Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajinikanth fans celebrating his political arrival

அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.. மாநிலம் முழுக்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை கேட்டதும் ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினியின் அறிவிப்பால் சென்னை ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள கோடம்பாக்கம் ஏரியா விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

- தற்ஸ்  தமிழ்.-

##### ###### ##### #### ##### ###### ###### ####

 

Rajini will compete in Loksabha elections

சட்டசபை தேர்தலில்,  தனித்து போட்டி - ரஜினிகாந்த்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.

இன்று ரஜினி பேசுகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன்.

தமிழகம் முழுக்க 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன்.

பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்.

நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது. ஆனால் நான் விரும்பவில்லை என்றார் அவர்.

 - தற்ஸ்  தமிழ்.-

Edited by தமிழ் சிறி

  • Replies 83
  • Views 7.4k
  • Created
  • Last Reply

’வரப்போகும் சட்டமன்றப் போரில் நம் படை இருக்கும்!’ - ரஜினிகாந்த் பகீர்  #LiveUpdates

 
 
Chennai: 

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

ரஜினி

 

ரஜினிகாந்த்

”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. பிற மாநிலங்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. இந்த நேரத்திலும் நான் மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றால், நான் சாகும்வரை குற்றவுணர்ச்சி இருக்கும்.  அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். ’உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும். நான் ஜெயித்து நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன்’” என்றார் ரஜினிகாந்த். 

ரஜினிகாந்த்

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வரும் ரஜினிகாந்த் “ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை.  மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா?” என்றார். 

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆறாவது நாளாக தன் ரசிகர்களை சந்திக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் ரஜினிகாந்த். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாட்டை தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ரஜினி ஒரு பேரவைத் தொடங்கவே 21 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் போயஸ் இல்லம் அருகே இன்று  காலையே செய்தியாளர்கள் குவிந்துவிட்டனர். ரசிகர்களை சந்திக்க காரில் புறப்பட்ட ரஜினியிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி “மண்டபத்தில் சொல்கிறேன். பத்து நிமிடம் காத்திருங்கள்” என்றார் அவரது ஸ்டைலில். 

https://www.vikatan.com/news/tamilnadu/112307-rajinikanth-reveals-about-his-political-stand.html

'சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள்!' - முதல் ஆளாக வாழ்த்து சொன்ன தமிழிசை

 
 

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ளதை அடுத்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை ரஜினிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

நடிகர் ரஜினிகாந்த் ’சாதிமத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன்’ என்று அறிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்று அவர் குறிப்பிட்டதும் ’ரஜினி பா.ஜ.கவை ஆதரிக்க போகிறார்’ என்று நெட்டிசன்கள் யூகிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் ரஜினிக்கு முதல் ஆளாக தமிழிசை வாழ்த்து கூறியிருக்கிறார். 

ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ‘துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்கிறார். பா.ஜ.கவின் கொள்கையும் அதுதான்” என்றார். 

அதாவது ரஜினியின் கொள்கையும், பா.ஜ.கவின் கொள்கையும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறார் தமிழிசை. 

https://www.vikatan.com/news/tamilnadu/112310-tamilisai-wishes-rajinikanth.html

’ரஜினியை அம்பலப்படுத்துவேன்!‘ - சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

 
 

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. 

ரஜினி

 

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம் தான் இவற்றை பெரிதாக காட்டுக்கிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள். ரஜினிகாந்த் அரசியல் கட்சியின் பெயரையும், வேட்பாளர்களையும் அறிவிக்கட்டும். நான் அவரை பற்றி அம்பலப்படுத்துகிறேன்’ ’ என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/112311-subramaniyan-swamy-slams-rajinikanth.html

 

'திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை!' - மு.க.ஸ்டாலின் பளீச்  #Rajinikanthpoliticalentry

 
Chennai: 

’அரசியலுக்கு வருவது உறுதி’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில்  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் “ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் திமுக எந்த பாதிப்பும் கிடையாது. அரசியலுக்கு வருவது அவரின் விருப்பம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

stalin
 

 

இதனிடையே ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கும் என நெட்டிசன்கள் சிலர் கருத்து பதிந்து வருகின்றனர். 
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் ‘ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ இல்லை. திமுகவுக்கு எந்த கவலையும் இல்லை’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/112316-stalin-speaks-about-rajinikanth-political-entry.html

ரஜினி அரசியல் பிரவேசம்: வரவேற்பு, சந்தேகம், எதிர்ப்பு!

9941797132294fee-57e3-4105-9938-ebe19568

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள், மக்கள் என தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அதனை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.

நடிகர் கமலஹாசன் தன் ட்வீட்டர் கணக்கில். "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என்று பதிவிட்டுள்ளார்.

9941797132294fee-57e3-4105-9938-ebe19568

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தான் ஆதரிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே வாசன் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நியாயமான எதிர்பார்ப்பாகதான் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ரஜினி பூர்த்தி செய்துள்ளார் என்றார் .

புதிய இயக்கதுக்கான நிர்வாக பணிகளை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். அந்தப் பணி நல்ல பணியாக அமைய தான் வாழ்த்துவதாக ஜி.கே வாசன் தெரிவித்தார்.

99417973258fc955-66d5-4532-b5b9-bc54611f

ரஜினியின் ரசிகர்களை தான் வாழ்த்துவதாக கூறினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். ரஜினி தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் முதல்முதலாக வாழ்த்தினார் தமிழிசை. தனது ட்வீட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர்ர் ரஜினிக்கு வாழ்த்துகள்" என்றுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்." என்றார்.

