Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெர்சல் திரைவிமர்சனம்

Featured Replies

மெர்சல் திரைவிமர்சனம்

 
 
நடிகர்கள் Vijay, Samantha, Kajal Agarwal, SJ Surya, Vadivelu
இயக்கம் Atlee
 
 
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புதுப்படங்களும்தான். அதுவும் இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கும் படம் ‘மெர்சல்’.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பல தடைகளைச் சந்தித்த இப்படம், தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருந்தது. இந்நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து, இப்படம் வெளியாக உள்ளது.


இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ளது. இது அவர்களின் 100 வது படம் என்பதால் சுமார் 130 கோடி பட்ஜெட் செலவில் மிகப் பிரம்மாண்டமாக படத்தை எடுத்துள்ளனர். மேலும், சினிமா துறையில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் பாடல்களும், டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், படத்தின் சில புரோமோகளும் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் ஊர் காவலர், மேஜிக்மேன் மற்றும் டாக்டர் என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் மெர்சல் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
ரிவியூ
வழக்கமான கதைகளத்துடன் மெர்சல் படத்தின் முதல் பாதி அமைந்துள்ளதாகவும், விஜய்யின் வழக்கமான ஸ்டைலான நடனம் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளது. பிஜிஎம்., மிரட்டலாக இருந்தாலும், இரண்டாம் பாதி, கிராமத்து கதையில் வரும் விஜய் வெற்றி மாறன். ஆனால் மிக நீண்ட பிளாஸ்பேக், கணிக்கும் விதத்தில் கிளைமாக்ஸ் என அட்லீயின் அதே ஸ்டைல் தொடர்கிறது.

மொத்தத்தில்

மெர்சல் முதல் பாதி கொண்டாட்டம், இரண்டாம் பாதி அரைத்த மாவு....

https://tamil.samayam.com

  • தொடங்கியவர்

மெர்சல் திரைவிமர்சனம்

card-bg-img
 

 

தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3 விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

மருத்துவரான மாறன் சிறந்த மனிதநேய தொண்டாற்றியதற்காக ப்ரான்ஸில் விருது வாங்க செல்கின்றார். அங்கு அவரை சந்திக்கும் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் எங்களுடன் வா என்று கட்டளையிட, விஜய் வர மறுக்கின்றார்.

அதை தொடர்ந்து விஜய்யை விலைபேச நினைக்கும் டாக்டர், ப்ரான்ஸில் நடக்கும் மேஜிக் ஷோவில் கொல்லப்படுகின்றார். இதையெல்லாம் செய்தது யார் என்று காவல்துறை அதிகாரி சத்யராஜ் தேடி வர மாறனாக இருக்கும் பிடிப்படுகின்றார்.

அதே நேரத்த்தில் எஸ்.ஜே.சூர்யா மாறனை யதார்த்தமாக தொலைக்காட்சியில் பார்க்க, அவருக்கு சில நினைவுகள் வந்து உடனே மாறனை கொல்ல கட்டளையிடுகின்றார்.

உடனே அவரின் அடியாட்கள் மாறனை கத்தி முனையில் வைக்க, அதை தொடர்ந்து பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. எஸ்.ஜே.சூர்யா ஏன் மாறன் விஜய்யை கொலை செய்ய சொன்னார், எதற்கு ப்ரான்ஸில் அந்த டாக்டரை விஜய் கொன்றார் என பல காட்சிகளுக்கான விடை இரண்டாம் பாதியில் தெரிகின்றது.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஒன் மேன் ஷோவாக படம் முழுவதும் காலில் சக்கரம் கட்டி சரவெடியாக வெடிக்கின்றார். ஒரே நேரத்தில் மருத்துவராக இருந்துக்கொண்டு, அப்படியே மேஜிக் செய்யும் காட்சிகள் படத்தில் உண்மையாகவே எத்தனை விஜய் என்று யோசிக்க வைக்கின்றது. இதையெல்லாம் விட தூக்கி சாப்பிடுவது மதுரை தளபதி தான்.

வேஷ்டி, சட்டை என மீசையை முறுக்கி அவர் சண்டைப்போடும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. படத்தின் கதைக்களம் மக்களின் மிக முக்கியமான தேவைகளின் ஒன்று, அதில் விஜய் போல் மாஸ் ஹீரோ நடிப்பது பட்டித் தொட்டியெல்லாம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் படத்தின் பல காட்சிகளில் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே தான் வசனங்கள் நிறைந்துள்ளது. ஏன் அட்லீ இப்படி? என்று கேட்க வைக்கின்றது, ஆனால், ‘இன்று சிசேரியன் குழந்தை என்றால் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள், இன்னும் 30 வருடம் கழித்து சுகபிரசவம் என்றால் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’ என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் தற்போதுள்ள சூழ்நிலையை கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா இரண்டு சீன் வந்தாலும் சரி, மூன்று சீன் வந்தாலும் சரி தனக்கான கதாபாத்திரத்தில் கலக்கிவிடுகின்றார். ஆனால், அவ்வப்போது ஸ்பைடர் வாசனை வருகின்றது, கொஞ்சம் ரூட்டை மாற்றுங்கள் சார்.

படத்தின் மிகப்பெரும் பலமே மதுரை போஷன் தான். விஜய்க்கும், நித்யா மேனனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி மிகவும் கவர்கின்றது. அதிலும் அவர் நித்யா மேனனிற்கு பிரசவம் நடக்கும் போது தன் மூத்த பையனிடம் கதை சொல்லும் காட்சி செம்ம க்ளாஸ்.

அதே நேரத்தில் படத்தின் நீளம் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கின்றது. என்ன தான் காட்சிகள் நன்றாக இருந்தாலும் படத்தின் நீளம் ஒரு கட்டத்தில் பொறுமையை சோதிக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து பார்முலா.

டெக்னிக்கலாக படம் மிகவும் பலமாக உள்ளது, அதிலும் விஷ்ணுவின் ஒளிப்பதிவு முதல் படம் என்று யார் சொன்னாலும் நம்ப முடியாது. ரகுமானின் பாடல்கள், பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது, ஆளப்போறான் தமிழன் ரிப்பீட் மோட் தான்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் நிலவும் விஷயங்களுக்கு மிக ஏற்ற கதை.

