Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ்

Featured Replies

போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ்

பொலி­ஸார் சுட்­ட­தில் மற்­றொரு உயிர் வடக்­கில் பறிக்­கப்­பட்­டுள்­ளது. வட­ம­ராட்சி கிழக்­கில் நடந்த சம்­ப­வத்­தில் துன்­னா­லை­யைச் சேர்ந்த யோக­ராசா தினேஸ் (வயது 24) என்ற இளை­ஞர் கொல்­லப்­பட்­டுள்­ளார்.

ஒரு வருட காலத்­திற்­குள் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் நபர் ஒரு­வர் கொல்­லப்­பட்ட இரண்­டா­வது சம்­ப­வம் இது. இதற்கு முன்­னர் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர்­கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தி­லும் துன்­னாலை இளை­ஞர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தி­லும், தப்­பிச் செல்­வ­தற்கு அவர்­கள் முயன்­ற­போது அவர்­களை நோக்­கித் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது என்றே பொலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவ­சர காலச் சட்­டம் நடை­மு­றை­யில் இல்­லாத நிலை­யில், எழுந்­த­மா­னத்­தில் உட­ன­டி­யாக முடி­வெ­டுத்து துப்­பாக்­கிச் சூடு நடத்­தும் அதி­கா­ரம் பொலி­ஸா­ருக்­குக் கிடை­யாது.

ஆகக் குறைந்­தது உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஒரு­வ­ரின் உத்­த­ர­வைப் பெற்ற பின்­னரே சந்­தே­க­ந­பர்­களை நோக்­கிச் சூடு நடத்த முடி­யும்.

இரண்டு கொலைச் சம்­ப­வங்­க­ளும் நடத்­தி­ருக்­கும் வேகத்­தைப் பார்க்­கும்­போது, சம்­பவ இடத்­தி­லி­ருந்த பொலி­ஸார் உய­ர­தி­கா­ரி­க­ளின் உத்­த­ர­வைப் பெற்­றுச் செயற்­பட்­டி­ருப்­பார்­கள் என்று தோன்­ற­வில்லை. அதி­கா­ரத்­தைக் கையில் எடுத்­துக்­கொண்டு அவர்­கள் செயற்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்றே எண்­ணத் தோன்­று­கின்­றது.

இது 30 ஆண்டு கால­மா­கப் போர்ச் சூழ­லுக்­குள் இருந்த பொலி­ஸார், அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தின் கீழ் செயற்­பட்ட தமது உள­வி­ய­லில் இருந்து வெளியே வர­வில்லை என்­ப­தையே எடுத்­துக் காட்­டு­கி­றது. போர்ச் சூழ­லுக்­கும் அமை­திச் சூழ­லுக்கு­மான காலத்­தின் வேறு­பாட்­டைப் புரிந்­து­கொள்ள அவர்­கள் தவ­றி­ய­தன் வெளிப்­பாடே தொடர்ந்­தும் இத்­த­கைய கொலை­கள் இடம்­பெ­று­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

30 வருட காலப் போரின்போது, தீவிர சண்டை மனோ நிலைக்­குத் தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­வர்­கள் பொலி­ஸார். தரைப் படை மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை என்­ப­வற்­றுக்­குப் புறம்­பாக பொலி­ஸா­ரும் முழு­மை­யாக ஆயு­த­தா­ரி­க­ளாக்­கப்­பட்டு எந்த நேரத்­தி­லும் ஒரு தாக்­கு­த­லுக்­குத் தயார் நிலை­யில் இருக்­கும் வகை­யில் தயார்ப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் அவர்­கள்.

சட்­டம் ஒழுங்­கைப் பேணு­வ­தன் பெய­ரால் அவர்­கள் தங்­கள் ஆயு­தங்­களை உன­டி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை அவர்­க­ளுக்கு அவ­ச­ர­கா­லச் சட்­டம் வழங்கி வந்­தது. அப்­போது சந்­தே­க­ந­பர்­க­ளை இப்­ப­டிச் சுட்­டு­விட்டு, விடு­த­லைப் புலி­கள் இயக்க நபர் என்று பட்­டம் சூட்­டி­வி­டு­வது இல­கு­வாக இருந்த கார­ணத்­தால், அன்று பொலி­ஸா­ரின் இந்த நடை­முறை பிரச்­சி­னைக்கு உரி­ய­தாக இருக்கவில்லை.

ஆனால், போர் முடிந்த பின்­ன­ரும் பொலி­ஸார் அதே உள­வி­ய­லு­டன் தொடர்­வதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. குற்­றங்­கள் தடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தற்­குப் பொலி­ஸார் இறுக்­க­மான, காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்­ப­தி­லும் தவ­றில்லை. அதற்­காக ,தாம் நினைத்­த­படி உயிர்­க­ளைப் பொலி­ஸார் பறித்­தெ­டுப்­பதை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அது உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

துன்­னா­லைச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­பட்­டி­ருக்­கும் பொலி­ஸா­ரில் ஒரு­வர் போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் சேவை­யில் இணைந்­த­வர். அவரே சுடு­மாறு உத்­த­ர­விட்­டார் என்று கூறப்­ப­டு­கி­றது. இது, போர் உள­வி­யல் எப்­படி அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளி­ட­மும் கடத்­தப்­ப­டு­கி­றது என்­ப­தற்­கான சான்று.

