Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

Featured Replies

கெலி தாக்குதல் மூலம் இனி ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கபோகிறது. இனி அரசு கெலியில் அங்க காட்டுறன் இங்க காட்டிறன் எல்லாத்தையும் பிடிச்சிட்டம் என்று வெளி நாட்டுக்காறர்களை கூப்பிட்டால் ஐயோ ஆளை விட்டாகாணும் கூறப்போகிறர்கள்.

அல்லது புலிகளுடன் அனுமதி கேட்டு தான் வரவேண்டிய சூழ் நிலை.

  • Replies 152
  • Views 22.4k
  • Created
  • Last Reply

இதைத்தான் விளக்கமாக தமிழ்தம்பியும் நானும் கூறியிருந்தோம்...

குறுக்கால குளப்பியதால் நீண்ட நாட்களின் பின் மோகனை தரிசிக்க வாய்புகிடைத்தது B) :huh: நன்றி

பெரிய அரசியல் ஆய்வாளர்கள் :P .நீங்களே சுய வாக்குமூலம் கொடுக்காமல் கொஞ்சம் பொறுமையாய் இருங்க

மேலதிக படங்கள்

ஆட்லறி தாக்குதலின் பின் சிறீ லங்கா இராணுவ கவச வண்டியில் ஏற்றப்பட்ட்ச் செல்லப்படும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

captsgebbg0927020716431hc6.jpg

காயப்பட்ட இத்தாலிய தூதுவர்

captxga10302271144sriladi6.jpg

r3226490633oe5.jpg

r1471741006sn6.jpg

captxga10502271156srilayq5.jpg

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

ட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்

சொன்னது பிபிஸி சொறிஓசை.

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை அற்புதம்!

மொத்தத்தில் புலிகள் ஒற்றை அறிக்கை வாயிலாக கிழக்கு இன்னமும் சிங்களத்தின் முளுப் பிடியில் இல்லை, தமிழர் தாயகத்தில் ஒரு தமிழ் அரசு இயங்குகின்றது, தமிழ் அரசு சர்வதேச விதிகளின் படி நடக்கிறது முதலாய பல செய்திகளைத் திறம்படக் கூறியிருக்கிறார்கள். அற்புதம்!

சொல்ல வேண் டிய விடையத்தை தத்துவமாக எடுத்து இயக்கி இருக்கின்றார் இளந்திரையன் நன்றி விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளருக்கு

புலிகள் யார் வருகிறார்கள் என்று தெரிந்து தான் அடித்தார்கள். அப்படி அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் என்று சிலரால் விசமத்தனமாக ஒரு கருத்தியல் பரப்பப்படுகிறது.

இது தோலுரிக்கப்பட்ட சிறீலங்காவின் கபடத்திற்கு makeup போட எடுக்கப்படும் துரோக முயற்சி.

ஐயா எங்கட புலிகளுக்கு எல்லாம் தெரியும்! புலிகளின் புலனாய்வு வலையமைப்பு எப்படிப் பட்டது எண்டு தெரியும் தானே??? ஐயா தெரிஞ்சபடியால தான் அமரிக்கனும், இத்தாலிக்காரனும் சிறு சிறு சிராய்ப்போட தப்பீட்டினம்.

அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் எண்டு நான் அடித்துச் சொல்லுறன்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka, ferito ambasciatore italiano in attacco ribelli

COLOMBO, Sri Lanka (Reuters) - L'ambasciatore italiano nello Sri Lanka Pio Mariani è rimasto leggermente ferito ieri, quando una delegazione di diplomatici, guidata dal ministro per i Diritti umani dell'isola, è stata attaccata dai ribelli delle Tigri Tamil nella zona orientale dell'isola.

Lo hanno riferito funzionari, aggiungendo che assieme al diplomatico italiano è rimasto leggermente ferito anche l'ambasciatore Usa Robert Blake.

In mattinata il sottosegretario agli Affari esteri Gianni Vernetti ha contattato telefonicamente Mariani per avere ulteriori informazioni sul suo stato di salute e per raccogliere le prime valutazioni sull'attacco in cui il diplomatico è stato coinvolto.

