Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’

Featured Replies

‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’
 
image_3b050440b5.jpg“நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும்.  அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.   

“வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, வள்ளவர். அந்த வெட்டுக்குத்துக்கு நான் ஏமாந்தது இல்லை. எனினும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய இருவரும் ஏமாந்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார்.   

ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி எழுதிய, “இன்னும் பெயர் வைக்கல” எனும் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-10, தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.  

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ.ராதாமேதா தலைமையில் நடைபெற்ற அந்த வெளியீட்டு விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“வெளிநாட்டில் வசித்தாலும் ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணி, தாயத்தை மறக்கவில்லை என்று கூறப்பட்டது. தயாகம் என்றால் என்ன? என்னைப் பொருத்தவரையில் கொழும்பின் தயாகம், கொச்சிக்கடையாகும். அங்குதான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இது இங்குள்ள சிங்களத் தலைவர்களுக்குத் தெரியாது” என்றார்.  

“வெள்ளவத்தையில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கின்றனர். வடக்கில் ஏதாவது சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படும் போது அதனை தட்டிக்கேட்டால், வௌ்ளவத்தையில் ஏன்? தமிழர்கள் வாழவில்லையா எனக் கேட்பார்கள். வௌ்ளவத்தையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், கொச்சிக்கடையில்தான், தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். 1983 ஆம் கலவரத்தின் போது தமிழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். எனினும், கொச்சிக்கடையில் அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டவில்லை” என்றார்.  

“கொச்சிக்கடை தமிழர்களிடம், தமிழ்பற்று, வீரம், கோபம், துணிவு மற்றும் தன்னம்பிக்கை உள்ளிட்ட அனைத்தும் இருக்கின்றன. இவற்றை, முதலாவதாக தேர்தலில் போட்டியிடும்போது நான் கண்டேன். கொச்சிக்கடையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் புகுந்த, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான நிலந்தபெரேரா, கடைகளை கட்டும்போது, சுமார் இரண்டுமணிநேரம், அவ்விடத்தில் இருந்து,முழுக்கடைகளையும்
உடைத்தெறிந்தேன். என்னுடன் இணைந்து அங்கிருந்தவர்களும் உடைத்தெறிந்தனர். அம்மக்களும்கு அந்தளவுக்கு வீரமிருக்கிறது”  என்றார்.

“அந்த வீரத்தை, தீர்க்கதரிசனத்தையும், பெப்ரவரி 10ஆம் திகதி வாக்களிப்பிலும் அந்த மக்கள் காண்பிப்பார்கள். அந்த நம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது. என்னதான் அரசாங்கத்தில் இருந்தாலும், அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சை எமது கூட்டணி வைத்திருந்தாலும், தமிழர்களுக்கென பிரச்சினைகள் வரும்போதெல்லாம் எனது குரல் ஓங்கியே இருக்கும். அந்த குரல், தமிழர்களுக்காக இன்னுமின்னும் ஓங்கி ஒலிக்கவேண்டுமாயின், எங்களுடைய பலத்தை அதிகரித்துக்கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொச்சிக்கடை-தமிழர்களை-போல-நான்-திமிரானவன்/175-210565

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் கொச்சிக்கடையை தனிநாடக பிரகடனம் செய்தாலும் செய்வார் போல கிடக்கு

  • தொடங்கியவர்

பிரச்சினை என்றால் ஆரியாவோ சூரியாவோ வரப்போவதில்லை.!

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில்  கொழும்பு மாவட்­டத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது பலத்தை  காண்­பிக்­க­வேண்டும்.  தமிழ் மக்­களின்  பலத்தை  காண்­பிக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே   இந்தத் தேர்­தலில்  நாம்  தனித்து போட்­டி­யி­டு­கின்றோம். நாம் பல­மாக இருந்­தால்தான்  பெரும்­பான்மை  கட்­சி­க­ளி­ட­மி­ருந்து  எத­னையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என்று  ஒரு­மித்த முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும்  தேசிய சக­வாழ்வு மற்றும் கலந்­து­ரை­யாடல் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  வலி­யு­றுத்­தினார். 

