Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

Featured Replies

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

 

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்களுக்கு, போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்திருப்பதாக பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஸ்ரீலங்கா தூதரக அதிகாரிகளும்,  சிங்களவர்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைப் போன்று பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்றும்  அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் - தமிழ் தோழமை இயக்கமும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த போராட்டம் கடந்த நான்காம் திகதி பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா அரசின் தமிழனப் படுகொலைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பது போன்று சைகை மூலம் ஸ்ரீலங்கா தூதரக பாதுகாப்புக்கான பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்த எச்சரிக்கை குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அவரை குறித்த பதவியில் இருந்து இடைநிறுத்துவதாக அறிவித்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிகேடியர் பிரியங்கவின் நடவடிக்கை தொடர்பில் விசாரணையொன்றையும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான திலக் மாரபன அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த இந்த அறிவிப்பை ஒருசில மணித்தியாலங்களுக்குள் இரத்துச் செய்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் பதவியில் அமர்த்தும்படி அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்தார்.

இந்த நிலையில் இலண்டனில் தூதரக சேவையில் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை இணைத்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு சென்றிருந்த பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர் குறித்த நடவடிக்கையை பாராட்டி கடிதமொன்றை கையளித்துள்ளார்.

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்படட பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டதையிட்டு வெளிவிவகார அமைச்சுக்கு நன்றி தெரிவித்தோம். அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்கும்படி ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.

அந்த வகையில் மிகவிரைவில் அவரை அப்பதவிக்கு திரும்பச்செய்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் பிரியதர்ஷன எமது கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொண்டு பதிலளித்தார். உண்மையிலேயே புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் குழுக்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பதாக பிரிகேடியர் எச்சரிக்கை விடுக்கவில்லை. ஆனால் அப்படியொரு எச்சரிக்கையையே தங்களுக்கு விடுத்திருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களது தலையையும் இழக்கநேரிடும் என்ற செய்தியையே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வழங்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வெளிநாட்டு அமைச்சுக்கள், நாடாளுமன்றங்களில், முறைப்பாடு செய்யப்படுவதை புலம்பெயர் சிங்களவர்கள் உன்னிப்பாக பார்க்கவேண்டும். எனவே புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் குழுவினர் செய்வதை பார்க்கிலும் அதிகமாக அவர்களுக்கு பதில் வழங்க புலம்பெயர் சிங்களவர்கள் நடவடிக்கை வேண்டும். இதற்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” - என்றார்.

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

https://news.ibctamil.com/ta/internal-affairs/Buddhist-monks-comment-on-London-Issue

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தமிழனை தாக்கிகொண்டு கிடவுங்கோ ரூபவாகினியில் காலிமுகத்திடலில் சுதந்திர கொண்டாட்டம் நடத்தினம் பின்னணியில் கொழும்பு காபரில் வேலை என்று  சீனன் இடத்தை பிடித்துகொண்டு இருப்பது தெரிகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/photographic-evidence-shows-throat-slitting-gesture-by-patriot-mimics-gruesome-habit/

குறித்த அதிகாரி கடமை நீக்கம் செய்யப்பட்டுக்கதாக செய்திகள் கூறுகின்றன. 

அதே நேரம் ஜனாதிபதி அந்த முடிவை திரும்பவும் மாற்றியதாகவும், அந்த அதிகாரி திரும்பவும் அவரின் கடமையை பிரித்தானிய தூதுவராலயத்தில் தொடர்வதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதில் எது சரி?

 

Edited by Sasi_varnam

1 hour ago, Sasi_varnam said:

குறித்த அதிகாரி கடமை நீக்கம் செய்யப்பட்டுக்கதாக செய்திகள் கூறுகின்றன. 

அதே நேரம் ஜனாதிபதி அந்த முடிவை திரும்பவும் மாற்றியதாகவும், அந்த அதிகாரி திரும்பவும் அவரின் கடமையை பிரித்தானிய தூதுவராலயத்தில் தொடர்வதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதில் எது சரி?

இதில் சரியானது, வழமைபோல் பிரித்தானியா வாழ் இளிச்சவாய் தமிழர்களும், இளிச்சவாய் தமிழ் அமைப்புகளும் எவராவது பயங்கரவாதி பிரியங்க பெர்னாண்டோ மீது முறைப்பாடு செய்து, யாரோ எவராவது வந்து தொடரும் சிங்கள-பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று இலவு காத்த கிளி போல காத்துள்ளார்கள்.

இதுவரை பிரித்தானியா வாழ் தமிழர் அமைப்புகளும், தமிழர்களும் சட்ட ரீதியான முறைப்பாடுகள் எதையும் எங்கும் செய்யவில்லை எனத் தெரிகிறது! தமிழினத்தின் அழிவுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் தொடர் வெற்றிக்கும் தமிழினத்தின் இது போன்ற சுயநல செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்!

தமிழர் அமைப்புக்கள் அறிக்கைகள் விட்டு அரைவேக்காட்டு அரசியல் செய்வது எக்காலத்திலும் பயனில்லாத செயல்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்த பிக்குவின் அறிக்கையையும், கைது செய்யப்பட்டு கழுத்தறுபட்ட நிலையில் கைகள் பின்னுக்குபிணைக்கப்பட்ட   போராளிகளின் படங்களையும் சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும்படி அனுப்ப முடிந்தவர்கள் யாரும் செய்யலாம்.இது ஏற்கனவே கலம் மக்ரே செய்துவிட்டார். இருந்தாலும் இப்போ சந்தர்ப்பம் சாதகமாக  மாறி இருக்கும் போது திரும்ப  பயன்படுத்திப் பாக்கலாம் என்றொரு நப்பாசை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

 

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

இந்தப் புத்த பிக்குவின் முகத்தில், வழமையாக ...மத குருமார்கள் முகங்களில்...காணப்படும் அமைதியோ...சாந்தமோ காணப் படவில்லை!

இலவசமாகக் கொடுக்கப்படும்...அரிசிக்கும்..பருப்புக்கும்...வேறு வசதிகளுக்குமாகப் புத்த பிக்கு ஆனவர் போல உள்ளது!

இலவீக ஆசைகளுடன்...மத குருமார் ஆனவர்கள்....தங்கள் முனைப்புகளையே எப்போதும் முன்னெடுப்பார்கள்!

நாட்டைப்பற்றியோ...மதத்தைப் பற்றியோ...எந்தக் கவலைகளும்...இவர்களிடம் கிடையாது!

இவர்கள் போன்றவர்களுக்கு....முக்கியத்துவம் கொடுக்கும்...எமது பத்திரிகைகள் தான் ....வெட்கப் பட வேண்டும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.