Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா

Featured Replies

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா

KKS-agrement-india-srilankaகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க இந்தியா இணங்கியிருந்தது.

இதையடுத்து, 2011 ஜூலையில் இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

KKS-agrement-india-srilanka

இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து 45.27 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையிலேயே, நேற்று இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபையே நடைமுறைப்படுத்தவுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/01/11/news/28404

17 hours ago, நவீனன் said:

2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க இந்தியா இணங்கியிருந்தது.

கொழும்பில் சீனன் கட்டும் சங்கரி லா ஆடம்பர விடுதியுடன் போட்டி போட்டு அருகில் உள்ள நிலத்தில் தானும் விடுதி கட்ட இந்தியக் குப்பைகள் முடிவு செய்தது, சங்கரி லா ஆடம்பர விடுதி வானுயர கட்டி முடிந்து திறப்பு விழாவும் முடிந்துவிட்டது.

அதனருகில் சீனனுடன் போட்டி போட்டு இந்தியக் குப்பைகள் கட்டும் ஆடம்பர விடுதி இன்னமும் நில மட்டத்துக்கு கூட மேலெழவில்லை.

இது தான் வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியக் குப்பைகளின் இலட்சணம். பிறகேன் இந்தியக் குப்பைகளுக்கு துறைமுகம் கட்டும் ஆசை? 

தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகள்  சீனர்களுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த அபிவிருத்திக்குப் பின்னால் எத்தனை சிங்களக் குடியேற்றம் வந்து, இன்னும் எத்தனை காணிகள் பிடுங்கப்படப் போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அபிவிருத்தி நடந்தால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒரு நினைவில் உள்ளது!

அதில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் எனது தூரத்து உறவினர்!

அகதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலருக்கு...இந்திய அரசால் சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளதாகவும், அவர்களை ஒரு குறிப்பிட்ட விழாவுக்கு வந்து சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளும்படியும்....இந்திய அரசின் பிரதிநிதிகள் என அழைத்துக் கொள்பவர்களால் ....அழைப்புகல் விடுக்கப் பட்டன!

அதை நம்பி....அவர்களும்...வேலை மினக்கெட்டு...தங்கள் வேலைகளையும் விட்டு விட்டு விழாவுக்குச் சென்றனர்!

அந்த விழாவில்...பல படங்கள் எடுக்கப் பட்டன! சென்றவர்களுக்கும்....ஒவ்வொரு 'டோக்கன்' வழங்கப்பட்டு.....சைக்கிள்கள் வந்ததும்..அவர்களுக்கு அறிவிக்கப் படும் என்றும்....டோக்கன்களைக் காட்டிச் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது!

இப்போது சில வருடங்கள் கடந்து போன நிலையிலும்....அந்த அகதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்!

இந்திய அரசின்...அந்த டோக்கன்களும்...அவர்களது...சாமியறைத் தட்டில் ஒரு முக்கிய பொருளாகி...அறையை அலங்கரிப்பது மட்டுமன்றி....இந்திய அரசின் செயல் திறனுக்கு சாட்சிகளாகவும் உள்ளன!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

Cf0kwqSUIAARXK4%20df_zpshuntxhw2.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

இந்தியரின் பொருளாதார வளர்ச்சி பற்றி சிலர் புளகாங்கிதம் அடைந்தது பற்றி நீங்கள் அறியாதவர் அல்ல.அவர்களின் ஊழல்களும் (அரசு) மக்களின் அணுகுமுறையும்(attitude) பல காலங்கள் எடுக்கும்  மேற்கு உலகுடன் போட்டி  போட.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவையும் சீனாவையும்        தனது நண்பர்களாய் சமமாக ஏற்று , இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் அவர்களை பங்காளர்கள் ஆக்கிவிட்டு,மாறி மாறி வரும் இலங்கை அரசுகள் நல்ல பெயர் தேடி கொண்டாலும்...

சீனாவின் தரமுள்ள திட்டமிடல் வேலைபாடுகளான  துறைமுகம், துறைமுக நகரம், உல்லாச விடுதிகள், அதிவேக சாலைகள்,விமான நிலையம், கட்டுமானங்கள் என அனைத்தையுமே தெற்கு பக்கம் வைத்துக்கொண்டு...

இந்தியாவின் பக்கம்,  காற்றடித்தால் பறந்து செல்லும் வீட்டு திட்டங்கள்,வெறும் கருத்துக்கள் மட்டுமே சொல்லி காலம் கடத்தும் வடமாகண சபைகள், இந்திய சுதந்திர தினத்துக்கு யாழில் கொடியேற்றமும், முல்லைதீவில் காந்திக்கு சிலையும் 

காங்கேசந்துறைமுகம்  உயர்தரம் பெற்றுவிட்டால். சென்னை துறைமுகத்தின் பொருட்களின் ஏற்றி இறக்கலை பாதிக்கும் என்று தெரிந்தும்,  

காங்கேசன் துறைமுகத்தை இந்தியாகாரன் அபிவிருத்தி செய்ய பண்ணும் எத்தனங்களும்...இதெல்லாம்  எங்கள் பக்கம் தள்ளிவிடுவது....ஏதோ நல்லது நடக்க போகிறது என்று நாங்கள் நம்புவதும்..

   இன்னும் இந்தியர்களிடமும் இலங்கையிடமும்,தமிழர்கள் பாடம் சரியா படிக்கவில்லை என்பதே முழு அர்த்தம்!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, valavan said:

வளவன்,

இந்தியாவின் நோக்கம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என்பது அல்ல என்பது எனது அனுமானம்!

