Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?

Featured Replies

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?

ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாசாரத்தில் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

பெண்படத்தின் காப்புரிமைTAMILCULTURE.COM

என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வ மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.

என் சகோதரி `பெரிய பெண்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைதான் நானும் கேட்டேன்.

"நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?" என்று நான் கேட்டேன்.

என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள, எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

பூப்படைதல் என்றால் என்ன?

பூப்படைதல் என்பது, ஓர் உடல், இனப்பெருக்கம் செய்ய தயாராகி விட்டது என்பதை குறிக்கும் விஷயம். தமிழ் கலாசாரத்தில், பூப்படைதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பது, பெண்களின் சக்தியை அடையாளப்படுத்துவதற்கே.

என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? எஸ்டி, 22 வயது பெண்

இது தூய்மையான, அபாயகரமான இயற்கை சக்தி என்பதால், இவை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.

இதன்மூலம், மாதவிடாயை அடைந்த பெண், மனப்பக்குவத்தை அடைந்துவிட்டார் என்று பார்க்கப்பட்டது. அதோடு, அவர் குறிப்பிட்ட சில தூய்மையற்ற பலவீனங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் பார்க்கப்பட்டது.

ஆண் `வயதை அடைதல்` என்பது, தானாக நடக்கும் என்று பார்க்கப்பட்டாலும், மாதவிடாயை அடையாத பெண்கள், பெண்மையில் முழுமை அடையாதவராக பார்க்கப்படுகிறார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சி என்பது, இளம்பெண், பெண்மணியாக மாறுவதை பெருமையாக கொண்டாடும் நிகழ்ச்சி. இதன்மூலமாக அவர் திருமணத்திற்கும், குழந்தைகளை பெறவும் தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

"என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? என்று கேட்கிறார், 22 வயதுடைய பெண் ஒருவர்.

குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்" எஸ்பி, 27 வயது பெண்

முதல் மாதவிடாய், பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டது. அந்த கட்டுப்பாட்டில், சமைக்கப்படாத முட்டை சாப்பிடுவது, காலையில் கடலை எண்ணைய் குடித்தல், உணவிற்குப் பிறகு குறைந்த அளவு தண்ணீரே குடித்தல், இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்.

அப்பெண்ணின் வயிறு வீங்குவதை தவிர்க்கவே, தண்ணீர் குறைவாக குடிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வரவிருக்கும் மாதவிடாய்களின் வலியை குறைக்கவும் இந்த உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாதவிடாய் நேரத்தில் பெண் கோவிலுக்கு செல்லக்கூடாது, பூசைக்கான பாத்திரங்களை தொடக்கூடாது, பொதுவாக வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது ஆகியவையும் சில கட்டுப்பாடுகளே.

என் மகள், `பெரிய பெண்` ஆகிவிட்டார்!

கார்ட்டூன்படத்தின் காப்புரிமைTAMILCULTURE.COM

ஒரு பூப்படைதல் நிகழ்ச்சி என்பது, நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடப்படுவது. நிகழ்ச்சிக்கு வருவோர் அழகான பரிசுகளோடு வருவார்கள். அவர்களுக்கு நல்ல உணவுகள் பரிமாறப்படும்.

முதல் மாதவிடாயின் முதல்நாள், அப்பெண், தனது நெருங்கிய உறவினர்களால், குளிப்பாட்டி, தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு, அவருக்கு மிகவும் சுகாதாரமான உணவுகள் அளிக்கப்படும்.

இந்த தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தபிறகு, மீண்டும் அவரை குளிப்பாட்டி, புடவை அணிவார். மீண்டும் வீட்டின் முக்கிய அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்.

புடவை அணிதல் என்பது, அப்பெண் பாலியல் ரீதியாக பக்குவப்பட்டுவிட்டார் என்பதை குறிக்கிறது.

இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாச்சாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாச்சார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது" விகே, 25 வயது பெண்

"குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்" என்கிறார் 27 வயதாகும் பெண் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் என்பது, அந்தந்த குடும்பத்தின் விருப்பத்தை பொருத்தது. மிகவும் நெருக்கமான உறவினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிகழ்ச்சியில் தொடங்கி, உள்ளூர் தபால்காரருக்குக்கூட தெரியும் அளவிற்கு இந்த கொண்டாட்டம் நடைபெறும்.