Vernetti, su incarico del Ministro Massimo D'Alema, resterà in costante contatto con l'ambasciata italiana per seguire gli sviluppi dell'attacco di oggi.

Funzionari sanitari nel quartiere orientale di Batticaloa che hanno curato Mariani, hanno detto che l'ambasciatore italiano ha un piccolo frammento di scheggia nella testa ma che si tratta di una ferita non grave.

Il collega tedesco Jurgen Weerth, che in un primo momento si credeva fosse rimasto ferito, è invece illeso, hanno detto le stesse fonti.

L'ambasciatore americano è rimasto ferito alla gamba probabilmente da schegge o pietre, secondo quanto detto dall'esercito, ma non è stato portato in ospedale e la sua ambasciata ha confermato che sta bene e che non è stato ferito gravemente.

Si ritiene che questo sia il primo attacco contro inviati dell'Occidente da quando i ribelli hanno cominciato a combattere per l'indipendenza dello Stato nel 1983.

I ribelli delle Tigri Tamil hanno detto che si scusano per il fatto che diplomatici occidentali siano stati feriti dal loro fuoco, accusando però l'esercito di aver condotto sulla loro strada i diplomatici.

L'attacco è stato messo a segno quando l'elicottero che trasportava il ministro per la Gestione delle emergenze e dei Diritti umani, Mahinda Samarasinghe, ma anche gli ambasciatori di Usa, Unione Europea, Canada, Germania e Francia, stava atterrando nella provincia orientale di Batticaloa, nell'ambito di una missione umanitaria.

"A causa dei colpi sparati dai ribelli delle Tigri Tamil, due elicotteri hanno subito qualche danno (...) ma gli ambasciatori degli Usa, dell'Italia e della Germania sono riusciti a scendere e hanno riportato soltanto qualche ferita", ha detto il colonnello Upali Rajapaksa della Sicurezza nazionale.

Il ministro - che assieme agli ambasciatori stava visitando la zona in una missione di ricognizione per migliaia di rifugiati - è rimasto illeso, secondo quanto riferito da funzionari dell'ambasciata.

Funzionari dell'ambasciata italiana hanno preferito non rilasciare alcun commento mentre l'ambasciata Usa conferma che Blake sta bene.

L'attacco giunge dopo mesi di scontri a fuoco, raid aerei, scontri via mare e via terra e agguati.

http://it.news.yahoo.com/27022007/58-56/sr...co-ribelli.html

வளமையா சமாதானம் எழுதின பிறகுதான் நீங்க வாறநீங்க.

இந்த முறை எவ்வளவோ பொறுத்திருந்து பார்த்தும் அவர் வரேல்ல எண்ட ஆதங்கத்தில எழுதின மாதிரி கிடக்கு?

:huh:

பாம்பின் கால் பாம்பு அறியும், சமாதானத்துக்கு இன்னும் மேலிடத்தில இருந்து உத என்ன மாதிரி திரிக்க வேணும் எண்டு ஓடர் வரேல்லப் போல. :huh:

அதோட ஒரு தனியார் நிறுவனதின்ர கெலியிம் சேதமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள வாசகர்களின் கருத்துக்களை இன்று இரவு வரை அவதானித்த பின்னரே சம்பவம் பற்றி அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிடவுள்ளதாக நம்பிக்கையில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். :huh:

யாழ் களம் ஈழத்தமிழர்களின் உத்தியோக பூர்வ தகவல் களமாக எல்லோ உலகத்தில கருதினம். அதிலும் இங்குள்ள ஆய்வாளர்கள் உலக தரத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை சிலர் அடிக்கடி மறந்திடுறார்கள்..! எனி அவதானமா வையுங்கோ கருத்தை.

அடிச்சு அறிக்கை விட்டு விசயம் ஓஞ்சிட்டுது. ஜஸ்ட் அக்சிடன்ட் என்றாச்சு. ஆய்வாளர்களை அக்சிடன்டையே சிறீலங்கா அரசின் திட்டமிட்ட செயல் என்றால் சிறிலங்கா திட்டமிட்டதை புலிகள் நிறை வேற்றினர் என்ற மாதிரியொல்லோ தமிழர்களின் சர்வதேச ஊடகமான யாழ் களம் செய்தி விடுகுது..! :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் ஐயா ஓடிவருவார்.. வந்து ஐயையோ, வன்னியால் மக்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகின்றார்கள் B2 உம் B52 உம் வந்து குண்டுமாரி பொழியப்போகின்றது என்பார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளை தொடுவானே கவலை படுவனேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த அசைக்க முடியாத தும்பிக்கையின் பெயரால் விதம் விதமாக உளறிறவையால் தான் அரைவாசிப் பிரச்சனை.