Image result for மனோ கணேசன் virakesari

கொழும்பு மாவட்­டத்தில்  தமி­ழர்­களின் தலை­ந­க­ராக  கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது.  கொச்­சிக்­க­டை­யா­னது  வீரம் செறிந்­த­வர்கள்  வாழும் பகு­தி­யாகும்.  கொச்­சிக்­க­டையை உள்­ள­டக்­கிய வட­கொ­ழும்­பி­லேயே தமிழ் மக்கள்  பெரு­ம­ளவில் வாழ்­கின்­றனர். எனவே கொழும்பு வடக்கில் வாழும் தமி­ழர்­களும்  ஏனைய பகு­தி­களில் வாழும் தமிழ் மக்­களும்   எமது தனித்­து­வ­மான பலத்தை காண்­பிக்கும் வகையில்  வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றும் அவர்  சுட்­டிக்­காட்­டினார். 

ஊட­க­வி­ய­லாளர்  மணி டன்ஸ்­டனின் ''இன்னும் பெயர் வைக்­கல்ல'' எனும் நூல் வெளி­யீடு நேற்று முன்­தினம் மாலை கொழும்பு டி. ஆர். விஜ­ய­வர்த்­தன மாவத்­தையில் அமைந்­துள்ள தபால் திணைக்­கள கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  அமைச்சர்  இவ்­வாறு  தெரி­வித்தார். 

இங்கு  அவர் மேலும்  உரை­யாற்­று­கையில்  கூறி­ய­தா­வது:-

கொழும்பில் தமி­ழர்­களின் தலை­ந­க­ர­மாக கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது.   கொச்­சிக்­க­டை­யா­னது  என்னை நம்பும் மக்கள் வாழும்  பகு­தி­யாகும்.  அது  எனது   கோட்­டை­யாகும். கொச்­சிக்­கடை  தமிழ் வீரம் செறிந்த  பகு­தி­யாக திகழ்­கின்­றது.   எனக்கும்   தமிழ் செருக்கு  காணப்­ப­டு­கின்­றது.  நான்  எட்­டி­யாந்­தோட்­டையில் பிறந்து  களனி கங்­கையின்  தண்­ணீ­ரையும் கண்­டியில் வளர்ந்து மகா­வலி கங்­கையின் தண்­ணீ­ரையும் குடித்து வளர்ந்­தவன். எனக்கும்  இத்­த­கைய   தமிழ் வீரம்  உள்­ளது.   உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில்  நாம்   தனித்து  போட்­டி­யி­டு­கின்றோம்.   ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும்   சில பகு­தி­களில் தனித்தும்  நாம்   மலை­ய­கத்­திலும் தென்­ப­கு­தி­யிலும்   போட்­டி­யி­டு­கின்றோம்.   

கொழும்பு மாவட்­டத்தில் நாம் எமது தனித்­து­வ­மான பலத்தை   காண்­பிக்­க­வேண்டும்.  பெரும்­பான்மை கட்­சிகள்   நாம்  கேட்­ப­தை­யெல்லாம் தட்டில் வைத்து  தரப்­போ­வ­தில்லை.  எமது பலத்தை  காண்­பித்­தால்தான்  அதற்­கான  சூழலை உரு­வாக்க முடியும். கொழும்பு மாந­க­ர­சபைத் தேர்­தலில்  ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் எனது நண்­ப­ரு­மான ரவூப் ஹக்கீம்,  அகில மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் நண்­ப­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால்  ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.  இறு­தி­நே­ரத்தில்   அவர்­க­ளது வேட்­பா­ளர்­க­ளது  பெயர்கள்  பட்­டி­யலில் இருந்து வெட்­டப்­பட்டு வேறு­பெ­யர்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.  முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க   பெயர்­களை வெட்­டு­வதில் கெட்­டிக்­காரர். அவர்தான் இந்த விட­யத்­தினை மேற்­கொண்­டுள்ளார். 