என் சகோதரியின் நிகழ்ச்சிக்காக, பெற்றோர் வீட்டின்கீழ் இருந்த ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து 100 பேர் வரை அழைத்து விழாவை நடத்தினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, என் உறவினரின் மகளின் நிகழ்ச்சி என்பது, ஆயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. வெவ்வேறு வகையான ஆடைகளையும் அவர் அணியவேண்டி இருந்தது.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

பெண்படத்தின் காப்புரிமைPRAKASH MATHEMA/AFP/GETTY IMAGES

"பெண்களுக்கான உரிமை என்பது, மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய் கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது" என்கிறார், 27 வயதாகும் டி.எஸ் என்னும் பெண்.

பண்டைய காலங்களில், பதின்பருவத்திலேயே பெண்கள் திருமணம் செய்ய அனுப்பப்படுவர். திருமணத்திற்கு, குறிப்பிட்ட அந்த பெண் தயார் என்பதை விளம்பரப்படுத்துவதற்கு, இந்தப் பூப்படைதல் நிகழ்ச்சிகள் பெரிய பங்கு வகித்தன.

பெண்களுக்காக உரிமை என்பது, மிகவும் மிகைபடுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய்கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது" டிஎஸ், 27 வயது பெண்

ஆனால், இந்த காலத்தில், பெண்கள் பூப்படைதல் காலத்திற்கும், திருமணத்திற்கு இடையே பெரிய இடைவேளை உள்ளது. இளம் வயதில் இந்த உடல்ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், அதிக வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், பல பெண்கள் பெற்றோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான கலாச்சார முக்கியத்துவத்தை பெண்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் கருத்தையும் பெற்றோர் கேட்க வேண்டும்.

 

 

இந்த கால சமூகத்திற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்புள்ளது நேயர்களே?

மகளிரே, இத்தகைய பழக்கவழக்கங்களில் உங்களின் அனுபவம் என்ன?

அதிலும் முக்கியமாக, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆகப்போகிறவர்களே, உங்கள் பெண் குழந்தைகளுக்கும் இந்த கலாசார முறையை நீங்கள் பின்தொடர்வீர்களா?

"இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாசாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாசார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது" என்கிறார், வி.கே என்னும் 25 வயது பெண்.

(தமிழ்கல்சர்.காம் (tamilculture.com) என்ற இணையதளத்தில் அனு என்பவர் எழுதிய கட்டுரை இது)

http://www.bbc.com/tamil/india-42745730

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் காண்பிக்காமல்  வீட்டுக்குள்ளேயே பெண்களை பூட்டி வைத்திருந்த ஆதிகால ’’தமிழன்’’ , அவ,கல்யாணத்திற்கு தராராகிவிட்டா என்பதை பிறருக்கு சொல்ல  பெண்கள் பூப்படைதலை  விழாவாக கொண்டாடினானாம்,

மணமேடைவரை மணப்பெண் குத்தாட்டம்போட்டபடியே வரும் நாகரிகத்துக்கு மாறிவிட்ட நவீன தமிழன், இன்றும் பூப்படைதலை விழாவாக்கி கொண்டாடுவதற்கு, பரிசுபொருட்கள் ,பணம் என்ற வருமானம் ஒன்றைதவிர வேற எந்த காரணமும் இல்லை!

புலத்தில் வெள்ளைக்காரர்களைகூட   பூபுனித நீராட்டுவிழாவுக்கு அழைத்து , அவனுக்கு இது என்ன பங்ஷன் என்று விளக்கமும் வேறு கொடுக்கிறார்களாம் நம்மவர்கள், அப்போது அவன் சிம்பிளா ஒரேயொரு கேள்விமட்டும் கேட்கிறானாம்.. ‘’அப்போ ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஹால் எடுத்து கொண்டாடுவீங்களா’’?

அங்கேதான் அசிங்கம் தலையில் ஏறி சென்று கூடுகட்டி வாழ்கிறது! <_< 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு ஒரு காலத்திற்கு அவசியமாக இருந்தது. பல உறவு முறைகளுக்கு ஏதுவாக இருந்தது. 
இன்றைய காலத்திற்கு அவசியமற்றதாகவே மாறிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாமத்திய வீட்டு விவாதங்கள் யாழில் கொடிகட்டிப் பறந்த காலமும் உள்ளது. ஆனால் “சாறிப் பார்ட்டி” நடத்தமாட்டோம் என்று சொல்லும் பெற்றோர் எவரையும் இதுவரை புலம்பெயர் நாடுகளில் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழினம்....இதையும் கடந்து பயணிக்க வேண்டும் என்பதே ...எனது விருப்பம்!