மேலும் அவர், "மற்ற விஷயங்களை, அவர் தனது அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை விளக்கிய பின்தான் முடிவு செய்ய முடியும்" என்றார். அதுபோல அமைச்சர் ஜெயக்குமார், இனிய சகோதரர் ரஜினிக்கு தன் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, "நானே ரஜினி ரசிகன்தான். இங்கு சிஸ்டம் சரியாக உள்ளது. எந்த சிஸ்டம் சரி இல்லையோ அந்த சிஸ்டத்தை மாற்றிக் கொள்கிறோம்."

99417975b8c60cd6-e78a-461c-a77b-9bf8db24

"தெளிவான சில முடிவுகள். தெளிவற்ற சில சொற்கள்." என்று ரஜினியின் அரசியல் முடிவை வர்ணித்தார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன்.

ரஜினி இன்று முன்வைத்த கொள்கைகள் எல்லாம் பொத்தாம் பொதுவானவை. எல்லாரும் சொல்லக்கூடியவை என்றார்

மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற ஐயத்தையும் எழுப்பினார் வீரபாண்டியன்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி, "அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து மட்டுமே அறிவித்துள்ளார். விரிவான தகவல்கள் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர். இது ஊடகங்கள் மிகைப்படுத்திய ஒன்று, தமிழக மக்கள் புத்திசாலிகள்."

பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், " இந்த அரசியல் அறிவிப்பு புரிதல் இல்லாத அறிவிப்பு. குழப்பத்தின் வெளிப்பாடு இது. இதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை." என்றார்.

மேலும் அவர், ரஜினி யாருக்கோ மறைமுகமாக உதவுவது போல தெரிகிறது என்றார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22337589.ece

ரஜினியின் பேச்சில் விமர்சனங்களுக்கு வித்திட்ட வரிகள் இவைதான்!

 
 

ரஜினி

 
Chennai: 

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பால் உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். பட்டாசு, இனிப்பு, போஸ்டர், பேனர் என 2017ம் ஆண்டின் கடைசி நாளையே அதிர வைத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இதனிடையே ரஜினி இன்று பேசிய சில வாக்கியங்களில் தெளிவு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இன்றைய பேச்சில் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்ட வரிகள் பின்வருமாறு..

1. செய்தியாளர்கள் நான் காரில் இருந்தபோது திடீரென மைக்கை நீட்டி “சார் உங்க கொள்கைகள் என்னென்ன” என்று கேட்டனர்.’கொள்கைகளா’ என எனக்கு இரண்டு நிமிடம் தலை சுற்றிவிட்டது. 

2. எனக்கு மீடியாவை பார்த்தால்தான் பயம்.  மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ’சோ’ சார் என்னை எச்சரித்துள்ளார். இந்த நேரத்தில் ’சோ’ என்னுடன் இருந்து இருந்தால் எனக்கு பத்து யானை பலமாக இருந்திருக்கும்.

3. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய செய்துவிட்டது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கின்றன.

4. ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும்.. சாதி மத சார்பற்ற ஒரு ’ஆன்மிக’ அரசியலை கொண்டு வரவேண்டும். 

5. தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை ஒன்றிணைக்க வேண்டும். பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் என அனைவரையும் நம் மன்றத்தில் இணைய வைக்க வேண்டும். அதுவரை அரசியல் பற்றி யாரும் பேச வேண்டாம். என்னை உட்பட.  

https://www.vikatan.com/news/tamilnadu/112320-rajinikanths-controversial-comment-about-politics.html

நெட்டிசன் நோட்ஸ்: ரஜினியின் அரசியல் வருகை - நோ கமெண்ட்ஸ்!

 

 
jejpg

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று ரஜினி அறிவித்துள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிடன் நோட்ஸில்...

Swaminathan Bharathi

     

சத்தத்தை நிறுத்துங்க...யுத்தத்துக்கு இன்னும் மூன்று வருஷம் கிடக்கு...அதற்குள் ரஜினி கஜினி ஆகாமல் இதே நிலைப்பாட்டில் நிற்கட்டும்

சோ நாகராஜன்

சிவாஜிராவ் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்னு கோவை ராம்நகர்ல ஆரம்பிச்சோம் , அதுக்கு பதிவு எண் வாங்க சென்றல் பஸ்ஸ்டாண்ட் லாட்ஜ்ல சத்திய நாராயணாவுக்காக காத்து கிடப்போம். இப்ப நாங்களே ரிட்டயர்ட் ஆகி பொழப்ப பாக்க வந்திட்டோம் ! ஆனா ,,,

தலைவா ஆல்த பெஸ்ட் !!!

Kumaresan Asak

அது சரி, ஆன்மீகமே ஒரு அரசியல்தானே, அதிலென்ன ஆன்மீக அரசியல்?

Spp Bhaskaran

இருபதாண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Suresh Kannan

ரஜினி முதல்வர், கமல் எதிர்க்கட்சி தலைவர் – எப்படியிருக்கும்னு நெனச்சுப்பாருங்க என்கிறார் நண்பரொருவர்.

அடப்பாவிங்களா.. எல்லாத்தையும் சினிமா மாதிரியே கொண்டாட்டமா பார்க்கறாங்களே

Joseph Anto

மீனா: என்ன கட்சி, நம்ம கட்சி, நம்ம கட்சி, பொதுக் கட்சி.