இதே­போன்றே  ரவி கரு­ணா­நா­யக்க  எங்­க­ளது விட­யத்­திலும் செயற்­பட எத்­த­னித்தார்.   அவர்  சூரர் என்றால் நான் அத­னை­விட சூர­னாவேன். இத­னால்தான் நாம் தனித்து போட்­டி­யிடும் நிலை உரு­வா­னது. இவ்­வாறு தனித்துப் போட்­டி­யிட்டு நாம் எமது பலத்தை  காண்­பிக்­க­வேண்டும். 

தற்­போது   கொச்­சிக்­கடை உட்­பட கொழும்பில்  சன் ரீ.வி. , விஜய் ரீ.வி,  உட்­பட இந்­திய தொலைக்­காட்­சி­களை   தமிழ் மக்கள் பெரிதும் பார்­வை­யிட்டு வரு­கின்­றனர். இவ்­வாறு  படங்­க­ளையும்  நாடகத் தொடர்­க­ளையும் பார்க்­காது   எதிர்­வரும் 10ஆம் திகதி அனை­வரும் வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும்.  படத்தில்  வரும்  இந்­திய நடி­கர்­க­ளான  விஜயோ, அல்­லது  சூரி­யாவோ, ஆரி­யாவோ  உங்­க­ளுக்கு இங்கு  பிரச்­சினை வரும்­போது வரப்­போ­வ­தில்லை. ஆனால் மனோ கணேசன் மட்­டுமே  உங்­க­ளது வீடு­க­ளுக்கு  உடனே வருவான். எனவே  இதனை உணர்ந்து கொச்­சிக்­கடை மக்கள் உட்­பட கொழும்பு வடக்கு  மக்கள் உட்­பட  கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்­க­ளது வாக்­கு­களை  எமக்கு  அளிக்­க­வேண்டும். நாம் தனித்­து­வ­மான பலத்­துடன் இருந்தால் தான் நல்­லது. சூரி­யாவோ, ஆரி­யாவோ உங்களுக்கு இங்கு பிரச்சினை வரும்போது வரப்போவதில்லை. ஆனால் மனோ கணேசன் மட்டுமே உங்களது வீடுகளுக்கு உடனே வருவான். எனவே  இதனை உணர்ந்து கொச்சிக்கடை மக்கள் உட்பட கொழும்பு வடக்கு மக்கள் உட்பட  கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்களது வாக்குகளை  எமக்கு  அளிக்கவேண்டும்.  நாம் தனித்துவமான பலத்துடன் இருந்தால் தான் எதனையும் சாதிக்க முடியும்.

http://www.virakesari.lk/article/29757

  • கருத்துக்கள உறவுகள்

ஸப்பாஆ ......................தாங்க முடியலை .................

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, colomban said:

கஞ்சா செல்லையா, தூள்ஜோசா, தூள்செல்லா இவையளை தெரியுமெண்டால் "தாண்டவன் பபா"வை கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 
அண்ணேய் கோபப்படாமல் சொல்லுங்க அப்ப இந்த கொச்சிக்கடை காரர் 83 கலவரப் பொழுது என்ன செய்தவையல் நாங்க அப்ப சிறுசுகள் அறிந்துகொள்ள ஆவல் .,

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அண்ணேய் கோபப்படாமல் சொல்லுங்க அப்ப இந்த கொச்சிக்கடை காரர் 83 கலவரப் பொழுது என்ன செய்தவையல் நாங்க அப்ப சிறுசுகள் அறிந்துகொள்ள ஆவல் .,

அப்ப எனக்கு 10 வயது பெருமாள் ஐயா. இரும்பு கம்பி எடுத்து கொண்டு இரவிரவாக குடும்பத்தலைவர்கள் சிங்களவனை அடிக்க சுற்றித்திரிந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வீரமும் தீரமும் திமிரும் கொண்ட தமிழர்களிடம் வாக்குப்பெற்று தேர்தலில் வென்றாலும் பதவி வகிக்கபோவது சிங்கள மன்னர்களின் முடியின்கீழ்தானே?!

