Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்

Featured Replies

இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்

இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர்
 
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, கூழாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இடை நடுவில் சபையை விட்டு வெளியேறினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினார்.

http://uthayandaily.com/story/10734.html

  • தொடங்கியவர்

முல்லை முஸ்லீம் குடியேற்ற விவகாரம் : முதல்வர் விக்கி வெளிநடப்பு

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

unnamed__5_.jpg

இந்த கூட்டத்தில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் ரிசாத் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், டெனிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீகந்தராஜா, வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

unnamed.png

இதில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முஸ்லீம் குடியேற்றம் அமைக்கும் விவகாரம் தொடர்பான விவாதம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் கூட்டத்தை வெளிநடப்பு செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லீம் குடியேற்றம் ஒன்றிற்கான ஏற்பாடுகள் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன. அன்றைய தினம் அப்பிரதேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவிதிருந்தார்கள். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அது தொடர்பான விடயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முல்லை மாவட்டத்தை சேர்ந்த வட மாகண உறுப்பினர் கௌரவ ரவிகரனுக்கும் முஸ்லீம் மக்களை பிரநிதுத்துவப்படுத்தும் முல்லை வடமாகாண உறுப்பினர் ஜெனோபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் ரவிகரனுடன் கடும்தொனியில் வாக்குவாதத்துடன் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கூட்டத்தின் இடைநடுவே முதல்வர்; வெளிநடப்பு செய்தார்.

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21728

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் பெரும்பான்மையுடனும் இணங்கி போகவேணும் சிறுபான்மையுடனும் இணங்கி போகவேணும் அப்ப தான் 13 திருத்த சட்டமும் அரசியல் தீர்வு தமிழ்மக்களுக்கு கிடைக்கும்....

19 hours ago, நவீனன் said:

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு செய்ததினால் இவர்கள் பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி கொடுத்ததை தவிர சாதித்தது என்ன 

உள்வீட்டு பிரச்சனைகளை மேசையில் தீர்க்க முடியாதவர்கலெல்லாம்     ஜனநாயகவாந்திகள் // உருப்பட்ட மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

வெளிநடப்பு செய்ததினால் இவர்கள் பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி கொடுத்ததை தவிர சாதித்தது என்ன 

உள்வீட்டு பிரச்சனைகளை மேசையில் தீர்க்க முடியாதவர்கலெல்லாம்     ஜனநாயகவாந்திகள் // உருப்பட்ட மாதிரித்தான்.

காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்ல முதல் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என அமைச்சர் ஒற்றைகாலில் நிற்கிறார்.

மத்திய அரசின் செல்வாக்கு இன்னும் இருக்கு என்ற நிலையில் அமைச்சர் செயல்படுகிறார்....

1 minute ago, putthan said:

காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்ல முதல் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என அமைச்சர் ஒற்றைகாலில் நிற்கிறார்.

வெகு சீக்கிரம் காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்லும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள் // நம்பிக்கைதான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

வெகு சீக்கிரம் காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு செல்லும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள் // நம்பிக்கைதான் வாழ்க்கை.

பொலிஸ் அதிகாரங்களும் என நினைக்கிறேன் tw_cry:...{பிக்குமாருக்கு தெரியாமல்}......இரு(துன்னாலைம மற்றது பல்கலைகழக் மாணவர்கள்) துப்பாக்கி சூட்டு சம்பவ்ங்களிலும் உப பொலிஸ் பரிசோதகர்கள் .....

31 minutes ago, putthan said:

.....

இதையும் நிரப்பலாமே புத்தா :grin:

  • தொடங்கியவர்

முல்லை.அபிவிருத்திக் குழு கூட்டத்திலிருந்து முதல்வர் விக்­கி­ வெளி­ந­டப்பு

(கே.குமணன்)

முல்­லைத்­தீவு மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்டம் நேற்று மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­மையில் முல்­லைத்­தீவு மாவட்ட செய­லக மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற நிலையில் கூட்­டத்தில் ஏற்­பட்ட அமை­தி­யின்­மையை அடுத்து அதில் கலந்­து­கொண்­டி­ருந்த வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் வெளிந­டப்புச் செய்தார்.

