Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க

F94_F6883-2_EF3-45_F7-9_DA0-41_A47081169

ல,ள, என்ற எழுத்துக்கள் தமிழுக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன.

“கரை போட முடியாத புது வெள்ளை ஆடை

கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை

பார்வையில் இளமை வார்த்தையில் மழலை

கூந்தலும் வணங்கும் காலடி நிழலை” 

என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு  சினிமாப் பாடலில்  ,, க்களை அழகாகப் பயன் படுத்தியிருப்பார்.

சமீபத்தில் கூட இந்த மூன்று ,, க்களும் ஒன்றாக வரும் சொல்தொழிலாளிஎன்று  யாழில் தமிழ்சிறி பதிவிட்டிருந்தார்.

இன்று உலகத் தமிழருக்கான (ஒரு) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, இந்த ,,ழகரங்களை புலம் பெயர்ந்த நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பார்த்தேன்.

விடயம் இதுதான்.

வானொலி அறிவிப்பாளர், வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க, பண்ணுறீங்க..... என்று ஒருதினுசா சொல்லிக் கொண்டிருந்தார். இந்தச் சொற்கள் பேச்சுத் தமிழாக இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களான நாங்கள்ள்சேர்த்து வாறீங்கள், கூப்பிடுறீங்கள், பேசுறீங்கள், அழைக்கிறீங்கள், என்றே சொல்லிக் கொள்வோம்.

‘ஈழத் தமிழ் அகதிகள்என்ற வார்த்தை வானொலிச் செய்தியில் பாவிக்கப்பட்டது பற்றி நான் குறிப்பிட்ட பொழுது

செய்திகள் எழுத, வாசிக்க ஈழத்தமிழர் பற்றாக்குறையால் தமிழகத்தைச் சேர்தவர்கள்தான் புலம்பெயர் ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தளவில்ஈழ அகதிகள்என்ற சொல்லாடலைத்தானே பாவிக்கமுடியும்இதில் எரிச்சல்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லஎன்று கிருபன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றைய அறிவிப்பாளரின் மற்றைய வார்த்தைகள் ஈழத் தமிழருக்குச் சொந்தமான உச்சரிப்புகள்

தமிழ்நாட்டு வானொலிகள்  தங்கள் பேச்சு வழக்கில் நிகழ்ச்சிகளைச் செய்து கொள்வார்கள். எங்கள் தமிழ் உச்சரிப்புகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால், அது விவேக் போன்ற நகைச்சுவையாளர்களின்நையாண்டிஆகவே இருக்கும்.

ஒருவேளை, உலகத் தமிழருக்கு ஒரு வானொலி என்பதால் எல்லா நாட்டுத் தமிழும் கலந்து தர வேண்டும் என்ற பெரிய எண்ணம் கூட அந்த அறிவிப்பாளரிடம் இருந்திருக்கலாம்.

அன்றைய இலங்கை தமிழ் வானொலியை நினைத்து இன்று பெருமூச்சுதான் விடமுடிகிறது.

கவி அருணாசலம்

02.06.2018

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேலையிடத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்கின்றார்கள். அவர்களுடன் பேசி (கதைத்து) எனது தனித்துவமான “வடமராட்சி”த் தமிழும் கலப்படம் அடைந்துவிட்டது. இப்போதெல்லாம் உரையாடும்போது ஈழத் தமிழ், இந்தியத் தமிழ், ஆங்கிலம், தமிங்கிலம் என்று கதம்பமாக வருகின்றது. அதனால் கதைப்பதைவிட எழுதுவதன்மூலம் தூய தமிழைக் காப்பாற்றலாம் என்று நினைக்கின்றேன்.

இப்போது வைபர், வாட்ஸ் அப் போன்ற சமூக செயலிகளில் தமிழில் எழுதுவதன் மூலம் தான் மறந்துபோன சில தமிழ் சொற்களை மீட்க முடிகிறது.

பல இயல்பாக கையாண்ட சொற்கள் கூட பயன்படுத்தாமல் மறந்துபோனது தான் வேதனையைத்தருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, கிருபன் said:

எனது வேலையிடத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்கின்றார்கள். அவர்களுடன் பேசி (கதைத்து) எனது தனித்துவமான “வடமராட்சி”த் தமிழும் கலப்படம் அடைந்துவிட்டது. இப்போதெல்லாம் உரையாடும்போது ஈழத் தமிழ், இந்தியத் தமிழ், ஆங்கிலம், தமிங்கிலம் என்று கதம்பமாக வருகின்றது. அதனால் கதைப்பதைவிட எழுதுவதன்மூலம் தூய தமிழைக் காப்பாற்றலாம் என்று நினைக்கின்றேன்.