வாக்கு அறுவடைக் காலம் வரும்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான உணர்ச்சிகளை தூண்டும் வீரவசன விளையாட்டுக்கள் அரங்கேறுவது வழமை, அதுபோலதான் இதுவும் ஒன்றா ?

சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்வதால் மனோ கணேசனின் கருத்துக்கள் சிங்களத்தால் மெளனமாக பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன், தேர்தலில் வென்றாலும் சிங்களவருடனான இணக்கப்பட்டுடனேயே அவர் அரசியல் நகரும் என்பதால்!

இதுவே வடக்கில் இதே வசனங்களை யாராவது பேசி இருந்தால் இனவாதம்,கட்சியை உடனடியாக தடை செய்யவேண்டும்,நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் இவர்கள் புலிகளின் பினாமிகள் என்ற கோசம் சிஹல உறுமயவிலிருந்து ,தேரர்கள்,பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,பெரும்பான்மை கட்சிகள்வரை அனைவரிடமிருந்தும் வானுயர எழுந்திருக்கும்.

தனக்கு கீழே இருந்து கொண்டு தமிழர்கள் ஆவேசமாக உரிமைக்குரல் எழுப்பலாம் தப்பில்லை என்று சிங்களம் நினைக்கிறது அதற்கு உதாரணம், கருணா இப்போதெல்லாம் முஸ்லீம்களை நொருக்குவேன் எனும்போதும், அங்கே தாக்குதல் செய்தேன் இங்கே தாக்குதல் செய்தேன் நாங்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்ககூடாது என்பதனால் தனிகட்சி ஆரம்பித்தேன் என்று ரீல் விடும்போது கம்மென்று இருக்கிறது,

அதே வசனங்கள்போலன்றி நடைமுறையில் உள்ள இன சிக்கல்களை தீர்வுகளைபற்றி விக்னேஸ்வரன் பேசினால் இவர்,இனவெறியன், இன்னொரு பிரபாகரன்,அவரை கைது செய்யவேண்டும் என்கிறது.

வடகிழக்கில் பெரும்பான்மை தமிழர்களாய் வாழ்ந்துகொண்டு சிங்களவர்களுக்கெதிராய் திமிராய் நிற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை, தெற்கில் சிங்களவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டு திமிராய் நிற்கும் கொச்சிக்கடை தமிழர்கள் நிச்சயமாக துணிச்சலானவர்கள் என்பது மறுப்பிற்கிடமில்லாத உண்மைதான்,

அதேநேரம் கடந்தகாலத்தில் வாழைத்தோட்டம்,கொச்சிக்கடைபகுதி தமிழர்கள் பெரும்பாலும் பிரேமதாஸவின் ஆதரவையும் கொண்டிருந்தார்கள்,அதுவும் அவர்களின் ஒரு பலம் என்று அறிந்திருந்தேன், அது உண்மையா பொய்யா என்று அப்பகுதியில் பிறந்து வளர்ந்த colomban-தான் விளக்கவேண்டும்.

13 hours ago, colomban said:

கொச்சிக்கடையில் பிறந்து படித்து வளந்த எனக்கு உங்கள் தந்தை தெரியும் வரும்போது சிறுவயதில் என்னை தூக்கி வைத்து தேர்தல் சந்தர்ப்பங்களில் படம் எடுத்துள்ளார்.   

கொச்சிக்கடை பல யுத்தங்களையும் கண்டபூமி. பல வீரத்திருமகன்களையும் தந்த நிலம் , மோர சுனில், கசிப்பு வின்சன் பீரீஸ், கஞ்சா செல்லையா, உத்தமன், நெல்சன், தூள்ஜோசா, மோசா, தூள்செல்லா, குணா என பலர். அக்காலத்தில் ரட்ணம் ரோட்டில் புட்போல் விளையாண்டு, சன சமூக நிலையத்தில் ரெஸ்லிங் பழகிய ஜோன் சினாக்களில் நானும் ஒருவன்.  

