Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Featured Replies

அப்படி போடு அரிவால

அப்படி போடு அரிவால

  • Replies 339
  • Views 51k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 140
 
ஈழத்தமிழரும் இந்தியா பாகிஸ்தான் போரும்...
 
ஈழத்தமிழரின் அழிவில் பாகிஸ்தானின் பங்கென்பது ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவிகள் மட்டுமே. அவை பற்றி பாகிஸ்தான் எந்த ரகசியமோ ஒழிவு மறைவோ செய்தது கிடையாது.
 
ஆனால் இந்தியா செய்தது அத்தனையும் துரோகம் வேசம் நயவஞ்சகம் முதுகில் குத்துதல் மட்டும் தான். உலகிலேயே அதிக கொடுமை என்னவெனில் நண்பனாக அல்லது அதற்கும் மேலாக தாயாக நம்ப வைத்து கழுத்தறுப்பது தான்.
அதை இந்தியா எமக்குச்செய்தது.
 
பாகிஸ்தான் ஒரு போதும் தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் கை எழுத்து வை என்று எம்மை மிரட்டியதில்லை. ஆனால் இந்தியா...???
 
அதனால் தான் இந்திரா காந்தி இறந்தபோது MGR மறைந்தபோது பல வாரங்களாக கறுப்பு நாட்களாக சுமந்த ஈழம் அதன் பின் எவருக்கும் துக்க நாளை பற்றி அலட்டிக்கவே இல்லை.
 
பாகிஸ்தானா இந்தியாவா என்றால் பரம எதிரி இந்தியா தான். ஏனெனில் எதிரியை விட துரோகியே மிக மிக ஆபத்தானவன்.

விசுகர்! உங்கள் கருத்தை பாராட்ட வார்த்தைகளில்லை.👍

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்

Edited by விசுகு

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2019 at 5:36 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 141
 
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை
 
உண்மையில் அபிநந்தன் மேல் நிலைக்கு வருவார்
அதிலும் அரசியலில் ஈடுபட்டால் இந்தியாவையே ஆள்வார்.
 
2 நாட்களிலேயே அவர் தன்னை நிரூபித்து விடுதலையாகி வருகின்றார்
 
அவரது விடுதலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான எந்த விடயத்தையுமே
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தவிர்த்திருக்கின்றார்.
 
அதில் முக்கியமானது தான் ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னால் கொலை செய்தாலும் இந்தியா கேட்காது ஆளை அப்படியே விட்டு விடும்
 
பாகிஸ்தானும் தயக்கமற்று கொன்று விடும் என்பதை அறிந்து காய் நகர்த்தி இருக்கிறார்.
 
உண்மையில் இவ்வாறு உயிர் தப்பி வரும் முதலாவது தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அபிநந்தன் பெறுகிறார்.
 
வாழ்த்துவோம்

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

 

On 2/28/2019 at 6:11 PM, thulasie said:

அபிநந்தனின் விடுதலையோடு,  காஷ்மீர் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தானியர் எத்தனை பேர் விடுதலையாகிறார்களோ தெரியாது. 

பரஸ்பர விடுதலைக்கு, DEAL தேவைதானே!

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

இப்பொழுது  இது  போன்ற  கோழைகளுக்குத்தானே  வாழ்வு

உங்களுக்கு தெரியாததா??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 142
 
7 பேர் விடுதலையும் இந்திய அரசியலும்...
 
7 பேரை விடுதலை செய்யும்படி
அரசியல் மேடையில் மோடியிடம்
கூட்டணிக்கட்சியான பாமக கோரிக்கை. விடுதலை உறுதி - செய்தி
 
7 பேர் விடுதலையாகப்போகின்றார்கள் என்று சாந்தப்படுவதா??
 
அல்லது இந்திய அரசியல்வாதிகளின் கூட்டணிகளுக்கும்
பங்கு பிரித்தலுக்கும்
எம்மவர் எலிகளாவதை நினைத்து அழுவதா ???
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

தேர்தல் வெற்றிக்காக வாக்கு பெறுவதற்காக விடுதலை செய்ய போகிறார்கள் போல!
எப்படியாயினும் 7 பேர் விடுதலையை வரவேற்போம்.

அவர்களின்  விடுதலை  சார்ந்து  சந்தோசம் சகோ

ஆனால் இந்த விடுதலைக்கு ஒரு  கூட்டணி  தேவையா?