இந்த கூட்­டத்தில் அபி­விருத்தி குழுவின்  இணைத்­ த­லைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  மற்றும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­தரன்,டெனிஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான காதர் மஸ்தான், சிவ­சக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, வடக்கு மாகா­ண­ச­பையின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

இந்­நி­லையில் முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் பகு­தியில் முஸ்லிம் குடி­யேற்றம் அமைக்கும் விவ­காரம் தொடர்­பான விவாதம் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், முல்லை. மாவட்ட மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்­றிய நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்தார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒட்­டு­சுட்டான் கூழா­மு­றிப்பு பகு­தி­யில் ­முஸ்லிம் குடி­யேற்றம் ஒன்­றினை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­னேற்­பா­டுகள் நடந்­தன. 

அன்­றைய தினம் அப்­பி­ர­தேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்­பினை தெரி­வி­த்தி­ருந்­தார்கள். அந்­த­வ­கையில் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்பு கூட்­டத்தில் அது தொடர்­பான விடயம் விவா­த­த்துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. 

முல்லை. மாவட்­டத்தை சேர்ந்த வட மாகாண உறுப்­பினர் ரவி­கரன் முஸ்லிம் மக்­களை பிர­திநிதித்­துவப்படுத்தும் முல்லை. வட­மா­காண உறுப்­பினர் ஜெனோபர் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில், அபி­வி­ருத்திக் குழு இணைத் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ரவி­க­ர­னுடன் கடும்­தொ­னியில் வாக்­கு­வா­தத்­துடன் ஈடு­பட்­டி­ருந்தார். இந்நிலை­யி­லேயே கூட்­டத்தின் இடை நடுவே முதல்வர் வெளி­ந­டப்பு செய்தார். கூட்­டத்தில் பங்­கு­பற்­றிய வட­மா­கண அமைச்சர் திரு­மதி அனந்தி சசி­த­ரனும் வெளி­ந­டப்பு செய்­தி­ருந்தார். 

அதா­வது 1953 ஆம் ஆண்டு முல்லை. மகா­வலி அபி­வி­ருத்­தி திட்­டத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­போது வரையில் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. குறிப்­பாக 136 குடும்­பங்­க­ளுக்கு கரைது­றைப்­பற்று பிர­சேத செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட கூழா முறிப்பு பகு­தியில் இவர்­க­ளுக்கு அக்­கா­லத்தில் தலா 4 ஏக்கர் வீதம் வழங்­கப்­பட்ட காணிகள் உள்­ளன. 

2016ஆம் ஆண்டு அந்த பேர்மிட் காணி­களை மீண்டும் வழங்­கு­வ­தற்­கான அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் தற்­போது வரையில் அது­ கு­றித்த நட­வ­டிக்­கைகள் தாம­த­மா­கவே உள்­ளன. நாம் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் இல்லை. 

ஆனால் இந்த மக்­களின் குடி­யேற்­றத்­தினை முதலில் மேற்கொள்ளுங்கள் என்று தான் கோருகின்றேன். இதில் அரசாங்க அதிபர் ஏன் நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்கின்றார் என்று இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 

இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியிலேயே முதல்வர் வெளிநடப்புச் செய்துள்ளார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-11#page-1

  • தொடங்கியவர்

முல்லைத்தீவு காணிச் சர்ச்சை : அனல் பறந்த அநாகரீக வார்த்தைகள்

முல்லைத்தீவு காணிச் சர்ச்சை : அனல் பறந்த அநாகரீக வார்த்தைகள்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்பு குழுவின் சந்திப்பில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

முதலமைச்சரைத் தொடர்ந்து வட மாகாணத்தின் புதிய அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரனும் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

முஸ்லீம் மக்களுக்கு காணி வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணியைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் முல்லைத்தீவு கூழாமுறிப்புப்பகுதிக்கு சென்று காணிகளை பார்வையிட்டமை தொடர்பில் நேற்று முற்பகல் 11.30 க்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது  மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கும்  இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிசாட் பதியூதின் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது.