 உங்கடை வடமராட்சித்தமிழிலை எங்கை ஒரு நாலுவசனம் எழுதுங்கோவன் பாப்பம்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தலைமுறை தலைமுறை மாற்றத்தின்போதும் 10 சதவீத தாய்மொழி வழக்கொழிந்து போகிறது என்று எங்கோ படித்த ஞாபகம்...

தலைமுறை என்பதைவிட நிகழ்கால சந்ததிகூட தாயகத்தில் இருந்தபோது பாவித்த சொற்கள்,உரைநடைகளை காலபோக்கில் மறந்துவிட்டு , எப்போபாதாவது எதேச்சையாக அதனை யாரும் பாவிக்கும்போது ஆச்சரியமடைந்ததும், மறுபடியும் அதை நினைவு மீட்டுவதும் உண்டு..

இலங்கை தமிழருக்குத்தான் ழ ..ள உச்சரிப்புக்கள் சரியாக வரும் என்று  வைரமுத்துவும், வைகோவும் சொன்னதை சில இடங்களில் அவதானித்திருக்கிறேன்...

ஆனால் இலங்கை தமிழர்களுக்குத்தான் ‘ழ’ உச்சரிப்பு சரியாக வராது என்று காண்பிக்க சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாழைப்பழம் என்பதை உச்சரிக்க வைத்து இலங்கை தமிழர் உச்சரிப்பை மறைமுகமா அசிங்க படுத்தியதையும் பார்த்திருக்கிறேன், அசிங்கப்பட்டவர்களில் கனடாவின் புகழ்பூத்த பண்பலை வானொலியின் அறிவிப்பாளினியும் அடக்கம்!

வாறீங்க போறீங்க  என்ற உரையாடல் இலக்கண தமிழ் இல்லையென்று பலருக்கு தெரிந்தாலும், அது வியாபார தமிழ் என்பதுதான் உண்மை.

இலக்கண தமிழை வைத்து ஊடக வியாபாரம் பண்ணமுடியாது,பண்ணினாலும் லாபம் பார்க்க முடியாது என்பதே கசப்பான யதார்த்தம்..

உதாரணத்திற்கு நம்மவர்கள் தயாரிக்கும் திரைபடங்களிலேயே  ‘’ உங்களில எனக்கு சரியான விருப்பம், என்னை காதலிப்பியளே’’? என்ற ஒரு வசனம் அமைத்தால் எமக்கே சகிக்க முடியாததுபோல் தோன்றும்..

அதுவே ’’உன் மேல உசிரயே வெச்சிருக்கேன், என்னைய புடிக்காதாடா உனக்கு’’? 

அப்படி வரிகள், இலக்கணம் தவறி அமைத்தாலும் எங்கோ ஒரு மூலையில் வயது வரம்பு தாண்டி உருகுகிறது பலர் மனசு...

இன்னும் உறைக்கின்ற யதார்த்தம் என்ற ஒன்று இருக்கு, அது:

ஓர் கால கட்டத்தில் இந்திய பாடல்கள், திரைப்படங்களில் வரும் கொச்சை தமிழ்தான் புலம்பெயர் தேசங்களில் தமிழை கெடுக்கின்றது என்ற ஒரு காலகட்டம் இருந்தது...

இன்று இந்திய திரைப்படங்களும் பாடல்களும் இருப்பதினால்தான் புலம்பெயர் தேசத்தின் இளைய தலைமுறை தமிழை ஞாபகம் வைத்திருக்கிறது என்ற நிலையில் நகர்கிறது நிகழ் காலம்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2005 மார்ச் 11 இல் யாழ் களத்தில் எழுதியது..

தமிழுக்கும், தூய தமிழுக்கும் அதிக வித்தியாசம் உண்டு என்பது எனது அபிப்பிராயம். முதலில் தற்போது பாவனையிலுள்ள தமிழை வளர்க்க முயலவேண்டும். 

80களின் பிற்பாடு தோன்றிய தொடர்பாடல் ஊடகங்களின் மூலம், ஆங்கிலம், மற்றும் பிற மொழிகள் தமிழரது பேச்சு மொழியில் அதிகம் கலக்க ஆரம்பித்துள்ளது. எனினும் எழுத்து மொழியில் பிறமொழித் தாக்கம் அதிகம் இல்லையென்றே சொல்லலாம் (அதாவது, ஏற்கனவே கலந்த வடமொழி, போர்த்துக்கீச, டச்சு சொற்களைத் தவிர புதிதாக பிற சொற்கள் பெரிதாகக கலக்கவில்லை). 