நீதியும்

சட்டமும்

ஏன் அரசியல் அமைப்பும்  கூட செல்லுபடியற்றதாக்கப்படுவது  எவ்வாறு சரியான  வழியாகும்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஒரு கோழை ...எதிரியிடம் பிடிபட்டதும் துவக்கால் சுட்டுக் கொண்டு சாகாமல் கெஞ்சி,மன்றாடி தப்பி வந்திருக்கார் 

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

 

பாகிஸ்தானுக்கு தேவையானது இவரிடம் ஒன்றுமே இல்லாத போது, இவரின் முடிவு மிகச் சரியானது.

அதாவது, யுத்த விமானிகளின் நாய்ச் சண்டையில், விமானத்தை விழுத்தும் சாதுர்யத்தை எதிரி கொண்டிருந்தால், மற்ற தரப்பிடம் ஒன்றுமே இல்லை.

கிந்தியாவின், விமானப்படை, அதுவும் supersonic dog fight மாய உருவத்தை, (கிந்தியாவின் புவியியல், பொருளாதார அளவை வைத்து ஏற்படுத்திய மாய உருவத்தை, பாகிஸ்தான் தகர்த்து விட்டது.

நேற்று, கடற்படையின் நீர் மூழ்கி பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது, கிதியாவின் கடற்படையை கூட ஏனையோர் ஏளனமாக, முக்கியமாக கடடற்படையின் போரிடும் வலுவின்  பிரமையை பாகிஸ்தான் உடைத்து விட்டது.  
 

 

 

பாக்கிஸ்தான் அவரை விடுவித்ததால் இம்ரான்கானுக்குத் தான் நல்ல பேர்.அவரின்ட கையில் எதோ டொக்கிமன்ஸ் இருந்ததாகவும் அதை அவர் சப்பி துப்பியதாகவும் வாசித்தேன்.அதற்குப் பிறகும் அவரை விடுவித்து இருக்கிறார்கள்...ஏன்?????????????  

 

22 minutes ago, குமாரசாமி said:

எதிரியிட்டை அகப்பட்டால் தன்னைத்தானே துவக்காலை சுட்டு செத்திடணும். இல்லாட்டி அதுக்கு முதலே எதிரி வீட்டுக்கே போய் உள்ள ரகசியங்களையெல்லாம் சொல்லி காட்டிக்குடுத்து சுகபோகமாய் வாழ்ந்திடணும்....😎

இப்படியான பதவியில் இருப்பவர்கள்,போர் வீரர்கள் ஒரு எதிரியின்ட காலில விழுந்து,கெஞ்சி தப்பி வாறது அவமானம் என்பது எனது கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேரும் விடுதலையாகி விட்டார்களா, இன்னும் இல்லைதானே .இப்படி எத்தனை முறை அவர்களின் விடுதலையை பார்த்து விட்டோம் ...இன்னும் பார்ப்போம்......!  😐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 143
 
மன்னார் மனித எச்சங்களும் தமிழரும்
 
ஊரில் சொல்வார்கள்
நல்லபெயர் எடுப்பது மிக மிக கடினம்
கெட்ட பெயர் எடுப்பது மிக மிக சுலபம்
அதே போல் எடுத்த நல்ல பெயரை கெட்ட பெயராக்குவது மிக மிக சுலபம்
 எடுத்த கெட்ட பெயரை நல்ல பெயராக்குவது மிக மிக மிக கடினம் என்று.
 
தாயகத்தின் எந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எவர் மனதிலும் முதலில் எழும் பதில் எதுவாக இருக்கும்??
 
அவ்வாறு எல்லோரது குறிப்பாக தமிழரது மனங்களில் சந்தேகங்களையும் விரக்தியையும் நம்பிக்கையீனங்களை விதைத்தவர்கள் யார்?
அதை மாற்ற அல்லது நம்பிக்கையூட்ட இதுவரை எடுக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட நீதி ஏதாவது???
 
நீங்க எதையும் சொல்லுங்கோ?? இது சம்பந்தமான சந்தேகங்கள் எப்பவும் எம்முடன் இருக்கவே செய்யும்??
 
ஆராய்ச்சியை சிறீலங்கா செய்தாலென்ன?
அமெரிக்கா செய்தாலென்ன?
ஏன் ஐ.நா செய்தாலென்ன??
 
கொன்றவன்
கொல்ல சொன்னவன்
அதை பார்த்துக்கொண்டு இருந்தவன்
அவனிடமிருந்து என்ன வரும்????????
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 144
 
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்
 
 
இந்தப்பாடலையும் பாடுபவரின் யாலங்களையும் பாருங்கள்.
இசையை அறிந்தவர்களுக்கு அல்லது பாடக்கூடியவர்களுக்கு தெரியும்
இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதற்கும்
இன்றைய கரோக்கே இசையில் பாடுவதற்குமான வித்தியாசமும் நாம் தொலைத்தவையும்.
 