ரஜினி: கட்சி எல்லாம் இப்ப நமகெதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு.

மீனா: கனியட்டும் காலமும் நேரம் உமக்கு, #என்னமோதிட்டம்இருக்கு..

மீனா இஸ் ஏன் இல்லுமினாட்டி

meenajpg
 

Ezhumalai Venkatesan

அரசியலுக்கு வருவேன்.. ஆனா இப்போ யாரையும் விமர்சிக்கமாட்டோம்... எவ்ளோ உஷார்தனம்..

விமர்சித்தா, சிவாஜி படத்துல ஆதிகிட்ட சொல்ற மாதிரி. படங்கள் ''நக்கிகிட்டு போயிடும்''

அதனால எந்திரன். காலா படத்தை அமோகமாக ஓட்டுங்க..என்பதுதான் இதன் அர்த்தம்...சும்மாவே ரசிகர்கள் ஆயிரமாயிரமாய் பணத்தை கொட்டி படம் பார்ப்பாங்க..இப்ப அரசியல் ஆசை வேற காட்டியாச்சு...அதாவது அழற கொழந்தை வாயில வெல்லம் தடவி விட்டா மாதிரி..வேறந்த தகவலும் இல்லை.

Jeyachandra Hashmi

ரஜினியின் அரசியல் பாதை நிச்சயம் பூப்பாதையாக இருக்கப்போவதில்லை. அதேபோல், 'ஒரே பாட்டு.. ஓஹோ வாழ்க்கை'னு ஒரே தேர்தலில் அவர் உச்சம் தொடுவதும் சாத்தியமில்லை. 'வெற்றி நிச்சயம்', 'சிங்கமொன்று புறப்பட்டதே' பாடல்கள் ரியல்டைம்ல நடந்தா எவ்வளவு லென்த்தாக, பரபரப்பின்றி, அதுபாட்டுக்கு போகுமோ அப்படித்தான் இந்த தேர்தல் பிரவேசமும் நடைபெறப் போகிறது. ஆனால் பாடல் வழக்கம்போல் பாசிடிவ்வாக முடிவதும் ஆன்ட்டி க்ளைமேக்ஸாக முடிவதும் இந்த முறை இயக்குனர்/ரஜினி கையில் இல்லை. ஆடியன்ஸ் கையில் இருக்கிறது.

Aazhi Senthil Nathan

ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

Lakshmi Saravanakumar

அரசியலும் ஆன்மீகமும் எனது இரு கண்கள்

- முத்துராமலிங்கத் தேவர்.

ஆன்மீக அரசியல்

- ரஜினிகாந்த்.

நோ கமெண்ட்ஸ்

Senthil Jagannathan

இதுவரையிலும் சத்தியவான்களையும் உத்தமசீலர்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்த புத்திசாலிகள் இன்று ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கிறார்கள்!

senthiljpg
 

Taj Deen

சினிமாவில், வலிக்காமல் கோடிகளில் லாபம் கண்ட ஓர் கதாநாயகன் அரசியலில் கால்வைத்து நேர்மை பாட்டுபாடுவது

கரகரப்பாக இல்லை?

Mugil Siva

முகநூல் களத்தில் ஆதரவுக் கொண்டாட்டத்தைவிட, எதிர்ப்புக் கிண்டல்களே அதிகம் தென்படுகிறது. விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாத குறையை இனி ரஜினிகாந்த் பார்த்துக் கொள்வார் என்று சந்தோஷப்படுகின்றனர் மீம் கிரியேட்டர்கள்.

Namakkal Eswaran

அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியும் இல்லை என ரஜினி அறிவிக்கும் வேளையில் பல சிறு நிம்மதி பெருமூச்சுவிடும்.

நேரடி அரசியலில் ஈடுபடுகிறேன் என்று அறிவிக்கும் வேளையில் பல சிறு இயக்கங்கள் காணாமல் போகிவிடும்.

நேரடியாக சொல்லப்போனால் ரஜினியை விமர்சிக்கும் கூட்டம் அதிகமாகும். ஆர்ப்பாட்டங்கள் அவர் வீட்டின் முன்னே நடத்துவார்கள். கேவலமான மீம்ஸ்களை இட்டுத்தள்ளுவார்கள்.

இந்தமாதிரி இழிநிலை அரசியலை முதலில் நிறுத்தினால் தான் நாம் நேர்மையான அரசியலில் பயணிக்கிறோம் என்பது புலப்படும். இல்லையேல் சராசரி அரசியல்வாதியாக இருப்போம்.

Vikie

இயக்குனர் ஷங்கரின் முதல் கனவு திரையில் நடக்காமல் நிஜத்தில் நடந்தது

vikiejpg
 

Kesavan Ezhumalai

விஜயகாந்த் அடுத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வச்சி செய்ய ஆள் கிடைத்து விட்டார்

இந்த உலகத்தில் இரண்டு கொள்கைகள்தான் இருக்கிறது. முதலாளித்துவம், பொதுவுடைமை. பாஜக, காங்கிரஸ் முதலாளித்துவத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிக்கிறது

அந்த வரிசையில் ரஜினி முன்னுக்குப் பின் முரணாகப் பேசப் போகிறார். அது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல விருந்தாக இருக்க போகிறது

மன்னை முத்துக்குமார்

ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே கொள்ளையடிக்கின்றனர்.

