Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது புராதன வரலாற்று தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் 6000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் பயன்படுத்தியதாக கூறப்படும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரத்திலுள்ள இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவென அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கும் புவிச்சரிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/history/01/155420?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வுகளை எதுக்கு பிக்குகள் மேற்கொள்ளனும்... யாழ் பல்கலைக்கழகம் என்ன வாய் பார்க்கிறதா...??! 

அதுசரி.. கண்டுபிடிச்ச மனுசன்.. பெளத்தனோ... தமிழனோ..?! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் பெளத்தன்,அல்லது சைவ சிங்களவன்

6000 வருடங்களுக்கு முன் இன்றுள்ளமத வியாதிகள் எதுவும் மனிதனைப் பீடித்திருக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Alternative said:

6000 வருடங்களுக்கு முன் இன்றுள்ளமத வியாதிகள் எதுவும் மனிதனைப் பீடித்திருக்க வாய்ப்பில்லை.

அவையளின்ட ராமரும் இருந்திருக்க மாட்டாரோ?:10_wink:

  • தொடங்கியவர்
2 hours ago, nedukkalapoovan said:

இந்த ஆய்வுகளை எதுக்கு பிக்குகள் மேற்கொள்ளனும்... யாழ் பல்கலைக்கழகம் என்ன வாய் பார்க்கிறதா...??!

பெரும்பாலான யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சமூகம் தங்கள் மாதாந்த சம்பளத்தை மாதம் முழுவதும் எண்ணுவதிலேயே காலத்தை கழிக்கின்றனர்.

கடந்த 30 வருடங்களில் பேராசிரியர் துரைராஜா, போன்ற ஓரிருவரைத் தவிர சமூகத்துக்கு பயனுள்ளதை செய்த யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சமூகத்தை நான் அறியேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

....

வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது புராதன வரலாற்று தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் 6000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் பயன்படுத்தியதாக கூறப்படும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

.....

http://www.tamilwin.com/history/01/155420?ref=home-feed

இந்த அகழாய்வுகள், இலங்கையில் சிங்களன்தான் 'முதல் குடி' என நிரூபிப்பதாக அரசு அறிக்கை உடனே வருமே..? wolfman.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இந்த அகழாய்வுகள், இலங்கையில் சிங்களன்தான் 'முதல் குடி' என நிரூபிப்பதாக அரசு அறிக்கை உடனே வருமே..? wolfman.gif

இப்படியும் மாத்தலாம்.. ஆனால் மகாவம்சம் பிழைச்சிடுமே. மீண்டும் திருத்தி திருப்பி எழுதனும். ஏனெனில்.. அது கி.மு 200 ஆண்டுகளில் இருந்து தான் ஆரம்பிக்கிறதாத் தெரியுது. இது கி.மு 4000 ஆண்டுகள் என்றாகிடுதே...??! மிச்சத்தை எப்படி கூட்டிக் கழிக்கிறது. சிங்கத்தை வைச்சுப் பேய்க்காட்டலாம்.. ஆனால்.. கிடைச்சிருப்பது மனிதன் பயன்படுத்திய பொருள் எல்லோ..??! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

யோசிக்க வேண்டிய விசயம்தான்.. ஆனாலும் நரிகளுக்கு புத்தி சும்மா இராதே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 6000 ம் கி.மு வோ அல்லது கி.பி வோ.:unsure:

சிந்துவெளி முதல் தற்கால இலங்கையின் தெற்காக 200 கடல் மைல்கள் வரை பரவியிருந்த நிலப்பரப்பில் தமிழர் பரவி வாழ்ந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்!

சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 7000 ஆண்டுகள் முதல் அது பௌத்த மதவெறியர்களால் (ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால்) கி.மு. 200 இல் அழிக்கப்படும் வரையில் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.