இந்தியாவின் சேது அணைத் திட்டம்...நடைமுறைப் படுத்தப் பட்டால்....காலித் துறைமுகமும், கொழும்புத் துறைமுகமும் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து போகும்! சென்னை போன்ற இந்தியாவின் தென் கரையோர துறைமுகங்களின் பாவனை அதிகரிக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு!

ஆயினும் சீனாவின் முத்துமாலை திட்டத்தில்....தூர  நோக்கில் காலித் துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் கையில் எடுத்தததன் மூலம் இந்தியாவின் அடி வயிற்றில் தொடுமளவுக்கு...சீன உள்ளது! அத்துடன்...கல்பாக்கம் போன்ற இந்தியாவின் அணு உலைகளும்....தெற்கிலேயே அமைந்துள்ளதையும் கவனிக்கவும்! மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளிலும் சீன அதிக கவனம் செலுத்துகின்றது!

இப்போது இந்தியாவின் மேற்குப் பக்கம் பாகிஸ்தானிலும், தெற்குப் பக்கம் காலியிலும், வடக்குப் பக்கம் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவுக்குச் செக் மேற் ...வைக்கப்பட்டு விட்டது!

இதே நேரம் காங்கேசன்துறையிலும்  'சீனா; கையை வைத்து விட்டால் என்ற பயம் இந்தியாவுக்கு எப்போதுமே உண்டு!அது  சீனாவுக்குக் கை மாறாமல் இருக்க...ஏதாவது செய்தாக வேண்டும்! அதற்காகத் தான்...இந்த...துறைமுக விஸ்தரிப்பு நாடகம்!

உடன்படிக்கை கையெழுத்தப் படுவது மட்டுமே ...இங்கு நடக்கும்!

மற்றதெல்லாம்....எப்போது நடந்து முடியும் என்பதெல்லாம்....அந்த ஆண்டாளுக்கே வெளிச்சம்!

இந்திய இதற்கு உபயோகிக்கப் போகும் பணத்தை வைத்து...சென்னை விமான நிலையத்திம் கூரையைச் சரி செய்யலாம்! அல்லது பல்லாயிரக் கணக்கான அடிப்படை வசதி கூட இல்லாத மக்களுக்கு.....மலசலகூட வசதி....மருத்துவ வசதி...என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்ள உதவி செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

இந்திய இதற்கு உபயோகிக்கப் போகும் பணத்தை வைத்து...சென்னை விமான நிலையத்திம் கூரையைச் சரி செய்யலாம்! அல்லது பல்லாயிரக் கணக்கான அடிப்படை வசதி கூட இல்லாத மக்களுக்கு.....மலசலகூட வசதி....மருத்துவ வசதி...என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்ள உதவி செய்யலாம்!

இந்தியா இந்த பணத்தை வைத்து தமது நாட்டில் நீங்கள் சொன்னவற்றை செய்திருக்கலாம் என்பதும், இந்தியா தமது பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு விஷயத்தை இலங்கையில் செய்யகூடாது என்பதும்..

அவர்களுக்கு தெரியாதா என்ன? அவர்களுக்கு தேவைப்படுவது இலங்கையில் ஒரு காலூன்றல், இதை நான் புங்கையூரான் அண்ணாவுக்கு சொல்லி தெளிவுபடுத்தினா ,பெரிய கண்டுபிடிப்பு எண்டு சொல்லி என்னை அடிக்கவே வருவீங்க, ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம்தானே அது!

On 1/14/2018 at 3:10 AM, புங்கையூரன் said:

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒரு நினைவில் உள்ளது!

அதில் பாதிக்கப்பட்டவர் ஒருவர் எனது தூரத்து உறவினர்!

அகதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிலருக்கு...இந்திய அரசால் சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளதாகவும், அவர்களை ஒரு குறிப்பிட்ட விழாவுக்கு வந்து சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளும்படியும்....இந்திய அரசின் பிரதிநிதிகள் என அழைத்துக் கொள்பவர்களால் ....அழைப்புகல் விடுக்கப் பட்டன!

அதை நம்பி....அவர்களும்...வேலை மினக்கெட்டு...தங்கள் வேலைகளையும் விட்டு விட்டு விழாவுக்குச் சென்றனர்!

அந்த விழாவில்...பல படங்கள் எடுக்கப் பட்டன! சென்றவர்களுக்கும்....ஒவ்வொரு 'டோக்கன்' வழங்கப்பட்டு.....சைக்கிள்கள் வந்ததும்..அவர்களுக்கு அறிவிக்கப் படும் என்றும்....டோக்கன்களைக் காட்டிச் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது!

இப்போது சில வருடங்கள் கடந்து போன நிலையிலும்....அந்த அகதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்!

இந்திய அரசின்...அந்த டோக்கன்களும்...அவர்களது...சாமியறைத் தட்டில் ஒரு முக்கிய பொருளாகி...அறையை அலங்கரிப்பது மட்டுமன்றி....இந்திய அரசின் செயல் திறனுக்கு சாட்சிகளாகவும் உள்ளன!

பெருமளவிலான மோசமான மனிதர்களின் இருப்பிடமாக இருக்கும் இந்தியாவின் எலும்புத்துண்டுகளை பொறுக்கியபடி ஜால்றாப்போடும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.