Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்

Featured Replies

இசை, இது பற்றி உங்களுடன் உரையாடுவது ஆரோக்கியமாக இருக்கின்றது. இந்த திரியில் இதை மேலும் தொடர்வது சரியில்லை என நினைக்கின்றேன். நாம் தமிழர் திரியை எட்டிப் பார்க்க தொடங்குகின்றேன்.

  • Replies 57
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த திரியில் தனிப்பட்ட ரீதியில் சில கருத்து முரன்கள் இருந்தாலும் மிக நீன்ட காலத்திற்கு பின் யாழ் களத்தில் ஆரோக்கியமானதும் நாகரீகமான ஒரு கருத்தாடலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

நல்லது, தமிழக தமிழர்களுக்கு நல்ல தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்கும் நல்ல தமிழ் தலைமை வேண்டும் என்பதற்கும் இடையில் கடும் வேறுபாடு உண்டு. முதலில் தமிழ் தலைமை என்பது என்பதில் உள்ள தமிழ்  அடையாளம் பற்றி  கேள்விகள் உண்டு. சீமான் தமிழ் என்று அடையாளப்படுத்துவதும் டொனால் ட்ரம் 'அமெரிக்கர்களே முதல்' என்று முழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை என்பது என்னை போன்றவர்களின் கருத்து. முதலாவது சனநாயகம் இரண்டாவது பாசிசம்.
புலம்பெயர்  நாடுகளில் தேர்தல் அரசியல் மூலம் படிப்படியாக  எம்மவர்கள் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்ற இக் கால கட்டத்தில் இப்படியான சீமானின் / ட்ரம்பின் வாதங்களை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது

முன்னேறிய நாட்டு அரசியலுக்கும்....முன்னேறாத நாட்டு அரசியலுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.  இரு அரசியலையும் ஒப்பிடுவதே தவறு.அதுவும் ரொனால்ட் ரம்புடன் சீமானை ஒப்பிட்டது நையாண்டியின் உச்சக்கட்டம். ரம்ப் எப்படி தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல்  பல ஊடகங்களில் இப்போதும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
என்னது எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்றார்களா? அதுவும் சரிதான்....வந்து இறங்கினது முழுக்க அரசியல்/இனப்பிரச்சனை இல்லாத நாடுகள். பணவசதி படைத்த நாடுகள்...மாற்று அரசியல் தேவையே இல்லாத நாடுகள்.சகலரும் சமம் என்று போதிக்கும் நாடுகள்......தண்ணீரை வைத்து அரசியல் செய்யாத நாடுகள்.மொழியை வைத்து காள்ப்புணர்வு தெரிவிக்காத நாடுகள்.அயல் மாநிலத்தவனை இருத்திவைத்து அடிக்காத மக்கள்..
புலம்பெயர் தேசங்களில் நல்லது செய்ய போட்டி...
ஆசிய தேசங்களில் களவெடுக்க/ஊழல் செய்ய போட்டி....

புலம்பெயர் தேசங்களில் அரசியல் அரங்கில் முன்னேறும் எம்மவர்கள் முடிந்தால் எத்தியோப்பியா,எரித்திரியா,சோமாலியா போன்ற நாடுகளுக்கு போய் அரசியல் செய்யட்டும் பார்ப்பம்?????

9 hours ago, நிழலி said:

நல்லது, தமிழக தமிழர்களுக்கு நல்ல தலைமை ஒன்று வரவேண்டும் என்பதற்கும் நல்ல தமிழ் தலைமை வேண்டும் என்பதற்கும் இடையில் கடும் வேறுபாடு உண்டு. முதலில் தமிழ் தலைமை என்பது என்பதில் உள்ள தமிழ்  அடையாளம் பற்றி  கேள்விகள் உண்டு. சீமான் தமிழ் என்று அடையாளப்படுத்துவதும் டொனால் ட்ரம் 'அமெரிக்கர்களே முதல்' என்று முழங்குவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை என்பது என்னை போன்றவர்களின் கருத்து. முதலாவது சனநாயகம் இரண்டாவது பாசிசம்.
புலம்பெயர்  நாடுகளில் தேர்தல் அரசியல் மூலம் படிப்படியாக  எம்மவர்கள் அரசியல் அரங்கை நோக்கி நகர்கின்ற இக் கால கட்டத்தில் இப்படியான சீமானின் / ட்ரம்பின் வாதங்களை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியாது


 

புலம்பெயர் தமிழர் அரசியல் நகர்வும் டிரம்பின் கொள்கையும் தமிழக சூழலும் ஒப்பிட முடியுமா என்பது சிக்கலானது. 

தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழகத்தின் மொழி கலாச்சாரம் இயற்கை வளங்கள் வரலாறு அனைத்தும் திட்டமிட்டு சுரண்டப்படுகின்றது அழிக்கப்படுகின்றது சிதைக்கப்படுகின்றது. விவசயாம் நதிநீர் பங்கீடு மீனவர் பாதுகாப்பு என அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இவை நீண்டகாலமாக நடந்து வந்த போதிலும்   ஆரியத்துக்கு எதிராக எழுச்சிபெற்ற திராவிட ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழர்கள் இந்திய அதிகார வர்க்க ஒத்துழைப்புடன் அழிக்கப்பட்ட போது திராவிட ஆட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த இயலாமையில் இருந்தே திராவிடத்துக்குப் பதிலாக தமிழ்த்தேசீயம் தமிழகதத்தில் முனைப்புக்கொள்கின்றது. தமிழ்த்தேசீயம்  முள்ளிவாய்க்கால் முடிவில் இருந்து தமிழகத்தில் ஆரம்பித்து இப்போது தனது நாடு தனது வளம் விவசாயம் உரிமை மொழி பாதுகாப்பு என எப்படி இயல்பாக பயணிக்க முடியுமோ அவ்வாறே பயணிக்கின்றது. தற்போது சாதி மதத்தைக் கடந்து தமிழராக இணையவேண்டும் என்றளவில் அது தமிகத்தில் நகர்கின்றது. தமிழகத்தை தமிழன் அல்லாத ஒருவன் ஆழும்போது ஆழ்பவன் இந்தியன் ஆகின்றான். ரஜனிகாந் தமிழக அரசியலுக்கு வரக் கூடாது என்பது வெளித்தோற்றத்திற்கு கன்னடன் ஆழக்கூடாது என்பதுபோல் இருந்தாலும் அதன் உள்ளார்ந்த நோக்குள் இந்தியன் தமிழன் என்ற இரு தரப்பும் அடங்கியுள்ளது. இவ் உள்ளார்ந்த நோக்கு இல்லை எனில் தமிழகம் இழந்துகொண்டிருக்கும் மேற்கண்ட உரிமைகளை மீட்க முடியாது. இந்தியமயமாக்கல் உலகமயமாக்கல் என்ற இருபெரும் அசுர சக்தியில் இருந்து தமிழகம் தனது சுயத்தை தக்கவைக்க தமிழ்த்தேசீயத்தை கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் நிகழும். அது சீமான் திருமுருகன் காந்தியை கடந்து நிகழும். மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் வேற்று மொழிக்காரர் முதல்வராக முடியாது. இச்சூழலும் தமிழகத்தை தமிழர் ஆழவேண்டும் என்பதை வலிமைப்படுத்துகின்றது. 

அமரிக்க மண்ணின் பூர்வீக குடியான செவ்விந்தியர் தம்தான் அமரிக்காவை ஆழவேண்டும் என்றால் அது உரிமை. டிரம் அமரிக்கர் என்பது ஏற்கனவே பாசிசம். அவ் பாசிசத்தோடு தான் இதர வந்தேறுகுடிகளும் ஜனநாயகம் என்ற பேர்வையில் ஐக்கியமாகின்றது. 

ஜனநாயகம் பாசிசம் - பயங்கரவாதம் அரசபயங்கரவாதம் இவைகள் எல்லாம் சந்தர்ப்பம் சூழல் பெருளாதார வியாபார சூழுலுக்கேற்ப இடம் மாறிக்கொள்ளும். 

(நேரடியான பதில்கருத்தில்லை உங்கள் கருத்துக்கு மனதில் பட்டது அவ்வளவுதான்)

  • கருத்துக்கள உறவுகள்

(பிராமணப்) பூனை வெளியால வந்திருச்சு...

தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோர்க்க தயார்: நடிகர் கமல்ஹாசன் திடீர் பல்டி!

https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhassan-says-that-he-is-ready-alliance-with-bjp-296875.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Nathamuni said:

(பிராமணப்) பூனை வெளியால வந்திருச்சு...

தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோர்க்க தயார்: நடிகர் கமல்ஹாசன் திடீர் பல்டி!

https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhassan-says-that-he-is-ready-alliance-with-bjp-296875.html

 

கமல்ஹாசன் குறித்து அன்றைக்கே எச்சரித்த மணிவண்ணன் அவர்கள் ........

அருமையான பேச்சு......

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல.. கமல் வீட்டுக்கு நல்ல புருசனாகனும்.. அப்பாவாகனும்.. அதுக்குப் பிறகு தான் தமிழக மக்களுக்கு தலைவராவதா இல்லையான்னு.. மக்கள் தீர்மானிக்கனும்.

சும்மா சினிமால.. சிலம்பு கட்டினவன்/ள்.. எல்லாம்.. தமிழக மக்களை முட்டாள் ஆக்கினதும்.. உலகத் தமிழினத்தை அகதியாக்கி நாடற்றவராக்கி விட்டதும்.. போதும். :rolleyes:tw_angry:

பிள்ளையாருக்கே பெருச்சாளி.....

முன்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெறாத கம்னியுஸ்ட் கட்சி இன்று தமிழ்த்தேசியும் சார்ந்து நிற்கின்றது. த பாண்டியனின் உரை.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.