இந்த நிலையை மாற்­றி­ய­மைக்க, போர் உள­வி­ய­லில் இருந்து பொலி­ஸாரை வெளியே கொண்டு வரு­வ­தற்­கான செயற்­றிட் டங்­கள் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­டன் , ஒட்­டு­மொத்த பொலிஸ் அமைப்­பும் மறு­சீ­ர­மைப்­புக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வேண்­டும். அப்­போதே மக்­க­ளுக்கு நெருக்­க­மான ,அவர்­கள் நலன் சார்ந்த பொலிஸ் துறை­யைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும்.

http://uthayandaily.com/story/11148.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதம் இல்லாத இடத்தில் யாரையுமே எழுந்தமானத்தில் சுட முடியாது.

பயங்கரவாதம் முடிந்து கிட்டத்தட்ட 8வருடங்களாகின்றது.
அப்படியிருந்தும் பொலிசார் அதிலிருந்து மீளவில்லையாம்.
மண்ணாங்கட்டி.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களும் உளவியலில் இருந்து மீளவில்லை என்று கூறி நாலு பொலிசுக்கு சாத்தினால் என்ன நடக்கும்??

செய்வதையும் செய்து விட்டு உளவியலாம் !!!!tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டதும் அதே ஊரை சேர்ந்த தமிழ் போலிஸ் என்று படித்தது போல் இருக்கு .

2 hours ago, பெருமாள் said:

சுட்டதும் அதே ஊரை சேர்ந்த தமிழ் போலிஸ் என்று படித்தது போல் இருக்கு .

விடுதலைப்புலிகளின் காவல்துறையின் பின்னர் தமிழ் போலீஸ் என்று தற்போது எதுவுமே இல்லை!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் தமிழின அழிப்பில் ஈடுபடும் ஓர் அலகாகவே தமிழ் மண்ணை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள் உள்ளனர்.

அதில் நீண்டகாலமாக சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரதுடன் இயங்கிய ஈபிடிபி, புளட், டெலோவின் ஒருபிரிவு, ஈபிஆர்எல்எப் இன் ஒருபிரிவு முதலிய ஒட்டுண்ணிக்குழுக்களில் இருந்த தமிழ் சமூகவிரோதிகள் பலர் இணைந்து செயற்படுகின்றனர்.

இந்தவகையில் பலரை பெயரிடலாம். உதாரணத்துக்கு வித்தியாவின் மிலேச்சத்தனமாக படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களுக்கு உதவிய சிங்கள-பௌத்த போலீஸ் துறையில் இருக்கும் ஸ்ரீகஜன் என்ற சமூகவிரோதி, தற்போது அக்கராயன்குளம் சிங்கள-பௌத்த போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் மயூரன் என்ற சமூகவிரோதி, விதூஷாவின் சம்பவத்தில் சிங்கள-பௌத்த இராணுவ போர்குற்றவாளிகளுடன் சேர்ந்து  நாடகமாடி  கொலையுண்ட சமூகவிரோதி எனப் பலர் உண்டு.

தமிழ் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் போர்க்குற்றவாளிகளான முப்படையும்  போலீசும் வெசாக், பொசோன் போன்ற சிங்கள-பௌத்த விழாக்களை மட்டும் கொண்டாடுவதாலும், தாம் ஆக்கிரமித்த சகல இடங்களிலும் ஆக்கிரமிச் சின்னமான புத்தர் சிலைகளை அமைத்திருப்பதாலும்,  சிங்கள பகுதிகளில் அனர்த்தங்கள் நடக்கும் போது தமிழ் மண்ணில் மட்டும் மக்களை அச்சுறுத்தி நிவாரப்பொருட்களை சேகரிப்பதாலும், இதைப் போன்ற பல காரணங்களாலும் அவர்கள் அனைவரும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் குழுக்களாகவே கருத முடியும்.

உண்மையை, யதார்த்தத்தை ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக கூறவேண்டும் என்றால் அவர்கள் அனைவரையும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் குழுக்களாகவே குறிப்பிடப்பட முடியும். நாகரிகம் என்ற கொஞ்சமும் பொருத்தமற்ற மாயையில் சிக்கி அவர்களை அங்கீகரிக்கப்பட்ட முப்படை,  போலீஸ் என நினைப்பது, கருதுவது கடைந்தெடுத்த முட்டாள் தனமாகும்.

இவ்வளவு இழப்புகளையும் சந்தித்த தமிழினம் இன்னமும் நீதியை பெறமுடியாமல் தவிப்பதற்கு இது போன்ற முட்டாள் சிந்தனைளும் முக்கியதொரு காரணமாக  உள்ளது.

6 hours ago, போல் said:

மிகவும் எதார்த்தமான கருத்து!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.