Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன முறுகலுக்கு வித்திடும் அனந்தி, சம்பந்தன் வேடிக்கை பார்க்கிறாரா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hameed S. Lebbe – “

வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது” எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..! ஐயா சம்மந்தன் அவர்களே ! தமிழர் விடுதலைக்காக போராட களம் கண்ட ஆயுத இயக்கங்களினால் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்பட்டதுடன் முடிவுற்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் அம் மக்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடுவது போல் உள்ளது. கல்முனை மக்களின் கல்முனை உள்ளுராச்சி சபையை 1897 களில் இருந்து 1987 வரை இருந்தது போன்று தனியாக பிரித்து தாருங்கள் என்ற அம் மக்களின் நியாயமான கோரிக்கையை மலினப்படுத்தும் முன்னால் ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் சமிபகால நடவடிக்கைகள். கல்முனை மக்கள் தாங்கள் ஆண்டு வந்த பூர்வீக பூமியை கபளீகரம் செய்ய முயலும் சில தீய சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரங்கேற்றுகின்ற நாடகங்களை பொறுமையுடன் அவதானித்து வருவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயாவை நோக்கி நீங்கள் . தமிழ் இன விடுதலைக்கு போராடுகின்றிர்களா ? இல்லை எங்கள் நிலங்களை கபளிகரம் செய்து உங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட போராடுகின்றிர்களா? என்று கேட்க்க துடிக்கின்றனர்.

வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும் கடந்த கால கசப்பான சம்பவங்கள் இவைகளில் இருந்து விடுபட்டு தமிழ் சகோதரர்களுடன் நட்புறவுடன் வாழவே இம் மக்கள் விரும்புகின்றனர் அவைகளை கேள்விக்கு உட்படுத்தும் விதமாக நடப்பவர்களை கட்டுப்படுத்தும் தார்மீக கடமை உங்களுக்கு இருக்கின்றது என்பதையும் இம்மக்கள் விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர். வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும் என்ற கவிஞ்சர் காசி ஆனந்தன் அவர்களின் கதையையும் உங்களுக்கு நினைவுபடுத்தல் இவ்விடத்தில் பொருத்தமாகும். .

புல்மேய்ந்து கொண்டிருந்தது மாடு. மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:- ‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?” தாய்க்குருவி சிரித்தது…… ‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’ என்றது தாய். மீண்டும் தாய்க்குருவி சொன்னது:- ‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’ என்று. இக் கதையில் வரும் வனத்தில் புல் முளைப்பது போல் உள்ளது இங்கு உள்ள சில முன்னால் ஆயுததாரிகள் அவர்களின் ஆயுதத்தால் அடைய முடியாததை சில கபட நாடகங்கள் ஊடாக அடைய முயற்சிப்பதும் ஆனந்தி போன்றவர்கள் நுனிப்புல் மேய்வது போல் ஊடகங்கள் முன் வரலாற்ரை திரிபுபடுத்தி பேசுவதும். இன முறுகலுக்கு வித்திடும் இது போன்ற நடவடிக்கைகள் உடனே முடிவுக்கு கொண்டுவரப்படுவதுடன் இம் மக்களின் நியாயமான கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் வேண்டுகிறார்கள்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=183465 .

 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் இனம் என்றால் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்பேசி வாழ்பவர்கள்.!
 
சிங்கள இனம் என்றால் சிங்களமொழியைத் தாய்மொழியாகக் கொண்டு சிங்களம்பேசி வாழ்பவர்கள்.!
 
முசுலீம் இனம் என்றால்...! முசுலீம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு முசுலீம்பேசி வாழவேண்டும். முசுலீம் என்றொரு மொழி இல்லையென்றால் நீங்கள் எந்த இனம்...?? முகமதியர், இசுலாம், சோனகர், காக்கா, என்று உங்களை அழைக்கிறைர்கள்....! ஆனாலும் அவற்றிற்கு மொழி இல்லையே...!!
 
Hameed S. Lebbe – அவர்களே.!
எதற்காக தமிழ் மொழியில் குருவிச்சைபோல் படர்ந்து வளர்ந்து தமிழினத்தை உறுஞ்சி அழித்து வாழ்வதற்கு முற்படுகிறீர்கள்...?? :(

கள்ளகாணிக் கும்பல்களுக்கு எதிரான அனந்தியின் சேவை தொடரட்டும்.

40 minutes ago, போல் said:

கள்ளகாணிக் கும்பல்களுக்கு எதிரான அனந்தியின் சேவை தொடரட்டும்.

நாம் என்ன செய்தாலும் அவர்கள் கள்ள காணி பிடிக்க தான் போகிறார்கள்.

அரச அதிகாரம், பலம் எல்லாம் அவர்களது கையில், எம்மால் எதுவும் செய்ய முடியாது !!

வவுனியாவில், முல்லைத்தீவில் என எல்லா இடமும் கோவில் சிலை உடைப்பு!!!

மன்னாரில் 12% மாக 2011இல் இருந்தவர்கள் வெறும் 5 வருடங்களில் 46% உயர்ந்து இருக்கிறார்கள் இதை தமிழ் சமூகம் கணாதது போல் இருப்பது வேதனைக்குரியது

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முதலமைச்சர் காணி அபகரிப்பில் ஈடுபடுகின்றார் – அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

arianenthiran

 

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் பௌத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களால் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் உம் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், வடக்குக் – கிழக்கு இணைக்கப்படவேண்டுமென்பதே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்

 

http://ekuruvi.com/muthalamaichchar-09-08-2017/

 

  • கருத்துக்கள உறவுகள்

இரவல் மொழியில் பிழைத்துக்கொண்டு இருக்கும் இதுகளை என்னவென்று சொல்வது  பேசாமல் சிங்களத்தை பேசி பழகலாமே  ஆனாலும் சிங்களவன் கெட்டிக்காரன் தற்போதைக்கு தன்னுடன் கொள்ளுபடாமல் தமிழனை இந்த குருவிச்சைபயளுகளுடன் கொள்ளுப்பட .akuranatoday.யை  உபயோகபடுத்துவது . முதலில்  .akuranatoday. யை  யாழில் தடை பண்ணுவது நல்லது போல் இருக்கு .

5 hours ago, பெருமாள் said:

 முதலில்  .akuranatoday. யை  யாழில் தடை பண்ணுவது நல்லது போல் இருக்கு .

தடை செய்வது நல்லதல்ல என்பது எனது எண்ணம்.

இது போன்ற கீழ்த்தர தளங்கள் மூலம் அவர்களின் கோணல்/திருட்டுப் புத்திகளை நாங்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியவுடன் இங்கு தடை வந்துவிடாது அது நிர்வாகம் சம்பந்தபட்டது . அக்குரணை டுடே இதில் எப்பவுமே வடகிழக்கு தமிழர்கள் பற்றி இல்லாத பொல்லாத பொய் செய்திகள் தானே வந்துகொண்டு இருக்கு எங்கேயோ 100 பேர் பார்க்கும் இணையத்துக்கு ஏன் இலவச விளம்பரம் இங்கு நாங்கள் எழுதுவதை கொண்டு போய் அவர்களின் தனிபட்ட புளக்குகளில் போட்டு இன்னும் சூடாக்குவது ஏன் நாங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் மனம்மாறி எங்களுக்கு சார்பாக வரபோவதில்லை சிங்களவனுக்கும் நாங்களும் அவர்களும் கொள்ளுபட வேணும் என்பது அவா அதுக்கு யாழ் உடந்தையாக கூடாது என்பது என் தனிபட்ட விருப்பம் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.