Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.டி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை..!

naam-tamilar232-1553843207.jpg

சென்னை: லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், தகவல் தொழில்நுட்பப் பணியாளரான ந.மதுசூதனனுக்கு ஆதரவு கோருவதாக அக்கட்சியின், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையானது மென்பொருள், வன்பொருள், தொலைத்தொடர்பு, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி, வணிக செயலாக்கம், மின் வணிகம் போன்ற பல தளங்களில் இயங்கும் 8.4 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானமும், 39 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 12 கோடி தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையளிக்கும் மிகப்பெரிய துறையாகும்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 2-லிருந்து 3 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குமென கணிக்கப்படுகிறது

. இந்தியாவில் மட்டும் சிறியதும் பெரியதுமாய் 4,750 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறை சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7% பங்கு வகிக்கும் இத்துறை தமிழகத்தில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் வணிகத்தை நடத்தும் மிகப்பெரிய சேவைத் துறையாகும்.

இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் பணி பாதுகாப்பு, பணி நேரம், சரியான ஊதியம், பாலின பாகுபாடு போன்றவை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் வகையிலான வலிமையான சட்டங்களோ அதற்கான அரசின் துறைகளோ இல்லாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர்.

ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வலிமையானதாக இல்லாத காரணத்தால் அந்த சட்டங்களை வலிமைப்படுத்தும் வகையில் இத்துறை பணியாளர்களுக்கான வலிமையான புதிய சட்டங்களை இயற்றி அதற்கான தனித்த பிரிவு ஒன்றை மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறைகளின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த அமைப்புகளின் பங்களிப்போடு உருவாக்கினால் மட்டுமே ஆக்கப்பூர்வமான தீர்வாக இருக்கும்.

இத்துறையில் உள்ள பணியாளர்களின் பிரச்சனைகளை களைந்து அதற்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் கட்சியின் சார்பில் இத்துறை சார்ந்த பணியாளர்களுக்கென தனித்த பிரிவு ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்டு பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, சட்ட விழிப்புணர்வு உள்ளிட்ட பணியாளர் நலன் சார்ந்த உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை கலையும் வண்ணம் இதற்கான குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவரையே தேர்தலில் போட்டியிட வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்பது ஆகச் சிறந்த ஒன்றாக இருக்குமென்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவின் செயலாளராக உள்ள ந.மதுசூதனன் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இத்துறை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதற்கான சட்டங்களை அவர்களே இயற்றும் பொருட்டு இத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கு இந்த பிரிவின் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நமது சக தொழிலாள நண்பர் மதுசூதனனை வெற்றியடைய வைத்து லோக்சபா அனுப்ப இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஆதரவும், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் மிகவும் இன்றியமையாதது என்பதால் நண்பர்கள் அனைவரும் அனைத்து வகையிலும் ஆதரவு நல்கி நமக்கான பிரதிநிதியாக மதுசூதனனை லோக்சபா அனுப்ப உதவிட வேண்டுகிறோம்.கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ந.மதுசூதனன் சுய விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

பெயர்: ந.மதுசூதனன்

தகப்பனார் பெயர்: தி.நடராஜன்,   

        ,,.            தொழில்: விவசாயி

முகவரி : 967, சப்பானிபட்டி, கரகூர் அஞ்சல், கிருட்டிணகிரி மாவட்டம்.

வயது : 37

தாய்மொழி: தமிழ்

பிற மொழி : ஆங்கிலம்

மின்னஞ்சல்: madhu.tn commat;gmail.com

கைபேசி எண் : 9500095032

கல்வித் தகுதி: B.Sc (Computer Science)MCA (Master of Computer Applications)

தொழில்: முதுநிலை கணினி வல்லுநர் (Senior IT Professional)

வெளிநாடுகள் : அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார்,குவைத், பஹ்ரைன், பெரு, சைப்ரஸ் போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம்