உதுகளுக்கு இடங்குடுத்து அங்கீகரித்தால் எதிர்காலத்தில் அதுவே எதிரிகளிற்கு வசதியான வழிகளை கொடுக்கும் திட்டமிட்டு குழப்பத்தை விளைவிக்கவும் பிரச்சாரத்தையும் முடுக்கி விடவும்.

அவளை தொடுவானே கவலை படுவனேன்

இவரை யாரோ கேட்டவையே கருத்துச் சொல்ல சொல்லி. பண்டிக்கூட்டங்கள்

quote name='வினித்' date='Feb 27 2007, 08:51 PM' post='263921']

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

ட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்

சொன்னது பிபிஸி சொறிஓசை.

யாழ் களம் ஈழத்தமிழர்களின் உத்தியோக பூர்வ தகவல் களமாக எல்லோ உலகத்தில கருதினம். அதிலும் இங்குள்ள ஆய்வாளர்கள் உலக தரத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை சிலர் அடிக்கடி மறந்திடுறார்கள்..! எனி அவதானமா வையுங்கோ கருத்தை.

:huh:

களுகுக்கண்களுடன் பலர் அவதானிக்கிறார்கள்.

யாவரும் அறிந்தததே.

வெளிநாட்டு தூதுவர்களை கொல்ல சிறீ லங்கா சதி!

புதன்கிழமை 28 பெப்ரவரி 2007 ஜோசெப்

வெளி நாட்டு தூதுவர்களை கொலை செய்து அப்பழியை புலிகள் மீது போட முனைந்த திட்டம் மயிரிழையில் பிழைத்தது. இன்று காலை அமெரிக்க மற்றும் இத்தாலிய நாட்டு தூதுவர்களை தமது உலங்கு வானூர்தியில் மட்டு நாகருக்கு அழைத்து சென்ற சிறீ லங்கா விமானப்படை அவர்களின் உயிரை பலிகொடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்தள்ளதாக தெரிய வருகிறது. இந்த வெளி நாட்டு தூதுவர்களுடன் சில ஐக்கிய நாட்டுப் பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர். சிறீ லங்காவிற்கும் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப் பிரகாரம் நடக்க தவறிய சிறீ லங்கா அரசின் மற்றுமொரு சதித்திட்டம் இதுவென பலரும் இது பற்றி கருத்து தெரிவித்தள்ளனர். சிறீ லங்கா ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சிறீ லங்கா ஜனாதிபதி அவர்கள் மட்டுநகருக்கும் வாகரைக்கும் விஜயம் செய்த போது இந்த தூதுவர்களை அழைத்துச் செல்லவில்லை. ஆனால் இவர் நாட்டில் இல்லாத சமயத்தில் இந்த நடவடிக்கை எடுத்தமையானது பெருத்த சந்தேகத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று தினங்களாக கிழக்கில் பல இடங்களில் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வந்தனர். இது கிழக்கில் தாம் ஒரு வலிந்த தாக்குதலை நடாத்தும் ஆயத்தமாக இருப்பதை புலிகள் நம்பவேண்டும் என்ற செயற்பாடே இதற்கும் மேலாக கடந்த வாரம் சிறீ லங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா அவர்கள் தாம் வெகுவிரைவில் கிழக்கில் தாக்குதல் நடாத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாது அதி காலையிலிருந்தே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கிய மோட்டார் மற்றும் ஆட்லறி தாக்குதல்களை இராணுவம் அரம்பித்திருந்தது. இவ்வளவு முன்னேற்பாடுகளை நடாத்திய சிறீ லங்கா இராணுவம் இன்று காலை பெருமளவில் பாரிய ஒரு வான்படை தாக்குதலை நடாத்தும் பாணியில் உலங்கு வானூர்திகளை கொண்டு வந்து மட்டுநகரில் இறக்கியது விடுதலைப் புலிகளுக்கு இது மேலும் சந்தேகத்தை உண்டாக்கியது. இந்த நடடிவக்கையை உடன் தடுக்கவேண்டிய ஒரு இராணுவ நகர்வு விடுதலைப் புலிகளிற்கு ஒரு அத்தியாவசிய வேவையானது. இதனால் விடுதலைப் புலிகள் ஒரு தற்காப்பு தாக்குதலை நடாத்த வேண்டிய நிர்ப்;பந்தத்திற்கு வந்தார்கள். இத் தாக்குதல் ஒரு துரதிஸ்டமான செயல் என புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தெரிவித்தள்ளார்.

