Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிகிச்சையின் பின் உடலில் பிக்குகள் குருதியே ஓடும் வடக்கு ஆளுநர் குரே கூறுகிறார்

Featured Replies

சிகிச்­சை­யின் பின் உட­லில் பிக்­கு­கள் குரு­தியே ஓடும்

வடக்கு ஆளு­நர் குரே கூறு­கி­றார்

 
சிகிச்­சை­யின் பின் உட­லில் பிக்­கு­கள் குரு­தியே ஓடும்
 

தென்­னி­லங்கையில் இருந்து நூறு பிக்­கு­கள் யாழ்ப்­பா­ணம் வந்து குரு­திக் கொடை வழங்­கி­யுள்­ள­னர். எமது சகோ­தர மக்­க­ளுக்­குச் சுக­வீ­னம் ஏற்­ப­டும் போது எமது குரு­தி­யைக் கொடுங்­கள் என்று பிக்­கு­கள் குரு­திக் கொடை வழங்­கி­யுள்­ள­னர்.

சுக­வீ­னம் அடை­யும் நீங்­கள் நலம் பெற்று வீடு செல்­லும்­போது அவர்­க­ளின் குரு­தியே உங்­க­ளின் உட­லில் இருக்­கும். இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார்.
இலங்கை தொழிற்­ப­யிற்சி அதி­கார சபை­யால் நடத்­தப்­பட்ட என்.வி.கியூ பயிற்­சியை நிறை­வு­செய்­த­வர்­க­ளுக்கு சான்­றி­தழ்­களை வழங்­கும் நிகழ்வு நேற்று வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

அதில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கை­யின் கல்வி நிலை­யில் மிகப் பெரும் குறை­பா­டு­கள் உள்­ளன. இது­வரை மாண­வர்­கள் கற்க விஞ்­ஞா­னம், வாணி­பம், சித்­தி­ரம் ஆகிய மூன்று பிரி­வு­களே உள்­ளன. அவை போது­மா­ன­தாக இல்லை. அதற்­கும் மேலாக மாண­வர்­க­ளி­டம் பல வித­மான திற­மை­கள் காணப்­ப­டு­கின்­றது. நாட்­டின் இயற்கை செல்­வங்­களை பயன்­ப­டுத்த இந்த மூன்று கல்­வி­யும் போதாது.

பாட­சா­லை­க­ளில் இப்­போது புதி­தாக தொழில்­நுட்­பத் துறை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நாட்­டுக்கு இன்­னும் இன்­னும் தொழில்­நுட்ப அறிவு தேவை­யா­க­வுள்­ளது.

எழுத, வாசிக்க தெரிந்­தி­ருந்­தால் மட்­டும் நாம் அபி­வி­ருத்­தியை அடைய முடி­யாது. பட்­ட­தா­ரி­க­ளுக்கு எமது சமு­கத்­தில் பெரிய மதிப்பு இருக்­கின்­றது. இந்த நாட்டு அபி­வி­ருத்­திக்கு மாண­வர்­கள் தொழில்­நுட்ப துறை­யில் சாதிக்க வேண்­டும். இன, மத வேறு­பாடு இன்றி அனை­வ­ரும் ஒரு தாய் பிள்ளை போல வாழ­வேண்­டும். தமி­ழ­ரும் சிங்­க­ள­வ­ரும் இந்­தி­யா­வில் இருந்­து­தான் வந்­த­னர்.

செல்­வம் இருப்­ப­வர்­கள் கொழும்­பில் இன, மத பேத­மின்றி ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­ற­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தனது இரண்டு பிள்­ளை­க­ளை­யும் சிங்­கள சம்­பந்­தி­க­ளுக்கு திரு­ம­ணம் செய்து கொடுத்து அவர்­கள் வீட்­டுக்­குள் சந்­தோ­ச­மாக வாழ்­கின்­ற­னர். நாம் இன மத வேறு­பா­டு­கள் இன்றி அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து இந்த நாட்டை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டும்.- என்­றார்.

நிகழ்­வில் வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லா­ளர் இளங்­கோ­வன், யாழ்ப்­பாண மாவட்ட மேல­திக செய­லர் திரு­மதி தெய்­வேந்­தி­ரம், மாண­வர்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

http://uthayandaily.com/story/8075.html

  • தொடங்கியவர்

யாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :

 

19420499_890843581056192_129376106608477
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண மக்களின் உடலில் இனி பௌத்த பிக்குகளின் குருதியே ஓடும் என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.  இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடாத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த பௌத்த பிக்குகள் யாழ். போதனா வைத்திய சாலைக்கு சென்று எமது சகோதர மக்கள் சுகவீனம் அடைந்து அவர்களுக்கு குருதி தேவைப்படும் போது தமது குருதியை வழங்குங்கள் என குருதி வழங்கி உள்ளனர். எனவே எதிர்காலத்தில்  சுகவீனம் குணமடைந்து செல்லும் மக்களின் உடலில் அந்த பௌத்த பிக்குகள் வழங்கிய குருதியே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வடமாகாண முதலமைச்சர் தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்கள சம்பந்திகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் வீட்டினுள் சந்தோசமாக வாழ்கின்றனர் எனவும் இதேபோன்று நாமும் இன மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவர்  தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் இருந்து வந்து யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்ற பௌத்த பிக்குகள் இரத்த தானம் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/31066

  • கருத்துக்கள உறவுகள்

மனிதக் குருதி தானே ஓடும்.

ஐயோ.. இந்த இனவாதியை வரவேற்ற ஆக்களைச் சொல்லனும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

எனது குருதி.....இங்கிலாந்தில் வாழும் பல ஆங்கிலேயர்களின் உடலில் ஓடுகின்றது!

அவுசில் வாழும் பல இனத்தவர்களில் உடலிலும் ஓடுகின்றது!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்  குருதி கொடுப்பது..எனது வழக்கம்! அதை ஏன் செய்கின்றேன் என்பது எனக்கே தெரியாது!

அது யாரின் உடலில் ஒடப்போகின்றது என்பதைப் பற்றியும் நான் கவலைப்படுவது கிடையாது!

ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டால்...அதுவே எனக்கான ஆத்மா திருப்தியாகும்!

விளம்பரத்துக்காகப் பிக்குகள் குருதி கொண்டிருந்தால்.. ( அவ்வாறு அவர்கள் நினைத்துக் கொடுத்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்)..அவர்கள் கொடுக்காமல் இருந்திருப்பதே நன்று என்பது எனது கருத்து!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

19424312_473250673025593_829126427847294

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் எடுத்த குருதிக்கு பிராயசித்தம் செய்யினம் ....அதுசரி உதுக்குள்ள ஒரு சீனாக்காரனும் நிற்கிறார் போல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.