.ஓய்வு நேரம்: இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி

அரசியல் இலக்கு: பல்வேறு நவீன அறிவியல் தொழில் நுட்பங்களின் உதவியுடனான ஒரு பரந்துபட்ட தற்சார்பு பசுமை தாய்மை உற்பத்தி பொருளாதார கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் சிற்றூர் பொருளாதார வளர்ச்சி.இயற்கையை பாதிக்கா வண்ணம் நீர்வளம், நிலவளம் சார்ந்த தொழில்களை பல்கிப் பெருக்கி படித்த, படிக்காத அனைவருக்கும் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார தன்னிறைவு.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், பணி நேரம், ஊதியம், பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள், பெண் தொழிலாளர்களிடம் காட்டும் பாகுபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை களையும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற வலுவான தொழிலாளர் நலச் சட்டங்கள் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு மத்திய, மாநில தொழிலாளர் நலத்துறைகளின் கீழ் இத்துறை பணியாளர்களுக்கென தனித்த பிரிவுகள் உருவாக்கப்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-party-seeking-support-krishnagiri-lok-sabha-constituency-candidate-345296.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அரசியலில் என்ன சாதிக்க முடியும்..? நாம் தமிழர் .

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கல்வித் தகுதி: B.Sc (Computer Science)MCA (Master of Computer Applications)

தொழில்: முதுநிலை கணினி வல்லுநர் (Senior IT Professional)

வெளிநாடுகள் : அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார்,குவைத், பஹ்ரைன், பெரு, சைப்ரஸ் போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம்

எவ்வளவு தகுதி வாய்ந்த வேட்பாளரை தெரிவு செய்துள்ளார்கள்.நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டுக்கள்.

வேட்பாளரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இப்போது எல்லோர் கையிலும் உலகமே உள்ளது.
விளையாட்டைக் காட்டுங்கள்.

இணைப்புக்கு நன்றி புரட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பரப்புரை களத்தில் சீமானுடன் ..😇

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களில் வளர்ச்சி இல்லை: திருவண்ணாமலை பிரச்சாரத்தில் சீமான் விமர்சனம்

Published :  31 Mar 2019  11:05 IST
Updated :  31 Mar 2019  11:05 IST
திருவண்ணாமலை
 
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%
 
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள திட்டங்களில் வளர்ச்சி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. வேட்பாளர்கள்ரமேஷ்பாபு மற்றும் தமிழரசியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற் றினார். அப்போது அவர், “பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களில் கவர்ச்சி மட்டும் உள்ளது. வளர்ச்சி இல்லை. இந்திய நாட்டில் மனித உழைப்புகள் மலிவாக கிடைத்து வருவதால், பல்வேறு முதலாளிகள் இங்கு வந்து பயன் அடைகின்றனர்.

அனைத்து நாடு களும், இந்திய நாட்டில் தொழிற் சாலைகளை தொடங்குகிறது. எந்த நாட்டில் இந்தியா தொழிற் சாலையை தொடங்கி உள்ளது. கார்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும், வேகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்க உள்ளனர். கார்களில் செல்பவர்களை பற்றி சிந்திக்கும் மத்திய, மாநில அரசுகள், விவசாயியை பற்றி ஏன் சிந்திக்கவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் கார் இருக்கும், ஆனால் குடிக்க நீர் இருக்காது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

தேர்தல் வருகிறது என்பதால், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருகிறோம் என்று அறிவித்து வாக்குகளை பறிக்க மோடி நாடகமாடுகிறார். இலங்கை ராணுவத்தால் இதுவரை நமது மீனவர்கள் 840 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சொந்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொலை செய்யும்போது வேடிக்கை பார்க்கிறது இந்திய கடற்படை” என்றார். ஆரணி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, “எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறோம். வாக்குக்கு பணம் பெறுவது என்பது தன்மானத்தை அடமானம் வைப்பதாகும்.” என்றார்.