ஆனால் இந்த இராஜதந்திரிகள் வருகை பற்றி புலிகளுக்கு அறிவிக்காது புலிகள் கிழக்கில் ஒரு சிறு குழுவாகவே உள்ளனர் என்ற இராணுவத்தின் மமதை போக்கே இந்த தாக்குதலுக்கு வழிசமைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முதுகெலும்பை உடைத்து விட்டோம் என்ற சிறீ லங்கா அரசின் கூற்று இங்கு பொய்யாகிப் போனதாகவே இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

நன்றி : நிதர்சனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா எங்கட புலிகளுக்கு எல்லாம் தெரியும்! புலிகளின் புலனாய்வு வலையமைப்பு எப்படிப் பட்டது எண்டு தெரியும் தானே??? ஐயா தெரிஞ்சபடியால தான் அமரிக்கனும், இத்தாலிக்காரனும் சிறு சிறு சிராய்ப்போட தப்பீட்டினம்.

அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் எண்டு நான் அடித்துச் சொல்லுறன்!!!!

தமிழ்தம்பியின் கருத்துக்கள் புதியவர்களுக்குதான் புலிவிசுவாசம் என்ற வேசம் போடும் அதன் உள்நோக்கம் பழகியவர்களுக்கு புரிந்திருக்கும்.

வெவ்வேறு நாட்டு மக்களையும், இந்தியர்களையும் ஒப்பிட்டு நிறைய ஜோக்குகள் உள்ளன. இறுதியில் வித்தியாசமான புத்தியை கொண்டுஇருப்பதன் மூலம் இந்தியர் ஆபத்துக்களிலிருந்து தப்புவதாகவும் முடிக்கப்படும். இங்கும் அவ்வாறே ஏதோ ஒரு புத்திசாலித்தனம் அல்லது நுண்ணறிவைக் கொண்டு இருந்ததன் மூலம் இந்தியத் தூதுவர் அசம்பாவிதத்தினால் பாதிக்கப்படவில்லை! :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா எங்கட புலிகளுக்கு எல்லாம் தெரியும்! புலிகளின் புலனாய்வு வலையமைப்பு எப்படிப் பட்டது எண்டு தெரியும் தானே??? ஐயா தெரிஞ்சபடியால தான் அமரிக்கனும், இத்தாலிக்காரனும் சிறு சிறு சிராய்ப்போட தப்பீட்டினம்.

அடித்து ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள் எண்டு நான் அடித்துச் சொல்லுறன்!!!!

<<<<<

நீங்கள் சொல்வது சரியே! வெள்ளைக்காரனே வியந்து போய்த்தான் பார்த்தானாம்...செய்தித்தொடர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

ட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்

சொன்னது பிபிஸி சொறிஓசை.