எழுத்துத் தமிழ் உலகளாவிய ரீதியில் பொதுவாக இருக்க வேண்டும், ஒரு சிறு வட்டத்துக்குள் மாத்திரம் பாவனையில் இருக்கக் கூடாது. உதாரணமாக சுவிஸிலும், ஜேர்மனியிலும், அவுஸ்ரியாவிலும் ஜேர்மன் எழுத்து மொழி பொதுவானது, அல்லாவிடில் நாளாந்த வங்கிக் கருமங்களைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியாது. இதே நேரத்தில், இந்நாடுகளில் உள்ள ஜேர்மன் பேச்சுமொழி இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. 

இது போலவே தமிழிலும் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என்று உண்டு. 
பேச்சுத்தமிழ் இடத்துக்கிடம் வேறுபாடு உடையது. வடமராட்சியில் பாவனையிலுள்ள சில சொற்கள் தென்மராட்சியிலுள்ளவர்களுக்குப் புரியாது. அதுபோலவே மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கில் வேறுபாடு உடையன. 

எனவே பேச்சுத் தமிழை மாற்றுவோம் என்ற கூற்றுடன் என்னால் உடன்பட முடியாது. இயலுமானால் பிற மொழிச் சொற்களின் கலப்பைக் குறைக்க முயலலாம். நான் ஊரில் இருந்த சமயம் ஆங்கிலச் சொற்களின் கலப்பில்லாமல்தான் பேசினேன். எனினும் தற்போது ஒரு வசனம் பேசும்போதே பல ஆங்கிலச் சொற்கள் புகுந்துவிடுகின்றன. இதையிட்டு நான் பெருமை கொள்வதில்லை, மாறாக வெட்கப்படுகின்றேன். இப்படி எனது பேச்சு மாறியதிற்கான காரணம், ஒரு நாளின் பெரும்பகுதி ஆங்கிலத்தில் உரையாடுவதிலும் எழுதுவதிலும் கழிவதுதான் (மூளை தமிழில் சிந்தித்தாலும்!). 

தமிழ்ச் சொற்களின் பிரயோகத்தினை அதிகப்படுத்துவதற்கு தமிழை வாசிக்கவும் எழுதவும் வேண்டும். தனியே பேசினால் மட்டும் நிறைவேறாது. ஆங்கிலம் கற்கும்போது கற்றபாடம் இதுதான். அதிக வாசிப்பும், எழுத்தும் ஒருவரை ஒரு மொழியில் பாண்டித்தியம் அடையச் செய்கின்றது. 

எழுத்துத் தமிழை நாம் முடிந்தவரை தமிழிலும், இயலுமானால் தூய தமிழிலும் எழுத முயலவேண்டும். 
பலருக்கு யாழ் களம் போன்ற இணையத் தளங்களில் மட்டுமே எழுத சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கு எழுதும்போது, முறையான இலக்கண சுத்தத்துடனும், எழுத்துப் பிழைகளின்றியும் எழுதமுற்பட்டால் தமிழை வளர்க்கமுடியும். 

கடைசியாக ஊரில் நடந்த உண்மைச் சம்பவம். 

எமது ஊரிலுள்ள தமிழ்ப் பண்டிதர் கோயிலுக்கு அர்ச்சனை செய்யவதற்காகப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்று கடையில்லுள்ளவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார். 
"ஒரு சீப்பு வாழைப்பழமும், மூன்று வெற்றிலை பாக்கும் தாருங்கள். மிகுதியைச் சிறுசிறு சில்லறையாகத் தாருங்கள்". 

கடைக்காரனும் அங்கு நின்றவர்களும், பண்டிதர் போனபின்னர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நீங்கள் ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னமே எழுதிய,  கலப்பில்லாத தாய்மொழியின்  வளர்ச்சி கண்டிப்பாக இந்த ஒன்றரை தசாப்தங்களின் பின்னர் அது இன்னும் மேலதிக வளர்ச்சியடைந்திருக்குமே தவிர எந்த விதத்திலும் குறைந்திருக்காது.

பேச்சு வழக்கில் பிறமொழிகளை கலக்காத இலக்கணம் பிரெஞ்சுகாரர்கள் மட்டும்தான் கடைபிடிக்கிறார்கள் என்று காது வழியாக அறிதேன் , அது உண்மையா பொய்யா என்று அங்கு வாழும் விசுகு அண்ணா மட்டுமே சொல்லணும்.

