Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் இன்னுமொரு பிதற்றல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை ஓட்டை திருப்பிப்

போட்டு போராளிகள்

கடலில் பயணம் செய்தனர் 

என்றேல்லாம் கதை விடும்

சீமானின் இன்னொரு வீடியோ

இது

 

ஒருவர் சிரியாவில் உள்ள

அகதிகளை ஈழத்தமிழர்

ஒருவர் பிளேன் கொண்டு 

போய் காப்பாற்றி ஏற்றி வந்தார்

என்று sarcasm கலந்து 

பதிவை போட

 

அதை அறிவு கெட்ட 

தொம்பிகள் நம்பி

உலகம் பூரா பரப்ப

 

அத் தொம்பிகளின் தலைவனும்

நம்பி கூட்டத்தில் உரையாடுகின்றார்

 

சீமான் போன்ற வெற்று

வேத்துகள் எந்தளவுக்கு

அறிவு கெட்டவர்கள் என்பதற்கு

இதுவே ஒரு உதாரணம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பைரவா...

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

அது தமிழ் நாட்டுக்கு தலைவா...  நமக்கு அல்ல....

நீங்க எங்க இருக்கிறீங்க? மேலை நாடொன்றில் வாழ்வதனால்.... தமிழக அரசியலை புரிந்து....இந்த மாதிரியான அல்ப விசயங்களை புரிந்தும், புரியாத மாதிரி  நடப்போம்.... இல்லாவிடில், தூக்கிப் பிடிக்கும் நம்மைத்தான் பைத்தியர்கள் ஆக நினைப்பார்கள்.

:grin:   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

பைரவா...

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

அது தமிழ் நாட்டுக்கு தலைவா...  நமக்கு அல்ல....

நீங்க எங்க இருக்கிறீங்க? மேலை நாடொன்றில் வாழ்வதனால்.... தமிழக அரசியலை புரிந்து....இந்த மாதிரியான அல்ப விசயங்களை புரிந்தும், புரியாத மாதிரி  நடப்போம்.... இல்லாவிடில், தூக்கிப் பிடிக்கும் நம்மைத்தான் பைத்தியர்கள் ஆக நினைப்பார்கள்.

:grin:   

இதை தான் திராவிடக் 

கட்சிகளும் செய்தன

மக்களை கவர என

பொய்யுரைத்து

பொய் இனப்பற்று பேசி

பொய் மொழி பற்று

காட்டி

ஈற்றில் எல்லாரையும்

ஹிந்தியனுக்கு அடகு வைத்தன

 

சீமான் இதில் இருந்து

இம்மியளவும் பிசகவில்லை

 

ஈழத்தமிழர் போராட்டம் 

முழுதும் தியாகம் நிறைந்தது

பெரும் வீரமும்

இரத்தமும் சதையும் நிணனீரும்

சேர்ந்தது

 

அவர்களின் வீரம் பற்றி

சொல்ல பொய் தேவை

இல்லை

 

இங்கு சீமானும் பொய்

பேசவில்லை

அவர் சிரியாவின் அகதிகளை

யாழ்ப்பாணத் தமிழர்

விமானத்தில் ஏற்றி காப்பாற்றியதை

நம்புகின்றார்

விமானத்தின் பெற்றோலை

கீழே சிந்தி 11 பேரை 

மேலதிகமாக ஏத்தின 

லாஜிக்கை நம்புகின்றார்

அதனால் தான் அதை 

மக்களுக்கு சொல்கின்றார்

 

ஒரு தலைவனுக்கு உரிய

தகுதி உண்மைகளை 

தன் சிந்தனை திறனால்

உய்த்தறிவது

அது சீமானுக்கு இல்லை

 

அல்லது

சீமானுக்கு இது பொய்

என்று தெரியும்

ஆமை ஓட்டை கவிழ்து

அதை படகாக ஆக்கி

போராளிகள் மன்னாரில் 

இருந்து

இராமாஸ்வரம் பயணம் செய்கின்றார்கள்

என்று சொன்ன மாதிரி

பொய் பேசி

தன் மக்களையும்

புலம்பெயர் தொம்பிகளையும்

நம்ப வைக்க முயல்கின்றார்

சீமான் தமிழகத்தில்

எமக்கான ஆதரவை

மிகக் குறைத்த

நபர்

 

2009 இன் பின்

ஈழத்தமிழர்களுக்கு

அதிக அளவு எதிரிகளை

தமிழகத்தில் உருவாக்கிய

அரசியல்வாதி

 

அவரை கண்டிபாக

அம்பலப்படுத்துவேன்

யாழில்

 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் அடுத்தவன் பல்லுக்குள் இருப்பதை எடுத்து நீங்களும் மணந்து மற்றவர்களுக்கும் மணக்க கொடுக்காமல்

நீங்கள் ஒரு அமைப்பில் இருந்து நல்ல விடயங்கள் செய்தால் சொல்லுங்கள் எமக்கும் பிடித்திருந்தால் ஆதரவு தருகிறோம்.

ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும் போது மிகுதி நான்கு விரல்களும் எம்மை நோக்கியே காட்டுகின்றன என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

வைரவன் அடுத்தவன் பல்லுக்குள் இருப்பதை எடுத்து நீங்களும் மணந்து மற்றவர்களுக்கும் மணக்க கொடுக்காமல்

 

இதுக்கும் நான் எழுதியதற்கும்

என்ன தொடர்பு பொஸ்?

சீமான் ஈழப் போராட்டத்தை

முதலாக வைத்து

அரசிய செய்யும் நபர்

அவரின் பிதற்றலை

சொன்னால் அதுக்கு 

சம்பந்தமில்லாமல்

ஏன் எழுதுகின்றீர்கள்?

 

இதில் சீமான் சொன்னது

சரியா

எந்த உய்த்தறிவும் இல்லாமல்

விசரன் மாதிரி நம்பியது

சரியா

பதில் சொல்லுங்கள் 

 

Quote

நீங்கள் ஒரு அமைப்பில் இருந்து நல்ல விடயங்கள் செய்தால் சொல்லுங்கள் எமக்கும் பிடித்திருந்தால் ஆதரவு தருகிறோம்.

ஒருவரை விமர்சிக்க

ஒரு பொய் சொல்லும்

அரசியல்வாதியை பற்றி

எழுத அமைப்பில் இருக்க வேண்டுமா?

அப்படி எனில்

நீங்கள் எந்த அமைப்பில்

இருந்து கொண்டு தமிழ் தேசிய

கூட்டமைப்பை விமர்சிக்கின்றீர்கள்?

 

சாவை பற்றி எழுதினால் 

முதலில் நான்

செத்து இருக்க வேண்டுமா?

 

Quote

ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும் போது மிகுதி நான்கு விரல்களும் எம்மை நோக்கியே காட்டுகின்றன என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சும்மா போற போக்கில்

உதாரணங்களையும்

சொலவடைகளையும்

சிந்தி விட்டு போனால்

அவை சரியாக பொருந்துமா?

 

நீங்கள் தானே

களவாடிய பொழுதுகள் படத்தில்

வந்த பாட்டை பார்த்து 

விட்டு

எது திராவிட அரசியல் 

என்று தெரியாமல்

சீமானின்

தாக்கத்தில் வந்த பாட்டு

என்று எழுதியவர்?

 

அங்கு நான் உங்களிடம்

கேட்ட கேள்விகள்

இன்னும் உங்கள் பதில்

இல்லாமல் காத்து கிடக்கு 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு நான் தர முயன்றது சிறு அறிவுரை. 

நீங்களோ, முன்பே தயாரித்து வைத்திருந்த பதிலை ஒட்டி உள்ளீர்கள் போலுள்ளது.

Tropido என்ற புலிகளின் சுயதயாரிப்பினை, போராளிகள் தமிழில் என்ன பெயரில் அழைத்தனர்?

நோக்கம், காரணகாரியம் புரிவதால் வாழ்த்தி விடை பெறுகிறேன் ஜயா, நன்றி.

4 hours ago, வைரவன் said:

ஈழத்தமிழர் போராட்டம் 

முழுதும் தியாகம் நிறைந்தது

பெரும் வீரமும்

இரத்தமும் சதையும் நிணனீரும்

சேர்ந்தது

ஈழத்தமிழர் போராட்டம் நீங்கள் சொல்வதுபோல் மட்டும் நடக்கவில்லை. சகோதர சண்டைகளும் துரோகங்களும் பிரிவினைகளும் மதவாத பிரதேசவாத பிரிவினைகளும் என ஏராளமான விடையங்களை உள்ளடக்கியது. அவற்றைத் கடந்து தியாகம் வீரம் என்றதோடு நிற்க முற்படுகின்றோம். தோண்டத் தோண்ட நாறும். போராட்டம் பயங்கரவாதமாகவே முடிக்கப்பட்டு இன்றளவும் நிலுவையில் இருக்கின்றது. அதனால் தான் போர்க்குற்றத்திற்கு உள்ளுக்கு போகவேண்டிய மகிந்தனும் கோத்தாவும் அடுத்த எலக்சனில் நிற்க தயாராகினம்.  எங்கள் வீர வசனங்களுக்கும் உலக அணுகுமுறைக்கும் சம்மந்தமில்லை . இருந்தாலும் எமது  குறைகளை கடந்து நிறைகளோடு பயணிக்க முற்படுகின்றோம். 

