Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெத்த மனசு

Featured Replies

Bild könnte enthalten: 3 Personen, Text
 

 பெத்த மனசு ( சிறுகதை)


செந்தமிழ்ச்செல்வி

தம்பி மதியழகா... நான் உன் கிளி சின்னம்மா பேசுறன்பா.... உன் அம்மாவ ஒருதடவ வந்து பார்த்துட்டு போயிடப்பா... மருந்து மாத்திரை எதுவும் சரியாகல... எதுவும் சொல்லமுடியாதுப்பா.... என்று பேசிய கிளி சின்னம்மாவின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்தன் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது... சரிம்மா... நான் சீக்கிரமா வரன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு எனது அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன்

அப்பா எனக்கு ஆறு வயசிலயே விபத்தில இறந்திடாரு... அப்போ தங்கை றேனுவிற்கு மூனு வயசு. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அம்மாதான்... அம்மா படிகல ஆனா பக்குவமானவங்க.. நல்லது கெட்டது எல்லாம் தெரியும். அப்பாவின் காப்பீட்டு பணம் மட்டுமே அப்பா விட்டுச்சென்ற முதலீடு. அதை அம்மா வங்கியில் பத்திரப்படுத்தி எங்களுக்கு மருந்து போல் செலவு செய்து எமது வாழ்வை உயர்த்தியவள்..

அப்பா இறந்த புதிதில் அம்மாவுடன் சேர்ந்த உறவுகள் அப்பாவின் காப்பீட்டு பணத்தை அம்மாவிடம் கைமாறாக கேட்டு அம்மா மறுத்ததால் பகைவளர்த்து ஒதுங்கிக்கொண்டார்கள்...

அன்றொருநாள் நடு இரவு அம்மா மெதுவாக யார்கூடவோ பேசும் சத்தம் கேட்டது.. நான் மெதுவாக சென்று பார்த்தேன் , அம்மா தலைநிறைய பூவோடு பொட்டும் வைத்து பழய அழகிய அம்மாவாக அப்பாவின் படத்தின் முன்பாக இருந்து அழுதவாறு பேசிக்கொண்டிருந்தார்...

""என்னங்க ஊர் உலகத்திற்கு நீங்க இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு எப்பவும் என்கூடதாங்க நீங்க இருக்கீங்க... நீங்க இல்லை என்ற தைரியத்தில என்னென்னமோ எல்லாம் பேசுறாங்க... அசிங்கமா பார்க்கிறாங்க... முடியலங்க.. எனக்கு... என விசும்பியவாறு தேம்பி அழுதாள் அம்மா...

நான் சிறிய தயக்கத்தோட அம்மாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டேன்... விறு விறு என பொட்டை நீக்கி பூமாலையை கழட்டி அப்பா படத்திற்கு போட்டவள்.. என்னை அணைத்துக்கொண்டாள்... அப்பாவின் படத்தை பார்க்கும் போது எனக்கும் அழுகை வந்துவிட்டது. என்னை அழைத்துவந்து படுக்கவைத்தாள்...

மறுநாள் அப்பாவின் நண்பர் ராமு மாமா எங்க வீட்டு வாசலில் வந்து நின்றார் ...
""அம்மா ராமு மாமா வந்திருகார்மா... என கூறினேன்... முகத்தை சுருக்கியவாறு அம்மா வந்தாள்...
வாசலில் போய் அவரை பார்த்தாள்...

""என்ன பரமேஸ்வரி எப்படி இருக்கீங்க.. எல்லாம் முடிஞ்சு 6 மாசம் ஆச்சு இன்னுமா கவலைல இருகீங்க என்றார்...

அம்மா அதை காதில் போடாமல் சொல்லுங்க சார்... என்றாள்..

வாசல்ல நிக்கவச்சே பேசுறியேம்மா... இது என் நண்பன் வீடு... உள்ளே வரலாமா என்றார்...

அரை மனதுடன் "ம் வாங்க சார்.. என்றாள் அம்மா
அவரும் வந்து உட்காந்துகொண்டார்...
நானும் தங்கையும் விளையாடிட்டு இருந்தம்...

""பரமேஸ்வரி இனி என்ன செய்யப்போறிங்க... எப்படி பசங்க எதிர்காலம் ...ஏதாவது யோசிச்சிங்களா எனக்கேட்டார்..

""இல்லங்க... பார்ப்பம் அவரும் கடவுளும் ஏதாவது வழி காட்டுவாங்க என்றாள் அம்மா...