விஜய் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கின்றார். பாடல் காட்சிகளில் எல்லாம் இந்த வயதிலும் நடனத்தில் தூள் கிளப்புகின்றார்.

மதுரை ப்ளாஷ்பேக் காட்சிகள். விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை

பல்ப்ஸ்

சத்யராஜ், காஜல், சமந்தா இவர்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றார்கள். ஆனால், ஏன் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் மட்டுமில்லை இயக்குனரே மறந்துவிட்டார்.

வடிவேலுவின் எந்த ஒரு காமெடி காட்சியும் பெரிதும் க்ளிக் ஆகவில்லை.

படத்தின் நீளம், இன்னும் கொஞ்சம் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் மெர்சலில் விஜய் சொன்னது போல் அவர் மிரட்டிவிட்டார், ஆனால், அட்லீ மிரட்டவில்லையே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையெடுத்து கும்பிட்டு சொல்றான் நிம்மதியா வீட்டுல தூங்கி இருக்கலாம் னு.....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

'மெர்சல்'னா இன்னாபா அர்த்தம்..?னு இங்கே கேட்டதில், மென்டல் என்பதுதான் மருவி 'மெர்சலா'யிட்டது என சொல்கிறார்கள் விவரமறிந்த பெரியோர்கள்.

  • தொடங்கியவர்

விஜய்க்கு இன்னொரு ஹிட் பார்சேல்ல்ல்ல்..! - மெர்சல் விமர்சனம்

 
 

ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்பவர் டாக்டர் மாறன் (விஜய்). இந்தச் சேவையைப் பாராட்டி மனிதநேய விருது வழங்குவதற்காக பாரீஸ் அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் திடீரென ஊரில் சில மருத்துவர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தியது யார் என போலீஸ் நூல் பிடிக்க அது டாக்டர் விஜயின் வீட்டுக்குள் வந்து முடிகிறது. அவரைக் கைது செய்து, "உயிரைக் காக்க நினைக்கும் மருத்துவர் நீ, நீயே எதுக்கு மருத்துவர்களைக் கடத்தியிருக்க?" விசாரணையை ஆரம்பிக்கிறார் போலீஸ் அதிகாரி சத்யராஜ். அதற்கு பதில், ஃப்ளாஷ் பேக்குகள்.  ஒன்று 1979ல் மதுரையில் வசித்த முறுக்கு மீசை வெற்றிமாறனுடையது. நடந்த கடத்தல்கள் எதற்காக, முறுக்குமீசை விஜய்க்கு என்ன ஆனது, இன்னொரு விஜய் இருக்கிறாரா அல்லது அதே டாக்டர் விஜய்தானா என்பதை எல்லாம் `பீஸ் ப்ரோ' என அமர வைத்து நிதானமாக சொல்கிறது `மெர்சல்'

மெர்சல்

 

`தெறி'யையும் விட இன்னும் அதிக மாஸ் ஏற்றி ஒரு படம் கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய். அதில் வெற்றிதான்.  விஜயின் 3 கதாபாத்திரங்களையும் வித்தியாசம் காட்டும்படி எழுதிய விதமும் அதை திரையில் கொண்டு வந்த விதமும் நேர்த்தி. 

படத்தின் பாகுபலி விஜய்தான். டைட்டில் கார்டில் இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு ப்ரோமோட் ஆகியிருக்கிறார் விஜய். தளபதி என்ற டைட்டிலுக்கும், ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கும் கூட திரைக்கதையில் சின்ன லாஜிக் பிடித்திருக்கிறார் அட்லி. ஸ்டைலான தாடி, ஃபிட்டான உடம்பு என படத்துக்காக நிறையவே மாறியிருக்கிறார் விஜய். இதைத்தான் இத்தனை நாளாய் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்படி சின்ன சின்ன சர்ப்ரைஸ் தொடரட்டும் விஜய். படம் நெடுக நிறைய கண்ணிகள். திரைக்கதையின் பிற்பகுதியில் அவை திரும்ப வரும்போது “வாவ்” என்றிருக்கிறது. தனக்காக கட் அவுட் வைக்கப்போகும் சிறுவனிடம் “அதெல்லாம் வேணாம். நாலு பேருக்கு அந்தக் காசுல உதவி பண்ணு” என ஒரு வசனம். நோட் பண்ணுங்க விஜய் ஃபேன்ஸ்!

vijay19_vc2_14503.jpg

ஆட்டம்பாட்டம், ஆக்க்ஷன், அழுகை, மேஜிக் என ஆல் ஏரியாவிலும் கில்லியாடுகிறார். தெறியில் இரண்டு கெட்டப்களில் வந்து மெர்சல் காட்டிய விஜய்க்கு இது இன்னும் ஒரு படி மேல். மதுரை மைந்தனாக  `தெரியாம வேலியை போட்டாய்ங்க... அதான் என்னாங்கடானு கேட்டேன்' என கேட்பெதெல்லாம் டன் கணக்கில் கெத்து. சமந்தாவிடம் "ரோஸ்மில்க்கா க்கா?" என சிறுவனாய் குழைவதும், "மொத்தம் 22 மாநிலம் இருக்கே, 20 குழந்தைங்கன்னா 2 இடிக்குதே" என நித்யா மேனனிடம் கரைவதுமாய் ரொமான்ஸிலும் பக்கா.  புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என சில ஆண்டுகளுக்கு முன் வாக்கு கொடுத்திருந்தார் விஜய். சொன்னபடியே கடைப்பிடித்தும் வந்தார். ஆனால் இந்தப் படத்தில் விஜயை, மீண்டும் புகைக்க வைத்திருக்கிறார் அட்லீ. அந்தக் காட்சியில் அது அவசியமும் இல்லை. ஏணுங்கண்ணா?