இதனையடுத்து கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திய இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இடைநடுவில் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து வடக்குமாகாண சபையின் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 84 தமிழ் குடும்பங்களுக்கும் 902 முஸ்லீம் குடும்பங்களுக்கும் 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்க முற்பட்டவேளை இருதரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்  ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 548 முஸ்லீம் குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு  காணி கச்சேரிகள்  வைக்கப்பட்டு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மக்களுக்கான காணி விடயத்தில் எந்த அக்கறையும் செலுத்தவில்லையென்றும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலையம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளை கையப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடித்தொழில், காடழிப்பு போன்ற விடயங்களில் எந்தவித கரிசனைகளும் காட்டாத அமைச்சர் இந்த விடயத்தில் மாத்திரம் அக்கறை செலுத்துவது பொருத்தமற்ற ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராஜா ரவிகரனுக்கும் ஜெனோபர் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோருக்கும் இடையில் சுமார் 57 நிமிடங்களுக்கு மேல் நீடித்த கடும் கருத்து மோதல்கள் வாய்த்தக்கமாக மாறியதுடன், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும்  பயன்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களது வாழ் வாதாரத் தொழில்கள் குறித்து எந்தவித கரிசனைகளும் காட்டாத அரச தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெளியிடங்களில் இருந்து வருகின்ற பெரும்பான்மையினத்தவர்களுக்கு அனைத்தையும் வழங்கி வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்கள் சமூகம் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் இவ்வாறான பராபட்சம் காட்டுவதை அதிகாரிகளும் அரச தரப்பு அரசியல் வாதிகளும் தவிர்த்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுகின்ற கரிசனைபோல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு காட்டவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா   ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/CM-walked-out-from-Coordination-Committee-Meeting

13 minutes ago, நவீனன் said:

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 84 தமிழ் குடும்பங்களுக்கும் 902 முஸ்லீம் குடும்பங்களுக்கும் 270 சிங்களக் குடும்பங்களும் காணிகளின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விகிதாசார அடிப்படையில் காணிகளை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்க முற்பட்டவேளை இருதரப்பினருக்கும் இடையில் கருத்து மோதல்  ஏற்பட்டுள்ளது.

மிகவும் நியாயமான கோரிக்கை / எதிர்பார்ப்பு இது. நியாயமான ரீதியில் விகிதாசார முறையில் பங்கிடப்படுமாயின் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கிடைக்க இருக்கும் காணிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைவடையும் என்பதால் வழக்கம் போன்று அடாத்தாக நடந்து கொள்கின்றனர் முஸ்லிம் / சிங்கள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இதற்கு முல்லை அரச அதிபரும் உடந்தை (அப்ப தானே பதவியுயர்வு மேலும் கிடைக்கும்).

இப்படியான விடயங்களிலாவது தமிழ் அரசியல்வாதிகள் ஒரே குரலில் ஒருமித்து எதிர்ப்பு காட்ட வேண்டும். விக்கினேஸ்வரன் / த.தே.கூ மட்டுமன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னனி, சனநாயகத்துக்கான போராளிகள் மற்றும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். வெறும் கட்சி அரசியலுக்காக இவர்கள் பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம்

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கூட சமாளிக்க முடியாமல் இடையில் விட்டு வெளியே போகின்றார். இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்tw_angry:

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

6 hours ago, நிழலி said:

மிகவும் நியாயமான கோரிக்கை / எதிர்பார்ப்பு இது. நியாயமான ரீதியில் விகிதாசார முறையில் பங்கிடப்படுமாயின் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கிடைக்க இருக்கும் காணிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைவடையும் என்பதால் வழக்கம் போன்று அடாத்தாக நடந்து கொள்கின்றனர் முஸ்லிம் / சிங்கள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இதற்கு முல்லை அரச அதிபரும் உடந்தை (அப்ப தானே பதவியுயர்வு மேலும் கிடைக்கும்).