--ரஜினி

கபாலி பட வசூல் எவ்வளவு? வருமானவரி செலுத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

Murugan Manthiram

3வது அணி பற்றி இனி பேசலாம். #வைகோ, #விஜயகாந்த், #ராமதாஸ், #சீமான் இல்லாத 3வது அணி.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22338485.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒரு சிலவு செய்வதில் சிவாஜியை விட கருமியானவர் ரஜனி இப்படி நரி ஊரைக்கூட்டி ஊளையிடுது என்றால் இதன் பின் கட்டாயம் சுயநலமான செய்கை ஒண்டு இருக்கு .

“ஆன்மீகமும் அரசியலும் இருவேறான பாதை!” - ரஜினிக்கு அட்வைஸ் செய்யும் அரசியல் தலைவர்கள்

 
 

ரஜினி

னது ‘ஆன்மீக அரசியல்’ பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளான இன்று உறுதி படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1996லிருந்து அவரது அரசியல் அறிவிப்புக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்துள்ளது. கூடவே, வரவிருக்கும் 2012ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் சாதி மத பேதமற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும்  அறிவித்துள்ளார். அதுவரை யாரும் அரசியல் பற்றிப் பேசக் கூடாது என்று தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார். தமிழக அரசியல் சில கட்சிகளாலும் அதன் தலைமைகளாலும் சீரழிந்து இருப்பதாகவும் அதனை அடித்தளத்திலிருந்து மாற்றி அமைக்கவேண்டியது  கடமை என்றும் ரசிகர்களிடையே அவர் பேசி இருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

திராவிடக் கட்சிகளின் உதவி இல்லாமல் ரஜினி வெற்றிபெற முடியாது  

 

நாஞ்சில் சம்பத்

ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து கருத்து கூறியிருக்கும் தினகரன் அணியின் நாஞ்சில் சம்பத்,“இந்தியா ஜனநாயக நாடு. இங்கே யார் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் மக்களிடம் தான் அவர்களை ஆதரிப்பதா? வேண்டாமா? என்கிற முடிவு இருக்கிறது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு இருந்த விஜயகாந்த் அரசியல் கட்சியில் நுழைவதற்கும் எதிர்கட்சித் தலைவராக அமர்வதற்கும் அ.தி.மு.க.வின் உதவி தேவையாய் இருந்தது. அதனால் அவர் அரசியலில் வெற்றி பெறுவது என்பது திராவிடக் கட்சிகளின் உதவியில்லாமல் இங்கே சாத்தியமில்லை. ஏனென்றால் இது பெரியாரின் மண், அண்ணாவின் நந்தவனம், எம்.ஜி.ஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை.மேலும் ஆன்மீகம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு. இரண்டும் ஒன்றாகப் பயணிக்கக் கூடாது தனித்தனியாகதான் பயணிக்கவேண்டும்” என்றார்.

“சரியான சமயத்தில் முடிவை அறிவித்திருக்கிறார் ரஜினி!”

திருமாவளவன்


‘விஜயகாந்த் அரசியலில் நுழைந்த சூழலில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இரண்டு வலுவான தலைவர்கள் தமிழக அரசியலில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய தமிழக அரசியல் சூழல் அப்படியான வலுவான தலைமை இல்லாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிமத வேறுபாடற்ற ஆன்மீக அரசியல் என்று 234 தொகுதிகளிலும், தான் தனித்து போட்டியிடுவேன் என்று கூறியிருப்பதன் மூலம் எவ்வித மதச்சார்புடைய தேசியக் கட்சிகளுடனோ அல்லது சாதியக் கட்சிகளுடனோ அவர் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. இனி அவருக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு என்பதைத் தவிர அவருக்கு நிகரான வலுவான எதிர்ப்பு என்பது அவரது சினிமாத்துறையிலிருந்து மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது’ என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.

“மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் என்ன அரசியல் செய்துவிட முடியும்?”

வேல்முருகன்

“நான் கனவில்கூட நினைக்காத அளவுக்கு 1000 மடங்கு பணம், புகழை எனக்குக் கொடுத்தவர்க தமிழர்கள் என்று மேடையிலேயே அறிவிக்கும் ரஜினி, இன்றைய நாள்வரை அந்தத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றிற்காவது தமிழர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிப் போராடியிருக்கிறாரா? அல்லது ஆதரவுக் குரல்தான் எழுப்பியிருக்கிறாரா?

விவசாயிகள் தற்கொலை, காவிரிப் பிரச்னை, ஈழப் பிரச்னை, கந்துவட்டி, நீட் தேர்வு, ஒகி புயல் பாதிப்பு.... என்று தமிழக மக்கள் பிரச்னைகள் எதிலுமே தலையிடாமல், இதுநாள்வரை சொகுசு வாழ்க்கை நடத்திவந்த ரஜினிகாந்த், நேரடியாக முதல்வர் நாற்காலியில் போய் அமர்ந்துகொள்ள திட்டம் போடுகிறார். அவர் நினைப்பதுபோல், தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல....

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்புலமாக இருப்பது பி.ஜே.பி கட்சிதான். தலைகீழாக நின்று பார்த்தும், தமிழகத்தில் பி.ஜே.பி-யால் டெபாஸிட்கூட வாங்கமுடியவில்லை. எனவே, ரஜினியை மறுமுகமாக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் 'ஆன்மிக அரசியல்' செய்ய நினைக்கிறார்கள். எந்தப் பிரச்னைகளுக்கும் கருத்துசொல்லக்கூடப் பயந்து இமயமலைக்கு ஓடிவிடும் ரஜினிகாந்த்தான், தமிழக மக்களைக் காக்கப்போகிறாரா? 