https://tamil.thehindu.com/print-conversion/article26691263.ece

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கு ஆட்களை அரசியல் கூட்டத்துக்கு இழுத்து வரும் ஏஜெண்ட், கடைசியில் சீமான் குறித்து சொல்லுவதை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீலகிரி, நாம் தமிழர் வேட்ப்பாளர் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், நாம் தமிழர், அங்குள்ள சுஜேச்சை வேட்ப்பாளருக்கு ஆதரவு என அறிவிப்பு.

https://youtu.be/ns58h_Sbh1o

 

 

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.. இன்னும் இறங்கி அடிக்க.. கொஞ்சம் இறங்கி வந்தால் போதும்.. வருவாரா.?

seeman4423-1554096858.jpg

சென்னை: சீமான் இதுவரை கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசியல்வாதிகளிடமிருந்தே குறிப்பாக திராவிட கட்சிகளிடமிருந்தே நியாயமான பதில் வராதுதான்!ஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கிறார் சீமான்.

தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லைதான்.அதே சமயம் சமுதாயத்தை அசைத்து பார்க்கக்கூடிய, சம்பவங்களுக்கு எதிரான கேள்விகளை நடுமண்டையில் ஆணி அடித்தாற்போல கேட்டுவிடவும் செய்கிறார். சீமானின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வரவே செய்கிறார்கள்.

இப்போதுள்ள நிலையில், பிரச்சாரம் செய்து வரும் பிரதான கட்சிகளுடன் ஒப்பிடும்போது சீமான் பேச்சுக்கு வரும் கூட்டம் நிச்சயம் கவனிப்புக்குரியதாகவே உள்ளது.ஆனால்!

இவரை நம்பலாமா ?

சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் ஓட்டு போட தயக்கமா இருக்கே.. இவரை நம்பலாமா ? நம்பப்படாதா ? என்பதுதான் இன்றைய தமிழக மக்களின் பெரும்பாலானோர் மனநிலை !

தமிழ் இனம்

இதற்கு முக்கிய காரணம், சீமானின் கொள்கை. பரந்து விரிந்து கட்டுக்கடங்காமல் ஓடவேண்டிய நாம் தமிழர் கட்சி, இன்று தமிழ் இனம் என்ற ஒரு ஒற்றை கூட்டுக்குள் அடைத்து கொண்டு தன்னை சுருக்கி கொண்டதோ என்று தோன்றுகிறது. தமிழின உணர்வு அவசியமானதுதான்.. அத்தியாவசியமானதுதான்.. ஆனால் இந்த உணர்வே சீமானை தனிப்படுத்தி வைத்துள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது. எந்த நல்லதையுமே ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.

திராவிட கட்சிகள்

சீமான் சொல்வது போல திராவிட கட்சிகள் 50 வருடங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு நாசம் செய்துவிட்டதாகவே வைத்து கொள்வோம், அதற்காக அந்த கட்சிகளின் பங்கு நம் மாநிலத்தை இல்லவே இல்லை என்று ஒரேயடியாக சொல்லிவிடவும் முடியாது. அப்படி எதுவுமே 50 வருடம் நடக்காமல் இருந்திருந்தால், புரட்சி என்றைக்கோ தமிழகத்தில் வெடித்திருக்கும் !

அங்கம்தான்

சீமான் சொல்வது போல, அவ்வளவு சீக்கிரம் 2 திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. காரணம் இவை ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. மக்களும் கூட இதில் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே சீமானும் சற்றே இறங்கி இந்தக் கட்சிகளின் ஒத்த கருத்துக்களுக்கு கைகோர்த்து இணைந்து சென்றால் சீமானின் உயரம் எங்கோ இருக்கும் !

வேல்முருகன்

சரி.. திராவிட கட்சிகளே வேண்டாம் என்றால், ஒரு மாற்றத்தை புகுத்தவே ரிஸ்க் எடுத்துள்ள கமலுடன் கை கோர்க்கலாம். அல்லது மண்ணையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளை கையில் எடுத்து வரும் வேல்முருகனுடன் ஒன்றிணையலாம்.

