Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன்.

Featured Replies

உதாரணத்துக்கு 1987 இல் யாழ் குடாநாட்டின் மக்கள் சனத்தொகை 8 லட்சம். இன்று அதுவே 3 இலட்சம். 1987 இல் கனடாவில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆயிரம். இன்று கிட்டத்தட்ட 5 இலட்சம். 1987 இல் பிரித்தானியாவில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 இன்று அது 4 இலட்சமாகி விட்டது.

1987 இல் கொழும்பில் இருந்த வடக்குக் கிழக்கு தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரம். இன்று அது 3 இலட்சம்.

1987 இலங்கையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 32 இலட்சம். இன்று அந்த எண்ணிக்கை 14 இலட்சமாகி விட்டது. மேற்குலகுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டி இருக்கிறது. கொழும்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 இலட்சமாக மாறிவிட்டது. இந்த நிலையில் பாலிதன்ன சொன்னது பொய்யா.. இல்ல நாங்கள் தான் ஈழம் காணுவம் என்று சுதந்திரத்தை கைவிட்டு சுகபோகம் தேடி உலகெங்கும் ஓடி போராட்டதை விலை பேசி சுகபோக வாழ்வைத் தேடிய சுயநலவாதிகள் என்பதை மறைக்க முற்படுகின்றமா..??! இக்காலத்தில் மேற்குலகுக்கு ஓடி வந்த சிங்களவர்கள் எத்தனை..??! முஸ்லீம்கள் எத்தனை..??! மலையகத்தமிழர்கள் எத்தனை..??!

போதாக் குறைக்கு செய்த பாவம் பத்தாதென்று போன இடங்களில வன்முறை ஏமாற்றல் பித்தலாட்டம் செய்து இறுதியில் பயங்கரவாதப்பட்டம் சுமத்த வழிகோலிவிட்டதுதான் கண்ட மிச்சம்..!

தமிழர்களின் எண்ணம் உலகம் தங்கட கையில என்று. பாவங்கள்.. அவர்களை உலகம் நன்றே இறுகக் கட்டியுள்ளதை அறியமட்டும் மறந்துவிட்டார்கள். அடுத்தவை முட்டாள் முட்டாள் என்று முட்டாளானது தமிழர்களே அன்றி உலகில் வேறு யாரும் இல்லை..! :(:(

நீங்கள் சொல்லும் இந்த எண்ணிக்கைகள் எங்கே எவரால் எடுக்கப்பட்டவை? 80களுக்கு பின் ஸ்ரீலங்கா அரசின் புள்ளிவிவரங்கள் எவ்வளவு நம்பத்தகுந்தவை? எனக்கு தெரிந்து கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை 300,000 விட அதிகமாக எந்த கனேடிய உத்தியோகபூர்வ கணக்கடுப்பிலும் வரவில்லை. கனடாவில் இருப்பதாக சொல்லும் 500,000 தமிழர்களின் எண்ணிக்கையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? அது போல் ஐக்கிய இராச்சியத்தில் நீங்கல் சொல்லும் 400,000 த்தை எந்த கணக்கெடுப்பு சொல்கிறது?

  • Replies 53
  • Views 8.9k
  • Created
  • Last Reply

ஏன் கிழக்கில் இருந்து சண்டையே முடிந்து விட்டது என்று இயக்கம் சொன்னதா? கொழும்பில் கொழுத்த உடம்பை நீர் வளர்த்துக் கொண்டிருந்தால், வெறுமனே போராடி வெற்றி பெறலாம் என்று சொன்னதா?

எப்படா வெளிநாடு பாயலாம் என்று, வாயில் வழிய, வழிய நிற்கின்ற உமக்கு புலிகளைப் பற்றிக் கதைக்க வெட்கமாக இல்லை.

தமிழர் பிரதிநிதியாக புலிகள் என்பது சிங்களதேசம் எடுத்த முடிவு. உலகம் எடுத்த முடிவு. மற்றய அடிவருடிக் கும்பல்கள் சிங்களவனுக்கு கழுவிக் கொண்டிருப்பதால் யாரும், அதைக் கணக்கெடுப்பதில்லை. அல்லது ஆனந்தசங்கரியோடும், டக்ளஸ் கூடவும் பேசப் போகின்றேன் என்று மகிந்த பல தடவை சொன்ன போதும் புலிகள் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே!

தமிழர் பிரச்சனை தொடர்பாக, இவர்களுக்கு பேச உரிமையில்லை என்பது, அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மற்றவர்கள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவர்கள்.

புலிகள் ஒன்றும், உங்களின் வாய்ப் பேச்சாலும், உலகத்தின் அனுசரனையாலும், தமிழர் தரப்பின் குரலாகக் கணிக்கப்படவில்லை. சிங்கள இராணுவத்தோடு போராடித் தான் அந்த நிலையை அடைந்தார்கள். எனவே, கை நீட்டிக் கேட்கின்ற லாயக்கு எவனுக்குமில்லை.

உமது கருத்துக்கள் சக்தி வாய்ந்தவை அதை இட்டு உமக்கு எனது நன்றி யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம் ஆனால் நல்ல கருத்துக்கள் நல்ல சிந்தனை இருக்கும் பட்சத்தில் உம்மைப்போன்றவர்கள் வெளி நாடு போனாலும் தமிழுக்கும் தமிழ் படைக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை இலாபம் !

நன்றி நாதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருமாக சண்டைதான் நடைபெறுகிறது!

கேட்ட கேள்விக்கு பதிலில்லை எனின், ஏன் என்னை பற்றிய வேண்டாத ஆராட்சி? கருத்து வறட்சியா? சார் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? யாரை சண்டைபிடிக்கச் சொல்லுகிறீர்கள்? யாரை சாகச் சொல்லுகிறீர்கள்?

தமிழ் மக்களுக்குக் கூடவா அந்த உரிமையில்லை?

கள்ளு வெறிக்கதைபோல் நேரத்துக்கு ஒன்று கதைக்கும் சாணக்கிய சித்தாந்தத்துக்கு தெரியவில்லையா தன்மேதாவித்தனத்தின் யோக்கியம்?

