் நீர் நினைப்பது சரிதான்! தவறு நடக்க வாய்புண்டு! ஆகவே காதல் சரியானதா? தவறானதா? சரியானதும் தவறானதும் காதல். சாய்ந்தகோபுரம் (பியாஸா) காதலால் சரியவில்லை. ஆனால் சாய்ந்த கோபுரத்தினடியில் பல காதல்கள் சாய்ந்திருக்கின்றன ஆதலால் பல தவறுகள் நடந்திருக்கின்றன. அதற்காக தவறுகளால்தான் காதல்கள் சாய்ந்தன என்று எண்ணிவிடலாகாது. அழிவுகளில் இருந்துதான் பல ஆக்கங்கள் பிறந்திருக்கின்றன. காதலும் தவறலாம்..... காதலிப்பவரும் தவறலாம்...... தவறுகள் தவறலாமா? தவறால் பார்க்க வேண்டும் ஏனெனில் தவறுகளிலிருந்தும் காதல் பூக்க வாய்ப்பூண்டு!

காதலில் தோல்வியுற்ற பலர் காதலைப் பற்றி புகழ்வதையும் கவிதை எழுதுவதையும் கேட்டிருக்கிறேன்.

காதலித்து திருமணம் செய்தவர்கள் பலர் கம்மென்று இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

1. காதலில் தோல்வியுற்ற பலர் காதலைப் பற்றி புகழ்வதையும் கவிதை எழுதுவதையும் கேட்டிருக்கிறேன்.

2. காதலித்து திருமணம் செய்தவர்கள் பலர் கம்மென்று இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

இதில் நீங்கள் எந்த வகை? :(

ஆழம் தெரியாத ஆழியது ஆழ்ந்திடினும் தெரிந்திடாது..!

ஆமா ஆழம் தெரியாது..தெரிந்திடும் போது மூச்சிருக்காது!!! :(:(

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் தோல்வியுற்ற பலர் காதலைப் பற்றி புகழ்வதையும் கவிதை எழுதுவதையும் கேட்டிருக்கிறேன்.

காதலித்து திருமணம் செய்தவர்கள் பலர் கம்மென்று இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

காதலில் தோற்றவர்கள் நேரம் இருப்பதால் போற்றுகிறாாகள் அல்லது தூற்றுகிறார்கள்.திருமணம் முடித்தவர்களுக்கு அடுத்த கட்டம் தொடங்குவதால் கம் என்று இருப்பது போல் தெரிகிறது என்று நினைக்கிறேன் :P

காதல் என்றால் என்ன என்று சொல்லுங்க அதுக்க்கு பிறகு அது சரியா தப்பா என்று எனக்கு தோணுவதை சொல்லுறன் :(

ஆழம் தெரியாத ஆழியது ஆழ்ந்திடினும் தெரிந்திடாது..!

ஆமா ஆழம் தெரியாது..தெரிந்திடும் போது மூச்சிருக்காது!!! :(:(

அட போங்கப்பா அனுபவ காரர் சொல்லுவதை விடவா நான் புதுசா சொல்ல போறேன் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.