Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Featured Replies

அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

 
அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
 

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு முறாவோடை மாணவர்கள் மற்றும் சிங்கள தமிழ் மக்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிங்கள – தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு – முறாவோடை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான மைதானத்தை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாத்தாக கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

மட்டகளப்பு பிள்ளையாரடி பகுதியில் வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் முறாவோடை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

http://newuthayan.com/story/19690.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழர்களையும் ஒன்றினைத்துக்கொண்டு போராடுவோம் !

அம்பிடிய சுமனரத்ன தேரர் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் கடும் எச்சரிக்கை..

மட்டுவில் காணி அபகரிப்பிற்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பை கண்டித்து மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்துக்கு முன்பாக அம்பிடிய சுமண ரட்ன தேரரின் தலைமையில் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்திலும் சாந்திக்கிரியையிலும் ஈடுப்பட்டனர்.

20170815_104525_resized.jpg

இக் கவனயீர்ப்பு போராட்டத்தை சிங்கள தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப கட்டமாக சமய வழிப்பாட்டினை தொடர்ந்து தற்போதய காணி அபகரிப்பு தொடர்பாக சிறுபாண்மை மக்களின் உரிமைகளும் காணிகளும் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

20170815_105014_resized.jpg

பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஈடுப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அபகரிக்கப்பட்டுள்ள மிராவோடை பாடசாலை மைதானத்திற்கு ஏற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களும் சென்றனர்.

20170815_105124_resized.jpg

http://www.virakesari.lk/article/23180

 

  • தொடங்கியவர்
முறாவோடையில் பதற்றம்…
 

image_7ad1ad8980.jpg

வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தில், மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமணரத்னதேரர் தலைமையில், இன்று (15) பகல் அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள், காணி வேலியைப் பிடுங்க முற்படமையை அடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையேற்பட்டது.

இதன்போது, அப்பகுதிக்கு வந்த பொதுமக்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதனையும் பொறுப்படுத்தாக பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்படும் போது, பொலிஸ் பாதுகாப்பு படையினரால், அம்பிடியே சுமணரத்னதேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் ஆவேசகம் கொண்டு வேலியை பிடுங்கிய போது, பொலிஸார், குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதில், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

(படங்கள்: எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்)

image_b3f0b53232.jpgimage_d01cfadf81.jpgimage_ed99ba1c71.jpgimage_3b6c02040c.jpgimage_68d59f2e3d.jpgimage_f221f94e6b.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/முறாவோடையில்-பதற்றம்/46-202411

  • தொடங்கியவர்

நீதிமன்ற தடை உத்தரவைக் கிழித்தெறிந்த சுமணரத்ன தேரர்; மட்டக்களப்பில் குழப்பம்

 
 
5992d46fd9a1f-IBCTAMIL.jpg
5992d4704e871-IBCTAMIL.jpg
 
 
 
 
5992d46f611c0-IBCTAMIL.jpg
5992d46fb9e2a-IBCTAMIL.jpg
5992d46fd9a1f-IBCTAMIL.jpg
5992d4704e871-IBCTAMIL.jpg

மட்டக்களப்பு – வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணிக்குள் அமைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான குடிசையை அகற்றுவதற்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தலைமையிலான குழு அகற்றுவதற்கு முற்பட்டதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்துக்கு உட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் சட்டத்திற்கு முரணாக அபகரித்து குடிசை அமைத்துள்ளதைக் கண்டித்து காணியை மீளப்பெறும் வகையில் இக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியைத் தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை குடிசை அமைக்கப்பட்டிருந்த வேலியில் ஒட்டினர்.

நீதிமன்ற தடை உத்தரவை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் கிழித்தெறிந்து வேலியை பிடுங்கி எறிய, அவரோடு வந்த பொதுமக்களும் வேலியைப் பிடுங்க முற்படும் போது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதனையும் பொருட்படுத்தாத பொதுமக்கள் வேலியைத் தகர்க்க முற்படும் போது, பொலிஸ் பாதுகாப்பு படையினரால் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் ஆவேசம் கொண்டு வேலியை பிடுங்கிய போது, பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் பலர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டு மோதலை சுமுக நிலைக்கு கொண்டு வந்தனர்.

