Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது

Featured Replies

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது

 

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul

 
201801311957322008_Amala-Paul-Compliant-
 
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார்.
 
அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகேசன் ஆபாசமாக பேசிய ஆடியோவை போலீஸ் நிலையத்தில் அமலாபால் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
201801311957322008_1_amala-2._L_styvpf.j
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், ‘மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடன பயிற்சி செய்து வந்தேன். அப்போது, அழகேசன் என்பவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவர்களுக்கு நன்றி’ என்றார். இதுப்போன்ற ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/01/31195733/1143314/Amala-Paul-Compliant-Chennai-businessman-arrested.vpf

 

வீடியோ உபயம். இசைக்கலைஞன்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் தொழிலதிபர் கைது

 

 
download%207jpg

தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். டைரக்டர் விஜயை திருமணம் செய்த இவர் பின்னர் விவாகரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில் சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் இவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். வரும் பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள டான்சிங் தமிழச்சி என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் என்பவர் டான்ஸ் பள்ளியில் தீவிரமாக நடன பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது 354A (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்), 509( பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல்) , பிரிவு 4 of (பெண் வன்கொடுமை சட்டம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தப்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“டான்ஸ் ரிகர்சல் பண்ணும்போது ஒருவர் வந்து மோசமாக பேசினார். நான் மலேசியாவிற்கு டான்சிங் தமிழச்சி என்ற நிகழ்ச்சிக்காக போகிறேன். அதற்காக ஸ்ரீதர் மாஸ்டர் டான்ஸ் பள்ளியில் பிராக்டிஸ் பண்ணுகிறேன். அங்கு வந்த ஒரு நபர் என்னை அணுகினார். அவர் அந்த டான்ஸ் குரூப்பில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்று நினைக்கிறேன். அவர் நான்கைந்து நாட்களாக வருகிறார்.

இன்று நான் இருக்கும் நேரத்தை சரியாக தெரிந்து வருகிறார். என்னை அணுகி பணத்துக்காக என்னை வளைப்பது போல் ஆசை வார்த்தை பேசினார். நான் தனியாக சம்பாதிக்கும் பெண் இது போன்ற பாலியல் ரீதியான அணுகுமுறை பார்த்து எனக்கு அதிர்ச்சியானது. அதனால் இது குறித்து தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்தேன்.

என்னைப்போன்று தனியாக இருக்கும் உழைக்கும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மற்ற பெண்களுக்கும் இது போன்று நடக்கக்கூடாது இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் புகார் அளித்தேன். போலீஸார் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22612250.ece?homepage=true

எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் பய புள்ளைக்கு. ஒருக்கா கொட்டிவாக்கம் பக்கம் போக தான் வேண்டும்

  • தொடங்கியவர்

திண்ணையிலும் இங்குமாக செய்தி போட்டு ஆளை காணவில்லை என நான் நினைத்தேன் நீங்கள் இந்தியா போய் விட்டர்கள் என்று.

3 minutes ago, நிழலி said:

எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் பய புள்ளைக்கு. ஒருக்கா கொட்டிவாக்கம் பக்கம் போக தான் வேண்டும்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் பய புள்ளைக்கு. ஒருக்கா கொட்டிவாக்கம் பக்கம் போக தான் வேண்டும்

Dhanush-his-movie-Anegan-Audio-Launch-hd-photos-4.jpg

வரேக்கேக்கை சொல்லீட்டு வாங்க சார் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் அரைகுறை ஆடைகளுடன் நடித்து, பலரை அங்கீகரிக்கபடாத தொழில் அதிபர்களாக மாற்றி, ஆண்களுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த அமலாபாலும் கைது செய்யப்படணும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு: கொட்டிவாக்கம் 'தொழிலதிபர்' கைது

http://tamil.thehindu.com/tamilnadu/article22612250.ece?homepage=true

 

nlx08l.jpg

12 hours ago, நவீனன் said:

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது

 

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul

 
201801311957322008_Amala-Paul-Compliant-
 
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார்.
 
அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பெயரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகேசன் ஆபாசமாக பேசிய ஆடியோவை போலீஸ் நிலையத்தில் அமலாபால் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
201801311957322008_1_amala-2._L_styvpf.j
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், ‘மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடன பயிற்சி செய்து வந்தேன். அப்போது, அழகேசன் என்பவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவர்களுக்கு நன்றி’ என்றார். இதுப்போன்ற ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/01/31195733/1143314/Amala-Paul-Compliant-Chennai-businessman-arrested.vpf

 

வீடியோ உபயம். இசைக்கலைஞன்

 

இதை பாரக்கும் போது 21 பின்னூட்டம் அதில் ஒன்று கூட இவருக்கு ஆதரவாக இல்லை... 