அப்படிக் கதைப்பது சாமானிய மக்கள் உணர்வின் தாக்கம் என்றால்,

அவை சிறந்த செயல்களை செய்விக்க உதவாத பதர்த்தனம் என்று ஒதுங்கிக் கொள்ளலாமே.

இன்று அரசவாதத்தின் நரித்தனமான போக்குகளை உலகின் கண்களுக்கு அம்பலமாக்குவதயே புலிகள் சாதித்துக் கொண்டிருக்கும் போது, புலிகளுக்கு சமாதான விருப்பமருந்து வளங்க வரும் சமாதானத்தோடு சேர்ந்து கூட்டாக பல்லவி பாடுவார். துரிததீர்வு வளங்கச் சொல்லி கருத்தெழுதுவார், புலிகள் கை உயர்த்த விரும்பாத சம்பவங்களுக்கு, புலிகளின் பெயர் சூடி பெயர் சூடி பெருமை கொள்வார்.

உங்களுக்கெல்லாம் நல்லதமிழில் மாலை சார்த்த வில்லை என்றால் என்கை விரக்தி அடைந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

4% தமிழர்களா? எவன் சொன்னான்? எவன் போய் கணக்கெடுத்தான்? பாலித கோஹன, ரம்புக்வெல போன்ற கடைந்தெடுத்த பொய்யர்களா? கிட்டத்தட்ட 30% தமிழர்களை அகதிகளாக உலகம் எங்கும் ஓடச் செய்து விட்டு, தமிழர் தாயகத்தில் 70% நிலப்பரப்பில் சிங்கள இராணுவம் கூட புக முடியாத நிலையில், எங்கிருந்து வந்தது இந்த 4% கணக்கெடுப்பு.

ஒருவேளை தமிழீழம் தவிர்ந்த எதிர்கால ஸ்ரீலங்காவில் 4% தமிழர்கள் இருப்பார்கள் என்று பாலிதகோஹனவின் கணினி கணக்கெடுத்து சொல்லியதோ என்னவோ. பாலித கோஹன போன்ற திருடர்கள், தமிழ் மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் உள்நோக்கத்துடன் சொல்லும் பொய்யான தரவுகளையும், விகிதாசாரங்களையும், மீண்டும் மீண்டும் நாமும் சொல்வதால், சிங்கள அரசின் கபடத்திற்கும் பொய் பிரசாரத்திற்கும் தான் துணை போகிறோம்.

சிங்கள அரசிற்கு அடிவருடும் சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுக்கு இப்படியான பொய்களை கூட தட்டி கேட்க திராணி இல்லை. இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா? கொழுத்து திரியும் உங்கள் உடம்புகள் ஒரு நாள் புழுத்து போகும் திருடர்களே!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

Sinhalese 73.8%, Sri Lankan Moors 7.2%, Indian Tamil 4.6%, Sri Lankan Tamil 3.9%, other 0.5%, unspecified 10% (2001 census provisional data)

https://www.cia.gov/cia/publications/factbook/geos/ce.html

இதைத்தான் கொழும்பில் இருக்கும் சிலர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சொல்லித் திரிந்தனர். 2001 இல் தமிழீழத் தாயகப் பகுதியில் குடித்தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • இளந்திரையன் இராணுவப்பேச்சாளராக தனது கடமையை செய்கிறார். (பிரசாத் சமரசிங்கவின் கோமளிக் கூத்துடன் ஒப்பிடும் போது அது எவ்வளவோ மேல்.)
  • அரசியல் துறைப் பொறுப்பாளர் தன் கடமையை சீராகச் செய்கிறார் (இலங்கை அமைச்சர்களுடன் ஒப்பிடுங்கள்)
  • புலிகளின் தளபதிகள் தமது கடமையை தலமைப்பீடத்தின் கட்டளைக்கேற்றவாறு செய்கிறார்கள்.
  • தலைவர் தன் கடமையை செய்தார். செய்கிறார். செய்வார்.
  • வன்னியிலுள்ள தமிழ்க் குடிமகன் தன் கடமையை செய்கிறான் (புலிகளுக்குத் தோள் கொடுத்தல்)
  • யாழ்ப்பாணத்தமிழன் தன் கடமையை செய்கிறான் (சீரியல் பார்த்து பக்கற் பக்கற்றாகக் கண்ணீர் விடுதல்)
  • கொழும்பிலுள்ள தமிழன் தன் கடமையை செய்கிறான் (அங்கலாய்த்தல்)
  • புலத்திலுள்ள தமிழன் தன் கடமையைச் செய்கிறான் (இராணுவ ஆய்வு எழுதுதல் போன்ற )

இப்படி எல்லரும் தம் தம் கடமையை செய்யும் போது தமிழீழம் என்ன கிடைக்காமலா போய்விடும்?

கொழும்பில் மொத்த சனத்தொகையே 1987ல் இருந்தத விட இப்போது இரட்டிப்பாகி விட்டது.

அது என்ன கணக்கு 1987ல் 32 லட்சம் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள். 14 லட்சம் வடக்கு கிழக்கில், 13 லட்சம் புலத்தில், 5 லட்சம் இந்தியவிலும் கொழும்பிலும். கூட்டிப் பார்த்தால் சரியக 32லட்சம் வருகிறது?!

அப்படி என்றால் கடந்த 20 வருடங்களாக புலத்திலும், இலங்கை தீவிலும் வாழும் தமிழர்கள் இனப்பெருக்கமே செய்யவில்லைய? 20 வருடங்களாக அதே 32 லட்சம் தானா? எங்கிருந்து இந்த புள்ளிவிவரங்களை எடுத்தீர்கள் என்று அறியத்தருவீர்களா?

1987 இல் கொழும்பில் இருந்த வடக்குக் கிழக்கு தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரம். இன்று அது 3 இலட்சம்.