இவ்விடயமாக குறித்த இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரதன் ஆகியோர் சம்மந்தப்பட்ட பொதுமக்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் காணி விடயம் தொடர்பாக இடம்பெறவுள்ள கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், பாடசாலை காணி வரைபடத்தில் உள்ளவாறு காணி பெற்றுத் தரப்படும் என கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச தெரிவித்தார். 

அதன் பின்னர் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றதுடன், பொதுமக்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/attack-on-the-sumanarathna-thero

  • தொடங்கியவர்
 

வாழைச்சேனை முறாவோடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி

 

வாழைச்சேனை முறாவோடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி

 

 
 
மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்தில் உள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் பிரதேச மக்கள் சிலர் முற்பட்டதால் அங்கு சற்று அமைதியின்மை நிலை தோன்றியது.

குறித்த மைதானத்தை இன்று காலை முற்றுகையிட்டதை அடுத்து அங்கு தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், முறாவோடை பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்று அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை அகற்ற முற்பட்டனர்.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசாருக்கும் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் அதனையும் மீறி வேலியை அகற்ற முற்பட்டனர்.

இதனையடுத்த பொலிசார் அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்தனர். இதில் பெண்கள் உட்பட 4 பேர் காயடைந்தனர்.

இதேவேளை பொலிசார் மீது ஆர்பாட்டகாரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதை அடுத்து, பொலிசார் புகைக்குண்டுகள் வீசி ஆர்பாட்டகாரர்களை கலைத்தனர்.

அங்கு மேலதிகமாக கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதகாப்பில் ஈடுபட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் வருகை தந்து ஆர்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், இது தொடர்பாக நாளை புதன்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர், பொலிசார், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாடசாலை மைதானத்திற்கு வரைபடத்தில் உள்ள காணியில் ஒரு அங்குலம் கூடவிடாது அதனை பெற்றுதருவதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=94469

  • கருத்துக்கள உறவுகள்

தூசனப்பிக்கர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

இந்தளவுக்கு தமிழர் அவரிடம் போகுமளவுக்கு... அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

தூசனப்பிக்கர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

இந்தளவுக்கு தமிழர் அவரிடம் போகுமளவுக்கு... அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

 

அசோகருக்கு யுத்த களத்தில்.. ஞானம் பிறந்தது போல.. பிக்கருக்கு.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் கண்டு ஞானம்.. பிறந்திருக்கலாம். புத்தரின் வழி வந்தவைக்கு.. போற வழில தான் ஞானம் வாறது. :rolleyes:

ஆனால்.. சம் சும் மாவை கும்பலை விடப் பாவம் இவர்.. படிச்ச சட்டாம்பித் திமிரில்... மக்கள் மீது திணிக்கப்படும்.. அநியாயங்களை மறைக்கவில்லை. அதில் திருப்தி கண்டு தான் ஆகனும். எம்மிடம் இருந்த பாதுகாப்புக் கவசங்கள் கடாசி வீசப்பட்டுள்ள நிலையில். 

பிக்கர்.. தமிழருக்கு சாதகமாக உள்ள வரை தமிழர்கள் அவரை பாவிப்பது தப்பில்லை. ஆனால்.. இந்த பிக்கரின் உள்நோக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கைகளும் மிக மிக  அவசியம். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொதுமக்கள் இடையே பதட்டம்

 
இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக் கூடத்திற்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று செவ்வாய்க்கிழமை பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரோ உள்ளிட்ட பொது மக்கள் அத்து மீறி நுழைய முற்பட்டபோது, அந்த இடத்தில் ஓரிரு மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது.

நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், காணியின் வேலியை அகற்றியும் உள்ளே நுழைய முற்பட்டவர்கள் அனைவரும், அங்கு தயார் நிலையில் காணப்பட்ட போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டு கண்ணீர் குண்டுகள் வீசியும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

முறாவோடை அரசு தமிழ் பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள இந்த காணி, கிராமத்தின் தமிழ் - முஸ்லிம் பிரிவுகளின் எல்லையில் காணப்படுகின்றது.

இந்த காணி அரசு தமிழ் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் என பள்ளி நிர்வாகத்தினாலும் உள்ளுர் தமிழ் மக்களினாலும் சொந்தம் கொண்டாடப்படுகின்றது.