மற்றும்படி எந்த மொழியிலும் பிறமொழி கலக்காமல் பேச்சு வழக்கு மொழியை  யாரும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றே நினைக்கிறேன்,

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அதுபோலவே மட்டக்களப்புத் தமிழ்,  யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கில் வேறுபாடு உடையன. 

உண்மை........................................... யாழ் தமிழை எனக்கு பேசினால் உடனே புரியாது பிறகு தான்விளங்கி கொள்வேன் :)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உண்மை........................................... யாழ் தமிழை எனக்கு பேசினால் உடனே புரியாது பிறகு தான்விளங்கி கொள்வேன் :)

அதெப்படி TKR  நான் சொல்லாத ஒன்றை எடுகோள் காட்டுகிறீர்கள்? இருந்தாலும் நீங்கள்  சொன்னதும் 100% உண்மைதான்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

அதெப்படி TKR  நான் சொல்லாத ஒன்றை எடுகோள் காட்டுகிறீர்கள்? இருந்தாலும் நீங்கள்  சொன்னதும் 100% உண்மைதான்...

கிருபனின் பதிவில் இருந்து தூக்கியது ஆனால் உங்கள் பெயர் வந்துவிட்டது மன்னிக்கவும் இருந்தாலும் நீங்கள் சொல்வது சரிதான் நான் சொல்வதும் சரிதான் ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் இந்திய பேச்சு மொழி தமிழ் உச்சரிப்பு நுழைந்திருப்பதை காண முடிகிறது 

( செம வோறு , அப்புறம் , கெத்துடா, பிறகு ஆங்கிலம் வேறு குக் பண்ணி , வோஷ் பண்ணி , பல பண்ணிகளும் வந்துள்ளது மறுக்க முடியாது  அண்ண)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிருபனின் பதிவில் இருந்து தூக்கியது ஆனால் உங்கள் பெயர் வந்துவிட்டது மன்னிக்கவும் இருந்தாலும் நீங்கள் சொல்வது சரிதான் நான் சொல்வதும் சரிதான் ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் இந்திய பேச்சு மொழி தமிழ் உச்சரிப்பு நுழைந்திருப்பதை காண முடிகிறது 

( செம வோறு , அப்புறம் , கெத்துடா, பிறகு ஆங்கிலம் வேறு குக் பண்ணி , வோஷ் பண்ணி , பல பண்ணிகளும் வந்துள்ளது மறுக்க முடியாது  அண்ண)

மன்னிக்குறதுக்கு என்ன இருக்கு...

பலநாட்டு பாதுகாப்புகளுக்கு மத்தியில் இருந்து கருத்து சொல்லும் எங்களைவிட உங்க கருத்துதான் கெத்து,

என் பதிவை திரும்ப திரும்ப படிச்சேன், நீங்க காட்டிய மேற்கோளை காணல, அதுதான்  சும்மா ஒரு சந்தேகம்தான் கேட்டேன், அது என் கருத்தா எண்டு...மற்றும்படி குற்றம் பிடிக்க அல்ல...

நீங்கள் முடிந்தால் என்னை மன்னியுங்க...மன்னிக்கவும்.

இதில் சொல்லப்படும் கருத்துக்கள் இந்த உரையாடலுக்கு சிலவேளைகளில் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.bbc.com/future/story/20180606-can-you-lose-your-native-language

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை வடமராட்சித்தமிழிலை எங்கை ஒரு நாலுவசனம் எழுதுங்கோவன் பாப்பம்? :grin:

“எனக்கு எலியைப் பார்த்தால்  சரியான பயம்” என்று தெனாலி திரைப்படத்தில் கமலஹாசள் வசனம் பேசுவாரே  ஏறக்குறைய வடமராட்சியாரின்  தமிழ் அது.

அண்ணை ரைட் பாலச்சந்திரனின்  பாணியில்  கமலஹாசன் பேச வெளிக்கிட்டு   புதுத் தமிழில் பேசியிருப்பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

லக்கண தமிழை வைத்து ஊடக வியாபாரம் பண்ணமுடியாது,பண்ணினாலும் லாபம் பார்க்க முடியாது என்பதே கசப்பான யதார்த்தம்..

வல்லவன் உங்களின் கருத்துகள் நன்றுதான். ஆனாலும் சிலவற்றை எழுத எனக்கு எண்ணம் வருகிறது. நேரம் மறுக்கிறது. சமயம் வரும்போது எழுதுகிறேன்

ரிஆர்ரி தமிழ் ரேடியோ பிறகு ஐபிசி தமிழ் மீண்டும்  ரிஆர்ரி தமிழ் ரேடியோ இடையில் ராமராஐனின் ரேடியோ பிறகு தமுழமுதம் இணைய வானொலி மறுபடியும்  ஐபிசி தமிழ் என்று ஒரு அறிவிப்பாளர்  இலக்கணத் தமிழை வைத்து நிகழ்ச்சி செய்கிறார் கவனித்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 உங்கடை வடமராட்சித்தமிழிலை எங்கை ஒரு நாலுவசனம் எழுதுங்கோவன் பாப்பம்? :grin:

பாஸா ஃபெயிலா கு.சா.ஐயா?