"" மறுமணம் ஏதாவது.... என்று அவர் முடிக்கும்முன்
அம்மா சத்தமாகவும் உறுமலாகவும்... ""சார்... நீங்க வந்த காரணம் என்ன? என நெருப்பாய் முறைத்தாள்....

""சரி விடும்மா பார்க்க அழகா இருக்கா பசங்க சின்னவங்க. நீ வாழவேண்டிய வயசு இளமை இருக்கும் போதுதான் எதையும் சாதிக்கமுடியும்... என தொடர்ந்தவரை..

"" மிஸ்டர் ராமு இங்க உங்க நண்பர் இல்லை. இனிமேல் இங்க வராதீங்க.. இப்ப நீங்க கிளம்பலாம் என்று வாசலை நோக்கி கையை நீட்டினாள்...

நாட்கள் மாதங்கள் வருடங்கள் என ஓடியது... அம்மாவிற்கும் எமக்கும் நல்லது செய்வது போல் வரும் உறவுகள் அம்மாவின் உடலையும் காப்பீட்டு பணத்தையுமே குறி வைத்தன.

கணவனை இழந்து ஒரு பெண் சுயாதீனமாக ஒழுக்கமாக வாழ இந்த சமூகத்தில் எத்தனை தடைகள்... அம்மா இரும்பாக இருந்து எல்லாத்தையும் தகர்த்து எங்களை வளர்த்துவந்தாள்..

அப்பாவின் இறப்பின்பின் அம்மாக்கு அடிக்கடி உடல் நலக்குறைபாடு வரும். ஆனாலும் எதையும் பெரிதுபடுத்தாமல் எமக்காகவே தன்னை ஒரு மெழுகு வர்த்தி போல் உருக்கிக்கொண்டார்... எது செய்வதாக இருந்தாலும் அப்பாவின் படத்தின் முன் உட்கார்ந்து அவருடன் பேசிவிட்டுதான் செய்வாள்.

எனக்கு படிப்பு முடித்து தனியார் வங்கியில் வேலை கிடைத்தது.. சில வருடத்தில் தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தோம்.. அன்றுதான் அம்மாவின் முகத்தில் ஒரு சிறிய மகிழ்ச்சியை பார்க்கமுடிந்தது.. அப்பா இல்லாத குடுமபத்தின் வெறுமையை என்னால் ஜீரணிக்கமுடியல.. கொடுமையான வலி அது.

எனக்கு 25வயதாக அம்மா பெண் பார்க்க ஆரம்பித்தாள்... அம்மாவிற்கும் 46 வயதாகிவிட்டது..
""அம்மா எனக்கு என்ன அவசரம் இப்ப இன்னும் 5-6 வருடம் போகட்டுமே .. என்றேன் .. என்மனசில் அம்மாவின் பராமரிப்பு எனக்கு இன்னும் தேவைப்பட்டது...

""இல்லடா மதி.. நம்ம தூரத்து சொந்தம் ஒன்னு வந்திருக்கு... பொண்ணு கிராமத்தாளுப்பா ...அம்மா மாதிரி என கூறும்போதே சாடையாக சிரித்தாள்....

அம்மா மாதிரி என்று சொல்லும்போதே எனக்கு மகிழ்ச்சியாக இருநதது அதை விட தூரத்து உறவு வேற இன்னும் மகிழ்ச்சி... காரணம் என் அம்மாவை தன் அம்மாவாக பார்த்துப்பாள் வருகிறவள் என்ற நம்பிக்கை...

""அம்மா எது என்னமோ வாறவள் எப்படி என்று எனக்கு முக்கியம் இல்லம்மா.. உன்னய நல்லா பாத்துக்கணும் உன்கூட மனஸ்தாப படாம இருகனும் அதான் முக்கியம் என்றேன் உறுதியாக.

இருவருடத்தில் மிக எழிமையாக திருமணம் நடைபெற்றது... என் மனைவியின் பெயர் செவ்வந்தி... ரொம்ப கலகலப்பானவள்.. அசல் கிராமத்தாள்... அம்சமான அழகு அப்பாவியா எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுகுவாள் அம்மாகிட்ட... அம்மாவ அவள் மாமி என்று கூப்பிட்டதில்ல அம்மாத்தா என்று தான் கூப்பிடுவாள்...
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது...
வழமைபோன்று என் அம்மாவின் பரிசம் என்கூட இருந்தது செவ்வந்தியின் பாசம் என்னை திக்குமுக்காட வைத்தது..