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

காணியின் ஒரு பகுதியை, முஸ்லிம்கள் அபகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டும் தமிழர் தரப்பு, அவ்விடத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தங்களிடம் இந்த காணியின் உரிமை தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்கள் இருப்பதாக முஸ்லிம் தரப்பும் கூறுகின்ற நிலையில் சமீபகாலமாக இன ரீதியான முரண்பாடுகளும் அந்த பகுதியில் நிலவுகின்றன.

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரோ தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர், அந்த பகுதியை சேர்ந்த தமிழர்கள் காணியின் எல்லைகளை அகற்ற நுழைய முற்பட்ட வேளையில், அங்கு தயாராக இருந்த போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

  •  

காணிக்குள் வெளியாட்கள் யாராக இருந்தாலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை போலீஸார் அந்த இடத்தில் காட்டியபோது, அந்த உத்தரவை பௌத்த மதகுரு ஒருவர் கிழித்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

இந்த சந்தர்ப்பத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பதட்டம் ஏற்பட்ட நிலையில், அங்கு தயாராக இருந்த போலீஸார் தடியடி பிரயோகம் செய்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து சுமூக நிலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  •  

போலீஸாரின் இந்த தாக்குதலின்போது, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

அந்த இடத்திற்கு சென்றிருந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளார் அனுர தர்மரத்ன, இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராயந்து காணி உரிமை தொடர்பான முடிவை நாளை புதன்கிழமை அறிவிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-40937126

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für சுமனரத்ன

 

காட்சிகள் மாறுகின்றதா????
இருந்தாலும் பலிக்கடாக்கள் தமிழினம் மட்டுமே.

 

20170815_104525_resized.jpg

போராட்டமே வாழ்க்கை!

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்காக சாவதற்கு பயப்படேன் ; கிழக்கில் வாக்கினை பெற்ற அரசியல்வாதிகள் எங்கே ? - சுமணரத்ன தேரர் ஆவேசம்

இங்குள்ள மக்களை தமது சுய உரிமையுடன் வாழ விடுங்கள். இவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும் இவர்களுக்காக நான் சாவதற்கும்  பயப்படமாடேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

sumanarthna-thero1.jpg

எங்கே கிழக்கு மாகாணத்தில்  இந்த அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ? எங்கே ஐக்கிய தேசிய கட் சி ?, சுத்தந்திரக் கட் சி  அமைப்பு எங்கே ?, அரசியல்வாதிகள் எங்கே ஏன் இந்த அப்பாவி மக்களின் பிரச்சினையை தீர்க்க முன் வரவில்லையெனவும் கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்  மேலும் தெரிவிக்கையில்,

தற்போது விசேடமாக மட்டகளப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பு அதிலும் இன்று அனைவராலும் பேசப்படும் வாழைச்சேனை முறாவோடை பிரதேசத்தில் வாழும் அப்பாவி தமிழ் மக்களின்  சொந்தக்காணி பத்திரமுள்ள  காணிகளை சூறையாடுவதும் பாடசாலை மைதானத்தில் அத்துமீறிய குடியேற்ற சம்பவத்தையும் கண்டித்தே நாம் இங்கு கூடியுள்ளோம்.

 

இந்த விடயத்தை நான் எனது கையில் எடுத்ததும் பாரிய மிரட்டல்களுக்கு தற்போது முகம் கொடுத்து வருகின்றேன் இன்று நாங்கள் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு செல்லவில்லை. இவ்வளவு காலமும் எமது உண்மையான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத  பட்ஷத்தில் நாங்கள் அந்த இடத்துக்கு செல்கின்றோம்.

 

இது மக்களுடைய பிரச்சினை என்பதால்தான் நாங்கள் அங்கு செல்கின்றோம் என்பதை இந்த இடத்தில் உள்ள ஊடகங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் .

 

சிறுவர்கள் கல்வி கற்கும் இடம் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும்  மைதானத்துக்கு நடுவில் கொண்டு வீடு காட்டியுள்ளனர் . இந்த மைதானத்தில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வீட் டை உடனடியாக அகற்றவேண்டும் என்று இங்குள்ள தாய்மார்கள் தந்தைமார்கள் சிறுவர்கள் என வீதியோரத்துக்கு  வந்து கூறினோம் எமது பாடசாலையும் எமது காணிகளையும் மீட்டுத்தாருங்கள் என்று கூறினோம்.