அடங்கொக்காமக்கா உவங்கள் இன்னமும் உயிரோட இருக்கிறாங்களோ? :huh::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரியடா அப்பா உந்த வீணி, செருப்பு , முழிப்பு எல்லாம் அழுது வடிஞ்சுதுகள் கிழக்கு முழுதாக விடுபட்டுட்டுது, சும்மா ஒரு நாலஞ்சு பெடியள் தொப்பிக்கல காட்டுக்குள்ல சுத்தினம் என்று. இப்ப கதைய பாத்தால் வந்து விழுந்து இருக்கிறது ஆட்லறி செல்லுகள். அப்ப உவங்கள் நாலஞ்சு பேரும் ஏகேயையும், எல்லெம்யியையும் தூக்கி எறிஞ்சிட்டு ஆளுக்கொரு ஆட்லறியை தோளில தூக்கி அடிச்சுகொண்டு தொப்பிக்கல காட்டுக்குள்ள திருயிறாங்கள் போல இருக்கு, அப்ப ஆட்லறிக்கு தேவையான செல்லுகளை காச்சட்டை பொக்கற்றுகுள்ளேயா கொண்டு திரியிறாங்கள். அப்படி இருந்தாலும் உவ சொல்ல வேணும் புலியள் பலமா இருக்காங்கள் எண்டு, ஏனெண்றா ஆட்லறியை தோளில தூக்கிக்கொண்டு திரியிறது சும்மா விளையாட்டோ? :huh::huh::huh:

அதுசரி உவங்கள் அமெரிக்கன்கள் மோடங்களோடா, சிறீலங்கன் பேச்சை கேட்டு வாயால கதைக்கலாம், செயல் என்று வரேக்க உவயள் தங்கட சொந்த புத்திய பாவிக்கவேணுமெல்லோ, சிங்களவன் மட்டக்கழப்புக்கு வா எண்டவுடன் இழிச்சுகொண்டு வெளிக்கிட்டவங்களோ? சொந்தபுத்தி இல்லாட்டிலும் காசு கொடுத்து வாங்கின கரிநாயிடம் கேட்டிருந்தால் அது சொல்லி இருக்கும் எல்லோ, தொப்பிக்கலகாட்டுக்குள்ள ஆட்லறியை தோளில தூங்கிக்கொண்டு நாலஞ்சு பெடியள் திரியிறத, உவனும் முந்தி பலமான ஆள்தானே பிறகு சிங்கப்பூர் போன நேரம் வேற எல்லாத்தையும் பாக்கவெளிக்கிட்டு எல்லோ பலம்போனது. இழந்த பலத்தைமீண்டும் பெற டாக்டர்மாத்துரு பூதத்திற்ரை போட்டு வந்தான் என்றால் சிலவேளை இழந்த சக்கியை பெறலாம். :lol::lol::lol:

உந்த சப்பாத்தை பற்றி ஆய்வு செய்யிற குறுக்கால போவார் ஆட்லறியை தோளில தூக்கிகொண்டு திரியிறது எப்படி என்று ஆய்வு செய்யினம் இல்லை. :P :P

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு தாக்குதல் தொடர்பாக விளக்கம் தேவை: இத்தாலி

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆட்டிலறித் தாக்குதலில் இத்தாலி மற்றும் ஜேர்மன் நாட்டு தூதுவர்கள் காயமடைந்தது தொடர்பாக அவசரமான விளக்கங்களை இத்தாலிய அரசு சிறிலங்கா அரசிடம் இருந்து கோரியுள்ளது.

இது தொடர்பாக இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் மசிமோ அலெமா தெரிவித்ததாவது:

"2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதல் சிறிலங்காவிற்கான இத்தாலியத் தூதுவராக பணியாற்றி வரும் பியோ மரியானி நேற்று இடம்பெற்ற தாக்குதலில் சிறுகாயமடைந்தது எமக்கு ஆறுதலை தருகின்றது. இத்துன்பகரமான நிகழ்வு தொடர்பான விசாரணைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என நான் நம்புகின்றேன்" என்றார்.

---------------------------------------

இராஜதந்திரிகள் மீதான எறிகணை வீச்சு: பதற்றத்தில் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் இத்தாலி, ஜேர்மன், ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், அமெரிக்க, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா உட்பட 34 பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் இரு உலங்குவானூர்திகளில் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தனர்.

அண்மையில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்ட வாகரைப் பிரதேசம் உட்பட கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மனிதாபிமான அபிவிருத்திப் பணிகளை ஆராயும் நோக்குடன் சென்ற இக்குழுவினரின் உலங்குவானூர்தி தரையிறங்கிய போது வவுணதீவுப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதல்களில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பிற்கு அருகாமையில் உள்ள வவுணதீவில் இருந்து ஏவப்பட்ட 10-க்கும் மேற்பட்ட 120 மில்லி மீற்றர் ஆட்டிலறி எறிகணைகள் இராஜதந்திரிகள் பயணம் செய்த உலங்குவானூர்திக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்துள்ளன.