1987 இலங்கையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை 32 இலட்சம். இன்று அந்த எண்ணிக்கை 14 இலட்சமாகி விட்டது. மேற்குலகுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டி இருக்கிறது. கொழும்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 இலட்சமாக மாறிவிட்டது. இந்த நிலையில் பாலிதன்ன சொன்னது பொய்யா.. இல்ல நாங்கள் தான் ஈழம் காணுவம் என்று சுதந்திரத்தை கைவிட்டு சுகபோகம் தேடி உலகெங்கும் ஓடி போராட்டதை விலை பேசி சுகபோக வாழ்வைத் தேடிய சுயநலவாதிகள் என்பதை மறைக்க முற்படுகின்றமா..??! இக்காலத்தில் மேற்குலகுக்கு ஓடி வந்த சிங்களவர்கள் எத்தனை..??! முஸ்லீம்கள் எத்தனை..??! மலையகத்தமிழர்கள் எத்தனை..??!

:lol::D

கொழும்பில் மொத்த சனத்தொகையே 1987ல் இருந்தத விட இப்போது இரட்டிப்பாகி விட்டது.

அது என்ன கணக்கு 1987ல் 32 லட்சம் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள். 14 லட்சம் வடக்கு கிழக்கில், 13 லட்சம் புலத்தில், 5 லட்சம் இந்தியவிலும் கொழும்பிலும். கூட்டிப் பார்த்தால் சரியக 32லட்சம் வருகிறது?!

அப்படி என்றால் கடந்த 20 வருடங்களாக புலத்திலும், இலங்கை தீவிலும் வாழும் தமிழர்கள் இனப்பெருக்கமே செய்யவில்லைய? 20 வருடங்களாக அதே 32 லட்சம் தானா? எங்கிருந்து இந்த புள்ளிவிவரங்களை எடுத்தீர்கள் என்று அறியத்தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இத் தலைப்பில் சிலர் இளந்திரையனின் கூற்றுக்களை எள்ளி நகையாடி இருந்தனர். தங்களைப் போல் இளந்திரையனையும் ஓர் அறிவிலி என்றமாதிரி சித்தரிக்க முனைந்தனர்.. இளந்திரையன் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் என்பதும் அவரது கூற்றுக்கள் சர்வதேச ஊடகங்களையும் இராஜதந்திரிகளையும் சென்றடையும் என்பதையும் பலர் புரிந்துகொள்ளவில்லை. எனவே உணர்ச்சிமயமாக சிலரைத் திருப்திப்படும் நோக்கில் சவடால் வசனங்களை அவரால் பேசமுடியாது.. இராணுவத் திட்டங்களையும் எதிர்கால நடவடிக்கைகளையும் நேரிடையாக சொல்ல முடியாது. Running commentary கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் Cricket World Cup ஐ முழுநேரமாக இருந்து பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் இந்த எண்ணிக்கைகள் எங்கே எவரால் எடுக்கப்பட்டவை? 80களுக்கு பின் ஸ்ரீலங்கா அரசின் புள்ளிவிவரங்கள் எவ்வளவு நம்பத்தகுந்தவை? எனக்கு தெரிந்து கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை 300,000 விட அதிகமாக எந்த கனேடிய உத்தியோகபூர்வ கணக்கடுப்பிலும் வரவில்லை. கனடாவில் இருப்பதாக சொல்லும் 500,000 தமிழர்களின் எண்ணிக்கையை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? அது போல் ஐக்கிய இராச்சியத்தில் நீங்கல் சொல்லும் 400,000 த்தை எந்த கணக்கெடுப்பு சொல்கிறது?

"தகவல்" என்ற ஒரு மாதாந்த சஞ்சிகையில் வெளியிடப்பட்ட தரவுகள் அவை..! கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை.. 3 இலட்சத்தை விட மிக அதிகம்..! பிரித்தானியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2. 5 இலட்சமாக இருந்தது சமீபத்திய பிற ஐரோப்பியாநாடுகளில் இருந்து வசதி தேடிப் புலம்பெயரும் புலம்பெயர் தமிழர்களால் அந்த எண்ணிக்கை பல ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது..! :D

இதில கியுமன் ரைட் வோர்ச் விட்ட அறிக்கை உள்ளது. அதன்படி 8 இலட்சம் தமிழர்கள் மேற்குலகில் உள்ளதாக அதிகாரபூர்வமாகச் சொல்லியுள்ளனர். அத்துடன் சர்வதேச நாடுகள் எவ்வளவு துல்லியமாக தமிழர்களை கண்காணிக்கிறது என்பதையும் இக்கட்டுரை சொல்கிறது.!

http://hrw.org/english/docs/2006/03/16/slanka13011.htm

The migrated Tamil population post-1983 is said to be above 800,000.

Country Sri Lankan Tamils

India 150,000

Canada 320,000

Germany 60,000

United Kingdom 150,000

France 100,000

Switzerland 40,000

United States 35,000

Italy 24,000

Malaysia 20,000

Australia 53,000

Norway 13,000

Netherlands 7,000

Sweden 6,000

New Zealand 4,000

Finland 600

:lol::D

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_diaspora

இவை அணைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் வந்தவையல்ல. சில தரவுகள் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பழமையானது..!

இவை அதிகாரபூர்வ தரவுகள். இதைவிட ஒளிச்சிருக்கிற தமிழர்கள்.. அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்கள்.. புலம்பெயர்ந்த தமிழர்கள் குட்டிபோட்ட எண்ணிக்கைகள் சட்டப்படி நுழைந்த தமிழர்கள்.. இதில் அடங்கவில்லை..! :D

Edited by nedukkalapoovan

This 4% Ceylon Tamil issue has come to discussion many times but people are still not clear about it. kirubans is right.

Check this ->http://www.statistics.gov.lk/census2001/po...trict/t001c.htm

And the foot note says this->

- In Jaffna, Mullaitivu and Kilinochchi districts, no enumeration was done.

* In Mannar District, out of 5 D.S. Divisions only one was enumerated partially. In Vavuniya District, out of 4 D.S. Divisions, one was enumerated completly and 2 were enumerated partially. In Batticaloa District, out of 12 D.S. Divisions, 5 were enumerated completely and 6 were enumerated partially. In Trincomalee District, out of 11 D.S. Divisions, 7 were enumerated completely and two were enumerated partially. The data are not included for these districts due to incomplete enumeration.