நண்பன் டன்ஸ்டட் மணி கனடா அல்பேர்டா மானிலத்தில் இருந்து வந்து இந்த புத்தக விழவை நட‌த்தியதற்கு பாரட்டுக்கள். 

கொச்சிகடே கொல்லோ வசாய் யக்கட பொல்ல தெகட கடாய்!
 
என் வாழ்வில் இளம் வயதில் இருக்கும் இனிமையான பக்கங்கள் சில கொச்சிக்கடை பகுதியில் எழுதப்பட்டவை.

நான் A/L படித்தது விவேகானந்தா கல்லூரியில் தான். யாழ்ப்பாணத்தில் பரியோவான் கல்லூரியில் படித்து (St John's college) விட்டு கொழும்புக்கு வந்து அங்கு படித்த காலம் முழுதும் கொச்சிக் கடை, ஜிந்துப்பிட்டி, வாசல வீதி என்று அலைந்து திரிந்து இருக்கின்றேன். குணசிங்கபுர பகுதியில் பிரேமதாசா வீட்டிற்கு அருகில் தான் ஒரு flats இல் தங்கி இருந்தனான். அங்கிருந்து  Seas street, கதிரேசன் வீதி வழியாக கொச்சிக்கடைக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தோணியார் கோவிலுக்கு முன்பாக இருக்கும் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தான் 102 எடுத்து வெள்ளவத்தை பகுதிக்கு போவது. ராஜேஸ்வரி கல்வி நிலையம், பிரில்லியன்ட் சென்ரர் போன்றவற்றில் தான் உயர்தர பிரிவுக்கு ரியூசன் போனது.

பொன்னம்பலவாணேச்சர் கோவிலுக்கு போய் விட்டு அதற்கு கிட்ட இருக்கும் வெக்காளி அம்மன் கோவிலுக்கும் (ஒரு தோட்டத்தில் இருக்கும்) போய் விட்டு கொச்சிக் கடை சந்தியில் இருக்கும் ஹோட்டலில் வடையும் தேனீரும் குடித்து தான் சனிக்கிழமை ஆரம்பிக்கும் எனக்கு.

கொச்சிக்கடை தமிழர்கள் உண்மையில் வீரமானவர்கள்; சண்டியர்களும் கூட. அதே நேரத்தில் அன்பிற்காகவும் நட்பிற்காகவும் உயிரையே கொடுப்பவர்கள். 83 கலவரத்தில் சிங்கள காடையர்கள் கை வைக்க பயந்த இடம். அத்துடன் கொச்சிக் கடை தமிழர்கள்  மிச்ச பகுதியில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு கோவில்களில் வந்து தங்கிய தமிழர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலாக உணவு தொடக்கம் பல கொடுத்து உதவியவர்கள். இவர்களுடன் கிராண்ட்பாஸ் தமிழர்களும் இணைந்து இருந்தனர்.

நெற்றியில் பெரிய பொட்டுடன் மஞ்சள் அப்பிய முகத்துடன் அரை சாறி கட்டிக் கொண்டு வரும் கொச்சிக்கடை இளம் சிட்டுகளை கோவில்களில் பார்க்க அழகாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

மட்டுறுத்தினர் ஒருவர் எஙகள் பாடசாலையின் முன்னால் மாணவன் என்பதை குறித்து மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என்னை விட 3 வருடங்கள் ஜூனியர் ஆக இருக்கலாம் (தங்கையின் வகுப்பென நினக்கின்றேன்). 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, valavan said:

என்னதான் வீரமும் தீரமும் திமிரும் கொண்ட தமிழர்களிடம் வாக்குப்பெற்று தேர்தலில் வென்றாலும் பதவி வகிக்கபோவது சிங்கள மன்னர்களின் முடியின்கீழ்தானே?!