இந்தப்பாடல் வந்த காலப்பகுதியில்
இந்தப்பாடலை மிகவும் ரசித்தும்
இசை மற்றும் சுருதி குன்றாமல் பாடக்கூடியவர்களில் நானும் ஒருவன்.
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

துரை ....உங்களுக்குள் ஒரு ம துரை சோமு இருப்பது எங்களுக்கெல்லாம் தெரியாமல் போய் விட்டது..... அடுத்தமுறை சந்திக்கும்போது "பாரத் கஃபே " முன்னால்  நீங்கள் பாட  நான்தான் ஜால்ரா  இப்பவே சொல்லிப்போட்டன்....!   😀

அருமையான பதிவு பாராட்டுக்கள்.....! 

அது  ஒரு  காலம் அண்ணை

சாராரண தரப்பரீட்சையில் சங்கீதத்துக்கு D (அதி  உயர்  சித்தி) எடுத்தவன் நான்

அப்புறம் பருவ  வயதும்

அது சார்ந்த  குரல் மாற்றமும்

கொழும்புக்கான  இடம் மாற்றமும்

அதனால் ஏற்பட்ட தொடர் பயிற்சி இன்மையும்  குரலை  மாற்றி  விட்டது

ஆனால் இசையும் அதன்  சுருதியும்  இன்றும்  என்னோடுண்டு

நானாடா  விட்டாலும்........

நன்றியண்ணா

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 145
 
பொள்ளாச்சியும் ஈழமும்
 
பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசுபவர்கள் எல்லோரும்
அநேகமாக புலிகள் பற்றியும் புலிகளின் தாயக ஆட்சி பற்றியும் பேசுகிறார்கள்.
 
ஆனால் புலிகளின் ஆட்சியில் எவ்வாறு குற்றங்கள்
மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தவிர்க்கப்பட்டன என்றோ
அதனுடைய தார்ப்பரியம் பற்றியோ பேசுவதில்லை
அல்லது அது பற்றி தெரிவதில்லை போலும்.
 
புலிகளின் ஆட்சியில் குற்றங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டமைக்கு
அவர்களின் உளவுத்துறையின் ஆழுமையும்
புலிகளுக்கும் மக்களுக்குமான உறவும் தான் காரணம்.
 
சிறு குழந்தையோ பாட்டியோ
தனக்கு நடந்த வன்முறையை அல்லது அநியாயத்தை
புலிகளின் எந்த உறுப்பினரிடமும் சொல்லமுடியும்.
அந்தளவுக்கு அவர்களுக்கிடையிலான நெருக்கமும் உறவும் இருந்தது.
சொல்பவரின் விபரங்கள் இரகசியமாக்கப்படுவதுடன்
குற்றம் செய்தவர் எந்த பெரிய ஆளாக இருந்தாலும்
ஏன் சொந்த தகப்பனாக இருந்தாலும்
புலிகள் தண்டனை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை
மக்கள் மனதிலிருந்தது.
இது புலிகளின் தொடர் நடவடிக்கைகளால் வந்தது.
 
உண்மையில்
எமது பிள்ளைகளுக்கு இன்று நாம் தரவேண்டியது
இந்த நம்பிக்கையையே.
எவரிடமாவது சொல்லக்கூடிய
சொன்னால் தன்னை நம்பக்கூடிய ஒரு இடம் இல்லாத போதே
இவ்வாறான தவறுகள் தொடர்கின்றன.
 
 
எனது பிள்ளைகளுக்கு இந்த நம்பிக்கையை நான் தந்துள்ளேன்.
 
மற்றும்படி இந்த நம்பிக்கையை நாம் தராதவரை
இந்த 4 பேரோடு இது நின்று போகப்போவதில்லை
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 146
 
நியுசிலாந்து தாக்குதல்
 
எம்மில் ஒரு பழக்கமுண்டு
எந்த பிரச்சினையும் எமது கதவை தட்டும்வரை
அது பற்றி அலட்டிக்கொள்ளமாட்டோம்
அவற்றை அறிந்தாலும்
அதற்கொரு வியாக்கியானம் சொல்லி தப்பித்துக்கொள்வோம்.
 
இன்று நியுசிலாந்தில்
இசுலாமியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை
அது இசுலாமியர்களுக்கெதிரானது என கடந்து மறந்து விடுவோம்
 
ஆனால் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தால்
அத்தாக்குதல் தமது மண்ணை விட்டு புலம் பெயர்ந்த
அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதும்
எமது அடுத்த தலைமுறையை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளோம் என்பதும் புரியும்.
 