Sinhalese 73.8%, Sri Lankan Moors 7.2%, Indian Tamil 4.6%, Sri Lankan Tamil 3.9%, other 0.5%, unspecified 10% (2001 census provisional data)

https://www.cia.gov/cia/publications/factbook/geos/ce.html

இதைத்தான் கொழும்பில் இருக்கும் சிலர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சொல்லித் திரிந்தனர். 2001 இல் தமிழீழத் தாயகப் பகுதியில் குடித்தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை.

Edited by rajcan

  • கருத்துக்கள உறவுகள்

2001 இல் வெளியான சனத்தொகை கணக்கெடுப்பில் கொழும்பு பல்கலைக்கழகம் ஊடாக நாங்களும் பங்கெடுத்திருந்தோம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவே நமக்குத் தகவல் தரப்பட்டது..! :D:lol:

"தகவல்" என்ற ஒரு மாதாந்த சஞ்சிகையில் வெளியிடப்பட்ட தரவுகள் அவை..! கனடாவில் தமிழர்களின் எண்ணிக்கை.. 3 இலட்சத்தை விட மிக அதிகம்..! பிரித்தானியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2. 5 இலட்சமாக இருந்தது சமீபத்திய பிற ஐரோப்பியாநாடுகளில் இருந்து வசதி தேடிப் புலம்பெயரும் புலம்பெயர் தமிழர்களால் அந்த எண்ணிக்கை பல ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது..! :lol:

நீங்கள் சொல்லும் "தகவல்" என்னும் சஞ்சிகை தந்த தகவல் தவறு. தமிழ் கனேடியன் இணையதளம் 2007ல் கனேடிய தமிழர்களின் தொகை கிட்டத்தட்ட 250,000 என்ர்று சொல்கிறது.

விபரங்களுக்கு:

http://www.tamilcanadian.com/canada/

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் "தகவல்" என்னும் சஞ்சிகை தந்த தகவல் தவறு. தமிழ் கனேடியன் இணையதளம் 2007ல் கனேடிய தமிழர்களின் தொகை கிட்டத்தட்ட 250,000 என்ர்று சொல்கிறது.

விபரங்களுக்கு:

http://www.tamilcanadian.com/canada/

உந்தத் தகவல் தவறு. ஏற்கனவே விக்கிபிடியாவில் 320,000 என்று தரப்பட்டுள்ளது. அது புலம்பெயர்ந்த தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. புலம்பெயர்ந்த பின்னர் திருமணமாகி பிறந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டுப்பிரஜைகளாகவே கணிக்கப்பட்டுள்ளன. அதைவிட பல நூறு தமிழர்கள் கணக்கில் இல்லாமல் வாழ்கின்றனர். அதன்படி தகவல் கிட்டத்தட்ட சரியானதே. பெரிய வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவையாயும் எஸ்ரிமேற்ரட் தரவுகள் தான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருமாக சண்டைதான் நடைபெறுகிறது!

30 வருடமாக நடக்குது என்று தெரியும்போது, அதற்கு என்ன ஒத்துழைப்பை நீங்க செய்்திங்க என்று அறியலாமா? புலிகளை நோக்கி கையை நீட்ட யோக்கியம் உங்களுக்கு இருக்குதா?

30 வருடமாக நடக்குது என்றால், கிழக்கு போனது பற்றி ஏன் கவலை? என்றைக்குமே தமிழீழத்தை விட்டு சிங்கள ஆமி ஓடஓட விரட்டியடிக்கப்பட வேண்டியவர்களே.

கேட்ட கேள்விக்கு பதிலில்லை எனின், ஏன் என்னை பற்றிய வேண்டாத ஆராட்சி? கருத்து வறட்சியா? சார் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? யாரை சண்டைபிடிக்கச் சொல்லுகிறீர்கள்? யாரை சாகச் சொல்லுகிறீர்கள்?

உங்களைப் பற்றிக் கதைக்க கூடாது என்று போட்டு, அடுத்தவரியில் என்னைப் பற்றி விபரம் கேட்கின்றியளே! உங்களைப் போய்ச் சண்டை பிடிக்கச் சொல்லவில்ல. நீங்கள் சிங்கத்ததின் குகையிலேயே இருங்கோ. ஆனால் மற்றவக்கைக்குப் புத்தி சொல்லுகின்ற வேலையை விட்டுடுங்கோ.

தமிழ் மக்களுக்குக் கூடவா அந்த உரிமையில்லை?

தமிழ்மக்களுக்கு உரிமையிருக்கு அதையும் விட , வரலாற்றுக் கடமையும் இருக்கு. அதை ஒழுங்காக நிறைவேற்றுகின்ற ஆட்களுக்குத் தான் உரிமை. இப்ப நெஞ்சைத் தொட்டுச் சொல்லும். உமக்கென்ன உரிமையிருக்கு எண்டு.

ஏதோ புலிகள் உங்களுக்கு கைகட்டிச் சேவகம் செய்கின்ற ஆட்கள் மாதிரியல்லோ உந்த நியாயங்கள். ஒழுங்கான தமிழனாக இருந்தால், களத்தில் நடக்கின்ற கஸ்டங்களையும், அரசியல் நகர்வுக்கு ஏற்ற மாதிரியும் பேசுவான்.

மூன்று வேளை ஏத்திப் போட்டு, புலம்புறவன் என்றால் உப்படித் தானே கதைப்பாங்கள்.

உந்தத் தகவல் தவறு. ஏற்கனவே விக்கிபிடியாவில் 320,000 என்று தரப்பட்டுள்ளது. அது புலம்பெயர்ந்த தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. புலம்பெயர்ந்த பின்னர் திருமணமாகி பிறந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டுப்பிரஜைகளாகவே கணிக்கப்பட்டுள்ளன. அதைவிட பல நூறு தமிழர்கள் கணக்கில் இல்லாமல் வாழ்கின்றனர். அதன்படி தகவல் கிட்டத்தட்ட சரியானதே. பெரிய வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவையாயும் எஸ்ரிமேற்ரட் தரவுகள் தான்..! :lol:

wilkipeadia has included both conservative and optimistic figures about canadian tamil population and the difference between those two figures are unacceptably wide. so It cannot be taken as a correctly estimated figure. 2006 Canadian census report says tamil population in Canada was under 300,000.