வாக்கு அறுவடைக் காலம் வரும்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான உணர்ச்சிகளை தூண்டும் வீரவசன விளையாட்டுக்கள் அரங்கேறுவது வழமை, அதுபோலதான் இதுவும் ஒன்றா ?

சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்வதால் மனோ கணேசனின் கருத்துக்கள் சிங்களத்தால் மெளனமாக பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன், தேர்தலில் வென்றாலும் சிங்களவருடனான இணக்கப்பட்டுடனேயே அவர் அரசியல் நகரும் என்பதால்!

இதுவே வடக்கில் இதே வசனங்களை யாராவது பேசி இருந்தால் இனவாதம்,கட்சியை உடனடியாக தடை செய்யவேண்டும்,நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் இவர்கள் புலிகளின் பினாமிகள் என்ற கோசம் சிஹல உறுமயவிலிருந்து ,தேரர்கள்,பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,பெரும்பான்மை கட்சிகள்வரை அனைவரிடமிருந்தும் வானுயர எழுந்திருக்கும்.

தனக்கு கீழே இருந்து கொண்டு தமிழர்கள் ஆவேசமாக உரிமைக்குரல் எழுப்பலாம் தப்பில்லை என்று சிங்களம் நினைக்கிறது அதற்கு உதாரணம், கருணா இப்போதெல்லாம் முஸ்லீம்களை நொருக்குவேன் எனும்போதும், அங்கே தாக்குதல் செய்தேன் இங்கே தாக்குதல் செய்தேன் நாங்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்ககூடாது என்பதனால் தனிகட்சி ஆரம்பித்தேன் என்று ரீல் விடும்போது கம்மென்று இருக்கிறது,

அதே வசனங்கள்போலன்றி நடைமுறையில் உள்ள இன சிக்கல்களை தீர்வுகளைபற்றி விக்னேஸ்வரன் பேசினால் இவர்,இனவெறியன், இன்னொரு பிரபாகரன்,அவரை கைது செய்யவேண்டும் என்கிறது.

வடகிழக்கில் பெரும்பான்மை தமிழர்களாய் வாழ்ந்துகொண்டு சிங்களவர்களுக்கெதிராய் திமிராய் நிற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை, தெற்கில் சிங்களவர்கள் நடுவே வாழ்ந்துகொண்டு திமிராய் நிற்கும் கொச்சிக்கடை தமிழர்கள் நிச்சயமாக துணிச்சலானவர்கள் என்பது மறுப்பிற்கிடமில்லாத உண்மைதான்,

அதேநேரம் கடந்தகாலத்தில் வாழைத்தோட்டம்,கொச்சிக்கடைபகுதி தமிழர்கள் பெரும்பாலும் பிரேமதாஸவின் ஆதரவையும் கொண்டிருந்தார்கள்,அதுவும் அவர்களின் ஒரு பலம் என்று அறிந்திருந்தேன், அது உண்மையா பொய்யா என்று அப்பகுதியில் பிறந்து வளர்ந்த colomban-தான் விளக்கவேண்டும்.

பிரேமதாச மேட்டுக்குடி மகனல்ல. அவர் ஒர் சாதாரண குடும்பத்தில் இருந்து. இலங்கை ஜனதிபதியானவர். ஏழைகளின் மனமறிந்து அரசியல் செய்தவர். தமிழ் மக்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இதனால் இவர் இப்பகுதி மக்களின் பிதாமகன். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

குணசிங்கபுர பகுதியில் பிரேமதாசா வீட்டிற்கு அருகில் தான் ஒரு flats இல் தங்கி இருந்தனான். அங்கிருந்து  Seas street, கதிரேசன் வீதி வழியாக கொச்சிக்கடைக்கு அடிக்கடி வருவதுண்டு.

மலரும் நினைவுகள் சுகமானது ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.