வேலைக்கு போகும்போது செவ்வந்தி காபி கொடுத்தா வேலையால வரும்போது அம்மா காபி குடுப்பாள்...
மகிழ்வாகவே பயணித்தது எமது பயணம்...

செவ்வந்தி நாலு வருடம் கழித்தே உண்டாகி இருந்தாள்... அம்மா இரவு பகலா செவ்வந்திய பார்த்துகிட்டாள்... செவ்வந்திய எந்த வேலையும் செய்ய விடல...

இறுதியில் பிரசவம் பார்க்க கூட்டிச்செல்ல செவ்வந்தியின் அம்மா வந்தாள்... ஆனா எங்க அம்மா விடல... என்மகள் போல நானே பார்த்துக்கிறன் அங்க கிராமதில எதுக்கு உங்களுக்கு சிரமம்... நீங்களும் இங்கயே இருங்களேன்... என்று மாமியாரையும் மறித்துவிட்டாள்.
இங்கதான் பிரச்சனையே உருவாகப்போகிறது என அம்மாகு மட்டுமல்ல எமக்கும் தோனல

அம்மாக்கு திடீரென வயிற்றுவலி வந்து ஆஸ்பத்திரயில் அனுமதிக்கப்பட்டாள்... என்னால் அம்மாவை விட்டு விலக முடியல.. அம்மாக்கு கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பை எடுக்கவேண்டியதாயிற்று... அம்மா முன்னய மாதிரி நடமாடமுடியாது என டாக்டர் கூறினார்...
இந்த நிலையில் அம்மாவை நான் வீட்டில் விட்டு வேலைக்கு போக முடியல... மாமியார் என்னை சமாதானப்படுத்தி போகவைத்தார்...
செவ்வந்தி அழகிய பெண்குழந்தையை பெற்றெடுத்தாள்...

அம்மா குழந்தைக்கு மகாலெட்சுமி என பெயர் வைக்க சொன்னாள் செவ்வந்தியும் சம்மதித்தாள்... ஆனால் மாமியார் அதை விரும்பல... அவர் தங்கள் பரம்பரையில் வரும் பெயர்களில் ஒன்றை வைக்குமாறு செவ்வந்தியிடம் கூறி மனசை மாற்றினார்.

செவ்வந்தியும் பெயர் சூட்டும்போது தாமரை என பெயர் சூட்ட எனக்கும் அம்மாக்கும் அதிர்ச்சியாக இருந்தது... அன்றுமுதல் எல்லாமே எதிர்மறையாக நடக்க ஆரம்பித்து... அம்மாவை அவர்கள் கணக்கெடுக்காமல் இருந்தார்கள்...

பிரச்சனை அதிகமாவதை பார்க்க எனக்கு கவலைவந்தது ""மாமி.. நீங்க ஊருக்கு போகலயா என கேட்டே விட்டேன்

""இல்ல மாப்ள என் மகளை கூட இருந்து பாத்துக்கிறதா இருகேன்... பாவம் அவளுகு குழந்தை வேற பிறந்திருச்சு... என்றாள்...

அதான் எங்கம்மா இருக்காளே... என்றேன்...

"" என்மகளை நான் பாக்கிறமாதிரி யார் பாத்துப்பாங்க.. அதுவும் இப்ப உங்கம்மா வேற நோயாளியாயிற்ராங்க அவங்கள பாத்துக்கவே ஒரு ஆளு வேணுமே என்றாள்...

எனக்கு கோபம் வந்தாளும் அடக்கிவிட்டு சென்றுவிட்டேன்.
செவ்வந்தியின் மனசில் கொஞ்சம் கொஞ்சமாக அக்கறை பாதுகாப்பு என்ற பெயரில் விசம் ஏற்றினாள் அவள் அம்மா .

என் அம்மா என்னைய கூப்பிட்டு எனக்கு புத்தி சொல்வாள்.. செவ்வந்தி சொல் படி நடக்கச்சொல்வாள்..
தன்னை பற்றி கவலைப்பட வேனாம் என்பாள்.

சில வருடம் ஓடியிருக்கும் அம்மா படுக்கையாகிவிட்டாள்... அம்மாவை பார்க்க சிரமமாமக இருப்பதாக செவ்வந்தி கூறினாள் ... தினமும் இதுவே பிரச்சனை ஆகிவிட்டது. அன்பாக இருந்த அம்மா மனைவிக்கிடையில் மாமியாரின் தூண்டுதல் பிரச்சனையாகிவிட்டது...