Vijay

படத்தில் மூன்று கதாநாயகிகள். காஜல், சமந்தா சில காட்சிகளில் வருகிறார்கள். விஜய் சமந்தாவுக்கு இடையிலான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனாலும் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வெயிட்டான ரோல் என்பதால் முதலிடம் பிடிக்கிறார் நித்யா மேனன். வடிவேலுக்கு அசம்பாவிதமாய் நிகழ்ந்த 'கத்திச் சண்டை'யை தவிர்த்துவிட்டு பார்த்தால் இது வெல்கம் கம்பேக். ஆனாலும் விஜய் - வடிவேலு இணையின் டிராக் ரெகார்ட் பார்க்கும்போது காமெடி மிஸ் ஆகும் பீல். அடுத்து, இரண்டு காட்சிகளே வரும் யோகிபாபுவின் காமெடிக்கு பிரமாதமான ரெஸ்பான்ஸ.எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்டைலிஷான கெட்டப் கொடுத்து வழக்கமான வில்லன் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மாஸ் படத்துக்கே உரிய குரல் மட்டும் கொடுக்கும் பலவீனமான வில்லனாக வந்து போகிறார். நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஹரீஷ் பெரடி, கோவை சரளா என பலர் இருந்தாலும், படம் முழுக்க விஜய் மட்டுமே தெரிகிறார்.

பஞ்சாபின் பொட்டல்காடு,  வெளிநாடு,  திருவல்லிக்கேணி ஹவுசிங்போர்டு என சகலமும் நம் கண்ணை நிறைக்க ஒரே காரணம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. முதல் படம் என்பதை அவரே சத்தியம் செய்தாலும் நம்பமுடியாது. ஆளப்போறான் தமிழன் பாடல் அவருக்கான நிரந்தர விசிட்டிங் கார்டு. கமர்ஷியல் படம். அதுவும் விஜய் படம். ஆக்க்ஷன் காட்சிகள் அதகளப்படும்தானே. இது அதுக்கும் மேல என மிரட்டியிருக்கிறார் அனல் அரசு. ஒவ்வொரு அடியும் 'அப்ப்ப்ப்படி' விழுகிறது. ஆனாலும் படம் முழுக்க தெறிக்கும் ரத்த துளிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். ரஹ்மான் பாடல்களில் கெத்து காட்டியிருக்கிறார். தெறிக்கவிடும் தீம், உருக்கும் பேத்தோஸ் தாண்டி ரஹ்மானின் சர்ப்ரைஸ் - 'சைலன்ஸ்'. நித்யா மேனன் தொடர்பான குறிப்பிட்ட காட்சியில் ரஹ்மான் கொடுக்கும் அந்த அமைதி... செம்ம.

மெர்சல்.


`மனிதாபிமானம்ங்கறது ஸ்பெஷல் குவாலிட்டி இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி' என  மேலோட்டமான வசனங்கள் படத்தின் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மேலும் ஏற்கெனவே நீளமாக செல்லும் படத்தில், அந்த ஃப்ளாஷ் பேக்கும் நீளமாக இருப்பதால் சோர்வடையச் செய்கிறது. வடிவேலுவுக்கு  இன்னொரு விஜய் எங்கு இருக்கிறார் என எப்படித் தெரிந்தது, பஞ்சாப் பெண் நித்யா எப்படி மதுரை தமிழ்,  இப்படியான லாஜிக் களேபரங்கள் அனைத்தையுமே, மேஜிக் என்ற ஒற்றை வார்த்தையில் டிக் அடிக்கிறது மெர்சல். திரைக்கதைக்கு அட்லீ முதல் விஜயேந்திர பிரசாத் வரை நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். அவ்வளவு உழைப்பிற்கும் ஒரு மாஸ்டர்பீஸ் திரைக்கதை தந்திருக்கலாம். ஆனால் யூகிக்கும்படியான காட்சிகள் தந்திருப்பது மைனஸ். 

படத்தில் எக்கசக்க குறியீடுகள். வேட்டி சட்டை புகழ் பாடுவது, தலைவன் பன்ச், எம்.ஜி.ஆர் உருவகம், போக பார்ப்பவர்கள் எல்லாம் 'நீ தெய்வம்யா' என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியில் கையில் திருப்பி பிடித்த அருவாளோடு ' ஒருநாள் எங்க கை ஓங்கும்டா' என கம்யூனிச பன்ச் பேசுகிறார் விஜய்.

 

 

கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் என எல்லாவற்றிலும் அசத்தி இருக்கிறார் அட்லீ (எத்தன...). அபூர்வ சகோதரர்கள் கதையையே கொஞ்சம் ஆல்டர் செய்து, அதற்குள் சர்ஜிகல் எரர் இறப்பு, எலி கடித்து இறந்த இன்குபேட்டர் குழந்தை, கார்ப்ரேட் கைகளில் இருக்கும் மருத்துவம் என பல விஷயங்களைப் வைத்த விதம் நன்று. தியேட்டரில் படம் பார்க்கும் ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் கலை  நன்றாகவே கைவருகிறது. ஆக்க்ஷன், சென்டிமென்ட், காமெடி என சரியான மிக்சிங்கில் பரிமாறியிருக்கிறார். ஆனால், அடுத்த லெவலுக்கு செல்ல ஏற்கெனவே வந்த படங்களின் சாயல் இருப்பதை கட்டாயம் தவிர்க்கணும் ப்ரோ. சிவாஜி, கஜினி, ரமணா என பல படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள் நிறைய. 

 

கொண்டாட்ட மனநிலையில், எந்தக் குறைகளும் தியேட்டரில் இருக்கும் போது தெரியவில்லை என்பதால் மெர்சல் மூலம் இன்னொரு ஹிட் பார்சல்.

http://cinema.vikatan.com/movie-review/105290-mersal-movie-review.html

  • தொடங்கியவர்

மெர்சல் பட விமரிசனங்கள்: ரசிகர்கள் குஷி!

 

 
mersal-15

 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். 