 

4 hours ago, வைரவன் said:

2009 இன் பின்

ஈழத்தமிழர்களுக்கு

அதிக அளவு எதிரிகளை

தமிழகத்தில் உருவாக்கிய

அரசியல்வாதி

 

அவரை கண்டிபாக

அம்பலப்படுத்துவேன்

யாழில்

 

2009 க்கு பின்னர் எங்கே அதிக எதிரிகளை உருவாக்கினார்? அதுக்கு முதல் யார் நண்பர்களாக இருந்தார்கள்? அவர்களால் என்ன பிரயோசனம் நடந்தது? 2009 க்கு முன்னர் புலிக்கொடியும் தலைவர் படமும் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி சீமானளவுக்கு பயன்படுத்தியது?  உண்மைக்கு முரணான மோசமான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். 

நீங்கள் அம்பலப்படுத்தி எதுவும் நடக்கப்போவதில்லை. உங்கள் எழுத்துக்களில் இருப்பது தனிப்பட்ட காழ்புணர்வே அன்றி சமூகம் சார் தூரநோக்கு அல்ல. சீமான் தவறான ஒரு தகவலை அடிப்படையாக வைத்து பேசினால் அதை அறியும் போது திருத்திக்கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான் இந் நிகழ்வுக்கான முக்கியத்துவம். அதற்கு அப்பால் இதில் முட்டையில் மயிர் புடுங்க எதுவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

ஆமை ஓட்டை திருப்பிப்

போட்டு போராளிகள்

கடலில் பயணம் செய்தனர் 

என்றேல்லாம் கதை விடும்

சீமானின் இன்னொரு வீடியோ

இது

இதில் சீமான் ஓர் உவமான உவமேயமாகவே பயன்படுத்தியுள்ளார். அதை அவர் விலாவாரியாக விளக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஏனெனில் அது புலிகளின் தொழில்நுட்பத்தை பேசுவது ஆகிவிடும்.

சீமான் சொல்வதை எல்லாவற்றையும் நீங்கள் நேரடி எழுத்து, வசனம் (literal) கருத்தாக கொள்வீர்கள் என்றால், அது உங்களின் அறியாமை.

ஆமை ஒட்டு வடிவம் இந்த நவீன யுகத்திலும், நீர்மூழ்கி  எதிர்ப்பு யுத்தக்கலையிலும் மற்றும் கபடத் தன்மையுள்ள போர் விமானங்களின் ரேடார், ஒளி, ஒலி, இலத்திரனியல் மற்றும் மின்காந்த, வெப்ப  ஒப்பத்தை மறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.     

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

ஒருவர் சிரியாவில் உள்ள

அகதிகளை ஈழத்தமிழர்

ஒருவர் பிளேன் கொண்டு 

போய் காப்பாற்றி ஏற்றி வந்தார்

என்று sarcasm கலந்து 

பதிவை போட

நீங்களே சொல்கிறீர்கள் அந்த பதிவு sarcasm என்று. நீங்கள் இணைத்திருக்கும் ஒளிப்பதிவில் சீமான் சிரியா என்ற ஓர் வார்த்தையை கூட உபயோகிக்கவில்லை.

FX16 தொலைக்காட்சி சேவையே சீமான் அப்படி சொல்வதாக அடிக்குறிப்பிட்டிருக்கிறது.

FX16 உங்களை குழப்பியிருக்கிறதா அல்லது FX16 ஐ உபயோகித்து நீங்க எவரையாவது குழப்ப முயற் சிக்கிறீர்களா?

சீமான் தலைவராவது, சீமான் அந்த மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலேயே உள்ளது. அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை?        

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்ன விடயம் புனையப்பட்ட ஒரு செய்தி.. இவ்வாறு அவர் சில தடவைகள் சறுக்கியுள்ளார். காரணம் மிக எளிமையானது. தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அறிவாளர்கள் கட்டமைப்பு நாம் தமிழர் கட்சியில் கிடையாது. அதற்குக் காரணம் பொருளாரதார பலம் இல்லாத நிலை. அறிவுசார் பெருமக்களை நியமித்தால் அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இருக்கும் இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு கட்சிக்காகவும் முடிந்த அளவு உழைப்பவர்கள்.