http://en.wikipedia.org/wiki/Tamil_Canadians

for official figures about tamils in Canada pls contact

E-mail: infostats@statcan.ca

மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் சிங்களக் குண்டர்களினால் சிறைப் பிடிக்கவைப்பதை தடுப்பதற்கு ஏன் முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்படவில்லை? ஏன் இவ்வாறு மனிதக் கேடயங்கள் பயன்படுத்தப்படும் விடயம் தெரியாதா? இந்த மனிதக் கேடய விடயம் சில பத்து வருடங்களின் முன்பே சிறீ லங்கா குண்டர்களினால் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், இதற்கு தமிழர் தரப்பு இன்னும்தான் சரியான தீர்வைக் காணவில்லையே? ஏன்? தமிழ்நாதத்தின், இராணுவப் போர்ப் பாசறைப் பேராசிரியர் திரு. அருள் வேல்ஸ் தேவையில்லாத கற்பனைக் கதைகளை புனைந்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்திவிட்டு, இவ்வாறான மனிதக் கேடயச் சிக்கல்களிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கு வழிகள் கூறலாமே? :lol:NENKALE ORU VALI SOLUNKO .ILATHU UNKALE( EPRLF) avnkalidam solunko unkalai pola orvar ituntale sigalavan enum pala makali kolan.

அடடா இப்போதுதான் எல்லை கோடுமீறப்பட்டுள்ளதா?

இனித்தான் தலமைப்பீடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

கிழக்கு ஏற்கனவே கருணாவிற்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதா?

"கிழக்கிலிருந்து விரட்டப்படப்போவது நாங்கள் இல்லை" என்று இளந்திரையன் முன்னர் கூறியது அதைத்தானா?

வணக்கம் அண்ணா.

உங்கள் கருத்துக்கு நானும் ஒரு ஈழத்து தமிழன் என்ற வகையில் எனது கருத்தை சொல்ல கடமை பட்டிரிக்கிறேன்.அந்த வகையில் உங்க கருத்துக்கு என் கருத்து பின்வருமாறு.

இது என்ன வீட்டுப் பிரச்சனையா நினைத்தவுடன். நினைதத மாதிரி பேச அல்லது சன்Dஐ பிடிக்க. இது ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காக வருடக்கணக்காக போரடிக் கொண்டிருக்கிறது. இன்று அந்த போராட்டம் சர்வதேசமயமாக்கப் பட்டுள்ளது.

எனவே எடுத்தவுடன் எதையும் செய்ய முடியாது.எல்லாத்தையும் ஆழமாக யோசித்துத்தான் செய்ய வேண்டும்.(காட்டை அழித்தால்தான் வயலாக்க முடியும்).ஐந்து ஆண்டுக்கு முதலே விடுதலைப் புலிகளின் பலமும் இலங்க இரானுவத்தின் பலமும் சரி சமனானது என்று இலங்கை அரசாங்கமும் சர்வதேச பிரதி நிதிகளும் ஏற்றுக்கொண்டுதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கைச்சார்திட்டது.

எனவே விடுதலைப் புலிகலின் சில பிரதேசங்களை இராணுவம் கைப்ப்ற்றி இருப்பதை வைத்துக் கொண்டு

விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் அல்லது ஒவ்வொரு இடமாக விடுதலைப் புலிகள் இழந்து கொண்டே வருகிறார்கள் என்று நினைப்பது என்னைப் பொறுத்த வரையில் அப்படி நினைப்பது அனுபவசாலியாகவோ அல்லது விடுதலைபுலிகளின் கடந்தகால தாக்குதல்களை மறந்து பேசுவதாகத்தான் நான் கருதுவேன்.

என்னால் எதையும் இழக்க முடியும் இழப்பதை விட பெறுவது பெறுமதி வாய்ந்ததாக இருக்க முடியுமெனி(இது எனது மொழி)

ஒருத்தன் ஒன்றை விட்டுக் கொடுக்கிறான் எனில் அதை நாம் ஒன்றும் யோசிக்காமல் எடுத்துவிட்டு அதை நாம் போரடியே பெற்றுக் கொண்டோம் என்று கொண்டாடுவது என்பது மிக பெரிய முட்டாள்தனம்.

அவன் ஏன் விட்டுக் கொDஉதான்?

விட்டுக் கொடுத்ததின் அடிப்படைக் காரணம் என்ன?

அவன் விட்டுப் போன இடத்தில் என்னவெல்லம் விட்டுவிட்டு போனான்?

விட்டுக் கொடுத்தவன் அதை மிண்டும் பிடிப்பான் என்ற்தில்தனே விட்டுக் கொடுத்திருப்பான் எனவே யோச்க்க வேண்டிய விசயம் என்று யோசிப்பவனே அனுபவசாலி.

ஒரு ஓட்டப் பந்தையதில் அரம்பிக்கும் போதே முதலவதாஇ ஓடுபவன் முதலிடம் வருவது ரொம்ப குரைவு ஆரம்பத்தில் கடசிய ஓடுபவந்தான் இறுதியிம் முதலிடம் வருவான். எனவே இன்றைய சூழ்னிலையில் நாம் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் பின்வாங்குவதாக்தான் தெரியும் ஏன் பின்வாங்கினார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.எடுத்த எடுப்பில் எதையும் கூறுவது மிகத்தவறு.

-யாழ்_அகத்தியன்

தேவன், ஒற்றன், யாழ்-அகத்தியன்,

உங்கள் பதில்களை வாசித்தேன்.

நன்றி!