இன்று வெளியான மெர்சல் படத்துக்கு, நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளன. திரையுலகினர், விமரிசகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் விஜய் இன்னொரு ஹிட் படம் கொடுத்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்ளார்கள். வசூலிலும் மெர்சல் படம் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

mer88.jpg

mer5.jpg

mer4.jpg

mer2.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/18/மெர்சல்-பட-விமரிசனங்கள்-ரசிகர்கள்-குஷி-2792272.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: மெர்சல்

தந்தையைக் கொன்றவர்களை, மகன் பழிவாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் பல நூறு வந்துவிட்டன. அவற்றில், கமல் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படமும் ஒன்று. பாணியில் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் மெர்சல்.

மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGOOGLE

கதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம்.

படம் தொடங்கும்போது, சிலர் கடத்தப்படுகிறார்கள். ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யும் மாறன் (விஜய்), விருது ஒன்றைப் பெற வெளிநாட்டுக்குச் செல்லும்போது, மிகப் பெரிய மருத்துவரான அர்ஜுன் சக்காரியா (ஹரீஷ் பெராடி) ஒரு மேஜிக் ஷோவில் கொல்லப்படுகிறார்.

முன்னதாகக் கடத்தப்பட்டவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். மாறனைக் கைதுசெய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை.

அப்போதுதான், இந்த சம்பவங்களில் ஈடுபட்டது, மருத்துவர் மாறன் அல்ல, அவரைப் போலவே இருக்கும் வெற்றி (விஜய்) என்பது தெரியவருகிறது. காவல்துறை வெற்றியைத் தேடும் அதே நேரம், மிகப் பெரிய மருத்துவக் குழுமத்தின் தலைவரான டேனியல் ஆரோக்கியராஜும் (எஸ்.ஜே. சூர்யா) வெற்றியைத் தேடுகிறார்.

   
திரைப்படம் மெர்சல்
   
நடிகர்கள் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ஹரீஷ் பெராடி, வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ்
   
இசை ஏ.ஆர். ரஹ்மான்
   
ஒளிப்பதிவு ஜி.கே. விஷ்ணு
   
இயக்கம் அட்லி
   

இந்தக் கொலைகளுக்கு என்ன காரணம், மாறனும் வெற்றியும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள், டேனியல் ஏன் வெற்றியைத் தேடுகிறான் என்பது மீதிக் கதை.

வில்லன்களால் கொல்லப்படும் தந்தை, ஆள் மாறாட்டம் செய்து பழிவாங்கும் மகன்கள் என்பது போன்ற கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் தனித்துத் தெரிவது மருத்துவத் துறையை களமாகத் தேர்வுசெய்திருப்பதுதான்.

பொது மருத்துவ வசதி, பெரிய மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் போன்றவற்றை கதையின் ஊடாக தொட்டுக்காட்டுகிறார் விஜய். இது தொடர்பான வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது.

மெர்சல் திரைப்படம்படத்தின் காப்புரிமைYOUTUBE

ஆட்கடத்தல், வெளிநாட்டில் விறுவிறுப்பான காட்சிகள், இரண்டு நாயகர்கள், நாயகிகளின் அறிமுகம் என முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர், இரண்டாவது பாதியில் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறார்.

மதுரையில் நடப்பதாகச் சொல்லப்படும் வெற்றிமாறனின் கதையில் வரும் நித்யா மேனன் வசீகரித்தாலும், ரொம்பவுமே நீளமாக இருப்பதால் பெரும் சோர்வை ஏற்படுத்துகிறது.

வெற்றி, மாறன், வெற்றி மாறன் என விஜய்க்கு மூன்று வேடங்கள். முதல் இரண்டு வேடங்களில் பெரிய வித்தியாசமில்லை. வெற்றி மாறன் பாத்திரத்தில் மட்டும் முந்தைய இரு பாத்திரங்களில் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கிறார் விஜய்.

மூன்று கதாநாயகிகள், இரண்டு வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தை முழுக்க முழுக்க விஜய்யே காப்பாற்றுகிறார். சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் ரசிகர்களை குதூகலிக்கவைக்கின்றன.

மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைTWITTER

காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என படத்தில் மூன்று நாயகிகள். அதில் வெற்றி மாறனின் மனைவியாக வரும் நித்யா மேனனுக்கு மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. காஜல் அகர்வால் இரண்டு காட்சிகளிலும் ஒரு பாடலிலும் வந்துவிட்டுப் போகிறார்.

 

சமந்தா, "தம்பி, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன், வாரியா" என்று கொஞ்சலுடன் கேட்டு சில காட்சிகளில் மட்டும் வசீகரிக்கிறார்.

'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்

ஸ்பைடர் படத்தில் வில்லனாக அசரவைத்த எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்திலும் வில்லனாக வந்து கலகலப்பூட்டுகிறார். சத்யராஜுக்கும் கோவை சரளாவுக்கும் மேலும் ஒரு படம்.

வெகு அரிதாகவே படங்களில் தலைகாட்டும் வடிவேலுவுக்கு இந்தப் படத்தில் குணச்சித்திர வேடம் என்றுதான் சொல்லவேண்டும். சில காட்சிகளில் லேசாக புன்னகைக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் யோகி பாபு கலகலப்பை ஏற்படுத்துவிட்டு காணாமல் போகிறார்.