—-

“அரியாத்தை வளவுக்கை நிண்டுகொண்டு எவளின்ரை சின்னமேளத்தை நாறல் மீனைப் பூனை பாத்துக்கொண்டு நிக்கிற மாரி வீணி வழியப் பாக்கிறாய்?” எண்டு பிலத்துச் சத்தம் போட்டுக்கொண்டு பாறாத்தைக் கிழவி பனைமர இணலுக்குள்ளால ஒழுங்கையில நடந்து வந்தா. அவவின்ர கையில கிடந்த பொட்டழியைப் பாத்தவுடன அதுக்குள்ள மள்ளாக்கொட்டை கட்டாயம் இருக்கும் எண்டு நினைச்சன்.  “எணேய் ஆருக்கு உந்தப் பொட்டழியை அச்சவாரம் குடுக்கப்போறாய்” எண்டு கேட்க, அவா “இது தைலாப்பெட்டிக்குள்ள கிடந்து சக்குப் பிடிக்கமுந்தி உன்ரை கொப்பருக்குத்தான் குடுக்கப்போறன்” எண்டா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, valavan said:

ஆனால் இலங்கை தமிழர்களுக்குத்தான் ‘ழ’ உச்சரிப்பு சரியாக வராது என்று காண்பிக்க சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாழைப்பழம் என்பதை உச்சரிக்க வைத்து இலங்கை தமிழர் உச்சரிப்பை மறைமுகமா அசிங்க படுத்தியதையும் பார்த்திருக்கிறேன்,

சிவகார்த்திகேயன் பல இடங்களில் ஈழத்தமிழர் பேச்சுவழக்கை கலாய்த்தல் எனும் போர்வையில் அசிங்கப்படுத்தியவர். 

ஆனால் தமிழக தமிழறிஞர்கள் இன்றும் ஈழத்தமிழரின் தமிழை மெச்சுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

“எனக்கு எலியைப் பார்த்தால்  சரியான பயம்” என்று தெனாலி திரைப்படத்தில் கமலஹாசள் வசனம் பேசுவாரே  ஏறக்குறைய வடமராட்சியாரின்  தமிழ் அது.

அண்ணை ரைட் பாலச்சந்திரனின்  பாணியில்  கமலஹாசன் பேச வெளிக்கிட்டு   புதுத் தமிழில் பேசியிருப்பார்

அண்ணை ரைட் தமிழை தெலுங்கிலை எப்பிடி மாத்தியிருப்பனம்??? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அரியாத்தை வளவுக்கை நிண்டுகொண்டு எவளின்ரை சின்னமேளத்தை நாறல் மீனைப் பூனை பாத்துக்கொண்டு நிக்கிற மாரி வீணி வழியப் பாக்கிறாய்?” எண்டு பிலத்துச் சத்தம் போட்டுக்கொண்டு பாறாத்தைக் கிழவி பனைமர இணலுக்குள்ளால ஒழுங்கையில நடந்து வந்தா. அவவின்ர கையில கிடந்த பொட்டழியைப் பாத்தவுடன அதுக்குள்ள மள்ளாக்கொட்டை கட்டாயம் இருக்கும் எண்டு நினைச்சன்.  “எணேய் ஆருக்கு உந்தப் பொட்டழியை அச்சவாரம் குடுக்கப்போறாய்” எண்டு கேட்க, அவா “இது தைலாப்பெட்டிக்குள்ள கிடந்து சக்குப் பிடிக்கமுந்தி உன்ரை கொப்பருக்குத்தான் குடுக்கப்போறன்” எண்டா.

அம்மாடி...  எவ்வளவு, விடயங்களை  இழந்து விட்டோம்.    