 

எல்லா சோதனையையும் செய்துபார்த்து சோர்ந்துவிட்ட பி.ஜே.பி. கடைசி முயற்சியாக ரஜினியை பலிகடாவாக்கத் முயற்சி செய்கிறார்கள். அரசியல் களத்தில் நிச்சயம் ரஜினிகாந்த் பலிகடா ஆவார்!'' என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

https://www.vikatan.com/news/tamilnadu/112321-theism-and-politics-are-two-different-roads-politicians-comments-on-rajinis-entry-in-to-politics.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசையினது வாழ்த்து பா.ஜ.கவின் கூட்டு என்பதாக எடுக்கலாம் போன்று தோன்றுகிறது. தினகரது கை ஓங்கிவிட்டால் ரஜனி என்ற  கைத்தடியூடாக தமிழகத்தைச் சீரழிக்கலாம் (இப்போதும் அப்படித்தான் இன்னும் படுமோசமாக) என்ற ண்ணத்தோடு, ஒரு இந்துத்துவவாதியும்வேற்றுமொழியாளனுமான இவரை முன்னோக்கித் தள்ளுவது தமக்குப் பயன்தரலாம் என்பதோடு, சோவினது பிரதியான குருமூர்த்திபோன்றவர்களது குட்டுகள் வெளிப்பட்டுள்ள சூழலில், எ.ப.சா சக ஓ.ப.செ போன்றவர்கள் எவளவுதூரம் இனிவளைவார்கள் என்ற நிலையில், பா.ஜ.கவினுடைய முன்மொழிதலாகவும் இவரது நகர்வு அமையலாம்.

தமிழக இளைய குமுகாயம் தமிழகம் குறித்து மிகத்தெளிவாகச் சிந்திக்க வேண்டிய சூழலில் வெறும் திரைக்கதாநாயக விம்பத்துட்  சிக்கிச்சீரழிகின்ற பெரும் துயரம் நிகழ்வது தமிழகத்தின் சாபக்கேடாகவுள்ளது. தமிழன் தமிழனாகச் சிந்திக்காதவரை மாற்றங்கள் ஏற்படா.

அதிமுகவை வெல்ல யாரும் பிறக்கவில்லை: ரஜினி அரசியல் வருகை குறித்து முதல்வர் பழனிசாமி கருத்து

 

 
eps%20edit

முதல்வர் பழனிசாமி | கோப்புப் படம்

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினி அரசியல் வருகை குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததையடுத்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:

“ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்து என்ன பேசியிருக்கிறார் என்ற முழுவிவரம் எனக்குத் தெரியவில்லை. அவரது பேச்சைக் கேட்ட பிறகே கருத்து கூற முடியும்” என்றார்.

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, “இது அவரது தனிப்பட்ட கருத்து. இப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுக இன்று உயிரோட்டமாக இருக்கிறது. அதிமுகவை வெல்ல யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப்போவதுமில்லை” என்றார் எடப்பாடி பழனிசாமி.

http://tamil.thehindu.com/tamilnadu/article22338339.ece?homepage=true

’வெல்கம் டு பாலிடிக்ஸ்’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!

 
 

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Rajini_Namal__18187.jpg

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார். அரசியல் குறித்த ரஜினியின் அறிவிப்புக்கு வாழ்த்துகளும், விமர்சனங்களும் குவிந்துவருகின்றன. சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல், ‘எனது தந்தை ராஜபக்சேவுக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது நல்ல செய்தி. அவரது படங்களைப் போல் நிஜவாழ்விலும் நடக்காது என்று நம்புகிறேன். நல்லது செய்ததற்காக சிவாஜி படத்தில் அவர், சிறை சென்றதுபோல நிஜ வாழ்வில் பார்க்க நான் விரும்பவில்லை. அரசியலுக்கு அவரை நான் வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/112334-namal-rajapaksa-welcomes-rajinis-political-entry.html

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

குடி போதையில் கலாட்டா பண்ணி உள்ளே போனதுக்கு இப்ப அரசியல் சிஸ்ட்டம் சரிவராது .

'ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்' : எஸ்.வி. சேகர் பேட்டி

தனது அரசியல் பிரவேசத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி

தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவோம் என்றார் அவர். காலம் குறைவாக இருப்பதால் அதற்கு முன்பு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி. சேகர் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''முன்பு, அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்று தெரியவில்லை என்றார் ரஜினி. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் வருவேன், அதுவரை ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க போகிறேன் என்கிறார். 40 ஆண்டுகள் இருக்கும் மன்றங்களாக அவர் இன்னமுமா ஒருங்கிணைக்கவில்லை?'' என்று எஸ்.வி. சேகர் வினவினார்.

தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தோன்றுகிறது என்று எஸ்.வி. சேகர், மேலும் குறிப்பிட்டார்.

எஸ்.வி. சேகர்

''இன்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, இது தான் கட்சியின் பெயர், கொடி என்று அறிமுகம் செய்தால்தான் அவர் கட்சி ஆரம்பித்தாக அர்த்தம், தற்போதைய அறிவிப்பு கோர்ட்டில் வாய்தா வாங்குவது போலதான்'' என்று கூறினார்.