தமிழீழ படைத் துறைப் பேச்சாளர், அரசியல் துறைப் பேச்சாளர், சமாதான செயலகப் பேச்சாளர் முதல் கொண்டு அனைத்து உத்தியோக பு+ர்வ அறிக்கைகளும் மேற்குலத்திற்கான பிரச்சார நோக்கு என்பதற்கு மேலால் எமது நாளைய சந்ததிக்கான ஆவணங்களாகவும் அமைகின்றன. எமது பக்க நியாங்கள் கூட அது மேற்கின் ஒரு ஊடகத்தில் வந்திருந்தால் மட்டுமே அதைத் தமது கல்வி சார் ஆராய்ச்சிகளிற்கு பயன் படுத்த இணங்கும் மனநிலை எம்மினத்தின் இளையோர் எதிர் நோக்கும் ஒரு சிக்கல். ஏ.பி. அல்லது றொயிற்றேஸ் சொன்னதாக ஆராய்ச்சியில் ஆதாரம் சேர்த்தால் ஏற்றுக் கொள்ளும் சமூகவியல் விரிவுரையாளர், என்ர ஆச்சி தொலைபேசியில் சொன்னவா என நாம் எவரும் எழுதினால் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. எனவே இந்நிலையில் எம்மவர்கள் தங்களது ஆற்றமைகள் மற்றும் பொறுமையீனங்களின் அடிப்படையில் மட்டும் தமிழீழத்தின் உத்தியோக பு+ர்வ அறிக்கைகளைப் பார்க்காது அவற்றிற்கான பன்முகப்பட்ட தேவைகளை உணர்ந்தால் தேவையற்ற கொதிப்புக்கள் வராது.

இங்கு ஒரு உதாரணத்தைச் சேர்த்துக் கொள்கின்றேன். உலகிலேயே அரசியல் விஞ்;ஞானத் துறையில் தலை சிறந்த காவர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் வகுப்பில் முதல் மாணவியாக வந்து, பின்னர் ரொறன்ரோ

பல்கலைக்கழகத்தில மாஸ்ரேர்ஸ் செய்து அங்கிருந்து றோட்ஸ் புலமைப் பரிசிலில் சென்ற இருவரில் ஒருவரான தமிழ் மாணவி அஸ்வினி வசந்தராசா, தனது மாஸ்ரேர்ஸ் தீசிஸ் ஆக புலம்பெயாந்த தமிழினம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கோசிப்பதற்கு உரிமையற்றது என்ற அடிப்படையில் அதை அமைத்திருந்தார். ஏன் இப்படி இந்த மாணவி சொன்னார் என இவரது வரலாற்றை ஆராய்ந்த போது அவர் தனது இன்ரேண்சிப்பை கொழும்பின் பாக்கியசோதி சரவணமுத்துவின் சென்ரர் போர் பொலிசி ஓல்ரேனற்றிவ் என்ற அமைப்பில் செய்திருந்தார் என்பதை அறிந்த போது அவர் எவ்வாறு தனது கருத்தியலைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது புலனானது. இங்கு இந்த மாணவியின் கருத்தியலிற்கும் மேலால் என்ன மனவருத்தம் தருகின்றது என்றால் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் விததத்தில் இம்மாணவியை வழிநடத்தி அதற்கான வசதிகளைச் செய்து கொடுத்த அவரது தமிழ் பெற்றோரிற்கு தமிழீழ தாகத்தின் நியாபாட்டைச் சொல்லிக் கொடுக்க நினைப்பு வரவில்லை. எமது நியாயப் பாடுகள் ஆங்கிலத்தில் ஆவணப் படுத்தப்படாதமையால் சிங்களத்தின் அடிவருடி பாக்கியசோதி கொடுத்த செய்தி இந்தப் புத்திக் கூர்மை மிக்க எமது தமிழ் சொத்தின் கருத்தியலை பிறழச் செய்துள்ளது. இம்மாணவி ஒரு உதாரணம் மட்டுமே. இது பற்றி நாம் சிந்திக்காவிடின் எமது சரித்திரம் கூட நாளை ஒரு பிறழ்பட்ட நிலையிலேயே எமது சந்ததியால் நோக்கப்படும் ஆபத்து எம்முன்னே தெரிகிறது.

எனவே தமிழீழ உத்தியோக பு+ர்வ அறிக்கைகளையும் அவற்றின் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளை நாம் முதலில் உணரல் வேண்டும்.

நேற்றைய மீட்புப் போரில் எமது 120 உறவுகளிற்கும் ஒரு சிராய்ப்புக் கூட வராது மீட்டுத் அதற்காக பதினைந்து மணிநேரம் போராடி அதில் தம்முயிர் ஈந்த 6 மறவர்களை மட்டும் இந்நேரத்தில் நினைப்போமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா இப்போதுதான் எல்லை கோடுமீறப்பட்டுள்ளதா?

இனித்தான் தலமைப்பீடம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

கிழக்கு ஏற்கனவே கருணாவிற்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதா?

"கிழக்கிலிருந்து விரட்டப்படப்போவது நாங்கள் இல்லை" என்று இளந்திரையன் முன்னர் கூறியது அதைத்தானா?

]

அப்ப மட்டக்களைப்பிலை சண்டை எல்லாம் முடிஞ்சு புலிகள் எல்லாம் வெளியேறிட்டினம் எண்டுறீரோ.? கருணாதான் இப்ப மட்டகளப்பை கட்டிக்காக்கிறாரோ.? அப்ப ஆமிக்காறர் எல்லாம் வடக்கு நோக்கி வருகினமாக்கும்.

என்ன எண்டாலும் அருமையான தகவலுக்கு நண்றியப்பு.

ஓகோ அப்படியென்றால் இறால் கும்பக்க சாமிக்கு அடுத்ததாக அஸ்வினி வசந்தராசா சிறீ லங்கா அரசு சார்பில் ஐ.நா விற்கு ஒரு உயர் பதவியை பெற்று எதிர் காலத்தில் போவார் என்று சொல்லுங்கோ! :lol::D:D:D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன்.

இராணுவம் தனது எல்லைக் கோட்டை தாண்டி எங்களது பிரதேசத்துக்குள் பிரவேசித்திருப்பது பாரதூரமான விடயம். இந்த நிலைமை குறித்து எமது தலைமைப் பீடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தொலை பேசி மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினரின் நடவடிக்கையின்போது பெரியதம்பனைக் கிராமத்தில் 120 பொது மக்கள் சிக்கியுள்ளனர். படையினர் அவர்களை மனித கேடயமாக வைத்திருக்கிறார்கள். இது மோசமான கள நிலைவரமாகும். இது தொடர்பாக எமது மத்தியகுழு தீவிர மாகப் பரிசீலித்து வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மறுத்துள்ளார். அச்சுறுத்தல் வரும்போது எதனையும் பார்க்கமுடியாது அச்சுறுத்தல் ஏற்படும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி, அரசின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று பார்க்க முடியாது வேறுபாடும் இருக்காது. எமது இலக்கு மீது ஒருவர் தாக்குதல் நடத்தும்போது அதை அழித்தாக வேண்டும். அதைத்தான் படையினர் செய்கின்றனர் என்றார்.