இப்படியான விடயங்களிலாவது தமிழ் அரசியல்வாதிகள் ஒரே குரலில் ஒருமித்து எதிர்ப்பு காட்ட வேண்டும். விக்கினேஸ்வரன் / த.தே.கூ மட்டுமன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னனி, சனநாயகத்துக்கான போராளிகள் மற்றும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். வெறும் கட்சி அரசியலுக்காக இவர்கள் பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம்

902 முஸ்லிம் குடும்பங்கள் என்றுன்குறிப்பிடபட்டுள்ளது, இவர்கள்  அனைவரும் முல்லைத்தீவை சேர்ந்தவர்களா?? நான் அறிந்த வரையில் முள்ளியவளை,தண்ணியூற்று பிரதேசங்களே முஸ்லிம் வாழ்ந்து வந்த இடங்கள் அங்கே எல்லாம் குடியேறி விட்டார்கள் அப்படியாயின் இந்த 902 குடும்பங்கள் யார்???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

சரியான பதில் பச்சை வரும்போது குத்த வேணும் cv இனிமேல் எச்சரிக்கையாக இருக்கணும் சிவராம் இவர்களுடன் முரண்பட்டு நடந்த கதை தெரியும் எத்தனையோ முறை இணக்கமான எல்லாம் இவர்களால் புறம் தள்ளபட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎07‎/‎2017 at 8:04 PM, Athavan CH said:

புணர்வாழ்வுக் கழக பெண் உறுப்பினர்களை கூட்டுப் பலாத்காரம் செய்து , அணைவரையும் கொடுமையாகக் கொன்று ஈனச் செயல் புரிந்த சம்பவங்களுக்கு தலைமையேற்ற பிள்ளையான் , கருணா போன்றவர்களை முதல்வராக ஏற்க விருப்பமுடையவர்களுக்கு சி .வி யைப் பார்த்து  "இவர் எல்லாம் ஒரு முதலமைச்சர்" எனத் தான் கேட் கத் தோன்றும்

ஒரு தலையாட்டி பொம்மையை விட இவர்கள் எவ்வளவோ மேல்...ஒரு பிழை செய்தாலும் பத்து நன்மையாவது செய்வார்கள்/செய்கிறார்கள்...சீவியை மாதிரி தலையை ஆட்டிக் கொண்டுக் பதவிக்காக நாற்காலியில் இருக்கவில்லை.
 
ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் வக்கிரகம் புரிந்து கொண்டது. மன்னிக்க முடியாத குற்றம்... ஆனால் கருணாவோ,பிள்ளையானோ இதில் நேரே சம்மந்தப்பட்டதிற்கு ஆதாரம் இல்லை...ஆனால் இதில் வந்து அவர்களை பிழை சொல்லுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அவர்கள் இருவரும் தலைவரின் பாசாறையில் வளர்ந்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள்.
 
கருணாவுக்கோ,பிள்ளையானுக்கோ தூக்குத் தண்டனை கொடுத்தால் அவர்களை உருவாக்கிய தலைவரை நடு றோட்டில நிக்க வைச்சுக் கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும்.
 
பி;கு; இங்கு ஓடி வந்து இவர்கள் செய்த பிழைக்கு தலைவர் எப்படி  பொறுப்பாவார் என்டு அழ வேண்டாம். அதையே நானும் கேட்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. இவர்கள் இருவரினதும் கீழ் இருந்தவர்களால் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இவர்கள் இருவருமே பொறுப்பு.

நீங்கள் கூறுவது போல நீங்கள் பிழைவிட்டால் உங்கள் அப்பாவையோ அல்லது அம்மாவையோ நடுரோட்டில் வைத்து கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

வர வர தமிழ்நாட்டு அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டினம் போல tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் விடுதலைப்புலிகளிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. இவர்கள் இருவரினதும் கீழ் இருந்தவர்களால் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இவர்கள் இருவருமே பொறுப்பு.

நீங்கள் கூறுவது போல நீங்கள் பிழைவிட்டால் உங்கள் அப்பாவையோ அல்லது அம்மாவையோ நடுரோட்டில் வைத்து கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும். 

மீரா, கருணாவும்,பிள்ளையானும் அவர்கள் பெற்றோட இருந்ததை விட இயக்கத்தில் இருந்தது தான் அதிகம். அதுவும் பிள்ளையான் 8 வயசில இயக்கத்திற்கு வந்திட்டார்...யோசித்துப் பாருங்கள் இவர்களை உருவாக்கினது யாரு?
 