 

இந்த நாட் டை  ஆளும் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கே இன்று நாம் இங்கு வருவதற்கான காரணம். ஒரு மாத்தில் 3 தடவை அரசாங்க அதிபரை சந்தித்துள்ளனர் . 3 தடவை காணி  ஆணையாளரை சந்தித்துள்ளோம். 4 தடவைகள் பிரதேச செயலாளரை சந்தித்துள்ளோம். 5 தடவை கிராமசேவகரை சந்தித்துள்ளோம். நான்கு தடவை மட்டக்களப்பு உயர் பொலிஸ் அதிகாரி யாகொட ஆராச்சியை  சந்தித்துளோம். இவர்கள் எல்லோரும் இந்த பாவப்பட் ட தமிழ்  மக்களை ஏமாறியுள்ளார்கள் .

 

இன்று நான் பயமில்லாமல் விகாராதிபதி என்ற அடிப்படையில் கூறுகின்றேன் கடந்த சில நாட்களுக்கு முன் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த அப்பாவி மக்களின் உண்மை நிலையை அறிந்த பொலிஸ் உயர்அதிகாரி உடனடியாக காவலரணை அமைப்பதாக உறுதியளித்து இன்று ஒரு மாதம் முடிந்து  விட்டது எங்கே காவலரண்  இந்த அப்பாவி தமிழ் மக்களை பொலிஸ் உயர் அதிகாரி  ஏமாற்றியுள்ளார் .

 

இதன் பிரதிபலனாக காணி அபகரப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது அபகரிப்பு வேலையை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றனர் . அப்பாவி தமிழ் மக்கள் வீதியில் இருக்கின்றனர் .

 

அப்படி என்றால் எங்கே கிழக்கு மாகாணத்தில்  இந்த அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ? எங்கே ஐக்கிய தேசிய கட் சி ? சுத்தந்திர கட் சி  அமைப்பு எங்கே ?அரசியல் வாதிகள் எங்கே ஏன் இந்த அப்பாவி மக்களின் பிரச்சினையை தீர்க்க முன் வரவில்லை.

 

இந்த மக்கள் முப்பது வருடம் யுத்தத்தில் பாரிய இன்னல்களை அனுபவித்தவர்கள். இவர்களை தங்களது சுய உரிமையுடன் வாழ விடுங்கள் இவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும் இவர்களுக்காக நான் சாவதற்கும்   பயப்படமாடேன் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23211

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவலை என்னவென்றால், இன்றுவரை எம்மின் இனம் மீதான மொழிரீதியான, சமய ரீதியான காலாசார ரீதியான முற்று முழுதான ஆக்கிரமிப்பை நடத்திவரும் ஒரு இனத்தின் இயங்கு சக்தியாக இருக்கும்  சிங்கள -  பெளத்த பேரினவாதத்தின் மூல வேரான பிக்குகளின் மிகத் துவேஷம் கொண்ட ஒரு இனவாதியிடமே தமிழர்கள் முஸ்லீம்களுக்கெதிராக உதவி நாடி சரணடைந்திருப்பதுதான்.

 

அணமைக் காலம் வரை மட்டக்களப்பில் தமிழருக்கெதிராக மிகக் கடுமையான இனத்துவேஷத்தைக் கக்கி வந்த ஒரு பெளத்த பிக்கு இன்று தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்று ஊளையிடுவது சுத்த நாடகம். தமிழர்கள் இந்த பசப்பல்களுக்கு எடுபட்டுப் போனது நாம் இன்னும் எமது தவறுகளிலிருந்து எவற்றையுமே படிக்கவில்லை என்பதுதான்.

பேரினவதம் ஒரு சிறுபான்மையினத்தை தன்பக்கம் வைத்துக்கொண்டு இன்னொரு சிறுபான்மையினத்தை அழிக்கும் என்பது வரலாறு. 2009 வரைக்கும் அதுதான் நடந்தது. முஸ்லீம்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தமிழரை அழித்தது. தமிழரின் வீரியம் மழுங்கட்க்கப்பட்ட பின்னர், இப்போது தமிழரை அரவணைப்பதுபோல நடித்துக்கொண்டு முஸ்லீம்களை வதைக்கிறது. 