-Uthayan-

********************************************************

இளந்திரையன் சொன்ன மாதிரி ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படை எங்கள் எல்லையை அதாவது பொறுமையின் எல்லையை தாண்டிவிட்டது என்பது தான் தகுந்த பதிலாக இருக்கும்.

ஓற்றன்

யாழ் - அகத்தியன்

என்னண்ணை கொஞ்சம் யோசித்து தான் கதைக்கிறியளோ !

30 வருடமாக யுத்தம் தான் நடக்குது எண்டு கருதுறது இனியாயவது இந்த யுத்தம் நின்று மக்களுக்கு எண்டு ஓரு நிம்மதியான வாழ்வு கிடைக்காதோ என்ற அங்கலாய்ப்பு அல்லது ஏக்கத்திலயே தவிர

30 வருடமாயே நடக்குது இனியும் நடந்து அழிவுகள் வந்தால் என எவரும் நினைப்பதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இந்ந 30 வருடத்தால் புலிகள் மட்டும் அழிவுகளை எதிர்வு கொள்ளவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளும் மக்கள் தான் பெருமளவில் பாரிய அழிவுகளையும் படுகொலைளளையும் சந்தித்தனர் சந்திக்கின்றன்க ஏன் இனியும் சந்திப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கோ !.

நீங்கள் இந்தக் கேள்வியை என்ன சுயநினைவிலயோ இருந்து கேட்கிறீர்?

தமிழருக்கு வரலாற்றுக் கடமை இருக்கு அது நிறைவேற்று ஆட்களுக்கத் தான் எண்டு உமக்கென்ன உரிமை இருக்குதெண்டு புலிகளுக்கு அரசியல் கொள்கை வகுப்பாளர் மாதிரி கதைவிடுறீர்.

இதை கவனமாய் வாசியும் இதை உம்மை மாதிரி ஏன் என்னை மாதிரி

வாழுகின்ற மக்களுக்காக புரிந்துணர்வு ஏற்பட்டு யாழிற்கு வருகை தந்திருந்த புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பருதி அவர்களின் சமகால அரசியல் நிலமை தொடர்பாக 2002 ஆம் ஆண்டு விளக்க உரையில் இதற்கான சகல சந்தேகங்களையும் போக்கின்ற வகையில் தெளிவான பதிலை அளத்திருந்தார்.

" புலிகள் மட்டும் தான் இந்த விடுதலைப்போராட்டத்தை நடத்துவதோ அல்லது வன்னியல் வாழுகின்ற மக்களோ அல்ல

புலிகள் - இந்த விடுதலைப்போராட்டத்திற்கு வழிநடத்துகின்றனர் அல்லது உரிய இலக்கை நோக்கிய நகர்வை மக்களை செலுத்துகின்றனர்.

வன்னி மக்கள் - பாரிய அடிப்படைத் தேவைகளுக்கும் மத்தியிலும் புலிகளின் காலக் கட்டளையை ஏற்று வன்னியை சுழ்ந்த ஆக்கிரமிப்பை எதிர் கொள்வதற்காக பயிற்சி எடுத்து எல்லைபடை கிராமிய படையாக பரிணமித்து புலிகளுடன் தோள் கொடுத்தனர்.

யாழ் - போன்ற இராணுவ அடக்குமுறைக்குள் வாழுகின்ற மக்கள் - ஆக்கிரமித்து நிற்கும் இராணுவ வலையிற்குள்ளும்புலிகள் தந்திரபோயமாக பின்நகர்ந்த பின்பும் மனம் தளராமல் தமிழிழத்தை விட்டு சென்றிடதமல் வாழ்ந்ததே பெரியவிடயம் அதுமட்டுமல்லாமல் உள்ளுக்குள் நின்ற போராளிகளுக்கு உணவு கொடுத்து அணைப்தவர்கள்

புலம்பெயர் தமிழர் - விடுதலைக்கான போராட்டம் வன்னிச் சமருடன் முடிந்து விடுமா? என உலகம் கணக்குப் போட்டீருக் கொண்டிருந்த பொழுது இ;ல்லை தமிழிழத்தை விட்டு வந்தாலும் விடுதலைப் போராட்த்தை எம்மால் இயன்ற நிதி வழங்கல் முலமாக காப்போம் என பெரும் எடுப்பில் நிதி வழங்கி தோள் கொடுத்தனர்.

தென்னிலங்கை வாழ் தமிழிழ தமிழர்கள் - சிங்கள அரசின் கொடுர ஆட்சியில் இருந்தாலும் எதுவுமே வெளியால் கதைத்துக் கொள்ள முடியாத இன்னல்களிலும் உரிமை கோராத சில நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்திருந்தனர் அவர்கள்

விடுதலைப்போரட்டத்திற்கு குறிப்பிடக்குடிய சுழ்நிலையில் இருக்கவில்லை.

ஆனாலும் குறிப்பாக புலிகளால் ஓரு படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு இராணுவ உடல்கள் தென்பகுதிக்கு ஓவ்வொரு முறையும் எம்மால் ஓப்படைக்கப்டும் பொழுதும் இந்த உடலங்கள் அங்கு செல்லும் பொழுது எமது உறவுகளுக்கு அரசாங்கத்தால் எதுவும்

நடாத்தப்படாது என்ற நப்பாசையில் தான் எமது மனம் இருக்கும்.

ஆனாலும் எமது உறவுகள் சிங்கள இராணுவம் தாக்கி கொல்லப்படக்குடாது அல்லது அவர்களின் உடல்கள் பொலித்தின் பைகளில் கொழும்பிற்கு கொடுக்கப்படாது என சிந்தித்ததில்லை. தொடர்ந்து எமது பிள்ளைகளால் இவ்வாறு நடைபெறுவதன் முலம் வன்னியில் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்பு முடிவீற்கு வரதா எனத்தான் ஏங்கினார்கள்.