  • தொடங்கியவர்

‘அமலாபாலைச் சீண்டிய அழகேஸ்வரன் யார்?’ - மலேசியாவிலிருந்து பேசிய வி.வி.ஐ.பி

 
 

நடிகை அமலாபால்

 

நடிகை அமலாபாலைச் சீண்டிய சென்னையைச் சேர்ந்த அழகேஸ்வரன் குறித்து முக்கியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 

சென்னை, தி.நகர் பஸ் நிலையம் எதிரில், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் நடனப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, நடனப் பயிற்சிக்காக நடிகை அமலாபால், நேற்று மாலை வந்தார். அப்போது, அங்கு வந்த சென்னை, கானாத்தூர், ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன், நடிகை அமலாபாலைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே வாய்தகராறு ஏற்பட்டது. உடனடியாக, அமலாபாலுவின் உதவியாளர்கள் அங்கு ஓடிவந்து, அழகேஸ்வரனை அங்கிருந்து அகற்ற முயன்றனர். இதனால், அங்கு கைகலப்பு நடந்தாகச் சொல்லப்படுகிறது.

நடனப்பள்ளியில் பிரச்னை ஏற்பட்டதைப் பார்த்த பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாம்பலம் போலீஸார் அங்கு விரைந்தனர். நடிகை அமலாபால், அவரது உதவியாளர்கள் மற்றும் அழகேஸ்வரன் ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையிலான போலீஸார், அமலாபால், அழகேஸ்வரன் ஆகியோரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

அப்போது அமலாபால், 'பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். இதற்காக தி.நகரில் டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன். இன்று மாலை (31.1.2018) டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது, அறிமுகம் இல்லாத நபர், ஒருவர் என்னைச் சந்தித்தார். என்னிடம் மலேசியாவுக்கு வரும் நீங்கள், இன்னொரு பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவரது பாலியல் ரீதியான அணுகுமுறை எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், அந்த நபரை எச்சரித்தேன். அதற்குள் என்னுடைய உதவியாளர்கள் அங்கு வந்துவிட்டனர்' என்று போலீஸில் கூறியுள்ளார்.

 அழகேஸ்வரன்

இதையடுத்து, அழகேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கோடீஸ்வரர் ஒருவர் கூறியதன்பேரில்தான் அமலாபாலைச் சந்தித்துப் பேசினேன். அமலாபாலுவிடம் தவறாக நான் பேசவில்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அமலாபாலுவின் உதவியாளர்கள் என்னைத் தாக்கினர். இதில் என்னுடைய செல்போன் உடைந்துவிட்டது. இதனால், என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமலாபால் கொடுத்த புகாரின்பேரில் அழகேஸ்வரனை போலீஸார் கைதுசெய்தனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சென்னை கானத்தூர், ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன். இவர், கார்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடிகை அமலாபாலுவின் உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாக அழகேஸ்வரன் எங்களிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் நடனப்பள்ளியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது, அழகேஸ்வரனின் செல்போன் உடைந்ததற்கான எந்தக் காட்சியும் அங்கு இல்லை. பொது இடத்தில் நடிகை அமலாபாலுவிடம் எதற்காக அழகேஸ்வரன் அப்படிப் பேசினார் என்று விசாரித்துவருகிறோம். முதற்கட்ட விசாரணையில் மலேசியாவைச் சேர்ந்த கோடீஸ்வரான தொழிலதிபர் ஒருவருக்காகத்தான் அழகேஸ்வரன் அவ்வாறு பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் பின்னணி குறித்து விசாரித்துவருகிறோம். அதோடு அழகேஸ்வரனின் நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. தேவைப்பட்டால் அழகேஸ்வரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம்.

அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 354 ஏ (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்) 509 (பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தல்) பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அழகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்துள்ளோம். அவரின் செல்போனுக்கு மலேசியாவிலிருந்து அழைத்த போன் கால்களை ஆய்வு செய்துவருகிறோம். அதில், கோடீஸ்வரர் ஒருவரும் பேசியுள்ளார். அவரை விசாரித்தால்தான் முழுவிவரம் தெரியவரும்" என்றனர். 
போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டு வெளியில் வந்த அமலாபால், “என்னைப்போன்று தனியாக வாழும் பெண்களில் பலர் இதுபோன்ற துயரங்களைச் சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. என்னிடம் தவறாக பேசிய அழகேஸ்வரன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். இது, தனியாக வாழும் பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். என்னுடைய புகாருக்கு போலீஸார் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்” என்றார்.  