5 hours ago, குமாரசாமி said:

அண்ணை ரைட் தமிழை தெலுங்கிலை எப்பிடி மாத்தியிருப்பனம்??? :grin:

எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல்கொடுத்துள்ளர் போலுள்ளது.. அவரின் தாய்மொழி தெலுங்கு என நினைக்கின்றேன். தெலுங்குக்கும் எமது பேச்சுவழக்கிற்கும் நிறைய நெருக்கம் இல்லை ஆனால் மலயாள இயல்பான பேச்சு வழக்கிற்கும் எமது பேச்சு வழக்கிற்கும் நிறைய நெருக்கம் உண்டு. பழக்கவழக்கத்தில் உள்ள இயல்புக்கும் நெருக்கம் உண்டு.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கேரளவே தனது வளங்களையும் பழமையான அடயாளங்களையும் அன்றாட இயல்பையும் முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றது. தமிழ்நாட்டில் ஆற்றுமணலை தோண்டி ஆறுகளை அழிப்பது போல் கேரளாவில் செய்ய முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் இருந்தே அதிக மணலை கேரளா வாங்கிக் கொள்கின்றது. 

உப்பும் மிளகும் நான் தொடர்ந்து விரும்பிப் பாரக்கும் மலயாளத் தொடர். 

7 hours ago, கிருபன் said:

பாஸா ஃபெயிலா கு.சா.ஐயா?

—-

“அரியாத்தை வளவுக்கை நிண்டுகொண்டு எவளின்ரை சின்னமேளத்தை நாறல் மீனைப் பூனை பாத்துக்கொண்டு நிக்கிற மாரி வீணி வழியப் பாக்கிறாய்?” எண்டு பிலத்துச் சத்தம் போட்டுக்கொண்டு பாறாத்தைக் கிழவி பனைமர இணலுக்குள்ளால ஒழுங்கையில நடந்து வந்தா. அவவின்ர கையில கிடந்த பொட்டழியைப் பாத்தவுடன அதுக்குள்ள மள்ளாக்கொட்டை கட்டாயம் இருக்கும் எண்டு நினைச்சன்.  “எணேய் ஆருக்கு உந்தப் பொட்டழியை அச்சவாரம் குடுக்கப்போறாய்” எண்டு கேட்க, அவா “இது தைலாப்பெட்டிக்குள்ள கிடந்து சக்குப் பிடிக்கமுந்தி உன்ரை கொப்பருக்குத்தான் குடுக்கப்போறன்” எண்டா.

நாம் கடந்த பதினைந்து இருபது வருடத்தில் மிக வேகமாக எமது இயல்பான பல அன்றாட பழக்கவழக்கங்கள் பேச்சு வழக்கு   அணுகுமுறைகளில் இருந்து  விலகிச் செல்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

பாஸா ஃபெயிலா கு.சா.ஐயா?

—-

“அரியாத்தை வளவுக்கை நிண்டுகொண்டு எவளின்ரை சின்னமேளத்தை நாறல் மீனைப் பூனை பாத்துக்கொண்டு நிக்கிற மாரி வீணி வழியப் பாக்கிறாய்?” எண்டு பிலத்துச் சத்தம் போட்டுக்கொண்டு பாறாத்தைக் கிழவி பனைமர இணலுக்குள்ளால ஒழுங்கையில நடந்து வந்தா. அவவின்ர கையில கிடந்த பொட்டழியைப் பாத்தவுடன அதுக்குள்ள மள்ளாக்கொட்டை கட்டாயம் இருக்கும் எண்டு நினைச்சன்.  “எணேய் ஆருக்கு உந்தப் பொட்டழியை அச்சவாரம் குடுக்கப்போறாய்” எண்டு கேட்க, அவா “இது தைலாப்பெட்டிக்குள்ள கிடந்து சக்குப் பிடிக்கமுந்தி உன்ரை கொப்பருக்குத்தான் குடுக்கப்போறன்” எண்டா.

நீங்கள் பாஸாகி விட்டீர்கள்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2018 at 12:33 PM, valavan said:

வாறீங்க போறீங்க  என்ற உரையாடல் இலக்கண தமிழ் இல்லையென்று பலருக்கு தெரிந்தாலும், அது வியாபார தமிழ் என்பதுதான் உண்மை.

வல்லவன்நீங்கள் இப்படிச் சொல்லி இருந்தீர்கள். இலக்கண தமிழை வைத்து ஊடக வியாபாரம் பண்ணமுடியாதுபண்ணினாலும் லாபம் பார்க்க முடியாது என்பதே கசப்பான யதார்த்தம்..”