'ரஜினிக்கு தவறான ஆலோசனை தருகிறார்கள்'

''காலா மற்றும் எந்திரன் 2 ஆகிய படங்கள் வெளிவரும்வரை, அவர் அரசியல் பேசமாட்டார் என்பது என் கருத்து இன்றைக்கு எந்த அறிவிப்பும் வெளியிடாவிட்டால் கேலிக்குரியதாகவிடும் என்றே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்'' என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என தோன்றுகிறது என்று குறிப்பிட்ட எஸ்.வி.சேகர், ''அரசியல் ஆதாயம் பெற முயலும் சிலர் தவறான விஷயங்களை கூறலாம்'' என்று கூறினார்.

அவ்வாறு தவறான ஆலோசனைகள் கூறுவது யார் என்று கேட்டதற்கு, ''அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல் ஆலோசகர்களாக இருக்கலாம், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்'' என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமைMIGUEL MEDINA

''தற்போதைய ஆட்சியில் சரியான தலைமை இல்லை என்று அவர் கூறுகிறார். தவறுகள் பற்றி கூறுவதென்றால் ஜெயலலிதா இருந்தபோது அவர் கருத்து தெரிவித்திருக்கலாம்'' என்று மேலும் கூறினார்.

ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் தாக்கம் ஏற்படுமா?

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது பற்று குறித்து பேசிய அவர், ''அது ஒரு இடைத்தேர்தல் வெற்றி மட்டுமே. அதனால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. திருமங்கலம் இடைத்தேர்தல் எப்படி பார்க்கப்பட்டதோ, அது போலத்தான் ஆர்,கே.நகர் இடைத்தேர்தல்'' என்று குறிப்பிட்டார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் களத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு பதிலளித்த எஸ்.வி. சேகர், ''தற்போது அது குறித்து கருத்து கூறமுடியாது. அவர் கட்சி ஆரம்பித்த பிறகு, உள்கட்டமைப்பு, கொடி அறிமுகம் எல்லாம் செய்தபிறகுதான் அது பற்றி கருத்து கூறமுடியும்'' என்று கூறினார்.

http://www.bbc.com/tamil/sport-42527660

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

’வெல்கம் டு பாலிடிக்ஸ்’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!

 
 

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Rajini_Namal__18187.jpg

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார். அரசியல் குறித்த ரஜினியின் அறிவிப்புக்கு வாழ்த்துகளும், விமர்சனங்களும் குவிந்துவருகின்றன. சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல், ‘எனது தந்தை ராஜபக்சேவுக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது நல்ல செய்தி. அவரது படங்களைப் போல் நிஜவாழ்விலும் நடக்காது என்று நம்புகிறேன். நல்லது செய்ததற்காக சிவாஜி படத்தில் அவர், சிறை சென்றதுபோல நிஜ வாழ்வில் பார்க்க நான் விரும்பவில்லை. அரசியலுக்கு அவரை நான் வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/112334-namal-rajapaksa-welcomes-rajinis-political-entry.html

விகடன் காரங்களுக்கு அதே டுவிட்டரின் கீல் பக்கத்தில் சிங்களவர்கள் என்ன எழுதி போட்டு இருக்கினம் என்று பார்த்தால் புரியும் ரஜனி யார் என்று . இப்பதெல்லாம்  கூகிள் மொழி பெயர்ப்பு சிங்களத்தை 90வீதம் சரியாக தமிழுக்கு மொழி பெயர்க்குதுhttps://translate.google.com/

நாமலின் டுவிட் 

 

Edited by பெருமாள்

ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்! 

 

 
seemaan

 

சென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலவேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு விதமாக எதிர்வினை புரிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லா விதமான ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இங்கு மட்டும்தான் சொல்வார்கள். உலகிற்கே ஆளும் முறையை சொல்லிக் கொடுத்த பெருமை வாய்ந்த பாரம்பரியம் உடையவர்கள் நாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் யாரும் தகுதி இல்லாதவர்களா? ஒருவரும் இங்கு இல்லையா?

காவிரிப் பிரச்னையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களே? இப்போது அரசியல் பேசுபவர் அப்போது எங்கே போனார்? பொதுச் சொத்துக்களும் பேருத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போதெல்லாம் ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள் என்று யாருமே கேட்கவில்லையே ஏன்?

எனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது? மக்களிடம் கொண்டு செல்ல? ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு என்று பொருள்.  எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் தெளிவாக சொல்ல வேண்டும்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

http://www.dinamani.com/tamilnadu/2017/dec/31/ஆள்வதற்கு-தமிழர்கள்-தகுதி-இல்லாதவர்களா-ரஜினியின்-அரசியல்-பிரவேசத்திற்கு-சீறும்-சீமான்-2836315.html

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா? ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்! 

 

 

 

இப்போ மட்டும் சிங்களவர்களா தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள்? சுத்த தமிழர்களான எடப்பாடியும்,பழனி சாமியும் கைகோர்த்துதானே ஆட்சி செய்கிறார்கள் , அந்த தமிழர்களின் ஆட்சியில் தமிழகம் எந்த அளவு பூத்து குலுங்குகிறது சீமான் ஐயா?

அதற்கடுத்து முதல்வர் பதவிக்கு குறிவைக்கும் தினகரன், ஸ்டாலின் இவர்கள் எல்லாருமே தமிழர்கள் என்ற தகுதியைதவிர வேறு எந்தவொரு தகுதியையாவது தமிழகத்தை ஆள கொண்டிருக்கிறார்களா?

இருவேறு பிரிவுகளாய் தமிழகத்தில் இப்போது தமிழர்கள் ஆளும் கட்சி இருந்தாலும், அந்த தமிழகத்தை ஆளும் கட்சியின் எம்ஜிஆர் என்ற ஸ்தாபகரே பிறப்பால் மலையாளிதானே?

