Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன்

Featured Replies

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன்

 

தீர்வு வழங்கப்படாவிட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை கோருவோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், தமிழ் அங்கீகரிக்காத தீர்வினை தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது எனவும் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பி ரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் ஒற்றையாட்சி தொடருமா? தமிழீழம் மலருமா? என பார்ப்போம் என கூறுகிறார்.

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. 1987ம் ஆண்டு 13ம் திருத்தச்சட்டம் வந்த பின்னர் அதனை நாங்கள் ஏற்காதபோதும், 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் நாம் போட்டியிடாதபோதும் அதனை தீர்வுக்கான முதல் படியாக நினைத்தோம். அதன் பின்னர் நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை.

எமது இறையாண்மையின் அடிப்படையில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, பிரிக்கப்படாத நாட்டுக்குள் கௌரவமான பிரஜைகளாக நாம் வாழக்கூடிய தீர்வை யே நாங்கள் கேட்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில் போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியப்பட வேண்டும்.

அதனடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும், நீதியின் அடிப்படையில் பொறுப்புகூறல் இடம்பெறவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும், மீள நிகழாமை உறுதி செய்யப்படவேண்டும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதனை தாம் செய்வதாக இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. அதனை விடவும் இன்றைக்குள்ள சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விசேடமாக ஐ.நா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் மக்கள் மீது ஆட்சி செய்பவர்கள் ஜனநாயக தேர்தல் ஊடாக மக்களின் சம்மதத்தை பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

1956ம் ஆண்டு தொடக்கம் மக்கள் அந்த ஆணையை எப்படி வழங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 1956ம் ஆண்டு தொடக்கம் இன்றளவும் நடக்கின்ற ஆட்சி எங்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி. இந்த நிலை தொடர முடியாது.

இது மாற்றப்படவேண்டும். எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை கோரும் உரி மை உண்டு. அந்த உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டால் நாங்கள் வெளிப்பட்ட சுயநிர் ணய உரிமையை கோருவோம்.

அதற்கு சர்வதேச சட்டங்களில் இடமுண்டு. எமக்கு உரிமையும் உண்டு. தமிழ் மக்கள் இந்த தேர்தலில் என்ன தீர்ப்பை வழங்கப்போகிறார்கள்? என சர்வதேசம் பார்த்துக் கொ ண்டிருக்கிறது.

இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி என்ற சொல் தமிழில் இல்லை. யுனிட்டரி ஸ்டேன் என்பது ஆங்கிலத்தில் இல்லை. ஏக்கிய இராச்சிய என்ற சொல் சிங்களத்தில் உள்ளது. அதனை சிங்கள மக்கள் விரும்புகிறார்கள்.

அந்த சொல் இருந்தாலே நாடு பிரிக்கப்படாது என சிங்கள மக்கள் நினைக்கிறார்கள். அது தொடர்பாக சிங்கள மக்கள் எங்களிடம் கேட்டபோது, நாடு பிரிக்க நாங்கள் கேட்கவில்லையென நாம் கூறினோம்.

ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை.

அது பிரதேசத்தை குறிக்கிறது. நீதிமன்றில் விவாதத்திற்கு வந்தால்கூட அரசியலமைப் பில் கூறப்பட்ட சொல்லை மீறி எதனையும் யாரும் கூற இயலாது.

பகிரப்பட்ட அதிகாரங்கள் மீள பெறமு டியாது. பகிரப்பட்ட அதிகாரங்களில் அரசு தலையிட முடியாது. அதிகாரங்கள் பகிரப்பட்ட ஒழுங்கில் மாற் றம் செய்ய முடியாது. அதிகாரம் மத்தியிலும், மாநில த்திலும் இருக்கும் இவ்வாறு சமஷ்டிக்குரிய உள்ளடக்கங்கள் உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் நாங்கள் பல சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். அதேபோல் இப்போதும் இழக்க முடியாது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்தேசிய மக்கள் முன்னணி என வருகிறார்கள். இவர்கள் யார்? பண்டா- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்தார்கள், டட்லி- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனையும் எதிர்த்தார்கள். தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தபோது அதனையும் எதிர்த்தார்கள். இப்போது எமக்கு சமஷ்டி தெரியாது. தங்களுக்கே சமஷ்டி தெரியும் எனக் கூறுகிறார்கள்.

அந்த சைக்கிளிலில் தான் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்களா? ஏன் சமஷ்டியை எதிர்த்தீர்கள்? இன்று சமஷ்டி எங்களுக்கே தெரியும் என்கிறீர்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராக மஹிந்த செயற்பட்டபோது ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உதவியர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள். இவர்களிடம் தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் உத விகளை பெற்றிருக்கலாம்.

அதற்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த கட் சியை ஆதரிக்க கூடாது. தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி 56ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளது.