அதற்காகத்தான்
இறுதி நிமிடம் வரை மண்ணுக்காக போராடினோம் என்பதும்
ஒத்துழைக்கும்படி அனைத்து தமிழ் மக்களிடமும் மன்றாடினோம் என்பதும் புரியும்.
 
இன்று மண்ணும் இல்லை புலமும் இல்லை எங்கு வாழ்ந்தாலும் பாதுகாப்பில்லை.
 
இது தான் எம் வாழ்வா இனி?????
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 147
 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும்
எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) சாவடைந்துள்ளார்.
 
கிட்டத்தட்ட 30 வருடங்களாக பழகிய செயற்பாட்டாளன்.
எங்கு நின்ற போதும் கண்டவுடன் ஓடிவந்து
குகதாசண்ணா எப்படி இருக்கிறியள் என்று
கை கொடுத்து நலம் விசாரிக்கும் தம்பி.
 
எத்தனையோ பிரச்சினைகள்
இழுபாடுகள் பிரிவுகள் வந்த போதும்
தௌிவாக செயற்பட்ட செயற்பட்டுக்கொண்டிருந்த தோழன்.
 
இறுதியாக கண்டபோது
நாம இப்ப எங்க நிற்கிறம் சகோ என்ற எனது கேள்விக்கு
நாம தெளிவாக நிற்கிறம் அண்ணா
தொடர்ந்து எம்மால் முடிந்ததை செய்து கொண்டிருப்பம்
நீங்களும் தொடருங்கோ
அது தான் இன்றைய தேவை என்றபடி
புன் சிரிப்போடு பதில் தந்தவன் இன்றில்லை.
 
ஒருவன் தான் உழைத்த கனவை காணாது
இறத்தல் என்பது பெருங்கொடுமை.
 
நான் அடிக்கடி எழுதுவது தான்
2009க்கு பின்னர்
நாம் வேறு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றோம்
விடை தெரியாத கெரடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.
 
ஆனால் எமக்காக
தம் வாழ்வை கொடுத்த
கொடுத்துக்கொண்டிருக்கின்ற
இவர் போன்றவர்களின்
இன்றைய வாழ்க்கை முறையை பற்றி சிந்திப்பதே இல்லை.
 
அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் சாகவில்லை
சாகவிட்டிருக்கின்றோம்.
புலத்தில் இவரைப்போல பல ஆயிரம் பேரின் நிலை இது தான்.
 

இனியாவது.......??????

L’image contient peut-être : 1 personne, texte
 
 
 
 
 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 148
 
புலிகளின் சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரம்
 
அப்பொழுது புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக திலகர் அண்ணா இருந்த நேரம்.
 
அன்று நாம் எமக்கு தரப்பட்ட இடங்களுக்கு சென்று
தரப்பட்ட கடமைகளை முடித்து அலுவலகம் திரும்பும் போது
நள்ளிரவாகி இருந்தது.
சென்ற கடமையின் விபரங்களையும்
அன்றைய நடப்பு விடயங்களையும் பகிர்ந்து
அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி புறப்பட தயாரான போது (இரவு 2 மணி இருக்கலாம்)
அன்றைய பிரான்சின் பொறுப்பாளர் சொன்னார்
ஒரு சிறுஉதவி செய்யமுடியுமோ அண்ணை?
திலகர் அண்ணை வரட்டாம்
ஒருக்கா சந்திச்சு போறியளே என?
சரி போய் சந்திக்கின்றோம்
ஒருக்கா தொலைபேசி அடித்து சொல்லுங்கோ நாங்க வாறம் என்று விட்டு
நானும் என்னுடன் வந்தவரும் சென்றோம். (அப்பொழுது கைத்தொலைபேசியெல்லாம் இல்லை)
 
ஒரு பெரிய மாடிக்கட்டிடத்தின் வாசலிலே
அண்ணை ஒரு காஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு நின்றார்.
என்னண்ணை இந்த நேரம் காஸ் சிலிண்டரோட நிற்கிறியள் என்றதற்கு
காஸ் சிலிண்டர் முடிவடைந்து விட்டது.
நாளைக்கு நான் ஒரு அலுவலாக தூர இடம் போகணும்
அது தான் அடித்து கொடுத்திட்டு போயிற்றா அவாவுக்கு சிரமமிருக்காதல்லே என்றார்.
 
அந்த இரவில் காஸ் சிலிண்டர் கிடைக்கும் அடையான் கடை தேடிப்பிடித்து
காஸ் சிலிண்டரை மாத்தி வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டு வர விடிந்திருந்தது.....
 