அதிமுக,திமுக என்ற இருபெரும் கட்சிகளின் வாக்குவங்கிகளை உடைத்துக்கொண்டு தனிப்பெரும் கட்சியாக,தனியாக 234 தொகுதிகளிலும் நின்று ரஜனி ஒருபோதும் தமிழக முதல்வராகமாட்டார்.

அதுபோல் தமிழ் தமிழர் என்று முழங்கும் நீங்களும் ஒருபோதும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராகபோவதில்லை.  இது ரஜனியையோ உங்களையோ தாழ்த்தி எழுதும் வரிகளல்ல, அதுதான் யதார்த்தம்!

செல்வாக்கும்,பணமும்,வெறும் புகழ்,கவர்ச்சி மயக்கத்தின் முன்னால் தமிழகத்தில் தமிழ் தமிழர் என்பதெல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்பது , ஆர்கே நகர் இடைதேர்தல் நிரூபித்திருக்கிறது, அதை உங்கள் வாயாலேயே ஒப்புக்கொள்ளவும் வைத்திருக்கிறது!

புற கவர்ச்சிகளின் முன்னால் தமிழ் என்பதும், தமிழர் என்பதும் தோற்றுவிட்டது,

அங்கு ரஜனியை பற்றி பேசினால் அடிவிழும்,ஓவியாவை பற்றி திட்டினால் உதைவிழும்

இன்னும் ஒருபடி மேலே சொல்லபோனால்  தமிழகத்தில் போய் நாம் தமிழ் பேசவேண்டுமென்றால், எங்களுக்கு ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருக்கவேண்டும் என்பதே உண்மையான நிலமை!

 கண்டக்டராக,இருந்து, சூப்பர்,ஸ்டாரானவருக்கு, முதல்வர்,கனவு போலாம் ரைட்

 

  • gallerye_232149105_1930106.jpg

 

 

 

சென்னை:கண்டக்டராக இருந்து, திரையுலகத்திற்கு வந்து, சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்திற்கு, முதல்வர் கனவு வந்துள்ளது. இதற்கு அச்சாரமாக, ரசிகர்கள் சந்திப்பின் நிறைவு நாளான நேற்று, தனிக்கட்சி துவக்கப்போவதாக அறிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், 'சொன்னதை செய்யாவிட்டால், மூன்றாண்டு களில் விலக தயார்' எனவும் அறிவித்துள்ளார். இதனால், அரசியலுக்கு அவர் வருவாரா என, 20 ஆண்டுகளாக நீடித்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

 கண்டக்டராக,இருந்து, சூப்பர்,ஸ்டாரானவருக்கு, முதல்வர்,கனவு போலாம் ரைட்


கண்டக்டராக வாழ்க்கையை துவக்கி, சினிமாவில் கால் பதித்து, சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர், நடிகர் ரஜினிகாந்த், 67. 'புலி வருது' கதையாக, அரசியலுக்கு வரப் போகிறார் என, 20 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரோ, அமைதி காத்து வந்தார்.சூசகம்
சில மாதங்களுக்கு முன், ரசிகர்கள் சந்திப்பை துவக்கிய அவர், 'தமிழகத்தில், 'சிஸ்டம்' கெட்டு
விட்டது; மாற்ற வேண்டும்' என பேசியது, அரசியலுக்கு வர உள்ளதை, சூசகமாக உணர்த்தியது.


இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில், ரசிகர்களுடனான இரண்டாம் கட்ட சந்திப்பை, ரஜினிகாந்த் நடத்தினார். முதல் நாள் சந்திப்பின் போதே, 'அரசியல் பிரவேசம் குறித்து, டிச., 31ல் அறிவிப்பேன்' என கூறி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்; அரசியல்வாதிகளை யோசிக்க வைத்தார்.

ரசிகர்கள் சந்திப்பின், நிறைவு நாள் நேற்று என்பதால், ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் இருந்தது.எதிர்பார்த்தபடியே, அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை, ரஜினி நேற்று வெளியிட்டார்.ரசிகர்களிடம் அவர் பேசியதாவது:ரசிகர்களை எப்படி பாராட்டுவது

என, தெரிய வில்லை. இவ்வளவு கட்டுப்பாட் டோடு, நீங்கள் இருந்ததில் மகிழ்ச்சி.இந்த கட்டுப்பாடு, ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதும்; நாம், என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். ரொம்ப, 'பில்டப்' ஆகிடுச்சுல்ல... இந்த பில்டப்பை, நான் கொடுக்கவில்லை; தானா வந்து விட்டது.


எனக்கு அரசியல் பயம் இல்லை; மீடியாவை பார்த்து தான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியாவை பார்த்து பயப்படுறாங்க; நான் வெறும் குழந்தை. நான் ஏதாவது சொன்னா, விவாதமாகி விடுகிறது. மறைந்த நண்பர் சோ, 'மீடியா கிட்ட எச்சரிக் கையா இரு'ன்னு,சொல்லி இருக்கார். இந்த நேரத்துல அவர், என்னுடன் இருந்தால், 10 யானை பலம் இருந்திருக்கும். ஆனாலும், அவரது ஆன்மா என்னுடன் இருக்கும்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். குருஷேத்திரத் தில், கண்ணன், 'உன் கடமையை செய்; மற்றதை நான் பார்த்துக்கிறேன். யுத்தம் செய்; ஜெயிச்சா நாடாளுவாய்; யுத்தம் செய்யாமல்போனால், உன்னை கோழைன்னு சொல்வாங்க...'ன்னு, அர்ஜுனன் கிட்ட சொன்னார். அதனால, எல்லாத்தையும் செஞ்சு முடிச்சாச்சு; இனி, அம்பு விடறது தான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி; இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.