 

2009 வரைக்கும் சிங்களம் நடந்துகொண்ட வரலாற்றையும், எம்மை அது நடத்திய விதத்தையும் மறந்து, அந்தப் பேரினவாதத்தின் மூலவேரான பெளத்த துறவிகளிடமே சரணடையுமளவிற்கு நாம் ஏமாளிகளாக இருக்கிறோம் என்பது வேதனை.

 

குரங்கு அப்பம் பிட்ட கதைதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிங்களப் பிக்குகளுக்கு எதிராகப் போராடவில்லை. தேசிய தலைவர் பிக்குகளை தனிக் கப்பலில் யாழ் குடாவுக்கும்.. நயினாதீவுக்கும் போய் வர அன்றும் அனுமதித்தவர். பொங்கு தமிழ் நிகழ்வில் கூட பிக்குகள் சிலர் பங்குபற்றி இருந்தனர்.

ஏன்.. விக்னேஸ்வரன் கூட தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவர். குறிப்பாக போராளிகள் மீது. ஆனால்.. இன்று சூழ்நிலைகள் அவர்களை மாற்றி இருக்கிறது. அல்லது மாறச் செய்திருக்கிறது.

முஸ்லீம்கள்.. தமிழ் - சிங்கள முரண்பாட்டை உச்ச அளவில் பாவிச்சு தமிழ் மக்களையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்தே வாழ்ந்தவர்கள்.  அப்போதெல்லாம்... அவர்கள் தமிழ் - முஸ்லீம் நல்லுறவு பற்றி கிஞ்சிதமும் அக்கறை காட்ட முன்வரவில்லை.

இன்றைய சூழலில்.. எமது பிரச்சனைகளை இனங்காட்டவும் சிங்கள தேசமும்.. சர்வதேசமும் அதனை உணரச் செய்யவும் சில வழிமுறைகள் அவசியமாகிறது. எமது சுகபோக சுயபோக அரசியல்வாதிகள் மெளனிகளாகியுள்ள நிலையில்.

அந்த வகையில்.. இந்தப் பிக்கரை கறிவேப்பிலையாகப் பாவிப்பது தவறான ஒரு அணுகுமுறையாகத் தெரியவில்லை. அதனை தமிழ் மக்கள் அவரிடம் சரணாகதி அடைந்திட்டார்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

நாளை இவர் தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கினால்.. அதற்கு எதிராகவும் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதயில் குரல்கொடுக்க தயாராகவே உள்ள நிலையில்.. எமது சில அணுகுமுறைகளில் காத்திரமான சூழலுக்கு அவசியமான மாற்றங்கள் அவசியம். அது கொள்கைகளை விட்டுக்கொடுப்பதாகாது. எமது கொள்கைகளை அடுத்தவர் விளங்கச் செய்வதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் அவர்களின் சுய உரிமையோடு வாழனும் என்று இந்தப் பிக்கரை சொல்ல வைச்சதே பெரிய விடயம்.  இது சில அணுகுமுறை மாற்றங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கூட அமையலாம். 

தமிழ் மக்களுக்கு சுய உரிமை அவசியம்.. என்பதை இவர் மட்டுமல்ல.. தேசிய தலைவரை சந்தித்த வேறு சில பிக்குகளும் தென்னிலங்கையில் சொல்லியே வந்துள்ளனர். தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த பிக்குகள் சிலர் தென்னிலங்கையில் வாழ்ந்தும் வந்துள்ளனர். tw_blush:

1 hour ago, ragunathan said:

இதில் கவலை என்னவென்றால், இன்றுவரை எம்மின் இனம் மீதான மொழிரீதியான, சமய ரீதியான காலாசார ரீதியான முற்று முழுதான ஆக்கிரமிப்பை நடத்திவரும் ஒரு இனத்தின் இயங்கு சக்தியாக இருக்கும்  சிங்கள -  பெளத்த பேரினவாதத்தின் மூல வேரான பிக்குகளின் மிகத் துவேஷம் கொண்ட ஒரு இனவாதியிடமே தமிழர்கள் முஸ்லீம்களுக்கெதிராக உதவி நாடி சரணடைந்திருப்பதுதான்.

இங்கு தமிழர்கள் சரணடையவில்லை என்று நினைக்கிறேன். பிக்கு தான் தனது அரசியலை முன்னெடுக்க தமிழரிடம் சென்றுள்ளார்.