விலாசம் காட்டுவதை விடவும்....வேறு நல்ல நோக்கங்கள் எதுவும்....இந்தச் சடங்குகளுக்கு...இப்போது கிடையாது!

  • 5 weeks later...

பூப்படைந்த பிள்ளையை வைத்து இப்படிப் போடுற ஆட்டம் மோசமானது. தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இப்படி ஆடம்பரமாக நடைபெறுவதில்லை. இப்போதெல்லாம் அந்தப் பூப்படைந்த சின்னப் பிள்ளையை வைத்து சூட்டிங் எடுக்கிரமாதிரி ஒளிப்பதிவுகள் செய்யிறாங்கள். புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரே இதனை ஊக்குவிக்கின்றார்கள். இந்தத் தறி கெட்ட கலாச்சாரம் இன்னும் நின்ற பாடில்லை. இந்தப் பண விரையத்தையும் பண்பு விலகலையும் தவிர்த்து நல்ல எதிர்காலத் திட்டங்களுக்கு பணத்தைச் செலவு செய்யலாம். நம்மவர்களின் சமூக வாஞ்சையற்ற மோசமான பிற்போக்குப் புத்தியை இன்று வரை எடுத்தியம்பி நிற்பவற்றில் இந்தக் களியாட்டச் சாமத்தியச் சடங்குகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதனைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் சார்ந்ததே. இதனை இக்காலத்தில் கொண்டாடுவது தேவையில்லை என்றோ நாகரிமில்லை என்றோ எடுக்க வேண்டியதில்லை. நேர்மறையாக இரண்டு செய்திகள் :

1. பெண்ணின் உடல் சார்ந்த மாற்றம் எதுவும் தீட்டு அன்று; புனிதமானதே;கொண்டாடப்ப்படவேண்டியதே என்று தற்கால மனிதனுக்கும் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குள் பெண் செல்லத் தடை சொல்வதுதான் அநாகரிகம். அந்த சமயத்தில் அவள் கருவறைக்குள் சென்று பூஜையே செய்யலாம் என்றதே பங்காரு அடிகளார் போன்றோரின் வெற்றி.

2. நமது  தாய் வழிச் சமூகத்தில் இது தாய் மாமனுக்குரிய விழாவாகக் கருதப்பட்டது. "எங்கள் குலம் உங்கள் வீட்டிலும் ஆல் போல் தழைக்கப் போகிறது"என்று பெண்ணின் தாய் வீட்டார் வந்து தாய் மாமன் மூலம் நிறுவும் விழா. 'உண்ணாமல் உறவு நில்லாது' என்பது போல 'கொண்டாடினால்தானே உறவு !'

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அடிமையாக இருந்த காலத்தில் தேவையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் வாழுமா வீழுமா? என்பது அந்த இனத்தில் வாழும் மனிதர்களின் 
அன்றாட வாழ்கை முறையிலேயே தங்கி இருக்கிறது.
ஒவ்வரு தனிமனித செயல்பாடும் ..... எதோ ஒரு வகையில் ஒட்டுமொத்த 
இனத்தையும் பாதிக்கிறது.

அனுமானுக்கு அவர் கோவில் கட்டுகிறார் நீங்கள் விரும்பினால் 
போய்  கும்பிடுங்கள் இல்லாவிட்டால் சும்மா இருங்கள்  என்பதை 
சமூகம் சார்ந்து சித்திப்பவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சாயிபாபா  தலையில் துப்பாக்கி வைத்தா அழைக்கிறார் ? 
என்பது அடிமட்ட்மான கேள்வி ........ ஒரு மூட கூட்ட்டம் சமூகத்தில் 
உருவாகி கொண்டு இருப்பதை சிந்திக்க தெரிந்தவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

ஆறறிவை அடகுவைத்த இனம் 
பிரபாகரனை கை  நீட்டும் போதுதான் 
நாங்கள் இங்கே பலருடன் முரண்பட வேண்டி வருகிறது.

இந்த தலைப்பு முன்னைய காலத்து தீட்டு துணி போல
இங்கே தேவையான அளவிட்கு போட்டு துவைத்து காயப்போட்டு கந்தல் 
ஆக்கிய ஒன்று இனி இது பற்றி விவாதிப்பது வீண்........

.......... வேண்டுமானால் ஈழத்தமிழனுக்கு    ஆறாம் அறிவு 
செய்லபடுகிறதா இல்லையா ? எனும் தலைப்பில் விவாதித்தால் 
இவைகள் வெறும் உதிரிகள்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.