அபூர்வ சகோதரர்கள், ரமணா படங்களை இணைத்து ஷங்கர் பாணியில் உருவாக்கப்பட்ட படம். விஜய் ரசிகர்கள் கொண்டாடக்கூடும். மற்ற திரை ரசிகர்களுக்கு மேலும் ஒரு சராசரியான திரைப்படம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41668168

மக்களுக்கான மருத்துவம் என்ற கருத்தை கருவாக வைத்து நகரும் இந்த திரைப்படம் பல வருடமாக சீமான் பேசும் கருத்துக்களையே விஜய் பேசுகின்றார். ஆனால் விஜய் ரசிகர்கள் விஜய் பேசுவதாகவும் அவரே தலைவர் தளபதி என்றும் கத்துகின்றனர். அதே பேல் தான் ஜல்லிக்கட்டு கட்சிகளும் மாடுகளும் படத்தில் வருவது. சமகாலப் பிரச்சனைகளையும் மக்கள் போராட்டங்களையும் எழுச்சிகளையும் திரைப்படத்தின் ஊடாக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஆதரிப்பதற்கு பதிலாக அபகரிப்பது சமூக்திற்கு கேடானது. வருடக்கணக்க கஸ்டப்பட்டு பலர் கட்டும் வீட்டுக்கு கடசியில்  வேறு ஒருவன் புகுமனை புகுவிழா நடத்திவிட்டு குடியேறுவது போலானது. பார்க்கிறவனுக்கு பால்காயச்சியவன்தான் சொந்தக்காரன் ஆகின்றன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்துக்கு கட்டாயம் இசை ஒரு  லைக் போடணும்:grin:

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'மெர்சல்'- மிரட்டல்!

 

 
mersal1

‘மெர்சல்’ டீஸரில் விஜய்

விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியுள்ள படம் 'மெர்சல்'. இப்படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sonia Arunkumar

விஜய் ஹேட்டர்ஸ்க்கு சொல்ல ஒண்ணு மட்டும்தான் இருக்கு: 'சில்லாக்கி டும்ம்ம்'

#மெர்சல்

ரத்தினசாமி

மல்டிப்ளக்ஸ் தியேட்டரில்: என்ன படத்துக்கு டிக்கெட்??

நான்: புரூட் மிக்சர் ஒண்ணு கொடுங்க

தியேட்டரில்: அப்டினா??

எல்லா படக் கதையும் கலந்த படம் ஒண்ணு ரிலீஸ் ஆகிருக்காம்ல அதுக்கு..!

#மெர்சல்

குருபிரசாத் தண்டபாணி

ஒரு Anti Vijay fan சொல்றேன் படம் அருமையா இருக்கு. #மெர்சல்

கரிகாலன்

ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் கம்பெனிகள் கருத்து சொல்லும் அதே டைப் கதை. டிக்கெட் பின்னால் எழுதிவிடலாம்.

Suresh Eav

விஜய் சார் ஹேட்ஸ் ஆஃப், தளபதி கேரக்டரும், மெஜிஷியன் கேரக்டரும் அருமை. சோசியல் மெசேஜ் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து பண்ணுவதில் மகிழ்ச்சி. இளமையின் ரகசியம் என்னவோ?

மூன்று ஹீரோயின் இருந்தும் மனதில் நிற்பது நித்யாமேனன் கதாபாத்திரம். மற்ற இரு ஹீரோயினும் ஊறுகாய். வடிவேலு வழக்கம்போல அசத்தல்.

திருவிழா காலத்தில் வந்திருக்கும் மாஸ் கமர்ஷியல் படம் #மெர்சல்

Rajavel Nagarajan

மெர்சல் பற்றி நிறைய பாசிட்டிவ் ரிப்போர்ட்கள் கேள்விப்படுகிறேன். அட்லி நல்ல திறமையாளர். சந்தேகமே இல்லை. ஆனால் 'ராஜா ராணி' மௌன ராகத்தின் காப்பியா என கேட்டதற்கு, 'மௌனராகம்' என்ற படத்தை தான் பார்த்ததே இல்லை என்று ஒரு நேர்காணலில் சொன்னதை அட்லி இப்போதாவது வாபஸ் வாங்க வேண்டும்.

இல்லையென்றால் 'சத்ரியன்', 'அபூர்வ சகோதரர்கள்' என எந்த தமிழ்ப்படத்தையுமே பார்த்ததில்லை என தொடர்ந்து பொய் சொல்ல வேண்டியிருக்கும். பழைய படங்களை புது ஃபார்மட்டில் சுட்டு A film by Atlee என போடுவதை விட, Inspired by என ஒரு கார்ட் போடுவது இழுக்கு ஒன்றுமில்லை. Peace Bro, please Bro!

விஷ்வா விஸ்வநாத்

தல ஃபேன்ஸ், ஆஃப் மோட் போனதில் இருந்தே மெர்சல் கெலிச்சிருச்சுன்னு தெரியுது ;)

Suresh

என்னதான் இருந்தாலும் சமூகக் கருத்துகளை வச்சு ஆட்சியாளர்களைத் தைரியமா குறை சொல்லி ஒரு பக்கா கமர்சியல் படம் பண்ண ஒரு தைரியம் வேணும், அந்த வகைல இளையதளபதி கெத்துதான். #மெர்சல் ...

Kishore Kumar

மெர்சல் - நல்லாருக்கு. ஆனா மெர்சல்-லாம் ஆகலை!

Sam Nathan

மெர்சல் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விளக்கும் படம். பல காட்சிகளில் விஜய் சீமானாக உருவெடுத்தது ஆச்சரியம்!

முகிலன்‏ @MJ_twets

எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் அந்த காசுக்கு நாலு பேருக்கு நல்லது செய் நண்பா. #மெர்சல் மெசேஜ்.

K N A‏ @Always_KNA

யாரு சொல்றதயும் காதுல வாங்காமப் போய் மெர்சல் படத்த பாருங்க.. இது தமிழர்களுக்கான படம்.

சிந்தனைவாதி‏ @PARITHITAMIL

பழைய பழிவாங்கும் கதையே என்றாலும் இன்றைய சமூக, அரசியல் அவலங்களை நையாண்டி செய்யும் திரைப்படம் #மெர்சல்.

Jeyanthan Jesudoss

மெர்சல் - மிரட்டல்

கடந்த பத்தாண்டுகளில் விஜய் நடித்த மிக மோசமான படம் 'சுரா' என்றால் மிகச் சிறந்த படம் 'மெர்சல்'. குருவின் பாதையில் நட்சத்திர நடிகரை வைத்து இன்றைய முக்கிய சமூக அவலம் ஒன்றை நோக்கித் துணிந்து சாட்டையைச் சொடுக்கியிருக்கும் அட்லியை தமிழ் வெகுஜன சினிமாவுக்கு கிடைத்த சிறந்த 'சர்ஜன்' என்பேன்.