முன்னர் இலக்கணத் தமிழில்தான் வியாபாரமே ஆகியிருந்ததுஇப்பொழுது அது மாறிவிட்டிருப்பது உண்மைதான்ஆனாலும் எனது ஆதங்கத்தில் நான் இலக்கணத் தமிழ் பற்றியே சொல்லவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

நீண்ட வருடங்கள் தமிழக சினிமாவையே முன்னிறுத்தி சேவையாற்றிய இலங்கை தமிழ் வர்த்தக சேவை வானொலிசினிமா மொழிக்குள் தொலைந்து போய்விடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

 புலத்தில், வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்வாறீங்ககூப்பிடுறீங்கபேசுறீங்கஅழைக்கிறீங்கபண்ணுறீங்க.....என்று சொன்னதைக் கேட்டுவிட்டு ‘ள்’ சேர்த்து வாறீங்கள்கூப்பிடுறீங்கள்பேசுறீங்கள்அழைக்கிறீங்கள்என்று எங்கள் ஈழத்தமிழில் சொன்னால் என்ன என்றே கேட்டிருந்தேன்

எதற்கும் கொஞ்சக் காலத்துக்குப் பின்னால் ஒருதடவை சென்று வரலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு காலத்தில் ஈழத் தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழக மேடைகளை அலங்கரித்த நிலை இருந்ததுஅதற்கான முக்கியகாரணம் அவர்களின் தமிழ் உச்சரிப்புத்தான்தென்னிந்திய திரைப்படப் பாடல்களையே தரம் பிரித்து பொங்கும் பூம்புனல், புதுவெள்ளம்நெஞ்சில் நிறைந்தவைஇசையும் கதையும் ....  என்று பல நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் அன்று திறம்படச்செய்து காட்டினார்கள்

இலங்கை தமிழ் வர்த்தக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் லலிதா நகைமாளிகைக்காக நடத்திய ‘பாட்டுக்குப் பாட்டு’  நிகழ்ச்சி இலங்கையில் இருந்து தமிழகத்துக்கும் போய் பின்னாளில் அப்துல் ஹமீத்திடம் இருந்து கங்கை அமரன் அதை எடுத்துக்கொண்டதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

வணிக ரீதியாக தமிழகத்தில் ஓடாத திரைப்படங்களை இலங்கையில் வெற்றி பெற வைத்த திறமை இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுக்கு இருந்ததுஉதாரணத்துக்கு ஶ்ரீபிரியாவின் ‘நீயா’ திரைப்படத்தைச் சொல்லலாம்

அதன்பின்எழுபதுகளில் தமிழகத்தில் திரைப்படம் வெளியிடும் போதுஇலங்கை வானொலி அறிவிப்பாளர்களைக் கொண்டு அதனது விளம்பரத்தை இலங்கை வானொலியிலேயே ஒலிபரப்புச் செய்யும் நிலை வந்தது. பின்னாளில் ஈழத்தில் இருந்த அசாதாரண சூழலில் அது இல்லாமல் போயிற்று.

அறுபதுகளில், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் அடிக்கடி யாழ்ப்பாணம் வருவார்ஒருதடவை அவர் யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அவரது நண்பர் “என்ரை தங்கைச்சி மோசம் போட்டாள்” என்று அவரிடம் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். அவரது தங்கை யாரையோ நம்பி மோசம் போய்விட்டாள் என்று கி.வா.ஜெகநாதன் நினைத்துக் கொண்டார்ஆனால் நண்பரின் வீட்டில் அவரது தங்கையின் படத்துக்கு மாலை போட்டிருப்பதைப் பார்த்து  மற்றவர்களை விசாரித்ததில் நண்பரின் தங்கை இறந்து போனது அவருக்குத் தெரிய வந்தது

இந்த விடயத்தை ஆராய்ந்து கலைமகளில் கி.வா.ஜெகநாதன் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். “இறந்து போனவர்களை யாழ்ப்பாணத்தமிழர்கள் மோட்சம் போய் விட்டார்கள்”  என்று அழகாகக் குறிப்பிடுகிறார்கள்பேச்சு வழக்கில் மோட்சம் என்பது திரிபடைந்து இன்று மோசம் என்று ஆகி விட்டதுநாங்கள் ‘ஆம்’ என்கிறோம்அவர்கள் ‘ஓம்’ என்கிறார்கள்அவர்களின் அந்த ‘ஓம்’ இல் ஒரு ஓங்காரம் இருக்கிறது

‘’ உங்களில எனக்கு சரியான விருப்பம்என்னை காதலிப்பியளே’’? இது எடுபடுமா என்று கேட்டிருந்தீர்கள் 

இந்த மொழியில்தான் நாங்கள் அன்று காதலே செய்தோம்குத்துவிளக்குவாடைக்காற்று திரைப்படங்கள் இந்தவகையில்தான் பேசினவெற்றியும் பெற்றனஅன்றைய இலங்கை வானொலி நாடகங்கள் இந்தத் தமிழைத்தான் பேசின.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் வானொலி நாடகங்களை விரும்பிக் கேட்பவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார்அதை அவர் பல இடங்களில் தெரிவித்திருக்கின்றார்அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்துடனான பேட்டி ஒன்றிலும் சிவாஜிகணேசன் அதைச் சொல்லி இருந்தார்தவிர “நான் உங்கள் ரசிகன்” எனவும்  அப்துல் ஹமீத்திடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.