ஒரு நாள் செவ்வந்தி தான் ஊருக்கு போவதாக கூறினாள்... எனக்கு என்ன செய்றது என்றே தெரியல

""என்ன செவ்வந்தி இது.. நீயா இப்படி என கேட்டேன்..
ஆமா நான்தான்..
உங்களுக்கு மனைவி முக்கியமா அம்மா முக்கியமா என முடிவெடுங்க என்றாள்.

உனக்கு பைத்தியமா... எனக்கு அம்மாதான் முக்கியம் . அம்மதான் உன்னயகூட எனக்கு கட்டிவச்சது. நீ வந்ததும் எப்படி அம்மாவ முக்கியம் இல்ல என்று கூறமுடியும்? என கேட்டேன்..

அப்படியா.. அப்ப உங்க அம்மா கூடவே வாழுங்க நான் எதுக்கு என்றாள்.....

செவ்வந்தி... அம்ம என் உயிர்... ஆனா நீ என் இதயம்... இதை தயவு செய்து புரிஞ்சுக... என்றேன்...

அவள் மனசு மாறல...
ஒருநாள் வேலையால வரும்போது அவள் வீட்டில் இல்லை... தாயுடன் என் மகளையும் சேர்த்து கூட்டிச்சென்றுவிட்டாள்..

என் அம்மா அழுதுகொண்டே இருந்தாள்... மாமியார் மருமகள் உறவில் இது ஒரு சாபக்கேடு என புலம்பினாள்... அவளை நான் சமாதானம் செய்தேன்... செவ்வந்திக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தாள் மாமியார் தான் பேசுவார்... என்ன மாப்ள அம்மா எங்கயாவது அனுப்பியாசா எனதான் கேட்பாள்... அவள்
நாக்கில் சூடு வைக்கணும்போல் இருக்கும்... போனை வைத்துவிடுவேன்.

ஒரு நாள் அம்மாவின் தங்கை கிளி என்பவர் அமமாவை பார்க்கவந்தார்.... அம்மா எல்லாதையும் சொல்லி சொல்லி அழுவாள்... தன்னை முதியோர் இல்லதில விடச்சொல்லி நூறு தடவ கேட்டிருப்பாள்...

கிளிச்சின்னம்மா தன்னுடன் அம்மாவை கூட்டிச்செல்வதாக விரும்பிக்கேட்டாள்... தான் நன்றாக அம்மாவை பார்ப்பதாக கூறினாள் அம்மாவும் விரும்பினாள்...
எனக்கு விருப்பம் இல்லை என்றாளும் அம்மாவின் விருப்பம் நான் குடும்பமாக வாழணும் என்பதே அதற்காக நான் கண்ணீருடன் சம்மதித்தேன்....
முதல் தடவையாக அப்பா இறந்தபோதே நாங்களும் இறந்திருக்கலாம் என நினைத்தேன் ...

அம்மாவை சகல வசதிகளோடும் சின்னம்மா வீட்டில் கொண்டுசென்று விட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்து வீடு வந்தேன்....

இளமையையும் வாழ்க்கையையும் எமக்காக தியாகம் செய்த என் அம்மாக்கு நான் செய்த கைமாறு என்னை வெட்கப்பட வைத்தது...

மறுநாள் செவ்வந்தி வந்துவிட்டாள்.... கூட அவள் அம்மாவும்.
"" இங்க உன்னை தவிர யாரும் இருக்ககூடாது... உனகு உங்கம்மா முக்கியமா புருஷன் முக்கியமா என விறைப்பாக கேட்டேன்....

அதிர்நது போய் நின்றாள்... என்னிடம் இப்படி கோபத்தை அவள் பார்த்ததில்லை...

மாப்ள இப்பதான் நீங்க நல்ல கணவனா இருக்கீங்க... இனி நான் ஏன் இங்க நான் கிழம்புறன் என்றாள் மாமி...

திரும்பி அவளை நேராக பார்த்தேன்...
நல்ல மகனாக இருக்ககூடாத நான் எப்படி நல்ல கணவனாக இருக்கமுடியும்.... என்றேன்... பதில் இல்லை...
குடும்பத்தை சிதைக்க எதிரிகள் வெளியே இருந்து வருவதில்லை... நம் உறவுக்குள் இருநதுதான் வருகிறார்கள்... என்று கூறி சென்றுவிட்டேன்...