30 வருடம் ஆயுதப்போராட்டம் பல துன்பங்களை சந்தித்தோம். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தார்கள். அந்த நிலை மாற்றப்படவேண்டும்.

இப்போது இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அமைச்சர், பதவி சலுகைகளுக்காக உங்களை கைவிடமாட்டோம். இவற்றை புரிந்து எங்கள் நிலைப்பாடு எங்கள் பங்களிப்பு அவர்களுடைய நிலைப்பாடு சரித்திரம் இவற்றை அறிந்து ஒற்றுமையாக ஒருமித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு க்கு முழுமையான ஆதரவினை தந்து திடமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

 

http://www.tamilwin.com/election/01/173419?ref=home-feed

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன்

மற்றவர்களைப் பற்றி நாம் எதற்கு குறை கூற வேண்டும்...
நமது காயமே நமக்கு அதிக வேதனை தரும்.

9 hours ago, நவீனன் said:

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன்

தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதை கதைப்பது, எதை தவிர்ப்பது என்ற அடிப்படை அரசியல் அறிவற்றவர்கள்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக பிச்சைக்கார அரசியல் செய்யும் சம்மந்தனுக்கு தமிழர் உரிமைகள், தமிழர் பிரச்சினைகள் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • புதிய அரமைப்பு உருவாக்கம் இடை நடுவில்!!
sam-750x430.png

புதிய அரமைப்பு உருவாக்கம் இடை நடுவில்!!

கிட்­டுப் பூங்­கா­வில் சம்­பந்­தன் தெரிவிப்பு

 

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம். தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தித்­துவக் கட்­சி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் இருக்­கின்­றது என்­பதை தமிழ் மக்­கள் இந்­தத் தேர்­த­லின் ஊடா­க­வும் எடுத்­துக்­காட்ட வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் கிட்­டுப் பூங்­கா­வில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். சங்­கானை, மாலு சந்தி, சாவ­கச்­சேரி பிர­தே­சங்­க­ளில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்­றும் இரா.சம்­பந்­தன் உரை­யாற்­றி­யி­ருந்­தார்.
இந்­தக் கூட்­டங்­க­ளில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமிழ் மக்­க­ளின் நீண்ட காலப் பிரச்­சி­னை­யான இனப் பிரச்­சி­னைக்கு அர­சி­யல் தீர்வு காணும் முயற்­சி­கள் ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த முயற்­சி­யில் நாம் பாதி வழி­யில் நிற்­கின்­றோம். இந்­தச் சூழ­லில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை எதிர்­கொள்­கின்­றோம்.

இந்­தத் தேர்­தலை இந்த நாடு மாத்­தி­ரம் அல்ல பன்­னாட்­டுச் சமூ­க­மும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நித்­து­வக் கட்சி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் என்­பதை தமிழ் மக்­கள் இந்­தத் தேர்­தல் ஊடா­க­வும் வெளிக்­காட்ட வேண்­டும். இதனை செய்­வ­தற்கு தமிழ் மக்­கள் தவ­றக் கூடாது. அப்­போ­து­தான் எம்­மால், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் முழு­மை­யாக – பலத்­து­டன் பய­ணிக்க முடி­யும். எமது நீண்­ட­கா­லப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வை­யும் காண முடி­யும் – என்­றார்.

http://newuthayan.com/story/67341.html

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போதும் மனப்பூர்வமாக  கேட்கப்போவதில்லை, என்பது  மக்களுக்கு தெரியும்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

நீங்கள் எப்போதும் மனப்பூர்வமாக  கேட்கப்போவதில்லை, என்பது  மக்களுக்கு தெரியும்

 

அந்த ரெண்டு கோடி பொய்யா அண்ணtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த ரெண்டு கோடி பொய்யா அண்ணtw_blush:

மட்டக்கிளப்பில் கூட்டமைப்பு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கேள்விப்பட்டேன்.இதை உறுதி செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அறுவது வருசமா ஏமாத்தி வாக்கு வாங்கி செய்ய முடியாததை இனிமேல் செய்யப்போறார். தவறாமல் எல்லாரும் வோட்டு  போட்டு விடுங்கோப்பா. எங்கயிருந்து உந்தப் பொய்களை கொண்டு வாறாங்களோ. சர்வதேசத்தோட பேரம் பேசப்போறோம் எண்டாங்கள். தீர்வுப்பொதி அரைவாசியில் நிக்குது வோட்டுப் போடுங்கோ, அரசமைப்பு பாதி வழியில் நிக்குது எண்டெல்லாம் பினாத்துவாங்கள். தேர்தல் முடிய எல்லாம் முடிந்து விடும். பிறகு அடுத்த தேர்தல் வர திருப்பி எல்லாம்  அரைவாசிக்கும்,பாதி வழிக்கும் வந்து நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2018 at 5:38 AM, நவீனன் said:

