Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

Featured Replies

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?
 
இனப்­பி­ரச்­சி­னைக்கு இத­ய­சுத்­தி­யு­டன் தீர்­வைக் காண்­பதை விடுத்து கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், ஸ்கொட்­லாந்து போன்று தமிழ் மக்­க­ளும் பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி பிரிந்து செல்­லும் நிலைக்கு அரசு தமி­ழர்­களைத் தள்­ளு­கின்­றதா?

இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன்.

இலத்­தி­ர­னி­யல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார் அவர். அப்­போதே இந்த விட­யம் குறித்து அவர் பேசி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரின்­போது தமி­ழர்­கள் மிக­வும் மோச­மான முறை­யில் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தப் போரில் இர­சா­யன ஆயு­தங்­க­ளும் கொத்­துக் குண்­டு­க­ளும் இரா­ணு­வத்­தால் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆதா­ரங்­கள் உள்­ளன.

அது­மாத்­தி­ர­மின்றி பிர­பா­க­ர­னின் மகன்­கூ­டச் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இவ்­வா­றான சம்­ப­வங்­களை இனங்­காண்­ப­தற்கு எந்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி­னீர்­கள்.

தொழில்­நுட்­பத்­தின் வரு­கை­யின் பின்­ன­ரும் எமது பல பிரச்­சி­னை­கள் தீர்க்க முடி­யா­மல் இருப்­பது கவ­லை­யா­கும்.

அமைச்­சர் சரத் பொன்­சே­கா­வும், உதய கம்­மன்­பி­ல­வும் நாட்­டில் அர­சி­யல் கைதி­கள் எவ­ரும் இல்லை, அர­சி­யல் கைதி­கள் என்று கூறு­ப­வர்­கள் பயங்­க­ர­வா­தி­கள் என்று கூறி­யுள்­ள­னர். ‍

ஜெனிவா­வில் தீர்­வு­காண்­ப­தற்கு விடு­த­லைப் புலி­க­ளு­டன் பேசும்­போது அவர்­கள் பயங்­க­ர­வாதி இல்­லையா? போரின் போது விடு­த­லைப் புலி இயக்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளு­டன் முக­மா­லை­யில் சரத் பொன்­சேகா கைகு­லுக்­கி­ய­போது அவர்­கள் பயங்­க­வா­தி­க­ளா­கத் தெரி­ய­வில்­லையா? நாட்­டில் நடந்­த­வற்றை மூடி மறைக்க நினைப்­பது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் அனைத்­தும் வேறு திசைக்கு திருப்­ப­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டு­கள் தொட­ரு­மா­னால் இலங்கை பல விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­டும்.

உலக ரீதி­யாக அர­சி­யலை நோக்­கும்­போது பிரிட்­ட­னி­லி­ருந்து அயர்­லாந்து பிரிந்து தனி­நா­டா­கச் சென்­றது. அண்­மை­யில் ஸ்பைனில் இருந்து கட்­லோ­னியா பிரிந்து சென்­றது. ஈராக்­கில் இருந்து குர்­திஸ்­தான் பிரிந்து சென்­றது.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­கத் தவ­றி­னால், அதற்­கான சரி­யான பதிலை வழங்க தவ­றி­னால், எமக்­கான நீதி கிடைக்­கா­மல்­போ­னால் கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், அயர்­லாந்து போன்று இலங்­கை­யில் சிங்­க­ள­வர்­க­ளும் தமி­ழர்­க­ளும் இணைந்து தொடர்ந்து வாழ்­வதா என்­பற்­கான பொது வாக்­கெ­டுப்பை நடத்த வேண்­டிய நிலமை ஏற்­ப­டும் என்­ப­தனை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்­றேன் – என்­றார்.

http://newuthayan.com/story/38090.html

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுது .

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

சாத்தான் வேதம் ஓதுது .

ஆனாலும் அவர் சொல்வது சரியானது தான்.

தென் இலங்கை தமிழர்கான நீதீயை, பாராளுமன்றிலோ, சர்வஜனவாக்கெடுப்பிலோ நிராகரிக்குமானால், தமிழர்கள் சுஜநிர்ணய உரிமைத் தேர்தல் கோருவதையும், அதற்கான தார்மீக சர்வதேச ஆதரவு கிடைக்கும் நிலையையும் தவிர்க்க முடியாமல் போகும் என அறிவார்ந்த சிங்களவர்களே எழுதுகிறார்கள்.

அரசியலில் நேற்றைய எதிரி இன்றைய நண்பன். அந்தவகையில் இன்றைய சிங்கள இனவாதிகள், தமிழ் பிரிவிணை வாதிகளின் நண்பர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா?

http://newuthayan.com/story/38090.html

இல்லையா பின்னே?

இவ்வளவு கொடூரங்கள் நடந்து போச்சுது, இன்னமும் அதற்கான விலையை, இலக்கை அடையாமல் மறப்பது, மரப்பது இறந்தவர்களின் ஆன்மாவை கொச்சைப்படுத்துவதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இல்லையா பின்னே?

இவ்வளவு கொடூரங்கள் நடந்து போச்சுது, இன்னமும் அதற்கான விலையை, இலக்கை அடையாமல் மறப்பது, மரப்பது இறந்தவர்களின் ஆன்மாவை கொச்சைப்படுத்துவதாகும்.

கிந்தியா ஈழத்து தமிழ் தேசத்தை கூறு போட்டாவது மொத்தமாகவோ சில்லறையாகவோ சிங்கள தேசத்திற்குள் சீரழித்து விடவே துடிக்கிறது.            

இதனால் தான் எங்காயினும் இதை பற்றி கதைக்கும் பொது நான் சொல்வது, பேயோடு படுத்துக் கூட கிந்தியாவை தள்ளி வைப்பதற்கு தயங்க கூடாது.

சிங்களமும், சீனப் பேயோடு படுத்தே கிந்தியாவை தள்ளி வைத்திருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வல்லரசுகளில் சக்கரவர்த்தியாக விளங்கவும் போரிட்டு வருகிறது.

சிங்களமானது, மிருகங்களும் செய்யாத பிணம்புணரும் மனிதர்களையும் தனது மக்களாகக்கொண்ட கொண்ட, பேயைவிடவும் கேவலமான ஒரு இனம். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வல்லரசுகளில் சக்கரவர்த்தியாக விளங்கவும் போரிட்டு வருகிறது.

சிங்களமானது, மிருகங்களும் செய்யாத பிணம்புணரும் மனிதர்களையும் தனது மக்களாகக்கொண்ட கொண்ட, பேயைவிடவும் கேவலமான ஒரு இனம். 

சீனாவை பேய் என்றது, அதன் கலாசாரத்தின் அல்லது பரிணாம வளர்ச்சியின் நிலையிலோ அல்ல.

All empires are evil என்ற ஒப்பீடு அளவிலான கருத்துப்படியே.

நீங்கள் சொல்வதின் படி, சிங்கலத்தை விட கிந்தியாவே சிங்களத்தாய் விட கேவலமான தேசமும் இனமும் ஆகும்.

நீங்கள் சொல்வதின் படி, சிங்கலத்தை விட கிந்தியாவே சிங்களத்தாய் விட கேவலமான தேசமும் இனமும் ஆகும்.

ஏனெனில், கிந்தியாவே UNHRC இன் ஆக குறைந்த நீதி நடவடிக்கையைத் தடுத்து நிற்பது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.