4 எறிகணைகள் விமான ஓடுபாதையிலும், 2 எறிகணைகள் இலக்குத்தவறி வாவிக்குள்ளும், 5 எறிகணைகள் விமானப்படை முகாமுக்குள்ளும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இத்தாக்குதலில் இத்தாலிய தூதுவர் பியோ மரியானி, ஜேர்மன் தூதுவர் ஜீர்கன் வீத் ஆகியோர் இலேசாக காயமடைந்ததுடன், 2 காவல்துறையினர், 3 சிறப்பு அதிரடிப்படையினர், விமானப் படையைச் சேர்ந்த ஒருவர், மாணவர் ஒருவர் ஆகியோர் காயமடைந்ததாகவும் உலங்குவானூர்தி ஒன்றும் சிறு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி ஒருவர் சிறு காயமடைந்ததாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கத் தூதுவர் றோபேட் ஓ பிளேக் தமது தூதரகத்திற்கு தொலைபேசி மூலம் தனது நலனை தெரிவித்ததாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பில் உள்ள அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் விடுத்ததுடன், கிழக்கு மாகாணத்தையும் தவிர்க்கும் படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இராஜதந்திரிகளின் பயணம் நிறைவு பெறும் வரை மட்டக்களப்பின் நகருக்கு பொதுமக்கள் செல்வதை படையினர் முற்றாக தடைசெய்திருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது:

"விசாரணைகளை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். இராணுவ மற்றும் அதிரடிப்படையினரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்துடனும் நாம் தொடர்பு கொண்டுள்ளோம்.

இது ஒரு துரதிர்ஸ்டவசமான நிகழ்வு. நாம் எமது விசாரணைகளை இன்னும் நிறைவு செய்யவில்லை. எனவே எம்மால் தற்போது எதுவும் கூறமுடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் இரு தரப்பிற்கும் இடையில் நாம் தொடர்புகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளோம் என்றார் அவர்.

--------------------------------------

'மட்டக்களப்பு தாக்குதலில் இருந்து அமெரிக்கா பாடம் கற்க வேண்டும்': கெல உறுமய

"மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாது என சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனவே அவர் நேற்றைய தாக்குதலின் மூலம் பாடங்களை கற்கவேண்டும்"

ஜாதிக ஹெல உறுமய விடுத்திருக்கும் அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

அடிச்சு அறிக்கை விட்டு விசயம் ஓஞ்சிட்டுது. ஜஸ்ட் அக்சிடன்ட் என்றாச்சு. ஆய்வாளர்களை அக்சிடன்டையே சிறீலங்கா அரசின் திட்டமிட்ட செயல் என்றால் சிறிலங்கா திட்டமிட்டதை புலிகள் நிறை வேற்றினர் என்ற மாதிரியொல்லோ தமிழர்களின் சர்வதேச ஊடகமான யாழ் களம் செய்தி விடுகுது..! :D:o

:lol: :lol: :lol::huh: :huh: :huh:

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது பழைய கதை,

முழுக்கெலியையே கருத்தால் மறைப்பது புதிய கலை!

கருத்துக்களத்திலேயே கருத்துக்களை வெளியிட அஞ்சும் நிலை....சிறிலங்காவின் பிரச்சார இயந்திரத்திற்கு கிடைத்த மறைமுக வெற்றியே!

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

அப்படீன்னா அண்ணாச்சியவை மாவிலாறு திறக்கவும் பூனகரியை பார்க்கவும் போகேக்க "சொல்லீட்டுதான் போனனாங்கள் அப்டியிருந்தும் ஆமி அடிச்சுப் போட்டு" எண்டு ஏன் ஒப்பாரி வைச்சனியள்?

இனி சொல்லுறதும் சொல்லாததும் உங்கள் இஷ்டம் கண்டியளோ!

Edited by saanakiyan

இழந்த பலத்தைமீண்டும் பெற டாக்டர்மாத்துரு பூதத்திற்ரை போட்டு வந்தான் என்றால் சிலவேளை இழந்த சக்கியை பெறலாம்.

எங்கே எமலோகத்திற்கா? :huh::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.