இப்படித்தான் எமது சர்வதேச பொறுப்பாளரின் வாழ்க்கைத்தரமே இருந்தது......

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 149

புலத்தில் வேலை வாய்ப்புக்கள் சார்ந்து விக்கி ஐயாவின் கருத்து

விக்கி ஐயா

புலம் பெயர்ந்தவர்களின் முதலீடுகளை எதிர்பார்த்தபடி

இவ்வாறு சொல்லி இருப்பது

அவரது எதிராளிகளால் முரணாக பார்க்கப்பட்டாலும்

எதிலுமே ஒரு நன்மையுண்டு.

இனியாவது தாயக மக்கள் புலத்தை நாடாதிருக்கட்டும்.

எமது மண் காலியாவது தடைப் படட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 150
 
வரலாற்று வெற்றியும் தோல்வியின் தொடக்கநாளும்.....
 
இன்று உலகமே அதிர்ந்து போன
உலக வல்லரசான அமெரிக்காவால் எவராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என உத்தரவாதம் தரப்பட்ட ஆனையிறவு முகாமை புலிகள் தமது தியாகத்தையும் தமது மக்களையும் மட்டுமே நம்பி தகர்க்கத்தொடங்கிய நாள்.
 
எதிரிகளாக பகைவர்களாக இருந்த உலக நாடுகள் அனைத்தும் இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என முடிவெடுக்க வைத்த தாக்குதல்.
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 151
 
இழப்பின் வலியை உணர்ந்தவர்கள் நாம்.....
 
பிரான்ஸ் நாட்டினுடைய இதய பகுதி என அழைக்கப்படும்
பரிஸ் நகரத்தின் 800ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை கொண்ட
Notre de Dame (நொர்த் து டம்) என அழைக்கப்படும்
மிகப்பெரிய தேவாலயம் தீக்கிரையாகி இருக்கிறது.
 
நாங்கள் பிரான்சுக்கு வந்த பொழுதுகளில்
சிவனோ முருகனோ அம்மனோ எம்மிடமில்லாத போது
எமது வலிகளை, தேவைகளை முறையிட,
நேர்த்தி வைக்க, ஆறுதலடைய
இந்த இடம் மிகவும் உன்னதமான ஆலயமாக இருந்தது.
 
அந்தவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து இன மக்களுக்கும் மதத்தவருக்கும் இது கோயில் தான்.
 
அது இன்று விபத்துக்காரணமாக அழிந்து போயிருக்கிறது.
மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விடயமாக உள்ளது.
எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது இருந்த அதே மனநிலை இன்றும்.
 
அந்த மக்களின் சோகத்தில் மன உளைச்சலில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.
 
அதே நேரம் இது விபத்து தவிர்க்கமுடியாதது தடுக்க முடியாதது.
ஆனால் எமது நூலகம்
எமது பாடசாலைகள்
எமது கோயில்கள்
எமது சேர்ச்சுக்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டபோது
அதிலும் மக்களை அங்கே பாதுகாப்புக்கருதி ஒதுங்குங்கள் என்ற வேண்டு கோளை விட்டு விட்டு கொத்துக்கொத்தாக கொன்றொழித்த போது
அது திட்டமிட்ட கொலை இன அழிப்பு.
அது தடுத்திருக்கக்கூடியது
தடுத்திருக்கமுடியும். ஆனால் ........??????
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 152
 
இந்திய நாடாளுமன்றத்தேர்தல்- 2019
 
இந்தியத்தேர்தலில் நமக்கென்ன ஈடுபாடு என்று விட்டு போய் விடக்கூடியதல்ல
இந்திய வல்லரசின் எம்மீதான அழுங்குப்பிடி.
 
இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலை
மத்திய அரசின் ஆயுளை தீர்மானிப்பவர்களாக
தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் வரணும்.
 
அதன்படி பார்த்தால்
முதல் தலைமுறைகளளால் மாற்றங்களை கொண்டுவர முடியாது
அது முயன்று முயன்று தோற்றுப்போன ஒன்று.
 
ஆனால் இளைய தலைமுறையால் அது முடியும்.
அவர்களை கட்டுக்கோப்போடு வழி நடாத்தவும் முடியும் என்பதை
ஐல்லிக்கட்டு போராட்டம் முதல் பலவகை போராட்டங்களின் வாயிலாக பதிவாகி வருகிறது.
 
அந்தவகையில்
இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நடந்து வரும் இன்றைய நிலையை பார்க்கும் போது
இளைஞர்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளில் நின்று வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த மாற்றத்தின் திரள் சக்தியை முடிவு தருமா???
 
பார்க்கலாம்.
முயற்ச்சி செய்
வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.