இதற்கெல்லாம் சகிப்புத்தன்மை மிக அவசியம்.. நீக்குப் போக்கு, விட்டுக் கொடுத்தல் என்று சின்ன சின்ன சமரசங்களும் தேவை.. இதெல்லாம் இப்போது சீமானுக்குத் தேவை. காரணம், மற்ற கட்சிகளை விட சீமானிடம் நல்ல கொள்கைகள் உள்ளன. தொலைதூரப் பார்வை உள்ளது. ஒப்புக்காக எதையும் இவர் சொல்வதில்லை. இனத்தின் விடுதலைக்காக பேசுகிறார்.. அது நிறைவேற இன்னும் கூடுதல் பலம் சீமானுக்கு நிச்சயம் தேவை.

விமர்சிப்பு

அதிமுகவின் நிழல்தான் சீமான் என்ற ஒரு கருத்து உள்ளது. இதற்கு காரணம், தனி ஈழத்துக்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள்தான் என்று ஏற்கனவே சீமான் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இப்போதும்கூட அதிமுகவைவிட திமுகவை அதிகம் விமர்சிப்பதாகவும், காங்கிரஸைவிட பாஜகவை அதிகம் விமர்சிப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது. இதையும் சீமான் உடைத்தெறிய வேண்டும்.

பாஜகவைப் போலவே காங்கிரஸ் மீதும் தமிழ் மக்களுக்கு உலகளாவிய அளவில் கடும் அதிருப்தி இருப்பதை நாம் மறுக்க முடியாது.

மன்சூரலிகான்

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்ன சீமான் இன்று தன் கட்சியில் மன்சூரலிகானுக்கு சீட் தந்திருக்கிறார். அப்படியானால் சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுவிட்டாரா என்பதை தெளிவுபடுத்தவில்லை. சின்ன சின்ன விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டால் போதும்.. சீமான் பட்டபாடுகளுக்கு எல்லாம் முடிவு சுபமாக வந்து சேரும் ! இல்லையென்றால் வெற்றுக்கூச்சல் கறிக்குதவாது என்பதுபோல் ஆகிவிடும் !

https://tamil.oneindia.com/news/chennai/seemans-principles/articlecontent-pf364119-345538.html

டிஸ்கி :

3-naradajeyanthi-1531476286.jpg

செம்பு தட்ஸ்தமிழ் கிந்திய யால்ராவின் நாரதர் ஜாப் ஸ்டார்ட்ரட் .. அலார்ட்டா இருடா ஆறுமுகம் ..😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

டிஸ்கி :

3-naradajeyanthi-1531476286.jpg

செம்பு தட்ஸ்தமிழ் கிந்திய யால்ராவின் நாரதர் ஜாப் ஸ்டார்ட்ரட் .. அலார்ட்டா இருடா ஆறுமுகம் ..😎

 

தான, தர்ம, பேத, தண்டம் என்று தமிழில் சொல்வதை ஆங்கிலத்தில் fox and hedgecox கதை மூலம் சொல்வார்கள்.

அதாவது, நரியும், முள்ளம்பன்றி கதை. நரி மேல் இருந்து பாய்ந்தாலும் முள், பக்கவாடுகளில் இருந்து பாய்ந்தாலும், பின் பக்கமாக, முன் பக்கமாக பாய்ந்தாலும் அதே முள்.

ஒரு வழியாக.... தூங்கும் போது.... கீழ் பக்கமாக கிடங்கு கிண்டி வந்தால், முள் இல்லாத, வயிறுபகுதியை லபேக்கெண்டு பிடிக்கலாம் என்று.... மினெக்கெட்டு கிண்டி வந்தால்.... முள்ளம் பன்றி நகர்ந்து விட்டது.

அப்புறம், காக்கா, வடை கதை போல, நாம நண்பர்களாக இருப்போம் என்று ஆரம்பிப்பது.

இவனுங்க.... சீமானை பத்தி ரொம்ப கவலைப்படுறானுங்க.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய நாம் தமிழர் கட்சி: கவன ஈர்ப்பா, முன் மாதிரியா?

மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ்
நாம் தமிழர் கட்சிபடத்தின் காப்புரிமைFACEBOOKL

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை.