தனது குரு ஷங்கரின் 'நண்பனை'யும் முருகதாஸின் 'கத்தி'யையும் மீறி நிற்கிறது 'மெர்சல்'. வயது கூடியதில் கதைத் தேர்வு, நடிப்பு இரண்டிலுமே பக்குவம் கூடியிருக்கும் விஜய் கரங்கள் உயரும் என்கிறார். தமிழகத்தின் இன்றைய பெரும்பான்மை உணர்வை ஸ்கேன் செய்து கேச் செய்த அட்லி இன்னும் உயரங்களைத் தொடுவார் எனத் தோன்றுகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/article19882870.ece

  • கருத்துக்கள உறவுகள்

ஹெட்டப்.. ஹிப் ஹாப் ஆதிமாதி இருக்கு.

எல்லாம் காப்பி போல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

...சமகாலப் பிரச்சனைகளையும் மக்கள் போராட்டங்களையும் எழுச்சிகளையும் திரைப்படத்தின் ஊடாக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஆதரிப்பதற்கு பதிலாக அபகரிப்பது சமூக்திற்கு கேடானது. வருடக்கணக்க கஸ்டப்பட்டு பலர் கட்டும் வீட்டுக்கு கடசியில்  வேறு ஒருவன் புகுமனை புகுவிழா நடத்திவிட்டு குடியேறுவது போலானது. பார்க்கிறவனுக்கு பால்காயச்சியவன்தான் சொந்தக்காரன் ஆகின்றன்.

Thathu.jpg.jpg

  • தொடங்கியவர்

மெர்சலை மிரட்டும் தமிழிசை, ‘தி டிக்டேட்டர்’ பார்த்தால் என்ன செய்வார்?

`மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கும் டாக்டர்கள்... இப்படி அரசியல், சமூகம் சார்ந்த சில வசனங்கள் வரும். அதற்கு அரசியல் தளத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. `சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்கிறார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.  ``நூறு டாக்டர்களில் பத்துப் பேர் இப்படி மருத்துவத்தை பிசினஸாகப் பயன்படுத்துவர். அது தவறு என்று புரிபவர்களுக்கே நான் சொல்வது கோபத்தை உண்டாக்கும்” என்று இதில் ஒரு வசனம் வரும். 

mersal

 

அதுபோல, ‘தாம் செய்வதெல்லாம் தவறுதான். அவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன’ என்ற எண்ணம் உடையவர்களுக்கு மட்டும்தான் தனது கொள்கைகளை விமர்சிக்கும்போது கோபம் வரும். அப்படியானால், `இவர்களின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவிவிட்டன என்பதை இந்த அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?' என்ற கேள்வியை முன்வைத்து இதைவிட தீவிரமாக அரசியலை நையாண்டி செய்வதற்காகவே ஹாலிவுட்டில் 2012-ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்தது. அது, `தி டிக்டேட்டர்' (The Dictator).

மன்னராட்சி நடக்கும் வட ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி வடியா நாடு. அங்கு ஜனநாயகம் என்பது கடுகளவும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக இருப்பார் சர்வாதிகாரி ஹஃபீஸ் அலாதீன். அவரைப் பற்றியும் அவரது அரசியல் கொள்கைகள் பற்றியதுமான கதைதான் இந்த `டிக்டேட்டர்'.

ஆரம்பக் காட்சியில் அலாதீனிடம் ஒரு பத்திரிகையாளர், `நீங்கள் நியூக்ளியர் ஆயுதம் வைத்திருக்கிறீர்களா?’ என்ற கேள்வியைக் கேட்பார். ஆனால், அதை அலாதீன் கேட்காத மாதிரியே இருப்பார். அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்கும்போதும் அவரின் பதில், `ஸாரி, எனக்குக் கேட்கவில்லை’ என்பார். பின்னர் வேறொரு கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கேட்கும்போது, `ம்ம்… இப்போ கேட்குது’ என்பார். நம் அரசியல்வாதிகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் எவ்வாறு பதில் சொல்கிறார்கள் என்பதையும் இந்தக் காட்சியையும் பொறுத்திப்பாருங்கள். `நாம் ஒண்ணு கேட்க, அதைக் கேட்காத மாதிரியே இருந்துவிட்டு, நாம அசந்துபோற மாதிரி வேறொரு பதில் சொல்வாங்க பாருங்க… அடேங்கப்பா பிரமாதமா இருக்கும்!

mersal, the dictator

வடியாவுக்கென்றே தனித்தன்மை வாய்ந்த ஓர் அகராதி இருக்கும். அதில் இருக்கும் 300 வார்த்தைகளை `அலாதீன்’ என்றே மாற்றிவைத்திருப்பார். பெரும்பான்மையான சொற்கள் அவரது பெயரிலேயே இருக்கும். உடனே நீங்கள், `தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அந்தத் திட்டங்கள் அப்போது ஆளும் அரசின் தலைவர்கள் பெயரில்தான் செயல்படுத்தப்படும்’ என்பதோடு இதைப் பொறுத்திப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

அடுத்து அலாதீன் தன் நாட்டு மக்களிடம் உரையாற்றும் ஒரு காட்சி வரும். அதில் `நம்மிடம் நியூக்ளியர் ஆயுதம் இருக்கிறது. இதை எந்தவித அழிவுக்காகவும் பயன்படுத்தப்போவதில்லை. இதைக்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி மட்டுமே செய்யப்போகிறோம்' என்பார். உலகின் பல்வேறு நாடுகள் அணு ஆயுதம், பயோ ஆயுதம் எனப் பல பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், `அவை எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. எல்லாம் மக்களைப் பாதுகாக்க, நாட்டின் நன்மைக்காக’ என்றுதானே கூறிவருகின்றனர்.