முன்னர் தமிழரை இணைந்து வேரறுத்து இருகுழுக்களில், இப்போது ஒருகுழு மற்றைய குழுவின் தமிழின அழிப்பை தமது சுயநலன்களுக்காக பயன்படுத்த முற்பட்டுள்ளது.

இதை தமிழர்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில் தவறில்லை. இரண்டு கொலைகாரக் கும்பலை மோத விடுவது தமிழரின் புத்திசாலித்தன அணுகுமுறைகளில் தங்கியுள்ளது.

  • தொடங்கியவர்
21 hours ago, Nathamuni said:

தூசனப்பிக்கர் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார்.

இந்தளவுக்கு தமிழர் அவரிடம் போகுமளவுக்கு... அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

 எல்லை மீறி நடந்து கொண்ட சுமணரத்ன தேரர் (வீடியோ வயது வந்தவர்களுக்கு மட்டும்)

வாழைச்சேனையில் பாடசாலை மைதானக் காணியை மீட்பதாக கூறி களத்தில் குதித்த சுமனரத்ன தேரர் & குழுவால் பரபரப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் வாதிகளை நம்பினால் பேசி பேசியே கடத்தியிருப்பார்கள் நாட்களையும் வருடங்களையும்  அதற்கிடையில் அங்கே புதிய புதிய கட்டிடங்கள் முளைத்து வந்திருக்கும்

போராட்டம் வெற்றி பெற்றுள்ளது அந்த காணி பாடசாலைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது :104_point_left:

கலந்து கொண்ட மக்கள் குறிப்பா சிங்கள மக்கள் அனைவருக்கும் நன்றிகள்  அந்த பிக்குவுக்கும் 

20800185_260724484444029_496147212827765

20799523_260724517777359_768619981101689

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனி ஒருவன் said:

தமிழ் அரசியல் வாதிகளை நம்பினால் பேசி பேசியே கடத்தியிருப்பார்கள் நாட்களையும் வருடங்களையும்  அதற்கிடையில் அங்கே புதிய புதிய கட்டிடங்கள் முளைத்து வந்திருக்கும்

போராட்டம் வெற்றி பெற்றுள்ளது அந்த காணி பாடசாலைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது :104_point_left:

கலந்து கொண்ட மக்கள் குறிப்பா சிங்கள மக்கள் அனைவருக்கும் நன்றிகள்  அந்த பிக்குவுக்கும் 

 

 

எதிர்பார்த்தது தான்.

இனவாதியாக அறியப்பட்ட தூசனப்பிக்கர், இதில் தலை போடும்போதே... எந்தப்பக்கம் நியாயம் உள்ளது என்று தெரியாமல் போய் மொக்கையீனப்பட மாட்டார்.

இந்த முடிவு பலரை நெளிய வைக்கும்.

பிக்கர் இப்போது தர்மசங்கட நிலைக்கு வருகிறார். இனி தமிழருக்கு எதிராக நடக்காமல் சார்பாகவே நடக்கவேண்டிய நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

இதில் கவலை என்னவென்றால், இன்றுவரை எம்மின் இனம் மீதான மொழிரீதியான, சமய ரீதியான காலாசார ரீதியான முற்று முழுதான ஆக்கிரமிப்பை நடத்திவரும் ஒரு இனத்தின் இயங்கு சக்தியாக இருக்கும்  சிங்கள -  பெளத்த பேரினவாதத்தின் மூல வேரான பிக்குகளின் மிகத் துவேஷம் கொண்ட ஒரு இனவாதியிடமே தமிழர்கள் முஸ்லீம்களுக்கெதிராக உதவி நாடி சரணடைந்திருப்பதுதான்.

அணமைக் காலம் வரை மட்டக்களப்பில் தமிழருக்கெதிராக மிகக் கடுமையான இனத்துவேஷத்தைக் கக்கி வந்த ஒரு பெளத்த பிக்கு இன்று தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்று ஊளையிடுவது சுத்த நாடகம். தமிழர்கள் இந்த பசப்பல்களுக்கு எடுபட்டுப் போனது நாம் இன்னும் எமது தவறுகளிலிருந்து எவற்றையுமே படிக்கவில்லை என்பதுதான்.