அதற்கு முன், உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு, குறைந்த நாட்களே இருப்பதால், போட்டியிடப் போவதில்லை. லோக்சபா தேர்தல் பற்றி,அந்த நேரத்தில் முடிவுஎடுப்பேன். பணம், பெயர், புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. நான் கனவுல கூட நினைக்காத அளவுக்கு, அதை, ஆயிரம் மடங்கு கொடுத்திருக்கிறீர்கள்.

 

ஆன்மிக அரசியல்



பதவி ஆசை இருந்திருந்தா, 1996லேயே தேடி வந்த நாற்காலியை வேண்டாம் என, சொல்லி

இருக்க மாட்டேன். 45 வயதிலேயே, எனக்கு பதவி ஆசை இல்லை; 68 வயதில் வருமா?வந்தா, பைத்தியக்காரன் என்றல்லவா சொல்வர்!அரசியல் ரொம்ப கெட்டு விட்டது; ஜனநாயகம் சீர்கெட்டு போய்விட்டது. ஓராண்டில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள், தமிழக மக்களை தலைகுனிய வைத்து விட்டன. மற்ற மாநில மக்கள், நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.


இந்த நேரத்தில், நான், இந்த முடிவை எடுக்க வில்லை என்றால், அந்த குற்ற உணர்ச்சி, என்னை சாகிற வரைக்கும் துன்புறுத்தும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட் டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான; வெளிப்படையான; ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை ஏற்படுத்த வேண்டும்.அது தான் என் நோக்கம். ஆட்சி, கட்சி இதெல்லாம் தனி மனிதனான என்னால் மட்டும்முடியாது.


தமிழக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.இது, சாதாரண விஷயமில்லை என, எனக்கு தெரியும். ஆண்டவன் அருள், மக்களின் நம்பிக்கை, அன்பு, ஒத்துழைப்பு இருந்தால் தான், இதை சாதிக்க முடியும்.அது எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.பழைய காலத்தில், ராஜாக்கள், இன்னொரு நாட்டுடன் யுத்தம் தொடங்கி ஜெயித்தால், அந்த அரண்மனை கஜானாவை கொள்ளையடிப்பர். ஜெயிச்ச படை வீரர்கள், எதிரி நாட்டு மக்களிடம் கொள்ளையடிப்பர். ஆனால், ஜனநாயகத்தில், சொந்த நாட்டிலேயே, பல விதத்துல கொள்ளை அடிக்கின்றனர்; இதை மாற்ற வேண்டும்.


இதற்கு, எனக்கு தொண்டர்கள் வேண்டாம்; காவலர்கள் தான் தேவை. அவங்க உழைப்பால ஆட்சி அமைக்கணும். அடிதட்டு மக்களுக்கு சேர வேண்டிய உரிமைகள், சலுகைகளை சேர விடாமல் தடுக்கிறவர்களை கண்டுபிடிக்கிற காவலர்கள் வேண்டும்.சுயநலத்துக்காக, எம்.பி., கிட்டேயோ, அமைச்சரிடமோ, நிற்காத காவலர்கள் வேண்டும். யார் தவறு செய்தாலும், தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும்.அந்த காவலர்களை கண்காணிக்கிற பிரதிநிதி மட்டுமே நான். முதலில் காவலர்கள் படை வேண்டும்; அதை, நாம் உருவாக்க வேண்டும். ரசிகர் மன்றங்கள், கிராமத்தில் இருந்து, நகரங்கள் வரை, ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றை, ஒருங்கிணைக்க வேண்டும்.

 

முதல் பணி



சுற்றி இருப்பவர்களை மன்றத்திற்குள் வர வைக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும், நம் மன்றங்கள் இருக்க வேண்டும். இது தான், நான் கொடுக்கிற முதல் பணி. அது வரை, நாம் அரசியல் பேச வேண்டாம்; யாரையும் குறை கூற வேண்டாம்; போராட்டம் வேண்டாம். அதை செய்ய நிறைய பேர் இருக்கின்றனர்!நமக்கு நீந்த தெரியும். குளத்துல இறங்கின பின் நீந்தலாம். சட்டசபை தேர்தல் எப்போது வருகிறதோ, அப்போது, கட்சி ஆரம்பித்து, என்ன செய்ய போறோம் என்பதை, எடுத்து சொல்வோம்.சொன்னதை செய்ய வில்லை என்றால், மூன்று ஆண்டுகளில், ராஜினாமா செய்வோம் எனக்கூறி, மக்கள் மத்தியில் போவோம்.

நம் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. நம் கொள்கை, நல்லதை நினைப்போம், நல்லதை பேசுவோம், நல்லதை செய்வோம், நல்லதே நடக்கும்!வரும் சட்டசபை தேர்தலில், நம் ஜனநாயக படையும் இருக்கும்.இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.இந்த அறிவிப்பால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என, 20 ஆண்டுகளாக நீடித்த யூகத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1930106

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSY2rllVoAAx2W4.jpg:large

 

முதலமைச்சரானவுடன் முதல் கையெழுத்து - - - அனைத்து வாடகை பாக்கிகளும் ரத்து !

 
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.