ஒருமுறை, தான் தயாரிக்கும் நியூக்ளியர் ஆயுதத்தைப் பார்க்கப்போவார் அலாதீன். அப்போது அந்த ஆயுதத்தின் முனைப்பகுதி உருளையாக இருக்கும். அந்த முனைப்பகுதி கூர்மையாக இருக்குமாறு மாற்றிச் செய்யச் சொல்வார். அதற்கு அலாதீன் கூறும் காரணம் அடேங்கப்பா ரகம். `உருளையாக இருப்பதால் நாம் எந்த நாட்டின் மீது அதைப் பயன்படுத்துகிறோமோ அந்த நாட்டில் விழும்போது அது எகிறி மறுபடியும் வடியா மீதே விழும். அதுவே கூர்மையாக இருந்தால் எகிறாமல் அப்படியே இருக்கும்' என்பார். 

dictator_1_15128.jpg

‘அணைக்கட்டுத் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடுவது, வாசலில் சாணம் தெளித்தால் டெங்குவை ஒழித்துவிடலாம் என்பது, 2,000 ரூபாய் தாளில் சிப் வைக்கப்பட்டுள்ளது எனக் கிளப்பிவிடுவது, கடலில் கொட்டிய எண்ணெய்யை வாளிகொண்டே அள்ளிவிடலாம் என நினைப்பது, தற்போதைய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும்தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறது என ஸ்டேட்மென்ட் விடுவது, டெங்குக் கொசு... ஏ.சி பஸ்ஸில்தான் வந்தது என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசுவது, நொய்யல் ஆற்றில் நுரை வருவதற்குக் காரணம் மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பதே எனத் தன் அறிவால் கண்டறிந்து சொல்வது... போன்ற இன்றைய தமிழக அரசியல்வாதிகளின் முத்தான கருத்துகளின் முன்னோடி அலாதீன்தான் என்பது இப்போது புரிகிறதா?

தன்னிடம் நியூக்ளியர் ஆயுதம் இல்லை எனக் கூறவும், தனது நாட்டை மக்களாட்சி சார்ந்ததாக அறிவிக்கவும் அலாதீன் அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அழைக்கப்பட்டிருப்பார். அமெரிக்காவுக்கு வரும் அலாதீன், லாம்போகினி சூழ அமெரிக்க வீதிகளில் ஒரு யாத்திரையை நிகழ்த்திக்காட்டுவார். இந்தியாவில் ஒரு வார்டு கவுன்சிலராக இருந்தால்கூட நான்கைந்து கார்கள் தன்னைப் பின்தொடர்ந்து வலம்வருதை காணலாம். அப்படி இருக்கையில், ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்துகொண்டு அலாதீன் இந்த அலப்பரைகள்கூட கொடுக்கவில்லையென்றால் எப்படி? ஐ.நா-வில் ஜனநாயகம் தொடர்பாக அலாதீன் ஆற்றும் உரை நையாண்டியின் உச்சம். 

Capture_15463.JPG

தவிர, பெண்கள் வெறும் போதைப்பொருளாக மட்டுமே பார்ப்பதை கேலிசெய்வது, விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களைக் கேலிசெய்வது, மக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படாமல் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைப்பதுதான் சரியெனப் பேசுவது, பொது அறிவு, உலக அறிவு என எந்தவித அறிவும் இல்லாமல் இயங்கும் அரசியல் தலைவர்கள்... இப்படிப் பலரையும் தனது நையாண்டித்தனத்தால் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அலாதீன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். 

அலாதீன், நமது `23-ம் புலிகேசி' மாதிரியேதான். ஆரம்பம் முதல் இறுதி வரை மிகத் தீவிரமான அரசியல் நையாண்டியாக இருக்கும். அவை அனைத்தும் ரசிக்கும்படியாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இருக்கும். இதையெல்லாம்விட, முக்கியக் குறியீடு ஒன்று இருக்கும். முக்கியக் கதாபாத்திரமான சர்வாதிகாரி அலாதீன், தாடியுடனே பிறப்பார், வளர்வார், ஆட்சிசெய்வார். தாடி எடுத்தவுடன் அவரை எவராலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தாடி அவருடைய அடையாளமாக இருக்கும். இதை இன்றைய அரசியல் சூழலுடன் பொறுத்திப்பார்த்தால் அதற்கும் நான் பொறுப்பல்ல. 

இந்தத் திரைப்படம் வெளியான பிறகு நடந்த மெக்ஸிகோவின் அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் இதன் பெரும்பான்மையான காட்சிகளும் வசனங்களும் பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் ஒரு சிறு உதாரணமே. இந்தப் படத்தைப் பார்த்து இதன் அரசியல் நையாண்டியை முழுவதுமாக ரசிக்கலாம். ஆனால், ஒரே ஒரு வசனம், அது அரசியல் தொடர்பாக, மதம் தொடர்பாக, ஜாதி தொடர்பாக இடம்பெற்றாலே `ஆ…ஊ…' எனக் கூச்சலிட்டு, போராட்டம் நடத்தி, எதிர்ப்புத் தெரிவிக்கும் நம் மக்கள், `தி டிக்டேட்டர்’ போன்ற படைப்புகள் இங்கே எடுத்தால் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. 

 

படைப்புகளை, படைப்புகளாக... அதன் சுதந்திர வெளியில் இயங்கவிடுங்கள். அதே நேரத்தில் படைப்பாளிகளும் சமூக அக்கறையோடு செயல்படுங்கள். ஏனென்றால், நம் படைப்பின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல!

http://cinema.vikatan.com/tamil-cinema/news/105423-how-will-our-politicians-react-to-the-movie-the-dictator.html

  • தொடங்கியவர்

’ஜி.எஸ்.டி தொடர்பான வசனத்தில் தவறு ஏதும் இல்லை’-தணிக்கைக்குழு மண்டல அதிகாரி விளக்கம்

 

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னர் பல சிக்கல்களைச் சந்தித்துப் பின்னர் கடைசி நேரத்தில் வெளியானது. 

mersal_20001.jpg

 

படம் வெளியான பின்னரும் படத்துக்குச் சிக்கல் குறைந்தபாடில்லை. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க வினர் கடுமையாகச் குற்றம்சாட்டி வந்தனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும்” என எச்சரித்தார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மெர்சல் படத்துக்கான தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். 