பேரினவதம் ஒரு சிறுபான்மையினத்தை தன்பக்கம் வைத்துக்கொண்டு இன்னொரு சிறுபான்மையினத்தை அழிக்கும் என்பது வரலாறு. 2009 வரைக்கும் அதுதான் நடந்தது. முஸ்லீம்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தமிழரை அழித்தது. தமிழரின் வீரியம் மழுங்கட்க்கப்பட்ட பின்னர், இப்போது தமிழரை அரவணைப்பதுபோல நடித்துக்கொண்டு முஸ்லீம்களை வதைக்கிறது. 

எய்தவர் இருக்க அம்பை நோவதா?

யாரையா போகவைத்தது ?

போக மாட்டார்கள் என்ற பெரு நம்பிக்கையில் தானே உதாசீனம் செய்தார்கள். 

இதிலே ஒரு நன்மை. தூசனப் பிக்கருக்கும் ஞானம் பிறந்திருக்கிறது. இனி தமிழருக்கு எதிராக அல்லாமல் சார்பாக நடந்து கொள்ள வேண்டிய நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

எதிர்பார்த்தது தான்.

இனவாதியாக அறியப்பட்ட தூசனப்பிக்கர், இதில் தலை போடும்போதே... எந்தப்பக்கம் நியாயம் உள்ளது என்று தெரியாமல் போய் மொக்கையீனப்பட மாட்டார்.

இந்த முடிவு பலரை நெளிய வைக்கும்.

பிக்கர் இப்போது தர்மசங்கட நிலைக்கு வருகிறார். இனி தமிழருக்கு எதிராக நடக்காமல் சார்பாகவே நடக்கவேண்டிய நிலை.

 தற்போதய நிலைப்படி ( கிழக்கு ) பிக்கு( சிங்கள மக்கள் ) இருக்கிரவர்களை வைத்து  முடிந்தளவு தமிழ் மக்களுக்கு சார்ப்பாக  பயன் படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் தழிழ் மக்கள்  காரணம் சொல்ல தேவையில்லை அதை உலகம் அறிந்ததே 

நேற்றய பத்திரிகையில் சிப்ளி பாறுக் என்பவர் உரை நிகழ்தினதா ஒரு செய்தி அதில் கிழக்கை மீண்டும் தமிழர்கள் கைப்பற்றி ஆட்சியமைப்பானார்கள் ஆனால்  முஸ்லீம் கள்  அடிமையாக வேண்டுமாம் தமிழர்களுக்கு இவரை போன்ற அரசியல் வாதிகளினாலேயே மக்களிடையே காழ்ப்புணர்ச்சி  தோற்றுவிக்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனி ஒருவன் said:

நேற்றய பத்திரிகையில் சிப்ளி பாறுக் என்பவர் உரை நிகழ்தினதா ஒரு செய்தி அதில் கிழக்கை மீண்டும் தமிழர்கள் கைப்பற்றி ஆட்சியமைப்பானார்கள் ஆனால்  முஸ்லீம் கள்  அடிமையாக வேண்டுமாம் தமிழர்களுக்கு இவரை போன்ற அரசியல் வாதிகளினாலேயே மக்களிடையே காழ்ப்புணர்ச்சி  தோற்றுவிக்கப்படுகிறது 

அது நேற்று.

இன்று ஆப்பு இறுகி விட்டது. நானா தேங்காப்பூவோட இருக்கட்டும்.

நாம  அரிசியுடன் சேருவோம். கிரி பத் ஆவோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அது நேற்று.

இன்று ஆப்பு இறுகி விட்டது. நானா தேங்காப்பூவோட இருக்கட்டும்.

நாம  அரிசியுடன் சேருவோம். கிரி பத் ஆவோம்.

 அதான் சொன்னேனே   காவிதான் ஆயுதம் முடிந்தவரை ஒவ்வொரு பிரச்சினையாக கிண்டி கிழங்கெடுப்போம் அடுத்த செங்கலடி பிரதேச செயலாளர் ஏற்கனவே தரமுடியாது அது மேச்சல் தரையென கூறிவந்த நிலங்கள் கூட கையப்படுத்தப்பட்டு அவரை உடனடியாக மாற்றமும் செய்துள்ளார்கள் அதையும் ஒருக்கா சரி பார்க்க வேணும்  அவர் உதய் சிறிதர் என நினைக்கிறேன்  இதுவும் ஓர் அரசியல் விளையாட்டு தான் 

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.