தேர்தலில் பெண்களின் பங்களிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7 கோடி. அதாவது 48 சதவீதம். ஆனால், மக்களவையில் அவர்களின் பங்கு 11.8 சதவீதம் (64/543) என்ற அளவிலும், மாநிலங்களவையில் அவர்கள் பங்கு 11 சதவீதம். அதாவது, 27 பெண் உறுப்பினர்கள் என்ற அளவிலும் இருக்கிறது என்கிறது பன்னாட்டு நாடாளுமன்ற ஒன்றியம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் வழங்கும் தகவல்களின்படி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருக்கிறது. அதாவது 1957ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்தி போட்டியிட்ட பெண்களின் சதவீதம் 1.4%. 2014 தேர்தலில் இது 6.97 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் வெற்றி தோல்விகளை கடந்து ஒரு கட்சி மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்குவது இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

சமத்துவமின்மை நிலவுகிறது

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளிடம் பேசினோம். அவர், "இங்கு இயல்பாகவே ஒரு சமத்துவமின்மை நிலவுகிறது. ஏறத்தாழ 50 சதவீதம் பெண்கள் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது சமூக அநீதி" என்கிறார்.

நாம் தமிழர் கட்சி செய்வது கவன ஈர்ப்பா அல்லது முன் மாதிரியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நான் போட்டியிடும் வடசென்னை தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பெண்கள். அதாவது சரிபாதிக்கு மேல். ஆனால் அது வேட்பாளர்கள் சதவீதத்தில் பிரதிபலிக்கிறதா? இல்லைதானே." என்கிறார்.

மேலும் அவர், "ஐம்பது சதவீதம் என்பதை அரசே சட்டமாக்க வேண்டும். இது சலுகை அல்ல; உரிமை. கவன ஈர்ப்புக்காக செய்யவில்லை. முன் மாதிரி அரசியலை நாம் தமிழர் கட்சி இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது" என்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது கருத்தைத்தான் முன் வைக்கிறார். சீமான், "பெண்களுக்கான தனி தொகுதிகளை வழங்க வேண்டும். பெண்கள் கைகளுக்கு அதிகாரம் செல்ல அதுதான் வழி. எத்தனை காலம்தான் பாலின சமத்துவத்தை பேசிக் கொண்டே இருப்பது. அதை செயலில் காட்ட வேண்டும். பெண்கள் கைகளுக்கு அதிகாரம் செல்ல அதுதான் வழி," என்கிறார்.

'உழைக்கும் வர்க்கத்தினர்'

நாம் தமிழர் கட்சி செய்வது கவன ஈர்ப்பா அல்லது முன் மாதிரியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அக்கட்சியின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறோம் என்கிறார் மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி.

பெண்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் அவர்கள் பெண்களின் தேவைகள், பிரச்சனைகளை பிரதிபலிப்பார்கள் என நம்புகிறோம் என்கிறார் அவர்.

janathaaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், அதே சூழலில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் அரசியலில்பங்குபெறும் சூழலும் அதிகரிக்க வேண்டும் என்கிறார் செல்வி.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலங்களவையில் 2008ஆம் ஆண்டு நிறைவேறியது. ஆனால் இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை. இந்திய அளவில் பிஜூ ஜனதா தளம் 2019 மக்களவைத் தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக சமூகத்தை மேன்மையடைய செய்கிறது என்கிறது பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச ஆய்வு நிறுவனம்.

https://www.bbc.com/tamil/india-47799628

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏழைகளை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்?- வடசென்னை நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

Published :  03 Apr 2019  11:52 IST
Updated :  03 Apr 2019  11:58 IST
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நிலமும் வளமும் சார்ந்த தொழில்வளர்ச்சி! இயற்கை வேளாண் உற்பத்தி பெருக்கம்! பல கோடி பனைதத்திட்டம்! நாட்டு ஆடு மாடு வளர்த்தல்! மாற்றுப் பொருளாதாராம்! தற்சார்பு பொருளாதாரம்! மீண்டெழுவோம்! நாம் தமிழர்!

#விவசாயி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.