 

குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் எனவும், காட்சியை நீக்கக் கூடாது எனவும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தணிக்கைக் குழுவின் மண்டல அதிகாரி மதியழகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மெர்சல் படத்தின் காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை. ஜி.எஸ்.டி தொடர்பான வசனத்தில் தவறு ஏதும் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே வசனங்கள் உள்ளன. படத்திலிருந்து காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/cinema/105457-no-issues-in-mersal-movie-regarding-gst-and-demonetisation-says-censor-board-state-regional-officer.html

 

 

’விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிர வைக்கும்’ -மெர்சல் பட எதிர்ப்பாளர்களுக்குக் கமல் பதிலடி

 
 

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க வினர் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தனர். 

kam_21576.jpg

 

படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

அதில் , “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்கச் செய்யாதீர்கள்.  விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும் ” என மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல். 

http://www.vikatan.com/news/politics/105458-kamal-tweets-about-mersal-movie-issue.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆள போறான் கன்னடன் தெலுங்கன்  என்று போட்டால் படம் பிச்சிட்டு ஓடும்  ...

  • தொடங்கியவர்

’மெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி!

 

’மெர்சல்’ விவகாரம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'மெர்சல்' திரைப்படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

 

தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல்வேறு ஊடகங்களில் ’மெர்சல்’ குறித்து விவாதங்கள் நடைபெற்றன. நேற்று ட்விட்டரில்  #MersalVsModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.  

 

இந்நிலையில்  'மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என்று ட்வீட் செய்து, 'மெர்சல்' திரைப்படத்தை எதிர்க்கும் பா.ஜ.க-வினருக்கு, பதிலடிகொடுத்துள்ளார் ராகுல் காந்தி. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளதால், மெர்சல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/india/105498-rahul-gandhi-extends-his-support-to-mersal.html

  • தொடங்கியவர்

மெர்சல் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் - முடிவுக்கு வருகிறதா மெர்சல் சர்ச்சை?

மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான பின்னர் படம் குறித்த சர்ச்சைகள் இன்னமும் அதிகரித்தன. படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை விடுத்துவந்தனர். 

mer_19450.jpg

 


இந்நிலையில் மெர்சல் படத்தைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “மெர்சல் படம் வெளியாகி பலை சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இது எங்களை மிகுந்த மன வேதனையடையச் செய்தது. இது அரசுக்கு எதிரான கருத்து சொல்லும் படம் அல்ல. சாமானிய மனிதருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவரின் கனவுதான் இந்த படத்தின் கரு.

எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தமடைந்திருந்தால் அதை என்னுடைய சொந்த வருத்தமாகக் கருதுகிறேன். சர்ச்சைகள் குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தோம். எங்கள் விளக்கத்தை அவர்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டனர். பாஜக கட்சி உறுப்பினர்களின் பார்வையில் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நியாயமாகவே உள்ளன. எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்”  என விளக்கமளிக்கபட்டுள்ளது

http://www.vikatan.com/news/cinema/105538-sri-thenandal-films-explains-about-mersal-issue.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மீண்டும் மெர்சலுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

 
 
 
 
201710212229254359_ragul-gandhi-re-tweet
 
புதுடெல்லி:

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் காலையில் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
 
இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ‘திரு.மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு இறக்கச் செய்யாதீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/10/21222924/1124200/ragul-gandhi-re-tweets-in-tamil-for-mersal-film.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மெர்சல் படம் பார்த்தோம், நல்லதோ கெட்டதோ விஜயின் படம் திரையில்  பார்க்க வேண்டி உள்ளது. அடுத்து வரும் விஜயின் படத்துக்கு இப்பவே வேண்டுகோள் விடுப்பார்கள் என் வீட்டில். ஊருடன் ஒத்து போக வேண்டியதுதான். 

ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது, பாடல்கள் திரும்பவும் கேட்க்கும் படியாக உள்ளது. படத்தில் சொன்ன கருத்துக்கள் நல்லவை.

 மருத்துவத்தில் பல நடுத்தர, ஏழை   இந்தியர்களின் நிலை கவலைக்கிடம். இவற்றுடன் ஒப்பிடுகையில் எங்கள் ஊரில் உள்ள அரச மருத்துவ மனைகள்  மந்திகை, ஊறணி, பெரியாஸ்பத்திரி எவ்வளோவோ மேல். அண்மைய காலங்களில் நானறிய பலரின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.

இந்த கருத்துக்களை/ புள்ளி விபரங்களை சாதாரண அரசியல் வாதியோ, சமுகவாதியோ சொல்லியிருந்தால் எடுபடாது. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லுவதால் பெரியளவில் மக்களை போய் சேர்கிறது. படத்தின் பிளஸ் பாயிண்ட்.

  • தொடங்கியவர்

 

"மக்கள் பிரச்சனையை மெர்சல் பிரதிபலிக்கிறது"- இளைஞர்கள் ஆதரவு

`மெர்சல்` திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ள நிலையில், இது குறித்து தமிழக இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

மெர்சலுக்கு 'ஃப்ரி ப்ரோமோஷன்' செய்த பா.ஜ.க ! |

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மெர்சல் படத்துக்கு பல தடைகள் வந்தன. அப்படத்தில் விஜய் பேசும் வசனத்தில் GST மற்றும் Monetization விசியங்கள் பா.ஜ.க கட்சிக்கு எதிராக பேசியது போல் வெடித்தன. இதைப்பற்றி மக்களின் கருத்துக்களை கேட்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

இணையதளத்தில் 'மெர்சல்' படத்தை திருட்டுத்தனமாக பார்த்தேன் என ஒப்புக்கொண்ட பாஜக தேசிய செயளாலர்  ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Quote

 

வடபழனியில் உள்ள விஷால் பட தயாரிப்பு அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

இளையதளபதிக்கு ஆதரவு தெரிவிக்க போய் புரட்சிதளபதியின்ற நிலைமை அய்யோ பாவம் !!tw_bawling:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை..! ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.