இந்தச் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/115129-background-of-businessman-who-sexually-assaulted-amala-paul.html

9 hours ago, சண்டமாருதன் said:

 

இதை பாரக்கும் போது 21 பின்னூட்டம் அதில் ஒன்று கூட இவருக்கு ஆதரவாக இல்லை... 

அமலா போலின் விருப்புக்கு எதிராக ஆபாசமாக பேசிய அந்த தொழிலதிபரை விமர்சிக்காது நடிகை என்பதால் அவரை குறித்து ஆபாசமாக கருத்து இடுகின்றனர்.

ஒரு நடிகை என்றால் எல்லாருடனும் படுத்து எழும்புவார் எனும்  பொதுப் புத்தியில் எழுதப்பட்ட கருத்துகள். முக்கியமாக தனுஷை இழுத்தும் எழுதப்பட்டு இருக்கு. அப்படியே ஒரு நடிகை பலருடன் படுத்து எழும்பினாலும் / தனுஷுடன் படுத்து எழும்பினாலும் அவரது சம்மதத்துடன் இடம்பெறும் போது எவராலும் கேள்வி கேட்க முடியாது. சேர்ந்து படுக்கும் ஆண்களை பற்றி கேள்வி கேக்க மறுக்கும் சமூகம் பெண் என்பதால் நடிகைகளை மட்டும் குறி வைத்து இப்படி பின்னூட்டம் இடுகின்றது. அமலா போல் விவாகரத்தான பின்னும் தன் துறையில் மேலும் மேலும் முன்னேறுகின்றார் எனும் விடயமும் இந்திய ஆண்களின் பொது விருப்புக்கு முற்றிலும் எதிரானது.

ஹொலிவீட்டில் இடம்பெற்ற / இடம்பெறும் பாலியல் வதைகளுக்கு எதிராக ஆரம்பித்த #metoo இன்று ஒரு இயக்கமாக உருவெடுத்து நிற்கின்றது. சினிமா துறை மட்டுமன்றி இருக்கும் அனைத்து துறைகளிலும் பெண்களின் சம்மத்துக்கு எதிராக இடம்பெறும் அனைத்து பாலியல் தொல்லைகள்/ வன்முறைகள் என்பன அதிர வைக்கும் அளவுக்கு இருப்பதை உணர முடிகின்றது. பெட்டிப் பாம்புகளாக இனியும் இவற்றுக்கு அடங்கி போக பெண்கள் சம்மதிக்கப் போவதில்லை என்பதை தான் பிரியங்கா சோப்ரா / அமலா பால் / அமெரிக்க ஜிம்னாசிய வீராங்கனைகள் / ஹொலிவூட் நடிகைகள் போன்றவர்கள் காட்டி நிற்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, நிழலி said:

....அனைத்து துறைகளிலும் பெண்களின் சம்மத்துக்கு எதிராக இடம்பெறும் அனைத்து பாலியல் தொல்லைகள்/ வன்முறைகள் என்பன அதிர வைக்கும் அளவுக்கு இருப்பதை உணர முடிகின்றது. பெட்டிப் பாம்புகளாக இனியும் இவற்றுக்கு அடங்கி போக பெண்கள் சம்மதிக்கப் போவதில்லை என்பதை தான் பிரியங்கா சோப்ரா / அமலா பால் / அமெரிக்க ஜிம்னாசிய வீராங்கனைகள் / ஹொலிவூட் நடிகைகள் போன்றவர்கள் காட்டி நிற்கின்றனர்.

 

ஆதரவு(?) கொடுக்கும் குரல்தான் இப்படியும் பெண்களை மறைமுகமாக சீண்டுகிறது...:)

On 1/26/2018 at 7:47 PM, நிழலி said:

மனுஷன் கலியாணம் கட்டி இருக்காது ; அது தான் அவ்வளவு சந்தோசம்

58 minutes ago, ராசவன்னியன் said:

 

 

ஆதரவு(?) கொடுக்கும் குரல்தான் இப்படியும் பெண்களை மறைமுகமாக சீண்டுகிறது...:)

 

இதில் எங்கிருக்கு பெண்கள் மீதான மறைமுக சீண்டல்? பெண் துறவி இப்படி சிரிப்புடன் எழும்பி இருந்தாலும் என் பதில் இதுதான் ஏனெனில் பல்குழல் ஏவுகணைகளை சமாளிக்கும்  சம்சாரிகளின் அன்றாட பிரச்சனையை ஒட்டியது என் பதில் :)

  • தொடங்கியவர்

 

“பெண்கள் தங்களை நிரூபிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்கிறார்கள்” - கௌரி ஷிண்டே

  • தொடங்கியவர்

 

திரைத்துறை பெண்களிடம் ஊடகங்களின் அணுகுமுறை கூட தவறு - குஷ்பு #sexismincinemaindustry

திரைத்துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நடிகை குஷ்பு பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.