வழிக்கு வந்திட்டீங்கள் ,இதைத் தான் நானும் சொல்கிறேன்...ஒருவர் செய்கின்ற குற்றங்களுக்கு எப்படி பெற்றோரை குற்றவாளியாக்க முடியாது இல்லையா? அப்படியாயின் கருணாவும்,பிளளையானும் மட்டும் தாங்கள் கீழ் இருந்தவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் இல்லையா?    
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

அவர்கள் இருவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நான் கூறவில்லையே, அவர்கள் இருவரும் பொறுப்பேற்க வேண்டும். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டும்.

திரு. பிரபாகரன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அதுதான் இவர்கள் இருவருக்குமான இடைவெளி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

ஏன் தலைவர் தன்னுடன் பாலியல் வக்கிரகம் பிடித்த சிலரை வைத்திருக்கவில்லையா?...போங்க சார் போங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஏன் தலைவர் தன்னுடன் பாலியல் வக்கிரகம் பிடித்த சிலரை வைத்திருக்கவில்லையா?...போங்க சார் போங்கோ

மூதூர் சம்பவம் செய்தவர்கள் போன்று ஒருத்தரும் இருந்ததாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

மூதூர் சம்பவம் செய்தவர்கள் போன்று ஒருத்தரும் இருந்ததாக தெரியாது.

மூதூர் சம்பவத்தை போல ஒரு சம்பவம் புலிகளால் நடத்தப்படவில்லை...ஆனால் பாலியல் வக்கிரமனம் கொண்டவர்கள் அவர்கள் எனத் தெரிந்தும் தலைவர் சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டார்..

இங்கு எதெற்கெடுத்தாலும் கருணாவை குற்றம் சாட்டும் மருதர் போன்ற சிலர் தங்கட தலைவரையும் ஒருக்கால் நினைச்சுப் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

மூதூர் சம்பவத்தை போல ஒரு சம்பவம் புலிகளால் நடத்தப்படவில்லை...ஆனால் பாலியல் வக்கிரமனம் கொண்டவர்கள் அவர்கள் எனத் தெரிந்தும் தலைவர் சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டார்..

இங்கு எதெற்கெடுத்தாலும் கருணாவை குற்றம் சாட்டும் மருதர் போன்ற சிலர் தங்கட தலைவரையும் ஒருக்கால் நினைச்சுப் பார்க்க வேண்டும்

இப்போது தலைவரோ புலிகளோ இல்லை, 

ஆனால் இவர்கள் இருவரும் மூதூர் சம்பவம் செய்தவர்களும் இருக்கிறார்கள். உங்கள் அண்ணரிடம் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கலாமே?

".........

இதே போல் தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக மாமனிதர் ஜோசெப் பரராசசிங்கம், பேராசிரியர் தம்பையா, ஊடகவியலாளர் G.நடேசன் இவர்களையும்   பலிவாங்கினார்  கருணா.

...........

. கருணா குழு  29.01.2006 அன்று வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக்குக்  கழகத்தைக் பணியாளர்கள் பயணித்த வாகனத்தைக் கடத்தியது வட்டக்கட்சியைச் சேர்ந்த   செல்வி .பிறேமினி தனுஸ்க்கோடி  என்ற யுவதி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளானார். கருணாவின் மகள் ...... வயதை அடையும்போது தான் இந்தக் கொடூரத்தைக் செய்தமை குறித்து சிந்திப்பார்.    

  நீண்ட காலம் அவருக்கு நண்பனாக இருந்த நீலனைக் கொல்ல முடிவெடுத்தவர்க்கு இந்த விடயத்தைக் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . கருணாவின் பிரச்சினைக்கு பிறகு மட்டக்களப்பில் ஒருவர் சொன்னார் அம்மானுக்கு ஒரேயொரு தெரிவு தான் இருக்கும் எந்த நேரமும் போதையில் இருப்பதுதான் அது. அவருடைய மன சாட்சி அவரைக் குத்திக் கொண்டுத்தான் இருக்கும். 

................."

http://www.battinaatham.com/description.php?art=9292

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.