சொல்லும் சொற்களால்  மட்டுமல்லஅதை உச்சரிக்கும் தன்மையாலும் மனதை கட்டிப் போடலாம்பேசிப் பாருங்கள். அல்லது கொஞ்சும் மொழியாளை பேசச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது புலம் பெயர் காலத்துக்கு முன்னதாக நான் கேட்டது நினைவுக்கு வந்தது.

 மேல் படிப்பு முடிந்து இலண்டனில் இருந்து வந்த மகன் தாயைக் கேட்டானாம், “ அம்மா  எனக்கு அந்த மொளி மொளி காய்க் கறிவைச்சுத் தாங்கோ “ என்று. இது நீண்ட காலம் வெளிநாட்டில் வாழ்ந்ததால் அந்த இளைஞனுக்கு வந்த மொழிப் பிரச்சனை என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ன்,ம்,ள் போன்ற மெய் எழுத்துக்களை எங்களது உரையாடல்களின் போது நாங்கள் முழுமையாகவே பயன்படுத்தியே வந்திருக்கின்றோம்இல்லை நாங்கள் புதுமை செய்கிறோம் என்று வானொலி அறிவிப்பாளர்கள் நினைத்தால்இனிவரும்காலங்களில் 

ஏனுங்க வல்லவா நல்லாயிருக்கீங்ளா?”

எலே வல்லவா.. ஒருவா சாப்டுட்டு போலே

வல்லவா இங்கிட்டு அவங்க எதுக்கு வந்தாங்கெ?”

இன்னாபா  வல்லவா...ரவுசு வுடுரியே...அப்பால பேஜாரா போயிடும்

வல்லவா என்ன பாக்றே தமில்லே தானே பேசுதோம்..புறவு என்ன?”

 என்றெல்லாம் உலகத் தமிழர் வியாபார வானொலியில் எங்களது தனி அடையாளத்தை இழந்து நின்று கேட்க வேண்டியதாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

வல்லவன்நீங்கள் இப்படிச் சொல்லி இருந்தீர்கள். இலக்கண தமிழை வைத்து ஊடக வியாபாரம் பண்ணமுடியாதுபண்ணினாலும் லாபம் பார்க்க முடியாது என்பதே கசப்பான யதார்த்தம்..”

நீங்கள் கூறியதுபோன்று கடந்த காலங்களில் தூய தமிழே ஊடகங்களில் ஆட்சி செய்தது, உயர்வாகவும் மதிக்கப்பட்டது என்ற உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் இணைத்த இந்த தலைப்பில் தற்காலத்தில் ஊடகத்தில் தமிழ் என்னபாடு படுகிறது என்பதையே சுட்டிகாட்டினீர்கள், தற்காலத்தின் தமிழின்போக்கு எப்படி எமது ஊடகங்களில் ஆகிவிட்டது என்பதையே எனது கருத்தாகவும் பதிவு செய்தேன் மற்றும்படி தங்கள் கருத்து எதையும் மறுத்து பேசுவதற்காக அல்ல

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2018 at 12:36 AM, சண்டமாருதன் said:

எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல்கொடுத்துள்ளர் போலுள்ளது.. அவரின் தாய்மொழி தெலுங்கு என நினைக்கின்றேன். தெலுங்குக்கும் எமது பேச்சுவழக்கிற்கும் நிறைய நெருக்கம் இல்லை ஆனால் மலயாள இயல்பான பேச்சு வழக்கிற்கும் எமது பேச்சு வழக்கிற்கும் நிறைய நெருக்கம் உண்டு. பழக்கவழக்கத்தில் உள்ள இயல்புக்கும் நெருக்கம் உண்டு.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கேரளவே தனது வளங்களையும் பழமையான அடயாளங்களையும் அன்றாட இயல்பையும் முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றது. தமிழ்நாட்டில் ஆற்றுமணலை தோண்டி ஆறுகளை அழிப்பது போல் கேரளாவில் செய்ய முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் இருந்தே அதிக மணலை கேரளா வாங்கிக் கொள்கின்றது. 

.

நாயக்கர்களிடம் இருந்து நாதம் எடுத்து தமிழையும் பாலியையும் சேர்த்து 
போட்ட கொத்து றொட்டிதான் சிங்களம். 

இந்த தெலுங்கு செய்தியை கேளுங்கள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.