இவ்வாறு ஓவ்வொரு தமிழ் மகனும் ஏதோ ஓரு விதத்திலும் போராட்டத்திற்கு இராணுவ அட்டுழியங்களிற்கும வாழந்த்வாறு உதவிசெய்து தான் இருக்கிறான் ஆகவே தயவு செய்து இவ்வாறான கேள்விகள் முலம் தமிழரது ஏதோ ஒரு வகையில் செய்து கொண்ட உதவிகளை எடைபோட்டு பார்க்கவேண்டாம் என மிகவும் தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இன்னொன்றை உமக்கு எனது விளக்கமாக தெரிவிக்கவிரும்புகின்றேன்.

தமிழினினம் போராட வெளிக்கிட்டது வெறுமனே தற்கால வாழ்விற்காகவோ அல்லது உணர்ச்சி வசப்பட்டோ இல்லை.நாமாது வாழவிடிலும் எமது சந்ததியாவது அடிமைப்படமல் வாழவேண்டும் என்பதற்காகவே தவிர வீம்பிற்காக இல்லை.அத்துடன் நீங்கள் சாணக்கியன் அவர்களை பார்த்து கேட்ட கேள்வியை உங்களை பார்த்து கண்ணாடியை பார்த்து ஓருமுறை கேட்டு பாருங்கள் நிட்சயமாக புச்சியமாக வராது. ஏன் என்று யோசிக்கிறிரோ நிரும் விடுதலைக்காக உதவி நிட்சயமாக

செய்திருப்பீர். சாணக்கியனும் ஏதாவது ஓருமுறையில் உதவி செய்திருக்கலாம் அதை உமக்கு சொல்லியோ அல்லது எனக்கு சொல்லியோ கணக்குகாட்ட வேண்டிய அவசியம் இல்லை . தயவு செய்து இவ்வாறன கேள்விகள் முலம் மக்களை வெறுப்பேற்றாதீர்கள்.

அத்துடன் பல வழிகளிலும் முகம் காட்டாமலும் எமது போராளிகளுக்கு உதவிசெய்தவர்களுக்கும் எந்த பாதுகாப்பையும் அவர்களிடமிருந்து இயல்பானதே அது மனித சமுதாயத்தின் குணம் அந்த வகையில் சாணக்கியன் என்ன களத்திற்கு அருகில்வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஓவ்வொரு தமிழனினதும் கேள்வி " என்ன தம்பி எங்கள இப்படியே சாகவோவிடப்போறியள் "

என்று தான் நிட்சயமாக இருக்கும்இல்லை நான் கேட்பதிற்கு சாணக்கியன் நான் குட என்ன உதவியை செய்தோம் என உமக்கு பதிலளிக்கவேண்டும் என்றால்

இன்னொன்றை உமக்கு சொல்லுகின்றேன்.

நீர் நினைக்கலாம் ஆயுதம் ஏந்தி போராடுவது தான் விடுதலையிற்கு செய்வது என்று அதற்காக அது இல்லை என சொல்லவில்லை அதுமட்டுமல்லாமல் ஆயுதம் ஏந்துவது தான் மட்டும் எனவும் சொல்லவில்லை ஆயுதம் ஏந்துவதும்போராட்டம் அதனால் வருகின்ற விளைவுகளையும் தாங்குவதும் போராட்டத்தின் ஓருபங்கு தான் .

என்ன இன்னும் நிர் ஆயுதம் ஏந்துவது மட்டும் தான் என நினைக்கிறரோ ?

ஆம் எண்டால் இன்னொன்றையும் தருகின்றன்

" இன்றைய நாட்களில் துரோகிகளாகிவிட்ட முன்னாள் விடுதலைப்போராளிகளான டக்கிளசு சித்தார்த்தன் ஏன் முற்பகல் 11 மணி 06 ஆம் திகதி மார்ச்சு மாதம் 2004 ஆம் ஆண்டு வரை எங்கௌல்லோரும் அம்மான் அம்மான் என அன்பாக அழைத்து பல தாக்குதலுக்கு நேரடிநெறிப்படுத்தி வெற்றி சமராடிய கருணாவை விட நீரோ அல்லது நானோ அல்லது சாணக்கியனோ எந்த வித்திலும் உதவியதில்லை என்பதை புரிந்து கொள்ளும்.

இக்கருத்துடன் தொடர்புபட்ட செய்தி ஒன்று,

கிழக்கில் ஆரம்பித்த மோதல்கள் இன்று வடக்கிலும் விரிவடைந்த நிலையில் புலிகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்களென்ற கேள்வி எழுகிறது. அண்மைக்கால படை நடவடிக்கைகளால் வடக்கு - கிழக்கில் பாதிக்கப்படாத மக்களே இல்லை. படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், இடப்பெயர்வுகளென அனைத்து மக்களும் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் புலிகளின் மௌனம் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்துகிறது.

சமாதானப் பேச்சுகள் மூலம் தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வென்றால் பேச்சுவார்த்தை மேசைக்குச்செல்ல வேண்டும். யுத்தம் மூலம் தான் தீர்வென்றால் யுத்தமுனைக்குச் செல்ல வேண்டும். பேச்சுவார்த்தை மேசைக்கோ அல்லது யுத்த முனைக்கோ புலிகள் செல்லாதிருக்கும் வரை பெரும் அவலங்களை எதிர்கொள்ளப் போவது அப்பாவி மக்களே.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry275118

கருத்துக்களைப் பதிவு செய்கின்றபோது கண்ணியமாக நடந்துகொள்வது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து

தமிழீழத்துக்கு ஆதரவான கருத்துக்களாக சிலரால் உணர்சிவசப்பட்டு பதியப்படும் கருத்துக்கள் அதற்கு எதர்மறையான விளைவுகளை உருவாக்குவதாக அமையக்கூடாது.

(தற்போது அத்தகைய கருத்துக்கள் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது மகிழ்சியளிக்கிறது)

நன்றி

செந்தமிழ்

Edited by Senth_Thamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு தமிழன் கொல்லப்படுகிறான். இந்த கருத்து ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு தமிழன் கொல்லப்பட்டோ காணாமலோ போயிருப்பான்!

தமிழன் மேல் அவ்வளவு கரிசனையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.