அமைச்சர், பதவி சலுகைகளுக்காக உங்களை கைவிடமாட்டோம்

யாரை யார் கைவிடுவது? தேர்தல் பயத்தில் நாக்குளறுது. நாங்கள் கைவிட்டால்  நீங்கள் ஒன்றுமேயில்லை. நீங்கள் அதை உணராமல்  பேசுவதை பார்க்கும்போது செய்யப் போவதை சூசகமாக சொல்கிறீர்கள் போலுள்ளது. நீங்கள்  சொன்னால் என்ன சொல்லாவிட்ட்டால் என்ன அதைத்தான்  செய்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2018 at 9:01 PM, ஈழப்பிரியன் said:

மட்டக்கிளப்பில் கூட்டமைப்பு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கேள்விப்பட்டேன்.இதை உறுதி செய்ய முடியுமா?

மன்னிக்கவும் பார்க்க வில்லை இறுதி நாள் தோல்வி பயம் ஏற்பட்ட உடன் பணம் சாராயம் சாப்பாடு வழங்கப்பட்டது  இல்லாவிட்டால் இன்னும் தோல்வி அடைந்திருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னிக்கவும் பார்க்க வில்லை இறுதி நாள் தோல்வி பயம் ஏற்பட்ட உடன் பணம் சாராயம் சாப்பாடு வழங்கப்பட்டது  இல்லாவிட்டால் இன்னும் தோல்வி அடைந்திருப்பார்கள் 

மாமாங்கத்தைச் சேர்ந்தவர் என்னுடன் வேலை செய்கிறார் கேள்விப்பட்டதும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.நம்பவே முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னிக்கவும் பார்க்க வில்லை இறுதி நாள் தோல்வி பயம் ஏற்பட்ட உடன் பணம் சாராயம் சாப்பாடு வழங்கப்பட்டது  இல்லாவிட்டால் இன்னும் தோல்வி அடைந்திருப்பார்கள் 

ம்ம் தும்புகட்டை கூட வெல்லும் என்டிச்ச்சினம் கடைசியில் சாராய போத்தில்தான் அவையளை கை தூக்கி விட்டு உள்ளது  ஏலச்க்சன் ரிஸல்ட் வந்தபின் கட்டாயம் சாராயபோத்தளுடன் இருந்திருப்பினம்  கவலையை மறக்க ..

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

ம்ம் தும்புகட்டை கூட வெல்லும் என்டிச்ச்சினம் கடைசியில் சாராய போத்தில்தான் அவையளை கை தூக்கி விட்டு உள்ளது  ஏலச்க்சன் ரிஸல்ட் வந்தபின் கட்டாயம் சாராயபோத்தளுடன் இருந்திருப்பினம்  கவலையை மறக்க ..

எல்லா இடங்களும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் திணறுகிறார்கள் மட்டக்களப்பில் மக்கள் பிள்ளையான் கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்க சொல்லியும்கேட்க வில்லை முஸ்லீம்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டம் போடுறார்கள் பாவம் மக்கள் ஓட்டு போட்ட மக்கள் இன்னும் அனுபவிக்கணும்  எங்கள் ஊர் சுயேட்சையாக நின்றோம் எனது ஊரிலும் ஆட்சி  அமைக்க முடியாது நாங்கள் சேர்ந்தால் மட்டும் முடியும் இல்லாவிட்டால் மொட்டு , முஸ்லீம் காங்கிரசை சேர்க்க வேண்டும்  அவர்கள்  

 

தற்போது தமிழக அரசியல் நிலைக்கு வந்துள்ளது ஈழ தமிழ் அரசியல் வாழ்வு இதான் சுருக்கம் சொல்ல போனால் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எல்லா இடங்களும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் திணறுகிறார்கள் மட்டக்களப்பில் மக்கள் பிள்ளையான் கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்க சொல்லியும்கேட்க வில்லை முஸ்லீம்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டம் போடுறார்கள் பாவம் மக்கள் ஓட்டு போட்ட மக்கள் இன்னும் அனுபவிக்கணும்  எங்கள் ஊர் சுயேட்சையாக நின்றோம் எனது ஊரிலும் ஆட்சி  அமைக்க முடியாது நாங்கள் சேர்ந்தால் மட்டும் முடியும் இல்லாவிட்டால் மொட்டு , முஸ்லீம் காங்கிரசை சேர்க்க வேண்டும்  அவர்கள்  

 

தற்போது தமிழக அரசியல் நிலைக்கு வந்துள்ளது ஈழ தமிழ் அரசியல் வாழ்வு இதான் சுருக்கம் சொல்ல போனால் 

இவ்வளவுகாலமும் ஆனவத்த்னமாய்  இருந்த கூட்டம் எவ்வளவோ சொல்லியும் கேட்கமாட்டம் என்று ஆடினவை இனியாவது சுடலை தெளிவு வருதோ என்று பார்ப்பம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.