மாமியார் ஊர் சென்றுவிட்டாள்... செவ்வந்தி எவ்வளவு நெருகமாக என்கூட வர முயற்சித்தாளும் என்மனசால ஏற்கமுடியல...
இதயபூர்வமாக இருந்த நம் உறவு கடமையாக மாறியது....

அடிக்கடி அம்மாவ நான் மட்டும் தனியாக சென்று பார்த்து வருவேன்... உணவு ஊட்டிவிடுவேன்... அவளும் எனக்கும் ஒரு சில வாய் உணவு ஊட்டுவாள்... ஆறுவயதில் உணவு ஊட்டும்போது பூவைப்போல இருந்த அம்மாவின் மிருதுவான கரங்கள் இப்போது சுருக்கங்களோடு நடுங்கியவாறே உணவை ஊட்டியது... அவளின் கையை பிடித்தவாறு விம்மி அழுவேன்.... அம்மா ஒரு ரெண்டு நாளைக்கு உன்கூட தங்கட்டுமா என்பேன் ... கண்டிப்பாக என்னை மறுத்து அன்றே வீட்டிற்கு அனுப்பிவிடுவாள்...

என்னை பார்க்கும் போது அவளுக்கு என் அப்பாவை பார்ப்பதுபோல் இருக்கும் இப்போது... அது தான் அவளுக்கு மகிழ்ச்சியான நேரமும் கூட...

சில வருடங்கள் இப்படியே ஓடி விட்டன... இன்றுதான் அந்த தொலைபேசி வந்தது... கடைசியாக அம்மாவை பார்த்து ஒரு மாதம் ஆகிறது... அப்போ அம்மா எனக்கு கூறியது...

""மதியழகா எனக்கொரு சத்தியம் தருவியாப்பா என்றாள்... என்னம்மா இது புதுசா... என்றேன்
இல்லப்பா... செவ்வந்திகிட்ட நீ பழய மாதிரி அன்பா இருப்பா... அவ மேல தப்பு இல்லப்பா... எல்லா பெண்களுமே தன் கணவன் தனக்கு மட்டுமே தான் சொந்தம் என நினைப்பாங்கப்பா... நான் கூட அப்படிதான்... அது பிறவிக்குணமைய்யா .... அத மாத்தமுடியாது...
அடுத முறை நீ என்னய பார்க்க வரும்போது செவ்வந்திய கூட்டியரனும்... அவகிட்ட அதே பழய கலகலப்ப நான் பார்க்கனும் ... என்னப்பா செய்வியா என்றாள்....
சரிம்மா என்றேன்...

இதோ இப்போது அம்மாவிடம் போகனும் என்ன செய்ய என யோசித்தேன்...
செவ்வந்தியிடம் நான் சரியாக பேசாதது அவளை காயப்படுத்தி இருந்தது....

""செவ்வந்தி.. நீண்ட நாட்களின் பின் அவளை பெயர் சொல்லி அன்பாக கூப்பிட்டேன்... ஓடிவந்தாள்
ஆச்சரியமாக ""எனன்ங்க நீங்க கூப்பிட்டீங்களா என்றாள்... "ம்" என்றேன் வந்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள்... கண்களில் கண்ணீர் அவளுக்கு... எனனய மன்னிச்சிடுங்க... எல்லாம் என் அம்மா செய்த வேலை என்றாள்...

"" ம்.. சரி வா என் அம்மா உன்னய பார்க்க ஆசைப்படுறாங்க ... போகலாம் என்றேன்...

""அப்பாத்தா என்னய பார்க்கவா ஆசைப்பட்டாங்க என அவள் கேட்கும்போதே.. கண்களில் நீர் கொட்டியது அவளுக்கு...
அவளை கட்டி அணைத்தேன்
சரி சரி அழாத... எல்லாம் நடந்து முடிஞ்சுது... வா போகலாம்... என்றேன்...

கார் கிராமத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்து...

""என்னங்க அப்பாத்தாவ மறுபடி நம்ம வீட்டுக்கு கூட்டியருவமா என்றாள்....

""வேனாம் இப்படி இருக்கிறதுதான் அம்மாக்கு மகிழ்ச்சி நாம கூப்பிட்டாளும் அம்மா வரமாட்டா என்றேன்...
கார் கிராமத்து எல்லையை நோக்கி..... விரைந்தது.......... "காரில் அம்மான்னா சும்மா இல்லைடா..... அவ இல்லன்னா யாரும் இல்லைடா...பாடல் இளையராஜாவின் குரலில் வலியை சுமந்து கொண்டிருந்தது.......

 

உலகத்தமிழ் மங்கையர் மலர்

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.