நிறுவனங்களிடம் நன் கொடை வாங்கி கட்சி நடத்தலாம்தான். அதற்கும் பல நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி அதை வரவேற்கவில்லை. பிற்பாடு அந்த நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டி வரலாம். இந்த ஒரு விடயம் கூட தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் (பண்ருட்டி வேல்முருகன்) பெருமளவில் இணைந்து செயல்பட தடையாக உள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஈழத்தமிழர் புனைவு செய்தியை நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ காணொளியில் இருந்து நீக்கிவிட்டுத்தான் பதிவிட்டார்கள்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இசைக்கலைஞன் said:

சீமான் சொன்ன விடயம் புனையப்பட்ட ஒரு செய்தி.. இவ்வாறு அவர் சில தடவைகள் சறுக்கியுள்ளார். காரணம் மிக எளிமையானது. தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அறிவாளர்கள் கட்டமைப்பு நாம் தமிழர் கட்சியில் கிடையாது. அதற்குக் காரணம் பொருளாரதார பலம் இல்லாத நிலை. அறிவுசார் பெருமக்களை நியமித்தால் அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இருக்கும் இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு கட்சிக்காகவும் முடிந்த அளவு உழைப்பவர்கள்.

நிறுவனங்களிடம் நன் கொடை வாங்கி கட்சி நடத்தலாம்தான். அதற்கும் பல நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி அதை வரவேற்கவில்லை. பிற்பாடு அந்த நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டி வரலாம். இந்த ஒரு விடயம் கூட தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் (பண்ருட்டி வேல்முருகன்) பெருமளவில் இணைந்து செயல்பட தடையாக உள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஈழத்தமிழர் புனைவு செய்தியை நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ காணொளியில் இருந்து நீக்கிவிட்டுத்தான் பதிவிட்டார்கள்.

மற்றைய அரசியல்வாதிகள் யாவரும், மகா அரிச்சந்திரர்கள் தானே....

மராட்டியர் என தெரிந்த உலகத்துக்கே, பச்சைத்தமிழர் என்பதும், தோட்டத்துக்கு கூப்பிட்டு, நாலு சாத்து சாத்தி திரத்திய எம்ஜியார், கல்யாணம் பண்ணி வைத்தார் என பீலா விடுபவர்கள் மத்தியில், இது ஒரு பெரும் தவறல்ல.

Edited by Nathamuni

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கன்டாவில் பைலட்டாக வேலை பார்க்கும் ஓர் தமிழ் இளைஞன் சிரியாவரை சென்று அகதிகள் பலரைக் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ஒரு செய்தியை நானும் படித்த ஞாபகம் அதனைச் சீமான் குறிப்பிட்டுப் பேசியதற்காக, அவர் முன்வைக்கும்  தமிழத் தேசிய சித்தாந்தம் தவறாய் ஆகிவிடாது.  அப்படியானால்  இன்று பிறந்த நாள் காணும் தந்தை செல்வா உட்பட அனைத்துத் தேசிய வாதிகளும் தவறான புரிதலுடையவர்களே.     ஆமை ஓடு பெரியதாக இருந்தால் அதை உரிய வகையில் ஓர் ஓடமாக மாற்றிக் கடலில் அல்லது நீர்நிலைகளில் ஓடவிட முடியும்.  ஒருவர் அல்லது இருவர் அதில் பயணம் செய்யலாம்.  முன்னர் அப்படிச் செய்திருக்கிறார்கள்.    பிரம்பில் நெய்யப்பட்ட பரிசல் ஒரு குரைச்சி போன்றது, அதில் இன்று வரை மக்கள் ஆறுகளைக் கடக்கிறார்கள்.  இதையெல்லாம் விமர்சிக்க முற்படுவது அறியாமையின் வெளிப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் சொல்லொணாத் துயரத்திற்கும் அழிவிற்கும் ஆளாகிய தருணத்தில் இந்திய அரசின் கீழ் கைகட்டி வாளாவிருந்த குற்றவுணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் நான். இங்குள்ள அரசியல்வாதிகள் மீது பொதுவான வெறுப்பு எனக்கும் இருந்தாலும், ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்தமிழருக்காக எழும் குரலை விமர்சிக்க விரும்புவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவுமே ! அவர்களையும் ஏன் இழக்க வேண்டும் ? தோழர் வைரவன், இலங்கை போர்க்களத்தில் இல்லாத என்னால் இவ்வளவுதான் சிந்திக்க முடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடமாக வைத்த கண் வாங்காமல் காத்திருக்க ....
சீமான் இப்படி ஒரு வாழைப்பழ வாய்ப்பை தந்தார் 

இப்படியே ஒரு வாழைப்பழ கடை திறக்கலாம் 
எனும் கனவில்....  
இப்படி மண் அள்ளி போடுறீங்களே 
நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா ? 

வரும் மார்கழிக்கு ஒரு உப்பு கடையை திறக்க வேண்டியதுதான்.  

இந்த கடை பூட்டியாச்சு 
கடை சொந்த காரர் இனி கடைப்பக்கம் 
வர மாட்டார் .....

வாடிக்கையாளர்கள் மார்கழிக்கு உப்பு கடைக்கு வரவும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.